Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது தரப்பிடம் சரணடைய தயார்.. இல்லையெனில் கூட்டுத் தற்கொலை ???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கெட்டசெய்தி என்ன செய்வது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்காவிற்கு பணக்கஷ்டம் அளவுக்கு மீறி ஏற்பட்டால் ........ இந்தியாவும் , சீனாவும் கொடுக்க தயாராகவே உள்ளன .

நான் நேற்று ஒரு செய்தியில் பார்த்த போது ...... வன்னியில் இருந்தவர்கள் சிங்களவர் என்றும் ,

அவர்கள் புலிக்கு பயந்து தான் தம்மை தமிழர் என்று கூறிகொண்டதாகவும் சொன்னார்கள் .

அதன் அர்த்தம் இப்போது தப்பிப் பிழைத்த தமிழர்களை கொன்று விட்டு , அங்கு ராணுவத்தின் குடும்பங்களை குடியமர்த்துவதற்கு ஆயத்தமாக உள்ளார்கள் .

இப்போது தமிழரின் வன்னி பெரு நிலப்பரப்பு சிங்களவனின் கைக்கு போனபின் , இலங்கையில் இனி ......, எதிர்காலத்தில் தமிழரின் இருப்பு கேள்விக்குறியாகவே இருக்கும் .

மச்சான் அளவுக்கு அதிகமாக உதவிசெய்ய இந்தியாவும் சீனாவும் ஒன்றும் செல்வந்த நாடுகள் அல்ல எப்படியும் ஐரோப்பிய நாடுகளிடம் போகவேண்டித்தான் வரும் ஆனால் ஐரோப்பிய நாடுகள் சொல்வதை சிறிலங்கா செய்யும் என்று நான் சொல்லவரவில்லை.தமிழீழம் என்ற தமிழ் நாடு நிச்சயம் உருவாகியே தீரும் இவளவு விலைகளை கொடுத்த பின்பும் சிங்கள காட்டுமிராண்டிகளுக்கு அடிமையாக வாழ்வதா ? தமிழை நேசிக்கும் தமிழீழ தாகத்தை மனதில் சுமக்கும் கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் தமிழன் அழியமாட்டான். வாழ்தல் கொஞ்ச பேராவது மானத்தோடு வாழ்வோம் இல்லை எல்லோரும் மானத்தோடு தமிழனாக செத்துப்போவோம்

நானும் இப்போது மிகவும் கெட்ட செய்தி கேள்விப்பட்டேன் ஆனால் இங்கு பதிய மனம் இடம் தரவில்லை

:unsure: தமிழகத்திலும் வதந்தியாக பரவுகிறது எனக்கும் பதிய மனமில்லை!

எல்லோரும் பெளத்த மதத்தை தழுவி பெளத்த தமிழர்களாக தமிழ் மொழியை பாதுகாப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் அளவுக்கு அதிகமாக உதவிசெய்ய இந்தியாவும் சீனாவும் ஒன்றும் செல்வந்த நாடுகள் அல்ல எப்படியும் ஐரோப்பிய நாடுகளிடம் போகவேண்டித்தான் வரும் ஆனால் ஐரோப்பிய நாடுகள் சொல்வதை சிறிலங்கா செய்யும் என்று நான் சொல்லவரவில்லை.தமிழீழம் என்ற தமிழ் நாடு நிச்சயம் உருவாகியே தீரும் இவளவு விலைகளை கொடுத்த பின்பும் சிங்கள காட்டுமிராண்டிகளுக்கு அடிமையாக வாழ்வதா ? தமிழை நேசிக்கும் தமிழீழ தாகத்தை மனதில் சுமக்கும் கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் தமிழன் அழியமாட்டான். வாழ்தல் கொஞ்ச பேராவது மானத்தோடு வாழ்வோம் இல்லை எல்லோரும் மானத்தோடு தமிழனாக செத்துப்போவோம்

இந்தியா ( தமிழக உறவுகள் அல்ல ) தனக்கு மூக்கு அறுந்தாலும் காரியமில்லை , ஈழத்தமிழனுக்கு சகுனம் பிழைத்தால் சரி என்னும் மனநிலையிலேயே .... உள்ளது மச்சான் .

30 வருசத்துக்கு பிறகு தலைவருக்கு அறிவு வந்திருக்கும்..... உந்த சுயநல சனியங்கள் கெட்டகேட்டுக்கு சுதந்திரம் ஒரு கேடு எண்டு.....

