Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ அகதிகள் ஆஸ்ட்ரேலியாவை நாடுவது ஏன்?

Featured Replies

ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது. ஆஸ்ட்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆஸ்ட்ரேலிய வாழ்க்கை ‘காந்தமாக’ இழுப்பதால்தான் தமிழர்கள் ஆஸ்ட்ரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைய நினைக்கின்றனர் என்று ஐ.நா.விற்கான சிறிலங்க தூதர் பலித கோஹனா கூறியிருந்தார். வன்னி முகாம்களில் தமிழர் குழந்தைகள் போதுமான உணவு அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுகின்றன என்று ஊடகங்களுக்குக் கூறிய ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரை சிறிலங்காவை விட்டு வெளியேற்றியவர் பலித கோஹனா. ஆஸ்ட்ரேலியாவில் தஞ்சமடையும் தமிழர்களை பலித கோஹனா இவ்வாறுத் தரம் தாழ்த்திப் பேசியதை வன்மையாகக் கண்டித்துள்ள டெல்லியைச் சேர்ந்த கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிரம்ம செல்லானி, சிறிலங்க அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறுகிய பயண நேரத்தில் இந்தியாவை (தமிழ்நாட்டை) அடையும் பாதையில் உள்ள ஆபத்தின் காரணமாகத்தான் அவர்கள் தெற்காசிய நாடுகளை நாடிச் செல்கின்றனர் என்று கூறியுள்ளார். “முதலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றுள்ளனர், இரண்டாவதாக, பால்க் நீரிணையை கடக்கும் படகுகளை சிறிலங்கக் கடற்படை தாக்குகிறது” என்று கூறியுள்ள பிரம்ம செல்லானி, “மீதமுள்ள விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில், அகதிகள் செல்லும் படகுகளை சிறிலங்க கடற்படையினர் தாக்குகின்றனர், அம்மக்களைக் கைது செய்கின்றனர், அவர்களின் படகுகளை அழிக்கின்றனர். இந்தக் காரணங்களால்தான் இந்தோனேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்குத் தமிழர்கள் அகதிகளாகச் செல்கின்றனர்” என்று கூறியுள்ளார். அகதிகள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், ஜனநாயக நாடுகளான இந்தியாவும் ஆஸ்ட்ரேலியாவும் தமிழர்கள் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு சிறிலங்க அரசிற்கு அழுத்தம் தர வேண்டும் பிரம்ம செல்லானி கூறியுள்ளார். ஈழ அகதிகள் பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பின் தெற்காசியப் பேச்சாளர் ஏரியான் ரும்மேரி, “தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று அவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்பது அல்ல, அவர்கள் தங்கள் வாழ்விடத்திற்கு அப்பால் சென்று பாதுகாப்புடன் வாழ ஒரு இடம் தேட வேண்டிய அவசியத்திற்கு உட்பட்டுள்ளார்கள் என்பதே முக்கியம்” என்று கூறியுள்ளார். நன்றி: வெப்துனியா
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ அகதிகள் ஆஸ்ட்ரேலியாவை நாடுவது ஏன்?

சுகபோகமா வாழத்தான், உது பெரிய கேள்வி மாதிரி கேட்டிருக்கு!

நாங்கள் வரலாம் இருக்கலாம் அநுபவிக்கலாம் அதுகள் போனாத்தான் குறையோ?

நாங்கள் அபிறிஜினி பரம்பரை எண்டு ஒரு காலத்தில அவுஸ்திரேலியாவில தமிழீழம் கேக்க உதவியாயிருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழ் அகதிகளை அகதிகளாக மனிதாபினாமாக நடாத்தும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. இலங்கைக்கு கிட்ட இருப்பது தான் முக்கிய காரணம். இந்தியாவில் .... வேண்டாம் வாயை கிளர விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"""சுகபோகமா வாழத்தான், உது பெரிய கேள்வி மாதிரி கேட்டிருக்கு!

நாங்கள் வரலாம் இருக்கலாம் அநுபவிக்கலாம் அதுகள் போனாத்தான் குறையோ?

நாங்கள் அபிறிஜினி பரம்பரை எண்டு ஒரு காலத்தில அவுஸ்திரேலியாவில தமிழீழம் கேக்க உதவியாயிருக்கும்.""""

மதிவண்ங்,

நான் இங்குள்ள சிலரை போல், திவிர புலி ஆதரவாளர் இல்லை..அதற்காக புலியோ, அல்லது அவர்களை சார்ந்து நின்ற தமிழ் மக்களே செய்தது எல்லாம் பிழை என்று சொல்லுகிற ஆள் இல்லை..ஆனால், உங்களை போன்றோரின் கருத்துகளும் இந்த மக்களுக்குகாய் இல்லையேய்?

உங்களுடைய பதில் பலசந்தர்பங்களில் மனிதத் தன்மை சிறிதும் இருக்காததிற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? பொலிஸ்கார‌ர் ஒரு த‌மிழ‌ரை க‌ட‌லில் தள்ளி கொலை செய்த‌து ச‌ரி என்ப‌து போல் எழுதியிருந்த‌னீர்க‌ள்.

என்ன நோக்கத்திற்க்காய் இவ்வாறு இருக்கிறீர்கள்?

தமிழ் சனம் வெளிநாட்டிற்க்கு வருவதில் என்ன பிரச்சனை உங்களுக்கு? சரி தமிழிழம் தான் கேட்டால் உங்களுக்கு என்ன? உங்களுக்கு தெரியும் தமிழர் இலங்கையில் எல்லா வழியிலும் பாதிக்க படுவது, அவர்கள் மற்ற நாடுகளில் தன்னும் சந்தோசமாக இருந்தால் என்ன பிரச்சனை?

