Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உங்களின் சுகவாழ்விற்காய் எமக்கு அளித்த பட்டம் தாய்மை" | கவிதாவின் ஏதேன் தோட்டம்

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

இன்று மீண்டும் ஓர் நூல்விமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக நோர்வேயில் வாழ்கின்ற ஈழத்து கவிஞர் கவிதா அவர்கள் படைத்த "என் ஏதேன் தோட்டம்" கவிதைத்தொகுப்பை பெற்று இருந்தேன். ஓர் இனிய மாலைப்பொழுதில் கவிதாவின் கவிவரிகளை படித்துச்சுவைக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

dsc00529yu.jpg

யார் இந்த கவிதா?

எனக்கும் யார் என்று தெரியாது. ஓர் ஆர்வக்கோளாற்றில் கவிதாவின் நூலை வடலியூடாக வாங்கியிருந்தேன். கவிதா ஓர் நாட்டிய தாரகை, ஈழத்தில் குரும்பசிட்டியை சேர்ந்தவர், தற்சமயம் நோர்வேயில் வசிக்கின்றார், இது இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு, "பனிப்படலத் தாமரை" எனப்படுகின்ற இவரது முதலாவது கவிதைத்தொகுப்பு நோர்வேஜிய மொழியிலும் வெளிவந்துள்ளது... இவை நூலில் வாசித்து அறிந்தவை.

கவிதாவின் கவிதையில் உள்ள முரண்பாடுகள்:

விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே முரண்பாடுகள் பற்றி பேசுவதாக யோசிக்ககூடாது. கவிதாவின் கவிமழையில நனைந்தபோது இடியாகவும், மின்னலாகவும் முதலில் முரண்பாடுகளே எனது கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆண் ஆணாக இருக்கட்டும், பெண் பெண்ணாக இருக்கட்டும்.. பிரச்சனை இல்லை. ஆனால், பெண்ணாக தன்னை இனம்காட்டி கவிதை படைத்துள்ள கவிஞர் அவர்கள் ஆணாக இருக்கக்கூடியவர்களை தனக்கு ஒப்பான இடத்தில் வைத்து தரிசிக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பெண்கள் எவ்வாறு எவ்விதத்திலும் ஆண்களிற்கு சளைத்தவர்கள் இல்லையோ அதுபோலவே ஆண்களும் பெண்களிற்கு நிகரானவர்கள்தானே? பெண்கள் தாழ்த்தப்பட்டு உள்ளார்கள் என்பதற்காக ஏன் ஆண்களையும் தாழ்த்தவேண்டும்?

ஓர் கவிதையில் இப்படி கூறுகின்றார்:

தேவதை என்கிறாய்

தென்றல் என்கிறாய்

மலர் என்கிறாய்

மது என்கிறாய்

உணர்வுகளின் உச்சத்தில்

நீ உளறுவதில்

நானும் உருகிவரலாம்

உன்னோடு

இப்பொழுது நான்

கங்கைதான்

நீ நீந்தலாம் என்னோடு

காலப்போக்கில்

வற்றிவிடும் நதியாக

சுடு மணலில்

நீ நடக்கவேண்டி வரலாம்

பின்னர் இன்னோர் கவிதையில் இப்படியும் வரிகள் நீளூகின்றன:

ஒரு முறை அடித்தால்

மறு கன்னத்தைக்

காட்டச்சொன்னார் இயேசு

அடிக்கடி நினைவில் வந்து

தொலைக்கிறது

நீ கொடுத்த முத்தத்தில்

ஆற்றாமல் துவளும்

நெஞ்சம் அது

உன் அணைப்பின் பின்

மறு நிமிடம்

இன்பப் படுக்கையில்

உன் நினைவுகளின்

இறைமீட்பு

மணமேடை எனப்படுகின்ற கவிதையில் இப்படிக் கூறுகின்றார்:

முகத்தினை மூடி

அழைத்துச் சென்றனர்

என்னை மட்டும்

தலைகுனிந்து நடக்கச் சொன்னார்

என்னை மட்டும்

+++

தாலியும் கட்டினர்

முடிச்சுக்கள் போட்டனர்

எனக்கு மட்டும்

+++

திருமணம் நடந்தது

எனக்கு மட்டும்

பின்னர் திருமணம் எனப்படுகின்ற கவிதையில் இப்படிக் கூறுகின்றார்:

இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை

என்ற பொழுது

திருமணம் ஒரு நல்ல வழிதான்

இல்லையென்றால்

காதலுடன் வாழ

கல்யாணமெதற்காம்

உண்மையில் புரியவில்லை.. கவிதை புரிகின்றது ஆனால்.. கவிஞர் சிந்தனைகள் புரியவில்லை.. கவிதையில் சொல்ல வருகின்ற செய்திகள் என்று பார்க்கும்போது பலவாறான புதிர்களையும், முரண்பாடுகளையும் தாராளமாக நூலில் காணமுடிகின்றது. கவிதையில் கவிஞரின் சிந்தனைப் போக்கு அங்கும் இங்குமாக நெளிந்து, வளைந்து சீரற்று செல்கின்றது. கவிதாவின் கவிதையில் முகில் கூட்டங்களின் வடிவங்கள் மாறுபட்டு செல்வதுபோல் பன்முகத்தன்மையை காணமுடிகின்றது.

dsc00533mj.jpg

மழைக்காலம் ஜன்னல் ஓரம்:

மாலை நேரம் - மழை தூறும் காலம் - என் ஜன்னல் ஓரம் - நிற்கிறேன்!

நீயும், நானும் - ஒரு போர்வைக்குள்ளே - சிறு மேகம்போலே - மிதக்கிறேன்!

ஓடும் காலங்கள் - உடன் ஓடும் நினைவுகள் - வழி மாறும் பயணங்கள் - தொடர்கிறதே!

இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா? மனம் ஏனோ என்னையே - கேட்கிறதே!

ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது - கவிதை ஒன்று முடிந்தது - தேடும் போதே தொலைந்தது - அன்பே!

இது சோகம் ஆனால் ஒரு சுகம் - நெஞ்சின் உள்ளே பரவிடும் - நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே!

இது தருமே …!

இந்த அழகியபாடல் ஓர் தமிழ் சினிமா படத்தில் இடம்பெற்று இருக்கின்றது. நான் பல தடவைகள் இந்தப்பாடலை கேட்டு இருக்கின்றேன். சரியாக இதேபாணியில் - அதே உணர்வுகளை நாம் பிரசவிக்கக்கூடிய வகையில் கவிதா அவர்கள் "மழைக்காலம் ஜன்னல் ஓரம்" எனப்படும் ஓர் கவிதையை எழுதி இருக்கின்றார். மேற்குறிப்பிட்ட பாடலிற்கு முன்பே கவிதாவின் இந்தக்கவிதை வெளிவந்துவிட்டது என்று நினைக்கின்றேன். எனவே, இதை ஓர் தற்செயலான நிகழ்வு என்று கூறலாம்.

மழைக் காலம்

சாரல் வீசும்

ஜன்னல் ஓரம்

நீயும் நானும்

தேனீர்க்குவளை என் கையில்

நான் நெகிழ்ந்து உன் கையில்

மறைந்து போனது

முதுகின் பின் உலகம்

பக்கம் இருக்கும் கவிதையாய் நீ

என் நெற்றிப்பொட்டின் நேரே

விரல் நீட்டி அழைக்கிறாய்..

இமைமூடி நான் நகர்கிறேன்

இவ்வாறு தொடர்கிறது.

கவித்துவம்:

நூலிற்கு அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் அறிவுமதி அவர்கள் நாட்டிய தாரகையான கவிதாவின் கவிதைகளும் நாட்டியமாகவே தென்படுகின்றன என்கின்ற தொனியில் கருத்து கூறி இருந்தார். நிச்சயமாக பலவித அபிநயங்களுடன் அரங்க காட்சிகளை ஆடல்பாணியில் கவிதா அவர்கள் 'ஏதேன் தோட்டத்தில்' வெளிபடுத்தி இருப்பதாகவே உணரமுடிகின்றது.

