Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் இலட்சியத்தில் விளையாடும் இயக்குனர் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்குறிப்பு இயக்குணர் சீமானின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்கி எனது இந்த மடலை உலகத்தமிழினத்துக்கு எழுதுகிறேன்.

போகிற போக்கை பார்த்தல் சிங்கள அரசே பரவா இல்லை போல இருக்கிறது. அவர்களை பொறுத்த வரை போர் முடிந்து விட்டது. பிரபாகரன் கிளைமாக்ஸ் காட்சியில் கொல்லப்பட்டார். (நமக்கு வீரச்சாவு). அறிவியலில் உச்சபச்ச வளர்ச்சி கொண்ட இலங்கையில் இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ சோதனை செய்து உறுதி ஆகியது. பின்னர் சடலத்தை எரித்து இந்துமா கடலில் சாம்பலை எரிதாகி விட்டது. அப்படியே பதினாறாம் நாள் காரியம் செய்தால் எல்லாம் முடிந்தது.

லண்டனில், நோர்வேயில் இருக்கும் செய்தி தொடர்பாளர்கள் முதலில் தலைவர் உயிருடன் உள்ளார் என்றார்கள். வைகோ, பழ.நெடுமாறன் போன்றோரும் உறுதி செய்தனர். நக்கீரனும் தன் பங்குக்கு செய்தி போட்டு காசு உழைத்தது. பிறகு புலனாய்வு செய்தி தொடர்பாளர் என்று ஒருவர் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று அதிகாரப்படி அறிவித்தார். தமிழ் மக்களின் நெஞ்சில் பால் வார்த்து போல இருந்தது அந்த செய்தி.

கொஞ்சம் கவலை மறந்து இருந்த நிலையில்

(அதாவது தலைவரின் இருப்பு குறித்து மட்டுமே. தமிழர்கள் முகாம்களில் படும் அவலம் குறித்த கவலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.)

விடுதலைப்புலிகளின் அனைத்துலகச்செயலர் பத்மநாதன் முழு நீள அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஒரு மாவீர வணக்கத்துடன் தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்கிறார். ஏன் இந்த முரண்பாடு. அப்படியே மரணம் என்றாலும் மாவீரனுக்கு செலுத்தும் அஞ்சலி வெறும் ஒரு பக்க அறிக்கை மட்டும்தானா. கூட்டங்கள், இரங்கல் ஊர்வலம் இல்லையா? முத்துகுமரனுக்கே மாபெரும் ஊர்வலம் நடந்ததே? இதற்குள் பிரபாகரனின் வாழ்வை அவரின் தியாகத்தை சுபாஸ் சந்திரபோஸ் வாழ்வுக்கு சமம் என ஒப்பிடுகின்றனர். இந்தியன் தனது பிழைப்புக்காக காந்தியின் கோவணத்துக்காக சுபாஸ் மரணத்தை புதைத்ததுபோல் உலகத் தமிழன் நிமிர்வுக்காக தன்னையே அர்ப்பணித்த மாவீரனை போர் வீரனை அவனின் தியாகத்தை மதிக்காது புதைப்பது ஏன் என்பது தான் புரியவில்லை

ஒரு வேளை அவரும் மகிந்தா கோத்தா கருணாவுடன் அன்ட் கோ போட்டுவிட்டாரா? தலைவர் முழு பலத்துடன் இருந்த போதே கருணா துரோகம் இழைத்தான். இப்போது தனது பலத்தை இழந்து உள்ளதால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நினைப்பில் பணத்தை அமுக்க புலிகளின் வெளிநாட்டு கிளைகள் நடத்தும் நாடகத்தின் வெளிப்பாடு இப்படி ஒரு அறிக்கையா? புலம் பெயர் தமிழரின் போராட்டத்தை நசுக்க நடக்கும் நாடகமா? சர்வதேசத்தை குழப்ப எடுத்த முடிவா? அல்லது மாவிலாறில் தொடங்கி, முள்ளி வாய்க்கால் வரையிலான ராஜதந்திரத்தில் இதுவும் ஒன்றா?