**** அவர் அப்படி தான் கதைப்பார்.சிங்கள பத்திரைகையாளரே அடித்து கொல்லப்பட்ட தமிழரை பற்றி தனது மனச்சாட்சியை தொட்டு எழுதியுள்ளார்கள்.கண்டித்தும் உள்ளார்கள். இப்படி கேவலம் கெட்டு வாழ்வதிலும் பார்க்க தப்பு தண்ணியில் விழுந்து சாகலாம்.

Edited by yarlpriya
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிஸ்கார‌ர் ஒரு த‌மிழ‌ரை க‌ட‌லில் தள்ளி கொலை செய்த‌து ச‌ரி என்ப‌து போல் எழுதியிருந்த‌னீர்க‌ள்.

அண்ணே அந்த சம்பவம் தூண்டுதல் இல்லாமல் நடக்கேல்ல, நாடுகடந்த சுதந்திர ஊடகவியளாளர் அமைப்பு செய்தியபெரிசுபடுத்தி ஒரு கலவர நிலைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கு. நேற்றைய சிறைச்சாலை தாக்குதல் செய்தியும் அவையளாலதான் பெரிசுபடுத்தப்பட்டிருக்கு. நோக்கமில்லாமல் இவை ஒண்டும் நடக்கவில்லை. கடற்கரையில கொல்லப்பட்டவர் அப்பாவி. பொலீஸ் வெளியால வரவிடாமல் தடுத்தது பிழை, அதுக்காக தண்டனையை பெறுவார்கள். அங்க தண்டிக்கப்படாமல் போவது யார்? :)

****அவர் அப்படி தான் கதைப்பார்.சிங்கள பத்திரைகையாளரே அடித்து கொல்லப்பட்ட தமிழரை பற்றி தனது மனச்சாட்சியை தொட்டு எழுதியுள்ளார்கள்.கண்டித்தும் உள்ளார்கள். இப்படி கேவலம் கெட்டு வாழ்வதிலும் பார்க்க தப்பு தண்ணியில் விழுந்து சாகலாம்.

நல்லா எழுதிறீங்கள் வாழ்த்துக்கள். :lol:

Edited by yarlpriya
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய பதில் பலசந்தர்பங்களில் மனிதத் தன்மை சிறிதும் இருக்காததிற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? பொலிஸ்கார‌ர் ஒரு த‌மிழ‌ரை க‌ட‌லில் தள்ளி கொலை செய்த‌து ச‌ரி என்ப‌து போல் எழுதியிருந்த‌னீர்க‌ள்.

என்ன நோக்கத்திற்க்காய் இவ்வாறு இருக்கிறீர்கள்?

முப்பது ஆண்டு போரில், இலங்கையில் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட ஒருவர்தான். சோபா சக்தியின் "ம்" நாவலின் நாயகன் மாதிரி ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு இருப்பார்.

அண்ணே அந்த சம்பவம் தூண்டுதல் இல்லாமல் நடக்கேல்ல, நாடுகடந்த சுதந்திர ஊடகவியளாளர் அமைப்பு செய்தியபெரிசுபடுத்தி ஒரு கலவர நிலைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கு. நேற்றைய சிறைச்சாலை தாக்குதல் செய்தியும் அவையளாலதான் பெரிசுபடுத்தப்பட்டிருக்கு. நோக்கமில்லாமல் இவை ஒண்டும் நடக்கவில்லை. கடற்கரையில கொல்லப்பட்டவர் அப்பாவி. பொலீஸ் வெளியால வரவிடாமல் தடுத்தது பிழை, அதுக்காக தண்டனையை பெறுவார்கள். அங்க தண்டிக்கப்படாமல் போவது யார்? :o

ஆக சிங்கள மிருகம் மிருகமாகத்தான் இருக்கும் அவர்கள் துண்டி விட்டால் மட்டும் தான் கடிக்கும் எண்டுறியளோ...?? அதாவது அந்த மிருகம் சிங்களவரை தொடுவதில்லை யார் துண்டினாலும் அது தமிழரின் இரத்தம் மட்டும் தான் அதுக்கு பிடித்து இருக்கிறது எண்டு சொன்னால் நம்புவீர்களோ...???

ஒரு மிருகத்தை மிருகம் எண்டு வெளியில் சொல்வது கூட உங்களுக்கு கவலையாக இருக்கு... நல்ல மனிதாபிமானம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவணங்,

பதில் தந்ததிற்க்கு நன்றி.. உங்க‌ளுட‌ன் விவாததிற்கு வ‌ர‌வில்லை..உங்க‌ளுடைய‌ பதில் அதுதான் என்றால்..சுப‌ம்..

கொலை செய்தததை விட தூண்டியதும்,அதை செய்தியாக சொன்னதும் தான் மிகப்பெரிய‌ பிழை என்ற மாதிரி பதில் உள்ளது.

மற்ற கேள்விக்கு பதில் வரவில்லை..தமிழர்கள் வெளிநாட்டுக்கு வாரது பற்றி. கோகண்ண மாத்தையாவின்,தள்ளுகை இழுவை மாதிரி பதில் என்றால், அதற்கும் சுபம்.

