Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் போர் தொடர்பில் நாங்கள் சொன்னதெல்லாம் பொய்.

Featured Replies

..........சர்வதேச ஊடக வியலாளர் முன் சொல்ல வைக்கப்பட்டு ....உள்ளார்கள்.

இதை நம்பும் உலகும் .........? சாட்சி இல்லாத சத்தியங்கள்.

அதாவது இங்கு நாங்கள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல் என்ன என்றால்

எலிகளால் பூனைகளிற்கு மணிகட்ட முடியாது!!!

தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள்: புலிகள் அல்ல எலிகள்

சிறீ லங்கா அரசாங்கம் + பேரினவாதிகள்: கொழுத்த பூனைகள்

நாங்கள் ஒருமாதிரி வளையுக்கால ஓடித்தப்பி வெளிநாடு வந்துவிட்டம். மீதம் தாயகத்தில் உள்ள எலிகள் தங்கள் திறமையை பாவித்து தப்புவது தவிர வேறு வழி இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நாம் குறிப்பிட ஆரம்பித்தமை தான் சிங்களத்தின் வெற்றி

அப்படிக் குறிப்பிடக்காரணம்..

1. அரசு சொல்லும் 5 வரில் மூவர் மட்டுமே யுத்த வலயத்துக்கு வெளியில் இருந்த பொதுமக்களுக்கு செய்தி வழங்குவதில் ஈடுப்பட்டதுடன் மருத்துவர்களாக இனங்காணப்பட்டோர். மற்றைய இருவர்.. மருத்துவர்களாகவும் இருக்கலாம்.. சிறீலங்கா அரச பினாமிகளாகவும் இருக்கலாம்.. கருணா குழுவாகவும் இருக்கலாம்.. ஈபிடிபி ஆயுதக் கும்பல் "சமூகசேவையாளர்களாகவும்" இருக்கலாம்.

2. என்னதான் அர்ப்பணிப்போடு பணியாற்றி இருப்பினும் எப்போது மருத்துவ தர்மத்தை மீறி.... மனித அவலங்களை மக்களின் உடல் சார்ந்த துன்பங்களை மறைக்க ஒரு அரசுக்கு துணை போனார்களோ அப்ப இருந்து இவர்களை மருத்துவர்களாக பார்ப்பது சரியா என்பது கேள்வி.

ஒரு மருத்துவனை நம்பித்தான் மக்கள் தமது முழுச் சுயத்தையும் ஒப்படைக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு உயரிய பதிவி வகிப்போர் மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இல்லாத போது அவர்கள் அந்த மக்களுக்கு சேவையாற்றி இருப்பினும்.. மருத்துவர்களாக தொடர்ந்து இனங்காணப்படக் கூடியவர்களா என்பது கேள்வி.

ஒரு சிலரின் பதவி.. குடும்பத்திற்காக.. ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பங்களின் பலியிடலை மறைக்க முடிவு செய்த இவர்கள் நாளை ஆயிரக்கணக்கான நோயாளிகளை கொன்றுவிட்டும் மறைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..???! :lol:

ஐசிஆர்சி மட்டும் 14,000 போரை காயங்களோடு வெளியகற்றி இருக்கிறது.

ஐசிஆர்சி விட்ட அறிக்கையின் படி.. 4 வைத்தியசாலைகள் தாக்கப்பட்டு நோயாளிகள் இறந்தது வரை செய்தியாக வந்துள்ளது.

ஐசிஆர்சி கூட தனது பணியாளர்கள் இறந்து காயப்பட்டதைச் சொல்லி இருக்கிறது.

ஐநாவிட்ட அறிக்கையில் 5 ஆயிரம் முதல் 10,000 வரை மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

சர்வதேச செய்தி ஊடகங்கள் வன்னிப் பேரழிவு பற்றிய செய்மதித் தகவல்களை வழங்கியுள்ளன.

ஆக ஐசிஆர்சிக்கு உள்ள பொறுப்பு மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கி இருக்கும் தொழில் புரியும் வைத்தியர்களுக்கு இல்லாமல் போனது.. அவர்களை வைத்தியர்களாக நோக்க வைத்திய தர்மம் இடமளிக்கவில்லை. இதற்காக இவர்களை அரசியல் ரீதியாக துரோகி என்கிறோம் என்பதல்ல கருத்து. இவர்கள் மருத்துவ ரீதியாக மக்கள் பட்ட வேதனைகளை சொல்லாமல் மறைத்ததே தப்பு...! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதாரணமாய் எல்லாருக்கும் தெரியும் வைத்தியர்கள் மிரட்டப்பட்டு இப்படி சொல்கின்றனர் என்று..

ஆனால் உலகத்திற்கு???

வன்னி மனிதப் பேரவலத்தை மறைக்கும் பொருட்டு சிறீலங்கா அரசு மேற்படி வைத்தியர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் வழங்கி இப்படி சொல்லச் செய்திருக்கலாம் அல்லது வாழ கிடைத்த சந்தர்ப்பத்தை வளமாக்கிக் கொள்ள டாக்டர்கள் என்போரும் உண்மையை குழிதோண்டிப் புதைத்திருக்கலாம்.

