Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

இவர்கள் கடந்த முறை இந்தியா சென்ற போது, எமது தமிழ்தேசியத்தின் பிரபல ஊடகமான ஐ.பி.சி பகிரங்கமாக துரோகியாக அறிவித்தது!!!

இவர்களுக்குள்(கூட்டமைப்புக்

  • Replies 185
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கையெதுவும் நடக்கபோறதில்லை. விவாதங்களில ஈடுபடுறதும் பிரியோசனமில்லை. அங்கை சனம் தங்கட தலைவிதியை தாங்களே பார்த்துக்கொள்ளபோகினம். -

நாங்கள் இஞ்சையிருந்து ஒரு துடுப்பையும் தூக்கிப்போடாத வரைக்கும் அங்கத்தயை சனத்திற்கு டக்ளஸ் போடபோற எலும்புதான் பெரிசு. அப்பிடி அவை அந்த எலும்புக்கு எடுபட்டா.. அது அவையிட விருப்பம். எங்களுக்கு கருத்துக்கள் இருக்கலாம். ஆனா இஞ்சையிருந்துகொண்டு திணிக்கமுடியாது.

மற்றும்படி தமிழ்கூட்டமைப்பே - இணைந்துசெயற்படுவதை பற்றி யோசிக்கத்தொடங்கிட்டினம்.

அடுத்துவாற நாட்களில நடக்கபோற நிகழ்வுகள் இஞ்சை எங்களுக்கு கொதியை கிளப்பப்போகுது. சே.. அவனைப்போய்.. இவனைப்போய் என்டெல்லாம் குற்றச்சாட்டுகளைச் சொல்லப்போறம்.

ஆனா - அங்கை - தனிய முகாம் எண்டில்ல யாழ்பாணம் மட்டகளப்பு திருமலை என அங்கையிருக்கிற சனம் - தங்கட தேவைகள் தேவையின்மைகளை முன்வைத்து - அங்கை நடக்கபோற அரசியலில பங்கு பெறத்தான் போகினம். அது பிழையுமில்லை.

அங்கை வாழ்வதற்கு - எதையெல்லாம் முயற்சிக்கமுடியுமோ அதெயெல்லாம் அவர்கள் முயற்சித்துப்பாக்கும்போது இங்கை இருந்துகொண்டு - சே.. சே.. நீ அதை செய்யாத.. ஐயோ.. என்ன வேலை செய்யிறாய் என்ட எஜமான் ஸ்பீச்சுக்களை கொடுத்தா.. அந்த சனம் உங்களை பாத்து ஒண்டை சொல்லும்.

பொத்திட்டுப் போடா

கலைஞன்!

நீங்கள், ஒரு விடயத்தினை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும்போதும் ஒரு வார்த்தையேனும் அவர்களைக் காக்க குரல் கொடுக்காதவரா.... நமக்கு நல்லது செய்யப்போகின்றார்.

எத்தனை கொலைகள், எத்தனை கடத்தல்கள்,எத்தனை அட்டூழியங்கள். இவையெல்லாத்தையும் மறந்துபோட்டு,

அந்த நாய்களுக்காக வக்காளத்து வாங்க வாறியள். :icon_mrgreen:

ஏன் கலைஞன் இப்படி மாறிவிட்டீர்கள்!!!?????????

இவ்வளவும் நடக்கும் போது நீங்கள் என்ன செய்தீர்கள்

போராட போனீங்களா?

அல்லது உங்களின் பிள்ளைகள் அல்லது சகோதரத்தினை இயக்கத்தில் போய் சேரு என்று அறிவுரை சொன்னீங்களா? எம்மைப் போல் சொகுசாக இருந்து கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டிருப்பீர்கள். அப்படி செய்து என்ன கண்டோம்? ஒரு கொலையைத் தானும் தடுத்தோமா? சரணடைய சென்ற, சரணடைந்த போராளிகளின் உயிரையாவது காப்பாற்ற முடிந்ததா?

இப்பவும் என்ன செய்கின்றீர்கள். கிழக்கில் இன்னமும் புலிகள் இருக்கின்றார்கள். போய் போராட ஆயத்தமா? ஓம் என்றால் மற்றவர்களை குறை சொல்லுங்கள். உங்களை தலைவணங்குகின்றேன். இல்லையெனில் வீர வசனம் பேசாமல் பொத்திக் கொண்டு இருங்கள். எம்மால் முடியாத விடயத்தை எம்மில் நாம் எதிரியாக இனம் கண்டவர் மூலமாவது செய்ய முடியுமோ என்று அங்கலாய்க்கின்றோம்.

முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர் மூலம் வவுனியாவில் அகதி முகாமில் இருக்கும் ஒருவருக்கு ஒரு சோற்றுப் பார்சல் கொடுக்க முயற்சி செய்து பாருங்கள்...அப்ப தெரியும் யதார்த்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும்போதும் ஒரு வார்த்தையேனும் அவர்களைக் காக்க குரல் கொடுக்காதவரா நமக்கு நல்லது செய்யப்போகின்றார்.

