Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் முஸ்லிம் ஒருவரே பிரதி மேயர்: த.தே.கூ. உறுதி

Featured Replies

யாழ்ப்பாணம் மாநகர சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுமாக இருந்தால் முஸ்லிம் ஒருவர் பிரதி மேயராக நியமிக்கப்படுவார் என கூட்டமைப்பு உறுதியளித்திருக்கின்றது.

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இதற்கு உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் தெரிவு செய்யப்படாதவிடத்து, வெற்றிடம் ஒன்று உருவாக்கப்பட்டு அந்த இடத்துக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவதுடன், ஒரு வருட காலத்துக்கு பிரதி மேயராகப் பதவி வகிப்பதற்கு அவருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் குழு ஒன்று அண்மையில் புத்தளம் பகுதிக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களைச் சந்தித்துப் பேசியது. யாழ். மாநகரசபைத் தேர்தலில் இவர்கள் வாக்களிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் ஜே.எம்.அலீம் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதாகவும் இமாம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் அதேவேளையில், இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களும் மீளக்குடிமயர்த்தப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.

புதினம்

..... நாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு செய்த .... சிலுவை சுமந்தே தீரவேண்டும்! ..

Edited by Nellaiyan

..... நாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு செய்த பாவங்களுக்கு .... சிலுவை சுமந்தே தீரவேண்டும்! ..

நல்லா சென்ரிமென்ரா நடிப்பியள். நேரத்துக்கு ஏத்த தாளம் போடுறதெண்டா தமிழனை கேட்டு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி என்றால் சம்பந்தருக்கு ஒரு வாக்கும் கிடைக்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..... நாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு செய்த பாவங்களுக்கு .... சிலுவை சுமந்தே தீரவேண்டும்! ..

80 களில் வடக்கின் சில முஸ்லிம் தெருகளினூடாக செல்வது கடினமாக இருந்தது.90 களில் கிலக்கிள் தமிழர்கள் கொடூரமாக கொள்ளப்பட்டர்கள். பின்னர் முஸ்லிம், தமிழர்களும் இறந்தார்கள். த.கூட்டமைபின் செயற்பாடுகள் மிகவும் நல்லது. நெல்லையான், உம்மை மிகவும் நல்லவராக அறிமுகபடுதுவதுக்காக அதிகம் பொய் சொல்லுகிறீர்.

நன்றிகள்் நேசன் உங்கள் கருத்துக்கு,

இது நேரத்துக்கு ஏற்ப நடிப்பல்ல .... காலத்தில் கற்ற பாடம்!!! விட்ட பல பிழைகளால் அழிந்து விட்டோம்!! இனியாவது விட்ட பிழைகளை சீர்துக்கி பார்த்து ... சரிகள் எவை! பிழைகள் எவை! .... என்று விவாதிக்க தவறுவோமாயின் ....... முற்றான அழிவை தவிர்க்க முடியாது!!!

தமிழர்களின் போராட்டத்தை முதலில் மத ரீதியாக உடைக்க சிங்களம் போட்ட திட்டத்தில் நாம் பூரணமாக வீழ்ந்தோம், உண்மை!! .... இறுதியாக பிரதேச வேறுபாட்டில் ..... !

ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களை, தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு சிங்களம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது!! .... 80 நடுப்பகுதியில் .... மருதானை, மற்றும் தென்பகுதியில் வேறு சில இடங்களில் இருந்து முஸ்லீம் காடையர்கள், சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் துணையுடன் ... ஜெயவர்தனாவின் சிந்தனையில் .... கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தமிழ் மக்களின் கிராமங்கள் சூறையாடப்பட்டு, பெண்கள் கற்பளிக்கப்பட்டு. ... அழிக்கப்பட்டன!! இவைகள் உண்மைகள்!!! ஆரம்பத்தில் மூதூர் போன்ற பிரதேசங்களில் தோன்றிய மத முரண்பாட்டை, கிழக்கு மாகாணம் எங்கும் சிங்களம் பூதாகரமாக்கியது!!! .... நாமும் தூரநோக்கற்ற சிந்தனையிலோ? இல்லை மாற்றுவழியில்லாமலோ? ... சிங்களத்தின் வலையில் வீழ்ந்தோம்!!!!!

