Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவரின் வார்தையை மதிப்பவர் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கமுடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய தலைவரின் வார்தையை மதிப்பவர் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கமுடியாது

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது!

விடுதலைப் புலிகளது இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பலம் பொருந்திய சக்தியாக புலம் பெயர் தமிழர்களே உள்ளனர். தமது தாயக மக்களின் விடுதலைக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காகவும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் தேசத்து மக்களையும் அரசையும் தமது நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கு மேலும் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்க முடியும்.

இந்த மக்கள் சக்தியைச் சிதைப்பதற்கான பெரும் திட்டமிடல்களுடன் சிங்கள தேசம் பலரை நம் மத்தியில் ஊடுருவச் செய்து, தகவல்களைத் திரட்டுவதுடன் பிளவுகளை உருவாக்கும் சதி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. சிங்கள தேசத்தின் தமிழர்கள் மீதான யுத்தம் புலம்பெயர் தேசமெங்கும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்காக நம்மவர்கள் பலர் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளனர் என்ற அபாயகரமான உண்மைகளையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சமாதான காலத்தில் இவ்வாறு ஊடுருவல் செய்த பலர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்ததிலும், அவர்களது களமுனைத் தகவல்களை எதிரிக்கு வழங்கிப் பேரழிவுகளை உருவாக்கியதையும் இறுதிவரை கள முனையில் இருந்த பல போராளிகள் கண்ணீரோடு தெரிவிப்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். மிகவும் உசார் நிலையிலுள்ள சிங்கள உளவுப் பிரிவினரின் முழுக் கவனமும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பப்பட்டுள்ளது. எத்தனை தமிழர்கள் இதுவரை விலை போயுள்ளனர் என்ற கணக்கு இப்போதைக்கு வெளிவரப் போவதில்லை.

புலம்பெயர் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதிலும், குழுக்களை உருவாக்குவதிலும் சிங்கள தேசம் எடுக்கும் முயற்சிக்குப் பலர் துணை போக ஆரம்பித்துள்ளதாகவே அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில் இந்த நிலை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது.

பிரான்சில் நடக்கும் போராட்டங்களில் தமிழ் மக்களைப் பெருந்தொகையில் திரட்டுவதற்காக களத்தில் முன்நின்று பாடுபடுபவர்கள் அழைப்பு விடும் நிலையில், அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிலர் மேற்கொள்ளும் பிரச்சார நடவடிக்கைகளின் பின்னணிகள் அவதானமாக ஆராயப்பட வேண்டும். போராட்டத்தில் மக்கள் பெருந்தொகையாகக் கலந்து கொண்டால், தாம் மேற்கொண்டுள்ள சதி முயற்சிகள் தோல்வி அடைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக முன் நின்று பாடுபடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது சேறு பூசும் அவதூறுகளும் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த வருட மாவீரர் தின உரையில் மிகத் தெளிவாகவே புலம்பெயர் தமிழர்களுக்கும், இளையோர்களுக்கும் தனது ஆணையைத் தெரிவித்துள்ளார். ‘புலம்பெயர் தமிழர்களே, போராடுங்கள்!, இளையோரே, போராடுங்கள்!’ என்பது அவரது வேத வாக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை தேசியத் தலைவர் அவர்கள் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளார். நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது விருப்பத்தை புலம் பெயர் தமிழர்கள் யாரும் தவிர்த்துவிட முடியாது.

எங்களது மண்ணின் விடுதலைக்காகவும், எங்களது மக்களின் விடிவிற்காகவும் தங்களை ஆகுதியாக்கி அந்த மண்ணில் தமிழீழக் கனவோடு கண்ணுறங்கும் 31,000 மாவீரர்களது தியாகமும், அந்தப் போர்க்களத்தில் தங்களைப் பலி கொடுத்த இலட்சத்திற்கும் மேலான தமிழர்களுக்கும், இறுதி யுத்த காலத்தில் சிங்கள தேசத்தின் இனஅழிப்புக் கொடூரங்களில் சிதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, உயிரோடு புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், போராளிகள், தளபதிகள் அனைவருக்குமாக நாம் என்ன கைமாறு செய்யப் பொகின்றோம்? இத்தனை தழிமர்களைக் கொன்று குவித்த பின்னரும் எஞ்சிய தமிழர்களை வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைகள் புரியும், கடத்திச் சென்று படுகொலைகள் புரியும் சிங்கள தேசத்திற்கு நாம் என்ன பதில் கொடுக்கப் போகின்றோம்?

