Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 9, ஜூலை 2009 (15:27 IST)

இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளது. வெளி நாடுகளுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது.

பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்ந்திருப்பது போல அச்சிடப்பட்டிருந்தது.

சாண்ட் விச் என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வெண்ணை, இறைச்சி போன்றவற்றை வைத்து சுற்றப்பட்ட கலவை யாகும். இறைச்சி உணவு மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தைப் பார்த்ததும் அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வாஷிங்டனில் உள்ள இந்து அமைப்புகள் பர்கர்கிங் உணவு நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறைச்சி மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தை இனி வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்து கடவுளை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்குப்படியும் அமெரிக்கா வில் உள்ள இந்து அமைப்பு கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நக்கீரன்

இவர்களை இப்படியே விடக்கூடாது ... எல்லா இந்துக்களும் சேர்ந்து Burger King இனைப் புறக்கணித்து Begger King ஆக்குவோம் !! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்தின் புனிதத் தன்மையினையும் பாழ் பண்ணுவது போன்று யாரும் விளம்பரம் செய்யக் கூடாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனனில் மதங்கள் அடிப்படையில் மனிதர்களாலே தோற்றுவிக்கப்பட்டன. அவற்றினை அவமரியாதை செய்தலென்பது அவ்வவ் மதத்தினரைச் சார்ந்த மனித சமுதாயத்தினரை இழுக்குப் படுத்தும் செயலாகி விடுகின்றது. இம்மாதிரியான செயல்கள் கண்டனத்துக்குரியவை. அதுவும் பெர்கர் கிங் போன்ற சர்வதேச நிறுவனம் இம் மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றமை பல்லாயிரக் கணக்கான இந்துக்களை விசனத்துக்குள்ளாக்கும் செயல். அவர்கள் வேண்டுமானால் வெஜிடேரியன் பெர்கர் ஒன்று செய்து அதன் மேல் இப்படத்தினைப் போட்டு இருக்கலாம். உலக இந்துக்களும் வரவேற்பளித்திருப்பர். ம்ம்ம்ம்ம்............????!!!!

அடப்பாவியளா. சிவபெருமான் பசுவுக்கு மேல இருந்தா குற்றமில்ல. பிள்ளையார் எலிக்கு மேல இருந்தால் குற்றமில்ல. முருகன் மயிலுக்கு மேல இருந்தாலும் குற்றமில்ல. லக்சுமி பேர்கருக்கு மேல இருந்தா குற்றமா? :lol:

விளம்பரப்படுத்தல் என்கின்ற அளவிலை பார்த்தாலும்.. லக்சுமியை பேர்கருலை உட்கார வைக்கிறது எப்படி வியாபாரத்தை அதிகரிக்கும் என்று விளங்க இல்லை. யாரோ அரைகுறைகள் இந்த விளம்பரத்தை உருவாக்கி இருப்பதுபோல் தெரியுது. இந்தியாவில இப்படி செய்து இருந்தால்கூட பரவாயில்லை. அங்கு சனங்களுக்கு லட்சுமியை தெரியும். அமெரிக்காவில இருக்கிறதுகளுக்கு உதைப்பார்த்துப்போட்டு என்ன விளங்கும் என்று தெரிய இல்லை.

அங்கு சனங்களுக்கு லட்சுமியை தெரியும். அமெரிக்காவில இருக்கிறதுகளுக்கு உதைப்பார்த்துப்போட்டு என்ன விளங்கும் என்று தெரிய இல்லை.

அரையும் குறையுமா பார்த்து பழகிபோன அமேரிக்கன் கொஞ்சம் லட்சுமிகரமாக பார்க்கட்டுமே என்று ஒபாமா ஆசைப்பட்டிருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவபெருமான் பசுவுக்கு மேல இருந்தா குற்றமில்ல. பிள்ளையார் எலிக்கு மேல இருந்தால் குற்றமில்ல. முருகன் மயிலுக்கு மேல இருந்தாலும் குற்றமில்ல. லக்சுமி பேர்கருக்கு மேல இருந்தா குற்றமா?//

எப்பூடீ....