கிழக்கை முடித்து சிங்களவன் .... வடக்கிலும் . சில வேலைகளை செய்ய ஒரு சில முஸ்லீங்களை பயன்படுத்தப் பார்த்தான், ஒரு சிலர் சிங்களவனின் வலையிலும் வீழ்ந்தார்கள், உண்மை!!!! சிலர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்தான்!! ..... ஒரு சிலர் செய்த தவறுக்கு ஓர் இனத்தையே ஒரு நாளில், கையில் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றினோம்!!! இத்தண்டனை நியாயமானதா?????? நாம் செய்தது சரியா????? ........ இன்று வன்னி மக்களை சொந்த மண்ணிலிருந்து சிங்களவன் துரத்தி அடிக்கையில் நாம் படும் வேதனைகள், அன்று முஸ்லீம் மக்கள் அனுபவித்தார்கள்!!! காட்டிக் கொடுத்தவர்கல் எல்லாம் வெளியேற்றப்பட வேண்டுமாயின், ஆரம்பம் முதல் இறுதிவரை போராட்டத்துகுள் உள்ளவர்களினாலேயே நடந்தவைகளை நினைத்துப் பாருங்கள்!! ஒரு மாத்தையாவிற்காக வல்வெட்டித்துறையில் உள்ளவர்களை துரத்துவதா??? ஒரு கருணாவிற்காக கிழக்கு மாகானத்தில் உள்ள எல்லோரையும் துரத்துவதா???

அப்போது 85ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ... யாழ்நகருக்கு ஊரில் இருந்து சென்றவேளை, யாழ் மாக்கட்டினுள் உள்ளட்டால் சில முஸ்லீங்கள் ... யாழ் கோட்டை சென்றியில் மாவீரரான தங்கள் சகோதரர்களின் நினைவிற்கு , சமயக்கடனை செய்யப்போல சில பொருட்களை வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ஞாபகம்!! .... கிட்டண்ணாவின் காலத்தில் யாழ் கோட்டையை காக்கவே எத்தனை முஸ்லீம் மதத்தை சேர்ந்த இளைஞார்கள் மாவீரர்கள் ஆனார்கள் தெரியுமா??? ... இது நாம் அவர்களை துரத்தி ... யுத்தநிறுத்தத்தின் பின்னும் இணைந்தவர்களும் இறுதிக்காலங்களில் மாவீரர்களாக .....

உண்மை!! அக்காலத்தில்; எல்லாவற்றுக்கும் விசிலடித்தோம் ... த.தே இன் பெயரால்!!! தற்போது எச்சமுமில்லை, மிச்சமுமில்லை!! இனியாவது ....???????????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா சென்ரிமென்ரா நடிப்பியள். நேரத்துக்கு ஏத்த தாளம் போடுறதெண்டா தமிழனை கேட்டு தான்.
ஏன் நேசன் தவறு செய்தவர்கள் அத்தவறினை தவறேதான் என்று உணர்வதும் நடிபுத்தானா???

இப்பிடி என்றால் சம்பந்தருக்கு ஒரு வாக்கும் கிடைக்காது.
ஏன் சுப்பண்ணை இன்னும் முஸ்லிம்கள் மீது "வட" மக்களுக்குள்ள துவேசம் மாறவில்லையா? உபதலைவராக முஸ்லிம் ஒருவர் அறிவிக்கப்பட்டதனால் "ததேகூ" க்கே தமிழ் மக்கள் ஒரு வாக்கைக்கூட போடமாட்டார்களா?

80 களில் வடக்கின் சில முஸ்லிம் தெருகளினூடாக செல்வது கடினமாக இருந்தது.90 களில் கிலக்கிள் தமிழர்கள் கொடூரமாக கொள்ளப்பட்டர்கள். பின்னர் முஸ்லிம், தமிழர்களும் இறந்தார்கள். த.கூட்டமைபின் செயற்பாடுகள் மிகவும் நல்லது. நெல்லையான், உம்மை மிகவும் நல்லவராக அறிமுகபடுதுவதுக்காக அதிகம் பொய் சொல்லுகிறீர்.