உங்க‌ளுடைய‌ நோக்க‌ங்க‌ளும் என்ன என்று கேட்டிருந்தனான், சொல்ல முடியுமென்றால் சொல்ல‌வும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக சிங்கள மிருகம் மிருகமாகத்தான் இருக்கும் அவர்கள் துண்டி விட்டால் மட்டும் தான் கடிக்கும் எண்டுறியளோ...?? அதாவது அந்த மிருகம் சிங்களவரை தொடுவதில்லை யார் துண்டினாலும் அது தமிழரின் இரத்தம் மட்டும் தான் அதுக்கு பிடித்து இருக்கிறது எண்டு சொன்னால் நம்புவீர்களோ...???

ஒரு மிருகத்தை மிருகம் எண்டு வெளியில் சொல்வது கூட உங்களுக்கு கவலையாக இருக்கு... நல்ல மனிதாபிமானம்...

சொகுசா இருந்துகொண்ட தூண்டிவிடுறாக்கள் இங்க இல்லையோ? இங்க வீதிமறியல் செய்யச்சொல்லி சொன்னவைக்கு அங்கை சனம் பலியாகப்போகுதெண்டு தெரியாதோ? எல்லாருக்கும் தெரியும் தெரிஞ்சுகொண்டுதான் வீதிமறியலுக்கு வரச்சொன்னவை. வவுனியாவுக்கு வந்திருந்ந சனம் புலியள் தப்பிவர விடாமல் சுட்டவை கடைசியா அந்தப்பிணங்களுக்கு மேலால கடந்து நடந்துவந்ததா சொல்லுறது உங்களின்ட காதில விளயில்லயோ.

சும்மா சிங்களவன் சிங்களவன் எண்டு அவனில பழியப்போட்டு தப்பப்பாக்கிறீங்கள். நீங்கள் ஒழுங்கா இருந்தா போராட்டம் ஏன் இப்பிடி முடியிது, ஒரு நாட்டின்ர ஆதரவுமில்லாம போகுது. எப்ப பாத்தாலும் ஆரிலயும் பழியப்போட்டு தப்பிக்கிறீங்கள். மகிநதவ கொண்டுவந்தது யார் என்னத்துக்கு கொண்டுவந்தார். பாலாண்ணை 2005 பொழிப்புரைய கேளுங்கோ. 2008 மாவீரா உரை நடக்கேக்கயே எப்பிடி முடியப்போகுதெண்டு தெரிஞ்ச தலைவர் அவ்வளவு சனத்தையும் ஏன் சாச்சுக்கொண்டு போனவர். உதெல்லாம் பிறெஸ்ரீச் பிரச்சனையோ? சனத்திண்ட உயிர் உங்களுக்கு பிறெஸ்ரீச்சாப்போச்சு. அங்கத்தய சனத்த சாகக்குடுத்து யாருக்கு இங்கயிருந்து தமிழீழம் வேண்டப்போறியள்? இப்ப சொல்லுங்கோ யார் மிருகங்களெண்டு. :o

புலிகள் வர விடாமல் சுட்டவை எண்டு யாரிடம் சொன்னவை....??? BBC தமிழிடமா...??? உங்களுக்கு யார் BBC தமிழ் ஒரு நடு நிலை ஊடகம் எண்று சொன்னவை... சுவாமிநாதன் வந்த மக்களிடம் புலிகள் உங்களை சுட்டார்களா எண்டு கேட்டத்துக்கு அதே மக்கள் இந்திய தமிழில் ஆமா சார் புலிகள் எங்கள சுடுறாங்க.. எண்று இந்திய பாணியில் சொன்னதை நானும் கேட்டேன்...

அதாவது இந்திய தமிழில் முன்னர் அவர்களுடன் உரையாடிய பின்னர் பேட்டி எடுக்க பட்டு இருந்தது தெளிவாக தெரிந்தது...

உந்த தமிழோசையை விட , சிங்கள தொலைக்காட்ட்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கிய இரகசியம் புல்மோடையில் இந்திய உளவுப்பிரிவின் ஒரு பிரிவு அங்கு அழைக்க பட்டது...

அதைவிட நடு நிலை ஊடகங்கள் எண்டு எவையும் இருக்க இல்லை...

பிபிசி தமிழின் நடு நிலை சம்பந்த்மாக இருக்கும் ஒரு தலைப்பு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=56354&pid=507398&mode=threaded&show=&st

சும்மா சிங்களவன் சிங்களவன் எண்டு அவனில பழியப்போட்டு தப்பப்பாக்கிறீங்கள். நீங்கள் ஒழுங்கா இருந்தா போராட்டம் ஏன் இப்பிடி முடியிது, ஒரு நாட்டின்ர ஆதரவுமில்லாம போகுது. எப்ப பாத்தாலும் ஆரிலயும் பழியப்போட்டு தப்பிக்கிறீங்கள். மகிநதவ கொண்டுவந்தது யார் என்னத்துக்கு கொண்டுவந்தார். பாலாண்ணை 2005 பொழிப்புரைய கேளுங்கோ. 2008 மாவீரா உரை நடக்கேக்கயே எப்பிடி முடியப்போகுதெண்டு தெரிஞ்ச தலைவர் அவ்வளவு சனத்தையும் ஏன் சாச்சுக்கொண்டு போனவர். உதெல்லாம் பிறெஸ்ரீச் பிரச்சனையோ? சனத்திண்ட உயிர் உங்களுக்கு பிறெஸ்ரீச்சாப்போச்சு. அங்கத்தய சனத்த சாகக்குடுத்து யாருக்கு இங்கயிருந்து தமிழீழம் வேண்டப்போறியள்? இப்ப சொல்லுங்கோ யார் மிருகங்களெண்டு. :o

பாலாண்ணை நாங்கள் தான் மகிந்தவை கொண்டு வந்தது எண்று எங்கும் சொல்ல இல்லை... இரணில் மகிந்தவை விட நரியன் எண்று தான் சொல்லி இருந்தார்... சும்மா பொய் அளக்காதீர்... இரணில் இணைத்தலைமை நாடுகள் மூலம் செய்தவையின் விளைவுகள் தான் இண்றைய தமிழரின் நிலை...

