Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினை பிரபாகரன் தட்டிவிட்டார் - முதல்வர் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு விடுதலைப்புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. இது குறித்து மேலும் அறிகையில், வி.புலிகள் எதிர்கால கணிப்போடு போர் தந்திரத்தை செயற்படுத்தாததால் பல உயிர்கள் இழந்ததார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால் தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் , சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யார் மீது குற்றம் கூறுவதற்காக தான் இதனைக் கூறவில்லையெனத் தெரிவிக்கும் அவர், ராஜீவ் காந்தியின் கொலை ஈழ விடுதலைப்போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது எனவும், 2005 ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வந்த போதும், அதை பிரபாகரன் எட்டி உதைத்து தவறான காரியம் செய்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகள் அவசரமாக எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பதை எண்ணிப்பார்த்து மௌனமாக அழுவதாகவும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக தந்தை செல்வா காலத்திலிருந்து திமுக நடத்திய போராட்டங்களையயும் இந்த அறிக்கையில் அவர் பட்டியலிட்டுள்ளதாவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்க்காணல் ஒன்றை சுட்டிக்காட்டிய, முதலமைச்சர் அச் செவ்வியின் சார்பாகவே இந்த அறிக்கையில் கருத்துக்கள் வெளியிடப்படுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு

துரோகி கருணாநிதியே உனக்கு எங்கள் போராட்டத்தைப்பற்றி கதைக்க உரிமையில்லை உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்கவும். அன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? எங்கள் போராட்டத்துக்காக உங்களைக் கேட்பதற்கு காரணம் உங்கள் இந்தியா எங்கள் பிரச்சினையில் தலையிட வருவதால் தயவு செய்து புரிந்துகொள் துரோகியே.........

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

பிழைத்துக்கொள்ளட்டும் எமை வைத்து....

கதை எழுதுபவருக்கு எங்கே தெரியப்போகிறது

போர் என்றால் என்னவென்று????

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி செய்த ஈழத்தமிழ் துரோகத்தின் பலன் அவரையும் அவரது வம்சாவழியையும் ஏழேழு பிறப்பிலும் சென்றடைய வேண்டும் என்று சபிக்கிறேன்.

ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு விடுதலைப்புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.

தமக்குக்குக் கிடைத்த சந்தர்பங்களைத் தவறவிட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், தறுதலைகள், துரோகிகள், புத்திசீவிகள் என எல்லோரும் இது பேன்ற பல்லவிகளைப்பாடிக்கொண்டுதான் இருப்பர்.

Edited by kalaivani

ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உந்த பொய்யனிண்ட கதையை விடுங்கோ......

அட்லீஸ்ட் தலைவர் பயங்கரவாதத்துடனாவது ஒட்டிகொண்டிருந்திருக்கலாம்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பொய்யனிண்ட கதையை விடுங்கோ......

அட்லீஸ்ட் தலைவர் பயங்கரவாதத்துடனாவது ஒட்டிகொண்டிருந்திருக்கலாம்..... :)

அப்படி செய்திருந்தால்

தலைவர் கருணா அல்லது கருணாநிதி ஆகியிருப்பார்

அதுதான் தேசியத்தலைவராக என்றும் எம் நெஞ்சுள்........

2005 இல் மட்டுமா? எத்தனைகளை தவற விட்டு விட்டோம் :)

2005 இல் மட்டுமா? எத்தனைகளை தவற விட்டு விட்டோம் :)

கேள்வி பட்டனான்... எல்லாத்தையும் பிரபாகரனே செய்ய வேண்டும் எண்டு... சிங்களவன் இரணிலை எங்கட தலைவராக 2005 தெரிவு செய்யாமல் விட்டு... இன்னும் பல...

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல் மட்டுமா? எத்தனைகளை தவற விட்டு விட்டோம் :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதன்

அமெரிக்காவின் கு..... கழுவாது விட்டோம்

சீனாவின் மு....கழுவாது விட்டோம்

இந்தியனின் ச.... கழுவாது விட்டோம்

சிங்களவனின் கு.....மு.....ச...... எல்லாவற்றையும் கழுவ வழி ஏற்படுத்தி தந்தும் செய்யாது விட்டோம்

என்பது உண்மைதான்

அதுக்குத்தான் எம்மண்ணில் உம்மை பெற்றோமே......

அம்மா ஆடுவளர்த்தா.... மாடு வளர்த்தா...

நா...... மட்டும் வளர்க்கல

அதுபோலத்தான் இதுவும்

அம்மா ஆடுவளர்த்தா.... மாடு வளர்த்தா...

நா...... மட்டும் வளர்க்கல

அதுபோலத்தான் இதுவும்

:) :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினை பிரபாகரன் தட்டிவிட்டார் - முதல்வர் கருணாநிதி

இவர் என்ன பொய் செய்தியெல்லாம் சொல்லுறார்........ சரியான வழிய தேர்ந்தெடுத்து நல்ல முடிவ தந்திருக்கிறார்..... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எடுத்த அவசர முடிவுகளே இன்றைய விளைவுகளுக்குக் காரணம் - கருணாநிதி

புதன்கிழமை, நவம்பர் 18, 2009, 9:08

சென்னை: விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய குரலும் - இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் - நடத்திய அறப்போராட்டங்களும் - சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் - சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும் - ஏன்; இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும் -

தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும் -

"டெசோ'' இயக்கத்தின் சார்பில் - நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும்,

ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்;

அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும் - இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் விடுதலைப் படைமுகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு - தளபதிகளுக்கு - தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன் படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ; என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும் - நடைபெற்றதற்கான காரணத்தையும் - நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம், தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18-11-2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில்,

"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார்.