ஏன் இதயவானி நெல்லையன் தன் கூற்றினூடே தன்னை ஒரு மிகவும் நல்ல மனிதராக காட்டுவதாகத்தானே தோன்றுகின்றது? உண்மையில் நெல்லையனின் கூற்று முஸ்லிம்கள் தொடர்பாக வெறும் நடிப்புத்தானே?

Edited by பாலன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இதயவானி நெல்லையன் தன் கூற்றினூடே தன்னை ஒரு மிகவும் நல்ல மனிதராக காட்டுவதாகத்தானே தோன்றுகின்றது? உண்மையில் நெல்லையனின் கூற்று முஸ்லிம்கள் தொடர்பாக வெறும் நடிப்புத்தானே?

தமிழ்ர்கள் தாக்கப்பட்டார்கள், கொள்ளப்பட்டார்கள் முஸ்லீம்களால், சிங்களவர்களால் 90 களின் முன்பே. த.கூட்டமைப்பின் கூற்று வரவேற்கதக்கது. நெல்லையான் போன்றோர்கள் தங்களை அதிமேதாவி, மிகவும் நல்லவர்கள் போல காட்ட தேவையற்ற சொற்களை பாவிக்கிறார்கள்.

..... நாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு செய்த பாவங்களுக்கு .... சிலுவை சுமந்தே தீரவேண்டும்! ..

இவர்கள் சொல்லும் அளவுக்கு தமிழர்கள் ஒன்றும் அவ்வளவு கெட்டவர்கள் இல்லை.

தமிழர்கள் அங்கு இறந்து கொண்டு இருக்கிறார்கள், நாம் செய்ய வேண்டியவை பல இருக்கின்றது வதை முகாம்களில், சிறைகளில் உள்ள மக்களுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சுப்பண்ணை இன்னும் முஸ்லிம்கள் மீது "வட" மக்களுக்குள்ள துவேசம் மாறவில்லையா? உபதலைவராக முஸ்லிம் ஒருவர் அறிவிக்கப்பட்டதனால் "ததேகூ" க்கே தமிழ் மக்கள் ஒரு வாக்கைக்கூட போடமாட்டார்களா?

இங்கிருக்கும் நீங்கள் அங்கு போய் வாக்கு போடபோவதில்லை அங்கு வாழும் மக்களின் மனங்களை நீங்கள் அறியவில்லை போலும்.அடுத்ததாக முக்கிய பிரச்சனை ஒன்று உள்ளது வாக்கு போட்டு நாடாளுமன்றம் அனுப்பிய மக்களை பார்ப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாழுக்கு வருவதில்லை என்ற குறை ஒன்றும் உள்ளது.

இவர்கள் சொல்லும் அளவுக்கு தமிழர்கள் ஒன்றும் அவ்வளவு கெட்டவர்கள் இல்லை.

தமிழர்கள் நல்லவர்கள்தான். ஆனால் இது தமிழர்களின் தலைமையாக இருந்தவர்கள் விட்ட தவறு

தங்களை அதிமேதாவி, மிகவும் நல்லவர்கள் போல காட்ட தேவையற்ற சொற்களை பாவிக்கிறார்கள்.