புத்தன் போதித்த அன்பு சிங்களவனுக்குப் புரியாத மொழி. காந்தி போதித்த அகிம்சை இந்தியாவுக்குப் பொருந்தாத மொழி. எங்கள் தேசத்து உறவுகளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை புலம்பெயர்ந்து, பாதுகாப்புடன் நீதி ஆட்சி செய்யும் நிலங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்களே. நாங்கள் போராடுவதற்கும், எங்களுக்கான நீதியைக் கோருவதற்கும், எமது உறவுகளது அவலங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும் நாங்கள் வாழும் ஜனநாயகத்தைப் பேணும் நாடுகள் என்றுமே தடை போட்டதில்லை. எமக்கான போர்க்களம் என்றுமே திறந்துள்ளது. போராட வேண்டியவர்கள் நாங்கள் மட்டுமே. போர்க் களத்தில் நாங்கள் போராளிகள் மட்டுமே.

எங்களுக்கான கடமைகளை நாங்கள் செய்வது மட்டுமே எமது பணி. யார் வருகிறார்கள்? யார் வரவில்லை? அவர்கள் வந்தால், நாங்கள் வரமாட்டோம்! அவர்கள் வராவிட்டால் நாங்கள் வரமாட்டோம்! என்ற வார்த்தைகளும் வாதங்களும் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க எண்ணுபவர்களின் தேசியத் துரோகமாகவே கணிக்கப்பட வேண்டும்.

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது. தமிழ்த் தேசியத்திற்கான போர்க் களம் பொதுவானது. அங்கே நாம் வகிக்கும் பங்குகள் மட்டுமே எம்மை முதன்மைப்படுத்தும். மக்களே தலைமையைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். மக்களே யாரை ஏற்றுக்கொள்வது, யாரை நிராகரிப்பது என்பதை முடிவு செய்வார்கள். தலைவர்களாக யாரும் தம்மை நியமித்துக் கொள்ள முடியாது என்ற யதார்த்தம் தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தமது போர்க்களத்தை வழிநடாத்த, நெறிப்படுத்த யாருக்கு முடியும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். தேசியத் தலைவரை நேசிப்பவர்களே! மாவீரர்களை பூசிப்பவர்களே! எங்கள் மக்களை சிங்கள இனவாத அழிப்பிலிருந்து மீட்போம் என்ற உறுதியுடன் அனைவரும் போர்க்களத்திற்கு வாருங்கள்! அங்கே உங்கள் திறமைக்கான பணிகளும் பதவிகளும் காத்திருக்கின்றது.

புலிக்கொடி ஏந்திப் புயலாக வாருங்கள்! இது புலிகளின் காலம் என்று உறுதியோடு வாருங்கள்!!

நன்றி: ஈழநாடு (பாரிஸ்)

http://www.meenagam.org/?p=11441

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் அவ்வளவு மலிவானவனா? ஐந்திற்கும் பத்திற்கும் விலை போக?

தமிழன் அவ்வளவு மலிவானவனா? ஐந்திற்கும் பத்திற்கும் விலை போக?

http://www.tamilnational.com/tamil-eye/ind...-channel-4.html

.. இறைச்சிக்கறிக்கு தேங்காய்பாலோ, மாட்டுப்பாலோ நல்லது ....

விடுதலைப் புலிகளது இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பலம் பொருந்திய சக்தியாக புலம் பெயர் தமிழர்களே உள்ளனர்.

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது!

sherlockholmes.gif

.. இறைச்சிக்கறிக்கு தேங்காய்பாலோ, மாட்டுப்பாலோ நல்லது ....

இலங்கையில் மிகவும் மலிவான தமிழன் இறைச்சிக்கு பாலே தேவை இல்லை...

1958 ம் ஆண்டு க்கும் முன்னம் இருந்தே இதுதான் நிலை... அப்ப பிரபாகரன் பால் குடிச்சு கொண்டு இருந்தவர்... அவரை உருவாக்கினது உங்களை மாதிரி வாயாலை வெட்டி முறித்த தமிழ் சோமாரியள்தான்...

Edited by தயா

.. அவரை உருவாக்கினது உங்களை மாதிரி வாயாலை வெட்டி முறித்த தமிழ் சோமாரியள்தான்...

........ "தமிழனின் இறைச்சியை வைத்து வைத்துத் தான் அரசியல் நடத்தினோம்!!!!

ஏனெனில் தமிழனின் இறைச்சி மலிவாம்!!... ஏதோ பத்துக்கோடிக்கு கிட்டவேள்விக்கு இருக்குத்தானே என கணிப்பிட்டு விட்டார்கள், எமது ..............!

