Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியற் குருடரான சூரிய தேவன் புகழ்பாடிகள்

Featured Replies

முடியாட்சி மன்னர் காலம் முதல் பொற் கிளி பெறுவதற்காக மன்னர் புகழ்பாடிய அரச அவைக் கவிஞர்களின் கதை தமிழர் சரித்திரத்தில் தொடர்கதையாக இருக்கிறது.அண்டிப் பிழைப்பவர்கள் என்றும் அதிகாரம் சார்ந்தே இயங்குவர்.தமிழர்கள் பூரண விடுதலை பெறும் நோக்கில் சமரசம் அற்று தனது உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் கொடுத்து ,வாழ் நாள் முழுவதும் போராடிய ஒரு மாமனிதனை ,தேவன் ஆக்கி 'பப்பாவில்' ஏற்றிய துதிபாடிகள் இன்று அட்டைகளைப் போலக் களர ஆரம்பித்துவிட்டனர்.இந்த சந்தர்ப்பவாதிகள் இதற்குக் கறுப்பு,வெள்ளை,சாம்பல் என்று நியாயாம் வேறு கற்பிக்கின்றனர்.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

தலைவன் என்பதும் முன்னணிப் போராட்டச் சக்தி என்பதும் போராட்ட அரசியலைக் குவிமையப்படுதுவதற்கான யுக்தியாக அன்றி அதை ஒரு தனிமனித வழிபாடாக மாற்றிய இந்த துதிபாடும் கூட்டத்திடம் 'அரசியலையும்', 'பண்பாட்டையும்' ஒப்படைததற்கான பலாபலனை புலிகளின் தலமை நன்கே அறுவடை செய்கின்றது. அரசியற் தெளிவு என்பது இயக்கத்துக்குள்ளும், மக்களின் மத்தியிலும் வளர்க்கப்படாதாதன் பலாபலன்கள் இவை.அரசியற் தெளிவு அற்ற இந்த 'தமிழ் நிலப்பிரபுத்துவ சைவவேளாளத்தின் ' எச்ச சொச்சங்கள் தமது அதிகாரச்சார்பு அரசியலை இனி மெல்ல மெல்ல அரங்கேற்றும்.

தமிழர் போரட்டாமானாது இந்திய உபகண்ட மேலாதிக்க அரசியலை உடைக்கும் அதே வேளை பாரம்பரியமான ஆதிக்கச் சக்திகளின் பிடியையும் தளர்த்தும் போதே பூரணமான விடுதலையை அடைய முடியும்.பல்லாயிரம் தமிழரைப் பலி எடுத்த அதே இந்திய மேலாதிக்க சக்திகளிடம் சமரசம் செய்வதன் மூலம் விடுதலை என்பது சாத்தியம் எனக் கனவு காணுபவர்கள் அடிப்படையான நலன் சார் முரண் ஒன்றைக் காணத் தவறி விடுகின்றனர்.ஈழ விடுதலைப் போராட்டம் என்பது இந்திய உப கண்டத்தில் விடுதலைக்காகப் போராடும் இன அடையாள சக்திகளுக்கு ஒரு முன் உதாரணமாகப் போய்விடும் என்பதையும்,தேசிய இனங்களின் விடுதலை என்பது இந்திய மேலாதிக்க வர்க்கத்தின் இருப்பை இல்லாது செய்து விடும் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகள்.இதனை வேறு எவரும் கூற வில்லை இந்திய ஆளும் வர்கத்தின் தூதுவராக வன்னி சென்ற ரவி சுந்தரலிங்கம் அவர்கள் தேசம். நெற்றில் மறை பொருளாகாக் கூறி உள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் நடை பெற்ற காலத்தில் ரோவினால் கூறப்பட்ட சில செய்திகளுடன் ரவி சுந்தரலிங்கம் ,வன்னி சென்று பொட்டம்மானைச் சந்தித்தார்.அதில் சிறிலங்கா வழங்கும் அதிகாரப் பரவலாக்கலையும்,பன்முக அரசியலையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்யும் படியும் இல்லாவிட்டால் அழித்து ஒழிக்கப்படுவீர்கள் என்றும் கூறப்பட்டது.இங்கே பன்முக அரசியல் என்பது ,தமிழ் நாட்டுப் பாணியிலான ஓட்டுப் பொறுக்கி பல கட்சி அரசியல் என்பதுவும் இதில் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு அமைவாக சுய நிர்ணய அடிப்படையிலான அரசியல் என்பது இயங்க முடியாது என்பதும் வெளிப்படை.பொட்டம்மான் அதனைச் சிரித்தபடியே கேட்டுக் கொண்டாராம்.

