Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்திய வகுத்துள்ள புதிய உபாயம்: புதுடில்லியில் இரகசியப் பேச்சுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழய பிரச்சினைகளை பேசும் போது தீர்க்கமாக தெரிந்து வைத்து கொண்டு பேசுங்கள்... அதுவும் இந்திய இலங்கை ஒப்பந்த பற்றி பேசும் போது தேசிய தலைவரின் சுதுமலை பிரகடனத்தை அறிந்து கொள்ளாமல் பேசுவது சரியானதும் அல்ல...

அங்கே இவைகள் எல்லாவற்றுக்குமான விடையை தலைவர் சொல்கிறார்... இந்திய இலங்கை ஒப்பந்தம் எந்த வகையிலும் தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஒத்துக்கொள்ள இல்லை எனும் அடிப்படையில் தலைவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கிறார்... அவர் டெல்லியில் வைத்து வற்புறுத்தி கையெழுத்திட வைக்கப்படுகிறார்... அதன் பின்னர் சுது மலையில் தோண்றி தமிழ் மக்களுக்கு மத்தியில் பேசும் போது தனக்கு இந்த ஒப்பந்தம் மீது எந்த விதமான நம்பிக்கையும் இல்லை என்பதையும் சொல்லுகிறார்...

அதோடு அவர் குறிப்பிட்ட விடயம் " போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போடாட்டம் மாறாது " என்பதின் மூலம் தமிழர் சுய நிர்ணயம் கொண்ட தமிழீழம் என்பதுதான் எனது முடிவான எண்ணம் என்பதனையும் சொல்லி வைக்கிறார்...

நீங்கள் சொல்லிய அமிர்தலிங்கமும் , ENDLF ( 3 ஸ்ரார்) குழுவும் அதிகாரம் அற்ற மாகான சபைகளை ஏற்று கொள்ள முன் வந்த போது தேசிய தலைவர் ஏற்றுக்கொள்ள இல்லை... இங்கேயே உங்களின் கருத்தில் பெரிய முரண்பாடு இருக்கிறது...

இந்தியா தனது நலன் சார்ந்து எடுக்கும் எல்லா முடிவுகளும் எப்போதும் தமிழருக்கு ஆதரவாக இருக்க இல்லை இருக்க போவதும் இல்லை... இதில் தனக்கு சாதகமான அரசியல் தலைவர்களை தனக்காக பயன் படுத்தியது... புலிகளுக்கு ஆதரவான மக்களை வதைக்கவும் செய்தது...

இந்தியர்கள் செய்த படுகொலைகளை எல்லாம் எப்படி மறந்து அவர்களுடன் சேர்ந்து பணி செய்ய முயல்கிறீர்கள், அல்லது அனுசரித்து போக முற்படுகிறீர்கள்... ( இதை மறுக்கிறீர்களா..??? ) .... அப்படியானால் உங்களுக்கு தெரிந்து தானே இருக்க வேண்டும் இந்தியா தனக்கு இவ்வளவுக்காலமும் விசுவாசமானவர்களை புறந்தள்ளி விட்டு புதிதாக ஒருவரை கைப்பிடிக்க வர யோசிப்பார்கள் எண்று...!!

ஆனால் புலிகள் இந்திய ஈழப்போரின் பின்னர் இந்திய ஆதரவு கட்ச்சிகளை அனுசரித்து போகவே முற்பட்டனர்... அதன் வெளிப்பாடே தமிழ் தேசிய கூட்டமைப்பு... தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உறுப்பினராக இருப்பவர்கள் இந்திய போர் காலத்தில் செய்த கொடுமைகள் தமிழர்கள் நன்கு அறிந்துதானே இருக்கிறார்கள்... அவர்கள் தமிழர்கள் கொலைகளில் துணை போகாதவர்கள் எண்றா கொள்கிறீர்கள்... அவர்களை எல்லாம் அரசியல் வாதிகளாக கொள்கிறீர்கள் தானே...???

