Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒல்லாந்து தேசத்தில்-நாடு காத்த சிறுவன்

Featured Replies

அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான்

.வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று.

இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன்.

அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்டின் வட பகுதியில் உள்ள புகழ் பெற்ற பீச்சுக்கு அண்மையில் அமைந்துள்ளது.இங்கு வெளிநாடுகளில் இருந்து எல்லாம் கூட பெருவாரியாக உல்லாச பிரயாணிகள் வருவதுண்டு.

இந்த பீச்சுகளில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக படுத்து சூரிய குளிப்பு செய்வதுண்டு. அதுவும் நம்மவர்கள் அண்மையில் தான் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அத்துடன் பகலில் நிர்வாணம் என்றதை நேரில் காணதாவர்கள். ஏன் இரவில் கூட காணாதாவர்கள்..காண கூச்சமாக இருந்தவர்கள்..அவர்களுக்கு எந்த மனத்தடை சமூக தடை இல்லாமால் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தமையால் கூட்டம் கூட்டமாக அந்த கடற்க்கரைக்கு புளு பிலிம் ஓசியில் பார்க்க கிடைத்த மாதிரி இளையவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை திரிய தொடங்கி விட்டார்கள்.

அதற்க்கு தலைமை தாங்கி வழி நடத்துபவன் உந்த மோகன் தான் . ..உல்லாச பிரயாணிகளுக்கு இடையூறாகவும் அசெளகரியமாகவும் இருக்கு என நகர சபையினருக்கு செய்தி போக பின்.அகதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது

.அதனால் உவன் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்து ஊர் உலகம் காட்டி செய்தி சொன்னால் எப்பவும் எச்சரிக்கையாகவே இருப்பதுண்டு.

என்றாலும் அவன் கூறிய வார்த்தைகள் ....அவன் சொல்வதை திரும்பி பார்க்க வைத்தன.

மச்சான்..நாடு காத்த சிறுவனின் தூபியை பார்த்தேன் கடற்க்கரையிலை வா காட்டுறன் என்றான்.

நாடு காத்த சிறுவன் பற்றி அந்த காலத்தில் எங்களுடைய நாலாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் போட்டு கதை சொல்லி இருப்பார்கள்..

இது தான் அந்த கதை

ஒல்லாந்து(ஹாலந்து) தேசம் கடல் மட்டத்திற்க்கு கீழே அமைந்த தேசம்.அதனால் நாடு சூழ கடல் தண்ணீர் உள்ளை போகமால் இருப்பதற்கு அணை கட்டி இருக்கிறது. ஒரு முறை கடற்க்கரை ஓரமாக ஒரு சிறுவன் நடந்து சென்று இருக்கும் போது அணையில் இருந்து ஒரு துவார வெடிப்பூனூடக கடல் தண்ணீர் உள் புகுவதை கண்டான்,.அந்த துவாரத்தை தன் கையால் பொத்தி கொண்டு அந்த குளிரிலும் இரவு முழுக்க இருந்தானாம் .விடிய ஊரவர்கள் கண்டு ஆவன செய்தார்களாம்.அவன் அப்படி தண்ணீர் வடிவதை தடுக்காவிடில் நாடு அழிந்திருக்குமாம்..அதனால் நாடு காத்த சிறுவன் என்று சொல்லி கெளரவித்தார்களாம்.

சின்ன வயதில் கேட்ட கதை என்றாலும் உருவக கதை என்று தான் என்னுள் இருந்தது.என்றாலும் நாடும் இடமும் கதையும் இவ்வளவு அண்மையில் இருக்கும் போது சரி பார்ப்போமே என்று கிளம்பினேன்.

வெளியில் கார் தரிப்பிடத்தில் ..கார்களில் இருந்து இறங்குபவர்களும் கார்களில் ஏறுபவர்களுமாக இருந்தார்கள் ..இங்கு இந்த அகதி முகாமில் சிலர் சில நேரம் தான் இருப்பார்கள் .மற்ற நேரங்களில் ஒரு நாள் ஜெர்மனி மற்ற நாள் பெல்ஜியம் அடுத்த நாள் பாரிஸ் என்று வாழும் நாடோடிப் பிராணிகள் ...

