Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறப்பேனோ வேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? - அருட்தந்தை ஜெகத் கஸ்பர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. “”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: “”என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!”

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, “போர் வெற்றி’ தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் “பந்தயக் குதிரைகளாக’ நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது… என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. “”தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா” என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. “”உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: “”என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன”.

தொடர்ந்து நான் கேட்டேன், “”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. “”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், “”நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.” பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது
.

மத குருமாரும் ஏன் இப்படி எல்லாம் எம்மை கற்பனை கடலில் மிதக்க விடவேண்டும் என்று புரியவில்லை

மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது

முண்று லட்சம் தமிழர்களை விட 40000 ஆயிரம் சிங்கள இராணுவத்தின் உயிர்கள் மேலானது என்ற தோரணயில் மதகுருவின் கருத்துள்ளது

Edited by Jil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையை முழுமையாக வாசித்து பாருங்கள். நீங்கள் விளங்கிகொண்டது தவறு என்று புரியும். அவர் யாரையும் கற்பனைக்கடலில் மிதக்க விடவில்லை.

'முண்று லட்சம் தமிழர்களை விட 40000 ஆயிரம் சிங்கள இராணுவத்தின் உயிர்கள் மேலானது என்ற தோரணயில் மதகுருவின் கருத்துள்ளது"

முழுமையாக வாசியுங்கள் அவர் அப்படி கூறவே இல்லை. உங்களுக்கு பிளையாக விளங்கினால் மீண்டும் மீண்டும் வாசியுங்கள் விளக்கமாக புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

“எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்துஇ தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கிஇ எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டுஇ தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.

உலகில் வேறு எந்த ஒரு தலைவனதும் சிந்தனைக்கே எட்டாத ஆணித்தரமான கூற்று.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

“எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்துஇ தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கிஇ எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டுஇ தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.

உலகில் வேறு எந்த ஒரு தலைவனதும் சிந்தனைக்கே எட்டாத ஆணித்தரமான கூற்று.

தலைமை பற்றிய மாயையில்.. இலட்சியத்தை தவற விட்டு விடுவார்கள் போல இருக்குது.. தமிழர்களின் இன்றைய போக்கு..!

இதேபோன்ற ஒரு சூழல் 1987 இல் இந்தியப் படைகளுடனான யுத்தத்தின் போது இருந்தது. அன்று புலம்பெயர் சமூகம் என்பது சிறிதாக இருந்தது. ஆனால் இன்று தலைவர் தனது இலட்சியத்தை காவ.. எல்லை தாண்டியும் மக்களை ஒருங்கிணைக்க முயன்றுள்ளார். அந்த பலத்தை தமிழர்கள் காட்ட வேண்டும். செயற்பட வேண்டும்..!

தோல்விகள் நிரந்தர முடிவுகள் அல்ல. தோல்வியை கண்டு மனம் வருந்துவதிலும்..

எதிரியின் வெற்றிக்கான காரணிகளை முதலில் அடையாளம் காண வேண்டும். எமது பலவீனங்களை அடையாளம் காண வேண்டும். பின் அவற்றை மாற்றும் வழிமுறைகளைத் தேட வேண்டும்.

நிச்சயம் எமது மாவீரர்களின் மக்களின் கனவு மெய்ப்பட வேண்டும். அதை விடுத்து வேறொரு எண்ணம் எமக்குள் அவசியமில்லை என்பது என் கருத்து.

எதிரியை அழிக்கலாம்.. எதிரி பக்கமிருக்கும் அப்பாவிகளை அழிக்கக் கூடாது.

பண்டார வன்னியனாகட்டும்.. கட்டப்பொம்மன் ஆகட்டும்.. எல்லாளன் ஆகட்டும் எல்லோரும் துரோகத்தால் தான் எதிரிகளால் வீழ்த்தப்பட்டனர். இதுதான் தமிழனின் அழிவுக்கான இழி நிலை. இந்த நிலை மாற வேண்டும். அன்று பெரும் வீரர்களை இழந்தது போல இன்றும் இழந்திருக்கிறோம். அதற்காக போராடாமல் இருக்கப் போவதில்லை. போராடுவோம்..! ஒற்றுமையோடு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை... ஒருபோதும் துரோகிகளை விட்டு வைக்கக் கூடாது... என்பதையே இந்தத் தோல்விகள் எமக்கு வலியுறுத்துகின்றன.