அண்ணை நீங்கள் இந்தியா இதுவரை தமிழருக்கு துரோகமே செய்ய இல்லை... செய்தது எல்லாம் தமிழர் அரசியல் வாதிகள் மட்டும் தான் எனும் வாதங்கள் எவ்வளவுகாலத்துக்கு செய்ய போறியள்...????

இந்தியா வேண்டும், இந்திய சார்பான அரசியல் வாரீசுகள் வேண்டாம் என்பது எப்படி இருக்கிறது தெரியுமா..??

நான் குறிப்பிட்டேனா தலைவர் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முற்றாக ஏற்றுக் கொண்டார் என்று. நானே சொல்லி இருக்கிறன்.. அது முழுமையானதல்ல.. ஒரு நிரந்தரத் தீர்வுக்கான அடிப்படையாக ஏற்று இந்தியா எமது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையோடு ஆயுதங்களைக் கையளிக்கின்றோம் என்று தலைவர் குறிப்பிட்டதை சுருங்கச் சொல்லி இருக்கிறேன்.

அதுமட்டுமன்றி அப்போது நிறுவப்பட இருந்த இடைக்கால நிர்வாக சபைக்கு விடுதலைப்புலிகள் ஆட்களை பிரேரித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அமிர்தலிங்கம்.. மற்றையவர்களின் நிலைப்பாடு பற்றி நான் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன். அதை நீங்கள் இன்னொரு தடவை மீளச் சொல்லிட்டு.. எனக்கு தெரியாததைச் சொல்வதைப் போல சொல்லுறீங்க.

நான் இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில் மிகச் சிறியவன் தான். ஆனால் அதற்குப் பின்னான காலத்தில் எங்களுக்கு தரப்பட்ட அறிவுரைகளில்... இதற்கான விளக்கங்கள் அரசியல்துறையினரால் மாணவர்களுக்கு தரப்பட்டிருந்தது. பல கலந்துரையாடல்களில் நேரடியாக அரசியற்துறையினரிடம் கேள்விகளைக் கேட்டு தெளிவுகளைப் பெற்றிருக்கிறேன். அந்த வகையில் இவற்றை என்னால் எழுத முடிகிறது..!

தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுங்கள். நீங்கள் சொல்வதையும் எடுத்த எடுப்பில்.. நம்பும் அளவுக்கும் நான் இல்லை..! :lol:

Edited by nedukkalapoovan

சமாளிச்சிட்டியள்... ஆனால் முக்கியமாக நான் கேட்டதுக்கு கருத்தை முழுசாக முழுங்கீட்டீங்களே... இல்லை கருத்தை அப்படியே வேறு பக்கம் திசை திருப்பும் எண்ணமா....??

இந்தியா தனது நலன் சார்ந்து எடுக்கும் எல்லா முடிவுகளும் எப்போதும் தமிழருக்கு ஆதரவாக இருக்க இல்லை இருக்க போவதும் இல்லை... இதில் தனக்கு சாதகமான அரசியல் தலைவர்களை தனக்காக பயன் படுத்தியது... புலிகளுக்கு ஆதரவான மக்களை வதைக்கவும் செய்தது...

இந்தியர்கள் செய்த படுகொலைகளை எல்லாம் எப்படி மறந்து அவர்களுடன் சேர்ந்து பணி செய்ய முயல்கிறீர்கள், அல்லது அனுசரித்து போக முற்படுகிறீர்கள்... ( இதை மறுக்கிறீர்களா..??? ) .... அப்படியானால் உங்களுக்கு தெரிந்து தானே இருக்க வேண்டும் இந்தியா தனக்கு இவ்வளவுக்காலமும் விசுவாசமானவர்களை புறந்தள்ளி விட்டு புதிதாக ஒருவரை கைப்பிடிக்க வர யோசிப்பார்கள் எண்று...!!

ஆனால் புலிகள் இந்திய ஈழப்போரின் பின்னர் இந்திய ஆதரவு கட்ச்சிகளை அனுசரித்து போகவே முற்பட்டனர்... அதன் வெளிப்பாடே தமிழ் தேசிய கூட்டமைப்பு... தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உறுப்பினராக இருப்பவர்கள் இந்திய போர் காலத்தில் செய்த கொடுமைகள் தமிழர்கள் நன்கு அறிந்துதானே இருக்கிறார்கள்... அவர்கள் தமிழர்கள் கொலைகளில் துணை போகாதவர்கள் எண்றா கொள்கிறீர்கள்... அவர்களை எல்லாம் அரசியல் வாதிகளாக கொள்கிறீர்கள் தானே...???