என்னைக் கவந்த சில கவிவரிகள்:

எந்த அறிகுறியும் இல்லாத

வருடக்கணக்கில் காத்திருப்பு

சுவாசிக்க முடிகிறது

உணவும் கிடைக்கிறது

என்பதற்கான வாழ்தல்

கலைக்கப்படாத என் தவத்தில்

கடவுள் வரப்போவதில்லை என்று

நன்றாகத் தெரிந்த பின்தான்

நான் என் மனதின் அமைதியில்

குவியல் செய்து

புதைந்து கிடக்கின்றேன்

+++

நீ சூரியனா

இருந்து கொள்

தூரம் என்றாலும்

உன் கதிர்கள் என்னை

உரசிக்கொண்டுதானிருக்கும்

நான் பூமி

நீ பறவையோ

தூரம் போவாயோ போய்வா

நீ நிச்சயம் வருவாய்

உன் கூடு என் விரல்களில்

நான் மரம்

காற்றாக மாறு

காணாமல் போ

ஒவ்வொரு நொடியும்

என்னுள் நிரப்பிக் கொள்வேன்

நான் சுவாசம்

மேகமாகி நீ

அலைந்து திரி

பொழிந்து கொட்டு

எங்கோ வீழ்ந்து

எங்கும் பாய்ந்து

நீராகி நதியாகி

உன் இறுதிச் சங்கமம்

என்னிடம் தான்

நான் கடல்

+++

என்னிடம் பெண்மையில்லை

மன்னித்துவிடுங்கள்

வளையல் குலுங்க

கொலுசொலியுடன் வளையவரும்

பெண்மை

காலை முழுகிக்

குங்குமத்துடன் கணவனைத்

தட்டியெழுப்பும்

பெண்மை

நாற்சுவரில் தூசிதட்டி

நல்ல பெயர்வாங்க

முடியவில்லை என்னால்

கண்மூடி நின்று

கணவனுக்கும் குழந்தைகளுக்குமாய்

மட்டும்

பிரார்த்திக்க விருப்பமில்லை எனக்கு

அதற்கு மேலும்

சிந்திக்க முடிகிறது

+++

கவிதையில் பேசப்படுகின்ற விடயங்கள்:

கவிஞர் அவர்கள் தனது நாளாந்த வாழ்வியல் அனுபவங்களை கவிதைகளாக அழகாக கோர்த்து தந்து இருக்கின்றார். பல கவிதைகளில் அவரது உணர்வுகள், அனுபவங்களை படிக்கும்போது கவிதாமீது ஆழ்ந்த இரக்கம் தோன்றுகின்றது. அடிப்படையில் நமது சமுதாயம் பெண்களிற்கு செய்கின்ற கொடுமைகளின் எதிரொலிப்பை கவிதையில் காணமுடிகின்றது. கவிதைகள் பெருமளவில் நாத்திகத் தன்மையில் இருந்தே படைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான ஏமாற்றமும், இழப்புகளும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

இறுதியாக..

கவிதாவின் கவிதைகள் தரம் வாய்ந்தனவாகவும், இரசித்து சுவைக்கத் தக்கனவாகவும் இருக்கின்றன. நல்ல கற்பனை வளத்தை காணமுடிகின்றது. யதார்த்தத்தை மற்றும் துன்பங்களைக்கூட மற்றவர்களை மகிழ்விக்கக்கூடிய மொழிக்கு மாற்றப்பட்டு கவிதைகள் படைக்கப்பட்டு இருக்கின்றன. ஓர் நாட்டிய தாரகையாக இருப்பதால் கவிதாவினால் இப்படியாக ஓர் வித்தியாசமான கவிதைத் தொகுப்பை படைக்க முடிந்துள்ளது என்று கூறலாம்.

நீங்களும் கவிதாவின் "என் ஏதேன் தோட்டத்திற்கு" சென்று பாருங்களேன்!

dsc00543xc.jpg

வடலியின் கவனத்திற்கு:

யோவ் பாண்டிய மன்னா.. இந்தத்தடவை புத்தகம் அழுக்கடைந்து வந்து இருக்கின்றது. நீண்ட தூரம் பயணித்து இருந்தாலும் புத்தகத்தின் உள்ளே ஏற்பட்ட அழுக்கை பார்க்கும்போது சற்று கடுப்பு வருகின்றது. தபாலில் வந்தாலும்.. நூலை முதல்தடவையாக விரித்து புரட்டி பார்க்கும்போது அழுக்கடைந்து இருப்பது வருத்தத்தை தருகின்றது. வாசகர்களின் கைகளிற்கு சென்று அடையும்வரை நூல் நல்ல நிலையில் இருப்பதற்கு வடலி நிறுவனத்தினர் சற்று கூடுதல் கரிசனையுடன் கவனம் எடுப்பது நன்று.

