Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கணிப்போம் கனடாவில் யுவன்சங்கர் ராஜாவின் மாபெரும் இசைநிகழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில யாரோ சில ராஜபார்வைகள்

கனடாவில இசை நிகழ்ச்சி குறித்த தகவலை தூக்கிட்டு

புறக்கணிப்போம் என்ற தலைப்பை போட்டு ............... வேண்டாம்? <_<

உண்மையை சொன்னா அடிக்க வாறாங்க

பொய்யை சொன்னா கை தட்டுறாங்க. :unsure:

தலைவன்,

நீங்கள் போட்ட இசை நிகழ்ச்சி பற்றிய திரியில் பொய்யான தகவல்கள் இருந்தன (உங்கள் பதிவில்). ஏற்பாட்டாளர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலை அந்தத் திரியில் இணைத்திருந்தேன், நீங்கள் பார்க்கவில்லைப் போலும் (இப்போது எல்லாம் அகற்றப் பட்டு விட்டது). அவர்கள் சொன்னது இது தான்:

1. நாம் எந்த அமைப்போடும் சேர்ந்து இயங்கவில்லை

2. சன் குழுமத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

நீங்கள் பொய்த் தகவலைக் கசிய விட்டது ஏனென்று அறியேன். ஆனால் இன்னும் "நான் உண்மை சொன்னால் தவறா?" என்று அப்பாவி மாதிரி பாவனை காட்டும் போது இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதைப் பார்க்கும் கள உறுப்பினர்களும் யார் யார் என்ன திட்டங்களோடு இங்கே நடமாடுகிறார்கள் என்று அறியவும் இது உதவும்.

  • Replies 62
  • Views 7.1k
  • Created
  • Last Reply

நீங்கள் பொய்த் தகவலைக் கசிய விட்டது ஏனென்று அறியேன். ஆனால் இன்னும் "நான் உண்மை சொன்னால் தவறா?" என்று அப்பாவி மாதிரி பாவனை காட்டும் போது இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதைப் பார்க்கும் கள உறுப்பினர்களும் யார் யார் என்ன திட்டங்களோடு இங்கே நடமாடுகிறார்கள் என்று அறியவும் இது உதவும்.

இதைத் தான் நான் எப்போதே சொன்னேன் கைக்கூலிகளை இனம் காட்டினால் தனிநபர் தாக்குதல்கள் என்று சொல்லிச் சொல்லி இவர்களின் சுயரூபங்களை மூடி மறைக்கின்றார்கள்

அதன் பின்னர் இவர்களும் இவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் போல்

மீண்டும் மீண்டும் நல்லவர்கள் போல் வலம் வருவதும் யாழில் கால காலமாக நட்ப்பது தான் கேவலமாக இருக்கின்றது

அதிலும் கேவலம்

இவர்கள் மற்றவர்களை தாக்கி எழுதிவிட்டு நிர்வாகத்திடம் முறையிட்டு மற்றவர்களின் கருத்துகளைத் தூக்குவதும் இவர்களுக்கு நிர்வாகம் சேவகம் செய்வதும் தான்

அனேக தமிழ் கடைகளில் (மார்க்கம், மில்லிக்கன் பகுதி) இருந்த விளம்பரப் பலகைகள் கிழிக்கப்பட்டும் அகற்றப் பட்டும் உள்ளன. தமிழ் வானொலிகள் சில இன் நிகழ்வுக்கான விளம்பரத்தினைப் தவிர்க்கப் போறோம் என்று சொல்கின்றார்கள்.... பார்ப்போம் இது எந்தளவுக்கு உண்மை என்று

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தமிழ் கடையொன்றில் நடந்த உரையாடல் -

வாடிக்கையாளர் -

அண்ணே இளையராஜாவின்ர இசைநிகழ்ச்சிக்கு போற ரிக்கற் என்ன விலையண்ணே?

வர்த்தகர் -

எதைக் கேட்கிறீங்க?

வாடிக்கையாளர் -

இங்க பெரிசா நடக்க இருக்கிற இசை நிகழ்ச்சி ரிக்கட்டைத்தான் கேக்கிறன்.

வர்த்தகர் -

அதை ஏன் இஞ்சை கேக்கிறீங்க? விக்கிறவனிட்ட எல்லோ கேக்கோனும்.