Edited by Nellaiyan

............. அழிந்து விட்டோம், இருப்பவர்களும் அழிக்கப்பட போகிறார்கள் ..... எங்கே விட்ட தவறுகளை உணர்ந்து ... மேற்கினதோ, கிழக்கினதோ காலிலாவது விழுந்து இருப்பவர்களையாவது சிங்கள மிருகங்களிடம் இருந்து காப்பம், எம் நிலங்கள் முழுவதும் பறிபோகும் முன்னாவது அதனை தடுப்போம், .... என்றில்லாமல் ................... இன்னும் இருக்கிறார், சிந்தனை, தூரநோக்கு!!!!!!!!!!!!!!

............... ஈழத்தமிழா, உலகிலேயே இழித்தவாய்கள் என்று ஓரினம், உன்னை விட வேறொன்றுமில்லை ............

Edited by Nellaiyan

........ "தமிழனின் இறைச்சியை வைத்து வைத்துத் தான் அரசியல் நடத்தினோம்!!!!

ஏனெனில் தமிழனின் இறைச்சி மலிவாம்!!... ஏதோ பத்துக்கோடிக்கு கிட்டவேள்விக்கு இருக்குத்தானே என கணிப்பிட்டு விட்டார்கள், எமது ..............!

உதை பண்டாரநாயக்கா காலத்திலை அவர்கள் வெளிப்படையாக சொல்லி தமிழனை வெட்டினதுதான்.... இப்ப ஏதோ புதுசு போலத்தான் கிடைக்கும்... ஏன் எண்டா பாரும் உமக்கு பிடிச்சிருக்கிறது புளிக்காச்சல்...

பிரபாகரன் எண்டவர் விட்ட பிழை என்ன எண்டால் உம்மடை மனிசியின் கையை சிங்களவன் பிடிச்சு இழுக்க முன்னம் அவன் இழுக்காதாவாறு தற்காத்து நிண்டதுதான்... அவருக்கு அப்ப தெரியாது நீர் எல்லாம் பிரபாகரனை சாட்டி சுகமாக வாழ வெளிநாட்டுக்கு தப்பி ஓடி போய் பதுங்குவியள் எண்டு... அப்பவும் அவர் ஓடினாலும் உதவுவாங்கள் எண்டு தான் நினைச்சு இருப்பார்...

இப்பிடி நீங்கள் எல்லாம் தூர நோக்கோடை பிரபாகரன் இருக்க இல்லை எண்டு சொல்லுவியள் எண்டு தெரிஞ்சு இருந்தால்... உங்கட மனிசி மாரின் கையை சிங்களவன் பிடிக்க முன்னமே அவர்களுடன் இணங்கி போய் இன்பமாக இருக்கும் வளியை தீர்க்க தரிசனமாய் சொல்லி தந்து இருப்பார்.... நீங்களும் சிங்களவனின் நிழலில் அவன் தரும் இன்பங்களை அணு அணுவாக அனுபவித்து புலம்பெயராமலே இலங்கையில் வாழ்ந்து இருக்கலாம்..

,,, சிங்களவனுக்கு போட்டி போட்டு துரையப்பாவில் தொடங்கி தமிழனை தமிழனே அழித்தோம்!! .... எம்மை வழி நடத்த ஒரு தலைமையும் இல்லாமல் போய்விட்டது!!!

இன்று புலி அழிவோடு தமிழர்களின் பிரட்சனைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், ரோட்டுப் போடுகிறான், பள்ளிக்கூடம் திறக்கிறான், ... இனி என்ன என்று ஒரு அரசியல் வங்குரோத்து மாற்றுக்கருத்துக் கூட்டம் ஒருபுறம், இன்னும் இருக்கிறார் ... பிடுங்குவார் என்று வாய்ச்சவடால்களால் வான வேடிக்கை காட்டும் கூட்டங்களுக்கு .... நடுவில் ஈழத்தமிழினம்!!

ஈழத்தமிழினம் உருப்படுமா??????????????????

பிரபாகரன் எண்டவர் விட்ட பிழை என்ன எண்டால் உம்மடை மனிசியின் கையை சிங்களவன் பிடிச்சு இழுக்க முன்னம் அவன் இழுக்காதாவாறு தற்காத்து நிண்டதுதான்...

...................அவருக்கு அப்ப தெரியாது நீர் எல்லாம் பிரபாகரனை சாட்டி சுகமாக வாழ வெளிநாட்டுக்கு தப்பி ஓடி போய் பதுங்குவியள் எண்டு... அப்பவும் அவர் ஓடினாலும் உதவுவாங்கள் எண்டு தான் நினைச்சு இருப்பார்...

