Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோற்றுக்காகச் சோரம் போன உணர்வுகள் களம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுகள் wwww.unarvukal.com என்ற பெயரில் தமிழுணர்வுள்ள ஈழத்தமிழரால் ஆரம்பிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட களம், ஆனால் அது இன்று ஒரு பச்சோந்தியால் கடத்தப்பட்டு தமிழெதிரிப பண்டாரங்களினதும், பரதேசிகளினதும் கூடாரமாக மாறியுள்ளது. அக் களத்தின் ஆரம்ப கால அங்கத்தவர் மட்டுமல்ல, அக்களத்தின் வளர்ச்சிக்காக பணத்தைச் செலவிட்டதும் நான் தான். ஆனால் அந்தக் களத்துக்கும் எனக்கும் இப்பொழுது எந்தவித தொடர்பும் கிடையாது. இப்பொழுது அங்கு நடக்கும் பண்டாரப் பதிவுகளுக்கும், சீமான் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவாளருக்கும் எதிராக நடக்கும் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆரம்பத்தில் உணர்வுகள் களத்தில் எனக்கிருந்த தொடர்பையும், என்னுடைய தமிழுணர்வையுமறிந்த் நண்பர்கள் பலர் என்னிடம் அக்களத்தின் இன்றைய நிலையைப் பற்றி விசாரித்த பின்பு தான் எனக்கே தெரியும். அங்கு என்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல் செய்யும் வகையில் என்னைத் தடைசெய்து விட்டது அந்த பச்சோந்தி.

தான் ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவராக இருந்தும், ஈவெரா பெரியார் போன்ற சாதி எதிர்ப்பாளர்களை எல்லாம் வசைபாடி, பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்கும் அந்த ஈனத்தனத்தை நினைத்தால் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

நான் இணையத்தளங்களிலோ அல்லது வலைப்பதிவுகளில் எழுதுவதை நிறுத்திப் பலவருடங்களாகி விட்டன. ஆனால் இலங்கை அரசின் அல்லது தமிழெதிர்ப்புக் குழுக்களின் சார்பில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்தக்களத்தில் பிரச்சாரம் செய்யும், பல புனைபெயர்களில் எழுதும் அந்தப் பச்சோந்தியைப் பற்றிய விவரங்கள் விரைவில் யாழ் களத்திலும் , என்னுடைய புதிய வலைப்பதிவிலும் எழுதப்படும்.

"http://unarvukall.blogspot.com

Edited by Aaruran

  • கருத்துக்கள உறவுகள்

ஆரூரன் ,

உணர்ச்சித் தளத்திலிருந்து உணர்வுத் தளத்துக்கு மீண்டுள்ளீர்கள். இதுவே உங்களது எழுத்தில் வருமென்று நம்புகிறேன். தற்போது உணர்வாளர்கள் என்போரா சீமான் உட்பட தெலுங்கன் மராட்டியன்க ன்னடன் ஆட்சியில் சோரம் போகிறார்கள் என்ற அரிச்சனைதான் அதிகமாக உள்ளது.

மற்றும் இன்னொரு உறுத்தல் மிக்க விடயம். எதிர்க்கருத்துக்கள் வந்தால் அவர்கள் இலங்கையரசுக்கு அல்லது இந்திய அரசுக்கு விலைபோய்விட்டார்கள் என்று அவரவர் கற்பனைக்கு எட்டியபடி கதைசொல்வதிலிருந்து நீங்கள் மாறுபடுவீர்கள் என்பது நம்பிக்கை.

நீங்கள் குறிப்பிட்ட உண்வுகள் இணையம் அறிமுகமானதாக இல்லாமையால் அதுபற்றி எந்தவிதமான கருத்தையும் கூறமுடியவில்லை.

எழுதுங்கள் கருத்துக்களால் கருத்தை வெல்வோம்.

அத்தளம் எவ்வாறு கைமாறியது என்பதைக் கூறமுடியுமா? :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தளம் எவ்வாறு கைமாறியது என்பதைக் கூறமுடியுமா? :(:icon_mrgreen:

Danguvaar,

அது ஒரு பெரிய கதை, விரைவில் எழுதுகிறேன். நண்பர் என நம்பி Paasword ஐயும் களத்தின் பொறுப்பையும் கையளித்ததால் வந்த வினை. கருத்துக்களின் மோதலால் பகையைச் சம்பாதிக்கலாம் என்பதால், யார் களத்தை நடத்துவது என்பதை யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை என்பதே எடுத்த முடிவு. ஆனால் அவர், தனது நண்பர்களிடம் சென்று, அந்தக்களம் தன்னுடையதென்று பீற்றிக் கொண்டதால், வந்த விளைவு தான் இது. அடையாளத்தை வெளிப்படுத்திய விட்ட பயத்தால், மற்றவர்களுக்காக கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அதற்கிடையில் வேலைப்பழுவினாலும், திருமணத்தாலும் நான் இணையத்தளங்களில் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். அதற்கிடையில் அந்தப் பச்சோந்தியும், அவரது நண்பர்களும் சேர்ந்து களத்தின் ஆரம்பகால நோக்கத்தை மாற்றி தமிழெதிர்ப்புக் களமாக, பண்டாரிகளினதும், பரதேசிகளினதும் கூடாரமாக மாற்றி விட்டனர்.

அதனால் வருத்தமடைந்த நான், பணத்தையோ அல்லது எவ்வளவு நேரத்தைச் செலவிட்டு அக்களத்தை வளர்க்கப் பாடு பட்டேன் என்பதையும் கூட மறந்து, எனக்கும் உணர்வுகள் களத்துக்கும் இப்பொழுது எவ்வித தொடர்புமில்லை என்பதை மட்டுமாவது ஒரு பதிவில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதற்குப் பதிலாக, இந்த மாதம், October 4,2009 இல் என் பெயரில் ஒரு பதிவைச் செய்து, நான் அந்தக் களத்தில் இன்னும் இருப்பதாக ஒரு மாயையைத் தோற்றுவித்துள்ளது நிர்வாகம். அதனால் தான் நான் யாழ் களத்தில் உண்மையைச் சொல்ல வந்துள்ளேன். ஏனென்றால் யாழ் களத்தில் தான் நான் முதலில் எழுதத் தொடங்கினேன். தொடங்கிய இடத்துக்கு, மீண்டும் தொடர்ந்து எழுதுவதற்காகத் திரும்பி வந்துள்ளேன். அவரின் தேவையில்லாத விதண்டாவாதத்தால் பல வலைப்பதிவாளர்களுடன் கருத்துச் சண்டையில் ஈடுபடவேண்டிய நிலை கூட ஏற்பட்டது. யாழிலுள்ள புதிய உறுப்பினர்களுக்கு அது எல்லாம் தெரிந்திருக்க முடியாதென நம்புகிறேன்.

Edited by Aaruran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரன் ,

உணர்ச்சித் தளத்திலிருந்து உணர்வுத் தளத்துக்கு மீண்டுள்ளீர்கள். இதுவே உங்களது எழுத்தில் வருமென்று நம்புகிறேன். தற்போது உணர்வாளர்கள் என்போரா சீமான் உட்பட தெலுங்கன் மராட்டியன்க ன்னடன் ஆட்சியில் சோரம் போகிறார்கள் என்ற அரிச்சனைதான் அதிகமாக உள்ளது.

மற்றும் இன்னொரு உறுத்தல் மிக்க விடயம். எதிர்க்கருத்துக்கள் வந்தால் அவர்கள் இலங்கையரசுக்கு அல்லது இந்திய அரசுக்கு விலைபோய்விட்டார்கள் என்று அவரவர் கற்பனைக்கு எட்டியபடி கதைசொல்வதிலிருந்து நீங்கள் மாறுபடுவீர்கள் என்பது நம்பிக்கை.

நீங்கள் குறிப்பிட்ட உண்வுகள் இணையம் அறிமுகமானதாக இல்லாமையால் அதுபற்றி எந்தவிதமான கருத்தையும் கூறமுடியவில்லை.

எழுதுங்கள் கருத்துக்களால் கருத்தை வெல்வோம்.

சாந்தி,

நன்றி. உணர்வுகள் களத்தின் முந்தைய கருத்துக்கள், தமிழிலக்கியப்பதிவுகள், விவாதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, வெறும் பண்டாரங்களின் களமாக மாறியுள்ளதால், முரண்பாட்டை இப்பொழுது உங்களால் முற்று முழுதாக உணர முடியாது. உணர்வுகள் களத்தின் முந்தைய கருத்துக்களை அறிந்தவர்கள், பல பெயர்களில் எழுதி தானே களத்தை நிரப்பும் வெங்காயம் யாரிடமோ சோற்றுக்காகச் சோரம் போய்விட்டது என்ற கருத்துக்குத் தான் வரமுடியும்.