புலிகள் , பாரிய இராணுவப் பின் அடைவைச் சந்தித்துக் கொண்ட பொழுதில் , தலையிடுவோம் என்று அவர்களை நம்பிக்கை கொ(ல்ல)ள்ள வைத்து ,முள்ளிவாய்க்காலில் குவிய வைத்து ஈற்றில் அழித்த சக்தி இந்தியாவே.தமிழ் ஈழ மக்களை மிகுந்த நெருக்கடியில் தள்ளி அதன் மூலம் போரட்டச் சக்திகளுக்கும் மக்களிற்கும் இடையேயான உறவை நெருக்கடிக்குள்ளாக்கி , மக்களைப் போராட்டத்திலும் இருந்து அன்னியப்பட வைத்து பல வழிகளில் போராட்டத்தை மழுங்கடித்த சக்தி இந்தியாவே.நடந்த சம்பவங்களை மீட்டிப் பார்த்தால் இது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.இந்தியாவின் கபடத் தனதிற்கு எதிராக ஒரு காலத்தில் போர் செய்த, பிரபாகரனை நம்ப வைத்த சக்தி எது என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது.முப்பது வருட காலாமாக போராட்டத்தை வழி நடாத்திய ஒருவருக்கு இந்தச் சதி துலங்கவில்லை என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது.எல்லா மனிதர்களும் தவறுகளை விட முடியும், ஆனால் தனது இருப்பை இல்லாது செய்யும் ஒன்றிற்காக இந்திய ஆளும் வர்க்கம் சமரசம் செய்யும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் எதிர்பார்க்கப்பட முடியாத விடயம்.மேற்குலகின் அழுத்தம் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பி உள்ளார் போல் உள்ளது.மேற்குலகம் மிகப் பலவீனமான ஒரு நிலையில் இன்று இருப்பதைக் கணிக்கத் தவறி இருக்கலாம்.எல்லாம் நடந்து முடிந்த பின் 'ஆய்வு' செய்வது என்பது மிக இலகுவான காரியம் என்பதை அறிவேன்.அதற்காக ஆய்வு செய்யாமால் நாம் எமது அடுத்த அடியை எடுத்து வைக்கவும் முடியாது.

இந்தப் பின் புலத்தில் திரு.பத்மநாதன் அவர்களின், இந்தியா அன்றி வேறு எவரும் எமக்கு அருள் பாலித்திட முடியாது என்னும் அறிக்கை எதைச் சொல்கிறது என்பது புரியவில்லை.ரவி சுந்தரலிங்கம் எழுதியதைப் போல் இந்தியாவின் கவனம் இனி சிங்களப் பேரினவாதத்தின் மேற் திரும்பும் எனில் அதனைப் பாவிக்கும் ஒரு தற்காலிகமான தந்திரோபாய நிலைப்பாடு இதுவா அல்லது இந்தியாவுடன் சமரசம் செய்து, தமிழ் நாட்டுப் பாணியிலான அடிமையாக இருக்கும் ,அதாவது பிச்சை எடுக்கும் சுதந்திரத்திற்கான முதற் படியா என்றும் தெரியவில்லை.பிச்சை எடுக்கும் சுதந்திரமும், தமிழர் சுயாட்சிக்கான சுய நிர்ணயம் என்பதுவும் ஒரு நேர்கோட்டின் எதிர் எதிர் முனைகள்.ஒரு முனையை நோக்கிப் பயணிப்பவர் மற்ற முனையை அடைய முடியாது, அதில் இருந்தும் வெகு தூரத்திற்கே செல்வர்.தமிழ் நாடும் கலைஞரும் திமுகவும் எமக்கு முன் இருக்கும் மிகக் கிட்டிய உதாரணங்கள்.

