Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21ஆம் திகதி ஒட்டாவா உரிமைப்போரினில் நடந்தது என்ன?

Featured Replies

இன்று நடைபெற்ற 'உரிமைப்போர்' நிகழ்வில் 33000 மக்கள் கலந்து கொண்டனர். மழையிலும் குளிரிலும் கைக்குழந்தையுடன் கால்கடுக்க 6 மணிநேரம் நின்றனர். உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் கோசங்களை எழுப்பி பாரளுமன்றத்தை அவர்களின் குரலால் உலுக்கி கொண்டிருந்தனர். சுமார் மாலை 1:30 மணிக்கு என்.டி.பி தலைவர் ஜாக் லேட்டன் வந்து உலகநாடுகள் இந்த பேரவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

இவரை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை - லிபரல் லிபரல் என்று தமிழர்கள்அலைந்து அவர்கள் தமிழர்களை கைவிட்டு விட்டனர். தமிழர்களுக்கு ஏன் இந்த நிலை? இனி கனடாவாழ் தமிழர்கள் எப்படி பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

(இந்த இடுகையை படிக்கும் அனைவரும் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன் )

Edited by Sniper

இன்று நடைபெற்ற 'உரிமைப்போர்' நிகழ்வில் 33000 மக்கள் கலந்து கொண்டனர். மழையிலும் குளிரிலும் கைக்குழந்தையுடன் கால்கடுக்க 6 மணிநேரம் நின்றனர். உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் கோசங்களை எழுப்பி பாரளுமன்றத்தை அவர்களின் குரலால் உலுக்கி கொண்டிருந்தனர். சுமார் மாலை 1:30 மணிக்கு என்.டி.பி தலைவர் ஜாக் லேட்டன் வந்து உலகநாடுகள் இந்த பேரவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

இவரை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை - லிபரல் லிபரல் என்று தமிழர்கள்அலைந்து அவர்கள் தமிழர்களை கைவிட்டு விட்டனர். தமிழர்களுக்கு ஏன் இந்த நிலை? இனி கனடாவாழ் தமிழர்கள் எப்படி பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

(இந்த இடுகையை படிக்கும் அனைவரும் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன் )

வந்த என்.டி.பி தலைவர் ஜாக் லேட்டன் கூட பொதுப் படையாக பேசினாரே தவிர, சிறி லங்கா அரசை குற்றம் சாட்டி அவர்கள் தான் மக்களை அழிக்கின்றனர் என்று பேசவில்லை. இவ்வளவு கூட்டம் கவனயீர்ப்பு போன்றவை செய்தும் எந்த முக்கிய பிரமுகர்களும் வராதது, வெறுப்பேற்றுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க்கில் செய்த சகோதரன் போல் தான் செய்ய வேண்டும் அல்லது யூதர்கள் அனைவரும் போய் போராடியதைப்போன்று தமிழ்மக்கள் போய் போராட வேண்டும்( வேறு என்ன சொல்ல)!

எத்தனை அவமானம்!! இவர்களுக்காகத்தானே தேசியக்கொடியை விட்டு விட்டு துக்கம் கொண்டாடிக்கொடி பிடித்தோம்! எங்கள் உணர்வுகளுக்கு இப்படி கரி பூசி விட்டார்களே!...

வெறுப்பு மிஞ்சுகின்றது!

  • தொடங்கியவர்

அந்த வெறுப்பின் உச்ச நிலையில் இவர்களிடம் இனியும் மண்டியிட்டு நாம் நம் மானத்தை இழக்க கூடாது எனவே நாம் என்ன செய்தால் இவர்களை நம் பின் ஓடி வரச்செய்யலாம் அல்லது எப்படி இவர்களை பணியச் செய்யலாம்?

இங்கு சில ஒட்டுக்குழு கூலிகள் கனடா பேரணிபற்றி பேசுவதைக் கேட்டேன். புலிகளை எதிர்த்து நடந்த பேரணி என்றும், புலிகளிடம் இருந்து மக்களை மீட்க என நடந்த ஒட்டாவா போராட்டம் என கூறித்திரிகிறார்கள்!!!!!!!!