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா. சிவபெருமான் பசுவுக்கு மேல இருந்தா குற்றமில்ல. பிள்ளையார் எலிக்கு மேல இருந்தால் குற்றமில்ல. முருகன் மயிலுக்கு மேல இருந்தாலும் குற்றமில்ல. லக்சுமி பேர்கருக்கு மேல இருந்தா குற்றமா? :rolleyes:

லொயிக் பொருந்தல்ல... விலங்குகளை உணவாக ஏற்கக் கூடாது என்பதற்காகத் தானே பேகர் வேண்டாம் என்கின்றார்களே தவிர, உயிரினமே வேண்டாம் என்று சொல்லவில்லையே... யாராது மாட்டில் கை பட்டால் தீட்டு என்றார்களோ?? மாட்டிறச்சி என்பதைத் தானே தப்பு என்கின்றார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லொயிக் பொருந்தல்ல... விலங்குகளை உணவாக ஏற்கக் கூடாது என்பதற்காகத் தானே பேகர் வேண்டாம் என்கின்றார்களே தவிர, உயிரினமே வேண்டாம் என்று சொல்லவில்லையே... யாராது மாட்டில் கை பட்டால் தீட்டு என்றார்களோ?? மாட்டிறச்சி என்பதைத் தானே தப்பு என்கின்றார்கள்...//

அப்பூடீ...

லொயிக் பொருந்தல்ல... விலங்குகளை உணவாக ஏற்கக் கூடாது என்பதற்காகத் தானே பேகர் வேண்டாம் என்கின்றார்களே தவிர, உயிரினமே வேண்டாம் என்று சொல்லவில்லையே... யாராது மாட்டில் கை பட்டால் தீட்டு என்றார்களோ?? மாட்டிறச்சி என்பதைத் தானே தப்பு என்கின்றார்கள்...

logic இல்லாமல் தானே அவங்களும் விளம்பரம் செய்தவங்கள். இப்ப அது இந்தளவுக்கு hit ஆகிட்டுதுதானே. இதில இருந்து என்ன விளங்குது :lol:

விலங்குகள உணவாக ஏற்கக் கூடாது என்பது "உயிரினங்களை வதை செய்யக்கூடாது" என்ற அடிப்படையில் தான்.

அப்படிப் பார்த்தால், உயிரோட இருக்கேக்க ஏறி இருந்தால் என்ன, இறைச்சி ஆக்கிட்டு ஏறி இருந்தால் என்ன. எல்லாம் வதைதானே. :rolleyes:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

logic இல்லாமல் தானே அவங்களும் விளம்பரம் செய்தவங்கள். இப்ப அது இந்தளவுக்கு hit ஆகிட்டுதுதானே. இதில இருந்து என்ன விளங்குது :lol:

விலங்குகள உணவாக ஏற்கக் கூடாது என்பது "உயிரினங்களை வதை செய்யக்கூடாது" என்ற அடிப்படையில் தான்.

அப்படிப் பார்த்தால், உயிரோட இருக்கேக்க ஏறி இருந்தால் என்ன, இறைச்சி ஆக்கிட்டு ஏறி இருந்தால் என்ன. எல்லாம் வதைதானே. :rolleyes:

ஆகா அப்படிப்போடு. இளைஞனே குருக்கள்................. குற்றமில்லை என்பார்களே அப்ப அதுக்கும் ஒருபடிமேலே கடவுள் செஞ்சாக் குற்றமோ? என்றும் சிலர் சொல்லலாம்

வதை என்பது கொலைமட்டும் அல்லவே. உயிர்களை இம்சைசெய்யக்கூடாது என்பதுதானே அடிப்படை அப்படியிருக்க, இத்துனூண்டு சுண்டெலி மேல அம்மாம்பெரிய பிள்ளையார் உட்காருகிறது கொஞ்சம் ஓவர்தான்.

உயிரோட இருக்கிற சுண்டெலி மாடு மயில் மேல இருக்கிறவங்களை விட (எவனோ கொன்ற) இறைச்சிமேல உட்காந்த இலட்சுமி பெட்டர் பாவம் கடைக்காரன் விட்டிடுங்கோ

Edited by naanal

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணப்பன் சிவபெருமானுக்கு பன்றி இறைச்சு படைச்சவர் தானே. சிவபெருமான் அதை ஏற்றுக் கொண்டவர் தானே. பேர்கர்கிங் இலக்சுமிக்கு.. படைச்சால் தானா தப்பு??! :lol:

கடவுளே.. இயற்கையில.. ஒன்றை ஒன்று பிடிச்சுத் தின்னச் சொல்லுறார்.. அப்படி இருக்க.. மனிசன் மட்டும்.. பிடிச்சு தின்னாம இருப்பானா..??!