Edited by Aaruran

நீங்கள் குறிப்பிடிற தளத்துக்குபோய் பார்த்தன். யாழில இருக்கற ஆக்களும் அங்கை இருக்கறீனம் போல இருக்கிது, இல்லாட்டிக்கு வெறும் ஒரே மாதிரி பெயரோவும் தெரியாது. பெரும்பாலும் இந்துமதம் - சைவம் சம்மந்தப்பட்ட விசயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் குடுக்கப்பட்டு இருக்கிது போல தெரிகிது. ஒரே பக்திப்பாடல்களாய் இருக்கிது. ஒவ்வொருத்தரும் சொல்கிற கருத்துக்களுக்கு என்ன செய்கிறது? அவரவரிண்ட கருத்து சுதந்திரம்.

மாப்பிள்ளை,

இங்குள்ளவர்களும் அவருடன் இணைந்திருக்கலாம், அது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட முடிவு. நான் இணையத்தளங்களிலும், வலைப்பூக்களிலும் எழுதுவதை நிறுத்திப் பல வருடங்களாகி விட்டன. எந்த தமிழுணர்வுடன் அந்தக் களம் ஆரம்பிக்கப்பட்டு, பெயருமிட்டோனோ, அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் தமிழுணர்வாளர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்கள் அவர்களுடைய கோயில்களிலேயே மந்தைகள் போல நடத்தப்படுவதை, தமிழுக்கு உரிய இடம் மறுக்கப்படுவதை நியாயப்படுத்தும் வகையில், சில பரதேசிகளின் பிரசங்கங்களால் அக்களம் நிரப்பப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது முறையல்ல, என்பதால் தான் உண்மையை வெளிப்படுத்த நான் விரும்பினேன். அது மட்டுமல்ல, தேவையில்லாமல், என்னுடைய பெயரிலும் ஒரு பதிவைப் போட்டு, மற்றவ்ர்களுக்கு நானும் அவர்களின் தமிழெதிரி நாடகத்தில் பங்குதாரர் என்று காட்ட முனைந்த குள்ளநரித்தனத்தை வெளிக்காட்ட வேண்டுமென்பதற்காகத் தான் நான் இந்தப் பதிவை இங்கு செய்தேன்.

அங்கு நந்தி என்ற பெயரில் ஒரு நரி எழுதும் தமிழெதிர்ப்புப் பண்டாரப் பிரசங்களுக்கு, பதில்கள் பழைய உணர்வுகள் களத்தில் இருந்தன, அவையெல்லாம் அழிக்கப்பட்டு, அந்த தமிழ்க்களத்தை வெறும் தமிழெதிர்ப்பு, பண்டாரங்களின் கூடாரமாக, பெரியாரையும், மற்ற தமிழுணர்வாளர்களையும் எதிர்க்கும் தளமாக மாற்றியமையின் பின்னால் ஏதோ வகையான பொருளாதார இலாபம் நிச்சயமாக இருக்க வேண்டும். அங்குள்ள பதிவுகளுக்கு என்னால் சரியான பதிலளிக்க முடியும், அவரின் முகமூடியைக் கிழித்து விடுவேன் என்ற காரணத்தால் தான் நான் பதிவு செய்ய முடியாதவாறு செய்து விட்டனர். அந்த நந்தியினதும் நரிகளினதும் கருத்துக்கு, எனக்கு நேரம் கிடைக்கும் போது, யாழிலும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பதிவிலும் பதிலளிக்கவுள்ளேன். http://unarvukall.blogspot.com/

Edited by Aaruran

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப கால உறுப்பினரென்ற வகையில், எமக்குத் தெரிந்தவரை மேலே சொல்லிய சில விடயங்கள் உண்மையானவையே. ஒரு மனிதனின் செயல்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் குறுகிய காலத்தில் நேர் எதிரே மாறுவதென்பது (180 பாகை கோணத்தில்) நம்ப முடியாமலும் ஏற்கமுடியாமலும் உள்ளது. தற்பொழுது நான் கருத்துக்களை அங்கே பதிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுகள் தளம் சில காலம் இயக்கமற்றிருந்தது எப்போது இது அவர்களால் இயக்கப்பட்டது என்பது தான் தெரியவில்லை...

ஆரூரன் உங்களையும் உங்கள் உணர்வுகளையும் அறிவேன்.. அது தற்ஸ் தமிழ் களத்தில் இடம்பெற்ற விவாதங்கள் முதல் பின்னர் யாழ்.. அதன் பின் உணர்வுகள் என்று....

எனவே இது பற்றி நீங்கள் அக்கறைப்படத் தேவையில்லை...

