Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதுகில் குத்துகின்றதா?!: உலகத் தமிழினம் கொதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதுகில் குத்துகின்றதா?!: உலகத் தமிழினம் கொதிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனை சந்திக்கச் செல்லுவதற்கு முடிவெடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் வன்னியில் உள்ள தமிழர்கள் சிறிலங்கா அரசின் மரணப் பொறிக்குள் சிக்குண்டு தவிப்பதற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல என கொழும்பில் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிவ்சங்கர் மேனனின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் நிராகரித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த ஓர் எதிர்பாராத சிறப்பான முடிவு அது என்ற கருத்து கொழும்பிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் அதிகளவாக பேசப்பட்டது.

ஆனாலும், எதிர்வரும் 15 ஆம் நாள் அச்சந்திப்பிற்குச் செல்வதற்கு சென்னையில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் முடிவெடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே இந்தியாவில் தங்கியிருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், பின்னர் அங்கு சென்ற மாவை சேனாதிராஜாவையும் சேர்த்துக்கொண்டு, இலங்கையில் தற்போது இருக்கும் இன்னொரு உறுப்பினரையும் இந்தியாவுக்கு வரவழைத்து இச்சந்திப்புக்குச் செல்ல அவசரப்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வேண்டுகோளுக்கு ஏற்பவே தாம் இந்திய அரசைச் சந்திக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த பழுத்த அரசியல்வாதிகள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இது தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் அரசியல் அவதானிகள் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் முதன்மைக் கோரிக்கைகளாக இன்று இரண்டே விடயங்கள் தான் இருக்கின்றன.

(1) தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திரப் போராளிகள். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளில், அந்தப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கப்பட்டு - தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வை நோக்கிய பேச்சுக்கள் விடுதலைப் புலிகளுடனேயே உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

(2) உடனடியானதும் நிரந்தரமானதுமான "போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படச் செய்து சிறிலங்கா படைகளால் முற்றுகையிடப்பட்டள்ள மூன்று லட்சம் தமிழர்களுக்கான நிவாரணமும் நிம்மதியும் உடனடியாகக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.

இந்த இரண்டுமே - உலகத் தமிழர் போராட்டங்களின் அடிப்படைக் கோரிக்கைகளாக இன்று இருக்கின்ற நிலையில் -

இக்கோரிக்கைகளை இன்றைய இந்திய காங்கிரஸ் அரசாங்கம் ஏற்குமா?...

- அல்லது இக்கோரிக்கைகளை தமிழர் கூட்டமைப்பின் மேற்படி பழுத்த அரசியல்வாதிகளினால் காங்கிரஸ் அரசிடம் ஆணித்தரமாக முன்வைக்க முடியுமா?...

போரை நிறுத்தாமல், இன்றைய தமிழின அழிப்பை முன்னெடுக்கும் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது இவர்களுக்குத் தெரியாதா?...

இத்தகைய நிலையில் தமது சுயநலம் கருதிய அரசியல் நகர்வுகளுக்குச் சாட்டாக புலம்பெயர் தமிழர்களை இழுப்பது ஏன்?...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த பழுத்த தலைவர்கள் சிவ்சங்கர் மேனனை சந்திப்பதற்கு எடுத்த முடிவுக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவ்வாறான ஒரு சந்திப்பிற்குச் செல்லுமாறு அவர்களுக்கு எவரும் கூறவும் இல்லை.

தமிழின அழிப்புப் போருக்கு சோனியா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் அரசாங்கம்தான் காரணம் என்று முழு உலகிற்கும் தெரியும்.

இந்திய காங்கிரஸ் அரசு தமிழர்களைப் பழி தீர்த்து முதுகில் குத்திவிட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறீக்காந்தாவே பி.பி.சி தமிழோசையிடம் காட்டமாகச் கூறியிருக்கின்றார்.

இத்தகைய ஒரு சூழலில் -

இந்திய அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பின் ஏற்பாட்டுக்கான பின்னணியில் முதல்வர் கருணாநிதியும் இருப்பதாகத் அறிய முடிகின்றது. அரசியலில் பழுத்த இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பகடைக்காய்களாக்கி, ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக இந்திய அரசு ஏதோ செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வழி செய்து, சோனியா காங்கிரசுடனான தனது உறவையும் பலப்படுத்தி சுயலாபம் அடைவது தான் கருணாநிதியின் திட்டம்.

அதற்காகவே இச்சந்திப்புக்கான அவசர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையிலும், தமிழகத்திலும் வாழும் தமிழர்களுக்குப் புரியாதது அல்ல.

