Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக படித்து படமும் பெற்று க்கொண்டால். தந்தை க்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்கநாதனும் சந்தித்து கொள்வார்கள். காலபோக்கில் நட ராஜ பெண்ணுக்கு மாபிள்ளை தேடுவதில் மும் முரமாய் இருந்தார்.பேச்சு வாக்கில் , சாவித்திரி ஏன் தூரத்துக்குள் போவான். நம்ம் பையன் சுதாகரை , கட்டி வைக்கலாமே என்று ஆசையுடன் கூறினாள். ரங்கநாதனுக்கும் இது சரிஎனபடவே. நட ராஜனிடம் ஒரு நாள் இதைக் காதில் போட்டு வைத்தார். இரு குடும்பமும் பேச்சு வாக்கில் ஒத்து போகவே நட ராஜனின் ஒரே ஒரு செல்லப பெண்ணுக்கும் ரங்கராஜனின் மூத்த மகன் சுதாகருக்கும் மிகவும் கோலா கலமாக திரு மணம் இனிதே நிறைவேறியது .

நாட்களும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்றன. ஆனால் இருவரின் மனங்களும் ஒன்றிணைய வில்லை. சுகியும் விட்டுக்க்கொடுபதாயில்லை அவளின் போக்கு , ஆங்கிலப்படம் ....டான்ஸ் , பார்டி களில் ஈடுபட்டது. கணவனை யும் அழைப்பாள். அவனுக்கு இது விருப்பமற்ற செயல் . அவள் நண்பிகளுடன் கிளம்பி விடுவாள். சில சமயம் கணவன் வீடுக்கு வந்தால் இவள் ஒரு குறிப்பு எழுத்தை வைத்தது விட்டு கார் எடுத்து கொண்டு நண்பிகளிடம் போய்விடுவாள். இதற்கிடையில் அவள் கருத்தரித்தாள்.இதையறிந்ததும, ரங்க ராஜன் குடும்பம் மிகவும் ஆவலுடன் தங்கள் பேரபிள்ளையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் சுகி இப்போது தேவை யில்லை என்று கலைக்க முயற்சித்தாள். டாக்டாரிடம் சென்ற போது நாட்கள் தள்ளி போனதால் கலைக்க முடியாது என்று சொல்லி விடார்.. வேண்டாத கருவாக சுகி கருவைச் சுமந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். அதன் பின்பும் அவள் மாற வில்லை. குழந்தையை தான் தாயிடம் பராமரிக்க விட்டு விட்டு தன் எண்ணம் போல திரிந்தாள். அவள் கணவன் சுதாகருக்கு சகித்து கொள்ள முடியவில்லை. அவர்களுள் லேசான பிளவு ஏற்பட தொடங்கியது கணவனுக்கு சமைத்து வைக்க மாடாள். அவன் பாதி நாட்கள் தாய் வீடுக்கு சென்று விடுவான். நடராஜனுக்கு செல்ல பெண்ணை கண்டிக்க முடியவிலை. சுகி இன்னும் , பொறுப்பு அற்றவளாகவே இருந்தாள். சுதாகருக்கும் வாழ்கை கசந்து விட்டது இரண்டு வருடங்கள் சென்றன . சுகி தாயுடனும் சுதாகர் தன் தாயிடமும் வாழத்தொடங்கினர்.

காலம் உருண்டோடியது .இரண்டு வருடங்களான. இரு குடும்பங்களிடையே .பழைய உறவு அற்று போய் இருந்தது ஒரு நாள் சுகிக்கு தபாலில் , விவாகரத்துக்கான கடிதம் வந்தது . இருவரும் , சுய விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றனர். குடும்பங்களை இணைக்கும் எனற , இணைப்பு ப்பாலம் , இரு மனங்களையும் இணைக்க வில்லை .காலப்போக்கில் அவனுக்கு( சுதாகர் ) கீழ் உள்ள தம்பி மாருக்கு திருமணம் செய்ய விருப்பதால் , அவனும் இளம் வயது என்பதாலும் , அவன்இணைய மூலம் ஒரு பெண்ணை தேடி மணம் முடித்தான். அவள் ,தான் சாரங்கி , அவள் எல்லா விதத்திலும் இவனுக்கு பொருத்தமானவளாய் இருந்தாள். குடும்பம், சந்தோஷமாய் இருந்ததில் , ஏனைய அவன் தம்பி மாருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்தது. அவர்களின் , அன்பான் விடுக்கொடுபுள்ள உறவில இரு வருடந்தில் ஒரு பெண் குழந்தை வதனாவை பெற்று எடுத்தனர்.சுகி திருந்திய பாடாய் இல்லய். அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தாள் . அவளது போக்கின் காரணமாக தந்தை நட ராஜன் நோய் வாய்பாட்டு , இறந்து போனார்.

