Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

Featured Replies

தமிழகத் தமிழன் முதலில் தமிழனாக இருந்து பின்னர் இந்தியனாக இருக்கும்போது இந்திய அதிகார வர்க்கத்தால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட முடியாது என்பது பிரதான கருத்து. தமிழ்த்தேசியவாதத்தில் தெளிவுடன் இருப்பதும் ஏற்று மதித்து நடப்பதும் இதன் பொருளாகின்றது. இன உணர்வும் மொழி உறவும் கலாச்சாரப் பிணைப்புகளையும் அடிப்படையாக வைத்து ஏதிர்பார்க்கப்படும் இந்த நிலை எப்போதும் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும். பொருளாதார உறவுகளே தேசியவாதத்தை விட முதன்மையானது. நாம் முதலில் ஈழத்தமிழருக்கான தேசியவாதத்தை பொருளாதராக் காரணிகளை மீறி பற்றியிருந்தோமா? நாம் யாழில் இருந்து வன்னிக்கு நகர்ந்ததும் மீள யாழுக்கே போனதும் பொருளாதர வசதிகளின் அடிப்படையிலேயே. சனத்தொகையில் பாதி புலம்பெயர்ந்து ஒவ்வொரு நாடுகளில் குடியேறியதும் பொருளாதர அடிப்படையிலேயே. எத்தனை அனார்த்தங்களை சிங்களம் செய்தபோதும் தென்னிலங்கையில் வாழ முற்படுவதும் பொருளாதார அடிப்படையிலேயே. தேசியவாதத்துக்கு பிரதானமானது தொடர்ச்சியாக வாழும் நிலப்பரப்பில் தொடர்ந்து வாழ்வது. ஆனால் பொருளாதாரப் பிரச்சனை அதை சீர்குலைத்து வேறு இடங்களுக்கு நகர்தலை ஏற்படுத்துகின்றது. நாம் சிதைந்ததுக்கு அடிப்படைக்காரணம் பொருளாதாரம் அதை நியாயப்படுத்த போர் எமக்கு வாய்த்தது. தமிழகத் தமிழன் இந்தியா ஏங்கும் பொருளாதார தேவைகள் நிமிர்த்தம் பரந்து வாழ்கின்றான். பல்லினங்களுடன் இணைந்து வாழ்கின்றான். அரசியல் வர்த்தகம் ஏனைய நிறைய விசயங்கள் பல்லினங்களுடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. தேசியவாதத்திற்காக அவைகளை உதறியெறிய முடிவதில்லை. நாட்டில் மிகக் கொடுரமான இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதற்காய் புலம்பெயர் தேசத்தை விட்டு நாடு சென்று எதிரியுடன் போராடுவது சாத்திமாக எமக்கிருக்கவில்லை. இந்த நாடுகளில் கவனயீர்ப்பு எமது எல்லையாக இருக்கின்றது. அதே போல் தமிழகத் தமிழனின் எல்லைகளை அவனது பொருளாதாரம் அரசியல் தீர்மானிக்கின்றது. ஒரு முத்துக்குமரன் மூட்டிய தீயில் ஏற்படாத எழுச்சி என்று அங்கலாய்கலாம் அதே போல் முப்பதாயிரம் போராளிகள் முப்பது வருடமாக மூட்டிய விடுதலைத் தீயையும் எம்மால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் உண்மை.