அண்ணை நீங்கள் இந்தியா இதுவரை தமிழருக்கு துரோகமே செய்ய இல்லை... செய்தது எல்லாம் தமிழர் அரசியல் வாதிகள் மட்டும் தான் எனும் வாதங்கள் எவ்வளவுகாலத்துக்கு செய்ய போறியள்...????

இந்தியா வேண்டும், இந்திய சார்பான அரசியல் வாரீசுகள் வேண்டாம் என்பது எப்படி இருக்கிறது தெரியுமா..??

இதுக்கு எதையும் சொல்லாது தவிர்த்தால் எப்படி...??

*** இதுக்கு பிறகு ஈழப்பிரச்சினை பற்றி எனக்கு எழுதும் எண்ணம் எதுவுமே இல்லை... இதுக்கும் மேல் நீங்கள் பதில் கொடுக்காது விட்டாலும் பறவாய் இல்லை***

Edited by தயா

தயா

தமிழ் மக்களின் தோல்விகளுக்கு தமிழர்களின் மனோபாவம் தான் காரணம்

ஊரில் உடன் பிறந்ததுகளே வேலி எல்லைச் சண்டைக்காக அடிபட்டு குத்துபட்டு இருந்தவர்கள் ஏட்டிக்கு போட்டி பொறாமை இதுகளில் மித மிஞ்சியவர்கள்

அப்படிப் பட்டவர்களை பிரபாகரன் என்ற மந்திரச்சொல்லும் அந்த மனிதரும் தான் ஒன்றாக கட்டிப்போட்டார்

தவிர மக்களின் மனமாற்றத்திலோ , எழுச்சியினாலோ அல்ல

அவை நீறுபூத்த நெருப்பாக இருந்து அவ்வவ்போது வந்து கொண்டு தான் இருந்தது ,, இருக்கின்றது

தவிர யாழில் எழுதுவதன் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரலாம் , சாதிக்கலாம் என்று எண்ணுவதும் தவறு

என்னோடு நிண்ற மறைந்து போன நண்பர்களுக்காக வேறு எதையாவது செய்யலாம்

முகாம்களில் உள்ளவர்களுக்கு ஏன் போராளிகளுக்கு செய்யலாம் ,,,,,,,,,,,,,,,,,இங்கு பலர் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திரிகின்றார்கள்

பலர் சண்டைக்கு வழங்கியவர்கள் எல்லாம் இப்போது பின்னடிக்கின்றார்கள்

நமக்காக போராடிய போராளிகளுக்கும் , அவர்களைத் தாங்கிய மக்களுக்கும் நாம் தான் செய்யவேண்டும் என்பதை பலர் மறந்து விட்டார்கள்

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வேண்டும், இந்திய சார்பான அரசியல் வாரீசுகள் வேண்டாம் என்பது எப்படி இருக்கிறது தெரியுமா..??

இந்தியா ஒரு அண்டை நாடு. அந்த வகையில் அதன் தார்மீக ஆதரவை வேண்டி நிற்பது வேறு. இந்திய நலனைக் காக்க தமிழ் மக்கள் மத்தியில் காட்டிக்கொடுப்பு அரசியல் செய்ய நமக்குக் கட்சிகள் தேவையில்லை. விடுதலைப்புலிகள் இந்தியாவை சிறீலங்கா இந்தியாவை நட்பு நாடாகப் பார்ப்பது போன்றே பார்த்தனர். இந்தியாவை நட்பு நாடாகப் பார்ப்பதற்காக இந்திய நலனைக் காக்கும் அரசியல் சிங்கள தேசியவாதிகள் செய்யவில்லை.