ரங்க ராஜன் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. ஒரு தடவை , அவர்கள் ஒரு திருமண விழாவுக்கு சென்று திரும்பும் வழியில் , மழை வேறு , பொழிந்து கொண்டு இருந்தது . வழியில் ஒரு கார் பெரிய மரத்துடன் மோதிக் க்கானபட்டது . சுதாகர் இறங்கி பார்த்தபோது அது .........சுகி என்று உணர்ந்தான். உடனே அவன் வாகனத்தை திருப்பி , அவளை ஏற்றிக்கொண்டு வைத்தயசாலையில் சேர்த்தான். அவள் அளவுக்கு மீறிய போதையில் இருந்தாள்.பிடரிப்பக்கம் பலமாக அடிபட்டு இருந்ததால் சிகிச்சை பயனற்று ,இறந்து விடாள். சுதாகர் அவள் நிலையை எண்ணிக் கவலைப்பட்டான்.

காலம் வேகமாக சென்றது. சம்பவம் நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. சுதாகரின் செல்லமகள் வதனாவுக்கு மூணு வயதாகி விட்டது . அவளது பிறந்த நாளுக்கு சில பொருட்கள் வாங்கி விட்டு வீடு நோக்கி வத்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் பாடசாலை பையுடன் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தான் அழுது கொண்டு.நேரம் மாலை நேரம் இரவை அண்மித்து கொண்டு இருந்தது ........அந்த சிறுவனை தனியே கண்டதும் சுகுமாருக்கு தன் மகன் எண்ணம் வந்தது . காரை நிறுத்தி அண்மையில் சென்று பார்த்தான். என்ன ஆச்சரியம் .........அது அவனது மகன் கோகிலன்.சுகுமாருக்கு தாங்க முடியாத துயரம்...........சிறுவன் அழுது கொண்டு தனக்கு அம்மாவும் இல்லய் அப்பாவும் இல்லய் ..........அம்மம்மாவீடுக்கு போக பிடிக்க வில்லை என்று அழுது கொண்டே சொன்னான். இறுக கட்டி அணைத்து முத்தமிட்டு தன் வீடுக்கு கூட்டி வந்தான். தன் மாமியாருக்கு தகவல் அனுப்பினான். முறைப்படி கோர்ட்டு உத்தரவுடன் மகனை பெற்றுக்கொண்டான்.

கோகிலனுக்கு வத்னாவை மிகவும் பிடித்து கொண்டது ....... வதனா கோகிலன், இணை பிரியாத சகோதரர்களாக விளையாடுவதை ......சாரங்கா பார்த்து ரசித்தாள். .பிறந்த நாட பரிசாக தன் அண்ணா தனக்கு கிடை த்ததை எண்ணி .மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

இணைத்து வைத்த திருமணக்களால் இணைந்து போக முடியாத உள்ளங்கள் ....பிரிந்து விடுகின்றன. சில விட்டுக்கொடுப்புகளுடன் சமுதாயத்துக்காக வாழ்கின்றன. ..இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை குடும்பங்கள் சீர் குலைகின்றன......

Edited by நிலாமதி

அக்கா என்ன செய்வது ஒரு பெண் விடுதலை கிடைக்காதா என எங்குகிறாள்

இன்னொருத்தியோ கிடைத்ததை சரியாக பயன் படுத்த தெரியாமல் தள்ளாடுகிறாள்

வாழ்க்கை குடும்பம் என்று வந்து விட்டால் கணவனும் மனைவியும் நிறைய தயாகங்களை செய்து தான் தங்கள் வாழ்க்கையை வழமாக கொண்டு செல்ல வேண்டும்..........அப்படி அந்த நிலையில் இருந்து விலகி போகும் போது பல விபரீதங்கள் உண்டாகின்றன............

அதனால் ஒன்றும் அறியாத குழந்தைகளே நிறைய பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்

நல்ல கதை நிலாமதியக்கா.

சில குறிப்புகள் - ரங்க நாதன் , ரங்கராஜனானது ஏனோ?

மற்றும் சுதாகர், மனைவி இறந்தவுடன் தனது மகனை தன்னுடன் அழைத்திருக்கலாமே?

இப்படித்தான் எங்கள் சமுதாயம் படிப்பு, குடும்பம், ஜாதகம் என்று எல்லாத்தையும் பார்த்துவிட்டு முக்கியமான அம்சமான பரஸ்பர விருப்பு வெறுப்புகளை அறியமுற்படுவதில்லை.