என்னுடைய கடைசி பதிவு.... இனியும் தமிழர்களுடன் சங்காத்தம் வைத்துக்கோள்ள விருப்பமில்லை..

bye

இங்கு யாருமே ஒரு தொலை நோக்காகவே சிந்திக்க மாட்டீர்களா? ஒரு செய்தி வந்தால் முதலில் அதனை அலசுங்கள் தேவையற்ற கற்பனைகளை மிதக்க விடாதீர்கள்...முதலில் செய்தியில் உள்ள சாரம்சாரம் என்ன என்று பகுத்து பாருங்கள்....தமிழகத்தில் தமிழ்நாதம் இணையம் தெரிவதில்லை அங்கு பரப்ப படும் செய்திகள் யாவும் புரளியே!

செய்தி சரியாக ஆராயப்படவில்லை. இது உண்மையாக விடுதலைப்புலிகளின் முடிவாக இருக்குமேயானால் போராட்ட வரலாற்றின் 34 வருடகால அனுபவம் கேலிக்குரியதாகிவிடும். தற்கொலை செய்தல் ஒன்றும் விடுதலைப்புலிகளுக்குப் புதிதல்ல.

இன்னமும் போராடக் கூடிய வலுவை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட முடிவுகள் எடுத்திருக்க முடியாது. இந்த முடிவிற்கு மூன்றாந்தரப்பு என்கின்ற சர்வதேசம் சம்மதிக்காது. தற்கொலை செய்யப் போகின்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவை இந்த முடிவிற்குப் பாராமுகமாகவேயிருக்கும்.

இந்தியத் தேர்தல் முடிவையொட்டியே இச் செய்தி வெளியிடப்பட்டிருப்பதால், இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே கருத இடமுண்டு. அதிலும் இன்று அவுஸ்ரேலிய வானொலியில் மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளர் தயாமோகனது பேட்டி வெளியாகியுள்ளது. இந்தக் குழப்ப நிலையை அது தெளிவுபடுத்தும்.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் எழுச்சிப் போராட்டங்களைத் தளர்வுறச் செய்வதற்காக இவ்வாறான புரளிகள் கிளப்பப்பட்டிருக்கின்றன. வதந்தியாக ஏராளமான கதைகள் பரவும் தருணமிது. இருநாட்களுக்கு முன் சூசையின் மனைவி கைது செய்யப்பட்டதாக வந்த செய்தி உண்மையாகவிருந்தால், தயா மாஸ்டர், ஜோர்ஜ் ஆகியோரது படங்கள் அரச ஊடகங்களில் வெளியிடப்பட்டதுபோல் உடனடியாகவே பிரசாரப்படுத்தப்பட்டிருக்க

கூண்டோடு தற்கொலை செய்து கொள்ள புலிகள் தலைவர்கள் திட்டம்: சிறிலங்க அரசு

இலங்கையின் முல்லைத்தீவு கடலோரப் பகுதியை சிறிலங்க ராணுவம் நாலாபுறமும் சுற்றி வளைத்து விட்டதால் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட மூத்த தலைவர்கள் அனைவரும் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்க ராணுவம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக முல்லைத்தீவில் முற்றுகையில் ஈடுபட்டுள்ள ராணுவ பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி முழுவதும் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது.

கடலோரமாக வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் முன்னேறிச் சென்ற ராணுவப் படை பிரிவுகள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று ஒன்று சேர்ந்து விட்டன. எனவே விடுதலைப்புலிகள் கடல் வழியாக தப்பிக்கும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டு விட்டது. அதே போல் நிலப்பகுதி வழியிலான பகுதிகளும் ஏற்கனவே அடைக்கப்பட்டு விட்டன.

இப்போது விடுதலைப்புலிகள் தலைவர்களும் அவர்களுடைய படையில் இருப்பவர்களும் 3.5 சதுர கி.மீ. பரப்புக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் போரிட்டு மடிய வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை என்றார்.

