Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆந்திர (காங்கிரஸ்)முதல்வர் மாயம்: ஹெலிகாப்டர் எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tbltopnews1_60390871764.jpg

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார். காலை 8.35 மணிக்கு அவர் புறப்பட்டார். 9.35 மணி வரை ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற அரசு ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் வந்தது. அதன் பிறகு சிக்னல் கிடைக்வில்லை. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் எங்கே ? : காலை 9.35க்கு பிறகு ஆந்திர முதல்வருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அரசு வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. முதல்வர் எங்கே என்று ஆந்திர மாநிலம் தேடி வருகிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தரையிறங்கிருக்கலாம் என்றும் இதனால் அவர் ஏதும் பிரச்னையில் சிக்கி இருக்கலாம் என்றும் ஆந்திர ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆந்திர முதல்வரை தேடும் பணியில் 7 ‌‌‌‌‌‌ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

உள்துறை அமைச்சகம் கருத்து: ‌ முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ராணுவ ‌ஹெலிகாப்டரும் காணாமல் போன ஹெலிகாப்டரை ‌தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னை குறித்து ஆழமாக கவனித்து வருகிறது உள் துறை அமைச்சகம் . பிரச்னை இன்னும் முடிவுக்கு வராததால் குழப்ப நிலை நீடிக்கிறது. ஆந்திர முதல்வருடன் தலைமை செயலக அதிகாரிகள் 2 பேர் மற்றும் பைலட்கள் 2 பேரும் மாயமாகியுள்ளனர்.

ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா பேட்டி : ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ராஜசேகர ரெட்டி நலமாக இருக்கிறார் என நம்புகிறோம். அவரை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணியில், பெங்களூரு, செகுந்தராபாத், கிருஷ்ணபட்டணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ‌‌ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் முதல்வர் பத்திரமாக மீட்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை மற்றும் டி.வி., நிருபர்களுக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் கி‌டைத்தால் அரசுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயாமான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி காங்கிரஸ் கட்சியும் கவலை தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வர் மாயம்: சோனியா தீவிர ஆலோசனை

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானது பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கர்னூல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று காலை 8.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐதராபாத்தில் இருந்து விழா நடக்கும் இடம் 350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதை காலை 10 மணிக்கு சென்றடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட 65 நிமிடங்கள் கழித்து எந்த தொடர்பும் இல்லை. காலை 9.35 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வரை தேடும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஈடுபட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன.

ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. மொத்தம் 10 ஹெலிகாப்படர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த மின் விளக்குகளுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அடந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து தமிழக எல்லைப்பகுதியிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி வீரப்ப மொய்லி சோனியாவிடம் விளக்கம் கொடுத்துள்ளார். ஆந்திர முதல்வரை தேடும் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சோனியா அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15667

Edited by pepsi

கூடவே கொலைஞரையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம்

(ஐயோ...இந்தியாவை பகைக்காதீங்கப்பா....அவங்கள் இல்லாட்டி எமக்கு விடிவே இல்லை...) :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி லத்திகா அவர்கள் சரணடைந்து விட்டதாக்த் "தற்ஸ் தமிழில்" தகவல் வந்திருகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி லத்திகா அவர்கள் சரணடைந்து விட்டதாக்த் "தற்ஸ் தமிழில்" தகவல் வந்திருகின்றது.

அடப்பாவி. அவர் சரணடையவில்லை. அவருடைய பெயர் 'லத்திகா சரண்'. :lol::D:( :(

அடப்பாவி. அவர் சரணடையவில்லை. அவருடைய பெயர் 'லத்திகா சரண்'. :lol::D:( :(

முடியல ....சிரிப்பைத் தாங்க முடியல.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி லத்திகா அவர்கள் சரணடைந்து விட்டதாக்த் "தற்ஸ் தமிழில்" தகவல் வந்திருகின்றது.

அடப் பாவிங்களா ........

