Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றைய இட(இதய)ப் பெயர்வும் அவளும்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றைய இட(இதய)ப் பெயர்வும் அவளும்....

கவிதை - இளங்கவி

முகத்தில் சிறுமுடிகள்...

அதுதான் மீசையாம்.....

சொல்லக்கேட்டதும் உடலில்

ஓர் சிலு சிலுப்பு.....

சிட்டுக்குருவி சிறைபிடிக்க

இந்த சின்னப்பறவைக்கும் ஓர் ஆசை....

மலர் மஞ்சத்தில் படுப்பதற்கு

மனதில் ஆசையெனும் பேரலை

என் ஆசையெல்லாம் அடக்கிய

அந்த ஓர் இடப்பெயர்வு......

ஆம்.. அன்று முகாமில்லில்லை

உறவினரின் முற்றத்தில்......

அந்தக் கூட்டத்திலும்

அழகான ஓர் பொற்சிலை..

என் ஆசைப் பேரலைக்கு

அணைபோட்ட ஓர் தங்கச்சிலை......

என் அகதி நிலை புரியவில்லை

அடிவயிற்றுப் பசிகூட தெரியவில்லை....

மூளைமுதல் முழங்கால் வரை

முழுவதும் நிரப்பியது

அழகான அவள் பிம்பம்......

பார்க்க மறுத்தாள்

பின்னர் சிலதடவை பார்த்தாள்

பின்.. சிரிப்புடன் பார்த்தாள்

அதன் பின் சிலிர்த்து சென்றிடுவாள்....

மனம் சொல்லியது

என் முயற்சிக்கு பலன்

முழுசாய் வந்ததென்று.....

என் அன்பு முழுவதும்

வெள்ளைத் தாள் ஒன்றில்

வரிகளாய் செதுக்கி..

வெட்டவெளியில் வைத்து

வெட்கத்துடன் நீட்டுகிறேன்....

அவள் கண்ணில் என்னவொரு கோவம்

கொதித்துவிட்டு என் அன்புமடலை

கிழித்துப் பஞ்சாக எரிகிறாள்...

பதறுகிறேன் பயத்துடன்....

அவள் பஞ்சாக எறிந்தது

என் அன்புமடல் மட்டுமல்ல....

என் அன்பு இதயமும் தான்.....

என் ஆசை கிளி பறந்ததனால்

அடிமனதில் ஓர் துடிப்பு.....

அகதி நிலை மாறி

மறுபடியும் நம் வாழ்விடம்....

சில மாதம் செல்ல

என் அம்பிகையாய் நேரில் வந்தாள்

அழகாக சிரித்துக்கொண்டாள்

உறவினரின் வீட்டில்

சிலகாலம் தன் வாழ்வென்றாள்......

பார்க்கவும் பேசவும்

பலமாக மறுத்துக்கொண்டேன்....

காரணம் பயம்..பயம்..பயம்...!

பரமசிவன் நிலையில் வைத்து

எனைச் சுற்றும் பக்தையானாள்......

மசியவில்லை என் மனம்; காரணம்

அறியவில்லை அவள் மனதின்

ஆழம் என் மனம்.....

எதிர்பாரா சூறாவளி

நான் இங்கே அவள் அங்கே...!

என் அடிமனது காதல்

அரைகுறையில் நின்றிருக்க...

போராட்ட வாழ்வில்

என் பூவும் இணைந்துகொண்டாள்

களத்தில் திருமணமாம்

காதால் தெரிந்துகொண்டேன்.....

பல வருடங்களின் பின்

என் தாய் மண்ணில் கால்வைத்தேன்...

சில நாட்கள் செல்ல

எதிர்வீட்டு முற்றத்தில்

எந்தன் வெண்ணிலவு; ஆம்

என் மனம் கவர்ந்த வெண்ணிலவு...

பலவருடம் சென்று

என் பயம் நீங்கி

பார்த்து பலவருடமென்றேன்.....

அதே புன்முறுவல் ..ஆம் என்ற வார்த்தை...