தமிழ்நாடில் இரண்டே பேர் மட்டுமே இப்போது தலைவர் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்கள். இயக்குணர் சீமான், மற்றவர் பரணி பாவலன். வை.கோ,நெடுமாறன் இருவரும் பத்மநாதன் துரோகி என்றனர்.இப்போ அவர்களுக்கும் உண்மை தெரிந்ததனால் சீமானின் அறிக்கைக்கு மறைமுகமாக பதில் கொடுத்து உள்ளனர், இதுவரை சிங்கள அரசு மீது சந்தேகமே இல்லை. அவர்கள் சொல்வது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ஆனால் இப்போது தமிழ் உணர்வாளர்கள் சொல்வது உண்மையா என்று சந்தேகம் எழுகிறது.

ஒரு வேளை அவர்கள் உண்மையை மறைக்கிறார்களா?

ஆம் என்றால் ஏன்?

இல்லை என்றால் தலைவர் பிரபாகரன் இருப்பதை அவர்கள் எப்படி உறுதி செய்தார்கள்.?

தொடர்ந்து உறுதியுடன் சொல்கிறார்கள்?

தலைவரின் வீர மரணத்தை இப்படி மறைப்பது ஏன்?

அல்லது சிங்கள இந்திய அரசின் உளவுத்துறை சூழ்ச்சிக்கு பலியாகி எங்கே இருக்கிறார் என்று சொல்லிவிடக் கூடாது என்று வேறு எந்த பதிலும் சொல்ல மறுக்கிறார்களா?

சின்ன துப்பு கிடைத்தாலும் அந்த இடத்தில ஊடுருவி தலைவரை பிடித்து விடுவர் என்பதால் சொல்ல மறுக்கிறார்கள் சீமான் சொல்வது போல் வைத்துக் கொண்டாலும், இது ஒன்றும் அமைதிக் காலம் இல்லை. போரே முடிந்து விட்டது. அதனால் பிரபாகரன் உயிருடன் இருந்தால் தனது பாதுகாப்பில் சின்ன ஓட்டை கூட இல்லாமல் இருக்க வேண்டிய தருணம். அதனால் அவர் தொலைபேசி பயன்படுத்த வாய்ப்பு இல்லை. அவருடன் இருக்கும் வேறு யாரும் பயன்படுத்தவும் வாய்ப்பு இல்லை. பிறகு நெடுமாறன், வைகோவுடன் தொடர்பு எப்படி?

சீமானுடன் கதைத்தது எப்படி?

புலம்பெயர் ஊடகங்கள் சிலவற்றுக்கு தெரிந்தது எப்படி?

காட்டுக்குள் இருக்கும் புலிகளுக்கு கணனி வசதி கிடைத்தது எவ்வாறு?

புலிகளின் போர்வீரன் அரவிந்தன் எழுதிய புதிய அறிக்கை ஏன்?

எதற்காக? வெளியானது.

அதன் உண்மைத்தன்மை என்ன?

இவ்வளவு சாதாரணமாக அந்த செய்தியயை வெளியிட காரணம் என்ன?

ஒரு வேளை சுபாஷ் சந்திர போஸ் போல தலைவர் பிரபாகரனின் வீர மரணத்தை மாற்ற முயற்சி செய்கிறார்களா?

வைகோ, நெடுமாறன் முன்பு சொன்னது போல் இப்போ சீமான் சொல்வதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது?

ஏன் இந்த குழப்பம், பிரபாகரன் மரணம் பொய் என்றால் பொட்டு, சூசை எங்கே?

பிரபாகரனின் மனைவி பிள்ளைகள் என்கே?

கனடாவில் திருமதி மதிவதனி இருந்தால் உலகத்துக்கு வந்து உண்மையை சொல்வதில் என்ன தயக்கம்? சொல்வது ஆபத்து அன்றால் எப்படி எந்த ஆபத்தும் பீதியும் இல்லாமல் மதிவதனி கனடாவில் அடைக்கலம் கோரினார்?

நெடுமாறன், வைகோ சொல்லி மக்களை சிலகாலம் ஏமாத்தியது போல் மாவீரருக்கு வணக்கம் செலுத்த முனையும் இந்தகாலகட்டத்தில் சீமான் ஏன் இப்படிச் சொல்கின்றார் அவர் சொல்வது உண்மையா?