வாடிக்கையாளர் -

என்ன அண்ணே விளையாடுறீங்க?

உங்க கடையிலயும் வாங்கலாம் எண்டு போட்டிருக்கு.....

வர்த்தகர் -

அது போன வருசம் நிலமை வேறயா இருக்கேக்க அடிச்ச விளம்பரம்... இப்ப அதில இருந்து எங்கட கடையிந்த பேரை எடுக்கச் சொல்லிப்போட்டம்.

வாடிக்கையாளர் -

அப்ப நீங்க ரிக்கட் விக்கேல்லையோ?

வர்த்தகர் -

இப்பவே சனம் புறக்கணி சிறிலங்காவால எங்கட கடையைப் பதம் பாக்கத் திரியுதுகள். என்ன செய்யிறதெண்டு இருக்கிற ஸ்ரொக் தீர்றதுக்குள்ள எங்களைத் தீர்த்ததுக் கட்டிடுங்கள் போல கிடக்கு. இதுக்க இந்த ரிக்கட்டை வித்து.... எங்களை என்ன சனம் உழக்கி மிதிக்கோணும் எண்டு பாக்கிறீங்களோ?

தலைவன்,

நீங்கள் போட்ட இசை நிகழ்ச்சி பற்றிய திரியில் பொய்யான தகவல்கள் இருந்தன (உங்கள் பதிவில்). ஏற்பாட்டாளர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலை அந்தத் திரியில் இணைத்திருந்தேன், நீங்கள் பார்க்கவில்லைப் போலும் (இப்போது எல்லாம் அகற்றப் பட்டு விட்டது). அவர்கள் சொன்னது இது தான்:

1. நாம் எந்த அமைப்போடும் சேர்ந்து இயங்கவில்லை

2. சன் குழுமத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

நீங்கள் பொய்த் தகவலைக் கசிய விட்டது ஏனென்று அறியேன். ஆனால் இன்னும் "நான் உண்மை சொன்னால் தவறா?" என்று அப்பாவி மாதிரி பாவனை காட்டும் போது இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதைப் பார்க்கும் கள உறுப்பினர்களும் யார் யார் என்ன திட்டங்களோடு இங்கே நடமாடுகிறார்கள் என்று அறியவும் இது உதவும்.

1. யார் எந்த அமைப்போடு சேர்ந்து இயங்கவில்லை?

2. சன் குழுமத்திற்கும் எதற்கும் சம்பந்தமில்லை.?

இதை விளக்குவீர்களா?

சிலர் அடிச்சுப் போட்டு அடிக்காத மாதிரி இருப்பாங்க ஜஸ்டின்.

உலகத் தமிழர் அமைப்பு கனடாவில தடை செய்யப்பட்ட அமைப்பு. (பகிரங்கமாக)

அதை தமிழர்கள் தடை செய்யவில்லை.

எனவே எது எதன் பெயரால் செய்ய முடியாவிட்டாலும்

ஏதோ ஒரு பெயரால் செய்யலாம்.

எவரது ஊடகங்கள் இந் நிகழ்சியை விளம்பரப்படுத்துகிறது என்று பாருங்கள்.

உண்மை விளங்கும்.?

உண்மையாக

என்னைப் பொறுத்தவரை

இது போன்ற நிகழ்வுகள் மட்டுமல்ல

வீடுகளில் நடைபெறும் சிறு விழாக்கள் கூட தேவையற்றது.

அரசியல் சாணக்கியமாக திரைப்பட - தொலைக்காட்சி புறக்கணிப்புகளை

பகிரங்கமாக செய்ய வேண்டாம் என்பதே என் கருத்து.

நான் வாழும் நாட்டில் இந்த மாதம்

எம்மவர் நாட்டிய நிகழ்வு ஒன்று நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிலமை சரியில்லை சற்று பொறுங்கள் என்றேன்.

நாங்கள் பொறுப்பாளருடன் கூட நேரம் எடுத்தாச்சு என்று சினம் கொண்டார்கள்.

இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது.

பலருக்கு உண்மை கசக்கும். அது பொய்யல்ல.

உண்மைகள் புரிய நீண்ட நாள் எடுக்கும்.