அதே நேரம் உணர்வுகள் தளம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே. அது தமிழ்த்தேசியத்துக்கு எதிரான தளம் என்று சிலரால் கூறப்பட்டதை நினைவில் நிறுத்திக்கொள்ளும் அதே வேளை நீங்கள் அதை மறுத்திருந்தீர்கள்... அப்படியானால் இன்று நடாத்துபவர்கள் அப்படி பட்டவர்கள் எனில் இது அவர்களின் நீண்ட காலத்திட்டத்தின் வெளிப்பாடா?

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மோகன் எதுக்கும் உசாராய் இருங்கோ

(மாப்பிள்ளை @ ழுஉவ 12 2009இ 12:07 யுஆ)

நீங்கள் குறிப்பிடிற தளத்துக்குபோய் பார்த்தன். யாழில இருக்கற ஆக்களும் அங்கை இருக்கறீனம் போல இருக்கிதுஇ இல்லாட்டிக்கு வெறும் ஒரே மாதிரி பெயரோவும் தெரியாது. பெரும்பாலும் இந்துமதம் - சைவம் சம்மந்தப்பட்ட விசயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் குடுக்கப்பட்டு இருக்கிது போல தெரிகிது. ஒரே பக்திப்பாடல்களாய் இருக்கிது. ஒவ்வொருத்தரும் சொல்கிற கருத்துக்களுக்கு என்ன செய்கிறது? அவரவரிண்ட கருத்து சுதந்திரம்.

எனக்கு யாழைத் தவிர வேறு ஏதும் தெரியாதப்பு

Edited by jhansirany

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..

. கருத்துக்களின் மோதலால் பகையைச் சம்பாதிக்கலாம் என்பதால், யார் களத்தை நடத்துவது என்பதை யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை என்பதே எடுத்த முடிவு. ஆனால் அந்த வெங்காயம், தனது நண்பர்களிடம் சென்று, அந்தக்களம் தன்னுடையதென்று பீற்றிக் கொண்டதால், வந்த விளைவு தான் இது. அடையாளத்தை வெளிப்படுத்திய விட்ட பயத்தால், மற்றவர்களுக்காக கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

..

.

கூட்டி கழித்து பார்த்தால் களக்தின் இன்றைய நிலமைக்கு மூலம் இது தான் போல.

ஒரே ஒரு நெருடல் தான். பிரச்சனை வந்தால் - ஒரே அடியாக களத்தை மூடி விட்டு போக வெண்டியதனே.

அதை விட்டு ஏன் இப்படி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுகள் தளம் சில காலம் இயக்கமற்றிருந்தது எப்போது இது அவர்களால் இயக்கப்பட்டது என்பது தான் தெரியவில்லை...

ஆரூரன் உங்களையும் உங்கள் உணர்வுகளையும் அறிவேன்.. அது தற்ஸ் தமிழ் களத்தில் இடம்பெற்ற விவாதங்கள் முதல் பின்னர் யாழ்.. அதன் பின் உணர்வுகள் என்று....

எனவே இது பற்றி நீங்கள் அக்கறைப்படத் தேவையில்லை...

அதே நேரம் உணர்வுகள் தளம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே. அது தமிழ்த்தேசியத்துக்கு எதிரான தளம் என்று சிலரால் கூறப்பட்டதை நினைவில் நிறுத்திக்கொள்ளும் அதே வேளை நீங்கள் அதை மறுத்திருந்தீர்கள்... அப்படியானால் இன்று நடாத்துபவர்கள் அப்படி பட்டவர்கள் எனில் இது அவர்களின் நீண்ட காலத்திட்டத்தின் வெளிப்பாடா?

நன்றி பறவைகள். நான் இணையத்தளங்களில் எழுதுவதை நிறுத்தி இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. இன்றும் உணர்வுகள் களத்தின் நிர்வாகத்தை வைத்திருப்பவர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர் என்பதை நம்ப என் மனம மறுக்கிறது. இது இடையில் வந்த நட்புக்களின் தொடர்பால் வந்த விளைவு அல்லது ஏதாவது பொருளாதார இலாப நோக்கத்துக்காக எடுத்த முடிவு, அல்லது மற்றவர்களின் பயமுறுத்தலினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. அதே வேளையில் பல முந்தைய சம்பவங்களை நினைவு கூரும்போது அப்படியும் கூட இருக்கலாம் எனவும் எண்ணத் தோணுகிறது. நான் தான் நம்பி ஏமாந்து விட்டேனோ என்ற ஐயமும் எனக்கு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, என்னை மற்றவர்களுடன் சிண்டு முடித்து விடுவதிலும், என்னுடைய எழுத்துக்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு விதண்டாவாதப் பதில்களை என்பெயரிலேயே பதிவு செய்து, பலருடன் மோதல்களும் ஏற்பட ஏதுவாக இருந்ததுமுண்டு.அதனால் எனக்கே குழப்பமாகத் தானுள்ளது.