அப்பு தயா, இப்ப கேட்டுக் கேள்வியிலாமல் மனுசுமாரை பிடிக்கிறான்!!! எங்கை போனனீங்கள்!!!

புலத்துக்கு வந்த எம்மவர்கள் அனைவரும் வழியில்லாத குடும்பத்திலும், படிப்பில்லாத குடும்பங்களில் இருந்து தான் வந்தவர்கள்???? நீங்கள் சொன்னால் சரி!!!

,,, சிங்களவனுக்கு போட்டி போட்டு துரையப்பாவில் தொடங்கி தமிழனை தமிழனே அழித்தோம்!! .... எம்மை வழி நடத்த ஒரு தலைமையும் இல்லாமல் போய்விட்டது!!!

புலி சுட்டதாக சொல்லப்படும் ஒருவனால் பாதிக்க படாத தமிழர்கள் இல்லை எண்டு உம்மால் அடித்து சொல்ல முடியுமா...???/

என்ன நடந்தது எண்டதும் ஏது நடந்தது எண்டும் தெரியாத அரை குறை அறிவோடு கட்டுக்கதைகளுக்கு மயங்கும் கூட்டம் தமிழனுக்குள் இருக்கும் மட்டும் தமிழன் உருப்பட போவது இல்லை...

தன்னை விட்டால் ஆள் இல்லை எண்ட நினைப்பு மட்டும் பலருக்கு உண்டு ஆனால் செயற்பாட்டில் பூச்சியத்தை தாண்ட மாட்டார்கள்... மற்ற வருக்கு அறிவுரை சொல்ல எண்டா இலவசமாக நிறைய கையிருப்பு வச்சு இருக்கிறவையும் அதிகம்... ஆனால் அண்ணை என்ன செய்யுறீயள் எண்டு கேட்டு பாக்க வேணும்.... அண்ணை மனிசியின் சீலை தலைபுக்குள்ளை அடைவு காத்து கொண்டு இருப்பார்...

  • கருத்துக்கள உறவுகள்

,,, சிங்களவனுக்கு போட்டி போட்டு துரையப்பாவில் தொடங்கி தமிழனை தமிழனே அழித்தோம்!! .... எம்மை வழி நடத்த ஒரு தலைமையும் இல்லாமல் போய்விட்டது!!!

இன்று புலி அழிவோடு தமிழர்களின் பிரட்சனைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், ரோட்டுப் போடுகிறான், பள்ளிக்கூடம் திறக்கிறான், ... இனி என்ன என்று ஒரு அரசியல் வங்குரோத்து மாற்றுக்கருத்துக் கூட்டம் ஒருபுறம், இன்னும் இருக்கிறார் ... பிடுங்குவார் என்று வாய்ச்சவடால்களால் வான வேடிக்கை காட்டும் கூட்டங்களுக்கு .... நடுவில் ஈழத்தமிழினம்!!

ஈழத்தமிழினம் உருப்படுமா??????????????????

மே 17 வரை உங்களுக்கு துரையப்பா கொலையில் பிரச்சினை இல்லை..! இப்ப பிரச்சினை எண்டுறீங்கள்..! இப்பிடி தளும்புற உங்கட கருத்தியலை எப்பிடி சீரியஸா எடுக்கிறது? :rolleyes::unsure:

... பாலா அண்ணா 2001ல் யுத்த நிறுத்தம் கையெழுத்தாகி, வன்னி சென்று லண்டனுக்கு திரும்பியபின் சந்தித்த சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ....

... "ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராட்டம் மூலம் அடையக்கூடிய அதியுயர் நிலையை நாம் அடைந்து விட்டோம். இனி எம் போராட்டமானது ஆயுதப் போராட்டமாக இருக்ககூடாது. இனி நாம் ஆயுதத்தை தூக்குவோமாயின், எம் புதை குழிகளை நாமே தோண்டுவதற்கு சமமானது" .... என்று கூறிய பாலா அண்ணா, சர்வதேச மாற்றங்களையும் விபரித்தராம்.

.......... அரசியல் மூதறிஞர், ஆலோசகர், ..... கூறியதை யார் கேட்டோம்??????????????

முடிபு .............. கேட்பார் இல்லாமல் அழிக்கப்பட்டோம், .......... அவலப்படுகிறோம், ............

அப்பு தயா, இப்ப கேட்டுக் கேள்வியிலாமல் மனுசுமாரை பிடிக்கிறான்!!! எங்கை போனனீங்கள்!!!