ஈழத்தமிழரின் விடுதலை என்பது இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போரின் ஒரு முனை,இதனை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாகவே புரிந்து அதற்கேற்ற வகையில் காலம் காலமாகச் செயற்பட்டு வந்திருக்கிறது.இந்த முரணைப் புரிந்து கொண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தை உச்சிக்கொண்டு நாம் விடுதலை பெறலாம் என்று நினைப்பது சிறு பிள்ளைத் தனமானாது என்பதை அது மீண்டும் மீண்டும் எமக்கு நிரூபித்துள்ளது.முள்ளிவாய்க

.இனி உயிர் எழும் பிரபாகரனாவது தமிழரின் சுய நிர்ணயம் என்பது பிச்சை எடுப்பதற்கான சுதந்திரம் அல்ல தமிழரின் பூரண அரசியல் விடுதலைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து, போராட்டத்தை அரசியற் தெளிவுள்ள பாதையில் வழி நாடத்தட்டும்.இந்திய ஆளும் வர்க்கத்திற்க்கு எதிரான மணிப்பூரிகளுடனும், நாகலாந்து மக்களிடனும்,காஸ்மிரீகளிடனமு

Edited by Jil

இவர்களின் போராட்டத்தை இந்திய ஆளும்வர்க்கம் எமது போராட்டத்தை அழித்தது போல அழித்திவிட்டது,பிறகு எப்படி அவர்கள் உயிர்தெழுவது,நாங்கள் உயிர்தெழுத்து அவர்களுடன் இணைந்து போராடுவது?

மேலும் நீங்கள் சைவ வேளாள தமிழ் மரபு போராட்டம் என்று எதை கூறுகின்றீர்கள்?அப்படியாயின் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம்?

சைவ வேளாள தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர் என நினைப்பு. ஆனால் தற்போது இவை தேவைதானா? இந்த் அலசல் எமது இருப்பை இல்லாமல் செய்து விடும்.

இன்னும் பலர் உள்ளனர். இக்கட்டுரை மேலும் தமிழ் மக்களிடையே பிளவினை உரு வாக்கும் என எனது மனம் அஞ்சுகிறது. புலம் பெயர் மக்களையும் பிரிக்க முனைகிறது.

இவ்வளவு ப்ரிவினையை வளர்க்கும் இந்த கட்டுரையாளரும் சரி , சிங்கள அரசும் சரி, இந்திய அரசும் சரி , ஏன் தமிழ் மக்கள் பிரிந்து போய் தனித்து வாழ அனுமதிக்க மறுக்கிறீர்கள்.

தற்போது உள்ள 300000 மக்களை பற்றி எழுத மறுக்கிறீர்கள்- ஊடக விபச்சாரிகளே

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் காலத்தில் கிடைக்காத தமிழீழம் இனிக் கனவில் கூடக் கிடைக்காது. இலங்கையில் இருப்பவர்கள் இலங்கையர்களாக இருப்பர். புலம்பெயர் நாடுகளில் இருப்போர் புலம்பெயர் நாட்டவராக இருப்பர். புரட்சிகளும், புடுங்குப்பாடுகளும் இனி இணைய ஊடகங்களில் மட்டுமே சாத்தியமாகும். மற்றும்படி ஒன்றுகூடல்களில் கலந்துகொண்டு தமிழராக இருக்கிறோம் என்று நம்பிக்கொள்ளலாம்.. இல்லாவிடில் அரசியல் கலந்துரையாடல்களில் பங்கேற்று பழைய சங்கதிகளை இரைமீட்டுக் கொள்ளலாம். இப்படிப் பொழுதுபோக்க பல வழிகள் உள்ளன.

இப்படி நாங்கள் புலம்பெயர் நாடுகளில் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, தாயகத்தில் மக்கள் முள்ளுக் கம்பிகளுக்குப் பின்னால் அவதிப் பட்டுக்கொண்டிருப்பார்கள். எஞ்சியிருந்த தமிழ் தேசிய உணர்வாளர்களும், போராளிகளும் சத்தமின்றி காணாமல் போகின்றார்கள். எனவே பட்டுவேட்டிக் கனவுகளை விட்டுவிட்டு கோமணத்தோடாவது வாழ வழியைப் பார்க்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: எனக்கு கடுப்பேத்திறாங்கப்பா !

எல்லாம் எப்பவோ முடிஞ்ச காரியம்........... :icon_mrgreen:

  • தொடங்கியவர்

இவர்களின் போராட்டத்தை இந்திய ஆளும்வர்க்கம் எமது போராட்டத்தை அழித்தது போல அழித்திவிட்டது,பிறகு எப்படி அவர்கள் உயிர்தெழுவது,நாங்கள் உயிர்தெழுத்து அவர்களுடன் இணைந்து போராடுவது?