நாம் இந்தியாவின் நட்பை பெறுவதும் இந்தியா மீது எதிர்ப்பை காட்டுவதும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைவதும் என்பது ஒரு அர்த்தமற்ற கருத்தே. அவ்வாறான கருத்துக்களுக்கு பெறுமதியானவர்களாக நாம் இல்லை. எம்மிடம் என்ன இருக்கின்றது ஒருவன் எம்முடன் உறவு வைத்திருப்பதற்கு? எமக்கான பொருளாதரா பலம் வர்த்தக உறவுகள் என்று எதுவும் இல்லை. எமது தேசியவதத்திற்கு ஒரு நாடு மதிப்பளிப்பதால் அந்த நாட்டுக்கு என்ன லாபம்? யுத இனத்துடன் எம்மை ஒப்பிட்டு சிலர் பிதற்றுவதுண்டு. உலகபொருளாதராம் மற்றும் மீடியா மேற்கு நாடுகளின் அரசியல் போன்ற விடயங்களில் யுத இனம் செலுத்தும் செல்வாக்கில் ஒரு வீதம் கூட எமக்கில்லை என்பதே உண்மை. எதிர்த்திசையில் இன்னமும் எமக்குள் நாம் குத்துப்படுகின்றோம் என்பதே உண்மை. அமரிக்கா ஜப்பான மீது அணுகுண்டு போட்டதற்கு ஜப்பான் பொருளாதராத்தில் வளர்ந்து பதிலடி கொடுத்தது போல் எம்மவர்கள் புதிய திசையில் சிந்திக்கவும் முற்பட வேண்டும். இந்தியா தமிழகத்தமிழன் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து என்னும் எம்மால் வெளிவர முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் தமிழன் இந்தியா ஏங்கும் பொருளாதார தேவைகள் நிமிர்த்தம் பரந்து வாழ்கின்றான். பல்லினங்களுடன் இணைந்து வாழ்கின்றான். அரசியல் வர்த்தகம் ஏனைய நிறைய விசயங்கள் பல்லினங்களுடன் பிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. தேசியவாதத்திற்காக அவைகளை உதறியெறிய முடிவதில்லை.

சுகன்,

தமிழகத்தை பொருளாதார நலன்களைக் கைவிட்டு ஈழப்போருக்கு வலுச்சேர்க்கும்படி யாரும் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன்..! கைவசம் இருந்த வாக்குச் சீட்டை வேறு வகையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே ஒரு கருத்து. அதற்கு ஈழப்பிரச்சினை குறித்த சரியான புரிதல் அங்கு பெரும்பான்மையானவர்களுக்கு இல்லை என்பதே காரணம்..!

சுகன்,

தமிழகத்தை பொருளாதார நலன்களைக் கைவிட்டு ஈழப்போருக்கு வலுச்சேர்க்கும்படி யாரும் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன்..! கைவசம் இருந்த வாக்குச் சீட்டை வேறு வகையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே ஒரு கருத்து. அதற்கு ஈழப்பிரச்சினை குறித்த சரியான புரிதல் அங்கு பெரும்பான்மையானவர்களுக்கு இல்லை என்பதே காரணம்..!

உண்மைதான்.

தமிழக தமிழர்களுக்கு ஈழத்தில் நடப்பது தெரியும் ஆனால் அதன் உண்மையும் உக்கிரமும் மூடிமறைக்கப்பட்டுவிட்டது. 3 மாத இடைவெளியில் மேற்கொண்ட பரப்புரை முயற்சி போதாது இதை 2008 செப்டம்பர் முதல் செய்திருந்தால் நல்ல பலன் கிட்டியிருக்கும்.

இங்கு கனடாவில் உள்ள நான் தலையால் முட்டிக்கொண்டேன் ஈழத்தமிழர் தமிழக அரசியல்வாதிகளுடனும் ஆதரவாளர்களுடனும் ஒருங்கினைந்து செயல்படுங்கள் என்று...இரு தரப்பிலிருந்தும் அத்தகைய முயற்சி இன்றுவரை இல்லை. முதலில் அதை செய்யவேண்டும் ஏனெனில் இணையத்தில் பார்த்து செய்தியறிந்து செயல்படுவதை விட்டு ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.

நான் இங்கு வரும் வரை ஈழ போராட்ட வடிவமோ உக்கிரமோ உண்மையோ அறியேன்.

சீமான் ஒரு சிறந்த போராளி அவரை வைத்து இனியாவது இந்த ஒருங்கினைப்பை செய்ய தமிழர்களாகிய நாம் களமிறங்க வேண்டும்.