தேடப்படும் ஒரு குற்றவாளியையா ..... இவ்வளவு நாளும் டி.ஐ.ஜி. ஆக வைத்திருந்தனீங்கள். smiley-laughing021.gif

ராஜசேகர ரெட்டி மாயமானது என்ற செய்தி கேட்டு இந்திய நாடே கலங்கி நிற்கிறது. விரைவில் ஆறுதல் தரும் செய்தி கிடைக்கும் என நம்புவோம் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்இ

இன்று (புதன்கிழமை) காலையில் என்னை நடுங்க வைத்த செய்தியிலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. ஆந்திர முதல்வரும் என் ஆருயிர் நண்பருமான ஒய்.எஸ்.ஆர். ரெட்டி என்ன ஆனார் என்ற கேள்விக்கு விடைதேடி நான் மட்டுமல்ல நாடே கலங்கி நிற்கிறது. விரைவில் ஆறுதலான செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்று கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜசேகர ரெட்டி மாயமானது என்ற செய்தி கேட்டு இந்திய நாடே கலங்கி நிற்கிறது. விரைவில் ஆறுதல் தரும் செய்தி கிடைக்கும் என நம்புவோம் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அறிக்கைவிடுறதுக்கு ஒரு அளவே இல்லையேப்பா??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி-நடிகை ரோஜா சந்திப்புதான் ஆந்திர அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்! இந்த சந்திப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விரைவில் காங்கிரசில் சேர்கிறார் ரோஜா என்று ஒய்.எஸ்.ஆரே கூறியிருக்கும் நிலையில் நடிகை ரோஜாவுடன் பேசினோம்.

மேடைகளில் ஒய்.எஸ்.ஆரை கடுமையாக விமர்சனம் செய்தவர் நீங்கள். எப்படி இருந்தது உங்கள் சந்திப்பு?

ரோஜா : நீங்கள் சொல்வது உண்மைதான். கடந்த காலங் களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக் கிறேன். முதல்வரை சந்திக்க திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், என்னுடைய உறவினருமான கருணாகர ரெட்டிதான் ஏற்பாடு செய்தவர். அவரிடம் முதலில் என்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்தான்... "முதல்வர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத் திருக்கிறார். உங்களை சந்திப்பதில் அவருக்கு எந்த பிரச்சனை யும் இருக்காது' என்று என்னை அழைத்துச் சென்றார்.

கருணாகர ரெட்டி சொன்னது போலவே, முதல்வர் ஒய்.எஸ்.ஆர். என்னை மிகுந்த அன்போடு வரவேற்றார். மதுக்கடைகள் ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக நான் நடத்திய ஆர்ப்பாட்டங்களைப் பற்றி பாராட்டி பேசினார். பெண்கள் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் உங்கள் அரசியல் எனக்கு பிடிக்கும் என்றார். உங்களைப் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று அவரே என்னை கட்சியில் இணையு மாறு அழைத்தார். பெண்கள் மீது அவர் வைத்தி ருக்கும் மதிப்பும், மரியாதையும் என்னை சிலிர்க்க வைத்தது. பெரிய அளவுக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத கவிதா இந்திரா ரெட்டிக்கு உள்துறை அமைச்சர் பதவியை கொடுத்து கவுரவித்திருக்கிறார் ஒய்.எஸ்.ஆர். என்னை அவருடைய தங்கையாக பாவிக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகு அவர் மீதான மதிப்பு உயர்ந்துவிட்டது. ஆட்சியில் இருப்பதால் என்னால் அவர்களுக்கு உடனடி பலன் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனாலும் கூட என்னை வரவேற்கிறார்கள்.

குறுகிய காலத்தில் மாநில மகளிரணித் தலைவி பதவியெல்லாம் கொடுத்து ஆந்திர அரசியலில் உங்களை உயர்த்திய சந்திரபாபு நாயுடுவுக்கு துரோகம் செய்யப்போகிறீர்களா?

ரோஜா : சந்திரபாபு நாயுடு மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. ஆனால் உட் கட்சி துரோகத்தை அவரால் தடுக்க முடிய வில்லை. 2 முறை நான் தெலுங்கு தேசம் கட்சியினராலேயே தோற்கடிக்கப்பட்டேன். தெலுங்கு தேசத்துக்காக என்னுடைய மொத்த நேரத்தையும் செலவிட்டிருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு யாரும் இவ்வளவு தூரம் கட்சிக்காக உழைக்க முடியாது. சந்திரபாபுவுக்கு நிகராக அதிக அளவு கூட்டங்களில் கலந்துகொண்டிருக் கிறேன். கடந்த 5 வருடங்களில் ஆயிரம் கூட் டங்களுக்கு மேல் பேசியிருக்கிறேன். ஒரு லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து 2 கோடி மக்களை சந்தித்திருக்கிறேன். முதல்வ ராக இருந்த ஒய்.எஸ்.ஆரை பெரிய பணக் காரர்களும், சீனியர் லீடர்களுமே விமர்சிக்க பயந்த காலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வ ராக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தைரியமாக விமர்சித்து வந்தேன்.