அவர்களுக்கு நாடு கடக்க சரியான அனுமதி இல்லாவிடினும் அந்த அந்த நாடுகளின் எல்லை வேலிகளின் துளைகளை கண்டு அதனூடாக கள்ள வேலி பாய்ந்து இலகுவாக சென்று வருவதில் சூரர்கள்.இவர்களுடன் சில சமயங்களில் காரில் உந்த கள்ள வேலி கடந்து பெல்ஜியம் ஜெர்மன் என்று சென்று வந்திருக்கிறேன்...

அப்படி செல்லும் போது மற்ற பக்கத்தினால் ஏதோ நோக்கத்துக்காக எங்கோ சென்று கொண்டிருக்கின்ற பொலிஸ் காரை பார்க்கும் போது கூட எல்லாம் என்னைத்தான் பிடிக்க வாறான் என்று நினைத்து அடி வயித்தை கலக்கும்..

நம்மவர்கள் ஜரோப்பாவின் பெருநிலத்தில் கள்ள வேலி தாண்டி இலகுவாக போய் வந்தாலும் உந்த ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு செல்வது ஒரு போதும் வாய்ப்பாக இருக்கவில்லை. இஸ்லாமியர்கள் மதீனா மக்காவுக்கு ஒரு முறையாவாது போய்விடும் நினைப்பில் இருப்பது போல் இங்கு இருக்கும் பலருக்கு உந்த லண்டனுக்கு போற நினைப்பும் இருப்பதுண்டு

வாசலை தாண்டி றோட்டுக்கு இறங்கும் போது என்னை பெயர் சொல்லி அழைத்த மாதிரி ஒரு அசரீரி குரல் கேட்டது..

சுரேஸ் தான் ..அண்மையில் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்தது .அது கிடைத்த தாமதமே லண்டன் போய்ட்டு வந்திருக்கிக்கிறான் ....என்னை காண வந்திருக்கிறான்....எங்களுடைய திட்டத்தை மாற்றி கொண்டு அவன் நான் இவன் மோகனுமாக அந்த பரந்த பூந்தோட்டத்தத்திலுள்ள மூலையிலுள்ள ஒரு பாருக்குள் பிரவேசித்து கொண்டோம்...எங்கள் பிரவேசத்தை வரவேற்பது மாதிரி அங்கு இசை ஒலித்து கொண்டிருந்தது.பாரில் அவ்வளவு கூட்டமில்லை மூலையில் ஒரு இளம் ஜோடி ஒன்று ஜிகு ஜிகு மூட்டி கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் தள்ளி நடுத்தர வயது தாண்டிய ஜோடி ஒன்று பழைய முத்தங்களை நினைத்து கொண்டு புதிய முத்தங்களை சொரிந்து கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் செல்ல டச்சு கமக்காரர்களினால் இந்த பார் நிறைந்து விடும்

நாங்கள் எங்கள் மொழியை ராகத்துடன் கதைக்க கூடிய இடமாக பார்த்து மூலையான இடமாக தேர்ந்து எடுத்த கொண்டோம்

நான் தான் கதையை தொடக்கினேன்

என்ன மச்சான் ..லண்டன் போய் வந்திருக்கிறாய் இனிமேல் உனக்கு என்ன சேர் பட்டம் கிடைத்த மாதிரி தான் என்றேன்

ச்சாய்..என்னடா லண்டன் என்று அலுத்து கொண்டான்

அவனது அலுப்பை ஏமாற்றத்தை போல் ஒன்றை 70 களின் நடுப்பகுதியில் இலங்கையில் இருக்கும் போதே பெற்றிருக்கிறேன். எனது வகுப்பு தோழன் ஒருவன் பல்கலைகழக அனுமதி கிடைத்து அது தொடங்க இருக்கும் ஒரு வருட இடைவெளியில் லண்டன் சென்று வந்திருந்தான்...அவனிடம் கேட்ட போது அவன் சொன்னது நினைவில் வந்தது

ஒல்லாந்து (ஹாலந்து) நாட்டு சிறுவன் ஒருவன் (இது இன்னோரு சிறுவன்) லண்டன் தெருக்கள் எல்லாம் தங்கத்தால் செய்ய பட்டது என்று கற்பனை செய்து பின் போய் பார்த்து ஏமாந்த கதை முந்தி வாசித்திருக்கிறேன் .அதே மாதிரி தான் எனக்கு ஏற்பட்டது என்றான்

சுரேஸ் இரண்டாவது ஆட்டத்துக்கு வந்து விட்டான். நான் இன்னும் எனது முதலாவது ஆட்டத்தை முடிக்கவில்லை..எனக்கு முதலாவது கிளாஸ் உள் போகும் வரை எனது முகம் பல அஸ்ட கோண வடிவத்தில் இருக்கும்.ஏன்டா கஸ்டப்பட்டு இப்படி இவன் தண்ணி அடிக்கோணும் முன்னுக்கு இருப்பவர்களை யோசிக்க வைக்கும்.