புலம்பெயர் மக்களால் வன்னி மக்களுக்காகவென அனுப்பபட்ட வணங்காமண் கப்பலை சிறீலங்கா அரசு திருப்பி அனுப்பியபோது வாய் திறக்காதாவரா அந்த 3 இலட்சம் மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்.

----------

தூயவன் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

MSN தனிபட்ட காரனத்துக்காக் நாங்கல் முரன் பட்டாலும் தமிழ்த்தேசிய தலைமையார் என்பதிலும் வேறு சிலவிடயத்திலும் உடன் ப்டுகிறோம்

:icon_mrgreen:

இவ்வளவும் நடக்கும் போது நீங்கள் என்ன செய்தீர்கள்

போராட போனீங்களா?

அல்லது உங்களின் பிள்ளைகள் அல்லது சகோதரத்தினை இயக்கத்தில் போய் சேரு என்று அறிவுரை சொன்னீங்களா? எம்மைப் போல் சொகுசாக இருந்து கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டிருப்பீர்கள். அப்படி செய்து என்ன கண்டோம்? ஒரு கொலையைத் தானும் தடுத்தோமா? சரணடைய சென்ற, சரணடைந்த போராளிகளின் உயிரையாவது காப்பாற்ற முடிந்ததா?

இப்பவும் என்ன செய்கின்றீர்கள். கிழக்கில் இன்னமும் புலிகள் இருக்கின்றார்கள். போய் போராட ஆயத்தமா? ஓம் என்றால் மற்றவர்களை குறை சொல்லுங்கள். உங்களை தலைவணங்குகின்றேன். இல்லையெனில் வீர வசனம் பேசாமல் பொத்திக் கொண்டு இருங்கள். எம்மால் முடியாத விடயத்தை எம்மில் நாம் எதிரியாக இனம் கண்டவர் மூலமாவது செய்ய முடியுமோ என்று அங்கலாய்க்கின்றோம்.

முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர் மூலம் வவுனியாவில் அகதி முகாமில் இருக்கும் ஒருவருக்கு ஒரு சோற்றுப் பார்சல் கொடுக்க முயற்சி செய்து பாருங்கள்...அப்ப தெரியும் யதார்த்தம்

நிழலி!

நான் என்ன செய்தனான் என்று பறைதட்ட வரவில்லை. அது எனது மனச்சாட்சிக்கு தெரிந்தால் போதும். நீங்கள் எல்லாம் கேள்வி கேட்கும் அளவுக்கு எங்களின் நிலை வந்துவிட்டதா? என்று எண்ணத் தோன்றுகின்றது. சபாஷ்!!!!!!!!!!!!!

போராட போகாவிட்டாலும் பரவாயில்லை...... உங்களைபோல, பச்சோந்திப் பச்சைத் துரோகம் பண்ணாமல் இருந்தாலே போதும்.

கொஞ்சம் பொத்........... :icon_mrgreen:

நம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும்போதும் ஒரு வார்த்தையேனும் அவர்களைக் காக்க குரல் கொடுக்காதவரா நமக்கு நல்லது செய்யப்போகின்றார்.

புலம்பெயர் மக்களால் வன்னி மக்களுக்காகவென அனுப்பபட்ட வணங்காமண் கப்பலை சிறீலங்கா அரசு திருப்பி அனுப்பியபோது வாய் திறக்காதாவரா அந்த 3 இலட்சம் மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்.

சரி தற்போது ஒரு மாபெரும் பிரச்சனை புலத்தில் நடக்க தொடங்கி விட்டது

செவராச பத்மநாதனை காட்டி கொடுக்க போகும் அந்த சனநாயகவாதி யார்?

அவர் எந்த அமமப்பை சார்ந்தவர்?????????????????????? :icon_mrgreen:<_<

தாயகத்திலும் இதே நிலமையே இருக்கின்றது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்மக்களின் வாழ்வு டக்லஸ் தேவானந்தா போன்றோரின் கைகளில் இருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் அவர்கள் அந்த அதிகாரத்தை பெற்றுவிட்டார்கள்.

இதில் இருந்து உமது மோட்டு அரசியல் ஆய்வு அல்லது என்னம் புரிகிறது

டக்கிளஸின் அரசியல் எதிர்காலத்தத பலப் படுத்தவும் தலைமை அற்ற இனத்தை தன் தலமைக்க்கு கீழ் கொண்டு வரவும் தான் டக்கிள்ஸின் அறிக்கக.

மாறாக டக்கிளஸால் தமிழ்மக்களுக்கு விரும்பிய ஒரு தீர்வா அல்லது வசதியா சட்டப்படி வாங்கி கொடுக்க முடியாது

போக இதுவரை புலிகளை எதிர்க்க டக்கிளஸின் ஆதர்வௌ தேவை தற்போது அது கூட இல்லை டக்கிளஸை சுதந்திர கட்சியில் சேரச் சொன்ன மகிந்ததவிடம் இருந்து தன்னையும் தன் கட்சியையும் பாதுக்காக்கவே இந்த அறிக்கை.