இவர்கள் கைது செய்ய படும் முன்பு இவர்களுக்கு இவர்களின் சேவை நிமித்தம் "அமைதி பரிசு" கொடுக்க முன்வந்த ஐ. நா சபை முதல், மிச்ச உலகம் வரை (நாங்கள் உட்பட) - இவர்கள் கைது செய்ய பட்டால் பிறகு என்ன செய்ய முடிந்தது??!!

அதனால் உலகத்திற்காக இந்த மருத்துவர்கள் உண்மையை சொல்லியும் ஒன்றும் வரபோறது இல்லை....

போற்குற்றங்களை பற்றி விளக்கமுள்ள வெளிநாட்டவர் விளங்கி கொள்வார்கள், இந்த அறிக்கையை மருத்துவர்கள் ஏன் இதனை வாரங்கள் மாதங்கள் கழித்து வெளியிடுகிறார்கள் என்று...

ஐ. நா சபையே வாய் மூடி கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கும் போது - யாருக்கு உண்மையை சொல்லி என்ன வரப் போகிறது?

மருத்துவர்களின் பாதுகாப்பு இப்படி அறிக்கை விடுவதில் தான் இருக்கு என்றால், அவர்கள் பாதுகாப்பாய் இருப்பது மட்டுமே இந்த தருணத்தில் முக்கியம்....

கொடுமையான யுத்த சூழ்நிலையிலும் அந்த மருத்துவர்கள் எங்கள் மக்களுக்கு செய்த சேவை மிகப்பெரியது.

உண்மை!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த வைத்தியர்கள் என்ன நிலையில் நேற்றயதினம் பேச வைக்கப்பட்டிருப்பார்கள் என்பது பற்றி நியாயமான உலகம் தெளிவாக இருக்கிறது. அதற்கு சான்றாக சர்வதேச மன்னி்ப்புச் சபை நேற்று விடுத்திருந்து அறிக்கை அமைகிறது. அந்தச் செவ்வி பற்றிய செய்திகளை பிரசுரித்த முன்னணி ஊடகங்கள் (பி்பி.சி உட்பட) சர்வதேச மன்னிப்புச்சபையின் கருத்தையும் சேர்த்தே பிரசுரித்திருந்தன என்ற வகையில் சிறிலங்காவின் பிரச்சாரம் தோல்வி கண்டுள்ளமை தெளிவாகிறது.

http://blog.amnestyusa.org/iar/sri-lankan-...rior-testimony/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிக் குறிப்பிடக்காரணம்..

1. அரசு சொல்லும் 5 வரில் மூவர் மட்டுமே யுத்த வலயத்துக்கு வெளியில் இருந்த பொதுமக்களுக்கு செய்தி வழங்குவதில் ஈடுப்பட்டதுடன் மருத்துவர்களாக இனங்காணப்பட்டோர். மற்றைய இருவர்.. மருத்துவர்களாகவும் இருக்கலாம்.. சிறீலங்கா அரச பினாமிகளாகவும் இருக்கலாம்.. கருணா குழுவாகவும் இருக்கலாம்.. ஈபிடிபி ஆயுதக் கும்பல் "சமூகசேவையாளர்களாகவும்" இருக்கலாம்.

2. என்னதான் அர்ப்பணிப்போடு பணியாற்றி இருப்பினும் எப்போது மருத்துவ தர்மத்தை மீறி.... மனித அவலங்களை மக்களின் உடல் சார்ந்த துன்பங்களை மறைக்க ஒரு அரசுக்கு துணை போனார்களோ அப்ப இருந்து இவர்களை மருத்துவர்களாக பார்ப்பது சரியா என்பது கேள்வி.

ஒரு மருத்துவனை நம்பித்தான் மக்கள் தமது முழுச் சுயத்தையும் ஒப்படைக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு உயரிய பதிவி வகிப்போர் மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இல்லாத போது அவர்கள் அந்த மக்களுக்கு சேவையாற்றி இருப்பினும்.. மருத்துவர்களாக தொடர்ந்து இனங்காணப்படக் கூடியவர்களா என்பது கேள்வி.

ஒரு சிலரின் பதவி.. குடும்பத்திற்காக.. ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பங்களின் பலியிடலை மறைக்க முடிவு செய்த இவர்கள் நாளை ஆயிரக்கணக்கான நோயாளிகளை கொன்றுவிட்டும் மறைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..???! :lol:

ஐசிஆர்சி மட்டும் 14,000 போரை காயங்களோடு வெளியகற்றி இருக்கிறது.

ஐசிஆர்சி விட்ட அறிக்கையின் படி.. 4 வைத்தியசாலைகள் தாக்கப்பட்டு நோயாளிகள் இறந்தது வரை செய்தியாக வந்துள்ளது.