தலிபான் சீனாக்காரனோட அரசியல் பண்ணி ஆயுதம் வாங்கியிருப்பான் எண்டு நான் நம்பவில்லை..! தலிபானுக்கு சீனா தேவைப்பட்டதைவிட சீனாவுக்கு தலிபான் தேவைப்பட்டிருக்கும்..! அதான் சீனாக்காரனே போய்க் குடுத்திருப்பான்.. நம்மளையும் தேவைப்பட்டிருந்தால் அவன் வந்திருப்பான்..! ஆனால் சிங்களவன் முந்திக்கொண்டு முந்தியை விரிச்சிட்டான்..! எங்களிட்ட பலமான அரசியல் செய்யக்கூடிய அளவுக்கு வளங்களோ அதிகாரங்களோ இருக்கவில்லை என்பதுதான் சோகம்..!

ஆனால் நிலைமை இப்படியே இருக்கும் என்பதை நான் நம்பவில்லை..! சீனாவும், இந்தியாவும் ஒரே கோட்டில் நடக்க முடியாதவை..!

வெளியே சொல்ல முடியாத சங்கதிகள் பல!அவற்றுள் சில!

1999 ஆண்டு நடந்த ஒரு சம்பவத்துடனேயே விடுதலைப் புலிகளின் தலமைப்பீடம் இந்தியா தொடர்பான தனது அணுகு முறையில் தீர்க்கமான முடிவை எடுத்து விட்டது. அதன் விளைவே 2000 ம் ஆண்டு அரியாலை வரை முன்னேறிய புலிகள் தமது நடவடpக்கையை நிறுத்தியதும் அதன்பின் சிறிலங்கா நடத்திய சில படை நடவடிக்கைகளும் அதன் பின்னான உலகமே சிறி லங்காவை திரும்பிப் பார்க்க வைத்த புலிகளின் ஒரு பாரிய அதிரடி நடவடிக்கையும் அதன் பின்னான யுத்த நிறுத்தமும்.இங்கே யாருமே கவனிக்காத விடயம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க.

அடிப்படையிலேயே மேற்குலக கொள்ளைகள் சார்ந்தவரான இவர் மேற்குலகின் சிறந்த நண்பருங் கூட.

இதை நன்குணர்ந்த இந்தியா மிகவும் நரித்தனமான ஒரு முடிவை எடுத்தது. புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் முதலாவது பேச்சு வார்த்தை நடந்த பொழுது அதே நாட்டில் அதே நேரத்தில் புலிகளின் இன்னுமோர் அணிக்கும் இந்திய அரசுக்குமான இன்னுமோர் பேச்சு வார்த்தை நடந்தது.

அதன் விளைவே யனாதிபதி தேர்தலில் ரணில் தோற்று அடிப்படையிலேயே மேற்குலகை விரும்பாத மகிந்த யனாதிபதியாக பதவியேற்றது.

இதன் பின் வழமைபோல இந்தியா தனது சுயருபத்தை காட்டி முதுகில் குத்த ரணில் விக்கிரம சிங்க தோற்றுப் போனதற்கு காரணமாக இருந்த புலிகள் மேல் ஒட்டு மொத்த மேற்குலகின் கோபத்தின் பலனாக புலிகள் மீது பல வகையான தடைகள்.இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட இந்தியா தனது நீண்ட கால கனவை நிறைவேற்ற மேற்குலக எதிர்ப்பாளியாகிய மகிந்தவை பயன்படுத்த சிங்கள இனவாதத்தின் ஒட்டுமொத்த உருவமாகிய மகிந்த சிங்களத்தின் நீண்ட கால கனவான புலிகளை வெற்றி கொண்டு தமிழர்களை அடிமையாக்கும் கனவை நிறைவேற்ற இந்தியாவை பயன் படுத்த ரணில் விடயத்தில் ஏற்கனவே சூடு கண்ட மேற்குலகு ஈழத்தில் நடப்பதென்ன என்று முளுமையாக அறிந்திருந்தும் உதவ முன்வராமையே இன்றைய நிலை.