சந்திரபாபு என்னை கவுரவமாக நடத்தினார் என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் கட்சியில் எனக்கு எதிராக துரோகம் செய்தவர்களை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை. என்னுடைய சினிமா கிளாம ரால் மக்களை அதிகம் திரட்ட முடியும் என்றுதான் எனக்கு பதவி கொடுத்தார்கள். என்னுடைய பணம், கிளாமர் என்று எல்லா வற்றையும் கட்சிக்காக பயன்படுத்தினார்கள். சிரஞ்சீவி கட்சியினர், தேர்தல் நேரத்தில் என்னைப் பற்றி அபாண்டமான ஆபாசப் புகார்களை எழுப்பினார்கள். ஆனால் அந்த நேரத்தில்கூட கட்சி எனக்கு பயன்படவில்லை. நானே ஒற்றைப் பெண்ணாக எல்லாவற்றையும் எதிர் கொண்டேன். சிரஞ்சீவியை கடுமையாக தாக்கிப் பேசி னேன். கட்சிக்காக இவ்வளவும் செய்தும், கடந்த தேர் தலில் தோற்கடிக்கப்பட்டேன். கட்சிக்காக எதையும் செய்யாத நடிகை ஜெயசுதா வெற்றிபெற்றார். மக்களுக் காக எதையுமே செய்யாத நடிகை விஜயசாந்தி எம்.பி. யாகிறார். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்ட நான் தோற் கடிக்கப்பட்டேன். இதனால் மனம் வெறுத்துப் போய் அரசியலில் இருந்தே ஒதுங்கி விடலாம் என்று நினைத் தேன். மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்து "நாடோடிகள்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த நிலையில்தான் காங்கிரஸ் என்னை அழைக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா?

ரோஜா : காங்கிரசை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால்தான் என்னைப் போன்றவர் களை சந்திக்கிறார் ஒய்.எஸ்.ஆர். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவிருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் இடத்திற்கு போவதில் தவறில்லை என்று முடிவெடுத்துள்ளேன். மாநில அரசியலில் ஈடுபட்டால் ஒய்.எஸ்.ஆர். பற்றி நான் பேசியவற்றையே திரும்ப போட்டுக்காட்டி அரசியல் செய்வார்கள் என்பதை ஒய்.எஸ்.ஆரிடமே சொன்னேன். "நீங்கள் மாநில அரசியலில்தான் இருக்க வேண்டும் என்றில்லை. தென் இந்தியா முழுவதும் அறிந்த நடிகை என்பதால் தேசிய அரசியலில் உங்களுக்கு ஒரு இடத்தை காங்கிரஸ் தரும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று ராகுல்ஜி விரும்புவதால் நீங்கள் தமிழக அரசியலில் ஈடுபடலாம். தமிழகத்தில் உங்களுக்கு இருக்கும் பாப்புலாரிட்டியை காங்கிரஸ் கட்சிக்கு பயன்படுத்துங்கள்' என்று சொன்னார் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.

அப்படியானால் ஆந்திராவை கலக்கியதுபோல் தமிழகத்தையும் கலக்கப் போகிறீர்களா?

ரோஜா : தமிழ்நாடு என்னை வளர்த்த நாடு. அந்த மக்களுக்காக உழைக்க நான் தயாராக இருக் கிறேன். அதற்கான தகுதியான இடத்தை காங்கிரஸ் எனக்கு கொடுக்கும் என்று நம்புகிறேன்.