ஐசிஆர்சி கூட தனது பணியாளர்கள் இறந்து காயப்பட்டதைச் சொல்லி இருக்கிறது.

ஐநாவிட்ட அறிக்கையில் 5 ஆயிரம் முதல் 10,000 வரை மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

சர்வதேச செய்தி ஊடகங்கள் வன்னிப் பேரழிவு பற்றிய செய்மதித் தகவல்களை வழங்கியுள்ளன.

ஆக ஐசிஆர்சிக்கு உள்ள பொறுப்பு மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கி இருக்கும் தொழில் புரியும் வைத்தியர்களுக்கு இல்லாமல் போனது.. அவர்களை வைத்தியர்களாக நோக்க வைத்திய தர்மம் இடமளிக்கவில்லை. இதற்காக இவர்களை அரசியல் ரீதியாக துரோகி என்கிறோம் என்பதல்ல கருத்து. இவர்கள் மருத்துவ ரீதியாக மக்கள் பட்ட வேதனைகளை சொல்லாமல் மறைத்ததே தப்பு...! :(

icrc ஐ காப்பாற்ற icrc உண்டு.... இந்த மருத்துவர்களை காப்பாற்ற.....?? :huh:

உயிருக்கு போராடிய நோயாளிகளுக்கு இவர்கள் ஆற்றிய பணி உத்தமமானதே....

இப்பொழுது இவர்கள் தங்களின் உயிரை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தருணம்...

முகாமில் உள்ள மக்கள் சிலர் - ஒட்டு குழுக்களும், சிங்களவனுக்கும் பணத்தை கொடுத்து விட்டு தப்பி வருகிறார்கள்.... அவர்களிலும் பிழை பிடிக்க போகிறீர்களா - இல்லை சத்தியத்தின் நிமித்தம் இவர்கள் மேலும் துன்புற்று அதை உலகிற்கு வெளிப்படுத்தி தான் நியாயம் பெற்று வெளி வர வேணும் என்று...???

"இவர்கள் மருத்துவ ரீதியாக மக்கள் பட்ட வேதனைகளை சொல்லாமல் மறைத்ததே தப்பு...!" என்றால் யாருக்கு சொல்ல வேணும் என்று எதிர் பார்கிறியள்? சொல்லாமலா கைது செய்ய பட்டவர்கள்? சொல்ல வேண்டிய நேரத்தில் சொன்னார்கள்....!

"ஒரு சிலரின் பதவி.. குடும்பத்திற்காக.. ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பங்களின் பலியிடலை மறைக்க முடிவு செய்த இவர்கள் நாளை ஆயிரக்கணக்கான நோயாளிகளை கொன்றுவிட்டும் மறைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..???!"

:huh: வைத்தால் குடும்பி அடித்தால் மொட்டை - என்று இக்கரையையும் அக்கரையையும் மட்டும் பார்ப்பவர்களுக்கு - யாரும் எந்த உத்திரவாதமும் ஒரு போதும் தர இயலாது தான்!!

எல்லாதிற்கும் மேல மருத்துவர்களும் மனுஷ பிறப்புகள் என்றதை கருத்தில் கொள்ள வேணும்... இப்படி போர் அவல நெருக்கடியிலும் அவர்கள் செய்த சேவையை மறந்து இப்போது அவர்களின் பாதுகாப்பை எவரும் உறுதி செய்ய முடியாமல் இருக்கும் போது - அவர்கள் கொடுத்த அறிக்கையை வைத்து - தீர்ப்பிட நாங்கள் யார்????????

இவர்கள் இன்று உயிரை காவாந்து கொண்டு இருந்தால் - ஒருவேளை உண்மையை வெளிக்கொணர ஒரு காலம்/ சூழ்நிலை கூடி வரும் தருணத்தில் - அது நடக்கலாம்...

மனிதாபிமானதுடனும், விவேகத்துடனும் இந்த விடயங்களில் பதில் கூறினால் சிறப்பாக இருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan doctors paraded to recant over 'false' casualty figures

http://www.facebook.com/ext/share.php?sid=...7kg6&ref=nf

இது guardian இவ் வெளியான செய்தி. தலைப்பில் பொய் என்ற பதத்தை

விளிப்புக் குறிக்குள் இட்டதிலிருந்து அவர்கள் அச் செய்தியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டார்கள். ஆகவே அந்த வைத்தியர்களை திட்டாமல் அவர்கள்தானே "உண்மை"யை சொல்லி விட்டார்கள் அவர்களை வெளியில் விடும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

icrc ஐ காப்பாற்ற icrc உண்டு.... இந்த மருத்துவர்களை காப்பாற்ற.....?? :(

உயிருக்கு போராடிய நோயாளிகளுக்கு இவர்கள் ஆற்றிய பணி உத்தமமானதே....

இப்பொழுது இவர்கள் தங்களின் உயிரை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தருணம்...