இந்நிகழ்ச்சி நடக்குதா இல்லையா என்பது தெரியாது

இறுதி நேரத்திலாவது உண்மையை உணராமலா போவீர்கள்.

இந் நிகழ்வை முதலில் ஒழுங்கு செய்த சிறீ கூட தமிழீழ ஆதரவாளர்தானே?

இப்போது அவர் அதில் முதன்மையாக இல்லை என்று தகவல்.

இந்த பகிரங்க புறக்கணிப்பை

சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து

தமிழ் அமைப்புகள் நட்பு ரீதியாக பேசி நிறுத்தலாமே?

இதுகூட விளங்காதவன் என்ன தமிழன்?

நகத்தால் கிள்ள வேண்டியதை ஏன் கோடாரியால் தறிக்கிறீர்கள்?

நாங்கள் சிங்களவனிடமிருந்து எமது சுதந்திரத்துக்காகத்தான் போராடுகிறோம்.

அதன் பிறகும் சுதந்திரமற்றவர்களாக வாழ்வதற்காக இல்லை.

செத்தவர்களுடன் கதைப்பவர்களுக்கு

நடமாடுவோரைப் பிடிக்காது.

அதற்கு நாங்களும் சாகும் வரை

பொறுத்திருங்கள்.

Edited by Thalaivan

இதற்கே இப்படி முண்டியடித்தால் எப்படி? கோடைகாலம் வருகிறதே. அப்போது நடக்கப்போகும் திருவிளையாடல்களைப் பொறுத்திருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகிரங்க புறக்கணிப்பை

சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து

தமிழ் அமைப்புகள் நட்பு ரீதியாக பேசி நிறுத்தலாமே?

இதுகூட விளங்காதவன் என்ன தமிழன்?

நகத்தால் கிள்ள வேண்டியதை ஏன் கோடாரியால் தறிக்கிறீர்கள்?

அப்பிடிக் கேளுங்கோ, அது நியாயம். நானும் சிறி லங்காப் பொருட்களைத் தவிர மற்ற விஷயங்கள் புறக்கணிப்பில் கோடரி கொண்டு மிரட்டுவதை ஆதரிக்கும் ஆளில்லை.(சொகுசு விஷயங்கள் புறக்கணிப்பு சுயபுத்தியால நிகழ வேணும், அப்ப தான் அது திறமாக இருக்கும்!) அதனால தான் பல பேர் செய்தது போல புறக்கணிப்புக்குக் குரல் கொடுக்க முதல் ஏற்பாட்டாளர்களுக்கு நியாயமான விளக்கத்துடன் மின்னஞ்சல் அனுப்பினேன்.அவர்களின் பதிலில் இருந்து இது முற்றிலும் வன்னி மக்களைக் காட்டி லாபமடிக்கிற வேலை என்பது விளங்கியது. இரண்டாவது மின்னஞ்சல் அனுப்பிய போது அவர்கள் என் விளக்கத்தைப் புறக்கணித்து விட்டு நான் ஏதோ அவர்களுக்கு எதிர்க் கடை போட முனையும் ஒருவர் போல பதில் தந்திருந்தார்கள். இது பலருக்கும் நடந்திருக்கும் என நினைக்கிறன்.அதன் பிறகு தான் நான் யாழில என்னுடைய அபிப்பிராயத்தைச் சொன்னன். இதை புறக்கணிப்பில்லாமலே முடிக்க இன்னும் காலமும் இடமும் இருக்கு. ஆனால் யார் இளக வேணும்? "நாங்கள் நடத்தியே தீருவம்" என்று நிற்கிற ஏற்பாட்டாளரா? அல்லது "இது தேவையா இப்ப" என்று நியாயமாக கேள்வி கேட்கிற எதிர்ப்பாளர்களா? கோடரியா நகமா எண்டுறத ஏற்பாட்டாளர் தான் தீர்மானிச்சிருக்கிறார், வேற யாரும் இல்ல..

(வேலைப் பழு அதனால இனி இங்க எழுத வரவில்லை, தலைவன், நீங்களோ வேற யாரோ மின்னஞ்சல் பதில்கள் பார்க்க வேணுமெண்டா தனிமடலில தொடர்பு கொள்ளுங்கோ. அனுப்பி வைக்கிறன். அதில இந்த ஆண்டு வேற நிகழ்ச்சிகள் நடத்த முனையுற வேற அமைப்புகள் வானொலிகளின் பெயர்களும் இருக்கு, ஆனா யாரும் இப்ப கோடரியோட வெளிக்கிட வேண்டாம், பொறுத்திருப்பம்!)