நன்றி! மீண்டும் சந்திப்போம்!!

http://www.youtube.com/watch?v=gS0-qn6dd6I

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு....

கடைசி வரை உங்களது விமர்சனத்தில் "உங்களின் சுகவாழ்விற்காய் எமக்கு அளித்த பட்டம் தாய்மை" என்ற வரியும் அதற்கான விமர்சனமும் வரவேயில்லையே...

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு....ஆனா எனக்கு இதுவரையும் புத்தகம் காசு கொடுத்து வாங்கி படித்து பழக்கமில்லாத படியால் netல தேடி படித்து பிறகு சொல்கிறேன்...

  • தொடங்கியவர்

வணக்கம் கறுப்பன்,

குறிப்பிட்ட வரி: “உங்களின் சுகவாழ்விற்காய் எமக்கு அளித்த பட்டம் தாய்மை” என்பது கவிதா அவர்களின் என் ஏதேன் தோட்டத்தில் இடம்பெற்று இருந்தது.

நான் பல கவிதைகளில் சில துண்டுகளை மட்டுமே இங்கு காண்பித்து இருக்கின்றேன். முழுக்கவிதையையும் எழுதிவிட்டால் பின்பு புத்தகத்தை மற்றவர்கள் வாசிக்கவேண்டிய தேவை, ஆர்வம் வராது.

“உங்களின் சுகவாழ்விற்காய் எமக்கு அளித்த பட்டம் தாய்மை” எனப்படும் கவிவரியை இங்கு விபரிக்க ஆரம்பித்தால் அந்தவரி வருகின்ற முழுக்கவிதையையுமே மேற்கோள் காட்டவேண்டிவரும். எனவேதான் குறிப்பிட்ட துண்டை இங்கு விமர்சனம் செய்யவில்லை. ஆனாலும், எனது சிந்தனையை தூண்டி இருப்பதால் குறிப்பிட்ட துண்டை இங்கு தலைப்பாக இட்டு இருக்கின்றேன்.

நீங்கள் புத்தகத்தை வாங்கிப்படிக்காவிட்டாலும், வலைத்தளத்தில் உங்கள் வாசிப்பு ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். நானும் உங்களைப்போல் வலைத்தளத்தில் வாசிப்பதுதான். ஆனால்.. கைகளில் தவழும் புத்தகமாக ஒன்றை வாசிக்கும்போது இருக்கின்ற சுகமும், இனிமையும், வசதியும் வலைத்தளத்தில் இல்லை.

கவிதா அவர்களின் கவிதைகளை நீங்கள் வலைத்தளத்தில் காணமுடியுமா என்று தெரியவில்லை. இவரைப்பற்றி வடலி வலைத்தளம் மூலமாகவே நான் முதன் முதலாக அறிந்துகொண்டு இருக்கின்றேன்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன்.. கனடா போஸ்ட் மான்களின் தமிழ் ஆர்வத்தை பாராட்டுகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

-----

dsc00543xc.jpg

வடலியின் கவனத்திற்கு:

யோவ் பாண்டிய மன்னா.. இந்தத்தடவை புத்தகம் அழுக்கடைந்து வந்து இருக்கின்றது. நீண்ட தூரம் பயணித்து இருந்தாலும் புத்தகத்தின் உள்ளே ஏற்பட்ட அழுக்கை பார்க்கும்போது சற்று கடுப்பு வருகின்றது. தபாலில் வந்தாலும்.. நூலை முதல்தடவையாக விரித்து புரட்டி பார்க்கும்போது அழுக்கடைந்து இருப்பது வருத்தத்தை தருகின்றது. வாசகர்களின் கைகளிற்கு சென்று அடையும்வரை நூல் நல்ல நிலையில் இருப்பதற்கு வடலி நிறுவனத்தினர் சற்று கூடுதல் கரிசனையுடன் கவனம் எடுப்பது நன்று.