இங்கு நல்லவர்கள், கெட்டவர்கள் பிரட்சனையல்ல, எது சரி, எது பிழை என்பதுதான் எழுதப்பட்டுள்ளது. விட்ட தவறுகளை ஒப்புக்கொள்வோம். அதற்கான பரிகாரங்களை செய்வதை விடுத்து, பிழையை தொடர்ந்து சரி என்று வாதிப்பது பிரட்சனைகளுக்கு தீர்வாகாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் நல்லவர்கள்தான். ஆனால் இது தமிழர்களின் தலைமையாக இருந்தவர்கள் விட்ட தவறு

முஸ்லீம்கள், சிங்களவர்கள் செய்த கொடுமைகளை விட தமிழ் தலைமை ஒன்றும் கூட செய்யவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நல்லவர்கள், கெட்டவர்கள் பிரட்சனையல்ல, எது சரி, எது பிழை என்பதுதான் எழுதப்பட்டுள்ளது. விட்ட தவறுகளை ஒப்புக்கொள்வோம். அதற்கான பரிகாரங்களை செய்வதை விடுத்து, பிழையை தொடர்ந்து சரி என்று வாதிப்பது பிரட்சனைகளுக்கு தீர்வாகாது.

பிழை, சரி சொல்லப்படவில்லை. அதிகமான பொய் சொல்லப்பட்டது

தமிழர்கள் நல்லவர்கள்தான். ஆனால் இது தமிழர்களின் தலைமையாக இருந்தவர்கள் விட்ட தவறு

எம் தலைமை விட்ட தவறுகளினால், எம்மக்கள் இன்று நடுத்தெருவில் நாயிலும் கேவலமாக நிற்க விடப்பட்டிருக்கிறார்கள். ஒன்றா, இரண்டா தவறுகள்?

Edited by Bond007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் தலைமை விட்ட தவறுகளினால், எம்மக்கள் இன்று நடுத்தெருவில் நாயிலும் கேவலமாக நிற்க விடப்பட்டிருக்கிறார்கள். ஒன்றா, இரண்டா தவறுகள்?

மோனே எந்த தலமை என்ன தவறுகள் என்று கொஞ்சம் சொல்லுங்கோ பார்ப்பம் :mellow:

மோனே எந்த தலமை என்ன தவறுகள் என்று கொஞ்சம் சொல்லுங்கோ பார்ப்பம் :mellow:

ம்ம்ம்ம்... விடிய விடிய ராமர் கதை, விடிச்சாபிறகு ராமர் சீதைக்கு என்ன முறையாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் தலைமை விட்ட தவறுகளினால், எம்மக்கள் இன்று நடுத்தெருவில் நாயிலும் கேவலமாக நிற்க விடப்பட்டிருக்கிறார்கள். ஒன்றா, இரண்டா தவறுகள்?

சில சுயனல காட்டிகுடுப்புகாளால் தான் அழிவு வந்தது, தமிழ் தலைமையால் அல்ல.

மோனே எந்த தலமை என்ன தவறுகள் என்று கொஞ்சம் சொல்லுங்கோ பார்ப்பம் :mellow:

மன்னிப்பு கேட்டதுதான்.....

அடியும் வாங்கி விட்டு மன்னிப்பும் கேட்டது நாமாக மட்டும்தான் இருக்கமுடியும். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்... விடிய விடிய ராமர் கதை, விடிச்சாபிறகு ராமர் சீதைக்கு என்ன முறையாம்?

அ..... ராமர் சீதைக்கு தம்பி முறை,ராமாயனமும் மகாபாரதமும் கானும் நீங்கள் விசயத்துக்கு வாங்கோ :mellow: ,ஒன்றா ரென்டா பிழை என்று சொன்னிங்க ஆனால் எதையும் சொல்லமாட்டேங்கிறிஙக‌

இங்கு நல்லவர்கள், கெட்டவர்கள் பிரட்சனையல்ல, எது சரி, எது பிழை என்பதுதான் எழுதப்பட்டுள்ளது. விட்ட தவறுகளை ஒப்புக்கொள்வோம். அதற்கான பரிகாரங்களை செய்வதை விடுத்து, பிழையை தொடர்ந்து சரி என்று வாதிப்பது பிரட்சனைகளுக்கு தீர்வாகாது.

நாம் செய்தது சரியா தவறா என்பது பிரச்சனையல்ல.

ஆனால் நாம் மட்டும் தவறு செய்தது போலவும் முஸ்லிம்கள் ஒரு தவறும் தமிழர்களுக்கு இழைக்கவில்லை ஏன்பது போலவும் உள்ளது தங்கள் கருத்து.