Edited by Eas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ......... ஈஸ் .......சில கவனப்பிழை . சுட்டிக்காடியதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பல காலமாக புலம்பெயர்ந்து வந்தவர்களின் பெண் பிள்ளைகள் இப்படித்தானிருப்பர், இப்ப வந்தவர்கள் அனைவரும் அந்த மாதிரி நல்லவர்கள் (அல்லது ஈழத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள்) எனும் புளித்துப் போன பல்லவியில் எழுதத் தொடங்கி, சுதந்திரமாக வளர்ந்த கணவனின் அன்றாட பணிவிடைகளைச் செய்யாத பெண்களுக்கு துரித மரணம்தான் காலத்தின் பரிசு என்று முடிகின்றது கதை. தமிழக தொலைக்காட்சி நாடகங்களின் வழியில் வந்த ஈழத்து ஆக்கம் ஒன்று.

எம் பெண்களுக்கு பெண்களே எதிரி என்பதை நிலாமதி போன்ற பெண் எழுத்தாளர்கள் அடிக்கடி வலியுறுத்திச் செல்கின்றனர். மாற்றத்தை விரும்பாதவர்கள், அந்த மாற்றத்திற்குரியதாய் எப்படி சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என சரியான வழியில் சிந்திக்காதவர்கள், பழைய பல்லவியையே தொடர்வர்

நிலாமதிக்கு,

தமிழக பெண் எழுத்தாளர் சல்மா, அம்பை, ஈழத்து பெண் தமிழ்நதி போன்றவர்களை தேடிப் பிடித்து வாசித்திர்களாயின் நவீன பெண் எழுத்து எப்படி அமைகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த நூற்றாண்டின் சவால்களை நம் பெண்கள் சந்திப்பதற்கு ஆண்டாளினதும், ஒளவையினதும் காலத்தின் பார்வைகள் தேவையில்லை என நம்புகின்றேன்

மாற்றி யோசியுங்கள்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதிக்கு,

தமிழக பெண் எழுத்தாளர் சல்மா, அம்பை, ஈழத்து பெண் தமிழ்நதி போன்றவர்களை தேடிப் பிடித்து வாசித்திர்களாயின் நவீன பெண் எழுத்து எப்படி அமைகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த நூற்றாண்டின் சவால்களை நம் பெண்கள் சந்திப்பதற்கு ஆண்டாளினதும், ஒளவையினதும் காலத்தின் பார்வைகள் தேவையில்லை என நம்புகின்றேன்

மாற்றி யோசியுங்கள்

:lol: :lol: :lol: :lol: :lol::D :D :D :D

ஆம் நல்ல எழுத்து நடை இருக்கிறது....அப்புறம் ஏன் பழைய சிவாஜி/சாவித்திரி காலத்து கதைகள்......

நவீன காலத்து பெண்கள் ஒன்றில் இறந்து விட வேண்டும்...இல்லை கடைசியில் மன்னிப்பு கேட்டு.திருந்தி விடவேண்டும்....

மாத்தி யோசிங்க..

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா...

மீண்டும் உங்களோடு அதாவது யாழோடும் யாழ்கத்து உறவுகளோடும் இணைந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இணைத்து வைத்த திருமணம் சிறுகதைப் பகுதியூனாடாகச் உங்களோடு நான்..யாழில் கருத்து எழுத வெளிக்கிட்டால் கை எல்லாம் நடுங்குகிறது.யாரேனும் வந்து தலையில் குட்டி விடுவார்களேன்டு சற்று தயக்கமாகவே உள்ளது.இருந்தாலும் பல உறவுகளின் வேண்டுதலுக்கு இணங்க உங்கள் முன் நிலையில் நடந்து முடிந்தவை எல்லாம் நடந்து முடிந்தவைகளாக இருக்க...இனி நடப்பவை ஆகிலும் நல்லவையாய் நடக்க சாமியை வேண்டிக்கொண்டு கழத்தில் கால் வைக்கிறேன்.யாரும் இனியும் தள்ளி விழுத்தித்திப் போடாதீர்கள்...பலரின் அடிபாட்டை தவிர்க்கும் வண்ணமே மீண்டும் உங்கள் முன் நிலையில் நான் களத்தில் இறங்கி உள்ளேன்.என்னை மீண்டும் யாழில் வருவதற்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்த அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.நன்றி.

இணைத்து வைத்த திருமணம் விமர்சனத்திற்குள் வருகிறேன்...