  • தொடங்கியவர்

33000 தமிழ்மக்களில் பெரும்பாலனோர் டொராண்ட்டோவில் இருந்தே வந்தனர் 400கி.மீ பயணம் - சாதாரணமானதல்ல - மிகுந்த நம்பிக்கையுடனும் நல்ல முடிவை இந்த பாழாப் போன கனேடிய ஹார்பர் அரசாங்கம் இரத்த ஆறு ஓடும் இந்த தருணத்திலாவது எடுக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போயினர்.

அதெல்லாம் விடுங்கள் இனி நாம் என்ன செய்து இவர்களை வழிக்கு கொண்டு வரலாம்?

டென்மார்க் சகோதரர் போன்று நிச்சயம் செய்யலாம்.

எங்கள் தேசிய கொடியை வீடுகள் தோறும் ஏற்றி வைக்கலாமா?

யூதர்கள் எம்.பிக்களை விலைக்கு வாங்கினர் - இதற்கு நம்மால் முடியும் ஆனால் சரியான வழி நடத்துபவர்கள் இங்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு எப்பொழுதும் அகிம்சையில் நம்பிக்கை இருந்ததில்லை ஆனால் செய்யவேண்டிய கட்டாய நிலை :unsure:

  • தொடங்கியவர்

நீங்கள் இந்த கருத்துரையாடலை கூறுகின்றீர்களா? இல்லை நேற்று தமிழர்களாகிய நாங்கள் பட்ட துயர் நடந்த சம்பவத்தை கூறுகின்றீர்களா? என்பதை கூறுங்கள் என தாழ்மையுடன் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்தவீடு , துவசத்துக்கு வர்றவன் கூட இதில வந்து எட்டிப்பகேல்லை எண்டுறதுதான் எனக்கு வருத்தம்...

இப்பத்தான் ஏன்டா எம்.பி க்கு அடிச்சு 'Thank you Very very much' எண்டு சொன்னனான்...

கனடாவில தேர்தல் வராமலா போகபோகுது.... இனி என்ற ஓட்டை..green party க்கு அல்லது வேறை சுயேற்சை க்குத்தான் போடுவன்...அவங்களுக்குத்தான் தேர்தல் உதவியும் செய்வான்....

லிபரலுக்கு பின்னால வால்பிடிக்கிற நாயால் இனியாவது திருந்த வேணும்...சப்பா...என்ன வெல்லலாம் எங்கடை அக்கால அவைக்கு செய்தினம்...கோயிலில வைச்சு...வேட்டி கட்டி...மாலை போட்டு..காளாஞ்சி குடுத்து.,...பார்கபோனா கருணாநிதி எவ்வளவோ மேல் போல இருக்கு...

anyways... இந்த போராட்டம் எங்களுக்கு சில உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டி இருக்குது,,,,ஒண்டு நாங்கள் தலைகீழ நிண்டாலும் எதுவுமே நடக்க போறது இல்லை...மற்றுது,,பச்சோந்தி அரசியல் வாதியலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கு...

இனிமேல் எவனாவது வந்து '''நந்தி....வனக்கம்'' எண்டு சொல்ல கைதட்டி விசில் அடிக்கிறதை பார்த்தன் எண்டா..அதிலை வச்சு கிழி கிழி எண்டு கிளிச்சிப்போட்டுதான் வுடுவான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இந்த கருத்துரையாடலை கூறுகின்றீர்களா? இல்லை நேற்று தமிழர்களாகிய நாங்கள் பட்ட துயர் நடந்த சம்பவத்தை கூறுகின்றீர்களா? என்பதை கூறுங்கள் என தாழ்மையுடன் கேட்கிறேன்.

தற்போதைய உலகின் நிலையை வைத்து பொதுவாக சொன்னேன்,அகிம்சைக்கு ஒரு காலத்தில் மதிப்பு இருந்தது ஆனால் அது இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன.மனிதம் இல்லாத உலகில் தமிழர்கள் மட்டும் மனிதர்களாக வாழ்வது ஏன்???

