Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய குழுவின் வருகை அதிருப்தியும் ஆச்சரியமும்!

Featured Replies

வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்கு உள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இந்தியகுழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டது ஆனால் அதனை பிரதி பலிக்குமால் போல் எதுவும் நடைபெறவில்லை என்பது கூட்டமைப்பு உட்பட பலரின் கருத்தாக இருக்கின்றது.

1 முதலாவதாக வடக்கு கிழக்கில் மக்களின் பெரும்வாக்குகளை பெற்று 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மக்கள் பிரதினிதிகள் இருக்கும் போது சிங்கள அரசு தனது கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சில உதிரிகளையும் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் சிலரையும் அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஒழுங்கு படுத்தி இருந்தமை.

2 அடுத்ததாக கிழக்கு மாகாணம்மற்றும் இராணுவம் அண்மையில் விடுவித்த பகுதிகள் என கூறும் பகுதிகளுக்கு குழுவினரை அனுப்பவில்லை.

3 தடுப்பு முகாம்களை பார்வையிட 06 மணித்தியாலங்களே ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் இவர்களின் சுற்றுலா நாட்கள் 06 நாட்கள்

4 யாழ்ப்பாணம் வருகையில் யாழில் இருக்கின்ற பெரும்பான்மை மக்கள் பிரதி நிதிகள் உள்ளடக்கப்படவில்லை ( பாராளுமன்ற உறுப்பினர்கள்)

5 தடுப்பு முகாம் பார்வை இடுவதற்கு கூட அந்த மக்களின் பிரதி நிதிகளை குழுவுடன் அனுப்பவில்லை

6 அடுத்ததாக கூட்டமைப்பினருடனான சந்திப்பு 1.15மணித்தியாலங்கள் இதில் 15 நிமிடங்களே தடுப்பு முகாமில் உள்ள மக்களின் நிலைமைகள் பற்றி பேசப்பட்டது.

7 வந்த குழு இந்தியா திரும்பும் முன்பே கருணா நிதி நாள் தோரும் இந்த குழு இந்திய அரசாங்கம் அனுப்பிய குழு அல்ல என குளரிக்கொண்டிருக்கின்றார்.

8 தடுப்பு முகாம் மக்கள் எழுத்து மூலமான கருத்துக்களை குழுவினர் வாங்காது விட்டுள்ளனர்.

9 தொண்ட மானும் டக்ளஸ் அவர்களும் அரச பிரதினிதிகள் முகாமில் இருக்கும் மக்கள் சார்பாகவோ அல்லது தமிழ் மக்கள் சார்பாகவோ யாரும் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை குவுடன் இருக்கவில்லை.

இவ்வாறு பலகாரணங்கள் இருக்கின்றன.

இது தொடர்பாக கூட்டமைப்பினரின் கருத்துக்கள் கீழ் வருமாறு இருக்கின்றன.

இந்திய குழுவின் வருகை மூடு மந்திரமாக இருந்தது. இந்த மக்களின் அவலநிலைமையை உண்மை நிலைவரத்தை கண்டறிவதாயின் அதற்கான ஏற்பாடுகளை அந்த மக்களின் பிரதி நிதிகளுடனேயே செய்ய வேண்டும். ஆனால் இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகை பெரும் மூடுமந்திரமாகவே வைக்கப் பட்டது. தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஒரு சுமுகமான தொடர்பாடலைப் பேணாமலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆக, கூட்டமைப்பினருடன் ஒரு சந்திப்பு குறுகிய கால முன்னறிவித்தலுடன் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்டது. அதுவும் ஒன்றே கால்மணி நேரத்துக்குள் அவசரமாக முடிக்கப்பட்டது. சந்திப்பின்போது இந்திய எம்.பிக்கள் தரப்பில் பிரதிபலிக்கப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தின என்று கூறப்படுகின்றது. இலங்கைத் தரப்புடன் ஓர் உடன்பாடு கண்டு, அதனடிப்படையில் சில விடயங்களை ஒப்பேற்றவே இந்த எம்.பிக்கள் குழு இலங்கை வந்துள்ளது என்ற எண்ணம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் கூறி இருக்கின்றார்.