கலைஞன்.. கனடா போஸ்ட் மான்களின் தமிழ் ஆர்வத்தை பாராட்டுகிறேன்...

reading.gifreading-emoticon.gif1998594599_545de48c30_m.jpg

கனடா போஸ்ட் மான்கள் தமிழ் புத்தகம் படிக்க ஆரம்பித்திருப்பது மிகுந்த மகிழ்சியை தருகின்றது. smiley_lol.gif

அன்புள்ள கலைஞன்,

உங்களுடைய விமர்சனம் படித்துவிட்டு கவிதா என்னோடு தொடர்பு கொண்டு உங்களுக்கு நன்றி கூறும்படி சொல்லியருந்தார்.

ஒரு நல்ல விமர்சகனைக்(உங்களை) குழப்பின பெருமை தனக்கு என்று சொல்லியிருந்தா. :D

என்னைப் பொறுத்த மட்டில் ஒரு படைப்பு வெளியில் வந்து விட்டால்.

அது எந்த வகையான விமர்சனங்களையும் ஏற்றே தீரவேண்டும்.

ஆனால் அது அந்தப் படைப்பாளியை தனிப்பட்ட ரீதியில் பாதிக்காமல் படைப்பு சார்ந்து

ஆரோக்கியமான விமர்சனமாக இருந்தால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

வசீகரன்.சி

கலைஞன்.. கனடா போஸ்ட் மான்களின் தமிழ் ஆர்வத்தை பாராட்டுகிறேன்...

சயந்தன்,

கனடாவில் இருந்து தபால் மூலம் அநேகமான புத்தகங்களை தருவித்து வாசிப்பவன் என்ற முறையில் கனடா அஞ்சல் சேவையில் உடைத்து பார்த்து அனுப்பும் முறை இல்லையென நம்புகின்றேன். இரண்டு வருட கால அளவில் இது வரைக்கும் கிட்டத்தட்ட 85 புத்தகங்கள் வாங்கியுள்ளேன்... எவையும் அழுக்காக வரவில்லை

வணக்கம் வசீகரன், உங்கள் கருத்திற்கும் தகவலிற்கும் நன்றி. எனது நூல் விமர்சனங்கள் படைப்பாளிகளுக்கு ஓர் ஆக்கபூர்வமான பின்னூட்டலாக அமையவேண்டும் என்கின்ற வகையிலேயே எழுதுகின்றேன். ஆனாலும்.. சில விடயங்கள் கூடக்குறைய இருக்கலாம். நான் முன்பு கூறி இருந்தேன் தானே... எனது விமர்சனம் ஒன்றை பார்த்துவிட்டு அதைப் படைத்த படைப்பாளி ஒருத்தர் கலையை ரசிக்கத்தெரியாத உமக்கு கலைஞன் என்கிற பெயர் தேவையா என்று விசனத்தில் தெரிவித்து இருந்தார் என்று. விமர்சனம் என்பது சிக்கலான விசயம்தான். காலம், சூழ்நிலை இடம் கொடுத்தால் தொடர்ந்து ஏனைய படைப்புக்கள், நூல்கள் பற்றிய எனது விமர்சனங்களை தருகின்றேன்.

சயந்தன், புத்தகம் ஓர் தபால் உறையில் வைக்கப்பட்டு நூல் மூலம் குறுக்காக கட்டப்பட்டு வந்து இருந்தது. கடதாசிஉறையின் ஓரங்கள் வெடித்து கிழிந்து இருந்தன. எனவே, இந்த வெடிப்புக்கள் மூலம் உள்ளே அழுக்கு சென்று இருக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் கடதாசிஉறையில் அனுப்பாமல் பொலித்தின்உறையில் வைத்து அனுப்பினால் சேதத்தை குறைக்கமுடியும் என்று நினைக்கின்றேன். இங்கு இதற்கு Bubble Envelope விற்கின்றது. ஆனால் அது அதிகம் செலவானது.

நன்றி!

