Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும்.

டிரிங் .........டிரிங் .......என்ற மணியோசை அவள் தூக்கத்தை கலைக்க ........எழுந்து தெலிபோனை எடுத்தால் .மறுமுனையில் அவள் தங்கை சாந்தி .........அக்கா என்ன இன்று இவ்வளவு நேரம் படுகிறாயா .............இல்லையாடியம்மா .நேற்று அம்மாவை கனாக்கண்டேன் அது தான் ....இரவு முழுக்க நித்திரையில்லை விடிந்தது தெரியாமல் தூங்கி விடேன் . இப்போது எத்தனை மணி உங்க நாடில்.? .காலை எட்டு மணியாகிறது . அக்கா வார ஞாயிறு ஆவணி இருபத்திநாலு ........அம்மாவின் இறந்த நாள் .........என்று அவர்கள் சம்பாஷனை போனது .........அத்தொலைபேசி உரையாடல் முடிந்தாலும் அவள் நினைவு மட்டும் தாயகதை நோக்கி பறந்தது ........

தமிழ் ஈழத்தின் தீவக பகுதியில் அவள் வாழ்விடமும் பிறந்த மண்ணும். தொண்ணூறுசிதறியோடி ஒரு கோவிலை அடைந்த ஒரு பொழுதில் ..........நாள் முழுக்க நடந்த களை சரியான உணவு இல்லத நிலை .ஒரு கொடிளைல் தஞ்சமடைய சென்ற நேரத்தில் ,அது ஜனதிரளால் நிறையவே , அவள் குழந்தைகளுடன் அருகிலிருந்த பள்ளியில் தஞ்சமடைந்தாள். கடைசியாக அம்மாவையும் அப்பாவையும் கடைசி தங்கையையும் கண்டது அதுவாக தான் இருக்க போவது தெரியாது அவளுக்கு. அந்த சனத்திரள் மத்தியிலும் அம்மா சொல்கிறா .இங்க சன கூடம் நாங்க சமாளிக்கிறோம் நீயும் பிள்ளைகளும் உன் மாமா மாமியுடன் பள்ளிக்கூட பக்கமாய் போய் ஒதுங்க்குங்கோ ....பிள்ளைகளுக்கு பால் மா பிஸ்கட் கொண்டு வந்தனியே ....? இது தான் கடைசி வார்த்தை . ஓம் அம்மா ரண்டு நாளுக்கு சமாளிக்கலாம். ஆமி போன பின் வீடுக்கு போகலாம் தானே .......ஹெலி சத்தம் கேட்குது ஓடுங்கோ ....இரவிரவாய் நித்திரை விழிப்பு ..........

ஒரு உறவினர் துணையுடன் . அவள் அராலி .........கடந்து நடக்க ஆரம்பித்தாள் ........எதுவுமே தணிந்த பாடாய் இல்லை ........ஒவ்வொரு இடமாய் நடந்து .......தங்கி ...இரவைக் கழித்து .ஒரு மறை ..... மாவட்ட கோவிலை அடைந்தாள். லங்கையிலே பிரபலமான கோவில். ....அங்கு அவளுக்கு முன்பே ........அந்த வளவும் கோவிலும் நிறைந்து விட்டு இருந்தன...........ரண்டு வாரங்களின் பின் இடியோசை போல ஒருசேதி ...........அவளின் தாய் , ஹெலி யில் இருந்து ஏவப்பட்ட ஒரு துப்பாக்கி சன்ன்தால் இவர்கள் புறப்பட்ட அன்று இரவே .........காலமாகி விடார் என்று .........ஐயோ கடவுளே நானும் அங்கு இருந்து இருந்தால் .......நினைக்கவே நெஞ்சு பதறியது .........என் தாயை கடைசியில் கட்டையிலும் பார்க்கவிலையே .........அம்மா என்று அவள் மீது விழுந்து அழவில்லியே ..........ரத்தத்தை பாலாகி ஊட்டி வளர்த்த அந்த தாய் ..........நோயிலும் பசியிலும் அரவணைத்த தாய் .......பருவத்தே பள்ளி விட்டு , சபையோர் புகழ....கல்வியிலே முன்னிர்ற்க வைத்த தாய் .........எழு புத்திர பாக்கியத்தில் நான்காவதாய் என்னை பெற்ற தாய் ....மண் கொண்டு போய் விடதே. காலம் தான் எவ்வளவு வேகமாய் .........இன்று இத்தனை வருடங்கள் சென்றும்