அவர்கள் எல்லோரும் போராடிக் கொண்டு தான் இருகிறார்கள்.மணிப்பூரில் இப்போதும் போராடிக் கொண்டு தான் இருகிறார்கள்.இவை எங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.மணிப்பூரில் ஒரு பெண் கடந்த ஆறு வருடங்களாக உணவுண்ணாமல் இந்தியச் சிறையில் இருக்கிறார்.அவருக்கு வலிந்து மூக்கினூடாக உணவை ஏற்றிவருகிறது இந்திய அரசு.புலத்தில் நடந்த போராட்டங்களில் உற்றுப் பாருங்கள் யார் யார் தன்னிச்சையாக எமது போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என்று.சீக்கியரும் காஸ்மிரிகளும் ஸ்கொட்டிஸ் காரரும் வெல்ஸ் இனத்தவரும்.ஏன் இன ஒடுக்குறைக்கு ஆளான ஒரு இனதுக்குத் தான் இன்னொரு இனத்தின் வலி தெரியும்.இவ்வாறான நேச சக்திகளை விட்டு விட்டு நாம் இன்னும் ஒடுக்குபவனையே எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம்.

மேலும் நீங்கள் சைவ வேளாள தமிழ் மரபு போராட்டம் என்று எதை கூறுகின்றீர்கள்?அப்படியாயின் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம்?

மூன்று லட்சம் மக்கள் சிறையில் வாடும் போது நல்லூரில் கோலாகலமாக திருவிழா நடக்கிறது.புலத்தில் பல லட்சம் செலவு செய்து தேர்த் திருவிழா இதனை வேறு எவ்வாறு நீங்கள் விளக்குவீர்கள்? அண்டன் பாலசிங்கம் என்ன சாதி என்னும் ஆராய்வில் இருந்து அல்ல சைவ வேளாள மரபு வருகிறது, ஒவ்வொருவரும் பின் பற்றும் மரபு வழிச் சிந்தனையே வேளாள மரபு எனப்படுகிறது.பிறப்பால் அன்று சிந்தனைகளாலையே இத்தகைய மரபுகள் காவப்படுகின்றன.அந்த சிந்தனைகளில் செயற்பாடுகளில் மாற்றம் வேண்டும் என்று கோருவதே இவற்றை நிராகரிக்க கோருவதன் அடிப்படை.

அந்த மூன்று லட்ச்ம் மக்களும் யாருக்காக இவ்வளவு துன்பத்தையும் துயரையும் தாங்கினர்? தமிழர்களான உங்களிடம் கழிவிரக்கம் கூட அற்று விட்டதா?

இரக்கம் அற்ற இத்தகைய மரபுகளே தமிழரின் ஒற்றுமைக்குக் குந்தகமாக இருக்கின்றன.

  • தொடங்கியவர்

சைவ வேளாள தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர் என நினைப்பு. ஆனால் தற்போது இவை தேவைதானா? இந்த் அலசல் எமது இருப்பை இல்லாமல் செய்து விடும்.

இன்னும் பலர் உள்ளனர். இக்கட்டுரை மேலும் தமிழ் மக்களிடையே பிளவினை உரு வாக்கும் என எனது மனம் அஞ்சுகிறது. புலம் பெயர் மக்களையும் பிரிக்க முனைகிறது.

இவ்வளவு ப்ரிவினையை வளர்க்கும் இந்த கட்டுரையாளரும் சரி , சிங்கள அரசும் சரி, இந்திய அரசும் சரி , ஏன் தமிழ் மக்கள் பிரிந்து போய் தனித்து வாழ அனுமதிக்க மறுக்கிறீர்கள்.

தற்போது உள்ள 300000 மக்களை பற்றி எழுத மறுக்கிறீர்கள்- ஊடக விபச்சாரிகளே

இருக்கின்ற பிளவுகளைச் சுட்டிக் காட்டுவது அவை இல்லாமல் போக வேண்டும் என்பதற்காக.எமது இருப்பே கேள்விக் குறி ஆகியது எமக்குள் உள்ள பிளவுகளால்.இவற்றை மூடி மறைத்ததே இத்தகைய பிரிவுகளைப் பாதுகாத்தது.இவை உரையாடாப்படுவது இப்போது மிக அவசியம்.இல்லாது விடின் தமிழரென்னும் அடையாளம் அற்று விடும்.எல்லாப் பிரிவினரையும் உள் அடக்கியதான போராட்டமே பலம் மிக்கதாக இருக்கும்.