காங்கிரஸின் மூத்த எம்.பி. சொன்ன காரணம்

"இந்த அகதிகளை மீளக் குடியேற்று வதை இலங்கை இராணுவம் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகின்றது. அதையும் மீறி அகதிகளை மீளக் குடியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்றால் அவருக்கு எதிராக இராணுவம் கிளம்பும் சாத்தியம் உண்டு. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதில் இராணுவத்துக்கு சார்பாக சீனா தலையிடும் சூழல் உண்டு. இதை யெல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டி உள்ளது.'' என்ற சாரப்பட இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.ஒருவர் இந்தச் சந்திப்பில் கூறியிருக்கின்றார். இது, இக்குழுவினரின் உள் நோக்கம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் மத்தியில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

மேலும், இந்தச் சந்திப்பில் அகதிகளின் நிலைமை குறித்துப் பேசி முடிப்பதற்கிடையிலேயே நேரம் போய்விட்டதாகக் கூறி சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.

"தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய வந்தவர்கள் தமிழர் தரப்பின் முக்கிய பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்து யாடாமல் முடித்துக் கொண்டமை முறித்துக் கொண்டமை வேறு உள்நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் இக்குழுவின் விஜயம் அமைந்துள்ளது என்ற கருத்தையே எமக்குத் தந்துள்ளது.'' என்றார் கூட்டமைப்பின் இன்னொரு எம்.பி.

தமிழர்களின் அவல நிலைக்கு இந்தியாவே காரணம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்

"ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குப் பிரதான காரணகர்த்தாக்களில் இந்தியாவும் ஒன்று. அவர்களால்தான் இந்த அவல நிலை இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது. இதை இக்குழுவினருக்கு உணர்த்த முன்னரே சந்திப்பை நேரம் போதாது என முடித்துவிட்டார்கள்.

இக்குழுவினரின் இலங்கை வருகைக்கான பிரதான நோக்கம் வவுனியாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்கள் பற்றியதே. எனவே, அவர்களின் வருகையில்

கணிசமான நேரம் அந்த அகதிகளுடனான சந்திப்பாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நேற்று மாலை சில மணி நேரத்துடன் முடிந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எல்லா அகதி முகாம்களுக்கும் இந்தக் குறுகிய நேரத்துக்குள் சென்று விடயத்தை முடித் துக்கொள்ளலாம் எனக் கூறுவது அபத்தமாகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அகதிகளையும் இணைத்துக்கொண்டு வராமல், தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்ட ணியில் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை மட்டும் அதுவும் இந்திய மத்திய அரசின் தூதுக்குழுவாக அல்லாமல் தமிழக முதல்வரின் தூதுக்குழுவாக அனுப்பி வைத்திருக்கின்றமையும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகத் தமிழர் தரப்பில் கூறப்பட்டது.

ஆக ஒட்டு மொத்தத்தில் முகாமில் உள்ள தமிழர்களை வைத்து ஆடப்படும் நாடகங்களில் இதுவும் ஒரு கந்துடைப்பு நாடகம் என்றே கூறமுடியும்.

http://www.eelanatham.net/

இலங்கை வந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றுக் காலை யாழ். நகருக்கும், அங்கிருந்து வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர்.நேற்றுக் காலை விமானப் படை விமானம் மூலம் இரத்மலானையிலிருந்து யாழ். நகரைச் சென்றடைந்த குழுவினர் பலாலி விமானத் தளத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். கோட்டையை சென்றடைந்தனர்.

காலை 9.45 மணியளவில் யாழ். கோட்டையை வந்தடைந்த குழுவினரை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் கணேஸ் ஆகியோர் வரவேற்றதுடன் தந்தை செல்வா நினைவுத் தூபி அருகே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தபின்னர் பேண்ட், மற்றும் நாதஸ்வர மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக யாழ். பொது நூலகத்துக்கு குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் தமிழக குழுவினர் கலந்துகொண்டனர்.யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக குழுவின் தலைவர் ரி. ஆர். பாலுவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். யாழ். மேயர் பதவிக்கு தெரிவாகியுள்ள திருமதி யோகேஸ்வரி கவிஞர் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த நிகழ்வுகளின் பின்னர் யாழ். நூலகத்துக்கு முன் குழுமியிருந்த மக்களுடனும் தமிழக் குழுவினர் உரையாற்றினர்.

தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் யாழ். ஆயரும், செல்வநாயகம் ஞாபகார்த்த அறங்காவல் குழுவின் தலைவருமான பேராயர் வணக்கத்துக்குரிய ஜெபநேசன் அடிகளாரும் தமிழக குழுவினருடன் பேசினார்.யாழ். நிகழ்வுகளை முடித்துக் கொண்ட தமிழக குழுவினர் ஹெலிகொப்டர்களில் காலை 11.30க்கு வவுனியா புறப்பட்டனர்.

வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தை அண்டியுள்ள ஹெலிக்கொப்டர் நிறுத்துமிடத்துக்கு பகல் 12.15 மணியளவில் வந்து சேர்ந்த தமிழக குழுவினர் மனிக்பாம் நிவாரணக் கிராமத்தின் வலயம் 1, வலயம் 2 என்பவற்றுக்கு விஜயம் செய்தனர்.நிவாரணக் கிராமத்திலுள்ள பாடசாலைகளை பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் தமிழக குழுவில் அங்கம் வகிக்கும் கலைஞர் கருணாநிதியின் புதல்வி கவிஞர் கனிமொழியையே பெரும்பாலும் சூழந்துகொண்டனர்.

கதிர்காமர், அருணாசலம், இராமநாதன் வலயம் 4, 5 போன்ற நிவாரணக் கிராமங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்தனர். சில நிவாரணக் கிராமங்களின் உள்ளே சென்று மக்களுடன் உரையாடினர். சில கிராமங்களை வாகனத்தில் சென்றபடியே பார்வையிட்டனர். சென்னையிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி உயர் ஸ்தானிகர் வீ. கிருஷ்ணமூர்த்தி, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் காரியவசம், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் தமிழக குழுவினருடன் சென்றுள்ளனர்.

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து தமிழக குழுவினர் நேற்று மாலை 4.00 மணிக்கு மீண்டும் கொழும்பு திரும்பினர்.

தமிழக எம்.பிக்கள் குழுவிடம் யாழ். மீனவர்கள் கோரிக்கை

தமிழக மீனவர்கள் யாழ். கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களின் வலைகள் அவர்களால் அறுத்தெடுக்கப்படுகின்றன. இதற்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு யாழ். கடற்றொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.தமிழக குழுவின் தலைவர் ரி. பாலு எம். பி. நேற்று யாழ். நூலக கேட்போர் கூடத்தில் யாழ். கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொது மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டபோதே மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போது நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகியிருப்பதனால் தமது கல்வியைத் தொடர இந்தியா குறிப்பாக தமிழகம் உதவ வேண்டும் என்றும் புலமைப் பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வும் இங்கு உரையாற்றினார்.தமிழக எம். பிக்கள் குழுவினரை யாழ். மக்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.

“முடிந்தது துயர் வாழ்வு, இன்று பிறந்தது இனிய காலை வருக தமிழக உறவுகளே” என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கலைஞர் கருணாநிதி, கவிஞர் கனிமொழி, ரி. ஆர். பாலு ஆகியோரின் உருவப்படங்களைத் தாங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு மக்கள் பாதை இருபுறமும் நின்றிருந்தனர்.

இந்திய நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி. ஆர். பாலு கருத்துக் கூறுகையில் எமது தலைவர் கலைஞர் கருணாநிதியினது அயராத முயற்சியினாலும் இலங்கைத் தமிழ் இனம் தொடர்பாக நல்லெண்ணம் வைத்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பணிப்புரைக்கமையவுமே நாம் இங்கு வந்தோம்.

முப்பது ஆண்டுகளாக யுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்த உங்களை தற்போது பார்க்கும் போது நாம் மிகவும் சந்தோஷப்படுகின்றோம்.குறிப்ப

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களர்களைப் போல தமிழர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்‐ டீ.ஆர் பாலு ‐ கோட்சேயின் விருந்தில் காந்தியின் சீடர்கள்‐ வைகோ சாடல்.

12 October 09 05:16 am (BST)

ஐந்து நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் குழு யாழ்பாணத்தில் நேற்றைய சந்திப்புகளை நடத்திய போது அங்கு டி,.ஆர் பாலு மற்றும் கனிமொழி ஆகியோர் ஆற்றிய உரைகள் வெளியாகியுள்ளன.

டி,.ஆர் பாலு ஆற்றிய உரையில் இலங்கை நட்பு நாடு. அந்த நாட்டுடன் உறவு தொடர வேண்டும். ஒருவருக்கு இரு கண்கள் இருப்பது அவசியம். அவற்றில் ஒன்று பழுதுபட்டாலும், ஒட்டுமொத்த பார்வைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். அதுபோன்று இந்தியா ‐இலங்கை உறவு பாதிப்பு ஏற்படாமல் தொடர வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். இலங்கைத் தமிழர்களும், இலங்கை அரசும் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண முயல வேண்டும். தமிழர்களும் சிங்களர்களும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்தால் பிரச்னைக்கு அமைதியான தீர்வை காணமுடியும்.

இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களைப்போல் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே திமுக மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பம். இதை இலங்கை அரசு கடைப்பிடிக்க நிர்பந்தப்படுத்துமாறு மத்திய அரசை அவர் ஏற்கெனவே பலமுறை வற்புறுத்தியுள்ளார் எனத் தெரிவித்தார்.

பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசும்போது இலங்கையில் உள்ள தமிழர்கள் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக எம்.பி.க்கள் நேரில் பார்வையிட உள்ளனர். நீதி மற்றும் சம உரிமை கோரி போராடிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எம்.பி.க்கள் முழு ஆதரவு அளிப்பர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது வசிப்பிடங்களில் விரைவில் குடியமர்த்த வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையை மாற்றி ஜனநாயக சூழ்நிலைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமாகும். தமிழர்களின் நிலையை நேரில் அறிந்து, இந்திய அரசின் பார்வைக்கு நாங்கள் கொண்டு செல்வோம். மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதை விரைவில் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம் எனக் கூறினார்.

முன்னதாக கொழும்பிலிருந்து விமானம் மூலம் இந்திய தூதர் மற்றும் இலங்கை அரசு அதிகாரிகளுடன் தமிழக எம்.பி.க்கள் பலாலி ராணுவ விமானதளத்தில் சென்றிறங்கினர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணம் புறப்பட்டுச் சென்றனர். வரவேற்புக் கூட்டத்துக்குப் பிறகு வெள்ளணையில் உள்ள மக்களின்; முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இடைத்தங்கல் முகாம் மக்கள் வசிக்கும் முகாம்களில் வெள்ளணை முகாம் மட்டுமே சுகாதார வசதிகளுடன் அமைக்கப்பட்ட முகாம் ஆகும். இந்த மக்களின் உண்மை நிலையை அறியவேண்டுமானால் தென்மராச்சியில் உள்ள சாவகச்சேரி முகாமை எம்.பி.க்கள் குழு பார்வையிட வேண்டும் என்று அங்குள்ள மக்கள்; வலியுறுத்தியுள்ளனர்.

கோட்சேயின் விருந்தில் காந்தியின் சீடர்கள்‐ வைகோ சாடல்.

நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடையே பேசிய வைகோ மிகக் கடுமையான வார்த்தைகளால் தமிழக காங்கிரஸ், திமுக எம்பிக்களின் இலங்கை விஜயத்தை விமர்சித்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஸ தமிழக எம்பிக்கள் குழு சந்திப்பது அவமானம். கோட்சே வைக்கும் விருந்துக்கு காந்தியின் சீடர்களைக் கூப்பிடுவது போல இது என்று வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஐந்தரை மாதங்களாக மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைபட்டு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இவர்களை சந்திப்பதற்கு அதிபர் ராஜபக்ச தமிழக எம்பிக்கள் குழுவை அழைத்துள்ளார். தமிழினத்தை கொலை செய்த அவரை தமிழக எம்பிக்கள் சந்திப்பது அவமானம். இதற்கு திமுக உறுதுணையாக இருந்தது. யுத்தத்தை தடுக்க வேண்டியவர்கள் அப்போது கபட நாடகம் ஆடினர். இலங்கையில் தமிழக எம்பிக்கள் குழு செல்வது ஒரு கண்துடைப்பு நாடகம். ராஜபக்ச தமிழக எம்பிக்களை அழைப்பது காந்தியின் சீடர்களை கோட்சே விருந்துக்கு அழைப்பது போல் உள்ளது என வைகோ கண்டித்துள்ளார்.http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=15866&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் குழுவின் விஜய ஏற்பாடு:உள்நோக்கம் குறித்து சந்தேகம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஜயத்தை ஒட்டிய ஏற்பாடுகள் குறித்து பெரும் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இக்குழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் அதை விட வேறு உள் நோக்கங்கள் இக்குழுவுக்கு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.

இந்தக் குழுவினரின் வருகைக்கான ஏற்பாடுகள், ஒழுங்குகள், நடைமுறைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடியோடு பிடிக்க வில்லை என்று தெரியவந்தது.

