Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலாளர் செல்வராசா பத்மநாதன் கைது ‐ இலங்கையின் தகவல் திணைக்களம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களே!

அவனவன் விடுற அறிக்கைகளை வாசிச்சுட்டு போக இது நேரம் இல்லை.

மிஞ்சி போய் இருக்கிற ஒண்டையாவது காப்பாத்த ஏதும் வழி இருக்கா?

நெடுக்கால போவான் சொல்லுற மாதிரியான பொயின்டுகளில ஏதாச்சும் பாவிச்சு சர்வதேச சட்ட வல்லுனர்களை கொண்டு அவரின் உயிருக்கு உத்தரவாதம் பெற முடியுமா?

இத்துப் போன செஞ்சிலுவை சங்கத்தை கொண்டிச்சு கிட்டடியில கொண்டதா சொல்லுற 100 பேரையாவது அவர்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்குதா? அடிப்படை வசதிகள் இருக்கா? எண்டு அவங்கட கண்காணிப்பில வைச்சிருந்தா அத்தனை பேருடை உயிர்களையாவது காப்பாத்தி இருக்கலாம் என்றது எண்ட நினைப்பு. அந்த வாய்ப்பைத் தான் விட்டுட்டம்.

ஒன்றை ஒன்று செய்யலாம்.. யாராவது பெரிய வி ஐ பி களைக் கடத்திக் கொண்டு போய் வைச்சுக் கொண்டு விடுங்கடா என்று தலிபான் பாணியில் கேட்டால் ஏதேனும் நடக்கும். இவங்க கூட உண்மையான பயங்கரவாதியா இருந்தால் தான் பிழைக்கலாம். இல்ல.. ஏறி மிதிச்சுக்கிட்டே இருக்கும் இந்த உலகம்..! <_<

  • Replies 105
  • Views 11.8k
  • Created
  • Last Reply

ஒன்றை ஒன்று செய்யலாம்.. யாராவது பெரிய வி ஐ பி களைக் கடத்திக் கொண்டு போய் வைச்சுக் கொண்டு விடுங்கடா என்று தலிபான் பாணியில் கேட்டால் ஏதேனும் நடக்கும். இவங்க கூட உண்மையான பயங்கரவாதியா இருந்தால் தான் பிழைக்கலாம். இல்ல.. ஏறி மிதிச்சுக்கிட்டே இருக்கும் இந்த உலகம்..! <_<

என்ன நீர் விசர்தனமா கதைக்கிறீர்!

நாளைக்கு ஊர் உலகத்தில சனம் எங்களை பத்தி என்ன நினைக்கும்? அமைதியா வாழுவம் எண்டா விடமாட்டியல் போல கிடக்கே! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீர் விசர்தனமா கதைக்கிறீர்!

நாளைக்கு ஊர் உலகத்தில சனம் எங்களை பத்தி என்ன நினைக்கும்? அமைதியா வாழுவம் எண்டா விடமாட்டியல் போல கிடக்கே! <_<

அமைதியா எண்டா.. தும்பினியை கலியாணம் கட்டிக்கிட்டா. அப்படின்னா எவருக்குத்தான் கசக்கும்..! நம்ம ஆக்களுக்கு தெரிஞ்சது 3 விசயம். அதுதான் அவங்கட வாழ்க்கையிட அம்பிசன்..!

எதுக்கு ஏன் படிக்கிறம் என்று தெரியாம படிக்கிறதும்...

கலியாணம் கட்டுறதும்...

எவன் எப்படிப் போனாலும் நான் அசைலம் அடிச்சு செற்றிலாகிறதும்..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை ஒன்று செய்யலாம்.. யாராவது பெரிய வி ஐ பி களைக் கடத்திக் கொண்டு போய் வைச்சுக் கொண்டு விடுங்கடா என்று தலிபான் பாணியில் கேட்டால் ஏதேனும் நடக்கும். இவங்க கூட உண்மையான பயங்கரவாதியா இருந்தால் தான் பிழைக்கலாம். இல்ல.. ஏறி மிதிச்சுக்கிட்டே இருக்கும் இந்த உலகம்..! <_<

தலைவன் கூறியதுபோல் நாங்கள் என்ன ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான். (இப்போது சர்வதேசமும் சேர்ந்தே தீர்மானிக்கின்றது போல...)