Edited by Justin

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Email:info@platinumpromotions.ca

Website: http://www.platinumpromotions.ca

சிலர் அடிச்சுப் போட்டு அடிக்காத மாதிரி இருப்பாங்க ஜஸ்டின்.

உலகத் தமிழர் அமைப்பு கனடாவில தடை செய்யப்பட்ட அமைப்பு. (பகிரங்கமாக)

அதை தமிழர்கள் தடை செய்யவில்லை.

எனவே எது எதன் பெயரால் செய்ய முடியாவிட்டாலும்

ஏதோ ஒரு பெயரால் செய்யலாம்.

சரி இதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கின்றீர்கள் அடித்து அடித்து எல்லா இடத்திலும் எழுதி வருகின்றீர்கள்

நான் சொல்வது

1) நீங்கள் உலகத்தமிழருக்கு எதிரானவர்

2) நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு வேண்டியவர் ஏன் அதில் ஒருவராக இருக்கலாம்

இதில் நீங்கள் சாதிக்க முயல்வது

உலகத்தமிழர்களை இணைத்து இது உலகத்தமிழர்களினது போராட்டமாக மாற்றி களியாட்டத்தை நடாத்தி கல்லாவை நிரப்புவது

எவரது ஊடகங்கள் இந் நிகழ்சியை விளம்பரப்படுத்துகிறது என்று பாருங்கள்.

உண்மை விளங்கும்.?

இதை எல்லாம் ஆதாரமாக காட்டிக்கொண்டிருக்கின்றிர்

Edited by tamilsvoice

:mellow:இதை யார் நடாத்தினாலும் நாங்கள் புறக்கணிப்போம் என்று சொல்லுங்கள் தலைவன்

இதை மட்டுமல்ல, இனிமேல் இங்கு நடைபெறும் களியாட்டங்களை நான் நிச்சயமாகப் புறக்கணிப்பேன். அது யாரால் நடத்தப்பட்டாலும் சரி. இவற்றுக்கு முன்னால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் நான் நிச்சயம் கலந்து கொள்வேன்.

ஒரு 2-3 முறை சொல்லிப் பார்ப்பம்

இல்ல பகிரங்கமாக

இதை யார் நடாத்தினாலும் நாங்கள் புறக்கணிப்போம்

அது சரி, எத்தினை நாளைக்கு அழுதுகொண்டு இருகிறது, ஒரு சனிக்கிழமை 'டிஸ்கோ தெக்' இற்கு போய், நல்லாய் தண்ணி அடிச்சிட்டு கூத்தாடிட்டு வந்தா, கவலை எல்லாம் பறந்து போகும்!!!! உங்கடை பிள்ளை வன்னியில 'பங்கறுக்க' உயிருக்கு ஏங்கிக்கொண்டிருந்தாலும் இதைத்தான் செய்வீங்கள? - இஞ்சை நல்ல சொகுசான, பாதுகாப்பான வாழ்க்கை. ஆனால், பிள்ளை வர ஒரு நிமிசம் பிந்தினா, 'ஐஐயோ' எண்டு சொல்லி, சாப்பாட்டைத் தூக்கி எறிஞ்சிட்டுப் பிள்ளையைப் பற்றி நினைக்கிறீங்களெல்ல, அப்ப டான்ஸ் ஆடுவீன்கள. *** தினம் தினம் நூற்றுக்கணக்கில் எம்மக்களைக் கொன்று குவிக்கிறான் எதிரி, அந்த எம் உறவுகளின் பிணங்களின் மேல் நின்று நடனமாடுவது தகுமா? ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்றைய சூழ்நிலையில் எமது மக்கள் இந்த களியாட்ட நிகழ்வைத் தவிர்ப்பார்கள் என்றே நான் ஆணித்தரமாக நம்புகிறேன். ***

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மரண ஓலத்தை அடக்கி விடாது ! புறக்கணிப்போம் இந்தக் களியாட்டத்தை !!!!!

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.