Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

NDTV கருத்துக்க்னிப்பு: Should everyone in India know Hindi? - 'NO' என்று குத்துங்கோ...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின் பதிவி ஆசை பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் இந்தி தினிப்பு முயற்ச்சி மிக வேகமாக நடுந்து வருகிறது

http://www.ndtv.com/convergence/ndtv/new/N...=344&#VPlay

Edited by சிவகுரு

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியாச்சுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ் சிறி.... தற்ச்சமயம் நிலைமை நமக்கு சாதகமாக உள்ளது...

குத்தாதவங்கெல்லாம் குத்திடுங்கோ..! குத்திடுங்கோ..!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமான அளவுக்கு குத்தியாச்சு......

  • கருத்துக்கள உறவுகள்
:wub: பொறுங்கள். இது யாருடைய பிரச்சனை. தமிழ்நாட்டுத் தமிழன் விரும்பினால் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்கள் 7 கோடி, நாம் எத்தனை? கிந்தி தனக்கு வேணுமா இல்லையா என்பதை அவந்தான் தீர்மானிக்க வேண்டும். அவனுக்காக நாம் வாக்குப்போட முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

:lol: பொறுங்கள். இது யாருடைய பிரச்சனை. தமிழ்நாட்டுத் தமிழன் விரும்பினால் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்கள் 7 கோடி, நாம் எத்தனை? கிந்தி தனக்கு வேணுமா இல்லையா என்பதை அவந்தான் தீர்மானிக்க வேண்டும். அவனுக்காக நாம் வாக்குப்போட முடியாது.

இதென்ன திடீரென பிரிவினை?

அப்போ ஈழம் வேண்டுமா, வேண்டாமாவென நீங்களே முடிவு செய்து எப்படியும் போங்களென (தற்போது தனி மனிதனின் பதவி சுயநலத்தால் நடந்தது எப்படியாகினும்) நாங்கள் விட்டோமா? முத்துக்குமார் முதற்கொண்டு தமிழுணர்வாளர்கள் தீக்குளிக்கவில்லை? தார்மீக ஆதரவு தரவில்லை? உங்களுக்காக நாங்கள் ஏன் இதைச் செய்யவேண்டுமென யாராவது எண்ணியதுண்டா?

தமிழகத் தமிழர்கள் யாரும் இங்கே அந்த 'மந்தி'யை வரவேற்கவில்லை..இதற்கும் வாக்கெடுப்பு நடாத்தி நிரூபியுங்களென கேட்கவேண்டாம். உளுத்துப்போன தேசியவாதமும், அந்நிய ஒரு மொழிக்கொள்கையையும் என்றுமே பெரும்பான்மை தமிழர்கள் விரும்பியதில்லை. தேசியவாதி காமராஜரை தோற்கடித்து, இளையோரின் ஆதரவால் இன்றைய தி.மு.க வும் 1967ல் பதவிக்கு வர முதற்காரணியே அதுதான். வத்தலோ, தொத்தலோ, இன்னமும் திராவிடக் கட்சிகளையே தமிழகத்தார் சார்ந்திருப்பதற்கும் அதுவே காரணம்.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ராஜவன்னியன்,

நீங்கள் எனது கருத்தை சரியாக விளங்கிகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். தமிழகத்துத் தமிழர்கள் இந்தி வேண்டும் என்று வாக்களிக்க ஆரம்பித்தால் அதைத் தடுக்க எம்மால் முடியுமா?? கிந்தி வேண்டுமா இல்லையா என்பதை அவர்கள் தானே தீர்மானிக்க வேண்டும். சில ஈழத்து ஆதரவாளர்கள் தீர்மானிக்க முடியுமா??

உங்கள் கருத்தை நீங்கள் சொல்லி விட்டீர்கள். அதாவது இந்தித் திணிப்பை எதிர்ப்பதென்பதை. ஆனால் மீதமுள்ள 7 கோடி மக்களின் விருப்பை நாங்கள் தீர்மானிக்க முடியுமா??

இது பிரிவினை இல்லை ராஜவன்னியன். தமிழகத்துத் தமிழனை நாம் ஒருபோதுமே இந்தியனாகக் கருதியதில்லை. அவர்கள் இந்தித் திணிப்பை எதிர்க்க முடிவெடுத்தால் எமது பூரண ஆதரவு அதற்குண்டு. ஆனால் அந்த முடிவை நாம் எடுக்க முடியாது. தமிழகத்துத் தமிழர்தான் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் வேண்டுமென்பதை நாங்கள் லட்சக்கனக்கில் உயிர்களைத் தியாகம் செய்து உலகிற்குக் காட்டினோம். அதற்கு தமிழகமும் எமக்கு ஆதரவு தந்தது. அதேபோல் இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்று தமிழகம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அல்லது நடந்தாவது காட்ட வேண்டும். அப்போதுதான் மத்திய தேசியவாதிகளுக்குப் புரியும். அதற்கு ஈழத்தமிழன் ஆதரவு தருவதும் சாத்தியமாகும். அடங்கியிருக்கும் இந்தி திணிப்பிற்கு எதிரான உணர்வு வெளிப்பட வேண்டும்.