செஞ்சி.... தெரியாமல் கேக்கிறேன்.... யார் உங்கள் எதிரி? ஏன் சர்வதேசம் உங்களை கலாய்க்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சில தினங்களாக சிறிலங்கா ஆதரவு ஊடகங்களில் விடுதலைப்புலிகளுக்குள் தற்போது போட்டி நடப்பதாகவும், என்ன மாதிரியானவை என்ற கட்டுரைகள் வந்திருந்தன. ஆனால் இப்போது தான் புரிகின்றது. நமக்குள் அடிபட்டுக் கொண்டிருப்பதை, இந்தக் கைது மூலம், என்னமும் ஊக்குவித்து, நம்மை அடிபட்டே சாக வைக்கச் சிங்கள தேசம் நடந்து கொள்கின்றது. எதிரி என்றைக்குமே, எமது விடுதலைப்போராட்டம் நடந்து விடக் கூடாது என்பதற்காக, மிகப்பெரும் எடுப்பிலான, நடவடிக்கைச் செய்து கொண்டிருக்கின்றான். கேபி மட்டுமல்ல, சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது, முக்கியமான பொறுப்பாளர்களின் பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்படுகின்றது.

சொல்லப் போனால், இஸ்ரேல் பாணியிலான கடத்தல்களைச் செய்கின்றது. நாளைக்கு ஒரு நாட்டில் ஒருவரைப் பிடித்து இரகசியமான விதத்தில் சிறிலங்காவிற்குக் கொண்டு சென்று, இரகசியமாகவே வைத்திருப்பதோ, அல்லது தனது நட்புநாடு ஒன்றில், பிடிபட்டதாகவோ, செய்தியை வெளியிடுவதோ கடினமான ஒன்றல்ல...

உண்மையில் எனி வரும் காலங்களில் அனைவரும் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டிய தேவை உண்டு. இரண்டாவது இரகசியத்தன்மை என்பது முக்கியமானது.... எல்லாம் தனக்குச் சொன்னால் தான், வந்து புடுங்குவன் என்ற நாய்களைத் துரத்தி விடுங்கள்...

தமிழீழம் என்ற இலக்கை அழிப்பதற்கு அனைத்து வகை நடவடிக்கைகளையும் சிங்கள தேசம் மேற்கொள்கின்றது. ஆனால் நாங்கள் தொடர்ந்து ஒரு தெளிவான பாதையில் வராது போனால், ஒற்றுமயாகச் செயற்பட முடியாது போனால், ஒன்றுபட்ட இலங்கையைப் பேசாமல் ஆதரித்து விடலாம். இது விருப்பத்தோடு சொல்வதல்ல, எதிரி எனிவரும் காலங்களுக்கான திட்டத்தைப் போட்டு நடந்து கொள்ளும்போது, நாங்கள் நடந்து முடிந்ததைப் புரிந்து கொள்ளவோ, அல்லது அதைப் பாடமாகவோ எடுக்கின்ற சக்தி இல்லாத நிலையில் இது தான் எனி வரும் காலங்களில் ஒரு வழியாக இருக்கும்.

எதிரி இப்போதும், ஆயுதங்களைக் கீழே வைக்காத நிலையில் நாங்கள் அரசியல் தீர்வு என்ற வகையில் மாறியபோதும், எதிரி இலக்கில் அவதானமாகவே இருக்கின்றான். அவற்றைத் தொடர்ந்து அழிக்க முனைகின்றான்.

இவர் அதுக்குப் பொறுப்பு, இவர் இதுக்குப் பொறுப்பு என்ற வகையில் உளறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்தோட இவர் தான் காட்டிக் கொடுத்தான், பிடிச்சுக் கொடுத்தான் என்று, கதைச்சுச் சிறிலங்காப் புலனாய்வுத்துறையை மட்டமாகவும் எடை போடாதீர்கள். தவிர, அப்படியான பிரிவினை வாதங்களைச் சிறிலங்கா அரசும் எனி வரும் காலங்களில் ஊக்குவிக்கும்...