முகாமில் உள்ள மக்கள் சிலர் - ஒட்டு குழுக்களும், சிங்களவனுக்கும் பணத்தை கொடுத்து விட்டு தப்பி வருகிறார்கள்.... அவர்களிலும் பிழை பிடிக்க போகிறீர்களா - இல்லை சத்தியத்தின் நிமித்தம் இவர்கள் மேலும் துன்புற்று அதை உலகிற்கு வெளிப்படுத்தி தான் நியாயம் பெற்று வெளி வர வேணும் என்று...???

"இவர்கள் மருத்துவ ரீதியாக மக்கள் பட்ட வேதனைகளை சொல்லாமல் மறைத்ததே தப்பு...!" என்றால் யாருக்கு சொல்ல வேணும் என்று எதிர் பார்கிறியள்? சொல்லாமலா கைது செய்ய பட்டவர்கள்? சொல்ல வேண்டிய நேரத்தில் சொன்னார்கள்....!

"ஒரு சிலரின் பதவி.. குடும்பத்திற்காக.. ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பங்களின் பலியிடலை மறைக்க முடிவு செய்த இவர்கள் நாளை ஆயிரக்கணக்கான நோயாளிகளை கொன்றுவிட்டும் மறைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..???!"

:huh: வைத்தால் குடும்பி அடித்தால் மொட்டை - என்று இக்கரையையும் அக்கரையையும் மட்டும் பார்ப்பவர்களுக்கு - யாரும் எந்த உத்திரவாதமும் ஒரு போதும் தர இயலாது தான்!!

எல்லாதிற்கும் மேல மருத்துவர்களும் மனுஷ பிறப்புகள் என்றதை கருத்தில் கொள்ள வேணும்... இப்படி போர் அவல நெருக்கடியிலும் அவர்கள் செய்த சேவையை மறந்து இப்போது அவர்களின் பாதுகாப்பை எவரும் உறுதி செய்ய முடியாமல் இருக்கும் போது - அவர்கள் கொடுத்த அறிக்கையை வைத்து - தீர்ப்பிட நாங்கள் யார்????????

இவர்கள் இன்று உயிரை காவாந்து கொண்டு இருந்தால் - ஒருவேளை உண்மையை வெளிக்கொணர ஒரு காலம்/ சூழ்நிலை கூடி வரும் தருணத்தில் - அது நடக்கலாம்...

மனிதாபிமானதுடனும், விவேகத்துடனும் இந்த விடயங்களில் பதில் கூறினால் சிறப்பாக இருக்கும்...

அப்போ இந்த 5 வரும் சொல்வது அவர்களின் உயிரைப் பாதுகாக்கவே. முடிஞ்ச சனம் முடிஞ்சு போச்சுது. முடியாதவை எல்லாம்.. அகதிமுகாமுக்க கிடவுங்கோ. முடிஞ்சவை பொய் சொல்லி சனங்களின் பிணங்களின் மீது உங்களின் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கோ என்பது போல இருக்குது இந்த நியாயப்படுத்தல்.

எத்தனையோ பேர் சிறையிலேயே கிடக்குதுகள்... காலங்கலாமா. மக்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக சொல்லக்கூடாது என்று. இந்த 5 பேரைப் போல எல்லோரும் நினைச்சிருந்தா இத்தனை மக்களும் சாகத் தேவையில்ல.போரும் தேவைப்பட்டிருக்காது. எல்லோரும் வெளிநாட்டுக்கு வந்து காட்டிக் கொடுத்து அசலைம் அடிச்சது போல செய்திருந்தா.. இந்த 5 பேரும் உதவி செய்து உபத்திரபம் தேடித்தந்திருக்கவும் தேவையில்லை. போர் போராட்டமும் அவசியம் இல்லாமல் போய் இருக்கும்.

செய்த உதவியை விட.. இப்ப சொல்லி இருக்கும் வார்த்தைகள்.. உறவுகளைப் பலி கொடுத்த ..காயப்பட்டு மருத்துவ சேவையின்றி...உடலுறுப்புக்களை இழந்த.. மக்களின் மனங்களை எவ்வளவு வேதனைப்படுத்தி இருக்கும். இவர்கள் அன்று கோரிக்கை விட விட நிராகரித்தது அரசாங்கம். போராளிகள் தங்களின் மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளித்தனர். இவர்கள் அரச மருத்துவர்களாகவே இருந்தனர்... ஊதியம் பெற்றனர்... செயற்பட்டனர். இவர்கள் போராளிகள் அல்ல.. மருத்துவ தர்மத்துக்கு உட்பட்டு செயற்பட்டனர். அது அவர்களின் கடமை. இப்போ அதை மீறுவதை.. கடந்த கால சேவையைக் காட்டி நியாயப்படுத்துவது.. எந்த வகையில் நியாயம்.