அதேவேளையில் இச்சந்திப்புக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இன்றைய இந்திய அரசாங்கத்திற்கும் முதல்வர் கருணாநிதிக்கும் தாளம் போட்டு, அவர்களுடனான தங்கள் தனிப்பட்ட உறவை மேலும் செம்மைப்படுத்தலாம் என்பது - கூட்டமைப்பின் இந்த பழுத்த தலைவர்களின் ஆசை.

இந்தியாவின் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பை விரும்பாத கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களைக் கூட, இச்சந்திப்பிற்கு ஒத்துழைக்குமாறு கூட்டமைப்பின் மேற்படி தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இச்சந்திப்பிற்குச் செல்ல எடுத்திருக்கும் முடிவும், அந்த முடிவுக்கு புலம்பெயர் தமிழர்களை காரணம் காட்டும் செயலும் - உலகத் தமிழர்கள் நடத்தி வருகின்ற தூய்மையான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களது தெளிவான அரசியல் கோரிக்கைகளை மழுங்கடித்து, அவர்களது உணர்வுகளைக் காயப்படுத்தி, தமிழினத்திற்கு இழைக்கும் பச்சைத் துரோகம் என்று அமெரிக்காவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் சிவக்கும் கண்களுடன் கூறினார்.

எங்களது உயிர்களையும், எங்கள் போராளிகளது தியாகங்களையும் வைத்து கடந்த ஏழு வருடங்களாக அரசியல் நடத்திய கூட்டமைப்பின் இந்தப் பழம் தலைவர்கள் - தற்போது இன்றைய இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்து எங்களது முதுகில் குத்துகின்றனர், என்று பிரித்தானியாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவர் துயரத்துடன் தெரிவித்தார்.

'தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் பிரதிநிதிகள்' என்ற கோட்பாட்டை முன்வைத்துத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். தற்போது, விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக தான் நடத்தும் போரை இந்தியா நிறுத்தாத நிலையில், இந்திய அரசாங்கத்துடனான இச்சந்திப்புக்கு கூட்டமைப்பினர் செல்வது, அவர்களுக்கு வாக்களித்த தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கொழும்பில் உள்ள தமிழ் கல்விமான் ஒருவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பு முயற்சி பற்றி கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர்கள் பலர் - விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கருத்தின் அடிப்படையில் இச்செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால், அது ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவோ, அல்லது தமிழர்களுக்கு நன்மை எதனையும் செய்வதாகவோ இருக்காது என்று கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பியிருந்த கடிதத்தில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டிருந்ததோ அதே காரணங்கள் இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியாதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

Puthinam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் இவர்கள் மேல் சுட்டு விரலைக் காட்டியதால் மட்டுமே தமிழர்களால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றம் போன இந்த முன்னால் முகவரியில்லாத "அரசியல் பழங்கள்" இன்று புலிகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்பதும், தீவிரவாத இயக்கத்துடன் எமக்குத் தொடர்பில்லை என்பதும், யாரும் எமக்கு எதையும் சொல்ல முடியாது, நாங்கள் யார் தயவிலும் இப்பதவிக்கு வரவில்லை என்று வாய்சவடால் விடுவதும் அசிங்கமானது. புலிகள் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்களால் வாக்குப் பிச்சை போடப்பட்டுப் பாராளுமன்றம் சென்ற இவர்கள், இன்று புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று தமக்குத்தானே கணக்குச் சொல்லிக்கொண்டு மீண்டும் தமது வழமையான வியாபார அரசியலையும், இந்தியாவுக்கு வாலாட்டும் நாய் வேலையையும் செய்ய ஆரம்பித்தார்கள் என்றால் இவர்களின் வாலை ஒட்ட நறுக்குவதைத்தவிர வேறு வழியில்லை.

அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டக்கூடாது....சங்கரி டக்லஸ் போல இல்லாமல் இன்னும் தமிழ் ம்க்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...(சிலர் வேறு இயக்கங்களை சார்ந்து இருந்தாலும்).....இந்த முடிவு உண்மையாக இருந்தால் அவர்கள் முறையாக அறிவிக்கும்வரை பொறுப்பது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டக்கூடாது....சங்கரி டக்லஸ் போல இல்லாமல் இன்னும் தமிழ் ம்க்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...(சிலர் வேறு இயக்கங்களை சார்ந்து இருந்தாலும்).....இந்த முடிவு உண்மையாக இருந்தால் அவர்கள் முறையாக அறிவிக்கும்வரை பொறுப்பது நல்லது.