-----------------------------

சொல்லுங்கள் சபேசன், சுகன்,

இப்போது சந்தோசம் தானே? ஏதோ முகம் காட்டாவிட்டால் உங்களின் கோவணம் உருவப்பட்டு விட்டமாதிரி எழுதினீர்களே?? இப்போது உங்களுக்காக, அவரின் பல படங்களும், பல கோணத்தில் எடுக்கப்பட்டு சிறிலங்கா அரசு பிரசுரிக்கும்... சந்தோசமாகப் பார்த்து உங்களின் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தமில்லதாத விடயம். உந்தப் பேஸ்புக், ஹாய்5 ல தமிழீழக் கொடி அல்லது பேரணிகளில் நின்று கொண்டு படம் எடுத்துப் போட்டு விட்டு, தெரியாத ஆட்களை இணைச்சு வைச்சிருந்தீர்கள் என்றால், அது எவ்வகை விளைவைத் தரும் என்றால், அது சிறிலங்காப் புலனாய்வுத் துறையாகவும் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பல தடவை தமிழ்ப் பெயரில் அரைகுறையான பெண் படம் போட்ட ஒரு ஐடி இணைக்க முயற்சித்தபடி இருந்ததால் சொல்கின்றேன். வெளிநாடுகளில் நடக்கின்ற ஆர்ப்பாட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்கபதை எதிரி அறிய முயற்சித்துக் கொண்டிருக்கின்றான். நீங்கள் தெரியாத ஆளை இணைக்கின்றபோது, அவன் உங்களின் விபரங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றான். பெயர் விபரம் உற்பட அனைத்தையும். அது நீங்கள் கட்டுநாயக்காவைக் கடக்கின்றபோது, சேமிக்கப்பட்ட தகவல்களாக உங்களின் மீது பாய ஏதுவாகின்றது.

எல்லா விடயத்திலும் அவதானமாக இருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMF பின் தமிழர்கள் அமைதியாகி விட்டார்கள். நாங்கள் தொடர்ந்து உலகுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். சும்மா அலட்டி கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது, தயவுசெய்து ஒற்றுமையாக முயற்சி செய்வோம் சிறையில், வதை முகாமில் உள்ள மக்களுக்காக.

உண்மையிலேயே சிறிலங்கா புலனாய்வுத்துறை மிகவும் சிறப்பாக அவங்க வேலையைச் செய்கிறாங்க.. நாங்கள் தான் எம்மாலேயே அழிகிறோம்.

நிணலும் தன் வாயால் கெடும். தமிழர் நாம் கத்தி கத்தி சாகவேண்டியது தான்

தாய்லாந்தில் கைதான கேபி மீது கொழும்பில் விசாரணை : கெஹெலிய

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் கடத்தப்பட்டு சிறப்பு வானூர்தி ஒன்றின் மூலமாகக் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதேவேளயில், பாதுகாப்புத் தரப்பினர் இந்த விவகாரத்தை உள்நாட்டுச் சட்டங்களுக்கு அமைய கையாள்வார் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல இன்று தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கடத்தப்பட்ட செல்வராஜா பத்மநாதன் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினர் உள்நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டதாக அனைத்துலக வரையறைகளுக்கு இசைவாக இந்த விவகாரத்தை கையாள்வர் எனவும் தெரிவித்தார்.

மலேசியாவில் கைது செய்யப்பட்டு நேற்று இரவு கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட பத்மநாதன், கையில் விலங்கிலங்கிடப்பட்ட நிலையில் தலை முழுமையாக மூடப்பட்டவாறு வானூர்தியில் இருந்து அவசரமாக இறக்கப்பட்டு அருகில் காத்திருந்த கண்ணாடிகள் மறைக்கப்பட்ட ஜீப் ஒன்றில் ஏற்றப்பட்டு அவசரமாக அங்கிருந்து கடும் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதப் புலனாய்வுத்துறையினரால் இரகசிய இடம் ஒன்றுக்கு இவர் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளுடனான தொடர்பு, விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்கள் தொடர்பாக இவர் மீது விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் கைது: கோத்தபாய ராஜபக்ஷ பிபிஸியிடம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமையன்று அவர் கைது செய்யப்பட்டதாக, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிஸியிடம் தெரிவித்தார்.

ஆனால் அவர் எத்தகைய சூழ்நிலையில் கைது செய்யப்பட்டார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இலங்கைப் பொலிஸாரால் வியாழக்கிழமை கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட பத்மநாதனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பாங்கொக் கொண்டுவரப்பட்டு இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு கொண்டுவரப்பட்ட அவர், இரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செய்மதி தொலைபேசி குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உதவியதா?