-ச.கார்த்திகைச்செல்வன்

nakkeeran

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜாவை சந்திச்சிருக்கிறார்.. பிறகு ஆளைக் காணேல்ல.. என்னையா நடக்குது அங்க? :(

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 3, செப்டம்பர் 2009 (0:9 IST)

ரெட்டி மாயம்: இஸ்ரோ அனுப்பிய 41 படங்கள் ஆய்வு

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென இன்று காலை மாயமானது. முதல்வர் மாயமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை தேடும் பணியில் ஆந்திர மாநில போலீசார் மற்றம் மத்திய பாதுகாப்பு படை போலீசார் 7 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். தேடும் பணியில் நக்சல் ஒழிப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரோவின் உதவியும் தேடுதல் வேட்டையில் கோரப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் உதவியுடன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இஸ்ரோவின் சிறப்பு விமானம் தேடுதல் வேட்டையில் இணைந்துள்ளது. அதன்படி இஸ்ரோ செயற்கைக்கோள் 41 படங்களை அனுப்பியுள்ளது. அந்த 41 படங்களை ஆய்வு செய்து வருகின்றனர்..

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு, சேமக்கலம் ,பால் இவைகளை ஆயத்தப்படுத்தவும். கோவிந்தா கோகோகோவிந்தா

உந்த ரோசாவின் கணவன் தான் செல்வமணி....ஈழத் தமிழர்கள் சார்பான பல போராட்டங்களில் பங்கெடுத்தவர்...இன்று அவரின் மனைவி காங்கிரசுடன் சேரப் போகின்றார்...!!!

(No No ...நான் எதிரிகளை கூட்ட விரும்பவில்லை....இந்தியாதான் எமக்கு எல்லாம்...சோனியாதான் தமிழர்களின் விடிவெள்ளி)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணாமல் போதலை அடுத்து நடந்தேறிக் கொண்டிருக்கும் கூத்துகளை பார்ப்பது.. வன்னிக்குள் எமது போராளிகளை அவர்களின் நகர்வுகளை விமானங்களை யார் யார் எவ்வாறு உளவு பார்த்து தகவல்கள் வழங்கினார்கள் என்ற உண்மையை வெளிக்கொணரும். மூடி மறைக்கப்படும் திரைகளையும் தாண்டி சில ஒளிக்கீற்றுகள் தெரியத்தான் செய்யும்.

ரெட்டியை காணவில்லை என்று அவர் சென்ற உலங்குவானூர்தியை கண்டுபிடிக்க.. இந்திய பிராந்திய வல்லாதிக்கம்.. அமெரிக்க வல்லாதிக்கத்தின் காலடியில் கிடந்து கெஞ்சுகிறது. இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.. தேடுதலில் ஈடுபட்டிருக்கிறது. இஸ்ரோ.. தென்னிந்தியாவை பிரதம தளமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இந்திய விண்வெளி மற்றும் அதன் பாதுகாப்பு உளவு சம்பந்தப்பட்ட ஒரு கட்டமைப்பு. வெறும் அறிவியல் சார்ந்த கட்டமைப்பு அல்ல..!

ரெட்டி எமக்கு கிடைத்திருக்கும் ஒரு ரொட்டித் துண்டு. அதை எந்தெந்த நாய் எவ்வெவ்வாறு கவ்வ அலைகின்றன என்பதை நோக்குவதும்.. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தை யார் யார் நின்று வழிநடத்தினார்கள் என்பதையும் ஓரளவுக்கு ஆதார பூர்வமாக இதில் இருந்து கண்காணிக்கலாம்.

மற்றும்படி.. ரெட்டியை கடத்தினால் என்ன கொன்றால் என்ன..! இவங்க எல்லாம் எமது மக்களின் துயருக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாத மிருகத்திலும் கேடான பிறவிகள்..! :(

-----------------------------------

ரெட்டி: அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உதவி நாடல்

ஹைதராபாத்: முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் மாயமானது குறித்து கண்டுபிடிக்க அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியை ஆந்திர அரசு, மத்திய அரசின் மூலமாக நாடியுள்ளதாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ரமாகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 7 மணிக்கு ஆந்திர மாநில நிதியமைச்சர் ரோசையா, தலைமைச் செயலாளர் ரமாகாந்த் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ரெட்டி கூறுகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நல்லமலை வனப்பகுதியில், காலை 9.15 முதல் 9.25 மணிக்குள் முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை சில கிராமத்தினர் பார்த்துள்ளனர். அதுதான் ஹெலிகாப்டர் கடைசியாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது.