Edited by Aaruran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டி கழித்து பார்த்தால் களக்தின் இன்றைய நிலமைக்கு மூலம் இது தான் போல.

ஒரே ஒரு நெருடல் தான். பிரச்சனை வந்தால் - ஒரே அடியாக களத்தை மூடி விட்டு போக வெண்டியதனே.

அதை விட்டு ஏன் இப்படி....

திருவாளர் வேக்கப்கோல்,

உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்களைப் பார்த்ததும் பழைய மகிழ்ச்சியான நினைவுகள், சண்டைகள், சமரசங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. நான் எப்பொழுதுமே உங்களின் கருத்துக்கு மதிப்புக்கு கொடுத்ததுண்டு என்பது உங்களுக்குத் தெரியும்.

இப்பொழுதும் நீங்கள் சொல்வது சரியே, பிரச்சனையென்று வந்தால், அல்லது பயமுறுத்தல்கள் வந்தால், களத்தை இழுத்து மூடுவதற்குப் பதிலாக, எதற்காக கொள்கையை மாற்றி, எழுத்துக்களை மாற்றி, பெயரை மாற்றி, போற்றியவர்களை எல்லாம் தூற்றி, அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி, எந்த தமிழெதிரிகளுடன் மோதுவதற்காக களம் உருவாக்கப்பட்டதோ அவர்களுடனேயே கூட்டுச் சேர்ந்து, அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்களை இழித்துப் பேசி, பண்டாரங்களை வரவழைத்து பரிகாரம் பண்ணி, பிரசங்கம் வைத்து, கண்ட இடமெல்லாம் சாமிப்படங்களைக் கொழுவி, சத்தம் போட்டுச்சாமிப்பாட்டுப் பாடி, கோணங்கித் தனம் பண்ணுவதை விட்டு, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்.

Edited by Aaruran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குதான் கொண்டாட்டம் அதுபோல

நமக்குள், நாமே சன்டை போட்டுகொண்டால், எரிகிற வீட்டில் ஒருவியது வரை லாபம் என்று எதிரிகள் கொண்டாடுகிறார்கள்.

சம்பந்த பட்டவர்கள் இதை படிப்பார்கள்.

இன்று கண்ணை மறைக்கும் ஆத்திரம் மாறும் பொழுது, இழந்த சொந்தங்களை மீண்டும் பெருவது கஷ்டம் என்று உணர்ந்தால்

எல்லோரும் அவர் அவர் வழியில் நடக்கலாம், என்றாவது சந்திக்கும் பொழுது மனம் மகிழலாம்.

hope people who write in that forum read this as well, if not let some who knows may pass this

நன்றி அறிவித்தலுக்கு. பல நால் சென்று நேற்றுத்தான் பார்தேன் மூச்சு நிண்டு போட்டுது.

இருந்தாலும் எம் இனத்தின் பாகமாக இருக்கும் துரோகிகளைவிட நாம் தந்திரமுள்ளவர்களாக இருக்கவேண்டும். நமக்குள் துரோகிகள் எழழாம் எழுந்து கொண்டு இருக்கல்லாம் என்பதை நினைவில் வைது விடுதலையை நோக்கி கலத்தில் இரங்குவோம்.

இது ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லாத தன்மையை உருவாக்கலாம், என்பது உண்மை. ஆனால் உசாரா இருக்க வேண்டும்

எதிரிக்கு தெரியும் எங்களுக்கு எதில அடிச்ச வலிக்கும் எண்டு. எங்களுக்கும் தெரியும் எதிரிக்கு எதில அடிச்சா வலிக்கும் என்று ஆனா நாங்க அடிக்கமாட்டோம்.