புலத்துக்கு வந்த எம்மவர்கள் அனைவரும் வழியில்லாத குடும்பத்திலும், படிப்பில்லாத குடும்பங்களில் இருந்து தான் வந்தவர்கள்???? நீங்கள் சொன்னால் சரி!!!

இவ்வளவு காலமும் மனிசியின் கையை பிடிக்காமல் காத்து நிண்டவருக்கு 2000 பவுன்ஸ் குடுத்து போட்டு மனிசின்ர சீலை தலைப்புக்குள்ளை பதுங்கி இருந்தால் அவர்களால் எவ்வளவு காலம் தான் தாக்கு பிடிக்க முடியும்...

எதையுமே காலத்துக்கு செய்யாமல் எல்லாத்தையும் அவை தான் உங்களுக்கு புடுங்கி தர வேணும் எண்டு காத்து இருப்பியளோ... ஏன் இப்ப சிங்களவன் மனிசியின் கையை பிடிக்க வேண்டாம் எண்டால் முன்னம் உம்மடை குஞ்சியப்பரோ , உம்மடை அப்பரோ இல்லை நீரோ போய் போராடி இருக்க வேணும் அப்ப எல்லாம் குடும்பதோடை பயந்து நடுங்கி பதுங்கி போட்டு இப்ப மட்டும் என்ன வீரம் வேண்டி கிடக்கு....???

எதையுமே செய்யாத நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் எண்று செய்தவனை பாத்து அவன் செய்த விதம் சரியில்லை எண்டு சொல்லேக்கை உங்களுக்கு வெக்கமாக இருக்கிறது இல்லையோ.....???

அவர்கள் எல்லாம் போராடும் போது உங்கட குடும்பம் இனவிருத்தி மட்டும் தான் செய்து கொண்டு இருந்தது எனும் உண்மையை எப்ப விளங்கி கொள்ள போறீர்....????

Edited by தயா

மே 17 வரை உங்களுக்கு துரையப்பா கொலையில் பிரச்சினை இல்லை..! இப்ப பிரச்சினை எண்டுறீங்கள்..! இப்பிடி தளும்புற உங்கட கருத்தியலை எப்பிடி சீரியஸா எடுக்கிறது? :rolleyes::unsure:

டன், உண்மை நீங்கள் கூறுவது!! .... எல்லாவற்றுக்கும் விசிலடித்தோம்!! ......... எம் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் .... துரோகிகள் என்று கொல்லப்படுகையிலும், ..... "தமிழ்த்தேசியம்" என்பதின் பெயரால் ........

இன்று ..................

உங்களாலை விசில் மட்டும் தான் அடிக்க முடியும்... இல்லை எண்டால் வசை பாட முடியும் , தூற்ற முடியும்... இதை விட வேறை என்னத்தை செய்து விட முடியும்....????

இவ்வளவு காலமும் பிடிக்காமல் காத்து நிண்டவருக்கு 2000 பவுன்ஸ் குடுத்து போட்டு மனிசின்ர சீலை தலைப்புக்குள்ளை பதுங்கி இருந்தால் அவர்களால் எவ்வளவு காலம் தான் தாக்கு பிடிக்க முடியும்...

எதையுமே காலத்துக்கு செய்யாமல் எல்லாத்தையும் அவை தான் உங்களுக்கு புடுங்கி தர வேணும் எண்டு காத்து இருப்பியளோ... ஏன் இப்ப அவன் பிடிக்க வேண்டாம் எண்டால் முன்னம் உம்மடை குஞ்சியப்பரோ , உம்மடை அப்பரோ இல்லை நீரோ போய் போராடி இருக்க வேணும் அப்ப எல்லாம் குடும்பதோடை பயந்து நடுங்கி பதுங்கி போட்டு இப்ப மட்டும் என்ன வீரம் வேண்டி கிடக்கு....???

எதையுமே செய்யாதவன் எதையாவது செய்ய வேண்டும் எண்று செய்தவனை பாத்து அவன் செய்த விதம் சரியில்லை எண்டு சொல்லேக்கை உங்களுக்கு வெக்கமாக இருக்கிறது இல்லையோ.....???

அவர்கள் எல்லாம் போராடும் போது உங்கட குடும்பம் இனவிருத்தி மட்டும் தான் செய்து கொண்டு இருந்தது எனும் உண்மையை எப்ப விளங்கி கொள்ள போறீர்....????

