Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஒட்டுக்குழுக்களால் எரிப்பு

Featured Replies

உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஒட்டுக்குழுக்களால் எரிப்பு

யாழ் நகரில் வியாழன் காலை விநியோகிப்பதற்காக வைத்திருந்த

உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஆனைப்பந்தி என்ற இடத்தில் வைத்து

வியாழன் அதிகாலை 5 மணியளவில் அரசோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் எரியூட்டப்பட்டதாக பிந்திக்கிடைத்த தகவல்

நன்றி C M R கனடா

  • கருத்துக்கள உறவுகள்

Wholesale attack on Jaffna newspapers

All the local newspapers of Jaffna that defied publishing an anonymous and defiling notice against the LTTE came under attack by an armed group in the early hours of Thursday. The notice was brought out in the name of 'Tamil Front Protecting the Country' allegedly linked to a paramilitary group operating with Colombo. Thousands of copies of the local newspapers, Valampuri, Uthayan and Thinakkural (Jaffna edition), were burnt down wholesale in huge flames by the armed group allegedly operated by the Sri Lankan military intelligence at Aanaippanthi and Kannathiddi junctions at 5:00 a.m. Thursday, while the newspapers were being taken for distribution.

The distribution workers were also brutally attacked.

A distribution worker of Thinakkural, 26-year-old Anojan, who was physically attacked was also robbed of his belongings by the armed men.

Newspaper editors of Jaffna were intimidated to publish the notice and warned of dire consequences the previous day through anonymous telephone calls. However, the editors sceptical of the contents of the notice decided not to publish it.

After the burning of the Eezhanaadu newspaper along with the public library in 1981 by the Sri Lankan forces, and again the burning of Eezhanaadu by the Indian military (IPKF), this is the third major burning of the newspapers of Jaffna by occupying forces.

TamilNet,

  • கருத்துக்கள உறவுகள்

விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்ட பத்திரிகைகள் யாழ்குடாநாட்டில் தீயிட்டு கொழுத்தப்பட்டன

வீரகேசரி இணையம் 6/25/2009 12:39:03 PM -

தினக்குரல், வலம்புரி, உதயன் பத்திரிகைகள் இன்று அதிகாலை விநியோகத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட போது இனந்தெரியாத நபர்கள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

பலாலி வீதி, கல்லடிச்சந்தி , தென்மராட்சி மற்றும் யாழ் நகரப்பகுதியில் இச்சம்வம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.முகத்தில் கறுப்பு துணியை அணிந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இப்பத்திரிகைகளிற்கு தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

சம்பவத்தினை அடுத்து பாதுகாப்பு படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளானர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மூன்று தமிழ் நாளேடுகளின் இன்றைய நாள் பதிப்புக்கள் அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் வீதிகளில் எரியூட்டப்பட்டிருக்கின்றன.

அடையாளம் தெரியாத குழு ஒன்று குறிப்பிட்ட நாளேடுகளின் ஆசிரியர்களையும் தொலைபேசி மூலமாக அச்சுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இருந்து வெளிவரும் 'உதயன்', 'தினக்குரல்' யாழ். பதிப்பு மற்றும் 'வலம்புரி' ஆகிய நாளேடுகளின் இன்றைய பதிப்புக்களே இவ்வாறு எரியூட்டப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான நாளேடுகள் வீதிகளில் போடப்பட்டு கொழுத்தப்பட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் நாளேடுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்ட போதே அவை வழிமறித்து எரிக்கப்பட்டதாக யாழ். ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈருளிகள் மற்றும் உந்துருளிகளில் இவை வியாபார நிறுவனங்களுக்காக அனுப்பப்பட்ட போது அவற்றைப் பின்தொடர்ந்து உந்துருளிகள் இரண்டில் சென்றவர்களே அவற்றை வழிமறித்து தீ வைத்து கொழுத்தியுள்ளனர்.