நந்திக்கடற்களப்பில் கைப்பற்றியதாகக் கூறப்படும் செய்மதி தொலைபேசி ஒன்று பிரபாகரனுக்குச் சொந்தமானது எனவும், அதில் காணப்பட்ட மற்றொரு செய்மதி தொலைபேசி இலக்கத்தை வைத்தே தாம் குமரன் பத்மநாதன் நடமாட்டத்தை அறிந்ததாகவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று அதிகாரிகள் இத் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

செய்மதி தொலைபேசியில் இருந்த இலக்கத்தினூடாக, மற்றைய செய்மதி தொலைபேசியின் இலக்கத்தைப் பெற்ற இலங்கை புலனாய்வுப் பிரிவினர், பின்னர் அது ஆசிய நாடு ஒன்றில் இருந்து பாவிக்கப்படுவதை அறிந்ததாகவும், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தாய்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கும் இலங்கையில் இருந்து 3 புலனாய்வுப் பிரிவினர் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குமரன் பத்மநாதனை கைதுசெய்வது தமது நோக்கமல்ல என்று தெரிவித்த அந்த அதிகாரிகள், அவரை சுட்டுக்கொல்லவே தாம் ஆட்களை அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனினும் புதன்கிழமை மாலை அவர் கைதுசெய்யப்பட்டார் என்ற தகவல் தமக்கு கிடைத்ததாகத் தெரிவித்த அவ்வதிகாரிகள், இறுதி நேரத்தில் அவரை கொல்லும் திட்டம் மாற்றப்பட்டு, உயிருடன் பிடிக்குமாறு மேலதிகாரிகள் உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் தாய்லாந்து பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா, தமது நாட்டில்வைத்து குமரன் பத்மநாதன் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டாரா என அறியுமாறு தாய்லாந்து புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க FBI பாணியில் வேற்று நாட்டில் ஊடுருவி, எதிரியை கைதுசெய்துள்ளது இலங்கை அரசு. இச் செயலானது, இவ் இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பரம் உள்ள நல்லுறவைப் பாதிக்கலாம்.

http://www.tamilwin.com/view.php?2a36QV14b...3g2hP0cc3tj0Cde

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தமில்லதாத விடயம். உந்தப் பேஸ்புக், ஹாய்5 ல தமிழீழக் கொடி அல்லது பேரணிகளில் நின்று கொண்டு படம் எடுத்துப் போட்டு விட்டு, தெரியாத ஆட்களை இணைச்சு வைச்சிருந்தீர்கள் என்றால், அது எவ்வகை விளைவைத் தரும் என்றால், அது சிறிலங்காப் புலனாய்வுத் துறையாகவும் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பல தடவை தமிழ்ப் பெயரில் அரைகுறையான பெண் படம் போட்ட ஒரு ஐடி இணைக்க முயற்சித்தபடி இருந்ததால் சொல்கின்றேன். வெளிநாடுகளில் நடக்கின்ற ஆர்ப்பாட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்கபதை எதிரி அறிய முயற்சித்துக் கொண்டிருக்கின்றான். நீங்கள் தெரியாத ஆளை இணைக்கின்றபோது, அவன் உங்களின் விபரங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றான். பெயர் விபரம் உற்பட அனைத்தையும். அது நீங்கள் கட்டுநாயக்காவைக் கடக்கின்றபோது, சேமிக்கப்பட்ட தகவல்களாக உங்களின் மீது பாய ஏதுவாகின்றது.

எல்லா விடயத்திலும் அவதானமாக இருங்கள்...

நாங்களும் பதிலுக்கு விபரம் கொடுக்காத ஐடிக்களில் போய் அட் பண்ணி தகவல்களைப் பெற்று வைப்பதும் நன்று. புலனாய்வு என்பது அவர்களிடம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தமிழர்கள் ஒவ்வொருவரும் விளிப்போடும்.. தேசத்திற்கான உண்மையான விசுவாசமுள்ள புலனாய்வாளர்களாக இருந்து கொண்டு ஊடுருவற்காரர்களைக் கண்காணித்து எச்சரிக்கைகளை வழங்குவது நன்று..!