அப்பு, சும்மா வாயில் வந்ததை எழுதாதே! தளபதிகள் அனைவரும் வீழ்ந்து தலை விழும் நாளிலும் காசை பாராமல் அள்ளி எறிந்தவர்கள் உமக்கு எத்தனை பேர்கள் என்று தெரியுமா?????????

இல்லை, அள்ளிக்கொடுத்தவைகள் .... போய்ச்சேர்ந்தனவா??????????????????

எல்லோரையும் ஒரு தராசில் நிறுத்தாதே!! யார் யார் ... என்னென்னவெல்லாம் இந்த "தமிழ்த்தேசியம்" என்பாதற்காக செய்தார்கள் ...........??????????

மேலாக, யார் மிஞ்சியது?? போராட்டம்?? மக்கள்?? போராளிகள்?? ................. சும்மா வெளியில் இருந்து கொண்டு விசில் அடிப்பதை நிறுத்துங்கள்!!! கேட்டால் துரோகி, சொன்னால் துரோகி!!! என்ன??????????

உங்களாலை விசில் மட்டும் தான் அடிக்க முடியும்... இல்லை எண்டால் வசை பாட முடியும் , தூற்ற முடியும்... இதை விட வேறை என்னத்தை செய்து விட முடியும்....????

அப்பு நீர் என்ன செய்து கிளிச்சிட்டீர்??????????????

இன்னும் ஒன்றைச் செய்திருப்பீர், அங்கு போராட்டத்துக்கு என்று போட்டு, நாங்கள் இங்கிருந்து அள்ளிக்கொடுத்ததில், ... துக்கி ... தப்பி ... இங்கு வந்திருப்பீர்!!!

இப்படிக்கனபேர்!!!! ........... பட்டியல்கள் வேண்டுமாயின் ...........

,,, சிங்களவனுக்கு போட்டி போட்டு துரையப்பாவில் தொடங்கி தமிழனை தமிழனே அழித்தோம்!! .... எம்மை வழி நடத்த ஒரு தலைமையும் இல்லாமல் போய்விட்டது!!!

இன்று புலி அழிவோடு தமிழர்களின் பிரட்சனைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், ரோட்டுப் போடுகிறான், பள்ளிக்கூடம் திறக்கிறான், ... இனி என்ன என்று ஒரு அரசியல் வங்குரோத்து மாற்றுக்கருத்துக் கூட்டம் ஒருபுறம், இன்னும் இருக்கிறார் ... பிடுங்குவார் என்று வாய்ச்சவடால்களால் வான வேடிக்கை காட்டும் கூட்டங்களுக்கு .... நடுவில் ஈழத்தமிழினம்!!

ஈழத்தமிழினம் உருப்படுமா??????????????????

தமிழினம் தானே உருப்படாது... உங்களைப்போல் உள்ள சில மனிதர்களால் தான் ஏதாச்சும் ஆனால் உண்டு.

அங்கு சனம் நாளுக்கு நாள் நாறடிக்கப்படுகிறது!! ......... பெண்கள் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைகளை அனுபவிக்கிறார்கள்!!! ... ஆண்டவா, உன்னாலும் முடியாதா???????? பாவங்கள்!!!

குறை சொல்லி வசைபாடி என்ன நடக்கப்போகின்றது? புலியின் முடிவு ஈழத்;தில் தமிழினத்தின் முடிவு என்பது எல்லோராலும் உணரப்பட்ட ஒன்றுதான். எந்த ஒரு அழிவிலும் சிங்கள பேரினவாதத்தை குறை காண்பதை விட எம்மில் குறைகண்டோம். இது எமது மரபுவழி பழக்கத்தின் விழைவு. இப்போதும்; அதையே செய்கின்றோம். எங்கள் எல்லோரது தவறயும் புலியின் தலையில் கட்டி எதை நியாயப்படுத்தப்போகின்றோம்? இன்று சிங்கள மீனவர்கள் சுண்டிக்குளம் வரை வாடி அடித்து ஆதிக்கம் செலுத்தி விட்டார்கள். வன்னி கிழக்கு நிரந்தரமாக தமிழரிடம் இருந்து பறிபோய்விட்டது. வன்னி மேற்கில் மீள்குடியேற்றம் நடந்தால் அங்கு முடமான வன்னி அகதிகள் கொஞ்சக்காலம் வாழும். யாழ்பாணம் சிங்கள இராணுவத்தாலும் தற்போது சிங்கள வர்த்தகர்களாலும் நிரம்பி அது கொழும்புக்கு நிகரான கலப்பு இனங்கள் வாழும் இடமாக மாறுகின்றது. கிழக்கு மாவட்டங்களில் இனி தமிழர் என்று தலை நிமிர முடியாது. பெரும்பான்மைத் தமிழராக நாம் நாட்டை விட்டு வெளியேறி விட்டோம். என்னத்தை நாங்கள் கத்தினாலும் தமிழ்ச்சாதி ஈழத்தில் இனி தலை நிமிர முடியாது. என்னும் கொஞ்சக்காலம் எங்களுக்குள் நாங்கள் குறை கண்டு பிடித்து சுயஇன்பம் காணவேண்டியது தான். இதைவிட வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. இலங்கை முழுவதும் சிங்களவனுக்கே சொந்தம் என்ற நிலையை இனி மாற்ற முடியாது. இதற்கு காரணம் சிங்களவனும் இல்லை தமிழரும் இல்லை புலிகள் என்று மாரித்தவக்கை போல் கத்திக்கத்தி வயிறுவெடித்து பிரளவேண்டியது என்பது விதி.