இப்போது கூட மகிந்தவும்.. சரி.. ஜேவிபியும் சரி.. சீனாவை .. பாகிஸ்தானை சமாந்திரமாக இழுத்துக் கொண்டுதான்.. அதுவும் தங்களின் அரசியல்.. சிங்கள மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ளத்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியா நட்பு நாடு என்று மொழிந்ததற்காக இந்திய நலனே தமது அரசியலாக.. சிங்களக் கட்சிகள் வகுத்துக் கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளும் அப்படி இல்லை. இந்தியாவோடு நட்புப் பாராட்டினர். ஆனால் இந்திய நலன் சார்ந்த அரசியலை தமிழ் மக்களிடம் திணிக்கவில்லை.

ஆனால் அமிர்தலிங்கம்... வரதராஜப் பெருமாள் போன்றவர்கள்.. இந்திய நலனுக்காக தமிழ் மக்களிடம் அரசியலை நடத்தியவர்கள். தமிழீழத்துக்காகவோ.. தமிழ் மக்களுக்காகவோ அல்ல..! அதுதான் துரோகம்..!

1987 இல் இந்தியாவோடு உறவாடியவர்கள்.. தமிழ் தேசியத்துக்கு தம்மை அர்ப்பணிக்க உறுதி பூண்டு.. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுதான்.. ரி என் ஏ என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடமை.. இந்திய நலன் காக்கும் அரசியல் செய்வதல்ல. தமிழ் தேசியத்தை பாதுகாத்தப்படி.. தமிழ் மக்களின் உரிமை போராட்டத்துக்கு உறுதிணையாக இருப்பதும்.. அதற்கேற்ப நகர்வுகளை.. இராஜதந்திரத் தொடர்புகளை நகர்வுகளைச் செய்வதுமே..!

நீங்கள்.. ரெம்பவே குழம்பிப் போய் இருக்கிறீர்கள் அண்ணோய்..! நான் என்ன செய்ய முடியும்..???! தலைவரின் நகர்வுகளை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டு.. அமிர்தலிங்கம் போன்ற இறுதி வரை.. இந்திய நலன் போன அரசியல் செய்தவர்களை தமிழ் தேசிய வாதிகளாக்கி.. தமிழ் மக்களின் அரசியல் வாரிசுகளாக்க நினைக்கிறீர்கள். இது மிகவும் தவறான சிந்தனை. தவறானவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் செயலை நீங்கள் செய்ய முற்படுகிறீர்கள்..! :lol:

தவிர யாழில் எழுதுவதன் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரலாம் , சாதிக்கலாம் என்று எண்ணுவதும் தவறு

அப்படி நீங்கள் நினைத்தால் இங்கு நீங்கள் கூட எழுத வேண்டிய அவசியம் இல்லையே...??? ஏன் எழுதுகிறீர்கள்...?? சும்மா பொழுது போக்கவா...??

முகாம்களில் உள்ளவர்களுக்கு ஏன் போராளிகளுக்கு செய்யலாம் ,,,,,,,,,,,,,,,,,இங்கு பலர் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திரிகின்றார்கள்

பலர் சண்டைக்கு வழங்கியவர்கள் எல்லாம் இப்போது பின்னடிக்கின்றார்கள்

நமக்காக போராடிய போராளிகளுக்கும் , அவர்களைத் தாங்கிய மக்களுக்கும் நாம் தான் செய்யவேண்டும் என்பதை பலர் மறந்து விட்டார்கள்

எனது நெருங்கிய உறவுகள் நண்பர்களுக்கே என்னால் எதையும் செய்ய முடியவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது ... அப்படி செய்வதுக்கும் அவர்களுக்கு உதவுவதுக்கு கூட எனக்கு அரச தரப்பில் இருக்கும் யாரையும் எனக்கு தெரியவில்லை என்பதுக்காக இப்போது கவலைப்படுகிறேன்...

அப்படி எனக்கு உதவ முடியும் எண்றால் சொல்லுங்கள் நான் உதவ வேண்டிய நெருங்கிய சொந்தங்களே நிறைய இருக்கிறது...