இதுதான் அவர்களது ஒற்றுமை. அதுவே அவர்களது பலம்.

அவர்கள் தமிழரே தமக்கு அநீதி இழைத்ததாக ஒருமித்த கருத்தில் அனைவரும் தொடர்ந்து கூறுவதால் அதுவே உண்மையாக மாறிவிட்டது.

ஆனால் எமது கோடாரிக்காம்புகளோ எமது தலைமை அவர்களுக்கு துரோகம் இழைத்தாக பெரிய சனநாயகவாாதிகள் போன்று அவர்களது தவறை மறைத்து எமது தவறை ஊதி பெரிதாக்குகின்றாாகள்.

புலிகள் இயக்கம் பாரிய வளர்ச்சி அடைய முதலே எமது இனத்்திற்கெதிராக தனித்தும் சிங்களவருடனும் இணைந்து எமது மக்களுக்கெதிராக தென் தமிழீழத்தில் இழைத்திட்ட அநியாயங்கள் எத்தனையோ.

இது தொடர்பாக மாமனிதர் சிவராம் பல இடங்களில் தெரிவித்திருக்கி ன்றார்.

இன்றும் தமிழருக்கு சொந்தமான ஏக்கர் கணக்கான நிலங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் தமிழருக்கு மீள வழங்குங்கள் என்று உங்களால் குரல் வழங்கமுடியுமா?

புலிகளால் படையினருடன் தொடர்புடைய ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிராகவும் தென்தமிழீழத்தில் அவர்கள் நிகழ்த்திய வன்முறைகள் சொல்லிலடங்கா.

ஏன் இன்றும் கூட தெரியவராத எத்தனையோ வன்முறைகள் அங்கு இடம்பெற்றுகொண்டுதானிருக்க

எம் தலைமை விட்ட தவறுகளினால், எம்மக்கள் இன்று நடுத்தெருவில் நாயிலும் கேவலமாக நிற்க விடப்பட்டிருக்கிறார்கள். ஒன்றா, இரண்டா தவறுகள்?

அண்ணை எங்கட மக்கள் நடுத்தெருவில விடப்பட்டதற்கான (தலைமை விட்ட) முக்கிய பிழைகள் குறைந்தது ஒரு சிலதையாவது எழுதுங்கள்.

மக்களைப் பற்றிச் சிந்திக்காது தலைமை தன்ர சுயநலத்திற்காக விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு செய்த பாவங்களுக்கு .... சிலுவை சுமந்தே தீரவேண்டும்!" என்கின்ற நெல்லையனின் கருத்தினை கீழே உள்ளவாரு மாற்றியமைத்தன் நோக்கம் சக தோழர்களின் ஏடகூடமான கருத்தாடலினாலா? அல்லது மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு வகையான குற்றஉணர்வினை வெளிப்படுத்துவற்கான நேரம் இரா. சம்பந்தனின் அறிவிப்போடு ஒத்துப்போனதெனலால் வெளிப்படுத்தியும் தோழர்களின் ஏடேகூடமான வார்த்தை பிரயோகத்தினால் நெல்லையன் தனது கருத்தினை மாற்றிக்கொண்டாரா? ஒழித்து மறைத்து செயற்படுத்துவதனால் கிடைக்கக்கூடிய நன்மையான காரியங்களும் கிடைக்காமலும் பேவதற்குரிய நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்மக்கள்களின் இன்றைய உண்மையான அரசியல் கோணத்தினை நன்கு சிந்தித்து அதற்கேற்றவாரான ஒரு பாதையினை செப்பணிட்டு அதனில் பயணம் செய்ய எத்தனிக்க முயற்சிக்கின்றார் போலவே தெரிகின்றது. அவருக்கு கைகொடுப்பதனால் ஏதும் பாதகமான சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதில் ஐயம் இருப்பது நியமில்லைதானே?

..... நாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு செய்த .... சிலுவை சுமந்தே தீரவேண்டும்! ..