இல்லை கனடா,நோர்வே நாடுகளில் இருக்கும் தமிழ் நாட்டு விசுவாசிகள் சொல்வது உண்மையா?,

எங்கே அந்த புலனாய்வு செய்தி தொடர்பாளர் அறிவழகன்?

செய்தியை உறுதி படுத்த முடியாததால் பிரபாகரன் வீரச்சாவு குறித்து வெளியிடும் செய்திகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று தமிழ்நெட்.காம் சொல்கிறதே ஏன்?As TamilNet is being heavily pressed by its readership to know the truth, it has become a necessity to state that TamilNet doesn't take any responsibility for any of the stands taken, as these are beyond its independent verification.http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29446 இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் தமிழ்நெற்.காம் நிறுவனமும் ஒரு காரணமா?

அறிவுஜீவிகளுக்கும் இராஜதந்திரிகளுக்கும் என்று இயங்குகிறதே தமிழ்நேசன்.ஓர்க் http://www.tamilnation.org/ltte/vp/index.htm அதில் பெருந்தகை நடேசன் சத்தியேந்திரா தலைவரின் வீரச்சாவை நினைத்து மனமுருகி எழுதியுள்ளாரே அது பொய்யா?

புலிகளின் பரப்புரை பேச்சாளர் அம்பலவாணர் உலகத்துக்கு கடிதம் எழுதினாரே அது பொய்யா?

எனவே விடுதலை மக்களுக்கானது மக்களுக்கான விடுதலையை எப்படி தமிழகத்தின் அரசியல் வாதிகள் தங்கள் சுயநலன்களுக்காக குழப்பி அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்தபோது தமினத்துக்கு ஒரு மாவீரன் உதித்தான் என்று நாம் பெருமை கொண்டு அவனே தலைவன் என்று நாங்கள் அவனுக்கு பின்னால் அணிதிரண்டோமே எங்கள் தமிழர் இனத்துக்காக உண்மையாக வாழ்ந்த அந்த தலைவன் ஒரு புரட்சி வீரன் என்பதை ஏன் இந்த பிழைப்புவாத அரசியல் தலைமைகளும், சினிமாகூத்தாடிகளும் உணரவும் ஏற்கவும் மறுக்கின்றனர்.

அண்ணாவை, காமராசரை, பெரியாரை நேசிக்கும் இவர்கள் ஏன் பிரபாகரனை மட்டும் கடவுளாக நினைக்கிறார்கள். பிரபாகரன் மனிதன். அடிமைப்பட்டுக்கிடந்த இனத்துக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக களத்தில் நின்று போராடிய வீரன். தனக்கு சாவு வரும் என்று தெரிந்து தானே களதில் நின்று போராடினார்? எங்கும் மறைந்து வாழவில்லையே? கருணாநிதி, வை.கோ நெடுமாறன் போல் ஏன் ராக்ஷபட்ச போல் பிரபாகரன் அரசியல் தலைவரில்லையே. அவர் ஒரு களமுனைப்போரளி அந்த களமுனைப் போராளி புலிகள் அரசியல் அதிகாரம் மிக்க அரசை வைத்திருந்த போது அவர் சாவடைந்திருந்தால் அவரின் சாவு மறைக்கப்பட்டிருக்குமா? அரசியல் போராளி தமிழ்செல்வன் படுகொலை செய்யப்பட்டதுபோல் கொல்லப்பட்டிருந்தால் தமிழக பித்தலாட்ட தலைவர்களும் சீமான்போன்ற கூத்தாடிகளும் என்ன செய்திருப்பார்கள்?

எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை .

பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

இது பற்றி நாம் குழம்பாமல் இருக்க மூன்று வழி தான் உள்ளது.

1. இப்போதைக்கு தலைவர் பிரபாகரனின் இருப்பு குறித்த சர்ச்சயயை விட்டு, தமிழர் இலங்கையில் படும் வலியை உலகுக்கு உணர்த்த போராட்டத்தை தொடர்வது.