நீர் சும்மா யதார்தர்த வாதி என்ற பெயரில் கண்ட கண்ட கண்ட கருத்தை எழுதி பக்கத்தை நிரப்புவது தான் மிச்சிம்.

கலைஞன்!

நீங்கள், ஒரு விடயத்தினை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும்போதும் ஒரு வார்த்தையேனும் அவர்களைக் காக்க குரல் கொடுக்காதவரா.... நமக்கு நல்லது செய்யப்போகின்றார்.

எத்தனை கொலைகள், எத்தனை கடத்தல்கள்,எத்தனை அட்டூழியங்கள். இவையெல்லாத்தையும் மறந்துபோட்டு,

அந்த நாய்களுக்காக வக்காளத்து வாங்க வாறியள். :icon_mrgreen:

ஏன் கலைஞன் இப்படி மாறிவிட்டீர்கள்!!!?????????

கடவுள்கூடத்தான் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டார். ஆனாலும்.. தொடர்ந்தும் கல்லில் குந்தி இருக்கும் கடவுளை வழிபட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

நாங்கள் டக்லஸ் தேவானந்தாவின் அறிக்கையை காறித்துப்பினால்கூட அவருக்கு எதுவித பாதிப்பும் வரப்போவது இல்லை. அவருக்கு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழ்மக்களின் ஆதரவும் தேவை இல்லை. ஏன் என்றால்... அவருக்கு கிடைக்கவேண்டியவை எல்லாம் ஏற்கனவே கிடைத்துவிட்டன. கிடைக்கவிரும்புபவையும்... தொடர்ந்து அவர்கள் பாணியில் தொடர்ந்து செயற்பட்டால் கிடைக்கத்தான் போகின்றன.

ஆனால்... அவரது சமரசத்திற்கான செய்திக்கு சாதகமான முறையில் பதில்கொடுப்பது தாயகத்தில் உள்ள மக்களிற்கு மனத்தளவிலாவது அட... இனி சமாதானம் வரப்போகின்றது... இனி நிம்மதியாக வாழலாம் என்று ஓர் ஆறுதலை - வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கும். ஒவ்வொரு நொடியும் ஏங்கி ஏங்கித் தவிக்கும் உறவுகள் மனத்தளவிலாவது கொஞ்சம் அமைதியாக இருப்பதற்கு இது நிச்சயம் உதவும்.

இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் கிடைக்காது. சாவு இல்லாமல் வாழ்வு இல்லை என்று எல்லாம் கூறலாம். கூறுகின்றார்கள். ஆனால்... எங்கள் இரத்தம் சிந்தப்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோமா? நாங்கள் தாயகத்திற்காக சாவதற்கு தயாராக இருக்கின்றோமா? மற்றவன் இரத்தம் சிந்தி, அடுத்தவன் செத்து எங்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டுமா?

வெளிநாடுகளில் வாழும் நாங்கள் ஆகக்குறைந்தது தாயகத்தில் வாழும் மக்களிற்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி இருக்கின்றோமா? வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கின்றோமா? இல்லையே!

நாங்கள் இங்கு இருந்து எல்லா வகையாகவும் அணுஅணுவாக, விதம் விதமாக வாழ்க்கையை சுகமாக அனுபவித்துக்கொண்டு.. தாயகத்தில் வாழும் மக்கள் மட்டும் இலட்சிய புருசர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதயசுத்தியுடன் வாழாத எங்களை நம்பி எப்படி தாயகமக்கள் தொடர்ந்து தங்கள் உயிர்களைக் கொடுக்கமுடியும்?

ஆம் நான் மாறிவிட்டேன் ஐயா. ஆயிரம் ஆயிரம் மக்கள் கடந்த சில மாதங்களில் துடிதுடித்த்து ஆடு, மாடுகளிலும் கேவலமான முறையில் செத்ததை பார்த்தபின்னர், ஆயிரம் ஆயிரம் மக்களின் அவயவங்கள் குண்டுகளினால் துண்டாடப்பட்டபின்னர், ஆயிரம் ஆயிரம் மக்கள் சிந்திய கண்ணீரைப் பார்த்தபின்னர் நானும் மாறிவிட்டேன்.

வாழ்வதற்காகத்தான் நாங்கள் போராடினோம். மக்கள் அனைவரும் துடிதுடித்து செத்துப்போனபின்னர் போராட்டம் எதற்காக? மக்களிற்கு ஆயுதம் மூலம் பாதுகாப்பு இல்லை என்று உறுதிப்படுத்தபின்னர் இன்னும் ஏன் நாங்கள் ஒற்றைவழியில் செல்லவேண்டும்?

விடுதலைப்புலிகளே உத்தியோகபூர்வமாக ஆயுதங்களை மெளனிப்பதாய் சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்கொடியை தூக்கிவிட்டார்கள். இங்கிருந்து சொகுசாக இருந்து நாங்கள் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்து என்று சொல்லி உசுப்பேத்தப்போகின்றோமா?