எனது உறவினர் கைது செய்ய பட்டு இருக்கிறார்களா அல்லது கைது செய்ய பட்டாமல் முகாமில் இருக்கிறார்களா அல்லது தப்பித்து வெளியில் இன்னும் போராளியாக நிக்கிறார்களா என்பதை கூட விசாரிக்க முடியாத நிலையில் இருக்கின்றேன் ( அவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் வரக்கூடாது) ... உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது உதவுவதுக்கு இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்... உங்களின் உதவி எனக்கு தேவைப்படுகிறது...

ஆனால் அமிர்தலிங்கம்... வரதராஜப் பெருமாள் போன்றவர்கள்.. இந்திய நலனுக்காக தமிழ் மக்களிடம் அரசியலை நடத்தியவர்கள். தமிழீழத்துக்காகவோ.. தமிழ் மக்களுக்காகவோ அல்ல..! அதுதான் துரோகம்..!

1987 இல் இந்தியாவோடு உறவாடியவர்கள்.. தமிழ் தேசியத்துக்கு தம்மை அர்ப்பணிக்க உறுதி பூண்டு.. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுதான்.. ரி என் ஏ என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடமை.. இந்திய நலன் காக்கும் அரசியல் செய்வதல்ல. தமிழ் தேசியத்தை பாதுகாத்தப்படி.. தமிழ் மக்களின் உரிமை போராட்டத்துக்கு உறுதிணையாக இருப்பதும்.. அதற்கேற்ப நகர்வுகளை.. இராஜதந்திரத் தொடர்புகளை நகர்வுகளைச் செய்வதுமே..!

நீங்கள்.. ரெம்பவே குழம்பிப் போய் இருக்கிறீர்கள் அண்ணோய்..! நான் என்ன செய்ய முடியும்..???! தலைவரின் நகர்வுகளை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டு.. அமிர்தலிங்கம் போன்ற இறுதி வரை.. இந்திய நலன் போன அரசியல் செய்தவர்களை தமிழ் தேசிய வாதிகளாக்கி.. தமிழ் மக்களின் அரசியல் வாரிசுகளாக்க நினைக்கிறீர்கள். இது மிகவும் தவறான சிந்தனை. தவறானவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் செயலை நீங்கள் செய்ய முற்படுகிறீர்கள்..! :lol:

கொலைகளுக்கு எல்லாம் காரணமான இந்தியாவை அயல் நாடு எண்ற வகையில் மன்னிக்கும் நீங்களே நாளைக்கு சிறீலங்காவையும் மன்னிப்பீர்கள்.... அதுக்கான சாத்தியம் கூட இல்லாது இல்லை...

EPRLF , TELO வில் இருந்து இண்று வெளியில் இருக்கும் யார்தான் 1987 ல் இந்தியாவுக்காக புலிகளையும் மக்களையும் வதைக்க இல்லை...???

TELO வினர் ஒவ்வொரு வருடமும் சிறீசபாரத்தினத்தின் நினைவு நாளை கொண்டாடுகிறார்கள்... அதற்கான பொதுக்கூட்டங்களிலும் புலிகளால் கொல்லப்பட்ட சபா எண்றுதான் விளிக்கிறார்கள்... அவர்களை புலிகள் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலக்கவா சொன்னார்கள்...

எங்களுக்குள் இருக்கும் முரண்பாட்டை நாங்கள் பின்னர் தீர்த்து கொள்ளலாம். அதற்கு முதலில் தமிழர் பிரச்சினைகளை தீர்க்கும் வளிக்கு எல்லாரின் ஆதரவும் வேண்டும் எண்றுதானே கூட்டமைப்பின் TELO வினரை சந்தித்த தேசிய தலைவர் சொல்லி அனுப்பினார்...

அவர்கள் எல்லாம் மாற முடியும் எண்றால் யாரை வேண்டுமானாலும் மாற்ற முடியாதா...??

என் இந்தியாவை கூட மன்னிக்க தயாராகும் நீங்கள் சொந்த இனத்தை பழி வாங்கி என்னைத்தை சாதிக்க நிக்கிறீர்களோ...???