2. தலைவரே மீண்டும் (உயிருடன் இருந்தால்) வீடியோவிலோ, உண்மையான தேதியுடன் கூடிய புகைபடதிலோ வருவது

3. இதை கண்டு கொள்ளாமல் நமது வேலையை பார்க்கப் போவது. எது என்பதை தீர்மானமாக எடுத்து மண்ணுக்காய் செத்த மனிதர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்து பணிசெய்

அய்யா தமிழ் உணர்வாளர்களே....ஏன் இப்படி குழப்புகிறீர்கள்? ஒண்ணுமே புரியல. மாவீரன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று காலம் தான் பதில் கூற வேண்டும். நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்மகனை குழப்பாமல் இருந்தால் போதும். உண்மையில் உங்களுக்கு தமிழ் உணர்வு இருந்தால் முகாமில் அவதி படும் மக்களுக்கு ஒரு வேளை உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஆருடை நம்பி

http://www.infotamil.ch/ta/view.php?2eESoC00aCgYe2edAA6W3acldAo4d4AYl3cc26oS2d43YOE3a02oMS2e

Edited by ஜீவா

இலங்னை அரசின் வாதப்படி பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவர்களே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் பிரபாகரன் இறந்தது பற்றி பல வித்தியாசமான தகவல்களை சொல்கின்றார்கள். இறுதியாக இலங்கை அரசு தலைவர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததாக தகவல்களை கசியவிடுகின்றது. இது தமிழ்மக்கள் தலைவர் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லபட்டதற்கு எதிராக போராடுவார்கள் என்ற நோக்கில் பரப்ப பட்ட செய்தியாகும். அப்படி நாம் போராடும்போது அவர் கொல்லப்பட்டதை ஒத்துக்கொள்ள வேண்டும் இதுதான் இலங்கை அரசின் நோக்கம். உண்மையில் அவர் கொல்லப்பட்டு அவருடைய உடல் கிடைத்திருந்தால் அதை கொழும்பு கொண்டுவந்து பெருவிழா கொண்டாடியிருப்பார்கள் . முடிந்தவரை அவமானப்படுத்தியிருப்பார்கள். இதுவரை இராணுவம் தங்களிடம் கிடைத்த போராளிகளின் உடல்களுக்கு செய்த மரியாதை தெரிந்ததுதானே. முள்ளிவாய்க்காலில் இருந்து ஒரு உடலை கொழும்பு கொண்டு செல்வதற்கு ஒரு மணிநேரம் போதும். அதை செய்யாததிலிருந்து இலங்கை அரசு பொய் சொல்கின்றது.

பிரபாகரன் பற்றிய இன்னும் பல பொய்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து வரும். நடேசன் புலித்தேவன் ஆகியோர் சரணடைய சென்று கொல்லப்பட்ட செய்திக்கு பிறகு தலைவர் தன்னுடைய குடும்பத்தினருடன் இராணுவத்திடம் அகப்பட்டுக்கொண்டார் என்று செய்தி ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

சீமான் தலைவர் இருக்கின்றார் என்று சொல்வதில் தவறில்லை.

புலனாய்வு அரசியலில் எதுவும் எப்பவும் நடக்கலாம்.. ஒரே ஒரு கேள்வி ...நீங்கள் பிறக்கும்போதே சித்த சுவாதீனம் உள்ளவர் என்று உங்கள் அம்மா அப்பாவுக்கு தெரியுமா ? என்று ஒரு கேள்வி உண்டு ..ஆம் என்றாலும் இல்லை என்றாலும் நீங்கள் சித்த சுவாதீனம் உள்ளவர் என்று ஒத்து கொண்டது போல் ஆகும்..இவ்வாறான ஒரு கபட நாடகத்தை இந்தியாவும் இலங்கையும் ஆடுது.. பார்ப்போம் எத்தனை நாளுக்கு என்று..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா எமது தலைவர் உள்ளாரா இல்லையா என்று கதைத்து ஒருவரையும் குளப்பவேண்டாம். உயிருடன் இருக்கின்ரார். இத்துடன் இதை முடியுங்கள்

ஜீவா அண்ணா தமிழீழத் தாயகம் என்ற தேசியத்தலைவரின் உன்னத இலட்சித்தை காசுக்காகவும் பட்டம் பதவிகளுக்காவும் சுயநல வட்டத்துக்குள் அடக்கி எங்கள் மாவீரச் செல்வங்களின் தியாகத்தில் குளிர்காயும் குடுமிச் சண்டைபோடும் எங்கள் முதுகுகளில் உள்ள அசிங்கமான மலத்தை விட நாற்றமெடுக்கும் அழுக்குகளை முதில் கழுவி அப்புறப்படுத்திவிட்டு பின்னர் அடுத்தவரின் முதுகிலுள்ள அழுக்குகளைப் பற்றிக் கதைப்போம்

பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

திருமாவையும் சீமானையும் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல இது தலைவரையும் கருணாவையும் ஒப்பிடுவது போல் இருக்கின்றது

சீமானின் பற்றில் பாதி கூட நம்மவர்களுக்கே கிடையாது என்பதை யாரும் மறுக்க முடியுமா ??

சீமானின் வளர்வதை இப்போதே தடுக்கும் விதத்தில் பல காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன ஜெகத் கஸ்பார் , கனிமொழி ,சுபவீ என்று அந்த பட்டியல் விரிவடைந்து இப்போது இன்போ தமிழில் வந்து நிற்கின்றது

மண்ணுக்காய் செத்த மனிதர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்து பணிசெய்

எந்த தமிழ் உணர்வாளர்களும் இப்படி விபரிக்க மாட்டார்கள்

ஆருடை நம்பி ஆருடைய நம்பிக்கைக்கு உரியவர் என்று ஆருக்காவது தெரியுமா ??? அல்லது இன்போதமிழுக்கு மட்டுமே தெரியுமா ?/

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் வாழ்க்க.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் எமக்கு கிடைக்கும்

புலிகள் சாகவில்லை

என் தலைவன் இருக்கின்றார்

ஏனெனில்

நான் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றேன்

நானிருக்கும்வரை ........

இதற்காக நான் போராடுவேன்

இறுதியில் இந்த சகோதரி எல்லாருக்குமான பதிலை தருகிறார்...

http://video.yahoo.com/watch/6025002

அனுசரனை செய்தது ஜெயா தொலைக்காட்ச்சி என்பதும் ஆச்சரியமான உண்மை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ம்....ம்......! தமிழீழத்திற்க்கான கடமையை செய்யுங்கள் தலைவன் வருவான்!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் எமக்கு கிடைக்கும்

புலிகள் சாகவில்லை

என் தலைவன் இருக்கின்றார்

ஏனெனில்

நான் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றேன்

நானிருக்கும்வரை ........

இதற்காக நான் போராடுவேன்

:lol::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஸ்பர சேர்த்ததுபோல சீமானயும் சேர்த்திருங்க! எனக்கும் ஒரு தோழன் கிடைச்சமாதிரியும் ஆகிடும். அம்மாவ விட்டிடுங்க அவாட ரிவில நல்லதெல்லாம் நடக்கிதாம். :lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் இந்த சகோதரி எல்லாருக்குமான பதிலை தருகிறார்...

நன்றி தயா இணைப்பிற்கு

இதைத்தான் நானும் சொல்கின்றேன்

நீங்களும் சொல்கின்றீர்கள்

இந்த சகோதரியும் இந்தியாவிலிருந்து சொல்கின்றார்

எமக்கு அநியாயம் நடக்கமானால்...

நாம் எல்லோரும் பிரபாகரன்களே........

எமது நிலத்தை பறித்தவனை அங்கிருந்து அகற்றுவோம்

எமக்கு அநியாயம் செய்தவனை தட்டிக்கேட்போம்

எம்மை அடித்தவனை நாம் திருப்பி அடிப்போம்

நாம் தமிழர் இன்று ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுக்க உங்களின் அனைவரின் ஆதரவினையும் அளியுங்கள்.

நாம் தமிழர் பேரியக்கத்தில் இணைவதற்கான விருப்ப விண்ணப்பம்

பதிவு செய்யவும் /

இதை உங்கள் இணையங்களில் இணைத்து உதவிடுங்கள்

http://naamtamilar.org/

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.