எங்களுக்கு - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இங்கு வடை கிடைத்துவிட்டது. அங்கு தாயக மக்களிற்கு வடை கிடைக்க விடாமல் நாங்கள் ஏன் இங்கிருந்து தட்டிப்பறிக்கவேண்டும்?

Edited by கலைஞன்

வணக்கம்

கொடுமையிலும் கொடுமை அல்லலுறும் எம் உறவுகளுக்கு எம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே என்பதுதான்.

இவர்கள் செய்ய முன்வந்தால் நல்லதுதான் ஆனால் சாவுக்குள் வாழும் எம்மினத்திற்கு உண்மையில் உதவ நினைத்தால் முதலில் இவர்கள் எல்லோரும் (சங்கரியார் உட்பட எல்லா ஒட்டுக்குளுக்களும்) ஒன்றுசேரட்டும். அதன்பிறகு கலைஞன் அண்ணா கேட்டது போல் செய்து காட்டட்டும். ஒட்டுக்குளுக்களே நீங்கள் தமிழர்களாக இல்லை குறைந்தது மனிதர்களாகவாவது நிரூபித்துக்காட்டுங்கள்.

தமிழீழம் தானாகக்கிடைத்து விடும்.

இதில் இருந்து உமது மோட்டு அரசியல் ஆய்வு அல்லது என்னம் புரிகிறது

நீர் சும்மா யதார்தர்த வாதி என்ற பெயரில் கண்ட கண்ட கண்ட கருத்தை எழுதி பக்கத்தை நிரப்புவது தான் மிச்சிம்.

நான் மோட்டு அரசியல் ஆய்வு செய்கின்றேன் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். தாங்கள் மீண்டும் அதை எனக்கு நினைவுபடுத்தியமைக்கு நன்றி!

சரி... நீங்கள் அங்குள்ள மக்களை காப்பாற்ற எனன செய்யப்போகின்றீர்கள் என்று கொஞ்சம் எடுத்துவிடுங்கள். நீங்கள் தாயகம் சென்று ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு தயாராக இருக்கின்றீர்களா என்று கொஞ்சம் சொல்லுங்கள். எப்போது தாயகம் செல்லப்போகின்றீர்கள்?

எங்களுக்கு - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இங்கு வடை கிடைத்துவிட்டது. அங்கு தாயக மக்களிற்கு வடை கிடைக்க விடாமல் நாங்கள் ஏன் இங்கிருந்து தட்டிப்பறிக்கவேண்டும்?

அவர்களுக்கும் வடை கிடைத்து விட்டால் உசுப்பேத்தியே வயிறு வளர்க்கும் கூட்டம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டியல்லவோ வரும்? தான் சார்ந்த சமூகத்தின் அவலங்களை கணக்கில் எடுக்காமல், அவர்களின் இரத்தம் சிந்தும் துயரை கவனத்தில் கொள்ளாமல் வெற்று வீரம் பேசும் நபர்களிடம் "மக்களை மீட்க என்ன செய்யப் போகின்றீகள்" என்று கேட்டுப் பாருங்கள், பம்மாத்து இன வீரம் பேசுவார்கள்..

தானோ தன் பிள்ளையையோ அல்லது சகோதரனையோ போராட்டத்தில் ஈடுபடுத்தாத எவரும் வன்னி மக்களினை பற்றி வீர வசனம் பேச அருகதையோ தார்மீக உரிமையோ அற்றவர்கள்

கலைஞன்!

நீங்கள் வக்காளத்து வாங்குவது எம் மக்களுக்காக மட்டும் இருந்திருந்தால் அதை நான் மறுக்கமாட்டேன்.

ஆனால் நீங்கள் ஆதரவு தெரிவிப்பது, ஒரு நயவஞ்சகனுக்கு.

ஆடு நனையுது என்று ஓநாய் அழுகுதாம்.

அதோடு சேர்ந்து நீங்களும் ஒப்பாரி வைக்கின்றீர்களா?????????

கலைஞன்!

ஏன் இப்படி?

உங்களுக்குத் தெரியாததா?

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு, ஒரு மாவீரனின் கனவைக் கருத்தில் கொண்டு இனிமேல் உங்கள் கருத்தை முன்வைப்பீர்கள் என நம்புகின்றேன்.

எனக்கு அறிவுக்கு, மனச்சாட்சிக்கு சரியாக தென்பட்டதை நான் சொல்லி இருக்கின்றேன். நாங்கள் என்னத்தை சொன்னாலும்.... அங்கு உள்ள தாயக மக்கள் காவடி அவர்கள் கூறியபடி என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இதேபோல் கேபி (மற்றும்... ?) புலிகள் தரப்பில் இருந்து இது சம்மந்தமாக எப்படியான உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இதுபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன சொல்கின்றது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

அதுவரை நாங்கள் எங்கள் குடுமிகளை பிடித்து இழுத்து சண்டை பிடிப்பதை நிறுத்தி வைக்கலாமே?

நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்று புரிகின்றது. [மற்றும்...? என்று சொன்னதன் மூலம்]

இதற்கு மேல் நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

காத்திருப்போம்! காலம் பதில் சொல்லும்.

எனக்கு அறிவுக்கு, மனச்சாட்சிக்கு சரியாக தென்பட்டதை நான் சொல்லி இருக்கின்றேன். நாங்கள் என்னத்தை சொன்னாலும்.... அங்கு உள்ள தாயக மக்கள் காவடி அவர்கள் கூறியபடி என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இதேபோல் கேபி (மற்றும்... ?) புலிகள் தரப்பில் இருந்து இது சம்மந்தமாக எப்படியான உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இதுபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன சொல்கின்றது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

அதுவரை நாங்கள் எங்கள் குடுமிகளை பிடித்து இழுத்து சண்டை பிடிப்பதை நிறுத்தி வைக்கலாமே?

ஏன் புலிகள் கேபி என்று காத்து இருப்பான்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமைக்கும் போது இப்படியான அறிக்கை விட்டு இருகலாமே?

அபோது புலிகள் என்ன சொல்லி இருப்பார்காள்?

கிளித் தட்டு விளையாட்டில் உன்னை சேர்க்க மார்ட்டேன் என்ரா?

புலிகளுக்கு டெலோ மேலும் கூட்டனி மீதும் ஓரளவு நம்பிக்கை இருந்தது ஆனால் இந்த பஞ்சோந்திகல் மீது உங்களுக்கு இப்ப வந்த நம்பிக்கக புலிகளுக்கு வரவில்லை.

டக்கிளஸ் சொல்லுரான் இவளவு போராளிகளின் இழப்பும் கொடுத்து ஒன்ரும் சரி வரவில்லை என்ரால்? இந்த போராளிகளின் இழப்பின் மீது தான் அவன் அரசியல் நடத்தினான்.

சரி இன்று டக்கிளச் சொல்லட்டும் பிரபாகரனி விழ்ச்சி உண்க்மையில் தமிழ் மக்களின் விழ்ச்சி என்று அதான் பின் பேசலாம்.

சும்ம மகிந்தா தனது கட்சியில் சேர சொன்னதும் புத் தலமை ஏற்க நடிக்கிறான்.

ஏன் கேபி புலிகள் சொல்லனும் கலைஞன்? டக்கிளஸ் சொல்லட்டுமே கேபி அல்லது சனாநயக புலிகளுடன் நாங்களும் சேர்ந்து செய்ற்படுவோம் என்று?

அப்படி ஒரு கேள்வியை கேக்க மாட்டிர்கள்

ஏன் என்னில் பெற்ற தாய் ஒருவனுடன் ஓடியதை விட பக்கத்து விட்டு 16 வயது பெண் கதலனுடன் ஓடியது தான் நமக்கு முக்கியம். :icon_mrgreen:

என்னுடைய ஒன்று விட்ட அண்ணாவும் அண்ணியும் படுகாயமடைந்து வவுனியா வதை முகாமில் உள்ளார்கள். எம் குடும்ப விருட்சத்தின் மூத்த கிளை அவர்கள். அவர்களின் ஒரே ஒரு புதல்வனும் ஷெல் வீச்சில் இறந்து விட்டான். இறுதி வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து விட்டு 18 ஆம் திகதி சரணடைந்த போராளிக் குடும்பம் அவர்கள். வாந்தி பேதி நோயாலும் கடுமையாக பாதிக்கப் பட்டு சாவு ஏன் நேற்றும் வரவில்லை என்று கவலைப் படும் தம்பதியினர் அவர்கள்

முயல்கின்றோம்...எப்படியாவது ஒரு நாளாவது ஒரு நேர உணவையாவது கொடுக்க முடியுமா என..!! அவர்களை கொண்டு வந்து கொழும்பில் வைத்து பராமரிக்க முடியுமா என.... அங்கங்களையும் வாரிசையும் இழந்தவர்களை எப்படியாவது காப்பாற்ற முனைகின்றோம்...

நடுச் சாமத்தில் தொலைபேசி அழைப்பு வந்தால்... பயமாக இருக்கின்றது. அண்ணவையும் அண்ணியையும் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து காணாமல் போக்கடித்து விட்டனரோ என

எல்லா வழிகளும் அடைபட்டு போக இறுதியில் எமக்கு தெரிவது மாற்று இயக்கங்கள் மூலம் முயற்சிப்பது தான். எம்மால் வெற்று வீர வசனம் பேசி அவர்களின் உதவியை நிராகரிக்க முடியாது. இறுதி வரை போராளிகளாக இருந்தவர்கள் தானே செத்து தொலைக்கட்டும் என்று விட முடியாது. ஏன் சயனைட் அருந்தவில்லை என துரோகியாக்க முடியாது

எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும். ஆயிரக் கணக்கானவர்களை காப்பாற்ற முடியவில்லை...என் அண்ணனனயாவது காப்பாற்ற முனைகின்றேன்

இது எனக்கு மட்டுமான சோகம் அல்ல... 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் உறவுகளின் சோகம்

அப்படி உறவுகள் இல்லாதவர்கள், அவர்களின் வேதனையை புரியாதவர்கள்..... வெற்று வீரம் பேசட்டும்.. நான் மெளனிக்கின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ.. அந்தசனம் தங்கட அரசியலை தீர்மானிக்கபோகினம்.