உந்துருளிகளில் வந்தவர்கள் தமது முகத்தை மூடும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளேடுகளை ஆயிரக்கணக்கில் கொண்டு சென்றுகொண்டிருந்த ஈருளிகளை இடைமறித்த இவர்கள் அவற்றை பலவந்தமாக வீதியில் போட்டு பெற்றோல் ஊற்றி கொழுத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ். கன்னாதிட்டிச் சந்தி, ஆனைக்கோட்டை, வண்ணார்பண்ணை உட்பட பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சில இடங்களில் கடைகளில் புகுந்த ஆயுதபாணிகளானவர்களும் நாளேடுகளை பலவந்தமாகத் தூக்கிப் போட்டு எரியூட்டியுள்ளனர். பலர் பார்த்துக் கொண்டிருக்கத்தக்கதாகவே இச்சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் 'தேசப்பற்றுள்ள அமைப்பு' என்ற பெயரில் நாளேடுகளில் வெளியிடுவதற்காக அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டதாகவும், அதனை யாழில் இருந்து வெளிவரும் மூன்று நாளேடுகளும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த குழுவினர் சம்பந்தப்பட்ட நாளேடுகளின் ஆசிரியர்களை எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்தே இன்று அதிகாலை நாளேடுகள் எரியூட்டப்பட்டன.

இது தொடர்பாக யாழ். ஊடகவியலாளர் ஒருவரிடம் கேட்டபோது குறிப்பிட்ட அமைப்பு ஏற்கனவே அறிமுகம் இல்லாத ஒன்றாக இருந்தமையாலும் குறிப்பிட்ட அறிக்கை பிரசுரிப்பதற்கான தகுதியைக் கொண்டதாக இருக்காததாலுமே அதனை தாம் பிரசுரிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளையில் இச்சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஆயுதக் குழுக்கள் இவ்வாறு ஊடகங்கள் மீது தாக்குதலை நடத்துவது ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளவரேல்லை உங்களை வாழவைக்க வாறம்,

நாங்க வந்த உடனே A9 வீதியைத் திறப்பம்

என்றெல்லாம் கதையளந்துகொண்டு

மாநகர சபைச் சீற் பிடிக்கக் கண்டவன் நிண்டவனெல்லாம்

கடைபரப்பத்தொடங்கிவிட்டினம்.

இன்னொரு பக்கத்தாலை இப்படி மிரட்டல்கள் வேற.

பாவம் சனங்கள்.

மரத்தாலை விழுந்தவனை மாடு ஏறி மிச்ச கதைதான்.

முதல் நடந்த எரிப்புக்கள் எல்லாம் சிங்கள அரச இராணுவத்தால் நடத்தப்பட்டவை இப்ப நடப்பவை தமிழர் தொண்டர் படையால் சிங்கள அரசுக்காக

யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் எரிப்பு

யாழ் நகர்

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் மூன்று பத்திரிகைகள் இன்று அதிகாலை ஆயுதந்தாங்கிய குழுக்களினால், எரிக்கப்பட்டுள்ளன.

தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி ஆகிய பத்திரிகைகளே இவ்வாறு எரிக்கப்பட்டவையாகும்.

பத்திரிகைகளை விநியோகத்துக்காக எடுத்துச் சென்ற பத்திரிகை விநியோகஸ்தர்களை வழி மறித்து மிரட்டியவர்களே, பத்திரிகைப் பிரதிகளை பறிமுதல் செய்து மிரட்டியதாக யாழ் செய்திகள் கூறுகின்றன.

அனாமதேய அமைப்பு ஒன்றின் பெயரில் வெளியான, விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிவித்தல் ஒன்றை பிரசுரிக்க மறுத்ததற்காகவே பத்திரிகைகள் எரிக்கப்பட்டதாக பத்திரிகை அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலால் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

இதுக்கு டக்ஸ் என்ன விளக்கம் சொல்லப் போறாரோ.... :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.