அப்பு, சும்மா வாயில் வந்ததை எழுதாதே! தளபதிகள் அனைவரும் வீழ்ந்து தலை விழும் நாளிலும் காசை பாராமல் அள்ளி எறிந்தவர்கள் உமக்கு எத்தனை பேர்கள் என்று தெரியுமா?????????

இல்லை, அள்ளிக்கொடுத்தவைகள் .... போய்ச்சேர்ந்தனவா??????????????????

எல்லோரையும் ஒரு தராசில் நிறுத்தாதே!! யார் யார் ... என்னென்னவெல்லாம் இந்த "தமிழ்த்தேசியம்" என்பாதற்காக செய்தார்கள் ...........??????????

மேலாக, யார் மிஞ்சியது?? போராட்டம்?? மக்கள்?? போராளிகள்?? ................. சும்மா வெளியில் இருந்து கொண்டு விசில் அடிப்பதை நிறுத்துங்கள்!!! கேட்டால் துரோகி, சொன்னால் துரோகி!!! என்ன??????????

அப்பு நீர் என்ன செய்து கிளிச்சிட்டீர்??????????????

நீங்கள் குடுத்ததில் எவ்வளவு ஊருக்கு போனது எண்டதை இங்கை அனேகருக்கு தெரியும்.... நீங்கள் குடுத்த காசை யார் வட்டிக்கு விட்டு வயிறு வளர்க்கிறாரோ நான் அறியேன்... இண்டைக்கு போய் கேளுங்கோ அவர்களிடம் காசை எப்போது அனுப்பினீர்கள் போக வேண்டிய இடம் போய் சேர்ந்ததா எண்று..???

ஆனால் காசு மட்டும் தான் குடுக்கிறது போராட்டம் இல்லை எண்டது உங்களுக்கு எல்லாம் புரிய நீண்ட காலம் செல்லாம்...

உண்மையாக போராட்டத்தை நேசித்த யாராலும் உங்களை போல சடுதியாக மாற முடியாது என்பது மட்டும் உறுதி...

உங்களை போல பலரை பார்த்தாச்சு... வெட்டி வீரம் பேசிக்கொண்டு எதையுமே செய்யாது காலம் கடத்தியவர்கள்...

தமிழரின் பிரச்சினையால் உங்களை எல்லாரையும் விட அதிகமாக பாதிக்க பட்டவன் நான் என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும்... என் இளம் பிராயத்தின் பல ஆண்டுகளை அதுக்காக செலவளித்தும் இருக்கிறேன்... உங்களுக்காக எல்லாம் காலத்தை வீண் அடித்து விட்டேன் எண்று எனக்கு எந்த கவலையும் இல்லை...

நான் சந்தித்த கேவலமான சிலரில் நீங்கள் ஒருவர் அவ்வளவுதான்.... ஆனால் எவ்வளவு இழப்பயையும் தாங்கி இண்றும் தூணாக நிற்கும் பல தமிழர்களை எனக்கு தெரியும்...

உங்களுக்கு தலைவர் பிரபாகரனை சந்திக்கும் தருணங்கள் கிடைத்து இருந்தால் அவரின் நியாயங்களும் அவரின் ஆற்றலையும் புரியும் தருணம் கிட்டி இருக்கலாம்... அப்படி கிட்டாமல் உளரும் ஒரு பாமரன் தான் நீங்கள்...

அப்பு நீர் என்ன செய்து கிளிச்சிட்டீர்??????????????