  • தொடங்கியவர்

11 நாட்களாக 3 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் சாகும்வரையிலும் இருக்க அவர்கள் தயார் (நான் கூறுவது மீண்டும்) அவர்களை கலைத்தது இந்த அரசியல்வாதிகளே - இவர்கள் தியாகத்தை அறியாமன்ம் கொண்ட சிலரும் மதிப்பளிக்காதது வேதனை ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலையில்லை எங்கள் இனத்தை உயிரை கொடுத்து காப்பாற்ற வேண்டும் எனும் தீர்கமான முடிவினில் உள்ளனர்.

அகிம்சையில் சாதிக்கலாம் என்றால் அதற்கும் தடையாக உள்ளனரே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் நண்பர் ஒருவர் இப்படிச்சொன்னார்:

புலிகளின் அறிக்கையை வேறு ஏதாவது நாட்டு ஊடகங்களும் வெளியிடும் நிலை வரணும். வரச் செய்யணும். , முயற்சி இதில் ஈடுபடச் செய்யவேண்டும் பு.பெ.த. ஊடகங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் ரெய்ர்ரட், ஏ.பி.ஐ. அலுவலகங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தணும்

அவர் சொன்னதை அப்படியே வெட்டி ஒட்டி இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்பொழுதும் அகிம்சையில் நம்பிக்கை இருந்ததில்லை ஆனால் செய்யவேண்டிய கட்டாய நிலை :unsure:

இதே கருத்துதான் எனதும் மிதிபடும் எம்மை எவனும் கருத்தில் கொள்ளமாட்டான் துவண்டு போகாமல் மீண்டு வந்தால்தான் முடியும் அதுவரை??................[அடிமை வாழ்க்கை] :mellow::mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11 நாட்களாக 3 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் சாகும்வரையிலும் இருக்க அவர்கள் தயார் (நான் கூறுவது மீண்டும்) அவர்களை கலைத்தது இந்த அரசியல்வாதிகளே - இவர்கள் தியாகத்தை அறியாமன்ம் கொண்ட சிலரும் மதிப்பளிக்காதது வேதனை ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலையில்லை எங்கள் இனத்தை உயிரை கொடுத்து காப்பாற்ற வேண்டும் எனும் தீர்கமான முடிவினில் உள்ளனர்.

அகிம்சையில் சாதிக்கலாம் என்றால் அதற்கும் தடையாக உள்ளனரே!

அது தான் சொன்னேன் அகிம்சை இறந்து பல வருடங்கள் ஆகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(இந்த இடுகையை படிக்கும் அனைவரும் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன் )

கண்ணீர் விட்டே வளர்த்தோம். கண் முன்னால் எம் இனம் கேவலப்படுகிறது.

Edited by vengaayam

  • தொடங்கியவர்

நல்ல முயற்சியாக இருக்கும்....நன்றிகள்

  • தொடங்கியவர்

மிக நல்லா சொன்னீங்க! நானும் இதேமுடிவில் தான் இருக்கேன்...எங்களுக்கு நேர்மையான ஒரு தமிழ் எம்.பியை உருவாக்கனும்.... சாமத்தியவீடு போன்ற நிகழ்வுகளுக்கு ஒருத்தனையும் கூப்பிடக்கூடாது...

தேர்தல் வரத்தான் போகுது இவனுகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க நாம் சபதம் ஏற்க வேண்டும் - சீக்கியரிடமிருந்தாவது இதை கற்றுக் கொள்ளவேண்டும்.

கத்த கத்த கேட்காத உலகம்,

கதற கதற செவிமடுக்காத சர்வதேசம்,

அமைதி வழி நின்று அனைத்தையும் முயன்றும் அழிவு செய்பவனுக்கு பின்னால் அணிதிரளும் இந்த பாழாய் போன நாசமறுந்த நாடுகள்,

எல்லாம்

இனி

சிங்களவர்களின் பிணங்கள் தெற்கில் குவிந்தால் மட்டுமே

எம்மை நோக்கி திரும்பும்

போதும் இனி சர்வதேசம், மனித உரிமை, நியாயதிக்கப் போராட்டம் என்று குத்தி முறிந்தது எல்லாம் போதும். நல்ல பிள்ளையாக இருந்தால் ஒரு மயிரையும் புடுங்கேலாது. தலிபான் வைத்தியம் தான் சாலச் சிறந்தது

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை தோல் காரனுக்கு ...........சூடு சுரணை இல்லை......அவன் முன் அகிம்சை எப்படி உறைக்கும்.......