சுரேஸ் அப்படி இல்லை நிதானமாக குடிப்பான் நிதானமாக கதைப்பான் ஏற ஏற சுவராசியமாக கதைப்பான் ..நானும் இரண்டாவது வந்து விட்டன் என்றால் குசியாகி விடுவேன் நிதானமாக குடிப்பேன். நான் கேள்வி கேள்வி மேல் கேட்டு கதையை பம்பல் ஆக்குவேன் அவனுடன் இப்படியான தருணத்தில் கதைப்பதில் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி அவனுக்கு நன்கு தெரியும்

.

அதனால் கதைக்க தொடங்கி விட்டான்..இனிமேல் லண்டன் புராணம் தான் என்று விளங்கி விட்டது ..இவன் மோகன் எங்களின் கதை பேச்சுகளில் அக்கறையின்றி கலை நயத்துடன் அங்கினை இங்கினை பிராக்கு பார்த்து கொண்டிருந்தான்.

லண்டனை விட நம்ம லண்டன் வாழ் தமிழர்களின் கதை சுவராசியமானது என்று தொடங்கினவன் நிற்பாட்டவே இல்லை.

வரவேற்பறையை கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வாடகைக்கு விட்டு விட்டு வருபவர்களை வரவேற்க்க காத்திருக்காதவர்கள்..இவர்கள்

.

இவர்களின் சிரிப்பை இவர்கள் தொலைத்து மறந்து நெடுநாளாகி விட்டது . இந்த நாட்டிலை இங்கு பல சமூகங்களுடன் பழகுகிறோம் புதியவைகளை பெற்று கொள்ளுகிறோம் ..ஏன் சிலர் இந்த நாட்டு மக்களுடன ஓன்று கலந்து காதல் செய்கிறார்கள் ,கலவி செய்கிறார்கள்,கலியாணம் செய்கிறார்கள் ,விவாகரத்து செய்கிறார்கள்..சில வேளை விவகாரப்பபடுகிறார்கள்...அவர்

சின்னக்குட்டி அண்ணை, அங்க இருந்து இஞ்சவந்து குடியேறி இருக்கும் எங்களை இன்னமும் கீழ்த்தரமாக மதிப்பீடு செய்யுற நிலமை இப்பவும் இருக்கிது. அதுவும்.. நாங்கள் அண்மையில செய்த போராட்டங்களோட கடுப்பு இன்னமும் அதிகரிச்சு இருக்கிது.

  • தொடங்கியவர்

சின்னக்குட்டி அண்ணை, அங்க இருந்து இஞ்சவந்து குடியேறி இருக்கும் எங்களை இன்னமும் கீழ்த்தரமாக மதிப்பீடு செய்யுற நிலமை இப்பவும் இருக்கிது. அதுவும்.. நாங்கள் அண்மையில செய்த போராட்டங்களோட கடுப்பு இன்னமும் அதிகரிச்சு இருக்கிது.

வணக்கம் மாப்பிளை ..பதிவை வாசித்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

சின்னக்குட்டி அண்ணை, அங்க இருந்து இஞ்சவந்து குடியேறி இருக்கும் எங்களை இன்னமும் கீழ்த்தரமாக மதிப்பீடு செய்யுற நிலமை இப்பவும் இருக்கிது. அதுவும்.. நாங்கள் அண்மையில செய்த போராட்டங்களோட கடுப்பு இன்னமும் அதிகரிச்சு இருக்கிது.

:lol: ஒபாமாவின்ட பரம்பரையையும் அப்படித்தான் பார்த்தவங்கள் இப்ப அவரின்ட கார் கதவை திறந்து சலூட் அடிக்கினம் எல்லாம் பல்காலாச்சாரத்தின்ட விளையாட்டு,50வருடத்திற்கு பிறகு உங்களுடைய பிள்ளை கனடா பிரதமர் ஆகலாம் யார் கண்டது, :)

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்பு உங்கள் கதை படித்ததில் மகிழ்ச்சி.......