பாவங்கள்.. அரசியல் அனாதைகளாகப் போகபோறது - இங்கை இருக்கிற புலம்பெயர்ந்த சனம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலையே நாங்கள் பதினைந்து,இருபது வருடங்களாக புலம்பெயர்ந்து பாதுகாப்பாக இருந்துகொண்டு நினைத்த நேரம் சாப்பிட்டு,வீடு,கார்,கோடைவிட

என்னவோ.. அந்தசனம் தங்கட அரசியலை தீர்மானிக்கபோகினம்.

பாவங்கள்.. அரசியல் அனாதைகளாகப் போகபோறது - இங்கை இருக்கிற புலம்பெயர்ந்த சனம்தான்.

அரசியல் அநாதைகள் என்று சொல்ல முடியாது காவடி. இங்குள்ளவர்கள் ஏற்கனவே புளியங்கொம்பாய் இறுகப் பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். உ+ம்: கனேடிய தமிழ் காங்கிரஸ்

உண்மையில் பாவம் அநாதைகள் அங்கு தாயகத்தில் இருக்கும் சனங்களே. எங்களுக்கு என்ன விரைவில் நாங்கள் கோடைகால கொண்டாட்டம் கொண்டாடலாம் என்று இருக்கின்றோம்.. ஏற்கனவே, தனிப்பட வீடுகளில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

என்னுடைய ஒன்று விட்ட அண்ணாவும் அண்ணியும் படுகாயமடைந்து வவுனியா வதை முகாமில் உள்ளார்கள். எம் குடும்ப விருட்சத்தின் மூத்த கிளை அவர்கள். அவர்களின் ஒரே ஒரு புதல்வனும் ஷெல் வீச்சில் இறந்து விட்டான். இறுதி வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து விட்டு 18 ஆம் திகதி சரணடைந்த போராளிக் குடும்பம் அவர்கள். வாந்தி பேதி நோயாலும் கடுமையாக பாதிக்கப் பட்டு சாவு ஏன் நேற்றும் வரவில்லை என்று கவலைப் படும் தம்பதியினர் அவர்கள்

முயல்கின்றோம்...எப்படியாவது ஒரு நாளாவது ஒரு நேர உணவையாவது கொடுக்க முடியுமா என..!! அவர்களை கொண்டு வந்து கொழும்பில் வைத்து பராமரிக்க முடியுமா என.... அங்கங்களையும் வாரிசையும் இழந்தவர்களை எப்படியாவது காப்பாற்ற முனைகின்றோம்...

நடுச் சாமத்தில் தொலைபேசி அழைப்பு வந்தால்... பயமாக இருக்கின்றது. அண்ணவையும் அண்ணியையும் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து காணாமல் போக்கடித்து விட்டனரோ என

எல்லா வழிகளும் அடைபட்டு போக இறுதியில் எமக்கு தெரிவது மாற்று இயக்கங்கள் மூலம் முயற்சிப்பது தான். எம்மால் வெற்று வீர வசனம் பேசி அவர்களின் உதவியை நிராகரிக்க முடியாது. இறுதி வரை போராளிகளாக இருந்தவர்கள் தானே செத்து தொலைக்கட்டும் என்று விட முடியாது. ஏன் சயனைட் அருந்தவில்லை என துரோகியாக்க முடியாது

எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும். ஆயிரக் கணக்கானவர்களை காப்பாற்ற முடியவில்லை...என் அண்ணனனயாவது காப்பாற்ற முனைகின்றேன்

இது எனக்கு மட்டுமான சோகம் அல்ல... 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் உறவுகளின் சோகம்

அப்படி உறவுகள் இல்லாதவர்கள், அவர்களின் வேதனையை புரியாதவர்கள்..... வெற்று வீரம் பேசட்டும்.. நான் மெளனிக்கின்றேன்

நிழலி இந்தே கதை பல குடும்பங்களுக்கு உண்டு;

எனது சகோதரியின் கனவிரின் தம்பி கிழ்மட்ட தளபதி அவர் 14 திகதியில் இறுதியாக கனடாவுக்கு போன் பன்னி பேசிய போது( சகோதரனுடன்) எனது மனைவி ப 2 பிள்ளைகள்) மக்களோடு மக்களாக வவுனியாவுக்கு அனுப்பியததகவும் ஆர்மி கிட்ட வந்து விட்டான் நாங்கள் குப்பி தான் கடிக்க வேண்டும் போல இருக்கு என்பது அவரின் இறுதி செய்தி எப்படியாவது தனது மனைவி பிள்ளைகளை உதவி செய்து காப்பாற்ற சொன்னார்.