2 மாத கால எடுப்பில் 4 புத்தகங்கள் கிடைத்தன. கடதாசியால் சுற்றி, நூலால் குறுக்காக கட்டித்தான் அனுப்பியிருந்தார்கள். ஆனால் நம்ம யேர்மன் போஸ்ட்மேன்கள்.. தமிழ் புத்தகமாச்சேன்னு அன்புடன்.. அவற்றுக்கு தனித்தனியாக நான்கு பொலிதீன் உறைகள் போட்டு அழகாக ஒட்டி கொண்டு வந்து தபால்பெட்டியில் போட்டார்கள். ச்சே.. என்ன இருந்தாலும் யேர்மன்காரனுக்குத் தெரிந்த தமிழ் புத்தகங்களின் பெறுமதி கனடாக்காரங்களுக்கு தெரியலை! :wub:))

சோழியன் மாமா, நீங்கள் வி.ஐ.பி லிஸ்டில இருக்கிறீங்கள் போல, அதான் உங்களுக்கு அப்பிடி வந்து இருக்கிது. :wub:

நூல் விமசர்சனத்தையும் கவிதைகளையும் பார்க்க வாங்கி படிக்க ஆசையாய்தான் இருக்கு... ஆனால் போஸ்ட்ல புத்தகம் வந்து சேர 2 மாதம் செல்லுமோ ....? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் எனக்கும் இவை பற்றிய விளக்கம் தேவை.அறிய தந்தால் நல்லது.நன்றி.

நூல் விமசர்சனத்தையும் கவிதைகளையும் பார்க்க வாங்கி படிக்க ஆசையாய்தான் இருக்கு... ஆனால் போஸ்ட்ல புத்தகம் வந்து சேர 2 மாதம் செல்லுமோ ....?

ஆசைப்பட்டதை அடையுறது எண்டால் கொஞ்சம் காத்திருக்க வேணும்தானே. சயந்தனும் உங்களுக்கு பக்கத்திலதானே இருக்கிறார் சிலது அவரிடம் புத்தகங்கள் இருந்தால் விரைவிலேயே உங்களுக்கு புத்தகம் கிடைக்க வழிசெய்வார் என்று நினைக்கிறன். ஆகவும் அவசரம் எண்டால் சொல்லுங்கோ எண்ட புத்தகத்தை Express Postஇல அனுப்பி வைக்கிறன்.

ஆமாம் எனக்கும் இவை பற்றிய விளக்கம் தேவை.அறிய தந்தால் நல்லது.நன்றி.

சயந்தனிடம்தான் கேட்டுப்பார்க்கவேணும் கனடாவில புத்தககடையில வாங்கலாமோ எண்டு. கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களிண்ட புத்தகவெளீட்டுவிழா நிகழ்வில பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன எண்டு சொல்லப்பட்டு இருந்திச்சிது. கவிதாவிண்ட நூலையும் கிடைக்க வழிசெய்து இருந்திச்சீனமோ தெரியாது. சிலவேளைகளில தத்தக்க பித்தக்கவிடம் இருக்கலாமோவும் தெரியாது.

சயந்தன், உங்களை மேடைக்கு அழைக்கின்றோம்.

நன்றி!

அன்புள்ள கலைஞன்,

கவிதா எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அதை உங்களுக்கு அனுப்பி வைக்கும்படி. தனிமடலில் இணைத்துள்ளேன் பாருங்கள்.

  • தொடங்கியவர்

நன்றி வசீகரன்

+++

கலைஞனுக்கு வணக்கம்.

என் ஏதேன் தோட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு எனது நன்றிகள் கலைஞரே.... எனது கணனியில் எனது நன்றியை பதிவுசெய்யு முடியவில்லை அதனால் வசீகரன் மூலம் இதை உங்களுக்கு அனுப்புகிறேன்.

ஒவ்வொரு கவிதைகளும் வாசகரால் ஒவ்வொரு பார்வையுடன் வாசிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் கருத்தை கூறி இருந்தீர்கள். உங்கள் விமர்சனம் படித்ததில் மகிழ்ச்சி எனக்கு. ஒரு விடயம் குறிப்பிடவிரும்புகிறேன். என் கவிதைகளில் நான் என்பது நான் அல்ல. அது தன்னுனர்ச்சியில் எழுதப்பட்டிருந்தாலும் பொது உணர்வுகளை சுட்டிகாட்டுகின்றது. எனது உணர்வுகள் மட்டுமன்றி என்னைச் சுற்றியவர்களின் உணர்வுகளையும் பதிவு செய்திருகிறேன். அதானால் என் மீது ஏற்படும் இரக்கம் என்பது வழி தவிறி வந்த ஒன்று. இது எம் சமூகத்தின் மீது கொண்ட இரக்கமாக இருத்தலே சரியானது.