சரியோ, பிழையோ இலங்கை நாடாளு மன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்குத் தமிழர்கள் 23 பேரில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இன்று சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் வன்னித் தமிழர்களை நாடாளுமன்றில் பெருமளவில்பிரதிநிதித்துவப்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி முகாம்களைப் பார்வையிடுவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு அங்கு செல்வதால் பயனேதும் இருக்குமா?

இருக்கும்

இருக்காது

தெரியாது

வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

http://tamil.webdunia.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா கிராபிக் படங்களயெல்லாம் கொண்டவந்து போட்டுக்கொண்டு.....

போட்போசொப்பில விளயாடியிருக்கு.......

கனவிலகூட இப்பிடியெல்லாம் நடக்காது! நடக்க விட்டிடுவமோ??????

சும்மா கிராபிக் படங்களயெல்லாம் கொண்டவந்து போட்டுக்கொண்டு.....

போட்போசொப்பில விளயாடியிருக்கு.......

கனவிலகூட இப்பிடியெல்லாம் நடக்காது! நடக்க விட்டிடுவமோ??????

அப்படியே? நான் நினைச்சன் உண்மையாக்குமெண்டு! அப்ப இதுவும் கிறபிக் போட்டோ சொப்பே?

http://farm4.static.flickr.com/3482/399775..._b471653e42.jpg :icon_mrgreen:

:( :(http://farm3.static.flickr.com/2458/399775..._b97094de46.jpg

http://www.tamilnet.com/img/publish/2003/0...na_03_04_03.jpg :lol::(

Edited by Bond007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே? நான் நினைச்சன் உண்மையாக்குமெண்டு! அப்ப இதுவும் கிறபிக் போட்டோ சொப்பே?

http://farm4.static.flickr.com/3482/399775..._b471653e42.jpg :(

:lol: :lol:http://farm3.static.flickr.com/2458/399775..._b97094de46.jpg

http://www.tamilnet.com/img/publish/2003/0...na_03_04_03.jpg :lol: :lol:

2003 ல கிறாபிக் படங்கள்

கெட்டிக்காரர்தான்.....

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

indianmps71.jpg

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னா படம்??? ........... "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" கேட்டவருக்கு, இப்போ சன் ரிவி, கலைஞர் ரிவி யாழ் முகவராகுகிறார்(இப்படத்தை பார்த்தால் டீல் முடிந்த மாதிரிதான்). இத்தோடு தமிழர்களின் இன்னொரு பிரட்சனையும் தீர்ந்து விடும்.

யாழில் உள்ள சில நூலகங்களினதும், சில ஆலயங்களினதும் சுவர்களுக்கு சாந்து அடிப்பதோடு தமிழர்களின் பிரட்சனை தீர்ந்து விட்டதாக, யுத்த நிறுத்தத்துக்கு பின்னர் 2000 இளைஞர்களை யாழ் நகரில் பலியெடுத்த மன்னவர் டக்லஸ் "தன்னையும் காப்பாற்றி, மக்களோடு இருப்பவர்கள்" என்ற அற்புத கொள்கையை அண்மைய தேர்தலில் வெளியிட்டார்.

இப்போது எல்லோருக்கும் அண்ணையின் புதல்வர்கள் பாய்ந்து பாய்ந்து துரோகிகள் பட்டமளித்து கவுரவிக்கிறார்கள்!! இதனால் உண்மையான துரோகிகள் யார்? என்பது மக்களுக்கு குழப்பமாகிறது. இறுதியில் துரோகிகளை தமிழ் மக்களின் தலைவர்களாக்குகிறோம்!!! ... உண்மையான ஒன்றைச் சொல்ல வேண்டும் .... இவங்கள் எல்லோரும் அண்ணையின் சிந்தனையின் வித்துக்கள்!!

இது யாழ்கள ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். அடுத்து வரும் நிகழ்ச்சியாக பாட்டொன்று கேட்போம் ....

Indian-MPs8_1.jpg

"நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ, நான் வேறோ

........................."

Indian-MPs8_1.jpg

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

ஒன்னுமே புரியல இந்த உலகத்தில

நேற்று தலைவர் மேதகு பிரபாகரன்

இன்று மேதகு டக்கிலஸ்??????????

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்லை இதெல்லாம் சகஜமப்பா ...........

<b>அரசியல்லை இதெல்லாம் சகஜமப்பா ...........</b>

:(:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.