வெட்டி வீரத்துக்கு படங்களை எடுத்துப் போடாமல்.. சுயவிளம்பரம் செய்வதனூடு தகவல்களை வழங்காமல் இருப்பது.. நீங்கள் சொன்னது போல நன்றே..! <_<

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செய்மதி தொலைபேசி குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உதவியதா?

நந்திக்கடற்களப்பில் கைப்பற்றியதாகக் கூறப்படும் செய்மதி தொலைபேசி ஒன்று பிரபாகரனுக்குச் சொந்தமானது எனவும், அதில் காணப்பட்ட மற்றொரு செய்மதி தொலைபேசி இலக்கத்தை வைத்தே தாம் குமரன் பத்மநாதன் நடமாட்டத்தை அறிந்ததாகவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று அதிகாரிகள் இத் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

கடவுளேஏஏஏஏஏஏஏஏஏஏஏ... ஏன் தமிழனை முட்டாளாக படைத்தாய்!!!!!!!! நீ நாசமாய் போவாய்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3ம் இணைப்பு ‐ இந்தியா, மலேஷியா, உதவியுடனேயே இலங்கை புலனாய்வுத்துறை கே.பி‐யைக் கடத்திச் சென்றது :

விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி.என்ற செல்வராஜா பத்மநாதன் மலேசியாவின் கோலாலம்பூரில் வைத்தே கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் இறுதியாக சிங்கபூரில் உள்ள ஞானகோனுடன் தொலைபேசியில் உரையாடி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கே.பி. தாய்லாந்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக நேற்று இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு சென்ற பின்னரே அரசாங்கம் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. கே.பி கைதுசெய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அவர் கைதுசெய்யப்பட்ட முறைமை புதியதொரு விடயம் அல்ல எனவும் உலக முழுவதும் உள்ள புலனாய்வுதுறையினரின் இணக்கத்திற்கு அமைவாக, தேவைப்படும் நபர் ஒருவர் இருக்கும் இடத்தை சரியாகத் தெரிந்துக் கொண்ட பின்னர், அந்த நபர் இருக்கும் நாட்டின் புலனாய்வுதுறையிடம் அவரை கைதுசெய்து தருமாறு கோரமுடியும், இதனடிப்படையில் அந்த நபரை, சம்பந்தப்பட்ட நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்று உடனடியாக நாடு கடத்துவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த காலங்களில் உலகில் பல பாகங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் ரகசியமான முறையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையோர் தற்போது உயிருடன் இல்லை எனவும் அந்த புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்விதமாகவே புலிகளின் புதிய தலைவர் கே.பி என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனும் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....12900&cat=1

Edited by ஜீவா

ஜீவா,

செய்திகளின் மூலத்தையும் இணைப்பையும் போடவேண்டும் என்பது யாழ் கள விதிகளில் முக்கியமான்வை மட்டுமல்ல. செய்திகளின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நெட், பதிவு, சங்கதியில் இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. ஓ.. அவர்களின் (புதினம்) தமிழ் தேசியம் வேறு.. இவர்களின் தமிழ் தேசியம் வேறு.. நல்லாய்ச் செய்யிறீங்கடா...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உண்மையாகவே பயங்கரவாதிகளா மாறினா எப்பிடி இருக்கும் என்பதை உலகிற்கு காட்டுவதுதான் சரி போல இருக்குது. நெடுக்கர் சொல்வதுதான் சர வரும் போலிருக்குது.

இவ்வாறு கடந்த காலங்களில் உலகில் பல பாகங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் ரகசியமான முறையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையோர் தற்போது உயிருடன் இல்லை எனவும் அந்த புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா,

செய்திகளின் மூலத்தையும் இணைப்பையும் போடவேண்டும் என்பது யாழ் கள விதிகளில் முக்கியமான்வை மட்டுமல்ல. செய்திகளின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும்

மூலத்தை இணைத்துள்ளேன் அண்ணா. நேற்றிலிருந்து கொஞ்சம் மூடவுட். இனி சரியாக செய்யுறேன். தவறுக்கு வருந்துகிறேன்.