ஆனாலும் அவள் எந்தன்

காதல் பூமியின் வட்ட நிலவல்ல...

தீ கக்கும் பூமியின் சுட்ட நிலவவள்...

கையிலிரண்டு புலிக்குட்டி

தொட்டதும் சிலிர்க்கிறது......

மீண்டும் பிரிகிறேன் இனி

அவள் என் சொந்தமல்ல

என்று தெரிந்த பின்.....

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதைகளில் நிறைய உண்மைகள் இருந்து இருக்கின்றன.... இதுவும் அப்படியா இளங்கவி? இல்லை, கவிதைக்கு பொய் அழகு என்று மழுப்ப போகிறீர்களா?!!

அழகான கவிதை. எப்பவும் போல் உணர்வு பூர்வமாக வரைந்து உள்ளீர்கள்.

வாழ்த்துக்கள். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

கவிதைக்கு பொய் அழகு என்பது நிஜம் தான் ஆனால் இது என் வாழ்வில் நடந்த நிஜம். அந்த நிலவு இன்றுவரை அனல் கக்கும் பூமியில்லாவா நின்று கொண்டிருந்தது..... இன்னமும் எங்கோ நிற்கிறது......

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்...எல்லோருக்குள்ளும் ஏதாவது ஆறாத வடுவிருக்கும்... வாழ்க்கை என்றாலே அப்படி தானே... இதே கவிதை பூங்காட்டில் நீங்கள் ஒரு சந்தோசமான, வெற்றிகரமான ஒரு கவிதை வரையும் நாள் விரைவில் வரும்...கவலை வேண்டாம்!

முன்கூட்டியே அதற்கான வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

எல்லா உணர்ச்சிகளுடைய கலவை தானே வாழ்க்கை...

அவைகளை ஏற்று வாழப்பழகினால் வாழ்க்கை சுவாரஷ்யமாக அமையும்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வென்றால் வாசல் தோறும் வேதனை இருக்கும். இளையவர்களுக்கு பிடித்தமான விடயங்களை கவிதையாக வடிக்கிறீர்கள்.மிக விரைவில் இவற்றை கவிதை தொகுப்பாக வெளியிட வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொண்டு விடைபெறும் நான்................. :D

யாயினி கனா.

வணக்கம் இளங்கவி

மிக மிக அழகான அற்புதமான கவிதை வரிகள்

வாழ்த்துக்கள்.

சமகால இளைஞருக்கு பொருத்தமான கவிதை

ஆனால் இது பொய் அல்ல

நிஜம் என்ற போது

எனக்கும் மனது வலித்தது.

நன்றி இளம்கவி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் குறிப்பிட்ட தமிழ்த்தாய் போராட்டத்தில் இணைந்தாள் என்கிறீர்கள். சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஈழ தமிழினத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடவா ஆயுத போராட்டத்தில் இணையவில்லை? 1948-முதலே சிங்களவன் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறான் என்று புரிந்தும், ஏன் பெருமளவிலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் போராட்டத்தில் இணையவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு...

என் கவிதைகலை தொகுப்பாக வெளியிடும் திட்டமொன்று இருக்கிறது. வெளியிட்டதும் அறியத்தருவேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

marumakan

என்னைப்போன்ற பலருக்கு இதே நிலமைதான் காரணம் எங்களுக்கு தெரிந்த அரசியலே எங்கள் விடுதலைக்கான போராட்டம் தான் காரணம் நாங்கள் பிறக்கும் போதே சிங்களத்தின் அடக்குமுறை உச்சத்தில் நின்ற நேரம். இருந்தும் சிறுவனாய் இருந்து இளைஞராய் மாறும் மாறும் காலத்தில் தோன்றும் உணர்வுக்குள் சிக்குண்டு அதன் பின் பல காரணங்களால் பிரிவுண்ட பல இதயங்கள் வேறு வேறு பாதைகளில் பயணித்து சேர்ந்தது சில இதயங்கள் சேராதது பல இதயங்கள் அதில் நானும் ஒன்று நண்பரே...! ஆனாலும் வாழ்க்கையில் இணைய முடியாவிட்டாலும் ஒரே லட்சியம் தானே இருவருக்கும்...

உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

srinivasan chennappan

இதுவரை கிட்டத்தட்ட 25000 மாவீரர்கள் இதுவரை இறந்துபோனார்கள் அத்துடன் இறுதி தருணம் வரை புலிகளிடம் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்றுவரை ஒருதருக்குமே தெரியாத ரகசியம்.....

அத்துடன் புலிகள் வேற்றுக்கிரகத்திலிருந்து வருபவர்கள் அல்ல... உங்கள் குடும்பம், எங்கள் குடும்பம் போன்ற அனைத்து உணர்வுகளுக்கும் அடிமையாகியிருக்கும் சாதாரண தாய் தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள் தானே...

உதாரணத்துக்கு உங்கள் வீட்டில் யாராவது இந்திய ரானுவத்தில் இருகிறார்களா? அல்லது உங்கள் சொந்தங்களிலோ அல்லது உங்கள் தெருவிலோ உங்களுக்கு தெரிந்தவர்கள் எத்தனை பேர் இந்திய ராணுவத்தில் இருக்கிறார்கள்? நீங்களாகவே இந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தேடிக்கொள்ளுங்கள். இப்படி போரே எத்தனையோ வருடங்களாக நடைபெறாமல் இருக்கும் ஒரு நாட்டின் தேசிய ராணுவத்துக்கு தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அனுப்பத் தயங்கும் போது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்து ரணகளமாய் இருக்கும் ஓர் போர்க்களத்துக்கு விரும்பி எத்தனை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்புவார்கள்.

இந்திய ராணுவத்தில் சேர்ந்து கடைசியில் பென்சன் எடுக்கும் வரை உயிருடன் ராணுவத்தில் இருப்போர் இருக்கும் போது ஆரம்பத்தில் இயக்கதில் சேர்ந்த எத்தனையோ போராளிகள் இன்று உயிருடன் இல்லை இப்படி இருக்கும் ஓர் கள யதார்த்தத்தில், இத்தனை ஆயிரம் வீரர்களை பறிகொடுத்து விட்டோம், எத்தனையோ இளைஞர்கள் அங்கவீனர்கள், இறப்பை விரும்பி ஏற்கும் மனத்தைரியம் எல்லோருக்கும் வராது, நாட்டுக்கு உயிர் கொடுக்க விருப்பம் இருந்தும் தாயின் உயிர் காக்க வீட்டில் இருந்தோர் எத்தனைபேர், எல்லாத்தையும் விட்டுவிட்டு தனது அடுத்த சந்ததியாவது சந்தோசமாக இருக்கவென்றெண்ணி தற்கொலைப் படையாக மாறிய எங்கள் இளையோர் எத்தனை பேர்... இப்படியாக பல தியாகங்களை செய்த ஒரு போராட்டத்தை மக்கள் தொகையை வைத்து மதிப்பிட முடியாது...!

போரே அதிகம் நிகழாத ஒரு ராணுவத்தில் சேரும் தொகை இளைஞரிலும் பார்க்க இறப்பு என்றோ ஒரு நாள் நிச்சயமென்று தெரிந்து போராட்டத்தில் இணைந்த எங்கள் இளைஞரின் தொகை விழுக்காட்டு ( percentage wise) ரீதியில் பார்த்தால் அதிகம் என்று தான் நான் சொல்லுவேன்...

அப்படியொரு அன்பு தான் நான் இந்த கவிதையில் சொன்ன மலரும்.. திசைகள் மாறிவிட்டன ஆனால் ஆனால் லட்சியம் ஒன்று தான் நண்பரே...!