2001 ம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இதில் பலர் குண்டு துளைக்காத வாகனங்களில் சென்றவர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கனேடிய தமிழ் வானொலியொன்றில் சந்திப்புக்கு உடன் பட்டிருப்பதாக சொன்னார்கள். புலம் பெயர் தமிழர்கள் "இந்தியாவிடம் தமிழ் மக்களின் கண்டனத்தை த.தே.கூ நேரடியாகத் தெரிவிக்க வேண்டும்" என்று விடுத்த கோரிக்கை காரணமாகவே முடிவு மீள்பரிசீலனை செய்யப் பட்டதாகத் தெரிவித்தார்கள். ஆனால், சந்திப்பு முடிந்தவுடனேயே இந்தியா இப்படி அறிக்கை விடும்: சந்திப்பு சினேக பூர்வமாக நடை பெற்றது.

நான் நினைக்கிறேன், "தமிழ் மக்களின் போராட்டங்கள் காரணமாக நாங்கள் தமிழர் பிரதிநிதிகளுடன் பேசினோம், எல்லாம் சுமூகமாக முடிந்தது" என்று இந்தியா சொல்ல த.தே.கூ வழியமைத்துக் கொடுக்கப் போவதாகவே எனக்குப் படுகிறது. ஏற்கனவே 1987 இல் இப்படியொரு சந்திப்பில் புலிகளையே வம்பில் மாட்டிய ஒரு கேடு கெட்ட நாட்டிடம் திரும்பவும் முட்டாளாகப் போகிறோம் நாம். கண்டனத்தை பத்திரிகை அறிக்கையில் அல்லது கொழும்பில் இருக்கும் இந்திய "ஏஜன்ட்" இடம் தெரிவிக்கலாம். சந்திப்பு அவசியமில்லை உங்கள் கூலிப் படையைத் திருப்பி அழைத்துக் கொண்டு வெளியேறினாலே போதுமென்று த.தே.கூ தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு கருத்து கூறமுடியாது

காலத்திற்கேற்ப காய் நகர்வுகள் அவசியம்!! இதுவரை நாம் பலவற்றை செய்யத்தவறி விட்டோம்!! இனியாவது ........... ! தயவு செய்து எம்மைக் காப்பதற்கான எவ்வெவ்வழிகளில் முயற்சிகள் உண்டோ, அவற்றை செய்ய விடுவோம்!!! இல்லையேல் .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்திற்கேற்ப காய் நகர்வுகள் அவசியம்!! இதுவரை நாம் பலவற்றை செய்யத்தவறி விட்டோம்!! இனியாவது ........... ! தயவு செய்து எம்மைக் காப்பதற்கான எவ்வெவ்வழிகளில் முயற்சிகள் உண்டோ, அவற்றை செய்ய விடுவோம்!!! இல்லையேல் .......

இதில் அரசியல் சாணக்கியம் இருக்குமோ?

இந்தியாதான் தற்போதைய நிலைக்கு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் இது குறித்து பேசினீர்களா .... என்ற பி.பி.சி. தமிழோசையின் நயவஞ்சக கேள்விக்குத்தான் பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா அப்படியான பதிலை அளித்திருந்தார். அவர் ஆம் என்று கூறியிருந்தால் இன்று உயிருடன் இருப்பார் என்பது சந்தேகமே . இந்த ஆட்சியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதனை நினைவில் கொள்ளவும் .

சிறீகாந்தா அவர்களின் பேட்டியை படிக்க .........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55835

இன்றைய இன அழிப்பில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்புப் பற்றிய குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதில் ஏதாவது ராஜதந்திரம் இருக்கும் என்றால், ததேகூ இந்திய அதிகாரிகளை சந்திப்பதையும் ராஜதந்திரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் எமது நிலைப்பாட்டை இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெளிவாகச் சொல்லவும் எமது மக்கள் படும் துன்பங்கள் உலகின் கண்களின் முன் கொண்டு வரவும் த. தே . கூ இதனைப் பாவிக்கலாம். அதில் தவறில்லை.

ஆனால் 1987 - 90 கால றோ ஏற்படுத்திக் கொடுத்த இந்தியாவுடனான பழைய நட்பு அடிப்படையில்.. ரகசிய திட்டங்கள் போட்டு தமிழ் மக்களுக்கும் (புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளடங்க) அவர்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுக்கும் துரோகம் செய்யும் சதி வேலைகளைப் பண்ணாமல் இருப்பது மிக முக்கியமாகும்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.