மூன்று லட்சம் மக்கள் சிறையில் வாடும் பொழுது யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் புலத்திலும் என்ன நடக்கிறது என்று பாருங்கள் நண்பரே.சுற்றி இருப்போரில் எத்தினை பேர் இது சம்பந்தமாக செயற்படுகிறார்கள்? புலிகளோட போன உந்த வன்னிச் சனதுக்கு உது தான் வேணும் என்று சொல்கிறார்கள்.இனி எல்லாம் முடிந்து விட்டுது இனி ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்கிறார்கள்.அப்படியாயின் அந்த மூன்று லட்சம் சனம் என்ன செய்வது? தமிழீழக் கனவில் உயிர் நீத்த இருபத்தையாயிரம் ஆன்மாக்களின் தற்கொடை என்ன ஆவாது?

நாம் எல்லோரும் தான் தொடர்ந்து எல்லா வழிகளிலும் போராட வேண்டும்.அதற்கு எமக்கு முதலில் போராட்டம் பற்றிய அரசியற் தெளிவு வேண்டும்.

  • தொடங்கியவர்

மேற்குறித்த கட்டுரை எழுதக் காரணமான கட்டுரை கீழ் இணைக்கப்படுகிறது.

கட்டுரை எழுதியவர் யார் என்பது சொல்லப்படவில்லை ஆனால் அவர் யார் என்பதை எல்லாராலும் ஊகிக்க முடியும்.

பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

--------------------------------------------------------------------------------

தமிழ்மணம் பரிந்துரை : 1/3

Pathivu Toolbar ©2009thamizmanam.com

இலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக்கடித்து

மாட்டைக்கடித்து

கடைசியில்

எமக்கென்று இருந்த ஒருவன்

அவனையும் கடித்து

அவற்றை முடிவுகள் எப்போதும் தீர்க்க தரிசனமானவை

பல நூற்றாண்டுகளுக்கு பின் நடக்கப்போவதை அறியும் ஆற்றலுள்ளவர்

எனவே அவர் எடுத்த முடிவு 100வீதம் சரியானதே

இந்த கேடுகெட்ட இனத்திற்காக இனியும் போராடி........???

இப்போது இந்தக்கட்டுரை இலங்கையின் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அகதிமுகாமின் தறப்பாளின் கீழிருந்து எழுதப்படுகிறது

அகதி முகாமிலிருந்து இந்த கட்டுரையை ஒருவர் எழுதியிருப்பார் எனின் அவர் வன்னியில் பன்முக அரசியல் இருந்த பாதிப்பிலதான் எழுதியிருக்க முடியும்,

சாதரண ஒருவரால் இப்படியான கட்டுரை எழுதமுடியாது,இது நிச்சமாக புலத்தில அரசியல் ,உளவியல் போன்ற துறைகளில் பான்டியத்துவம் பெற்ற ஒருவரால் எழுத பட்டுள்ளது

கட்டுரை நல்லவிடயங்களை சொல்லி சென்றுள்ளது

சுமார் கால்நூhற்றாண்டுக்கும் மேலாக ஏன் அதற்கு முன்பிருந்த தமிழர்கள் ஏதோவொரு பதுங்கு குழிக்குள்தான் வசித்துவருகிறார்கள். ஒன்றில் பண்பாட்டுப் பதுங்குகுழி அல்லது சாதிப் பதுங்குகுழி அல்லது பிரதேசவாத மற்றும் ஊர்வாதப் பதுங்குகுழி. இவற்றுடன் பிரபாகரன் கொண்டுவந்த இராணுவப் பதுங்குகுழி.

எனவே, தமிழர்களை முதலில் பதுங்குகுழிகளுக்குள் இருந்து வெளியே எடுக்கவேண்டும்

.

பல பதுங்கு குழிகளைப்பற்றி கூறிய கட்டுரை ,இப்பதுங்கு குழியை வெட்ட தூண்டிய இனவாத மண்வெட்டியை பற்றி சொல்லாமை?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக் ஷ முந்தைய சிங்கள மன்னர்கள்போல் இலங்கையை சிங்களவர்களின் நாடாக மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அவருக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் கறுப்பு - வெள்ளை அரசியல் நன்றாக வேலை செய்கின்றது. இராணுவ ரீதியாக தோல்வியடைந்திருக்கும் தமிழர்களுக்கு எந்த நிறமும் வேலை செய்யாது. இதற்குள் சாம்பல் அரசியல் செய்து சிங்களர்களாக மாறலாமே தவிர வேறெதனையும் பெற்றுக்கொள்ளா முடியாது.