தமிழ்நெட், பதிவு, சங்கதியில் இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. ஓ.. அவர்களின் (புதினம்) தமிழ் தேசியம் வேறு.. இவர்களின் தமிழ் தேசியம் வேறு.. நல்லாய்ச் செய்யிறீங்கடா...

உண்மைதான் காட்டாறு. இவர்களின் வேடங்களைப் பார்க்கும் போது மிக வெறுப்பாக இருக்கின்றது. இனியும் இவர்கள் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு தாம் தமிழ் தேசிய ஆதரவு தளங்கள் எனச் சொல்லபோகின்றனர்? சர்வதேச செய்தி நிறுவனங்களில் கூட வந்த செய்தியை இருட்டடிப்பு செய்து தம் தமிழன் புத்தியை காட்டுகின்றனர். சிங்களவனின் எந்த இணையத்தளத்திற்காவது சென்று பாருங்கள்..அவனில் பிழவு இல்லை...கேபியின் கைதை கொண்டாடுகின்றான்

கேடு கெட்ட தமிழினத்திற்கு விடுதலை ஒரு கேடா?

  • கருத்துக்கள உறவுகள்

மூலத்தை இணைத்துள்ளேன் அண்ணா. நேற்றிலிருந்து கொஞ்சம் மூடவுட். இனி சரியாக செய்யுறேன். தவறுக்கு வருந்துகிறேன்.

யாருக்குத்தான் மூட் அவுட் இல்லை ஜீவா .

உண்மையில் தமிழை , தமிழனை நேசிக்கும் அனைத்து தமிழர்களுமே மூட் அவுட் தான் .

எனது தமிழக நண்பர்கள் ....... மிகவும் வேதனைப்படுகின்றார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் உண்மையாகவே பயங்கரவாதிகளா மாறினா எப்பிடி இருக்கும் என்பதை உலகிற்கு காட்டுவதுதான் சரி போல இருக்குது. நெடுக்கர் சொல்வதுதான் சர வரும் போலிருக்குது.

என் மனதும் அதைத் தான் விரும்புகிறது. ஆனால் அதை செய்வது யார்? நீங்களா?. நானா?.. முந்திய மாதிரி எல்லாம் தலைவர் பாத்துக்கொள்ளுவார்.. கட்டாயம் இயக்கம் இதுக்கொரு பதிலடி குடுக்கும் எண்டல்லாம் சொல்லேலாது பாருங்கோ.

இந்த வையப் பரப்பில் (குறிப்பாக அமெரிக்காவில்) எங்கள் உறவுகளை கொன்றவர்கள் கொடூரங்களைப் புரிந்தவர்களின் பிளைகள், குடும்பங்கள் ஆனந்தமாக சுத்தித் திரிகின்றன. கடத்தி கொண்டு போய் சித்திரவதை செய்து பின் போட்டுத்தள்ளுவது எத்தகைய வேதனையை அளிக்குமென அவர்களுக்கும் காட்டமுடியும். ஆனால் அதை செய்ய எம்மிடம் தில் இருக்கிறதா? எமது வாழ்வையே உதறித்தள்ளக்கூடிய தியாகம் இருக்கிறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த எந்த இணையதில வரவில்லை, என்ன என்ன பிழை காணலாம். உயிருடன் இருக்கும் மட்டும் எல்லா வசையும் பாடுறது, ஆக்கபூர்வமாக எதுவும் செய்கிறதில்லை. எல்லாம் முடிந்தபிறகு, ஒப்பாரி, மாறி மாறி குற்றம் சொல்லுறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுகுடியிருப்பு முள்ளி வாய்கால்லில எங்கட உறவுகள அவன் வகை தொகை என்று பாக்காமல் கொல்லேக்க நாங்களும் சிங்கள தேசத்தில குண்டுவல வைச்சு சிங்களவன கொண்டு இருக்கனும் ..

கொல்லுறது என்ரா இரண்டு குண்டை வைச்சுட்டு விடக் கூடாது.. நித்தமும் வெடிக்க வேணும் .. அவன்ட ரொக்கொட் 60000 ஆயிரம் என்ரா எங்கட ரொக்கோட் 100000 லச்சமாய் இருக்க வேனும்.. அப்ப தான் உந்த சர்வதேசமும் ஏதாவது செய்து இருக்கும்..சண்டை வேண்டாம் சாமாதானத்துக்கு போங்கோ என்று..