சிறிலங்க ராணுவத்திடம் பிடிபட்ட கடல் புலிபடையின் தலைவர் சூசையின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் மற்றும் முக்கிய தலைவர்கள் எல்லோருமே வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இனிமேல் அவர்கள் தப்பிக்க வழியில்லாததால் பிரபாகரனும், மற்ற தலைவர்களும் மீதமுள்ள விடுதலைப்புலிகளுடன் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. விடுதலைப்புலிகளின் வயர்லெஸ் செய்தியை இடைமறித்து கேட்ட போது இதனைத் தெரிந்து கொண்டோம்.

அதிபர் ராஜபக்ச ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தை அவசரமாக முடித்துக்கொண்டு கொழும்பு திரும்புகிறார். அவர் நாடு திரும்பியவுடன் போர் முடிந்ததற்கான அறிவிப்பை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

http://tamil.webdunia.com/

பொய் என்பது அப்பட்டமாக விளங்குகிறது.

நாம் அலைபாய்வதில் அர்த்தமில்லை.... உண்மையை அதிகநாட்களுக்கு அடக்கி வைக்க முடியாது.

உறவுகளே!

ஏன் இப்படி மனமுடைந்து போகின்றீர்கள்??? முன்பைவிட நம் விடுதலையுணர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கின்றதே ஒழிய சற்றும் குறையவில்லை.

போராட ஆயுதம் மட்டும் முக்கியமல்ல. அடங்காத விடுதலை உணர்வும், தணியாத தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும்.

கடைசித் தன்மானமுள்ள தமிழன் இருக்கும் வரைக்கும் நம் விடுதலைப் போராட்டம் ஓயாது.

ஒரு அன்பான, பணிவான வேண்டுகோள்:தயவுசெய்து நம் விடுதலைப் போராட்டம் தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை முன்வைப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நம் தலைமை மீது நம்பிக்கை வைத்து , தன்னம்பிக்கையுடன் தன்னெழுச்சி பெறுங்கள்!

நமது பேரெழுச்சிதான் போராட்டத்தினை வழிநடத்தப் போகின்றது.

எனவே ஓயாமல் தொடர்ந்து போராடுவோம்...!

"தர்மம் தன்னை சூது கவ்வும் பின்னர்

தர்மம் வெல்லும்"

பருத்தியன் இன்றுள்ளது விடுதலைப்போராட்டமில்லை இது வாழ்வாதாரப்போராட்டம்.

இன்று நாம் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.... இதிலிருந்து மீழ எத்தனைகாலம் எடுக்குமோ?

பருத்தியன் இன்றுள்ளது விடுதலைப்போராட்டமில்லை இது வாழ்வாதாரப்போராட்டம்.

இன்று நாம் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.... இதிலிருந்து மீழ எத்தனைகாலம் எடுக்குமோ?

உங்கள் வலி எனக்குப் புரிகின்றது சூறாவளி!

உங்களது அடையாள வரிகளிலிருந்து...

"திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,

தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்"

Edited by பருத்தியன்

வணக்கம்

உறவுகளே வதந்திகளை நம்பாதீர்கள் நாம் நிதானமாக செயற்படுவோம்;.

கொலை வெறிக்சிங்களவன் கொழும்பில் கொடிபிடித்து வெடிகொளுத்துகிறான்.

லண்டனில் சிங்களமுதலைகள் சேர்ந்து 'எங்களால்எங்களுக்கு"(அப்பிவெனுவென்அப்பி) என்று பிச்சை கேட்கிறார்கள்.

எமது போராட்டம் தற்காலிக பின்னடை சந்தித்திருக்கிறது. எல்லாம்முடிந்துவிட்டது என்று சிங்கவெறியன் சொல்லிவிட்டால் எட்டப்பஇந்தியாவும் பிணந்தின்னிச்சீனாவும்பேசாம

நாங்கள் போராட்டத்தின் நிலமையை நினைத்து வேதனைப்படுவதை விட மக்களின் இழப்புக்களைப்பற்றியே அதிகம் வருந்துகிறோம்.

இன்று இந்த இளப்புக்களையும் அவலத்தையும் பார்த்து இரங்காத இவ் உலகம் நாளை எதற்காகவும் இரங்குமா?