பிரபாகரன் மீது எல்லாத் தவறுகளையும் சுமத்திவிட்டு தப்பிவாழ சாம்பல் கட்டுரை எழுதுவதுதான் கட்டுரையாளருக்கு இருக்கும் தெரிவு போலுள்ளது. முள்ளிவாய்க்காலில் இருந்து முள்ளுக் கம்பிக்களுக்குப் பின்னால் போய் இருந்தால் நாங்களும் இதைத்தான் செய்திருப்போம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதி முகாமிலிருந்து இந்த கட்டுரையை ஒருவர் எழுதியிருப்பார் எனின் அவர் வன்னியில் பன்முக அரசியல் இருந்த பாதிப்பிலதான் எழுதியிருக்க முடியும்,

சாதரண ஒருவரால் இப்படியான கட்டுரை எழுதமுடியாது,இது நிச்சமாக புலத்தில அரசியல் ,உளவியல் போன்ற துறைகளில் பான்டியத்துவம் பெற்ற ஒருவரால் எழுத பட்டுள்ளது

நீங்கள் வன்னி ஈழநாதத்தில் வந்த அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் படித்ததில்லைப்போலும்.

இந்த சொல்லாடல்களே.. இது அவர்தான் என்பதை தெளிவாகச்சொல்கிறது. நிலாந்தன்.

புலிக்கெதிரான தமிழ் தளங்களில் மட்டும்தான் இந்த சாதி அடிப்படை கருத்துக்கள் தாங்கிய 'படைப்புகள்' வெளிவருகின்ரனா.... ஏன் இந்த மாற்றுக்கருத்தாளர்கள் சாதியை விட மறுக்கிறார்கள்....... ?

பேசாமல் இவர்களை 'மாற்றான்சாதி' என்று பெயர் சூட்டி...... சிட்டியை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோமா?

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் பிரபாகரன் காலத்தில் கிடைக்காத தமிழீழம் இனிக் கனவில் கூடக் கிடைக்காது. இலங்கையில் இருப்பவர்கள் இலங்கையர்களாக இருப்பர். புலம்பெயர் நாடுகளில் இருப்போர் புலம்பெயர் நாட்டவராக இருப்பர். புரட்சிகளும், புடுங்குப்பாடுகளும் இனி இணைய ஊடகங்களில் மட்டுமே சாத்தியமாகும். மற்றும்படி ஒன்றுகூடல்களில் கலந்துகொண்டு தமிழராக இருக்கிறோம் என்று நம்பிக்கொள்ளலாம்.. இல்லாவிடில் அரசியல் கலந்துரையாடல்களில் பங்கேற்று பழைய சங்கதிகளை இரைமீட்டுக் கொள்ளலாம். இப்படிப் பொழுதுபோக்க பல வழிகள் உள்ளன.

இப்படி நாங்கள் புலம்பெயர் நாடுகளில் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, தாயகத்தில் மக்கள் முள்ளுக் கம்பிகளுக்குப் பின்னால் அவதிப் பட்டுக்கொண்டிருப்பார்கள். எஞ்சியிருந்த தமிழ் தேசிய உணர்வாளர்களும், போராளிகளும் சத்தமின்றி காணாமல் போகின்றார்கள். எனவே பட்டுவேட்டிக் கனவுகளை விட்டுவிட்டு கோமணத்தோடாவது வாழ வழியைப் பார்க்கவேண்டும்!

கிருபனின் கருத்துக்களே நீண்ட நாட்களாக எனது அடிமனதைவருடிய சிந்தனை.

எனினும் நான் என்ற அகங்காரம் இன்னும் என்னிடத்தில் இருக்கின்றது. :icon_mrgreen:

கூட்டாளி ஒருத்தனுன்ட அபிப்பிராயம் என்னவெண்டா... சாதி அடிப்படையில் அரசியல்..... இந்திய அரசியல் மாதிரி அரசியல் செய்வதுதான் நோக்கமாம்.. காசும்பாக்கலாமாம் ஒண்டு சேர விடாமலும் வைக்கலாமாம்... அதுக்கு தனி மானியம் கிடைக்குமாம்....

மாற்றான்சாதி அண்ணமாரே என்னையும் சேருங்கோவன்.... ( வெறி கூடிட்டோ :icon_mrgreen: )

Edited by Panangkai

நீங்கள் வன்னி ஈழநாதத்தில் வந்த அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் படித்ததில்லைப்போலும்.

இந்த சொல்லாடல்களே.. இது அவர்தான் என்பதை தெளிவாகச்சொல்கிறது. நிலாந்தன்.