ஆக நீங்கள் நினைப்ப்பதை தான் இறுதியில் போராடிய போராளிகளும் நினைத்து இருக்கிறார்கள்.

ஏன் புலிகள் கேபி என்று காத்து இருப்பான்?

நாங்களா கேபி என்று கேட்டோம். புலிகள்தான் அவரை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்கள். இப்போது தலைவர் உத்தியோகபூர்வமாக அவரை நம்பவேண்டாம் என்று சொல்லட்டும். நாங்கள் பொத்திக்கொள்கின்றோம். கேபியை நம்பாத - அவரில் நம்பிக்கை வைக்காத நம்மவர்கள் எப்படி அறிவழகனையும் (?), வெற்றிக்குமரனையும்.. (?) இன்னும் இதர புதிய புதிய பெயர்களையும் நம்புவார்கள்? தயாமோகனை நம்பலாமா? யாரை நம்பவேண்டும்.. யாரை நம்பக்கூடாது என்றாவது ஓர் பட்டியல் தயாரித்து தமிழ்நெட்டில் வெளிவிடுங்கள் ஐயா.

கலைஞன் ஏன்ப்பா கேபியில் சந்தேகம்? அது புலிகளுக்கு வரவேண்டிய சந்தேகம் பொது மக்களுக்கு இல்லை

நான் கேப்பது ஏன் டக்கிளாஸ் கேபி புலிகள் என்று காத்து இருக்க வேண்டும்?

எத்தனை சந்தர்பம் கிடைச்சு இருந்த்து? சரி போகட்டும் இப்ப கூட புலிகள் தவறு செய்து வந்த பிரச்சனை என்று தானே சொல்கிறான் மற்ற இயக்கங்கள் ஏன் சேர்ந்து செயற்படவில்லை?

தமிழ் கூட்டமைப்பை பாரால மனறத்தில் சிங்களவர்கள் முன் கேவலப்படுத்தி இருந்தானே ஏன்?

யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற சுயநல நோக்கில், குற்றிய அரிசி எனது வீடு சென்றடையவேண்டும் என்ற தீராத இலட்சிய விருப்பங்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நான் வெளியில் இருந்து ஆதரித்திருந்தேன்.

ஆனாலும், மக்களின் நலன் கருதி புலிகளின் தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக செயற்பட்டிருந்தது, அன்றைய பிரேமதாச அரசுடன் இணைந்து எனக்குக் கிடைத்திருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற பொன்னான வாய்ப்பை இல்லாதொழிப்பதற்கு பிரதான காரணியாக செயற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

இதனால் எது நடக்க வேண்டும் என்று அன்று நப்பாசையுடன் சொல்லியிருந்தனோ இன்று அது நடந்து முடிந்திருக்கிறது.

எமது தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்கணக்காக உலகின் வீதிகளில் நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களெல்லாம் எவராலும் கண்டுகொள்ளப்படாமலே வீணாகப் போகவேண்டும்? ஏன் இப்படியெல்லாம் ஆனது? எங்கே நாம் தவறிழைத்தோம்? ஏன் முழு உலகுமே தமிழர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது? உலகின் வீதிகளெல்லாம் திரண்டு நின்ற உங்களை அந்தந்த நாடுகள் திரும்பியும் பார்க்காமல் விடக் காரணமென்ன? இவை எல்லாவற்றுக்கும் காரணம் நானும் என் சக தோழர்களும் தான். பதவி ஆசைக்காக எமது தமிழ் உறவுகளை தலையாட்டிக் காட்டிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், சிங்களவனின் கால்களை நக்கி வாழும் எமக்கு, போராட்டங்களில் ஊடுருவி அதைக் குழப்ப வேலைகளையும் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் ஓயாது உழைக்கிறோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் வெல்லப்பட முடியாதவர் என்றும், யாராலும் கொல்லப்பட முடியாதவர் என்றும் இதனால், உங்களில் சிலரது மனங்கள் புலித்தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றன. இதை நாம் இப்போது சில ஆய்வாளர்களாலும், சில ஊடகங்களாலும் மக்களைக் குழப்புவத்தட்கு முயற்ச்சிகள் எடுத்தவண்ணம் இருக்கிறோம்.

புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய உங்களில் பலருக்கும் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டது என்ற மனத்துயரங்கள் இருப்பது எனக்குப் புரிகின்றது. ஏனெனில், அப்படியான பரப்புரைகளை நானும் என் தோழர்களும் இலங்கை அரசாங்கமுமே செய்து வருகிறோம்.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் அடைந்திருக்கும் துயரங்களை விடவும், பல மடங்கு துயரம் எமக்கும் உண்டு. ஆனாலும், அந்தத் துயரங்கள் யாவும் தனியொரு இயக்கமோ, அல்லது குழுவினரோ அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதால் ஏற்பட்ட துயரங்கள் அல்ல. எமது மக்களுக்கு இந்த யுத்தம் எந்தத் தீர்வையும் பெற்றுத்தந்து விடாமல், எமது மக்களின் இனிய வாழ்வை நடுத்தெருவிலும், நலன்புரி முகாம்களிலும் தொலைத்து, அவலங்களை மட்டும் எமது மக்களின் மீது சுமத்தி விட்டிருக்கின்றது. என்பதால் ஏற்பட்ட கவலைகளும் அல்ல. எனது கவலை எல்லாம், புலிகள்மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இனி நான் எப்படி உடைக்க முடியும் என்பது தான்.