ஈழம்தான் ஒரே தீர்வென்பது ஈழத்தமிழனால் எடுக்கப்பட்ட முடிவு. அது தமிழகத்துத் தமிழனால் ஈழத்தமிழன் மேல் திணிக்கப்படவில்லை. அதேபோல கிந்தியை எதிர்ப்பதெனும் முடிவை தமிழகம்தான் எடுக்க வேண்டும். ஈழத்தமிழன் அதை தமிழகத்தின்மேல் திணிக்க முடியாது. ஆனால் ஆதரவென்பது இருபக்கத்திலிருந்தும் இந்த இரு கொள்கைகளுக்காகவும் எப்போதுமே இருந்துகொண்டேயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சகோதரனின் கேள்வி சிந்திக்க தூண்டுகிறது.

learning a language is one's wish.No one should try to impose it. this proposal will unnecessarily raise the language issue. Hindi is neither superior nor inferior than any other indian language. i am serving in indian armed forces, and as an individual i am against imposition of it. if anyone willing to learn hindi, let him learn. i never knew hindi, when i joined the Forces.

Sitting in Delhi, if any one thinks that he can impose anything on diverse indian people, he is unnecessarily disturbing the integrity of the Nation.

When MK Azhagiri asks permission to speak in Tamil in parliament, he is denied permission. if u r not broad enough to accept other fellow indian language to be spoken in indian parliament, how can anyone expect that everybody else will accept this proposal. Crores of public money is wastefully spent in the name of propogation of hindi. if other-language-speaking people too demand that their language also be propagated with the Central Funds, will the government do it?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துத் தமிழனை நாம் ஒருபோதுமே இந்தியனாகக் கருதியதில்லை. அவர்கள் இந்தித் திணிப்பை எதிர்க்க முடிவெடுத்தால் எமது பூரண ஆதரவு அதற்குண்டு.

தமிழனாகவே இருப்போம், மரிப்போம். இடையில் பூட்டப்பட்ட அடிமைச் சங்கிலிகள் தேவையில்லை! :unsure:

ஈழம் வேண்டுமென்பதை நாங்கள் லட்சக்கனக்கில் உயிர்களைத் தியாகம் செய்து உலகிற்குக் காட்டினோம். அதற்கு தமிழகமும் எமக்கு ஆதரவு தந்தது. அதேபோல் இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்று தமிழகம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அல்லது நடந்தாவது காட்ட வேண்டும். அப்போதுதான் மத்திய தேசியவாதிகளுக்குப் புரியும். அதற்கு ஈழத்தமிழன் ஆதரவு தருவதும் சாத்தியமாகும். அடங்கியிருக்கும் இந்தி திணிப்பிற்கு எதிரான உணர்வு வெளிப்பட வேண்டும்.

இதைத்தான் இன்னமும் எதிர்பார்க்கிறோம். சுயநலப் பேய்களும், ஜால்ராகளும் ஆக்கிரமித்துள்ள நிலையில், அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என சகித்துக்கொண்டு போவோரின் எண்ணிக்கை பெரும்பான்மையாகிவிட்ட நிலையில், இவைகள் நடைபெற சில காலமெடுக்கும்.

ஈழம்தான் ஒரே தீர்வென்பது ஈழத்தமிழனால் எடுக்கப்பட்ட முடிவு. அது தமிழகத்துத் தமிழனால் ஈழத்தமிழன் மேல் திணிக்கப்படவில்லை. அதேபோல கிந்தியை எதிர்ப்பதெனும் முடிவை தமிழகம்தான் எடுக்க வேண்டும். ஈழத்தமிழன் அதை தமிழகத்தின்மேல் திணிக்க முடியாது. ஆனால் ஆதரவென்பது இருபக்கத்திலிருந்தும் இந்த இரு கொள்கைகளுக்காகவும் எப்போதுமே இருந்துகொண்டேயிருக்கும்.

சரி. கொள்கைகள் அப்படியே இருக்கட்டும். ஒரு இணையத்தில் தார்மீக ஆதரவாக வாக்களிக்கலாமில்லையா? :lol:

இங்கே யாழில் இணைக்கபடும் அனைத்து இணையதள வாக்கெடுப்புகளிலும் பெரும்பாலும் நான் வாக்களிப்பதுண்டு.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.