எங்களுக்கு எப்பவும் போன பஸ்சுக்கு கை காட்டித் தானே பழக்கம்.. :lol:<_<

Edited by ரவுடி

இப்போது பயங்கரவாதம் செய்வதில் பயன் இல்லை... சிங்களவனுடன் ஒட்டி வாழுவதே சரியாக படுகிறது.. அதையே மக்களும் செய்வார்கள் எண்டு படுகிறது.. எமது பழக்கவழக்கங்களில் மிக சீரியசாக எடுக்கப்படும் நம்பிக்கை துரோகத்தை செய்து, அத்துடன் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று, எமது பெண்கள் கற்பழித்து (சிங்களவனை விட அதிகமாய்!) அநியாயம் செய்த இந்தியாவிடமே பல்லை காட்டும் போது.. இலங்கை எமக்கு எம்மாத்திரம்..

இப்போதையதேவை வடக்கு கிழக்கை மேற்கோடு இணைப்பதுதான்... அது போதும் இன்னும் ஒரு 5 வருசத்தில் இன்னோரு உலகளாவிய புரட்சியை உண்டு பண்ண. சிங்களவனே தொடக்கிவைப்பான்..

ஆனால் எம்மை எழும்பவிடமாட்டர்கள்.. விட்டாழும் விடுவது அடிச்சு நொறுக்கி கீழே அமத்ததான்.. அகவே எமக்கு மேற்கின் நட்பு வேண்டும் அதற்க்கும் பலமான மக்கள் அமைப்புக்கள் தேவை. அதற்க்கு ஒற்றுமை தேவை. ஒற்றுமை இல்லாத அமைப்புகளை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்திற்க்கு ஒரு நாடும் ராஜதந்திரத்திற்ற்கு இணயமாட்டார்கள்.

பயங்கரவாதம் மூலம் எதுவும் செய்யமுடியாது. மனிதாபிமானம் மூலமும் எதுவும் செய்யமுடியாது..

பேரம் பேசுதலின் மூலம் எல்லோரும் செய்கிறார்கள். நம்பிக்கையில்லத சமூகத்துடன் யாரும் பேசுவத்தில்லை. ரிஸ்கெடுப்பதில்லை.

புதுகுடியிருப்பு முள்ளி வாய்கால்லில எங்கட உறவுகள அவன் வகை தொகை என்று பாக்காமல் கொல்லேக்க நாங்களும் சிங்கள தேசத்தில குண்டுவல வைச்சு சிங்களவன கொண்டு இருக்கனும் ..

கொல்லுறது என்ரா இரண்டு குண்டை வைச்சுட்டு விடக் கூடாது.. நித்தமும் வெடிக்க வேணும் .. அவன்ட ரொக்கொட் 60000 ஆயிரம் என்ரா எங்கட ரொக்கோட் 100000 லச்சமாய் இருக்க வேனும்.. அப்ப தான் உந்த சர்வதேசமும் ஏதாவது செய்து இருக்கும்..சண்டை வேண்டாம் சாமாதானத்துக்கு போங்கோ என்று..

எங்களுக்கு எப்பவும் போன பஸ்சுக்கு கை காட்டித் தானே பழக்கம்.. :D<_<

எதுக்கு அவ்வளவு தூரம் போவான்.... ஆரம்பத்தில் ஒண்டு ரெண்டு தமிழ் சனம் சிங்களவரினால் கொல்லப்படும்போது பல சிங்கள சனத்தை போட்டு தள்ளியிருந்தால்...தொடர்ந்து செய்திருந்தால் இது ஓர் உக்கிர இனப்போராக மாறியிருக்கும்.. சிங்களவனிடம் இருந்து தன்னை பாதுகாப்பது என்ர குறிக்கோளை உடைய அதில்லேயே கண்னாயிருக்கும் ஒரு இன கூட்டத்தை உருவாக்கியிருக்கலாம். இந்நிலை, தமிழ்நாட்டையே ஒரு ஆட்டம் ஆட்டியிருக்கும். ஆடவைத்திருக்கலாம். மிக மிக மிக மிக இலகுவாக....

எங்களுக்கு எப்பவும் போன பஸ்சுக்கு கை காட்டித் தானே பழக்கம்.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

smiley-laughing006.gif smiley-laughing006.gif smiley-laughing006.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.