.

இன்னும் சொல்லப் போனால் தேவை இல்லாத (rat race)எலி ஓட்ட வாழ்க்கையை ஒருவரை பார்த்து ஒருவர் ஓடி கொண்டிருக்கிறார்கள்.

அது எங்கன்ட இரத்ததில ஊறிப்போயிட்டுது

  • தொடங்கியவர்

நீண்ட நாட்களின் பின்பு உங்கள் கதை படித்ததில் மகிழ்ச்சி.......

.

அது எங்கன்ட இரத்ததில ஊறிப்போயிட்டுது

வணக்கம் புத்தன் ... பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டியார் மீண்டும் கதைனழுதத் தொங்கியது மகிழ்ச்சி..ஆனால் கொலண்ட் கதை எழுதி றோஸ் கலர் ரியூப்லைற் பூட்டிய கண்ணாடி அறையளை ஞாபகப்படுத்தி போட்டீங்கள்..ம்..........அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.... :mellow:

  • தொடங்கியவர்

சின்னக்குட்டியார் மீண்டும் கதைனழுதத் தொங்கியது மகிழ்ச்சி..ஆனால் கொலண்ட் கதை எழுதி றோஸ் கலர் ரியூப்லைற் பூட்டிய கண்ணாடி அறையளை ஞாபகப்படுத்தி போட்டீங்கள்..ம்..........அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.... :mellow:

றோஸ் கலர் ரியூப்லைற் பூட்டிய கண்ணாடி அறையளை ஞாபகப்படுத்தி போட்டீங்கள்..ம்........

:unsure: :unsure: :lol:

Edited by sinnakuddy

கதை தலைப்பைவிட்டு எங்கெங்கோ செல்கிறதே?

மேலும், ஏன் புலம் பெயர்ந்த எம்மிடையே கூட, லண்டன் காரர், பிரான்ஸ் காரர், ஒல்லாந்து காரர் என்ற வேறுபாடு? நாங்கள் மாறமாட்டோமா?

  • கருத்துக்கள உறவுகள்

கதை தலைப்பைவிட்டு எங்கெங்கோ செல்கிறதே?

மேலும், ஏன் புலம் பெயர்ந்த எம்மிடையே கூட, லண்டன் காரர், பிரான்ஸ் காரர், ஒல்லாந்து காரர் என்ற வேறுபாடு? நாங்கள் மாறமாட்டோமா?

அதெப்படிய்யா மாறமுடியும் ஆ? ஊரிலையே ஒவ்வொரு ஊருக்கு ஊர் வேற்றுமை காட்டுறனாங்க நாட்டுக்கு நாடெண்டா சும்மா இருப்பமா??

உலக தமிழரில கள்ள மட்டை சிஸ்ரத்தை தமிழர்க்கு அறிமுகப்படுத்திய தமிழன் யாரளேய்??

எம்.எஸ்.எனில டேற்றிங்க், கொட்டல்ல மீற்றிங்க வைச்ச தமிழன் யாரளேய்??

ஒரு வீட்டை வாங்கி (மோட்கேஜுக்கு) ஒரு ரூமுக்க தாண்ட பமிலியை இருத்திப்போட்டு ஏனைய ரூம்,வரவேற்பறை, ஸ்றோர் ரூம், எண்டு டாய்லட்டை தவிர மீதி எல்லாத்தையும் வாடகைக்கு விட்டுட்டு பெருமை சேர்த்த தமிழன் எந்த தமிழனளேய் ஆ??

கடைசியா ரூம் வாடகைக்கு இருக்கவிட்டவன் வீட்டை மட்டும் அனுபவிக்காமல் எல்லாத்தையும் (ஓனர்ட பொண்டாட்டி ச்சா தூ சாறி புறப்பெட்டி எல்லாத்தையும்) அனுபவிச்சுட்டு எஸ்கேப் ஆக ஏமாந்து நிண்ட தமிழன் யாரளேய்??

எல்லாமே நம்ம லண்டன் தமிழன் தானளேய்....

லண்டன் தமிழன் லண்டன் தமிழன் தானளேய்ய்ய்..... அசைக்கமுடியா.....

கட்றா வண்டியை.... :mellow::unsure:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

மேலும், ஏன் புலம் பெயர்ந்த எம்மிடையே கூட, லண்டன் காரர், பிரான்ஸ் காரர், ஒல்லாந்து காரர் என்ற வேறுபாடு? நாங்கள் மாறமாட்டோமா?