இரணில் இணைத்தலைமை நாடுகளோடு போட்ட ஒப்பந்தங்களும் பெற்று கொண்ட ஆயுதங்களுமே தமிழ் மக்களுக்கு எதிராக பயன் படுத்த பட்டது...

இரணில் வன்னிக்குள் அனுப்பிய பல்தேசிய தொண்டர் நிறுவனங்களின் புலநாய்வு ஊடுருவல்கள் தகவல் சேகரிப்புக்கள் எவையையும் சமாதானம் எனும் பெயரால் முறியடிக்க முடியாத நிலையில் புலிகள் இருந்தது இன்னும் ஒரு காரணம்... ஆனால் அந்த நிறுவனங்களை மகிந்த வெளியேற்றினான்..

மகிந்த பெற்று கொண்டது இந்தியாவின் உதவியை மட்டுமே... ஆனால் மேற்குலகு ஏற்கனவே போட்டு கொடுத்த பாதையில் இராணுவத்தை பயனிக்க வைத்து மேற்குலகோடு தொடர்புகளை மட்டுப்படுத்தினான்...

மேற்க்கு நாடுகளுக்கு தமிழர்களின் பிரச்சினையை போல மகிந்தவும் வேண்டாப்பொருள்... ஆகவே மீண்டும் இரணில் அல்லது அவனை போண்ற ஒருவன் வர அனைத்தையும் செய்வார்கள்....

இன்னும் சொன்னால் இரணில் மீண்டும் வந்து இருதாலும் இந்த போர் நடந்துதான் இருக்கும்... தமிழர்களின் பேரம் பேசும் பலம் இதை போல அழிக்க பட்டும் இருக்கும்... ஆனால் அதை அனைத்துலக சமூகமும் சேர்ந்தே செய்து இருக்கும்... நாங்கள் எல்லாம் போராட்டம் எண்று வீதிக்கு கூட இறங்கி போராடி இருக்க கூட முடியாத அளவுக்கு செய்திகளும் பிரச்சாரமும் வேறு மாதிரி இருந்து இருக்கும்... சுருக்க மாக சொன்னால் ஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்படும் மக்களுக்காக உலக மக்கள் எப்படி கவலை கொள்ளாது இருக்கிறார்களோ அது போல...

( இதை நீர் புரிந்து கொள்வீர் என்பதுக்காக நான் எழுதவில்லை... மற்றவர்களை உமது கருத்து குழப்பத்தில் ஆழ்த்தாமல் இருக்க மட்டுமே..)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணம் தேவையில்லை. அவர்கள் எப்படி வேன்டுமானாலும் கொல்வார்கள். ஏதோ, சிங்களவர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும், தமிழர்கள் சீண்டுவதாலத்தான் வேண்டாவெறுப்பாகக், கருணைக்கொலையாக அதைச் செய்கிறார்கள் என்றும் சொல்ல வரவேண்டாம். முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டுபோய் பலியிட்டவை...எண்டு சொல்கிற ஆட்கள், முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் சிங்களவரால் எந்தத் தமிழரும் கொல்லப்படவில்லையா என்பதையும் சொன்னால் நல்லது. அப்படி நடந்திருக்குமெண்டு அவர்களது மூளை சொல்லுமானால் அது எந்தத் தூண்டுதலால் நடந்தது எண்டு சொன்னால் நல்லாயிருக்கும்.

வன்னியில சனம் சிங்களவனால் வேட்டையாடப் படும்போது சனம் வீதிக்கு வந்தது கொல்லப்பட வேன்டும் என்பதற்காகவோ அல்லது கொல்லப்படுவதை தெரிந்துகொண்டோ அல்ல. எப்படியாவது இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த வேன்டுமென்பதால்த்தான். அது நடைபெறாமல்ப் போனது துரதிஷ்ட்டம்.

எதுக்கெடுத்தாலும் தங்கட வக்கிர புத்திக்கு காரணம் தேடிக்கொன்டலையும் ஜென்மங்கலுக்கு யாரும் பதில் எழுதவோ அல்லது கேள்வி கேட்கவோ தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்திறத ஒரு அளவுக்கு இருக்கவேணும். பாலாண்ணையிண்ட பொழிப்பரை இணையத்தில இருக்கும். எப்பிடி வேட்பண்ணாமல்பண்ணிணார் ஏன் வோட்பண்ணாமலப்பண்ணிணாரெண்டு என்னத்துக்கு மகிந்தாவ விரும்பினார் மகிந்தா வர எப்பிடி வரவேற்க போறம் எண்டு அதில இருக்கு. அதின்ட ஓடியோ உங்கினக்க எங்கயும் இருக்கும் கொண்டுவந்து போடுறன். அதின்ட வீடியோவும் இருக்கும் தேடி கேளுங்கோ. :o

சிங்களவன் மட்டும்தான் தமிழன கொண்டானெண்டு சொல்லுறியளோ?

உங்க இடைக்கிடை எழுதுறியளே அந்த இயக்கத்துக்க உள் முரண்பாடு இந்த இயக்கத்துக்குள்ள முரண்பாடு அவை தங்களை தாங்கள் சுட்டிச்சினமெண்டு!