இளங்கவி

நல்லதொரு கவிதை தந்ததற்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

உங்கள் கவிதை தொகுப்பை விரைவில் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

srinivasan chennappan

இதுவரை கிட்டத்தட்ட 25000 மாவீரர்கள் இதுவரை இறந்துபோனார்கள் அத்துடன் இறுதி தருணம் வரை புலிகளிடம் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்றுவரை ஒருதருக்குமே தெரியாத ரகசியம்.....

......................................

போரே அதிகம் நிகழாத ஒரு ராணுவத்தில் சேரும் தொகை இளைஞரிலும் பார்க்க இறப்பு என்றோ ஒரு நாள் நிச்சயமென்று தெரிந்து போராட்டத்தில் இணைந்த எங்கள் இளைஞரின் தொகை விழுக்காட்டு ( percentage wise) ரீதியில் பார்த்தால் அதிகம் என்று தான் நான் சொல்லுவேன்...

தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நன்றி நண்பரே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

என் கவிதையை ரசித்ததற்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்....

என் திட்டப்படி எல்லாம் சரிவந்தால் என் கவிதை தொகுப்பு ஆவணிமாதம் வெளிவரும் இல்லாது விடில் மேலும் தாமதமாகலாம் நிச்சயம் அறியத்தருவேன்.. மீண்டும் நன்றிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி நண்பரே

நான் உங்களுக்கு முதல் பதிலில் உதாரணத்துக்கு கூறிய கருத்துக்கள் எதுவும் உங்களை நோகடித்திருந்தால் மின்னிக்கவும்.....

ஆம்.... இந்த விடுதலைப் போராட்டமென்பது மனத்தில் ஏற்படும் விடுதலை உணர்வோடு சம்மந்தப் பட்ட விடயம், எனவே முழு அளவில் மக்கள் போராட்டமாக வெடிக்கும் பொழுது அதில் அனைவருமே பங்கெடுக்கும் நிலை வரலாம் அதுக்கு காலம் கனிய வேண்டும்

Eelamagal

என் கவிதையை ரசித்ததற்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்....

என் திட்டப்படி எல்லாம் சரிவந்தால் என் கவிதை தொகுப்பு ஆவணிமாதம் வெளிவரும் இல்லாது விடில் மேலும் தாமதமாகலாம் நிச்சயம் அறியத்தருவேன்.. மீண்டும் நன்றிகள்....

நன்றி இளங்கவி. உங்கள் திட்டம் போல் ஆவணியில் எமக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகின்றேன். தாங்கள் எந்த நாட்டில் உங்கள் கவிதை தொகுப்பை வெளியிட உள்ளீர்கள் என்பதை அறியலாமா?

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelagamal

ஒரு பிரபல்யமான இணையத்தளம் மூலம் வெளியிட அலுவல்கள் செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் சுவிஸில், பிரான்ஸில், கனடாவில் மற்றும் சில நாடுகள் சொன்னார்கள், அத்துடன் எனது கிலும் நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு ஒழுங்குகள் செய்வேன். அவர்கள் இந்தியாவிலும் வெளியிடுவார்கள் என்று சொன்னார்கள்.

நிச்சயம் அறியத்தருவேன்.... உங்களின் ஆர்வத்துக்கும் எனது கவிதைகளை ரசிப்பதற்கும் மிக்க நன்றிகள்....

மீண்டும் அற்புதமான உண்மைக் கவியை தந்த இளங்கவிக்கு பாராட்டுக்கள்.........

கவிதை தானே என்று நினைத்துப் படிக்கும் போதே வலி தரும் கவிதைகள்......

நிஐம் என்று எண்ணி படித்த போது இதயத்தை கிழித்தது.........

வாழ்வு என்றால் போராட்டம் தான்

போராடுவோம் வெல்வோம்.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilmaran

எல்லோரின் வாழ்க்கையிலும் எதோ ஒரு நிலையில் மறக்கமுடியாத சோகங்கள் அமைந்து விடுவதுண்டு அதையிட்டு இடிந்து இருந்துவிடாமல் அடுத்த கட்ட நகர்வுக்காக போராடுவதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்...

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.