ஏதாவது ஒரு விசயத்திலாவது மற்றவனைவிட தான் உசத்தி எண்டு சொல்ல வேணுமெண்டால் இனத்தை பலவழிகளிலும் பிரிக்க தெரிஞ்சிருக்க வேணும்..! அதைத்தான் நாங்கள் காலங்காலமா செய்யிறம்..! :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி மிகுதிக் கதை எங்க அண்ணாச்சி....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டி கனநாளுக்குப் பிறகு கதையோடை வந்திருக்கிறியள்.

கொலண்ட் அழகான நாடு. நாடுகாத்த சிறுவனின் ஞாகபச்சிலையமைந்த பகுதியில் நிற்க சுனாமி வந்தாலுமெண்டுதான் பயமாயிருக்கும். அனேகமாக தண்ணீர் நிலைகளைக் கொண்டநாடு எந்தவழி போனாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அழகுகளைவிட கொலண்ட் அழகுத்திருநாடுதான். பிள்ளைகளை ஊருலா கூட்டிக்கொண்டு போக விரும்பும் அம்மா அப்பா நாடுகாத்த சிறுவனின் நாட்டை நிச்சயம் காட்ட வேண்டும். அதைவிட யுத்தகால நீர்மூழ்கிக்கப்பல்கள் முதல் பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிள்ளைகளுக்குப் பயனுள்ள பல கொலண்டில் உள்ளது.

நாடுகாத்த சிறவனின் கதையை நாலாம் வகுப்பில் சொல்லித் தந்தும் நாம் நாடுபற்றி எதைச் செய்தோமென்று யோசிச்சால் அட நமக்கெல்லாம் ஏன் அத்தகையதொரு பற்றுதல் இல்லையென்றே எண்ணத்தோன்றுகிறது.

அப்புவுக்குப் பாராட்டுக்கள்.

அதெப்படிய்யா மாறமுடியும் ஆ? ஊரிலையே ஒவ்வொரு ஊருக்கு ஊர் வேற்றுமை காட்டுறனாங்க நாட்டுக்கு நாடெண்டா சும்மா இருப்பமா??

உலக தமிழரில கள்ள மட்டை சிஸ்ரத்தை தமிழர்க்கு அறிமுகப்படுத்திய தமிழன் யாரளேய்??

எம்.எஸ்.எனில டேற்றிங்க், கொட்டல்ல மீற்றிங்க வைச்ச தமிழன் யாரளேய்??

ஒரு வீட்டை வாங்கி (மோட்கேஜுக்கு) ஒரு ரூமுக்க தாண்ட பமிலியை இருத்திப்போட்டு ஏனைய ரூம்,வரவேற்பறை, ஸ்றோர் ரூம், எண்டு டாய்லட்டை தவிர மீதி எல்லாத்தையும் வாடகைக்கு விட்டுட்டு பெருமை சேர்த்த தமிழன் எந்த தமிழனளேய் ஆ??

கடைசியா ரூம் வாடகைக்கு இருக்கவிட்டவன் வீட்டை மட்டும் அனுபவிக்காமல் எல்லாத்தையும் (ஓனர்ட பொண்டாட்டி ச்சா தூ சாறி புறப்பெட்டி எல்லாத்தையும்) அனுபவிச்சுட்டு எஸ்கேப் ஆக ஏமாந்து நிண்ட தமிழன் யாரளேய்??

எல்லாமே நம்ம லண்டன் தமிழன் தானளேய்....

லண்டன் தமிழன் லண்டன் தமிழன் தானளேய்ய்ய்..... அசைக்கமுடியா.....

கட்றா வண்டியை.... :wub::wub:

எலேய் லண்டனாலை கலைக்கப்போகினம் கொலண்டு. :wub: வாடகைக்கு வைச்சிருக்கிற குடும்பம் சொந்தச் செலவிலை ரிக்கட் போட்டுத்தந்து துரத்தப்போயினம். கவனமெலே :(

  • 4 years later...

சின்னக்குட்டியரின் கதை வாசிப்பது என்றால் அதில் தனிச் சுகம் . கதை எழுதுவதுக்கு எனக்கு மாதிரியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர் . சின்னக்குட்டியர் உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம் . மீண்டும் வந்து கதை சொல்லுங்கள்  :)  :)  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.