ஒருவேளை அவர் எம்மோடு இல்லாவிட்டாலும், அவர் விட்டுச்சென்ற கனவு இப்போதும் இருக்கின்றது.தமிழீழம் அடையும்வரை அவர் தான் எங்கள் தளபதி.எங்கள் சாரதி.உலகே திரண்டு எதிர்த்த போதும் கலங்காது தான் கொண்ட கொள்கையின்படி நடந்தார்.அவரா கோழை? உலகத்திற்கு தெரியும்.அவர்கள் எப்படி சொல்ல முடியும் அவர்கள் தானே இந்தபோரை நடத்தினார்கள்.நாம் கூட அந்த தலைவனின் பேரில் சந்தேகம் கொண்டால் எப்படி?

Edited by kssson

ஒரு சின்ன எடுத்துக்காட்டு...மதம் பற்றிய சிந்தனை அற்றவன் நான் இருந்தாலும் நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள நம் யாவருக்கும் கடமை உள்ளது.

முகமது நபி வாழ்ந்த காலத்தில் அவருடைய வாழ்வு எப்படி ஒரு அர்ப்பனிப்புடன் இருந்தது என்று இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு அறியுங்கள். இன்றைக்கு இஸ்லாம் இல்லாத நாடு இல்லை.

இஸ்லாமியர் எங்கு எந்த மொழி பேசினாலும் இஸ்லாம் எனும் கொடைக்கு கீழ் வரக் காரணம் அவர் வாழ்ந்த, சொல்லிக் கொடுத்த வாழ்வுதான்.

இஸ்லாமியருக்கென்று கடமைகளை உணர்த்தினார் அதை அவர்கள் வழிமுறை என்றோ இல்லை கடமை எனும் நெருப்பை மீட்டினார் என்றோ சொல்லலாம் அது இன்னமும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் எரிகிறது இதற்கு மேலும் விரிவாக சொல்லலாம் அது தேவையில்லை.

அது போலத்தான் நம் தலைவனும் நம் மனதில் மூட்டிய கடமை எனும் தீ எரிகிறது.

அவர் உயிருடன் இருந்தால் நிச்சயம் வருவார்.

ஆனால் இனியும் அவர் வந்துதான் நம்மை வழிகாட்டனும் என நினப்பது அவருக்கு நாம் தரும் அவமானமே!

கிளிநொச்சியில் இருந்து எமது கடமை உலகெங்கும் விரிந்துவிட்டது இதை நேர்மையாக பார்த்து பங்கேற்றுங்கள் மதம் வேண்டி நாம் போராடவில்லை மண் வேண்டி போராடுகின்றோம்.

இஸ்லாமியரை விட வீரியத்துடன் போராடும் ஆற்றலை ஒப்பற்ற தலைவன் நமக்கு ஊட்டியுள்ளான் இதைத் தான் அந்த சகோதரியும் சொல்கிறாள்.

உலக நாடுகளில் வாழும் நாம் இனியாவது மற்றவர் முதுகில் குத்துவதை தவிர்த்து என்றோ கூறிய கடமையை சிறப்பாக செய்யும் இஸ்லாமியரை விட இன்று தலைவர் நமக்கு விட்டுச் சென்ற கடமையை தெளிவாகவும் நிதானமான வேகத்துடன் நாமும் செய்வோம்.

ஜீவா யாரையும் _ _ _ _ அடிக்காதீர்கள் அது பண்பும் அல்ல அன்பும் அல்ல.

Edited by Sniper

நம் தலைவனும் நம் மனதில் மூட்டிய கடமை எனும் தீ எரிகிறது.

அவர் உயிருடன் இருந்தால் நிச்சயம் வருவார்.

ஆனால் இனியும் அவர் வந்துதான் நம்மை வழிகாட்டனும் என நினப்பது அவருக்கு நாம் தரும் அவமானமே!

கிளிநொச்சியில் இருந்து எமது கடமை உலகெங்கும் விரிந்துவிட்டது இதை நேர்மையாக பார்த்து பங்கேற்றுங்கள் மதம் வேண்டி நாம் போராடவில்லை மண் வேண்டி போராடுகின்றோம்.

Edited by tamilneesan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா யாரையும் _ _ _ _ அடிக்காதீர்கள் அது பண்பும் அல்ல அன்பும் அல்ல.

புரியலை :)

ஜீவா எமது தலைவர் உள்ளாரா இல்லையா என்று கதைத்து ஒருவரையும் குளப்பவேண்டாம். உயிருடன் இருக்கின்ரார். இத்துடன் இதை முடியுங்கள்

நீங்களே சொல்லிட்டிங்க அப்புறமென்ன?