( அவர்களை பற்றி விமர்சனம் செய்வது என்பது வேறு.. அதுதான் காலத்தின் தேவை.. )

இந்தியா ஒரு ஆயுதக் குழு அல்ல. அது ஒரு பிராந்திய வல்லரசு. அதனை அணுக ஒரு இராஜதந்திரம் அவசியம். அதைத்தான் விடுதலைப்புலிகளும் செய்தனர்.. சிறீலங்காவும் செய்கிறது.

தமிழீழம் கேட்டுப் போராடியவர்கள்.. அதற்காகப் போராடி இருக்க வேண்டும். முற்று முழுதாக இந்திய நலனுக்கான தரகர்களாக மாறி போராட்டத்தை சிதைக்கும் காரியங்களில் இறங்கி இருக்கக் கூடாது.

சிறீசபாரட்ணம்.. ஏன் கொல்லப்பட்டார்.. அவரின் செயற்பாடுகள் என்ன என்பவை.. இங்கு அவசியமில்லை. அது தேவையற்ற பிரச்சனைகளையே உருவாக்கும். ஆனால் எந்த இயக்கமாயினும் மக்களின் நலனை முன்னிறுத்திச் செயற்பட்டவர்களுக்கு விடுதலைப்புலிகளும் மக்களும் கெளரவம் அளிக்க மறுக்கவில்லை. குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் ரெலோ அமைப்பை சார்ந்திருந்த போதும் ரெலோ அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்கிய காலத்திலேயே அவர்களுக்கு தேசிய தலைவர் மாவீரர்கள் அந்தஸ்தை வழங்கி கெளரவித்தார்.

ஏன் தேசிய தலைவர் சிறீசபாரட்ணத்துக்கு அதை வழங்கவில்லை. அவருடன் தனிப்பட்ட விரோதமா..??! இல்லை. சபாரட்ணம்.. மாவீரர்களுக்கான பட்டியலில் இடம்பிடிக்கும் வகையில் தமிழீழ தேசத்தின் நலன் சார்ந்து தனது செயற்பாடுகளை முழுமைப்படுத்தவில்லை என்பதுதான் அர்த்தம். அதுதான் உண்மையும் கூட...!

நீங்கள் அநாவசியமாக.. அவரை இவரை.. மன்னிக்கச் சொல்லிக் கேட்பதற்கு முன்னர்.. அவர்கள் தேசத்துக்கு மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லுங்கள். மன்னிப்பதைப் பற்றி மக்கள்.. மாவீரர்கள்.. போராளிகள்.. தீர்மானிக்கட்டும்.

நான் இந்தியாவை மன்னித்ததாக சொல்லவில்லை. இந்தியாவுடனான இராஜதந்திர நகர்வுகளையே சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால் ஆயுதக்குழுக்களோடு இராஜதந்திர உறவுகளை பேண வேண்டிய அவசியம்.. தேவை எதுவும் இல்லை. ஏனெனில்.. இந்த ஆயுதக்குழுக்களின் தாகமும் ஒரு காலத்தில் தமிழீழமாகவே இருந்தது. அதற்காக அவர்கள் செயற்பட விரும்பின்.. தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து ஒரு பலமான சக்தியாக செயற்படட்டும். நாம் வரவேற்போம். ஆளுக்கொரு ஆயுதக் கட்சி வைச்சுக் கொண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டு.. அல்லது றோவின் தரகர்களாக இயங்கிக் கொண்டு அரசியல் செய்ய அனுமதிக்க முடியாது. அது எமது விடுதலைப் போரட்டத்தை ஆபத்தாக திசைக்கே நகர்த்தும்..! எமது தமிழீழத்தை கனவிலேயே சிதறடிக்கும்..! :lol:

நெடுக்கு.... நீங்கள் பிராந்திய வல்லரசு செய்தவற்றையோ இல்லை அண்மைக்காலத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் செய்த துரோகத்தையோ மன்னிக்க கூடாது எண்று சொல்வதல்ல எனது நோக்கம்.... அதை விட்டால் தமிழருக்கு வேறு வளியும் இல்லை...

இவ்வளவு கொடூரங்களையும் பின் நிண்று ஊக்குவிப்பவர்களை மன்னிக்க தயாராகத்தான் இருந்தீர்கள், இருக்கிறீர்கள் என்பது கூட கேடானது அல்ல...