எனது கவிதைத் தொகுதி ”தொட்டிப்பூ” நேர்நிரை பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம். வடலியிடமும் இருக்கும் என்றே நம்பகிறேன். உங்கள் ஆக்கபூர்வ கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

இணையத்தளங்களில் எனது கவிதைகள்

http://www.vaarppu.com/poet/290/

http://www.thinnai.com

http://www.keetru.com

நன்றி!

கவிதா நோர்வே

+++

நன்றி கவிதா உங்கள் தகவல்களிற்கும் கருத்திற்கும்.

என்னைப்பொறுத்தவரையில் நான் என்னை ஓர் சாதாரண மனிதனாகவே பார்க்கின்றேன். அந்நிலையில் இருந்தே விமர்சனங்களையும் வைக்கின்றேன். ஓர் இலக்கியவாதியாகவோ, அல்லது மேடையில் ஏறி நிற்கின்ற விமர்சகனாகவோ என்னால் உருவகம் செய்யவோ அல்லது இருக்கவோ முடியவில்லை. எனவே, மேற்கண்ட இரக்கத்தை சமூகம்மீது ஏற்பட்டதானதாக தற்போது பார்க்கமுடியாது. இது படைப்பாளிமீது ஏற்பட்டதாக அல்லது அந்தப்படைப்புக்களின்மீது ஏற்பட்டதாக வைத்துக்கொள்ளலாம். இதற்கு சமூகமும் காரணமாக அமைந்து இருக்கலாம்.

உங்கள் ஏனைய கவிதைகள், நூல்கள் பற்றிய விமர்சனங்களை காலம், சூழ்நிலை இடம்கொடுத்தால் தொடந்து முன்வைக்கின்றேன்.

படைப்புக்கள் தொடரவும், சிறக்கவும் நல்வாழ்த்துகள்!

நன்றி! வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா கதை கவிதை படிக்கிறதில எனக்கு அந்தளவு ஈடுபாடில்லை. இருந்தாலும் இந்த தலைப்பை பார்த்துவிட்டு கலைஞனின் இந்தக் கவிதை நூலுக்கான விமர்சனத்தைப் படித்தேன். நன்றாக ஒரு வாசகனின் நிலையில் இருந்து தனது பார்வையை வெளியிட்டிருக்கிறார் கலைஞன்.

குறிப்பாக பெண்கள் கவிஞர்களானால்.. அதிகம் ஆண்களையும் ஆண்களுடன் சார்ந்த பெண்களின் வாழ்க்கையையும் ஏதோ மோசமான ஒன்றாக வர்ணித்து வருவதை அவர்களின் கவிதை இலக்கணமாக வகுத்து வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த உலகம் 6 பில்லியன் மக்களைப் பெற்றுப் போட்டுள்ளது. இதன் பின்னால் ஆண் - பெண் உறவு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இருந்திருக்கிறது.

ஒருவேளை பெண்கள் ஆண்கள் மீதான அதீத அன்பில் தான் அவர்களை திட்டுகிறார்களோ..??! திட்டித்திட்டியே... 6 பில்லியனைப் பெற்றுப் போட்டிருக்கிறார்கள் என்று எண்ணும் போது.. திட்டலின் தன்மையை கோபத்தின் விரக்தியின் அடையாளமாக நோக்க முடியவில்லை. இன்னும் அதிகம் அன்பை எதிர்பார்க்கிறார்கள் போல..! ஆண்கள் தான் புரிந்து கொள்கிறார்கள் இல்லைப் போலும்..!