அப்ப அவரும் கட்சி மாறிவிட்டரோ?நான் அவரின் கட்டுரை ஒண்றும் படிக்கவில்லை,புலி இருந்தால் புலி புலி,இல்லாவிட்டால் பன்முக அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவரும் கட்சி மாறிவிட்டரோ?நான் அவரின் கட்டுரை ஒண்றும் படிக்கவில்லை,புலி இருந்தால் புலி புலி,இல்லாவிட்டால் பன்முக அரசியல்

முள்ளிவாய்க்கால் வரை சென்று தற்போது அவைதிப்படும் 3 லட்சம் மக்களில் பலரும் இப்படித்தான் மாறியிருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் வரை சென்று தற்போது அவைதிப்படும் 3 லட்சம் மக்களில் பலரும் இப்படித்தான் மாறியிருக்கக்கூடும்.

இருக்கலாம். ஆனால் அது துரோகம் அல்ல.. கோபம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வன்னி ஈழநாதத்தில் வந்த அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் படித்ததில்லைப்போலும்.

இந்த சொல்லாடல்களே.. இது அவர்தான் என்பதை தெளிவாகச்சொல்கிறது. நிலாந்தன்.

தேசியத்தலைவரை அரசியல் ராசதந்திரி, தீர்க்கதரிசி என்று எழுதிய நிலாந்தனையா சொல்கின்றீர்கள்... இந்தக் கட்டுரையை எழுத அப்போது தோன்றவில்லை போல... அண்டிப் பிழைப்பதற்கு பிரபாகரன் பின்னரான அரசியலைத் தேடுகின்றாரோ?? அன்று, தலைவர் புகழ்பாடி வயிற்றுப்பிழைப்புச் செய்தார். இன்று, பலவந்தமாகவோ, அல்லது வேறு வழியாலோ சிறிலங்கா அரசின் கடைக்கண்ணைப் பார்க்க வைக்க முயல்கின்றார்... எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும்.

பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

அப்படி ஒன்று நிச்சயமாக இல்லை.

தமிழன் என்பவன் உண்மையாகில் அவன் ஒரு இனமாகில் மட்டுமே அவனுக்கான அரசியல் உண்டு.

அது பொய்யும் கற்பனையும் ஆகும்.

தமிழன் என்று புறநிலை உச்சரிப்புக்குரியவன் இந்துவாகவும் கிறிஸ்த்தவனாகவும் இஸ்லாமியனாகவும் பல சாதிகளாகவும் பல தட்டு வர்க்கங்கள் ஆகவும் புத்திஜீவி ஆகவுமே அகநிலையில் இருக்கின்றான். அவன் தமிழனாக என்றும் இருந்ததில்லை. அதற்கான அவசியத்தை உணர்ந்ததும் இல்லை. மேலும் யாழ்ப்பாணத்தானாகவும் மட்டக்களப்பான் ஆகவும் வன்னியன் ஆகவும் தீவானாகவும் இருக்கின்றான். என்னும் புதிய வடிவமாக கனேடியனாகவும் ஜேர்மனியனாகவும் லண்டன் காரனாகவும் பிரான்ஸ்காரனாகவும் இருக்கின்றான். இவ்வாறு பல நாட்டுக்காரனாக மாறியிருப்பவனும் தான் பிறந்து வளர்ந்த ஊர்களின் பெயரில் சங்கம் அமைத்து ஒன்றியம் அமைத்து இருக்;கின்றான். இந்தக் கூறுகளுக்குள்ளாகவே அவனது எல்லை முடிகின்றது தவிர இனம் என்ற பொது அலகில் அவன் என்றும் வலிமை பெறப்போவதில்லை. இந்தக் கூறுகளுக்குள்ளாகவே அதிகாரத்தை தேடுதலும் ஆதிக்கத்தை நிலை நிறுத்துதலும் தனக்கான மேலாண்மைப் பசிக்கு இரை தேடுதலும் என அனைத்தும் நிகழ்கின்றது. இது காலாகாலம் பழக்கத்தில் இருந்து பொதுவான இயல்பாகிவிட்டது.