.நம்பிக்கையுடன் கலந்து கொண்ட உறவுகளுக்கு நன்றி ........எத்தனை பேர் வேலைக்கு விடுப்பு எடுத்து .........பாடசாலைக்கு விடுப்பு எடுத்து .......நம்பிக்கையுடன் அதிகாலை ....... பயணம் செய்து ........அத் தோடு கால நிலை வேறு மழையும் குளிரும் ........வாகன ஓட்டத்தில் ........கண்ணுக்கு ( எண்ணை ஊரறியவாறு ) கவனம் செலுத்தி .......பயணம் செய்து ............கடவுளே ......கண் பாராய் .......இன்னுமா தாமதம்.

  • தொடங்கியவர்

நீங்கள் ருத்ர தாண்டவத்தை அவதாராக வைத்துக் கொண்டு மனம் துவளாது என்ன செய்யலாம் என்று கூறுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருட்டறையில் வாழ்ந்துகொண்டு ஏதுடா கனவு :unsure:

அருட்டுவதை உணர்ந்துகொண்டு ஆளுவாய் நனவு

மருட்டிவிடும் மாயையை மறந்துவிடு

நீ மாறிவிடு மாறிவிடு மாறிவிடு

  • கருத்துக்கள உறவுகள்

சினைபார் ....அவதாரை மாற்றவா ?

  • தொடங்கியவர்

நீங்கள் கூறியது உண்மை இனியும் இந்த சர்வதேசத்தை நம்ப இயலாது அதற்காக தலிபான் போல் சென்றால் நம் இலக்கை அடையமுடியாது. தமிழ்நாட்டின் எழுச்சியை இங்கிருந்து யாராவது (தலைமை தலைமை என கூறும் நண்டுகள்) தொடர்பு கொண்டனரா?

இனியும் கெட்டுவிடலை இது மிகச் சரியான தருணம் - ஈழம் சார்பாக 40 இடம் கிடைத்தால் மாற்றத்தை உருவாக்கலாம்....போராட்டங்கள் முன் எப்போதும் இல்லாத வடிவும் எழுச்சியும் பெற்றுள்ளது.... நானும் இவர்களுடன் கூறி கூறி அலுத்துவிட்டேன்.

அக்கா அவதாரை மாற்றாது அதற்கு ஏற்றார் போல் தாண்டவம் ஆடவேண்டும்.

எல்லாம் சர்வ மயம் எல்லாம் சர்வ மயம் எனும் மாயை நம்மை விட்டால் நீங்கள் கூறுவது நடக்கும்.

தமிழர்கள் ஆதியானவர்கள் அதை மீண்டும் நிலை நாட்டவேண்டும் என்பதற்காகத்தான்.

தோள்கள் துடித்து புஜம் புடைத்து மீண்டும் வரலாற்று தமிழனை உயிர்ப்பித்து வெற்றி வாகை சூடுவோம். எமை புறந்தள்ளும் இவ்வுலகை எமதாக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • தொடங்கியவர்

இந்த கம்யூனிஸ்ட் இலங்கை தமிழன் இந்திய தமிழன் என்றுதான் கூறுகின்றார் தமிழீழ தமிழன் அல்லது ஈழ தமிழன் தமிழக தமிழன் என்று கூறவில்லை கூறவும் மாட்டார் - இவர்கள் இந்திய இலங்கை இறையாண்மை எனும் மாயைக்குட்பட்டவர்களே!

எல்லாம் சர்வ மயம் எல்லாம் சர்வ மயம் எனும் மாயை நம்மை விட்டால் நீங்கள் கூறுவது நடக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.