நன்றி கலைஞன்.. படைப்பாளியையும் படைப்பையும் எம்மிடம் கொண்டு வந்து தந்தது நீங்களே. அந்த வகையில் உங்களுக்கே அதிக நன்றிகள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை பெண்கள் ஆண்கள் மீதான அதீத அன்பில் தான் அவர்களை திட்டுகிறார்களோ..??! திட்டித்திட்டியே... 6 பில்லியனைப் பெற்றுப் போட்டிருக்கிறார்கள் என்று எண்ணும் போது.. திட்டலின் தன்மையை கோபத்தின் விரக்தியின் அடையாளமாக நோக்க முடியவில்லை. இன்னும் அதிகம் அன்பை எதிர்பார்க்கிறார்கள் போல..! ஆண்கள் தான் புரிந்து கொள்கிறார்கள் இல்லைப் போலும்..!

12பில்லியனாக வேண்டும் என்று எதிர்பாக்கினம் போல....

எல்லாப்பெண் படைப்பாளிகளின் படைப்புக்களும் நீங்கள் சொல்வதுபோல இல்லை நெடுக்காலபோவான். பெண்கள் அதிக அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும்.. அன்பிற்கும் மேலாக இந்த Material Worldஇல் அவர்கள் பல மடங்குகளாக வசதிகளை, சுகபோகங்களை எதிர்பார்ப்பதனால்.. கிடைக்கவேண்டிய அன்பு கிடைக்காமல் போகலாம்.

அதேசமயம்.. ஆண்களை சாடாத, குறைகாணாத பெண்களின் பல படைப்புக்களையும் பார்த்து இருக்கின்றேன். அங்கு பெரும்பாலும் பக்தி இருக்கும். அந்தபக்தி அதிகளவில் கடவுள்மீதும் இருக்கும்.

மேலும், பெண்களை சாடுகின்ற, குற்றம் குறைபிடிக்கின்ற ஆண்களின் படைப்புக்களும் தாராளமாக இருக்கின்றனதானே.

ஆசைப்பட்டதை அடையுறது எண்டால் கொஞ்சம் காத்திருக்க வேணும்தானே. சயந்தனும் உங்களுக்கு பக்கத்திலதானே இருக்கிறார் சிலது அவரிடம் புத்தகங்கள் இருந்தால் விரைவிலேயே உங்களுக்கு புத்தகம் கிடைக்க வழிசெய்வார் என்று நினைக்கிறன். ஆகவும் அவசரம் எண்டால் சொல்லுங்கோ எண்ட புத்தகத்தை Express Postஇல அனுப்பி வைக்கிறன்.

ம்ம்... இருந்தாலும் இரண்டு மாதம் கூடிப்போச்சு.சயந்தன் அண்ணாதான் புத்தகங்களை அனுப்புகின்றாரா...அப்ப அவருடன் தொடர்பு கொண்டு கேட்டுப்பாக்கிறேன்.நன்றி மச்சான் ... :wub:

யாழில் கவிதா - நோர்வே எண்டு இருக்கிறவர் தான் இந்த கவிதாவோ தெரியவில்லை .... அண்டைகொருக்கா ரொம்ப நேரம் இந்த தலைப்பு பார்த்திட்டு பதில் எழுதி கொண்டு இருந்தவா அவாவால் அனுப்ப முடியல போலேயிருக்கு . விண்ணப்பித்தவர் நிலையில் இருக்குறபடியால் பதில் அனுப்ப முடியேல்ல எண்டு நினைக்கிறன். :wub:

நன்றி.

கவிதா, நீங்கள் புதிய உறுப்புரிமைக்காக பதிந்து இருந்தால்.. நீங்கள் யாழில் புதிய கணக்கை பதிவு செய்ததும் உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பப்படும். அதை சொடுக்கி உங்கள் கணக்கை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது உங்கள் நிலை விண்ணப்பித்தோர் நிலையில் இருந்து புதிய உறுப்பினர்கள் நிலைக்கு மாறும்.

இதன்பின்னர் யாழ் அரிச்சுவடியில் ஓர் சிறிய அறிமுகத்தை நீங்கள் எழுதும்போது நிருவாகத்தினர் உங்களை கருத்துக்கள உறவுகள் எனும் குழுமத்தில் சேர்ப்பார்கள். இதன்பின்னரே நீங்கள் யாழில் சகல பகுதிகளிலும் பதிவுகள இணைக்கக்கூடியதாக இருக்கும்.

யாழ் அரிச்சுவடி இணைப்பு: http://www.yarl.com/forum3/index.php?showforum=27

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.