மேற்கண்டவற்றுக்குள் தான் எப்போதும் அரசியல் அடங்கும். தவிர பிரபாகரன் முன்னெடுத்தது மேற்கண்ட பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட தமிழனுக்கான அரசியல் இராணுவப் போராட்டம். துர்ரதிஸ்டவசமாக அவர் மேற்கண்ட பிரிவுகளுக்குள் இருந்து வெளியில் வர முடியவில்லை. மக்களையும் வெளியில் தமிழனாக மீட்டு வர முடியவில்லை. இதுவே அவரின் தோல்வி தவிர சிங்களவன் தோற்கடித்ததோ அல்லது ஏனைய நாடுகள் தோற்கடித்ததோ இரண்டாம் பட்சமானது. பிரபாகரனை விமர்சிப்பதற்கு தகுதியுடையதாய் எவரும் இருக்க முடியாது. மாறாக எம்மை நாமே விமர்சிக்க வேண்டிய தேவையையே பிரபாகரன் முடிவு எடுத்துரைக்கின்றது.

உலக ஓட்டத்தை படித்து அரசியல் பொருளியல் அவதானித்து மாக்சியம் காந்தியம் மாவோயிசம் என்னும் இடது வலது சாரி சித்தாந்தங்கள் படித்து எதைச் செய்தாலும் மேற்கண்ட பிழவுகளுக்குள்ளாகவே ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டிருக்கும்.

தமிழன் என்ற எண்ணமும் சிந்தனையும் இன அடிப்படையில் முதன்மைப்படுத்தலும் என்பது ஆதிக்கவாதிகளின் அடயாள நிலை நிறுத்தலில் இருந்து தோற்றம் பெறுகின்றது. அதற்கான கருவிகளில் ஒன்றாக தோற்றம் பெறுகின்றது. பின்னர் பல வரலாறுகள் உதாரணமாக சேர சோழ பாண்டியன் காலங்கள் இவற்றுடன் இணைந்து கொள்கின்றது. இந்த மூவரும் தமிழர்கள் தமக்குள் படையெடுத்து ஆளையாய் மிதித்து மூக்கறுத்து முலையறுத்து கடைசியில் ஒரு மண்ணும் இல்லாமல் போனான்கள். இவங்கட இந்த வரலாற்றை பல பரணிகளாகவும் என்னும் பலவாகவும் எழுதி வைத்துள்ளான்கள். அன்று மூன்று பிரிவுகள் இன்று முப்பத்தி ரண்டு இயக்கங்களாக தோற்றம் பெற்றது. இனி டக்கம்மான் கருணா பிள்ளையான இவ்வாறானவைகளும் என்னும் பலவும் ஊர்கள் ஒன்றியங்கள் பிறநாடுகள் என முன்னூறு பிரிவுகளாக இது விரிவாக்கம் பெற உள்ளது. இது தான் பிரபாகரனுக்கு பின்னரான அரசியல்.

மொழியின் தொன்மையை வைத்துப்பார்க்கும் போது நாம் ஒரு விருட்ச்சமாக வேருன்றி இருந்த இனம் என்றே எனது அறிவுக்கு உணர முடிகின்றது. கொய்யா மரத்தில் குருவிச்சை போல் பல ஒட்டுண்ணிகள் இந்த விருட்சத்தில் தொற்றி இன்று இந்த விருட்ச்சம் ஒரு குருவிச்சையாக மாறிவிட்டது. வலிமை மிக்க தேசிய இனங்களில் தொற்றி ஒட்டுண்ணி போல் வாழும் நிலைக்கு மாறிவிட்டோம். முன்னர் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த பல்வேறு தேசிய இனங்களில் ஒட்டுண்ணியாக தொற்றிய ஆரிய இனம் இன்று அதிகாரம் மிக்க ஆழும் வர்க்கமாக உள்ளது.

--------------------------------------------------------

பிரபாகரன் எல்லாவற்றையுமே பிரித்து வைத்திருந்தார். அவர் இலங்கைத் தீவை மட்டும் பிரிக்க முயலவில்லை. முதலில் அவர் தமிழ் அறிவைத் தமிழ் வீரத்திலிருந்து பிரித்தார். பின்னர் சிங்கள முற்போக்குச் சக்திகளை தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் அவர் தமிழர்களை தியாகி; துரோகி; மாற்று இயக்கம் என்று கூறுபோட்டுப் பிரித்தார். பின்னர் முஸ்லிம்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் கிழக்குத் தமிழர்களை வடக்கிலிருந்து பிரித்தார். இவை தவிர ரஜீவ் காந்தியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவைத் தமிழர்களிமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம் கட்டம் ஈழப்போருக்கான புறநிலமைகளை உருவாக்கியதன் மூலம் மேற்கு நாடுகளை தன்னிடமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெரும்பாலாலனவர்களிடமிருந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.