இண்று நிங்கள் உங்களுக்குள் சண்டை போட்டு கொண்டு இருப்பதால்தானே அவர்கள் உங்களை அடக்க அந்த பிரித்தாளும் தத்துவத்தை பயன் படுத்துகிறார்கள்... இதை உங்களின் வறட்டு கௌரவத்துக்கு புரிந்து கொள்ள முடிய வில்லையே என்பதுதான் கவலையானது...

தமிழன் தமிழனுக்கு அடித்து கொள்ளும் பாதகத்துக்கு முடிவை கொண்டு வர நீங்கள் விரும்பாதவரைக்கும் தமிழன் எல்லாவற்றுக்கும்மான ஒரு பயன் பாட்டு கருவிதான்...

இண்றைய சிங்களத்தின் வெற்றிக்கு முழுமையான காரணமும் தமிழர்கள் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் கட்டாயம் வரும்...

இண்றைய பத்தநாதன் அண்ணாவின் வலை எழுத்து இது..

  • அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் அகப்புறச்சூழல் எண்று எதை கருதுகிறார் என்பது புரிகிறதா...??

** உங்களுக்கு புரிய வைக்கும் தேவை எனக்கு இதுக்கு மேல் கிடையாது.... **

Edited by தயா

நல்ல விசயம் ... ஈ.என்.டி.எல்.எப் என்ன யாரும் திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் யார் வந்தாலும் வரவேற்கிறோம்!! அதில் எந்த தவறும் இல்லை ....

........ இதுவரை காலமும் .... குற்றித்தான் அரியாக வேண்டும் என்றிருந்தோம்!! அதற்கு உயிர்/உடைமை/அனைத்தையும் கொடுத்தோம். .... ஆனால் குற்றத்தான் ஒருவரும் மிஞ்சவில்லை.!!!!! ............ இனியாவது யாரும் ஆவது குற்றியானாலும், ....... அரிசியாகட்டும் .........

நாம் விரும்பியோ, விரும்பாமலோ ..... எமது வாழ்வு ... இந்தியாவின் கையிலேயே தங்கி உள்ளது!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பெரும் அழிவின் பின்னரும் " நான் " நாமாக ஒன்றிணையாதிருப்பதை உலகு பார்த்து இகழ்கிறது. எதுவரை, நாம் சாகும்வரையா?.......... எமக்குப் பின்னரும் எமது சந்ததி அழ வேண்டுமா? காத்திரமான பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றைத் தேசியமாகமாக நாம் நிமிராதவரைக்கும் எம்மால் எதையும் சாதிக்க முடியாது. இந்தியா சிரித்தவாறு கழுத்தறுத்தது. ஏன் மேற்குலகும் தான். நாம் விறைப்பாக நின்றவாறு வீழ்ந்து போகிறோம். விலைபோகாது விடியலையடையும் வழி தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியது அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின விடுதலையின் பால் பற்றுக் கொண்ட இருவர் தேவையற்ற வாதங்களைச் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சுதுமலைப் பிரகடனத்தி;ல் சில விடயங்களைச் தெளிவாகச் சொல்லிpருக்கிறார்.இந்த ஒப்பந்தத்தைச் சிங்களப் பேரினவாத பூதம் விழுங்கிவிடும் என்று சொன்னார்.பேராட்ட வடிவம் மாறலாம் பேராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை என்று சொன்னார். இது என்றைக்கும் மாறாது. அன்று அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஆயுதத்தை ஒப்படைக்க மறுத்திருந்தால். புலிகள் எல்லாத்தையும் குழப்பிப் போட்டார்கள் என்றே எல்லோரும் சொல்வார்கள். இந்தியாவின் சுயரூபம் தெரிந்திருக்காது. எங்கள் விடுதலையை நாமேதான் வென்றெடுக்க வேண்டும்.நடந்து முடிந்தவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நடக்க வேண்டியவற்றை செய்ய வேண்டும்.விடுதலைப் போராட்டத்தை ஆறப்போடக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.