Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏனென்றால் நாங்கள் அதிபுத்திசாலிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ மின்சார முள்வேலிக்குள்

யாரோ முகமற்றவர்கள் வதைபடட்டும்.

அதி புத்திசாலிகளின் முன்னெடுப்பில்

ஆடல், பாடல், கொண்டாட்டங்களை,

மண்ணுக்காய் மடிந்தவர்களின்

வணக்க அரங்கின் பெயரால்

வகைப்படுத்திக் கொள்வோம்.

தெருவெளிகளில் நின்று

சிறுகச் சிறுகச் சொல்லிக் கதறிய

இனத்தின் வேதனையை

ஆழக்குழி தோண்டிப் புதைப்போம்.

மீள மீள வசதிக்கேற்ப

வரலாற்றுப் பிழைகளை

நியாயப்படுத்திக் கொள்வோம்.

வாதையில் உறவுகள் வருந்திக் கிடந்தாலும்

வரும் வசந்த விழாக்களுக்கு

நாமே வழிகாட்டிகள் ஆவோம்.

நாங்கள் புலம்பெயரிகள்.

புண்ணாக்குத் தின்றாலும்

விண்ணாணம் பார்ப்போம்.

விளக்கங்கள் கொடுப்போம்.

கவிதை என்பது காலத்தின் காட்சிகளை படிமமாய் அடுத்த தலைமுறைக்கும், வாசிப்பவருக்கும் ஏற்படுத்துவது...

வெறும் ஆத்திரம் கவிதை ஆகாது

திட்டுதலுக்கு கவிதை ஒரு வடிவம் அல்ல

சகாரா...

உங்களின் கவிதை மொழியை நீங்களே சாகடிக்கின்றீர்கள்...

ஒரு சமூகம் என்ற அளவில், அதை நீங்கள் பார்க்கும் பார்வை குறும் பார்வையாக இருக்கின்றது....அது உங்களின் முன்னைய கவிதைகளில் தெரிந்த தெளிவை அழிக்கின்றது.

தமிழ் சமூகம் ஒன்றும் ஏனைய சமூகங்களில் இருந்து Filter பண்ணுப் பட்ட சமூகம் அல்ல.... அது குழம்பித் தான் தெளியும்

வெறும் குற்றச் சாட்டே கவி மொழியானால், நீதி மன்ற வழக்கு பற்றிய அறிக்கை எல்லாம் கவிதை ஆகும்....

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா,தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

நாங்களே எங்கள் இனத்தை கேவலப்படுத்தக்கூடாது.எங்கும

  • தொடங்கியவர்

நல்லது நிழலி.

கவிதை என்பது காலத்தின் காட்சிகளைச் சொல்லவேண்டும். மறுக்கவில்லை ஏற்றுக் கொள்கிறேன். காட்சிப்பிழைகளுக்காக வக்காளத்து வாங்கக் கூடாது இது உங்களுக்குத் தெரியும். நீங்களே சொல்லி விட்டீர்கள் தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களில் இருந்து Filter பண்ணுப் பட்ட சமூகம் அல்ல என்று...... அந்தச் சமூகம் என்னையும் உள்ளடக்கியதுதானே. கவிதை மொழி என்பது பற்றி நான் அதிகம் கற்கவில்லை. கவிதை மொழிக்கு எல்லைகள் போட முடியாது.

நிழலி சமூகம் என்ற அளவிலிருக்கும் எனது பார்வை குறும்பார்வை என்று நீங்கள் கூறுவது புரியவில்லை. சிறிது விளக்கம் தந்தால் புரிந்து கொள்வேன்.

வெறும் குற்றச்சாட்டை கவியாக்கியுள்ளேன் என்று நீங்கள் எதனைக் கூற விளைகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா,தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

நாங்களே எங்கள் இனத்தை கேவலப்படுத்தக்கூடாது.எங்கும

  • கருத்துக்கள உறவுகள்

அய்ய்......சகாராவும் துரோகியாயிட்டா இனி ஜாலிதான்.. :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் குற்றச்சாட்டை கவியாக்கியுள்ளேன் என்று நீங்கள் எதனைக் கூற விளைகிறீர்கள்?