எம் இனிய புலம்பெயர் வாழ் உறவுகளே!…

இடம்பெயர்ந்து, அனைத்தையுமே இழந்து இன்று நலன்புரி நிலையங்களுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்ற மூன்று இலட்சம் மக்களைப் பணையம் வைதேன்றாலும் நான் எனது நாசம்மப் போன துப்புக்கைட்டை அரசியல் என்ற போர்வைக்குள் இருந்து ஆள் கடத்தல், கப்பம் கோருதல், கப்பம் கொடுக்காத நிலையில் கொலைகளையும், யாழ்பாணத்தில் மட்டும் அல்ல இனி ஈழம் முழுதும் சமுதாயச்சீர்கேடு போன்ற நாசகாரச் செயல்களை நடத்தத் தீர்மானித்து இருக்கிறேன்.

எதையாவது செய்வதென்றால், எங்கிருந்தாவது ஆரம்பித்தால்தானே முடியும்? எதிலிருந்து ஆரம்பிப்பது?

புலம்பெயர்ந்து வாழுகின்ற புத்திஜீவிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், கலை இலக்கிய படைப்பாளிகள், நவீன எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், தேசப்பற்றாளர்கள் என சகல தரப்பினரும் இணைந்து நாசகாரச் செயல்களை கட்டியெழுப்பும் இந்த மாபெரும் பணியை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்பார்ப்பாகும்.

சக அரசியல் கட்சிகளின் துணையோடு, புல்லிருவியளின் பூரண ஆதரவோடு, சமூகப் பெரியார்கள், சமூக அக்கறையற்றவர்கள், மற்றும் இனத்துவசம் பிடித்த பிக்குக்களின் அனுசரணையோடு, எமது தேசத்தின் இளம் சந்ததியினரின் வாழ்கையை சின்னாபின்னமாக்கும் இந்தப் பணியைச் செய்து முடிக்க என்னுடன் அனைவரும் கரங்கோருங்கள்!

என்றும் மக்களுக்கு நாசகார வேலைகள் செய்யும்

தோழர் டக்ளஸ் தேவானந்தா

செயலாளர் நாயகம் -நாசகார ஐனநாயக கட்சி

* பல்லாயிரக் கணக்கான மக்கள் சிங்களவனின் இனவெறிக்கு இரையாகும் பொது உங்களால் வாய் திறக்க முடியவில்லை...

* வதைமுகாம்களில் அடைபட்டு இருக்கும் மக்களின் நிலையை வெளிஉலகுக்குத் தெரியப்படுத்த உங்களால் முடியவில்லை...

* அடைபடு வதைபடும் மக்களுக்காக புலத்தில் வீதிகளில் போராடும் மக்களுக்கும் உங்களால் ஆதரவு தர முடியவில்லை...(சரி ஆதரவு தான் வேண்டாம், தவறான பிரசாரங்களையாவது நிறுத்த உங்களால் முடியவில்லை...)

* புலத்தில் வாழும் மக்களால் சேகரித்து அனுப்பப் பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் இதையாவது நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் லட்சம் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய விதத்தில் ஏதாவது செய்தீர்களா? அல்லது ஒரு அறிக்கை தன்னும் அந்த நேரத்தில் அந்த மக்களுக்காக விட்டீர்களா? இனவெறி அரசின் கால்களை நக்கி பிழைக்கத் தெரிந்ததே தவிர வேறு என்ன தெரிந்தது???

* வதை முகாம்களில் பேர் காணாமல் போனபோது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்??

* இங்குள்ள உறவினருக்கு எந்த விதத்தில் உதவி செய்தீர்கள்? தலைக்கு பல லட்சம் கேட்டு உங்கள் பாக்கெட்ட்டுகளைத் தானே நிரப்புகிறீர்கள்??

* அப்ப மக்கள் மேல் இல்லாத அனுதாபம், அக்கறை, இப்ப மட்டும் எங்கே இருந்து வந்தது???

* ஆரசியலில் இருந்து ஈழத் தமிழருக்காக இவ்வளவு காலமும் என்னத்தை புடுங்கினீர்கள்??? இப்ப நீங்கள் சொன்னதும் நாங்கள் உங்களை ஆதரிக்க????

போங்கோ போய் டக்ளஸ்க்கு ஆதரவை வழங்குங்கோ தமிழீழம் கிடைக்கும்...

அப்படிக்கிடைக்கும் ஈழத்தில், காணமல் போறவரும், சமுதாயச்சீர்கேடுகளும் கொடிகட்டிப் பறக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.