  • கருத்துக்கள உறவுகள்

விசுகோத்துக்களே.............. ஏதும் தெரிந்தால் விபரமாக எழுதுங்கள். இல்லை என்றால் பொத்தி கொண்டு இருங்கள். விட்ட பிழை விட்ட பிழை என்றால் என்ன என்று விபரமாக எழுதுங்கள். விபரம் என்றால் அதை விடாது விடுதலையை எப்படி தொடர்வது என்ற காரணமும் சேர்த்து. ஏதோ ஞானம் பெற்ற ஞானிகள் போல் ஏதோ புதிதாய் இவை கண்டுபிடிச்சிட்டினம் பிழைகளாலதான் எல்லாம் பிழைச்சதெண்டு விண்ணாணம் பேசும் மந்தைகளே?

ஈரான் தன் சொந்த நாட்டு மின் உற்பத்திற்கும் அணுவை பாவிக்க முடியாத நிலையில் எத்தனையோ பேச்சுகளை தொடந்துகொண்டிருக்கின்றது ஏன்? ஆனால் அடவாடிகாரன் இஸ்ரேல் 34க்கு மேற்பட்ட ஆணுஅழிவு ஆயுதங்களை கொண்டுள்தற்கு யாரிடம் அனுமதி பெற்றது?

றுவாண்டாவில் இனஅழிப்பிற்கு முதல் நாள் நாம் இன அழிப்பை செய்ய போகிறோம் நீங்கள் வெளியேறுங்கள் என்று சொன்னதும் ஆறாவது நாள் ஐநா இராணுவம் வெளியேறியது ஏன்?

இப்படி உலகை சுற்றி ஒரு அடாவடிதனம் கையோங்கி நிந்கின்றது ஏன் என்று தெரிந்தால் எழுதுங்கள். இல்லா விட்டால் பொத்திகொண்டிருங்கள் அது முடியாது உங்களால் கழிவுகளை விழுங்கியவர்கள் நீங்கள் வாந்தி வந்தே தீரும். யாழ்களத்தில் வேண்டாம். வாந்தி தளங்கள் இருக்கின்றன அங்கே போய் எடுங்கள் வாந்திக்கு எடைபோட்டு பணமும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் முஸ்லிம் ஒருவரே பிரதி மேயர்: த.தே.கூ. உறுதி

போற போக்கிலை , தமிழனுக்கு .......... கட்டியிருக்கிற கோமணமும் மிஞ்சாது போலை கிடக்குது .

அண்ணை எங்கட மக்கள் நடுத்தெருவில விடப்பட்டதற்கான (தலைமை விட்ட) முக்கிய பிழைகள் குறைந்தது ஒரு சிலதையாவது எழுதுங்கள்.

மக்களைப் பற்றிச் சிந்திக்காது தலைமை தன்ர சுயநலத்திற்காக விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கோ

........ கடவுள் கல்லாப் போனான் .... என்று . கனகாலம் கோயிலுக்கு சென்று ... மீண்டும் பொழுது போக்குக்காக போனால் ... பூசை முடிந்து நாலு கிழடுகள் சாப்பாட்டு இடத்தில், நாட்டு நடப்புகளை கதைத்துக் கொண்டிருக்க .... நானும் பக்கத்தில் குந்த ....

.... "என்னவாம், நாடு நிலவரம்" .

..... "ம்ம்ம்ம்ம்... என்னத்தை சொல்ல? எல்லாம் முடுச்சு போச்சு!!! இனி கதைத்தென்ன" .. பெருமூச்சுடன்....

.... "எல்லோரும் சேர்த்து கொள்ளியை வைச்சுட்டாங்கள்" ....

.... "போராட்டம் என்று ஒன்றை தொடங்கி கண்ட மிச்சம் வெளிநாடு, அவ்வளவுதான்"....

.... "வாயாலை கதைத்துக் கதைத்து காலத்தை விட்டு விட்டம், அவன் சிங்களவன் கெட்டிக்காரன் செயலாலை செய்து போட்டான்" ....