நாலு நல்லதைச் செய்திட்டு.. அது கெடும் படி 8 கெட்டதைச் செய்யலாம்... என்பது போல இருக்குது இது. இதை மாண்டு போன 30,000 மக்களுக்கும் சொல்ல முடியுமா..??! 25,000 போராளிகளுக்கும் சொல்ல முடியுமா. போராட்டத்தையும் இழப்புக்களையும் காட்டி அசைலம் அடிச்சவை பச்சோந்திகளாக என்ன எப்படியும் வாழலாம். ஆனால்.. துன்பப்பட்ட மக்களுக்கு தான் தொடர்ந்து துன்பமும்.. வலியும். அவர்களின் இழப்புக்கு யார் பதில் சொல்வது. யார் சாட்சி சொல்வது..??! புலம்பெயர் புண்ணாக்குகளா..??! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இப்பொழுது சூழ்நிலைக் கைதிகள்.நாளையே சிறிலங்காவிற்கு வெளியே அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி ஒர் பத்திரிகையாளர் மகாநாட்டை நடத்தினால் நாங்கள் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் கொடுத்த அழுத்தம்(மிரட்டல்) காரணமாகவே அவ்வாறு பொய் சொன்னோம் என்பார்கள். முன்பு பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்களே இருப்பதாக சிறிலங்கா அரசு சொன்னதையே பிராணாப் முகர்சியும் சொன்னார். இப்போ முகாம்களில் எறக்குறைய 3 இலட்சம் மக்கள் வரை இருபப்பதாக சிறிலங்கே அரசே சொல்கிறது.எது பொய் எது உண்மை? எதைச் சொல்லி இந்தச் சர்வதேசம் எமக்காக என்ன செய்து விடப் போகின்றது. காயப்பட்ட மக்களை; தொகையைப் பார்த்தாலே எத்தனை மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது விளங்கும். முன்பு சொன்ன தகவலைச் சொன்னவுடன் உடனே ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிப்பார்களா? யாரும் மருத்துவர்களை குறை சொல்ல வேண்டாம். அவர்களின் நிலை அறிந்து விளங்கிக் கொள்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ இந்த 5 வரும் சொல்வது அவர்களின் உயிரைப் பாதுகாக்கவே. முடிஞ்ச சனம் முடிஞ்சு போச்சுது. முடியாதவை எல்லாம்.. அகதிமுகாமுக்க கிடவுங்கோ. முடிஞ்சவை பொய் சொல்லி சனங்களின் பிணங்களின் மீது உங்களின் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கோ என்பது போல இருக்குது இந்த நியாயப்படுத்தல்.

எத்தனையோ பேர் சிறையிலேயே கிடக்குதுகள்... காலங்கலாமா. மக்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக சொல்லக்கூடாது என்று. இந்த 5 பேரைப் போல எல்லோரும் நினைச்சிருந்தா இத்தனை மக்களும் சாகத் தேவையில்ல.போரும் தேவைப்பட்டிருக்காது. எல்லோரும் வெளிநாட்டுக்கு வந்து காட்டிக் கொடுத்து அசலைம் அடிச்சது போல செய்திருந்தா.. இந்த 5 பேரும் உதவி செய்து உபத்திரபம் தேடித்தந்திருக்கவும் தேவையில்லை. போர் போராட்டமும் அவசியம் இல்லாமல் போய் இருக்கும்.

செய்த உதவியை விட.. இப்ப சொல்லி இருக்கும் வார்த்தைகள்.. உறவுகளைப் பலி கொடுத்த ..காயப்பட்டு மருத்துவ சேவையின்றி...உடலுறுப்புக்களை இழந்த.. மக்களின் மனங்களை எவ்வளவு வேதனைப்படுத்தி இருக்கும். இவர்கள் அன்று கோரிக்கை விட விட நிராகரித்தது அரசாங்கம். போராளிகள் தங்களின் மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளித்தனர். இவர்கள் அரச மருத்துவர்களாகவே இருந்தனர்... ஊதியம் பெற்றனர்... செயற்பட்டனர். இவர்கள் போராளிகள் அல்ல.. மருத்துவ தர்மத்துக்கு உட்பட்டு செயற்பட்டனர். அது அவர்களின் கடமை. இப்போ அதை மீறுவதை.. கடந்த கால சேவையைக் காட்டி நியாயப்படுத்துவது.. எந்த வகையில் நியாயம்.

நாலு நல்லதைச் செய்திட்டு.. அது கெடும் படி 8 கெட்டதைச் செய்யலாம்... என்பது போல இருக்குது இது. இதை மாண்டு போன 30,000 மக்களுக்கும் சொல்ல முடியுமா..??! 25,000 போராளிகளுக்கும் சொல்ல முடியுமா. போராட்டத்தையும் இழப்புக்களையும் காட்டி அசைலம் அடிச்சவை பச்சோந்திகளாக என்ன எப்படியும் வாழலாம். ஆனால்.. துன்பப்பட்ட மக்களுக்கு தான் தொடர்ந்து துன்பமும்.. வலியும். அவர்களின் இழப்புக்கு யார் பதில் சொல்வது. யார் சாட்சி சொல்வது..??! புலம்பெயர் புண்ணாக்குகளா..??! :lol:

ஆம், இந்த ஐவரிடம் தான் உண்மை அடங்கி கிடைக்கிறது என்றால் அதை சொல்லி இப்பவே சூடு வாங்கி கொள்ளாமல், உண்மையை வெளிக்கொணரும் சூழ்நிலை ஏற்படும் போது அதை சொல்லவாவது இவர்கள் இப்பொது உயிரை காவாந்து கொண்டு இருக்க வேணும்.. இடம் பொருள் ஏவல் அறிந்து என்று ஏதோ தமிழில் சொல்வார்களே - அது போல தான்... ! :(

இன்னும் கைதிகளாய் இருக்கும் இவர்களின் இனி வரும் கால மருத்துவ பணியின் நம்பகத்தன்மைக்கு உத்திரவாதம் கேட்கும் உம்மால் - இன்று இவர்களின் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா?! :huh:

போராளிகள் அல்ல மருத்துவர்கள் என்று நீரே சொல்லி உள்ளீர்.... மக்களுக்காக உயிரையும் கொடுக்க வெளிக்கிட்ட போராளிகளே எதிரியின் தந்திர பிடியில் மாட்டி இருக்கும் போது... மருத்துவர்கள் தங்கள் பணியை- கடமை என்பதையும் தாண்டி அளப்பரிய சேவையாய் செய்தார்கள்... தாங்கள் உண்மையை சொல்லி ஒரு வேளை போரின் அவலத்தை நிப்பாட்டலாம் என்று அவர்கள் சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டிய நேரத்தில் உண்மையை சொன்னார்கள் தானே... என்ன நடந்தது? :huh:

மருத்துவ பணி செய்யும் சூழலில் தான் அவன் மருத்துவன்...அதையும் தாண்டி அவர்கள் மனித பிறப்புகள். அடித்தால் வலிக்கும்; சுட்டால் உயிர் போகும்; பிள்ளை, பெற்றோர் என்று பல உயிர்களும் அவர்களில் தங்கி இருக்கும். அது எல்லாத்தின் பாதுகாபிற்கும் "நெடுக்காலபோவான் போர்கைதிகள் புனர்வாழ்வு அமைப்பு" உத்திரவாதம் கொடுக்குமாய் இருந்தால் - கோட் சூட் போட்டு இல்லை - புலிகொடியை கட்டி கொண்டு வந்தே உண்மையை சொல்லுவார்கள்...!! :huh:

கால காலமாய் உண்மையை சொல்ல மறுத்து சிறையில் இருப்பவர்களுக்கு எனது அனுதாபமும், மரியாதையும் உண்டு...ஆனால் அது அவர்களை வெளியே கொண்டு வர போவதில்லை.... இவர்களை ஊக்குவிப்பதோடு தள்ளி நின்று "கெட்டிகாரர் - இவர்களை மாதிரி தான் இருக்க வேண்டும், தியாக மனதோடு- திடமாக!" என்று கைதட்டுவதோடு நிப்பாட்டாமல் - உமது நியாயத்தின் படி சரியாக இருக்கும் இவர்களை வெளிக்கொணரும் ஆற்றல் உமக்கு இருக்கா? <_<

மருத்துவர்களிடம் உண்மையை சொல்லு என்று என்ன உத்திரவாதத்தில் எதிர்பார்க்கிரீர்? காது கொடுத்து கேட்டு, நடவடிக்கை எடுக்க யாரும் வரிஞ்சு கட்டி கொண்டு நிற்கிறார்களா? :huh:

எல்லா வாதத்திற்கும் கட்டாயம் பிரதிவாதம் கொடுக்கோனும் என்றில்லை.. இது யுத்த சூழலில் நாங்கள் யாரும் செய்ய இயலாத ஒரு பணியை செய்து முடித்த நாலு-அஞ்சு சீவன்களை பற்றிய விவாதம்... அவர்களை தீர்ப்பிட உமது வார்த்தை தெரிவின்படி - புலம்பெயர் புண்ணாக்குகளான எமக்கு அருகதை இல்லை... <_<

ஒருவேளை நாங்கள் பூசாவிலோ செட்டிகுளதிலோ இன்று இருப்போமேஆனால், அங்கு இருந்து தீர்ப்பு சொல்லலாம்....

இதுக்கு மேலும் உணர்ச்சி வசப்பட்டு வெளிப்படும் உமது கூற்றுக்கு, உமது personal gratificationஉக்காக இருந்து நானும் கதை வளர்த்து கொண்டு இருக்கவில்லை... வேறு ஒரு விவாதத்தில் முழு மனதோடு விட்டு கொடுக்கிறேன் - நீர் கெட்டிக்காரன் என்று....நான் சொன்னாலும்/ விட்டாலும் நீர் நிச்சயமாக கெட்டிக்காரன் தான்.... ஆனால் இந்த விடயத்தில் விவேகமாக சிந்தித்தாலும், மனிதாபிமானத்தோடு சிந்தித்தாலும் மருத்துவர்களில் பிழை பிடிக்க எமக்கு அருகதை இல்லை. அதோடு முடித்து கொள்கிறேன் -

1,2,3- இளையபிள்ளை மௌனம்!!!