முதல்வரின் ஹெலிகாப்டர் கடைசியாக பார்க்கப்பட்ட இடம் நல்லமலைக் காட்டில், பிரகாசம் மற்றும் ஓங்கோல் மாவட்டத்தை நோக்கியுள்ள வனப் பகுதியாகும். எனவே அந்த பகுதியில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தேடுதல் பணியில் ராணுவ, விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது மோசமான வானிலை நிலவி வருவதாலும், மழை பெய்து வருவதாலும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்துவது தடை பட்டுள்ளது.

இருப்பினும் சிஆர்பிஎப் மற்றும் ஆந்திர மாநில சிறப்புக் காவல் படையினர் தரை மார்க்கமாக தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா - இஸ்ரோ உதவி...

சம்பந்தப்பட்ட வனப்பகுதியின் சாட்டிலைட் படங்களை பெறுவதற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியை நாடியுள்ளோம். சந்தேகப்படும் வனப்பகுதியின் சாட்டிலைட் படங்கள் கிடைத்தால் அது தேடுதல் நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும்.

அதபோல இஸ்ரோவின் உதவியையும் நாடியுள்ளோம். இஸ்ரோ தனது சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்துள்ளது. அது மிகவும் குறைந்த உயரத்தில் பறக்கக் கூடியது. இரவிலும், மழையிலும் கூட அது பறக்க முடியும். அதன் மூலமும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதுவரை ஹெலிகாப்டர் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்த தகவல் இல்லை.

அது பழைய ஹெலிகாப்டரா, பறக்கும் தகுதியுடன் உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆராய இப்போது நேரம் இல்லை. முதல்வரை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் ரெட்டி.

இன்னும் நல்ல செய்தி வரவில்லை - ப.சிதம்பரம்

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இன்னும் நல்ல செய்தி வரவில்லை.

ஹெலிகாப்டர் கடைசியாக காணப்பட்ட பகுதிக்கு சிஆர்பிஎப் வீரர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் தரை மார்க்கமாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர். அதேபோல ஆந்திர பிரதேச சிறப்புப் போலீஸ் படையினரும் விரைகிறார்கள்.

தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இரவிலும் தேடுதல் வேட்டையை மேற்கொள்ளுமாறு ஆந்திரத அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

நாளை காலை தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்படும். தற்போது இரவு நேரமாகி விட்டதாலும், மழை பெய்து வருவதாலும் ஹெலிகாப்டர் மூலமாக தேடுதல் வேட்டை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.

நல்லதே நடக்கும் என அனைவரும் பிரார்த்திப்போம் என்றார் சிதம்பரம்.

அமைச்சர்கள் விரைந்தனர்...

இதற்கிடையே அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, பிருத்விராஜ் சவான் ஆகியோர் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.

தட்ஸ்ரமிழ்.கொம்

-----------------------------

India leader's helicopter missing

A helicopter carrying a powerful Indian politician has disappeared during a flight over a Maoist rebel stronghold in the south, officials say.

Andhra Pradesh Chief Minister YS Rajasekhara Reddy's helicopter took off from Hyderabad on Wednesday morning.

But it disappeared in bad weather as it flew over forests where Maoist rebels are known to operate, officials said.

A massive operation involving air force helicopters and fighter jets has been launched to try to locate the aircraft.

Mr Reddy is an influential politician from the Congress party and the situation is being closely monitored by federal ministers in Delhi.

Andhra Pradesh is one of several Indian states with a significant Maoist rebel presence.

No contact

"We hope that he would be safe but we could not establish any contacts as the forest is dense and heavy rains are continuing in the area," state Finance Minister K Roshaiah said.

He appealed to the people living in and around the Nallamalla forest - where the helicopter went missing - to look out for the chief minister, saying he might be stranded in a remote place.

The minister said the helicopter might have made an emergency landing because of the heavy rain in the area.

Rain has made the search operation difficult, reducing many areas to mud, he said.

The helicopter carrying Mr Reddy and four others took off from Hyderabad's Begumpet airport at 0845 IST (0315 GMT) bound for the village of Anupally in Chittoor district.

It was scheduled to land at 1045 but went missing at 0936 while flying over Kurnool district.

There are many Maoist rebels in the district and officials say they are worried about the chief minister's safety.

bbc.co.uk

Edited by nedukkalapoovan

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி காலமானார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. ஐந்து பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.