:lol:

அஅஅதாவது அவர் சொல்ல வாறது என்னவெண்டால் அறம்புறமாப் பேசிறதுக்கு கவிதையைப் பாவிக்கக்கூடாதாம்..! செய்யுள் எழுதலாமாம்..! இல்லையா நிழலி? :(

நிழலி சமூகம் என்ற அளவிலிருக்கும் எனது பார்வை குறும்பார்வை என்று நீங்கள் கூறுவது புரியவில்லை. சிறிது விளக்கம் தந்தால் புரிந்து கொள்வேன்.

சகாரா,

உங்களின் சமூகம் என்பதன் பார்வையில், விடுதலை போராளிகளும், விடுதலை விரும்பிகளினது உணர்வுகள் மாத்திரமே அதிகம் காணப்படுகின்றது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் அவற்றை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றீர்கள். ஆனால் யதார்த்ததில் அப்படி இருக்க கூடிய நிகழ்தகவு மிகக் குறைவு. ஆடல் பாடல் நிகழ்வுகள் சமூகத்தில் இடம்பெறுவதால், இடம்பெறப் போவதால் அச் சமூகம் தன் விடுதலை உணர்வை இழந்து கொள்ளப் போகின்றது என எண்ணுவது தேவையற்ற பயம் என்றே நான் கருதுகின்றேன். அப்படி நிகழ்வுகளை இந்த துயரமான வேளைகளில் வைப்பவர் எந்தக் காலத்திலும் விடுதலை சார்பான வலுமிக்க போராட்டங்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருப்பர் என்று நான் எண்ணவில்லை...இப்படியானவர்கள் மேல் எழும் ஆத்திரத்தை கவிகளில் எழுதுவதால் எம் கவிதை மொழி தான் காயத்திற்குள்ளாகும்

வெறும் குற்றச்சாட்டை கவியாக்கியுள்ளேன் என்று நீங்கள் எதனைக் கூற விளைகிறீர்கள்?

மேலே நான் எழுதிய இருப்பது இந்தக் கேள்விக்கான பதிலையும் கொண்டிருக்கின்றது

உங்களின் வழக்கமான அடர்ந்த கருத்துகளும் பார்வையும் கொண்ட கவிதைகளில் இருந்து நீங்கள் விலகிச் செல்கின்றீர்கள் போலுள்ளது என எனக்கு தோன்றிய கவலையினால் தான் நான் என் விமர்சனத்தை முன்வைத்தேன்....உங்களை காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

:lol:

அஅஅதாவது அவர் சொல்ல வாறது என்னவெண்டால் அறம்புறமாப் பேசிறதுக்கு கவிதையைப் பாவிக்கக்கூடாதாம்..! செய்யுள் எழுதலாமாம்..! இல்லையா நிழலி? :lol:

செய்யுள்....!! நான் அன்று சொன்னது போல், ஆத்திசூடிக்கே பொழிப்புரை வேண்டும் எனக்கு...அப்படி இருக்க செய்யுள் எழுதினால் அதனை புரிந்து கொள்ள 100 பக்கத்திற்கும் குறையாத பொழிப்புரை வேண்டும் எனக்கு

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா..தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.உங்க

தாயகத்தில் கடும் போர் நடந்து கொண்டிருந்த போதே அங்கே என்ன

நடக்கிறது என்று தெரியாமல் ஒரு பகுதியினரும் என்னவாவது நடந்து தொலையட்டும்

என்ற சிந்தனையில் இன்னொரு பகுதியினருமாக புலத்தில வாழ்ந்தவை வாழுகிறவை தான் எங்கள் இனம்...............