எதிரிகளை விட துரோகிகள் மிக மோசமானவர்கள்..! :(

Edited by nedukkalapoovan

தலைவருக்கு ஏற்பட்டுள்ள இடர்களையெண்ணி நெஞ்சம் கலங்குவதுண்டு இப்போது இதைப் படித்து இத்தகைய மாமனிதர் எம்மினத்தில் தோன்றி எமக்காகவே வாழ்கிறாரென்ற பெருமையும் அவரின் இனமான மனிதத்தகமையெல்லாம் எண்ணி கண்களும் கலங்குகிறது. ஒரு ஈழத்தமிழனாய் என் இனத்துக்காக என் கடமையை என் பங்களிப்பை நான் செய்வேன் தலைவா...

நிச்சமாய செய்வேன்

தமிழர் தம்மை சுற்றி உள்ள துரோகிகளை இனங்கண்டு இந்த விடுதலைபோராட்ட செயற்பாட்டுக் களத்தில் இருந்து ஒதிக்கி வைத்து கையாள்வது. எமது விடுதலையை வென்றெடுப்பது விரைவாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியை அழிக்கலாம்.. எதிரி பக்கமிருக்கும் அப்பாவிகளை அழிக்கக் கூடாது.

எதிரிகள் பக்கமிருக்கும் "அப்பாவிகளை" எப்படி இனம் காண்பீர்கள்?

எதிரியின் ஆயுதம்தான் எம் ஆயுதத்தை தீர்மானிக்கிறது என்பது சரியான வாசகமானால்,

எதிரி வஞ்சகத்தை கையாளும்போது வஞ்சகத்தையும,

துரோகத்தை கையாளும்போது துரோகத்தையும்,

கையாள தெரிந்திருந்தால் மட்டுமே எதிரியுடன் மோத தலைப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருக்கலாம். அவ்வளவுதான் நாம் செய்ய வேண்டுவது.

வன்னியில் மனித பேரழிவு நடக்கிறது "பன்னாட்டு சமூகம்" என்று அழைக்கப்படுபவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?

எம் இன மக்கள் குடிக்கவும் நீர் வேண்டி வரிசையில் நிற்க வேண்டியுள்ளது; தமக்கு முன்பாக உள்ளவருக்கு கிடைத்த பின் தனக்கு கிடைக்கும் என்று நிச்சயமில்லாமல் தாகத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா?

சுமார் ஐம்பதாயிரம் மக்களை கொலை செய்து விட்டு, சாட்சியங்களை மறைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா?

அமைதி வழியிலான முப்பது வருட போராட்டங்கள் பலனளிக்காது போனதால் வேறு வழி இல்லாமல் தமிழன் ஆயுதம் தூக்கினான் என்பது இவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா?

எல்லாம் தெரியும். சண்டையில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் பக்கம் இவர்கள் நிற்பார்கள். ஜெயித்தவன் செய்ததெல்லாம் சரியே.

ஒன்று செய்யுங்கள். எப்படியாவது சிங்கள ராணுவத்தின் சுமார் இரண்டு லட்சம் துர்ப்புகளை கொன்று விடுங்கள். அப்பாவி மக்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, கொலை பாதகன் மகிந்தவுக்கு முட்டு கொடுக்கிறார்களே, புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று தெரிந்ததும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்களே, அந்த மக்களில் சுமார் பத்து லட்சம் பேர்களை கொன்று போடுங்கள். அவர்கள் எல்லாம் ராணுவ ஆட்கள் என்று சொல்லுங்கள். இவர்கள் ஆமாம் என்பார்கள். உங்களுடன் பேச்சு வார்த்தைக்கு வர துடிப்பார்கள். நிவாரண பணி மேற்கொள்ள உங்களை கெஞ்சுவார்கள். ஒன்றிரெண்டு பேர் கூச்சல் போடுவார்கள். நீங்கள் உங்கள் நிலையில் உறுதியாக நின்றால் கத்தி ஓய்ந்து விடுவார்கள்.

முதலில், சங்க காலத்தில் இருந்து வெளியில் வாருங்கள். கண்ணை திறந்து பாருங்கள். உங்களை சுற்றி நாய்களும், நரிகளும், கழுகுகளும், ஓநாய்களும் தான் இருக்கும். அவைகளுக்கு தகுந்தாற்போன்று செயற்படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி வழியிலான முப்பது வருட போராட்டங்கள் பலனளிக்காது போனதால் வேறு வழி இல்லாமல் தமிழன் ஆயுதம் தூக்கினான் என்பது இவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா?

எல்லாம் தெரியும். சண்டையில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் பக்கம் இவர்கள் நிற்பார்கள். ஜெயித்தவன் செய்ததெல்லாம் சரியே.