.... "விசர் பொடியள் யுத்தநிறுத்தம் எண்டதை சைன் பண்ணிப் போட்டு வலைக்குள் வீழ்ந்து விட்டார்கள்" ...

.... "உண்மைதான், பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த மாதிரித்தான், இவையளும் நடந்திருக்கினம். அவங்கள் எல்லாப்பக்கத்தாலையும் விசயங்களை கொண்டு போனதை உதுகள் கவனிக்கவில்லை" ....

.... "பெரிய படிச்சதுகளும் இல்லைத்தானே, உந்த ஓட்டங்களை அறிவதற்கு" ...

.... "சண்டையை தொடங்கப் போகிறோம், தொடங்கப் போகிறோம் என யுத்த நிறுத்த காலத்திலை சனங்களை வைத்து ஊர்வலங்கள் நடத்தியும், அவன் சிங்களவனை வீணாக உசுப்பேற்றி விட்டதுதான் மிச்சம்" ...

... "அது போதாததற்கு இங்கை வெளியிலையும் இறுதி யுத்தம் என காசு சேர்க்கத் தொடங்கி உலகத்துக்கும் நாம் சண்டைக்கு போகப் போகிறோம், எமக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என சொன்னது..." ....

.... "உண்மைதான்" ...

.... அவன் அடிக்கத் தொடங்கியவுடன் பரவ விடுகிறம் எண்டாங்கள், இறுதி மட்டும் விழுந்தாலும் மீசையில் ..." ...

.... "கடைசி, புதுக்குடியிருப்பு போகத்தான் வெளிநாட்டு சனம் காப்பாற்ற ரோட்டில் இறங்கச் சொன்னாங்கள்"...

.... "எல்லாம் லேட்ட்ட்ட்ட்" ....

... "ம்ம்ம்ம், இறங்கியும் என்னத்தை செய்ய முடிந்தது?? யாராவது ஏறெடுத்து பார்த்தார்களா?" .....

.... "அரசியல் ஞானசூனியங்கள்" ...

.... "சரி, சண்டையையும் சரியாகவா செய்தாங்கள்?? ...

.... "உண்மைதான், சிங்களவன் அடிக்கத்த் தொடங்க ஒரு ஆயிரக்கணக்கில் சிங்கள இடங்களில் போட்டிருந்தால், காலிலை விழுந்திருப்பாங்கள்!, இது என்னடா என்றால் வளவுக்குள் எதிரியை கூட்டி வந்து, ... முடிச்சதுதான் மிச்சம்" ....

... "உண்மைதான், சொன்னாங்கள் .... தெற்கில் இரத்த ஆறு ஓடும், சிங்கள இனம் யுத்தம் தொடங்க பாடம் படிக்கும், ... எண்டு எல்லாம் சொன்னாங்கள். கடையில் ஒண்டும் நடக்கேலை!!!!!" ....

... "உலக அபிப்பிராயமாம், அங்கீகாரமாம் ... அதுதான் சிங்க்களவனை சாக்கொல்லேலையாம்" ...

... "உலக அபிப்பிராயம் எண்டு நாம் முடிந்ததுதான் மிச்சம்" ....

... ""சிங்களவங்கள் நல்லாப் பயப்பட்டவங்கள் முந்தி, சண்டை தொடங்கினால் தாமும் நிறைய பாதிக்கப்படப் போறம் எண்டு, ஆனால் நாங்கள் அவங்களை நோகப்பண்ண கூட விடேலை" ...

... "இண்டைக்கு முன்பு பயத்திலை இருந்த சிங்களவங்கள் எல்லாம் கிளம்பி கூத்தடிக்கிறாங்களாம்" ...

........ "......" .....

...... "முடிபுகள் எடுத்தவைகள் தவறானவை, செயற்படுத்தினதுகள் தவறானவை, ... மொத்தத்தில் எல்லாம் பிழைதான்" ...

சாப்பாடு முடிந்து கையை கழுவி, கோயிலை விட்டு வெளியேறும் போது ....... நினைத்தேன் ... உந்தக் கதைத்த கிழடுகள் ..... துரோகிகள் ......!!!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=61946

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.