தற்போதும் பணம் உள்ளவர்கள் பணத்தை லட்சம் லட்சம் ஆக கொடுத்து தம் உறவுகளை வெளியில் எடுக்கும் முக்கிய வேலையில் ஈடுபட்டக்கொண்டிருக்கிறார்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா,

உங்களின் சமூகம் என்பதன் பார்வையில், விடுதலை போராளிகளும், விடுதலை விரும்பிகளினது உணர்வுகள் மாத்திரமே அதிகம் காணப்படுகின்றது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் அவற்றை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றீர்கள். ஆனால் யதார்த்ததில் அப்படி இருக்க கூடிய நிகழ்தகவு மிகக் குறைவு. ஆடல் பாடல் நிகழ்வுகள் சமூகத்தில் இடம்பெறுவதால், இடம்பெறப் போவதால் அச் சமூகம் தன் விடுதலை உணர்வை இழந்து கொள்ளப் போகின்றது என எண்ணுவது தேவையற்ற பயம் என்றே நான் கருதுகின்றேன். அப்படி நிகழ்வுகளை இந்த துயரமான வேளைகளில் வைப்பவர் எந்தக் காலத்திலும் விடுதலை சார்பான வலுமிக்க போராட்டங்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருப்பர் என்று நான் எண்ணவில்லை...இப்படியானவர்கள் மேல் எழும் ஆத்திரத்தை கவிகளில் எழுதுவதால் எம் கவிதை மொழி தான் காயத்திற்குள்ளாகும்

உங்களின் வழக்கமான அடர்ந்த கருத்துகளும் பார்வையும் கொண்ட கவிதைகளில் இருந்து நீங்கள் விலகிச் செல்கின்றீர்கள் போலுள்ளது என எனக்கு தோன்றிய கவலையினால் தான் நான் என் விமர்சனத்தை முன்வைத்தேன்....உங்களை காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

நிழலி நீங்கள் கூறுவது புரிகிறது. சமூகம் என்பதற்குள் எவ்வளவோ விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். ஒரு படைப்பாளியின் சுழற்சிப் பார்வையில் அனைத்தையும் கவனிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். அப்போதுதான் படைப்பாளியாக வெற்றி பெற முடியும். ஒரு திக்கிலேயே அவதானித்துக் கொண்டிருந்தால் அவ்விடத்தில் ஏற்படும் நன்மை தீமை என்பவைதான் கண்களுக்குப் புலப்படும். இன்றைய காலத்தில் அதி முக்கிய தேவையாக எம்மினத்திற்கு வேண்டும் விடுதலை. அந்தத் திக்கில் மட்டுமே எனது பார்வை ஆழமாக ஊடுருவி நிற்கிறது. சிறந்த படைப்பாளியாகப் பிரகாசிப்பது அல்லது நல்ல மனிதாபிமானியாக இருப்பது இதில் எதையாவது ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னால் நல்ல மனிதாபிமானியாக இருக்கவே விரும்புகிறேன் என்பேன். நிழலி நீங்கள் கண்முன்னே செல்வீச்சில் துடித்துத் துடித்து உயிர்விட்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இராணுவக் கொடுங்கரங்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட, அங்கவீனப்பட்ட, சித்ரவதைப்படும் ஓலத்தை எதனையாவது அனுபவித்திருக்கிறீர்களா?