^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம், இந்த ஐவரிடம் தான் உண்மை அடங்கி கிடைக்கிறது என்றால் அதை சொல்லி இப்பவே சூடு வாங்கி கொள்ளாமல், உண்மையை வெளிக்கொணரும் சூழ்நிலை ஏற்படும் போது அதை சொல்லவாவது இவர்கள் இப்பொது உயிரை காவாந்து கொண்டு இருக்க வேணும்.. இடம் பொருள் ஏவல் அறிந்து என்று ஏதோ தமிழில் சொல்வார்களே - அது போல தான்... ! :lol:

இன்னும் கைதிகளாய் இருக்கும் இவர்களின் இனி வரும் கால மருத்துவ பணியின் நம்பகத்தன்மைக்கு உத்திரவாதம் கேட்கும் உம்மால் - இன்று இவர்களின் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா?! :huh:

போராளிகள் அல்ல மருத்துவர்கள் என்று நீரே சொல்லி உள்ளீர்.... மக்களுக்காக உயிரையும் கொடுக்க வெளிக்கிட்ட போராளிகளே எதிரியின் தந்திர பிடியில் மாட்டி இருக்கும் போது... மருத்துவர்கள் தங்கள் பணியை- கடமை என்பதையும் தாண்டி அளப்பரிய சேவையாய் செய்தார்கள்... தாங்கள் உண்மையை சொல்லி ஒரு வேளை போரின் அவலத்தை நிப்பாட்டலாம் என்று அவர்கள் சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டிய நேரத்தில் உண்மையை சொன்னார்கள் தானே... என்ன நடந்தது? :huh:

மருத்துவ பணி செய்யும் சூழலில் தான் அவன் மருத்துவன்...அதையும் தாண்டி அவர்கள் மனித பிறப்புகள். அடித்தால் வலிக்கும்; சுட்டால் உயிர் போகும்; பிள்ளை, பெற்றோர் என்று பல உயிர்களும் அவர்களில் தங்கி இருக்கும். அது எல்லாத்தின் பாதுகாபிற்கும் "நெடுக்காலபோவான் போர்கைதிகள் புனர்வாழ்வு அமைப்பு" உத்திரவாதம் கொடுக்குமாய் இருந்தால் - கோட் சூட் போட்டு இல்லை - புலிகொடியை கட்டி கொண்டு வந்தே உண்மையை சொல்லுவார்கள்...!! :(

கால காலமாய் உண்மையை சொல்ல மறுத்து சிறையில் இருப்பவர்களுக்கு எனது அனுதாபமும், மரியாதையும் உண்டு...ஆனால் அது அவர்களை வெளியே கொண்டு வர போவதில்லை.... இவர்களை ஊக்குவிப்பதோடு தள்ளி நின்று "கெட்டிகாரர் - இவர்களை மாதிரி தான் இருக்க வேண்டும், தியாக மனதோடு- திடமாக!" என்று கைதட்டுவதோடு நிப்பாட்டாமல் - உமது நியாயத்தின் படி சரியாக இருக்கும் இவர்களை வெளிக்கொணரும் ஆற்றல் உமக்கு இருக்கா? <_<

மருத்துவர்களிடம் உண்மையை சொல்லு என்று என்ன உத்திரவாதத்தில் எதிர்பார்க்கிரீர்? காது கொடுத்து கேட்டு, நடவடிக்கை எடுக்க யாரும் வரிஞ்சு கட்டி கொண்டு நிற்கிறார்களா? :huh:

எல்லா வாதத்திற்கும் கட்டாயம் பிரதிவாதம் கொடுக்கோனும் என்றில்லை.. இது யுத்த சூழலில் நாங்கள் யாரும் செய்ய இயலாத ஒரு பணியை செய்து முடித்த நாலு-அஞ்சு சீவன்களை பற்றிய விவாதம்... அவர்களை தீர்ப்பிட உமது வார்த்தை தெரிவின்படி - புலம்பெயர் புண்ணாக்குகளான எமக்கு அருகதை இல்லை... <_<

ஒருவேளை நாங்கள் பூசாவிலோ செட்டிகுளதிலோ இன்று இருப்போமேஆனால், அங்கு இருந்து தீர்ப்பு சொல்லலாம்....

இதுக்கு மேலும் உணர்ச்சி வசப்பட்டு வெளிப்படும் உமது கூற்றுக்கு, உமது personal gratificationஉக்காக இருந்து நானும் கதை வளர்த்து கொண்டு இருக்கவில்லை... வேறு ஒரு விவாதத்தில் முழு மனதோடு விட்டு கொடுக்கிறேன் - நீர் கெட்டிக்காரன் என்று....நான் சொன்னாலும்/ விட்டாலும் நீர் நிச்சயமாக கெட்டிக்காரன் தான்.... ஆனால் இந்த விடயத்தில் விவேகமாக சிந்தித்தாலும், மனிதாபிமானத்தோடு சிந்தித்தாலும் மருத்துவர்களில் பிழை பிடிக்க எமக்கு அருகதை இல்லை. அதோடு முடித்து கொள்கிறேன் -

1,2,3- இளையபிள்ளை மௌனம்!!!