ஒன்று செய்யுங்கள். எப்படியாவது சிங்கள ராணுவத்தின் சுமார் இரண்டு லட்சம் துர்ப்புகளை கொன்று விடுங்கள். அப்பாவி மக்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, கொலை பாதகன் மகிந்தவுக்கு முட்டு கொடுக்கிறார்களே, புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று தெரிந்ததும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்களே, அந்த மக்களில் சுமார் பத்து லட்சம் பேர்களை கொன்று போடுங்கள். அவர்கள் எல்லாம் ராணுவ ஆட்கள் என்று சொல்லுங்கள். இவர்கள் ஆமாம் என்பார்கள். உங்களுடன் பேச்சு வார்த்தைக்கு வர துடிப்பார்கள். நிவாரண பணி மேற்கொள்ள உங்களை கெஞ்சுவார்கள். ஒன்றிரெண்டு பேர் கூச்சல் போடுவார்கள். நீங்கள் உங்கள் நிலையில் உறுதியாக நின்றால் கத்தி ஓய்ந்து விடுவார்கள்.

முதலில், சங்க காலத்தில் இருந்து வெளியில் வாருங்கள். கண்ணை திறந்து பாருங்கள். உங்களை சுற்றி நாய்களும், நரிகளும், கழுகுகளும், ஓநாய்களும் தான் இருக்கும். அவைகளுக்கு தகுந்தாற்போன்று செயற்படுங்கள்.

எல்லாம் சரி ! ஆனால், தமிழகத்துத் தலைவர்களைத்தான் புரிந்து கொள்ள முடியாது இருக்கிறது. தமிழரது சுயத்தை சிந்திப்பதைவிடத் தமது சுயநலம் பற்றியல்லவா சிந்திக்கிறார்கள். மாறுவார்களா? அல்லது தமிழக மக்களால் மாற்ற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் உண்மை

ஸ்ரீநிவாசன் அண்ணா

இதை ஏன் தலைவர் செய்யாது விட்டார்?

அவரால் முடிந்திருக்கும் - ஆனால்

செய்யவில்லை

ஏன்இதற்கும் பதில்தரமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த தர்மம் நீதி நியாயம் என்று பார்த்துப்பார்த்துத்தான் இன்றைய தோல்வியை சந்திச்சு இருக்கிறம்.

"உனக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு" என்று சொன்ன தலைவா! எங்கே இருக்கின்றீர்கள்?

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்பது பாலபாடம் தானே?!! இன்னும் மெளனித்திருந்தால் நம்மை மண்ணோடு மண்ணாக்கி விடுவான் மகிந்த!

'ஐநாவும் கையை விரித்துவிட்டது! இனி ???????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இந்த கட்டுரையை இங்கு தந்ததிற்கான காரணம். நாங்கள் எல்லோரும் நாங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதை நினைவு படுத்தவே ஆனால் நாங்கள் அதை விட்டு விட்டு மீண்டும் தலைவா தலைவா என்று அவரையயே எல்லாம் செய்ய கேட்கிறோம். இக்கட்டுரையில் தலைவர் செல்வதை பாருங்கள்.

“எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்துஇ தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கிஇ எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டுஇ தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன் என்பது உரம் அதுவும் பிரபாகரன் என்பது தமிழினத்துக்கே கிடைத்த வரம். எங்கள் கடமைகளைச்சுட்டிக்காட்டியது மட்டுமல்ல அதையே தானும் கடைப்பிடித்து அவ்வழியில் நின்ற தலைவர்.

தலைவரே அப்படிச்சொன்னாலும்,

அந்தத்தலைவன் வழியிலேயே அவரின் சொல்லுக்காகவே காத்திருக்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன பின்பு வேதனைப்படாமல் இப்பவே ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்யுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன பின்பு வேதனைப்படாமல் இப்பவே ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்யுங்கள்..

உங்களது நோக்கம் புலப்படுகிறதுங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன பின்பு வேதனைப்படாமல் இப்பவே ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்யுங்கள்..

நெஞ்சில் தலைவனைச்சுமந்த படி அந்தத்தலைவனின் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றபடி எங்கள் பணிகளை புலம்பெயர் தேசத்தில் எவ்வளவு தூரம் முடியுமோ அந்த வகையில் செய்து கொண்டுதான் இருக்கிறம் வக்தா.

‘’ஈடில்லாத இணையில்லாத எங்கள் தலைவனைப்பற்றிய சிந்தனையை விட்டு விட்டால் ‘நான் எல்லாம் சவமாகிவிடுவேன்”..

தலைவன் என்று சொல்வதிலும் ‘இறைவனாகவே நான் பார்க்கின்றேன். கண்முன்னே கடவுளைக்கண்டதில்லை ஆனால் கட்டாயம் கடவுள் வருவார் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

‘சர்வயாமி யுகே யுகே”...

அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட நிச்சயம் இறைவன் வந்தே தீருவார். அந்த நம்பிக்கைய நீங்கள் பழிக்காதிருங்கள் அது போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.