அதில சுட்டவை எங்கையண்ணை போய் சேந்தவை? எந்த இயக்கத்தோட சேந்தவை? அப்ப யார் உதுவள தூண்டிவிட்டது? யாருக்காக தங்கட இயக்கத்தில இருந்தவையயே போட்டுத்தள்ளினவை? கடைசியில அவையையும் அடுத்தடுத்த சண்டையில முன்னுக்கு விட்டதுதானே சரித்திரம்.

2005 மாவீரர்தின உரைய பொழிப்புரைய கேட்டுப்போட்டு வாருங்கோ! யாருக்கு சண்டை தேவைப்பட்டது ஏன் தேவைப்பட்டது எண்டு பாலாமாமா சொல்லுறார்.

சுத்திறத ஒரு அளவுக்கு இருக்கவேணும். பாலாண்ணையிண்ட பொழிப்பரை இணையத்தில இருக்கும். எப்பிடி வேட்பண்ணாமல்பண்ணிணார் ஏன் வோட்பண்ணாமலப்பண்ணிணாரெண்டு என்னத்துக்கு மகிந்தாவ விரும்பினார் மகிந்தா வர எப்பிடி வரவேற்க போறம் எண்டு அதில இருக்கு. அதின்ட ஓடியோ உங்கினக்க எங்கயும் இருக்கும் கொண்டுவந்து போடுறன். அதின்ட வீடியோவும் இருக்கும் தேடி கேளுங்கோ. :o

அதை விரிவாக நீரே கேட்டு கொள்ளும்... நான் நேரில் போய் கேட்டு இருக்கிறன்... அதை சரியாகவும் புரிந்து கொண்டேன்...

வேட் பண்ணாமல் பண்ணியது எப்படி எண்று எதையும் அவர் சொல்ல இல்லை... பொய்யை அளவாய் சொல்லும்..

Edited by தயா

இதுதான் பாலா அண்ணா சொன்னதாக மதி சொன்ன புலுடா.... படிச்சு மதியின் சதியை புரிந்து கொள்ளலாம்..

கடைசியாகத் தேர்தல் வந்தது. யாருடைய தேர்தல்?

சிங்கள ஜனாதிபதியை நியமிக்கிற தேர்தல்.
ஏன் நாங்கள் இதில் பங்களிப்புச் செய்யனும்?

ரணில் வந்தால்... ராஜபக்ச வந்தால் பிரச்சனை தீருமா? தீராது.

இதில் எவனுக்கு வாக்கைப் போட்டு ஆட்சிப் பீடத்திலே ஏற்றி, மீண்டும் பழையபடி தாய்லாந்து போய் சுற்றிப் பார்க்கச் சொல்கிறியள்?

அப்ப இயக்கம், கூட்டணி எம்பிமாரை கூட்டி கதைச்சு சொன்னது.. நாங்கள் தலையை ஓட்டக் கூடாது. இதில நம்பாதீங்க. இதில் அக்கறைகாட்டதீர்கள் என்று சொன்னது இயக்கம்.

மக்களுக்கு புலிகளின் செய்தி விளங்கியது. மக்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பலை. அதுதான் நடந்தது.

ஆனாலும் ஈ.பி.டி.பி போன்றவை கள்ள வோட்டுப் போட ஒழுங்கு செய்தார்கள்.

அங்கிருக்க பல்கலைக் கழக மாணவர்கள்- பொடியனுக- சும்மா விடவில்லை இதை. இரவு இரவாப் போய் பட்டாசு கொளுத்தி விரட்டி விட்டிருக்கிறார்கள்.

அதை வைத்துக் கொண்டு உலகம் முழுக்க எங்கள் மீது விமர்சனம்.

http://www.yarl.com/forum/index.php?showtopic=7789&pid=143790&mode=threaded&show=&st=&

மேலும் பாலா அண்ணா சொன்னது...

மக்களே தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். ஒரு தனிநபருக்காக, தனிநபர் ஆளுமைக்காக, ஒரு கட்சி கொள்கைகளுக்காக எங்கள் மக்கள் புறக்கணிக்கவில்லை. ரணிலையோ, ராஜபக்சவையோ எங்கள் மக்கள் புறக்கணிக்கவில்லை.

அவர்கள் புறக்கணித்தது

சிங்கள அரசியல் அமைப்பை-

சிங்கள ஆட்சிப் பீடத்தை!

வேண்டாமய்யா.. நாங்கள் இனி தனிவழியே போகப் போறோம். நீங்கள் உங்கள் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்களது அரசியல் தலைவிதியை, அரசியல் தகமையை நாங்களாகத் தீர்மானிக்கிற காலம் வந்துவிட்டது என்ற செய்தி அங்கே சொல்லப்பட்டது. (மக்கள் அடங்காத கைதட்டல்).