^_^

வன்னியில் இருக்கும் போது.. உயிருக்குப் பயப்பிடாதவர்கள்.. இப்போ பயப்பிட என்ன அவசியம்..???! எனி இவர்களின் வார்த்தையை எவன் நம்புவான்..???!

இங்கு கெட்டித்தனத்துக்காக அல்ல கருத்து. பாதிக்கப்பட்ட மக்களை இறுதில் எல்லோரும் கைவிட்டுவிட்ட பரிதாப நிலை தான்.. மிகுந்த வேதனை அளிக்கிறது.. அதன் பிரதிபலிப்பே எங்கள் கருத்து..! :huh:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவானின் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன். ஆனாலும் ஒருவிடயம்... த.வி.பு.அ ம் எல்லாம் சரியாக நேர்மையாக செய்து இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அங்கு குறைபாடுகள், பிழைகள், தவறுகள் நேர்ந்து இருக்கலாம். எனவே வைத்தியர்கள் கூறியவற்றில் 70பொய்கள் இருந்தாலும் 30 மெய்கள் இருக்கின்றது என்பதையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது.

என்றாலும் நான் ஓர் நீதிபதியாக இருந்தால்... எனது அணுகுமுறை இப்படி இருக்கும்..

புலிகளின் நிருவாகத்தில் - கட்டுப்பாட்டில் மருத்துவர்கள் கூறிய விடயங்கள்: சிறீ லங்கா அரசை மட்டும் தாக்கி இருந்தார்கள்.

தற்போது சிறீ லங்கா அரசின் நிருவாகத்தில் - கட்டுப்பாட்டில் மருத்துவர்கள் கூறிய விடயங்கள்: புலிகளை மட்டும் தாக்கி இருக்கின்றார்கள்.

இனி.. சுதந்திரமாக ஏதாவது ஓர் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் வந்து தஞ்சமடைந்தபின்னர் மருத்துவர்கள் கூறப்போகின்ற விடயங்கள்: இவர்கள் ஓரளவிற்காவது எதுவித அழுத்தத்திற்கும் உட்படாதவகையில் சுதந்திரமாக தமது கருத்துக்களை பயமின்றி கூறக்கூடிய சூழ்நிலையில் சொல்லப்போகும் கருத்துக்கள்

இந்த மூன்றாவது விடயம் நடைபெறும்வரை தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்கவேண்டி இருக்கின்றது.

அவர்கள் துரோகிகள் அல்ல.... எமது மக்களூக்கு ஆற்றிய சேவை அளப்பரியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் இருக்கும் போது.. உயிருக்குப் பயப்பிடாதவர்கள்.. இப்போ பயப்பிட என்ன அவசியம்..???! எனி இவர்களின் வார்த்தையை எவன் நம்புவான்..???!

இங்கு கெட்டித்தனத்துக்காக அல்ல கருத்து. பாதிக்கப்பட்ட மக்களை இறுதில் எல்லோரும் கைவிட்டுவிட்ட பரிதாப நிலை தான்.. மிகுந்த வேதனை அளிக்கிறது.. அதன் பிரதிபலிப்பே எங்கள் கருத்து..! :lol:

போர்க்களத்தில் நடுவே வசிக்க வேண்டி நேர்ந்தால் - ஷெல் அடியில் குடும்பத்தோட சாவதற்கு தயாராய் இருக்கும் மனிதனின் மனோபக்குவம் -

அவனது பிள்ளைகுட்டியின் கழுத்தில் ஒரு கத்தியை வைத்து கொண்டு "நீ எனக்கு சார்பாக பொய் சொல்லாட்டி பொடி இருக்காது" என்று யாரும் சொல்ல நேர்ந்தால் "அதுகென்ன பிறந்தால் சாகிறது சகஜம்" என்று விட்டு உண்மை விளம்ப - அந்த பக்குவம் இருக்குமா?

உங்கள் வேதனை - மக்களுக்காக சாட்சி சொல்ல யாரும் இல்லை என்றால் - அது என்னாலும் வடிவா விளங்கி கொள்ள கூடும்...

ஆனால் சாட்சி சொல்ல ஆள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத உலகத்தில் தான் தற்போது இருக்கிறோம்..

இல்லா விட்டால் எம் நிலை இந்த அளவில் வந்தே இருக்காதே....

( 1,2,3 -மௌனம் சொல்லி விட்டு அதுக்கும் பிறகும் பேசுவது, எனது ரத்தத்தில் கலந்த பழக்கம் :( !!)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.