நாளை நாங்கள் திரும்ப எழலாம் மீண்டும் போராடலாம்..... ஆனால் இதற்கெல்லாம் மக்கள் வேண்டுமே.... இன்று அவர்களே வேரருக்கப்படுகிறார்களே? இது வதந்தியல்ல உள்லிருந்தொரு குரல் அதுவும் சூசசை அண்ணாவின் குரல். இதுக்குமேலும் எதைத்தான் பார்த்துகொண்டிருப்பது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூசை சொல்கிறார்.. இறுதிவரை போராடுவோம் என்று.. தற்கொலை செய்வோம் என்று என்று எங்கும் அவர் குறிப்பிடவில்லை.

டைம்ஸ் பேப்பரில் வந்துள்ளது பொய்

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி விவாதிப்பது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல!

என்ன செய்ய.. இந்தக்கொடுமை எல்லாம் உலகம் வேடிக்கை பார்க்கிறது..

இவ்வளவு தூரம் லங்கா படை வருமென்று எங்களை விட புலிகளுக்கு அதிகம் தெரிந்திருக்கும்.. அதனால் நிச்சயம் தலைவரை அங்கு வைத்திருப்பார்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை...

அப்படியாயின் அது தமிழர் வரலாற்றிலேயே மிகவும் முட்டாள்தனமான முடிவு

இத்தனைபேரை இழந்து இறுதியில் இழப்பு மட்டுமே மிச்சம்... இந்த வெளிநாடெல்லாம் என்ன நினைக்குமெண்டு நடவடிக்கைகளை கைவிட்டதும் எதிரியின் பலத்தை தவறரக எடைபேர்'டதும் இல்லாது தன்னினத்தை தானே காட்டிக்கொடுத்து சீவியம் நடத்திய பெருமையும் எம் தமிழரையே சாரும்..

இதற்கு மேல் என்ன சொல்ல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஒன்றுமில்லை ஐயா இந்தியாவை உள்ள நுழைக்க செய்யும் முயற்சி

இயக்கம் தான் இப்ப அமெரிக்காவிட்டயும் பிரிட்டனட்டையும் போயாச்சே

அது தான் ஐயாவிந்தை அடுத்த நாடகம்

வேறு ஒன்றுமில்லை

ஐயாவாவது ஆட்சியை விட்டுக்கொடுக்கிறதாவது

25,000 இற்கும் மேற்பட்ட மாவீரர்கள், இலட்சக்கணக்கான பொதுமக்கள் இவர்கள் குருதி சிந்தி வளர்ந்த போராட்டம்.. இப்படி மொட்டையாக முடிய வாய்ப்பில்லை. வெளியில் இருந்து பார்க்கும்போது எங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். ஆனால்... பல வருடங்களுக்கு முன்பே இப்படியான அழிவுகள் எதிர்பார்க்கப்பட்டு அதற்கான மாற்றுவழிகள்... அழிவின்பின்னரும் போராட்டம் விருட்சம்பெற்று முனைப்புடன் கொண்டுசெல்லப்பட திட்டங்கள் தீட்டப்பட்டு தற்போது செயலில் இருக்கும்.

நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்வோம். என்றோ ஒருநாள் எங்கள் தேசியக்கொடியும் வானில் உயரப்பறக்கும். நாங்களும் ஒருநாள் வெற்றிவிழா கொண்டாடத்தான் போகின்றோம். அதுவரை எங்கள் சிந்தனையைக் கூர்மைப்படுத்தி தாயகத்திற்கான எங்கள் கடமைகளைச் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அழிவுகள் என்றும் நிரந்தரமானது அல்ல.

...ஆனால்... பல வருடங்களுக்கு முன்பே இப்படியான அழிவுகள் எதிர்பார்க்கப்பட்டு அதற்கான மாற்றுவழிகள்... அழிவின்பின்னரும் போராட்டம் விருட்சம்பெற்று முனைப்புடன் கொண்டுசெல்லப்பட திட்டங்கள் தீட்டப்பட்டு தற்போது செயலில் இருக்கும்...

பல வருடங்கள் என்பதை விட பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே இவை எதிர்பார்க்கப் பட்டு திட்டங்களும் ஏடுகளில் குறிக்கப் பட்டிருக்கும். இப்போது கொல்லப் பட்ட மக்கள் கூட அந்த ஏட்டின் பிரகாரமே கொல்லப் பட்டார்கள். வெளிப் பார்வைக்கு இவை இழப்புகள் போல தென்பட்டாலும் உள்ளே அவிழ்க்கவே முடியாத இராஜ தந்திர முடிச்சுகள் பின்னப் பட்டிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.