இன்னும் ஒன்றைச் செய்திருப்பீர், அங்கு போராட்டத்துக்கு என்று போட்டு, நாங்கள் இங்கிருந்து அள்ளிக்கொடுத்ததில், ... துக்கி ... தப்பி ... இங்கு வந்திருப்பீர்!!!

இப்படிக்கனபேர்!!!! ........... பட்டியல்கள் வேண்டுமாயின் ...........

ஓ.... நீங்கள் எறியுற எச்சில் காசை அடிச்சு கொண்டுதான் புலிகளில் பலர் வெளீநாட்டுக்கு வந்தவையோ...??? உங்கட நினைப்பு இருக்கே....

(எனக்கு தாயகத்திலை இருக்கும், இருந்த பணத்தின் ) சொத்தில் பாதி அளவு கூட உமக்கு இருந்து இருக்க வாய்ப்பு இல்லை மக்கா...)

எச்சில் கையாலை காக்கா விரட்டாதவை போராட்டத்துக்கு காசு குடுத்த கதை உதுதான் போல...

:unsure:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக போராட்டத்தை நேசித்த யாராலும் உங்களை போல சடுதியாக மாற முடியாது என்பது மட்டும் உறுதி...

உங்களை போல பலரை பார்த்தாச்சு... வெட்டி வீரம் பேசிக்கொண்டு எதையுமே செய்யாது காலம் கடத்தியவர்கள்...

நான் சந்தித்த கேவலமான சிலரில் நீங்கள் ஒருவர் அவ்வளவுதான்.... ஆனால் எவ்வளவு இழப்பயையும் தாங்கி இண்றும் தூணாக நிற்கும் பல தமிழர்களை எனக்கு தெரியும்...

[b]உங்களுக்கு தலைவர் பிரபாகரனை சந்திக்கும் தருணங்கள் கிடைத்து இருந்தால் அவரின் நியாயங்களும் அவரின் ஆற்றலையும் புரியும் தருணம் கிட்டி இருக்கலாம்... அப்படி கிட்டாமல் உளரும் ஒரு பாமரன் தான் நீங்கள்...

உண்மையாக போராட்டத்தை நேசித்த யாராலும் உங்களை போல சடுதியாக மாற முடியாது என்பது மட்டும் உறுதி...

ஆயிரத்தில் ஒருவார்த்தை

சூடு தெரிபவனுக்கு இது சுடும்

அப்பு, சும்மா வாயில் வந்ததை எழுதாதே! தளபதிகள் அனைவரும் வீழ்ந்து தலை விழும் நாளிலும் காசை பாராமல் அள்ளி எறிந்தவர்கள் உமக்கு எத்தனை பேர்கள் என்று தெரியுமா?????????

எல்லோரையும் ஒரு தராசில் நிறுத்தாதே!!

தளபதிகள் அனைவரும் வீழ்ந்து தலை விழும் நாளிலும் காசை பாராமல் அள்ளி எறிந்தவர்கள் உமக்கு எத்தனை பேர்கள் என்று தெரியுமா?????????

எல்லோரையும் ஒரு தராசில் நிறுத்தாதே!!

இந்தக்கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்

தளபதிகள் அனைவரும் வீழ்ந்து தலை விழும் நாளிலும் காசை பாராமல் அள்ளி எறிந்தவர்கள் உமக்கு எத்தனை பேர்கள் என்று தெரியுமா?????????

எல்லோரையும் ஒரு தராசில் நிறுத்தாதே!!

இந்தக்கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்

அங்கை அவங்கள் உயிரை குடுத்த போது நீங்கள் இங்கை இருந்து மயிரை குடுத்தனாங்கள் எண்டிறீயளோ...??

உயிரை விட நீங்கள் குடுத்த மயிர்தான் பெரிசு....

அது சரி உங்களை ஒண்டு கேக்க வேணும்... நீங்கள் எல்லாம் என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்..??? நீங்கள் இங்கை இருந்து குடுத்த காசுக்கு அடிமையாக வேலை செய்த வேலை காறனே பிரபாகரன்...???

உப்பிடித்தான் இருக்கிறது கேடு கெட்ட யாழ்ப்பாணத்தானின் சாதி தடிப்புகள்... தான் காசை எறிஞ்சால் எல்லாரும் வந்து தங்களுக்கு கீழை நாய் மாதிரி வேலை செய்ய வேணும் எண்டது...

வெளி நாடுகளிலை உங்கட கக்கூசை நீங்கள்தானே கழுவிறீயள்...??? ஆனா தாயகத்திலை இருக்கிறதுகளை வேறையாரும் கழுவி தரவேணும் எண்டு ஏன் அடம்பிடிக்கிறீயள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.