ஜீவா அண்ணா தமிழீழத் தாயகம் என்ற தேசியத்தலைவரின் உன்னத இலட்சித்தை காசுக்காகவும் பட்டம் பதவிகளுக்காவும் சுயநல வட்டத்துக்குள் அடக்கி எங்கள் மாவீரச் செல்வங்களின் தியாகத்தில் குளிர்காயும் குடுமிச் சண்டைபோடும் எங்கள் முதுகுகளில் உள்ள அசிங்கமான மலத்தை விட நாற்றமெடுக்கும் அழுக்குகளை முதில் கழுவி அப்புறப்படுத்திவிட்டு பின்னர் அடுத்தவரின் முதுகிலுள்ள அழுக்குகளைப் பற்றிக் கதைப்போம்

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி....

நல்லா இருக்கு தோழரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெலளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே. :)

புரியலை :)

திரும்பவும் எழுதியவற்கே அவர் என்ன எழுதினார் என்பதை புரியவைக்கலாமா எனும் போது ஒரு திரைப்பட நகைச்சுவை நினைவுக்கு வருகிறது... ஜீவா கோவிக்காதீர்கள் “திருவிளையாடல் படத்தில் நாகேஷ் அய்யா அவர்கள் சிவாஜி அய்யா அவர்களிடமிருந்து பாட்டு எழுதி வாங்கி அரசருக்கு படித்துக் காட்டும் தருணத்தில் இதை அவர் (நாகேஷ்)தான் எழுதினாரா என்ற கேள்வி வரும்” அது போல் தான் தற்போது எனக்கு எழுந்தது...

புரியலை என்று (“ஜீவா யாரையும் _ _ _ _ அடிக்காதீர்கள் அது பண்பும் அல்ல அன்பும் அல்ல.”) இதற்கு ? கேட்டுள்ளீர்கள் உங்களுடைய வரிகளை நீங்கள் வாசித்து யார் யாரையெல்லாம் அதில் எப்படி விமர்சித்துள்ளீர்கள் என்பதை கவணித்தீர்கள் என்றால் கோடிட்ட இடங்கள் புரியும்/விளங்கும்.

Edited by Sniper

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரும்பவும் எழுதியவற்கே அவர் என்ன எழுதினார் என்பதை புரியவைக்கலாமா எனும் போது ஒரு திரைப்பட நகைச்சுவை நினைவுக்கு வருகிறது... ஜீவா கோவிக்காதீர்கள் “திருவிளையாடல் படத்தில் நாகேஷ் அய்யா அவர்கள் சிவாஜி அய்யா அவர்களிடமிருந்து பாட்டு எழுதி வாங்கி அரசருக்கு படித்துக் காட்டும் தருணத்தில் இதை அவர் (நாகேஷ்)தான் எழுதினாரா என்ற கேள்வி வரும்” அது போல் தான் தற்போது எனக்கு எழுந்தது...

புரியலை என்று (“ஜீவா யாரையும் _ _ _ _ அடிக்காதீர்கள் அது பண்பும் அல்ல அன்பும் அல்ல.”) இதற்கு ? கேட்டுள்ளீர்கள் உங்களுடைய வரிகளை நீங்கள் வாசித்து யார் யாரையெல்லாம் அதில் எப்படி விமர்சித்துள்ளீர்கள் என்பதை கவணித்தீர்கள் என்றால் கோடிட்ட இடங்கள் புரியும்/விளங்கும்.

சினைப்பர் இந்தக் கட்டுரை காலத்தின் தேவை போல பட்டுது அது தான் இதை இங்கு இணைத்தேன் மற்றும் படி இந்தக் கட்டுரையை

எழுதியவருக்கே வெளிச்சம் :)

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு GTV இல் இருந்து சில ஊடகங்கள் வரை மாவீரர் வாரத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ள(மாவீரர் நாள் எழுச்சி வருடாவருடம் வரினும் இந்த வருடம் பல எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக உள்ளது)

நிலையில் சிலரின் அறிக்கைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதே..அதற்காக தானே தவிர யாரையும் துரோகியாக்குவதற்காய் எழுதியதாக எனக்கு படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.