Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் தோற்கடிப்பு: நிதியுதவி வழங்கவும் தீர்மானம்

Featured Replies

சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.

இதனால், இந்த பிரேரணை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் பிரேரணையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் பிரேரணைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த பிரேரணையை நிறைவேற்ற முடியாது அது தோல்வியடைந்துள்ளது.

இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் பிரேரணை ஒன்றையும் முன்வைத்தது.

இந்த பிரேரணை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த பிரேரணைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.

எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும் பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த பிரேரணை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் சிறிலங்கா அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினம்

காந்தி தேசம் you too அது சரி காந்தி வெள்ளையனை வெளியே அனுப்பினது மட்டும் தான் சுதந்திரம் ,மற்றவன் சுதந்திரத்திற்க்காக போராடினால் அது பயங்கரவாதம்

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் சிறிலங்காவுக்கு கிடைத்த நன்மையையும் பாருங்கள்.

Sri Lanka shares jump over 2 pct on U.N. resolution

COLOMBO, May 28 (Reuters) - Sri Lankan shares .CSE gained over 2 percent on Thursday in early trade as investor confidence jumped after Sri Lanka defeated attempts to push a war crimes and rights investigation at the U.N. Human Rights Council.

The Colombo All-Share Price Index .CSE had gained 2.52 percent or 54.30 points to 2210.34 at 0552 GMT, its highest close since Sept. 26. It recorded a turnover of over 400 million rupees ($3.48 million).

"The UN resolution has given an international acceptance for the war and market is up on that, in addition to the war victory," said Hussain Gani, associate director at Asia Securities.

Top mobile phone operator Dialog Telekom DIAL.CM was up 4.55 percent to 5.25 rupees, while top conglomerate John Keells Holdings JKH.CM had gained 3.18 percent to 1123.50 rupees, provisional data showed.

The U.N. Human Rights Council passed a resolution on Wednesday celebrating Sri Lanka's victory over the Tamil Tiger rebels, ignoring Western-led calls for aid for refugees and political rights for minorities. [iD:nLR170562]

Sri Lanka's military ended a 25-year war over the Tamil Tigers last week by defeating the separatists, killing its leadership and liberating all rebel-held territories. ($1=114.925 rupees) (Reporting by Shihar Aneez; editing by Bryson Hull)

- http://www.reuters.com/article/rbssIndustr...L50359120090528

எதிர்பார்த்த முடிவு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்த‌ியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது : பழ.நெடுமாற‌ன்

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இல‌ங்கை‌யி‌ல் ஒரு ல‌ட்ச‌த்து‌க்கு மே‌ற்ப‌ட்ட அ‌ப்பா‌வி த‌மி‌ழ் ம‌க்க‌ள் ‌சி‌ங்க இராணுவ‌த்‌தினரா‌ல் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு கொலை‌க்கு ஆளா‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌‌க்‌கி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி சிறிலங்காவின் போர்க் குற்றத்திற்கான தண்டனையைத் தமிழர்கள் தான் கொடுக்க வேண்டும்.எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ.சொறிலாங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு நாம் நன்றி சொல்லக் கடைமைப்பட்டுள்ளோம்.அரசியல் அறிவுதான் இல்லை என்றாலும் அடிப்படை பண்புகள் ஆவது வேண்டாமோ. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.