.....இன்னும் மோசமாக செல்லும் என் தேசம் .........கடவுளே இதற்கு ஒரு கங்கு கரை இல்லயா .......? வன்னியிலே மக்கள் படும் கஷ்டம். .......இனம் தினம் அலையும் சேதி ..........வயது இன வேறுபாடின்றி .......அழிக்க க்கப்படும் மக்கள். புனர் வாழ்வு .... தீர்வு என்று .......சர்வ தேசத்தின் இழுத்தடிப்பு ...........ஆட்சியாளனின் இன வெறி ..........ரத்தம் குடிக்கும் பாது காப்பு தலைவனின் ..........கோர முகம் கொண்ட கொலை வெறி ........இத்தனைக்கும் என தேசம் .............ரத்தமும் சதயுமாய் .......கிபீர் கொத்துக்குண்டுகள்.எனறு அத்தனை அழிவு கருவிகளும் என் இனத்தை பதம் பார்க்க ...........கொடியவனுக்கு ஒரு சாவு வராதோ ? பாது காப்பு வலயம் எனும் பெயரில் ....வடித்தெடுத்து .......கொலைக்களம் ,,,,சித் திரவதை கூடம் அனுப்பும் .......நடவடிக்கை. என்று தான் தீருமோ ? வெள்ளத்திலும் ....கொடிய வெயிலிலும் பங்கர் எனும் அகழி வாழ்கை ..........துன்பமும் துயரமும் என் தலை முறையுடன் போகட்டும்.....புதிய யுகம் பிறக்கட்டும் ...அமைதி நிலவட்டும் .......மதி கெட்ட இன வெறி மகிந்த ஆட்சி மறையட்டும் .........புதிய உலகம்பிறக்கட்டும் என் இனம் புத்துணர்ச்சி யுடன் நம் தலைவன் வழியில் மலரட்டும் .............தமிழ் ஈழம் தான் .........ஒரே தீர்வு .........

.பலவாறு சிந்தனையில் மிதந்தவள் ....பாடசாலை விட்டு வ்ரும் பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து விட்டு ............வீதியில் நடக்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ள ...........புறப்படுகிறாள் .......அங்கு ........அவளுக்கு முன்பே சனக்கூட்டம் ........நிறைந்து கோஷங்கள் கேட்கிறது . நிறுத்து ......நிறுத்து ......இனப்படுகொலையை.....தேவை ...ஒரு யுத்த நிறுத்தம் ..கொண்டு வா ....அமைதியை ..... தேவை .........தமிழ் ஈழம் ........விடுதலைப்போராளி பிரபாகரன் .......வாழ்க . எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்.........இன்று உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகள் எல்லாம் உரத்து ....ஒலிக்கும் ஓசை ....கேட்குமா ?

தீருமா அவலம் நிறைந்த தேசத்தின் அவலம் .........பிறக்குமா தமிழ் ஈழம் ........அது ஏற்கனவே இருக்கு .........கிடைக்குமா அங்கீகாரம் ........காலமும் கடமையும் ...இணைந்து ஒரு விடிவு பிறக்கும்

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை ..............பிறக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டோ பயாகிராபியா அக்கா..... அசத்திட்டீங்க போங்க

தாகமும்... சோகமும்... தெரிகிறது

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .......சரவெடி

நிலாமதி அவர்களே

தங்களின் கதை கண்டு இரசித்தேன்.

தமிழ் நன்று, உணர்வு நன்று.

தங்கள் ஆக்கங்கள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நல்ல கதை

தாயக உணர்வுடன் வந்த கதை அற்புதம்

தங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான ஆக்கம் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா!

நடந்த கொடுமைகளை நினைத்தால் உணவும் இறங்க மறுக்கிறது. சாப்பிட சிறிது நேரம் தாமதமானால், வயிறு காந்தும்பொது, "அய்யோ, எம்மின மக்கள் பல நாள் பட்டினி கிடந்து மாண்டு போனார்களே" என்னும் எண்ணம் வதைக்கிறது. இப்படியே ஒவ்வொரு விடயத்திலும். இன்னும் தீவிரமாக ஏதாவது செய்திருக்க வெண்டுமோ என்று அடித்துக்கொள்ளுகிறது. ஆயினும் மனதை தளரவிட்டேனில்லை. நீங்களும் மனம் தளர வேண்டாம். தீவிரமாக நம்பிக்கை கொள்ளுவோம். நிச்சயம் ஈழம் மலரும்.

அக்கா ஒவ்வொரு தன்மான தமிழனும் தெளிந்த சிந்தனையுடன் செயல் பட்டால்

நிச்சயமாக...... கட்டாயமாக.......உறுதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்....

உங்களின் தனி நாடு மலரும் என்று................

உங்கள் ஆக்கம் இன்றய நிலையை உணர்த்தி நிற்கிறது!!!!!!

நன்றி அக்கா!!!!!

அன்புடன்

மாறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.