தடைகளை தாண்டி முன்னுக்கு சொல்வோம். தடைகள் இன்றி வேகங்கள் நிர்னயிக்கிறது கஸ்டம்

நன்றி என் உணர்வுகள் எப்பவும் அப்படியேதான் இருக்கு

குறைந்த குடம் தடதடக்கும் விவங்கள விடுங்கோ சின்ன ப் பசங்க நேற்று பெச்ச மழழ முலச்சதுகள்

எழுத்துப் பிழைகளுக்கு மன்னியுங்ஓ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குதான் கொண்டாட்டம் அதுபோல

நமக்குள், நாமே சன்டை போட்டுகொண்டால், எரிகிற வீட்டில் ஒருவியது வரை லாபம் என்று எதிரிகள் கொண்டாடுகிறார்கள்.

சம்பந்த பட்டவர்கள் இதை படிப்பார்கள்.

இன்று கண்ணை மறைக்கும் ஆத்திரம் மாறும் பொழுது, இழந்த சொந்தங்களை மீண்டும் பெருவது கஷ்டம் என்று உணர்ந்தால்

எல்லோரும் அவர் அவர் வழியில் நடக்கலாம், என்றாவது சந்திக்கும் பொழுது மனம் மகிழலாம்.

hope people who write in that forum read this as well, if not let some who knows may pass this

நன்றி திரு.வேக்கப்கோல்,

உண்மையில், அவன் மட்டும், நான் மின்னஞ்சலில் கேட்டுக் கொண்ட மாதிரி எனக்கும் அவனுடைய தமிழெதிரி உணர்வுகள் களத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாதென்று ஒரு பதிவை மட்டும் செய்திருந்தால், நான் இணையத்தளங்கள், வலைப்பூக்களின் பக்கம் மீண்டும் தலைவைத்துக்கூட படுத்திருக்க மாட்டேன். இப்பொழுது எனக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது. நான் அந்தக்களத்தில் முன்பு எழுதியதையறிந்த நண்பர் சிலர், அங்கு எழுதப்படுபவைகளைக் கண்டு திகைத்துப் போய் என்னிடம் அதைப்பற்றிக் கேட்ட பின்னர் தான், நான் அங்கு சென்று படித்தேன். உடனடியாக, நான் முழுவதையும் வாசிக்காமல் செய்யும் வகையில் என்னுடைய IP முகவரியைத் தடை செய்து விட்டனர். வேறு வழியாகவும் பார்க்கமுடியும் என்பது தெரியாது போலிருக்கிறது.

ஆனால் ஓக்ரோபர் 4ம் திகதி வேண்டுமென்றே ஆரூரன் என்ற பெயரில் தானே இணைந்து, என்னைப் போலவே ராசராச சோழனின் படத்தை avatar ஆகப் போட்டு பச்சை நிறத்தில் ஒரு பதிவுகளைப் போட்ட குள்ளநரித்தனத்தையும், அவனது வளர்ப்பின் குணத்தையும் காட்டியதால் தான், நான் யாழ் களத்துக்கு உண்மையைச் சொல்ல வந்தேன். அதற்குப் பின்பும் பலநாட்கள் என்ன செய்வதென்றறியாது இருந்து விட்டு, என்னுடைய நண்பர்கள் வற்புறுத்தியதால் தான் இந்தப் பதிவை இங்கு செய்தேன்.

Edited by Aaruran

  • கருத்துக்கள உறவுகள்

ஆரரான் நீங்கள் ஒஸ்ரேலியாவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரரான் நீங்கள் ஒஸ்ரேலியாவா

இல்லை, ஏன் கேட்கிறீர்கள்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி உதவுவது போல் அண்ணன், தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது சரியாகத் தானிருக்கிறது. என்னுடைய இந்தப் பதிவினாலும், இனிமேல் உணர்வுகள் களத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு தமிழர்களே முதுகில் குத்தும் கருத்துக்களுக்கு நான் உடனுக்குடன் பதில் கொடுப்பேன் என்று அறிவித்த ஒரு நாளிலேயே,தமிழீழத்தின் தியாகிகளைக் கொச்சைப்படுத்திக் கேலி செய்த பதிவுகளும், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை இழிவு படுத்தும் பதிவுகளும், என் பெயரில் அவர்களாலே பதியப்பட்ட பதிவுகளும் நீக்கப்பட்டு விட்டன. இவ்வளவு பயமிருந்தால் போதும். :lol::lol::D:D

ஆனால் எப்படித்தான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் குரைக்கிற நாய் சந்தர்ப்பம் கிடைக்கும் போது குரைக்கத் தான் முயலும், அதைக் கண்காணிக்கும் பொறுப்பு உண்மையான தமிழுணர்வுள்ள ஈழத்தமிழர்களுக்குரியது.

http://unarvukall.blogspot.com/

Edited by Aaruran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.