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிச்சம் எங்கே? 40 நிமிச பொழிப்புரைய கானேல்ல. கடைசியாதானே கணக்க சொன்னவர். :o

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே அந்த சம்பவம் தூண்டுதல் இல்லாமல் நடக்கேல்ல, நாடுகடந்த சுதந்திர ஊடகவியளாளர் அமைப்பு செய்தியபெரிசுபடுத்தி ஒரு கலவர நிலைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கு. நேற்றைய சிறைச்சாலை தாக்குதல் செய்தியும் அவையளாலதான் பெரிசுபடுத்தப்பட்டிருக்கு. நோக்கமில்லாமல் இவை ஒண்டும் நடக்கவில்லை. கடற்கரையில கொல்லப்பட்டவர் அப்பாவி. பொலீஸ் வெளியால வரவிடாமல் தடுத்தது பிழை, அதுக்காக தண்டனையை பெறுவார்கள். அங்க தண்டிக்கப்படாமல் போவது யார்? :o

இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒரு வலசு ஒண்டு சொன்னது... 83 இல தேவையில்லாம திண்ணவேலி தாக்குதலை செய்ததாலதான் சிங்களவன் கெம்பினானாம். சிங்களவன்ர நாடு அவன் அடிக்கிறது நியாயம் தானே.. நாங்க தான் அடங்கிப் போகவேணும் எண்டு அலம்பியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சிங்களவன் நீதி தவறாமல் நடக்கிறான் எண்டு சொல்லுறீங்கள். இவ்வளவு காலமும் கொல்லப்பட்ட ரெண்டு லட்சம் சனத்தின்ர கொலைக்கும் காரணமாக இருந்தவர்களை அரசாங்கங்களே தண்டனை குடுத்து வருகின்றன எண்டு சொல்லுறீங்கள். மொத்தத்தில மனுநீதி தவறாமல் நடக்கிற ஆட்சி எண்டு சொல்ல வாறியள். இவ்வளவு காலமும் தெரியாமல்ப் போட்டுது.ஏனென்றால் உங்கட வார்த்தையிலேயே "அங்கு தண்டிக்கப்படாமல் போவது யார்" எண்டு இன்றைக்கு உலகில எவனுமே சிங்களவனுக்குக் குடுக்காத கவுரவத்தைக் குடுத்திருக்கிறீங்கள். இது போதும் நீங்கள் எங்கிருந்து வாறியள் எண்டு அறிந்துகொள்ளுறதுக்கு.

ஆக அந்த வாலிபர் கொல்லப்பட்டது சிங்களவர்கள் செய்த கருணைக் கொலையால அல்ல, தண்ணீக்க இருந்து வரவிடாமல் தடுத்ததால தான் அவர் தானே தற்கொலை செய்துபோட்டார் எண்டுறீங்கள். அப்ப தடியால தலையில் ஓங்கி அடிக்கிறதெல்லாம் என்னவெண்டு நாங்கள் கேட்கக் கூடாதாக்கும். அப்படிச் செய்தால் அது புலிகள் ஏவிவிட்டுத்தான் உந்தக் கேள்வியெல்லாம் வருகிறதெண்டு நீங்கள் கவலைப்படுவீங்கள். சிலவேளை சிங்கள போலிசின்ர யூனிபோமைப் போட்டுக்கொண்டு புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்துபோட்டு அப்பாவிச் சிங்களவன்ர தலையில் போடுறாங்களோ தெரியாது எண்டு நீங்கள் இன்னும் உள்ளுக்க நினைக்கிறது எங்களுக்கும் விளங்குது.பாவம், உங்கட விசுவாசம் ஆருக்கு வரும். சும்மாயிருந்த சிங்களவனைச் சீண்டிப்போட்டு அவன் வேற வழியில்லாமல் செல்லமாத் தட்டினதைக் கொலை எண்டு சொல்லுற அளவிற்குப் புலிகளிட்ட காசு வாங்கிக்கொண்டு எழுதின சுனந்த தேசப்பிரியவையும் கடுமையாக் கண்டிக்க வேணும்.என்ன, ஒரு சிங்களப் போலிஸ்காரனுக்கு தமிழன் ஒருவனைக் கருணைக்கொலை செய்யக்கூட உரிமையில்லாத நாடு இது ?

சரி உங்கட ஒட்டுக்குழுக்களின்ர கதைக்கு வருவம். நீங்கள் எந்தக்குழுவெண்டு தெரியவில்லை. எங்களைப்பொறுத்தவரை உங்கள் யாரையும் நாங்கள் வித்தியாசப்படுத்திப் பார்க்க விரும்பியதில்லை. எல்லாம் ஒண்டுதான். நீங்கள் ஏண் பிரிந்து அடிபட்டியள் எண்டுறதோ அல்லது மாறி மாறி ஏன் மண்டையில் போட்டுத் தள்ளினீங்கள் எண்டுறதொ எங்களுக்குத் தெரியாது.அது ஏன் எண்டு உங்கட திருவிளையாடல்களை தூண்டிவிட்ட இந்திய எசமானைக் கேட்டுப் பாருங்கோ, சிலவேளை சொன்னாலும் சொல்லுவான். கருணாவும் மாத்தையாவும் நக்கது துவங்கினதும் உங்கட இந்தியாவின்ர தூண்டுதலால தான் கண்டியளோ.

உந்த அருமையான கேள்விகலை எல்லாம் எங்களைக் கேட்க முதல் உங்களிட்ட இப்படி எழுதச் சொன்ன எசமானைக் கேட்டுக்கொண்டு வாருங்கோ. இங்க வந்து அது ஏன், இது ஏன், அது எப்படி, இது எப்படி எண்டு அசடு வழிய வேண்டாம்.

மிச்சம் எங்கே? 40 நிமிச பொழிப்புரைய கானேல்ல. கடைசியாதானே கணக்க சொன்னவர். :o

தந்த இணைப்பை துறந்து பாரும்... அங்கை ஏற்கனவே தந்து இருக்கிறேன்...

http://www.yarl.com/forum/index.php?showtopic=7789&pid=143790&mode=threaded&show=&st=&

இனியும் உம்மட முயலுக்கு மூண்டு கால் தான். அது எனக்கு தெரியும்.. உமது நோக்கம் என்ன என்பதை மற்றவர் அறிய மட்டுமே உமது தோல் உரிப்பு..