இந்த நிலை மீண்டும் மாறும்

மீண்டும் நம்ப வைத்து கழுத்தறுத்தது அதே பாரதம். அது இப்போது எங்களின் முதல் எதிரி.

அன்புடன்

தமிழ்நிலா

Edited by Tamilnela

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனத்தால் காங்கிரசுக்கு துணை போகும் கலைஞரின் சன், கலைஞர் தொலைக்காட்சியை விட ஏலாது. ஆனால் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு நண்பர் ஒருநாள் ... நானும் விசிலடித்த காலத்தில் எனக்கு கூறினார் ... அரசியல் கதைக்கும் முன் ...... உலகப்படத்தை எடு ... முழுக்கப்பார் ... ஆசியாவைப் பார் ... பின் இந்திய உப கண்டத்தைப் பார் ... இலங்கையைப் பார் .... பின் வன்னியைப் பார் .... புரியும் உணக்கு எமது கேந்திர நிலையில் எமது அரசியல்!!!

....... எம்மக்களுக்கு ஒரு வாழ்வு மட்டுமல்ல சாவும் இந்தியா தான் நிர்ணயிக்கிறது!!

... கூறலாம், அமெரிக்காவை எதிர்த்து கியூபா விடுதலை பெறவில்லையோ என்று??? ... என்ன சாபமோ தெரியவில்லை ....... உந்த விடுதலை இயக்கங்கள், சிறுபான்மை இனத்தின் போராட்டாங்கள் யாவும் 9/11 இன் பின் சாகடிக்கப்பட்டு விட்டது. உலக ஓட்டம் மாறிவிட்டது!! ... பொருளாதார நலந்தான் இன்று உலக அரசியலை நிர்ணயிக்கிறது!! .... இந்தியாவின் பிரமிக்கத்தக்க சந்தையின் முன் .... நாங்கள் சர்வதேசத்துக்கு ஒரு செல்லாக்காசு!!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாபமோ தெரியவில்லை ....... உந்த விடுதலை இயக்கங்கள், சிறுபான்மை இனத்தின் போராட்டாங்கள் யாவும் 9/11 இன் பின் சாகடிக்கப்பட்டு விட்டது. உலக ஓட்டம் மாறிவிட்டது!! ... பொருளாதார நலந்தான் இன்று உலக அரசியலை நிர்ணயிக்கிறது!! .... இந்தியாவின் பிரமிக்கத்தக்க சந்தையின் முன் .... நாங்கள் சர்வதேசத்துக்கு ஒரு செல்லாக்காசு!!!!

உங்களின் இந்தக்கருத்துடன் மறுத்துப்போக முடியவில்லை.

பாராட்டுக்கள்.

உலகப் பொருளாதார மற்றும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் அகப்பட்டுத்தான் போனோம். எமது சக்திக்கு அப்பால்பட்ட சில விடயங்கள் நாங்கள் விரும்பாமலேயே நடந்தேறிவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

... கூறலாம், அமெரிக்காவை எதிர்த்து கியூபா விடுதலை பெறவில்லையோ என்று??? ... என்ன சாபமோ தெரியவில்லை ....... உந்த விடுதலை இயக்கங்கள், சிறுபான்மை இனத்தின் போராட்டாங்கள் யாவும் 9/11 இன் பின் சாகடிக்கப்பட்டு விட்டது. உலக ஓட்டம் மாறிவிட்டது!! ... பொருளாதார நலந்தான் இன்று உலக அரசியலை நிர்ணயிக்கிறது!! .... இந்தியாவின் பிரமிக்கத்தக்க சந்தையின் முன் .... நாங்கள் சர்வதேசத்துக்கு ஒரு செல்லாக்காசு!!!!

இதை ஏற்கும் தாங்கள்

தலைவர்மீது சேறு பூசுவதேன்?

கடைசிவரை

வலிந்த தாக்குதல் செய்யாது பொறுமை காத்தாரே

அது எதற்காக?

இறுதியிலும் ஒரு சிங்களவனைக்கூட கொல்லாது சென்றாரே

எதற்காக?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.