தற்சமயம் நீங்கள் எழுதும் சிறுகதைகளில் கொஞ்சம் எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன...காலக்கிரமத்

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா...

1.படித்தவர் வேண்டும்....இவர்களுக்காக இனி திருமணம் செய்ய விருக்கும் ஆண்கள் தாங்கள் போட்டு இருக்கும் உடுப்பில் குத்திக் கொண்டு போக வேண்டும் தாங்கள் படித்துள்ள படிப்பை.

2.சுண்டினால் ரத்தம் வரவேண்டும்

3.கோர்ட் சூட் போடுபர் தான் வேண்டும் கான்ட்சமானவர் வேண்டும்.

4.கார் ஓடத்தெரிந்த ஆண் வேண்டும்...காரின் சாவி மனைவி கையில் இருக்க வேண்டும்.

5.சாரம் கட்டாதவர் வேண்டும்.தனக்கு கிடைக்கும் அற்ப சொற்ப நேரத்திற்குள் தன் சுய விருப்பதிற்கு இணங்க ஒரு ஆண் சாரம் கட்டுவது தடைசெய்யபடுகிறது.இது மட்டுமா?

சமைக்கத் தெரியனும்....பிள்ளை பராமரிக்கத்தெரியனும்

இதற்கென்றே தங்களை ஆண்பிள்ளைகளை தயார் படுத்த தமிழ் பெற்றோர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

ஒரு பெண்ணை அன்பாக அவளின் நலன்களை கவனிக்கும் வகையில் கருத்திற் கொண்டு செயற்படுவது ஒரு அன்பான ஆணுக்கு அவசியம். இதன் மறுதலை பெண்களுக்கும் வரும். அதைத் தவிர வேறெதனையும் பெண்ணோ ஆணோ எதிர்பார்த்து திருமணம் செய்வார்களாக இருந்தால் அது திருமணம் அல்ல. வியாபாரம்..! இன்றைய உலகில் திருமண வியாபாரம் நிகழ்கிறதே அன்றி மனங்களை ஒருங்கிணைக்க வைக்கும் திருமணங்கள் நிகழ்வது வெகு குறைவு..!

இதனால் தான் பல வசதிபடைத்த ஆண்கள் திருமணம் என்றதும் முகத்தைச் சுழித்துக் கொள்கிறார்கள்.

யாகினி குறிப்பிட்டது போல கேட்பவர்களில் அதிகம் இருப்பவர்கள்.. ஊரில் வசதி குறைந்த அல்லது நடுத்தர வர்க்கத்தில் இருந்து போராட்ட சூழலைக் காரணம் காட்டி புலம்பெயர்நாடுகளிற்கு குடிபெயர்ந்தவர்களே அதிகம்..! வெட்டி பந்தா என்பது இதனைத்தான்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

நிலாமதி அக்கா...

மீண்டும் உங்களோடு அதாவது யாழோடும் யாழ்கத்து உறவுகளோடும் இணைந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இணைத்து வைத்த திருமணம் சிறுகதைப் பகுதியூனாடாகச் உங்களோடு நான்..யாழில் கருத்து எழுத வெளிக்கிட்டால் கை எல்லாம் நடுங்குகிறது.யாரேனும் வந்து தலையில் குட்டி விடுவார்களேன்டு சற்று தயக்கமாகவே உள்ளது.இருந்தாலும் பல உறவுகளின் வேண்டுதலுக்கு இணங்க உங்கள் முன் நிலையில் நடந்து முடிந்தவை எல்லாம் நடந்து முடிந்தவைகளாக இருக்க...இனி நடப்பவை ஆகிலும் நல்லவையாய் நடக்க சாமியை வேண்டிக்கொண்டு கழத்தில் கால் வைக்கிறேன்.யாரும் இனியும் தள்ளி விழுத்தித்திப் போடாதீர்கள்...பலரின் அடிபாட்டை தவிர்க்கும் வண்ணமே மீண்டும் உங்கள் முன் நிலையில் நான் களத்தில் இறங்கி உள்ளேன்.என்னை மீண்டும் யாழில் வருவதற்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்த அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.நன்றி.

:lol::lol:

யாகினி, உங்கள் கருத்து புன்னகையை வரவேற்கிறது. எல்லாம் முடிந்துவிட்டது. மற்றவர்களது விமர்சனம் எம்மை மெருகேற்றிக்கொள்ள உதவும். சிலர் சற்று கடுமையாக விமர்சிப்பார்கள் - அது அவர்களது குணம். அதற்காக நீங்கள் பயப்படத்தேவையில்லையே.

மீண்டும் பதியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.