கடைச்சிக்கட்டம்.. வீடியோவில் பார்க்க...

http://video.google.co.uk/videoplay?docid=-158588996328805945&ei=mOb_SpWGBdTM-Aby3b34Bg&q=Balasingham+2005&hl=en&client=firefox-a#docid=-8232351717184440562

http://video.google.co.uk/videoplay?docid=-158588996328805945&ei=mOb_SpWGBdTM-Aby3b34Bg&q=Balasingham+2005&hl=en&client=firefox-a#docid=2193946916757646835

http://video.google.co.uk/videoplay?docid=-158588996328805945&ei=mOb_SpWGBdTM-Aby3b34Bg&q=Balasingham+2005&hl=en&client=firefox-a#docid=5881697038506406080

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....அதில சொன்னதெல்லாம் ஒண்டும் பிசகாம முடிச்சுத்தந்திருக்கினம். பிளான்பண்ணினபடி டீல் முடிச்சு இலக்கை அடைஞ்சிருக்கிறம். சர்வதேச உலகையே எப்பிடியெல்லாம் ஏமாத்தி திட்டமிட்டபடி ரணில வராமப்பண்ணி மகிந்தவ கொண்டுவந்து எங்கட ஒற்றையாட்சிய நிறுவியிருக்கிறம். மகிந்தவுக்கு பாஸ்போட்குடுத்து வரவேற்றிருக்கிறம். ஐரோப்பிய யூனியன்ர தடைய இல்லாமல் செய்திருக்கிறம். இந்தியாவ ராசதந்திரத்தால தோற்கடிச்சு பிரகடனமும் செய்துமுடிச்சிட்டம். இனியென்ன தலைவர்வழியில குந்தியிருந்து கடலைபோடவேண்டியததான். :(

9 பாகம் ஒண்டுவிடாம கேளுங்கோ........ அதில சொன்னதில என்ன நடத்தி முடிச்சிருக்கெண்டு சொல்லுங்கோ......ஏதாவது ஒண்டு??????

ம்..... தொல் உரிச்சு காட்டினது போதுமோ????????? :o

ம்....அதில சொன்னதெல்லாம் ஒண்டும் பிசகாம முடிச்சுத்தந்திருக்கினம். பிளான்பண்ணினபடி டீல் முடிச்சு இலக்கை அடைஞ்சிருக்கிறம். சர்வதேச உலகையே எப்பிடியெல்லாம் ஏமாத்தி திட்டமிட்டபடி ரணில வராமப்பண்ணி மகிந்தவ கொண்டுவந்து எங்கட ஒற்றையாட்சிய நிறுவியிருக்கிறம். மகிந்தவுக்கு பாஸ்போட்குடுத்து வரவேற்றிருக்கிறம். ஐரோப்பிய யூனியன்ர தடைய இல்லாமல் செய்திருக்கிறம். இந்தியாவ ராசதந்திரத்தால தோற்கடிச்சு பிரகடனமும் செய்துமுடிச்சிட்டம். இனியென்ன தலைவர்வழியில குந்தியிருந்து கடலைபோடவேண்டியததான். :(

மற்ற கோதாரிகளை பற்றி பிறகு விவாதிக்கலாம்...

முதலிலை சொல்லும் மகிந்தவை வெல்ல வைக்கத்தான் புலிகள் இரணிலுக்கு வாக்கு போடாமல் செய்தவை எண்டு நீர் சொன்னதை பற்றிய விவாதத்தை முதலில் முடித்து வையும்...

அப்படி எங்கே பாலா அண்ணா சொல்லி இருக்கிறார்...???

. மகிநதவ கொண்டுவந்தது யார் என்னத்துக்கு கொண்டுவந்தார். பாலாண்ணை 2005 பொழிப்புரைய கேளுங்கோ. 2008 மாவீரா உரை நடக்கேக்கயே எப்பிடி முடியப்போகுதெண்டு தெரிஞ்ச தலைவர் அவ்வளவு சனத்தையும் ஏன் சாச்சுக்கொண்டு போனவர். உதெல்லாம் பிறெஸ்ரீச் பிரச்சனையோ? சனத்திண்ட உயிர் உங்களுக்கு பிறெஸ்ரீச்சாப்போச்சு. அங்கத்தய சனத்த சாகக்குடுத்து யாருக்கு இங்கயிருந்து தமிழீழம் வேண்டப்போறியள்? இப்ப சொல்லுங்கோ யார் மிருகங்களெண்டு. :o

யாழ்ப்பாணம் விட்டு வரேக்கை புலிகள் மக்களையும் விட்டுத்தான் வந்தார்கள்.... அடுத்த ஒரு வாரத்தில் 8000 தமிழ் இளைஞர்கள் சிங்களவரால் காணாமல் போனார்களே( அதில் எனது இரண்டு மைதுணர்கள் அடக்கம்) அதை எந்த வைகையில் சேர்க்கிறீர்... உமது வீணைக்காறர் தானே அப்பாவிகளை புலிகள் எண்று முன்னின்று காட்டி கொடுத்தார்கள்..

வன்னியில் புலிகள் மக்களை காக்கும் நிலையில் தான் கடைசிவரைக்கும் போராடினர்கள்.... புலிகள் மக்களை வெளியில் விட்டு இருந்தால் சனம் செத்து இருக்காது எண்டு சொல்ல நிக்கிறீரா...?? அதை எப்படி உறுதியாக சொல்கிறீர்...