ஒரு சின்ன உதாரணம்

அந்தப் பெண்மணி மூன்று குழந்தைகளின் தாய். அந்த மூன்றாவது குழந்தை பிறந்து இரண்டரை மாதங்கள் இருக்கும். ஒரு இராணுவ முற்றுகைக்குள் அகப்பட்ட சமயம் அயலில் எங்கோயோ போராளிகள் சந்திக்கிறார்கள் என்று துப்புக் கொடுப்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட முற்றுகை கிட்டத்தட்ட முன்னிரவுநேரம் முற்றுகை இடப்பட்டது அந்த இடம். இருளுக்குள் நகர்ந்து நகர்ந்து இராணுவம் முற்றுகையை இறுக்கியது. இராணுவ நடமாட்டத்தை உணர்ந்த போராளிகள் விலகி மறைந்தார்கள். இராணுவம் ஏமாற்றம் அடைந்தது. அந்த அயலுக்குள் இருந்தவர்களைக் கொடுமைப்படுத்தியது. அந்தக் கொடிய இராணுவத்திற்கு ஏமாற்றத்தைத் தாங்க முடியாது இந்த இளந்தாயை இம்சித்தார்கள். எவ்வளவு சித்ரவதைகளைச் செய்யமுடியுமோ அவ்வளவையும் நிலம் வெளுக்கும் பொழுதிற்குள் செய்து முடித்தார்கள். அலறக்கூடச் சக்தியற்றுக் கிடந்தவளை தலைமுடியில் பிடித்து கொரகொரவென்று இழுத்து வந்து பீதியில் கோயிலுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்களின் முன் வைத்து இரண்டரை மாதக்குழந்தைக்குப் பாலூட்டும் அந்தத் தாய்மை நிரம்பிய மார்புகளை தங்களின் பூட்ஸ் கால்களால் மிதித்துக் கசக்கி கண்முன்னேயே துடிக்கத் துடிக்கச் சாகடித்தார்கள்.

இந்த மரண ஓலங்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நான் கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன் அதனால்தான் என்னுடைய பார்வை நான் அனுபவித்த வலிகளுக்கூடாகவே கூர்மை பெற்றிருக்கிறது. இப்போது புலம் பெயர்ந்து விட்டேன் வலிகள் இல்லைத்தான் ஆனால் மனச்சாட்சி கொல்கிறது. தூரத்துச் செய்திதானே என்று விலத்திப்போய் நின்று என் செயலுக்கு நியாயம் பேச முடியவில்லை. நான் சார்ந்த ஒரு இனமே வாழ்வுக்காக துடிக்கும்போது அந்த வாழ்வின் வலியை அனுபவித்த எனக்கு அந்த இனத்தின் விடுதலைக்காகவும், விடுதலைப் போராளிகளுக்காகவுந்தான் பேச அதிக ஆளுமை இருக்கும். இருப்பினும் முடிந்தவரை சிறந்த படைப்பாளியாக மாறவும் முயற்சி எடுக்கிறேன் நிழலி.

நிழலி நீங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. எனக்குள் மண்டிக் கிடக்கும் ஏதோ ஒரு வலியை இறக்கி வைக்கச் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்துள்ளீர்கள் அதற்காக எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

அய்ய்......சகாராவும் துரோகியாயிட்டா இனி ஜாலிதான்.. :D:lol:

என்ன சாத்திரியார் இப்பட்டத்தைத் தருவதற்கு எத்தனை நாளாகக் காத்திருந்தீர்கள்?

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol:

அஅஅதாவது அவர் சொல்ல வாறது என்னவெண்டால் அறம்புறமாப் பேசிறதுக்கு கவிதையைப் பாவிக்கக்கூடாதாம்..! செய்யுள் எழுதலாமாம்..! இல்லையா நிழலி? :D

என்ன டங்குவார் தர்மத்தை வெளிப்படையாகப் பேசுவதற்கு செய்யுள் எழுத எனக்குத் தெரியாது. நிழலியைக் கேட்கிறமாதிரிக் கேட்டு மிதிவெடிகளை எனது காலடியில பரப்புகிற மாதிரி இருக்கிறது.

சகாரா அக்கா..தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.உங்க
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் கடும் போர் நடந்து கொண்டிருந்த போதே அங்கே என்ன

நடக்கிறது என்று தெரியாமல் ஒரு பகுதியினரும் என்னவாவது நடந்து தொலையட்டும்

என்ற சிந்தனையில் இன்னொரு பகுதியினருமாக புலத்தில வாழ்ந்தவை வாழுகிறவை தான் எங்கள் இனம்...............

தற்போதும் பணம் உள்ளவர்கள் பணத்தை லட்சம் லட்சம் ஆக கொடுத்து தம் உறவுகளை வெளியில் எடுக்கும் முக்கிய வேலையில் ஈடுபட்டக்கொண்டிருக்கிறார்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.