இது பேர்கர் கிங்குக்கும் விளம்பரம்.. இந்துக்கடவுள்களுக்கும் விளம்பரம். ஆனால் நமக்கு.. நாமம் தான்.. உதுகளால நமக்கு என்ன பலன்..??! பேர்கர்கிங்கில சாப்பிட்டு கொலஸ்ரோல் அதிகரிக்கிறததும் பாஸ்ட் பூட் (fast food) இல உள்ள அதிக உப்பைச் சாப்பிட்டு உயர் குருதி அழுத்த நோய் வாறதும்.. தவிர..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணப்பநாயனார் ........ அந்தக்காலத்திலை வில்லோடையும் , அம்போடைடையும் வேட்டையாடி ... சிவபெருமானுக்கு கொடுத்த இறைச்சியும் பத்தாதாது எண்டு ....... ஒரு கண்ணையும் புடுங்கி கொடுத்தவர் தானே ........

இப்போ ..... இவ்வளவும் எமக்கு ( நச்சு வாயு , விமான குண்டுதாக்குதல் , பட்டினி அவலம் , இன்னும் என்ன என்னவோ .......... ) நடந்தும் ..... சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை . :rolleyes:

அப்பு ராசாமார் லக்சுமியை இண்டைக்கு பேர்கருக்கு மேலகொண்டுபோய் ஏத்துவீங்கள். நாளைக்கு பில் கேட்சிண்ட முதுகிலகொண்டுபோய் வைப்பீங்கள். சரஸ்வதியிண்ட கழுத்தில கடன் அட்டை வீசா கார்ட்டை கொண்டுபோய் கட்டிவிடுவீங்கள். சிவபெருமானிண்ட காதுகளில iPodஐ கொண்டுபோய் சொருகுவீங்கள். எல்லாம் சரி. தர்க்கரீதியாகவும் சரி. ஆனால்..

இயலுமென்றால்.. முகம்மது நபியோட சேட்டைவிட்டுப் பாருங்கோ. சங்கு அறுத்துவுடுவம் இல்ல.

இதேபோல நாளைக்கு யேசுநாதரை சிலுவையோட கொண்டுபோய் கொத்துரொட்டியுக்கு மேல ஏத்திவைச்சால் பிறகு கோவிக்ககூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ராசாமார் லக்சுமியை இண்டைக்கு பேர்கருக்கு மேலகொண்டுபோய் ஏத்துவீங்கள். நாளைக்கு பில் கேட்சிண்ட முதுகிலகொண்டுபோய் வைப்பீங்கள். சரஸ்வதியிண்ட கழுத்தில கடன் அட்டை வீசா கார்ட்டை கொண்டுபோய் கட்டிவிடுவீங்கள். சிவபெருமானிண்ட காதுகளில iPodஐ கொண்டுபோய் சொருகுவீங்கள். எல்லாம் சரி. தர்க்கரீதியாகவும் சரி. ஆனால்..

இயலுமென்றால்.. முகம்மது நபியோட சேட்டைவிட்டுப் பாருங்கோ. சங்கு அறுத்துவுடுவம் இல்ல.

இதேபோல நாளைக்கு யேசுநாதரை சிலுவையோட கொண்டுபோய் கொத்துரொட்டியுக்கு மேல ஏத்திவைச்சால் பிறகு கோவிக்ககூடாது.

ஓம் கலைஞன் சரியாக சொன்னீர்கள் .

எல்லாத்துக்கும் தமிழன் பெரும்பாலானவர்கள் இந்துவாக இருப்பதும் , அதே இந்துவுக்கு இந்துக்களை பெரும்பான்மை ஆகக் கொண்ட இந்தியாவே ஆப்படிப்பதுவும் காண்கிறோம் தானே .........

இவ்வளவுக்கும் இத்தாலி யோனியாவுக்கு ......, தமிழ் நாட்டில் ஒருவர் சொக்கத்தங்கம் என்று கூழைக்கும்பிடு போடுவது தான் பத்திக்கொண்டு வருகுது .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

. இந்தியாவில இப்படி செய்து இருந்தால்கூட பரவாயில்லை. அங்கு சனங்களுக்கு லட்சுமியை தெரியும். .

மாப்பிள்ளை இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த லட்சுமியை தெரியும் என்று சொல்லவே இல்லையே :rolleyes:

Edited by நிலானி

  • கருத்துக்கள உறவுகள்

பேகர் கிங்குக்கு காசு மேல.......காசு வந்து கொட்டப்போகுது.இப்பான் கண்டு பிடுச்சிருக்கிறாங்கள் லட்சுமி செல்வத்தை கொடுக்கும் சாமின்னு.ம்ம்ம்.....நான் சும்மா யாரும் திட்டாதீங்கள் என்னை.வேற என்னவெண்டு இவங்களின்ட மூளையைச்சொல்றது. :rolleyes::):lol:

யாயினி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.