இண்று வரைக்கும் சனம் செத்து போனது புலிகள் அனுப்பிய ஆவணங்களால் மட்டும் தான் மற்றவர்களால் உணரமுடிந்தது.... சிங்கள ஆதரவு ஊடகங்கள் எல்லாம் இல்லை எண்றுதானே சாத்திதன... அதில் உம்மை போண்ரவர்களின் குரல்களும் அடக்கம்...

போர் முடித்ததின் பின்னர் வவுனியா, மன்னார், புல்மோட்டை, முகாம்களில் அதுக்கும் பின்னர் காணாமல் போகவில்லையா....??? மக்கள் கொல்லப்படவில்லையா...?? அதை மறைக்க தானே ஊடகங்கள் எதையும் உள்ளை விடாது தடுத்தார்கள்...

எங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல நினைக்கும் உம்மை போண்ரவர்கள் திருந்துவது சந்தேகமே... சிங்களவனின் கொலைக்கு புது வித்த்தில் அர்த்தம் கண்டு பிடிக்கும் உங்களது கேவலமான நிலையும் மாறாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2005 க்குப்பிறகு ஒவொரு வருசமும் பூமிப்பந்தில புட்போல் விளையாடி 2009 மே 18 ல கப் வெண்டிட்டம். :o

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனன் உங்களுடைய கருத்துப்பதிவுகளை(?) பார்க்கும்போது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. உங்கள் வாதங்களின் அடிப்படையே உங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஏன் இவ்வளவு படாதபாடுபட்டு இந்த இடத்தில் இவ்வளவு பிரயத்தனப்பட்டுக் கருத்தெழுதுகிறீர்கள்? இரவு பகல் பாராது முழுநேர தொழில் வாய்ப்பைப் பெற்றவன்கூட உங்களைப் போல செயலாற்ற முடியாது. உங்கள் அடிப்படை எண்ணங்களின் மூலமே தமிழ் சமூகத்திற்கு எதிரானதாக இருக்கிறது என்பதை உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறது. உங்களை நிறையவே வருத்தி நீங்கள் இடும் பதிவுகள் எல்லாம் வாசிக்கும் போது உங்களைப் பார்த்துப் பரிதாபப்பட வைக்கின்றன. இவ்வகையான எழுத்துகளைத் தொடர்ந்து எழுதும் நீங்கள் ஒன்று மனநோயாளியாக இருக்கவேண்டும் அல்லது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு எதிரான சக்திகளால் பாவிக்கப்பட்டு கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். நீங்கள் தமிழினத்திற்கு எதிரானவர் இல்லை என்றால் நல்ல மனநல வைத்தியரை பார்ப்பது நன்று. இதை நான் சொல்லவில்லை உங்கள் பதிவுகள் சொல்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்ற கோதாரிகளை பற்றி பிறகு விவாதிக்கலாம்...

முதலிலை சொல்லும் மகிந்தவை வெல்ல வைக்கத்தான் புலிகள் இரணிலுக்கு வாக்கு போடாமல் செய்தவை எண்டு நீர் சொன்னதை பற்றிய விவாதத்தை முதலில் முடித்து வையும்...

அப்படி எங்கே பாலா அண்ணா சொல்லி இருக்கிறார்...???

உரை முழுவதிலுமே அதுதான் கிடக்கிதெண்டு யாரோ சொன்னாங்கள். எனக்கு ஐகியூ குறைவு அதால பாலா மாமாண்ட உரை பெரிசா விளங்கேல. காசு வேண்டிக்கொண்டு வரப்பண்ணிதாயும் யாரோ இங்க எழுதினதா ஞாபகம். பாலா மாமா அப்பிடி சொல்லியிருக்கமாட்டாரெண்டு இப்பதான் யோசிக்கிறன். கொஞ்சம் யோசிக்வேணும் கொஞ்சநேரம் விடுங்கோ. :o

எங்கட ஊரிலை ஒருத்தர் இருந்தார்...

காலமை பக்கத்து வீட்டு பேப்பரை ஓசியிலை வாங்கி கொண்டு அடுத்த வீட்டு க்குப் போய் அங்கை இருக்கும் சிறுவர்களை விட்டு வாசிக்க சொல்வார்... முழுக்க வாசிக்க சொல்லி கேட்டு போட்டு ரோட்டாலை போறவையோடை தனது அரசியல் சமாவை டொடங்குவார்...

வாசிச்ச பெடியன் "ஐஞ்சு சத்துக்கு கொஞ்ச லாம்பெண்ணை" எண்டு வாசிக்க வேண்டியதை "ஐஞ்சு சத்துக்கு கொஞ்சலாம் பெண்ணை" எண்டு வாசிச்சு காட்டினால் அதை அப்படியே வங்கி கொண்டு பொறவாற சனத்தோடை வம்மளப்பார்....

எனக்கு உம்மை நினைக்க அவரின் உருவம் தான் நினைவில் வருகிறது...

உங்களுக்கு எல்லாம் சொந்தமாக சரக்கு எண்டது குறைவுதான்... கூட்டமாக இருந்து கதைக்கும் போது கேட்டு போட்டு... அதுதான் சரி எண்டு மற்றவர்களுடன் அடம்பிடிக்க வேண்டியது...

2005 க்குப்பிறகு ஒவொரு வருசமும் பூமிப்பந்தில புட்போல் விளையாடி 2009 மே 18 ல கப் வெண்டிட்டம். :(

மகிந்த மட்டும் இல்லை இரணில் வந்து இருந்தாலும் இதுதான் நிலமை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.