2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.

மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.''

என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;

டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்;

பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்;

தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்;

டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்;

தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் - 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக - நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல - முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் - நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் - நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து - தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் - தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய

ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.

என்னையும், மாறனையும் 15-3-1989 அன்று; அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து - விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப் பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி - அதுபற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்கு தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு - பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை நான் இங்கிருந்து செய்து தருகிறேன், அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதை விவரமாகத் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் - என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அந்த சம்பவமும் ஈழ விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்பதை உலகம் மறந்து விடவில்லை.

இதோ ஒரு நிகழ்ச்சி. 17-11-2005 அன்று இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 13 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முக்கியமாக போட்டியிட்டார்கள். அந்த தேர்தலை சிறுபான்மையினரான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த தேர்தலின்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார் ரணில். அப்போது ரணில் சொன்னதைத் தான் இப்போதும் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும், "2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது - விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி வேதனைக்கு என்ன காரணம்...

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் ஈழம் குறித்த தங்களது கருத்துக்களைக் கவிதைகளாக பதிவு செய்துள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் முதல்வர் கருணாநிதி தனது வேதனையை வெளிப்படுத்தி தற்போதைய கடிதத்தை முரசொலியில் எழுதியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2009/11/18/ltte-s-hasty-decisions-be-blamed.html

Edited by Mathivathanang

கருணாநிதியின் கண்ணீரின் பின்னணி என்ன?

இலங்கையில் தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப்படும் போது அவரால் சொக்கத் தங்கம் என வர்ணிக்கப் பட்ட சோனியா காந்தியிடம் தன் குடும்பத்திற்கு மந்திரிப் பதவி கேட்டு மண்டியிட்ட கருணாநிதி இப்போது அழுகிறேன் என்று ஏன் அறிக்கை விடுகிறார்?

இலங்கையின் இன அழிப்புப் போரை இந்தியாவின் உதவி இன்றி சிங்களவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று பலதரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இலங்கைக்கு பலவழிகழிலும் உதவி செய்த சோனியா ஆட்சியின் பங்காளியான கருணாநிதி ஏன் இப்போது தான் அழுவதாக அறிக்கை விடுகிறார்?

சோனியா-கருணநிதியின் கூட்டணி அரசின் தூதுவர்கள் கொழும்பு சென்று மூன்று நாட்களுக்குள் ( இந்தியப் பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு) போரை முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தியதால் மோசமான ஆயுதங்களைப் பாவித்து பல்லாயிரம் அப்பாவிகளை இலங்கை அரசு கொன்று குவித்ததை மறந்து இப்போது கருணாநிதி ஏன் இந்தக் கண்ணீர் அறிக்கை விடுகிறார்?

ரணில் கருணாநிதியிடையே "டீலா நோ டீலா"?

ஆறுமாதங்கள் எதுவுமே நடக்காதது போல் இருந்த கருணாநிதி இப்போது அழுவதாக அறிக்கை விடுவது ஏன்? அழுது அழுதுதான் செம்மொழி மாநாடு ஏற்பாடுகள் செய்கிறாரா? கருணாநிதியின் அறிக்கையின் முக்கிய பகுதி ரணில் விக்கிரமசிங்கேயிற்கு வக்காலாத்து வாங்குவதுதான். தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேயிற்கு வாக்களித்து இருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதாம். இந்தியா ரணிலை தனது கையாளாக மாற்ற முயற்சி எடுக்கும் வேளையிலேயே கருணாநிதியின் கண்ணீர் அறிக்கை வெளிவருகிறது. இந்தியப் பேரினவாதிகளின் கைக்கூலி கருணாநிதி என்பது உண்மையா? அந்த மேலிடத்து உத்தரவின் பேரில் கருணாநிதி ரணிலுக்கு வக்கலாத்து வாங்கி வரும் தேர்தலில் தமிழர்களை ரணிலுக்கு வாக்களிக்க கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா? அதற்காகத்தான் இந்தக் கண்ணிர் அறிக்கையா? அல்லது ரணிலுக்கும் கருணாநிதிக்கும் இடையில் ஏதாவது "டீலா"?

தமிழ் தமிழ் என்று சொல்லிப் பிழைப்பு நடாத்திய கருணாநிதி இப்போது தமிழினக் கொலையாளிகளுடன் கை கோத்துப் பிழைப்பு நடாத்துகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எடுத்த அவசர முடிவுகளே இன்றைய விளைவுகளுக்குக் காரணம் - கருணாநிதி

புதன்கிழமை, நவம்பர் 18, 2009, 9:08

2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது - விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி வேதனைக்கு என்ன காரணம்...

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் ஈழம் குறித்த தங்களது கருத்துக்களைக் கவிதைகளாக பதிவு செய்துள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் முதல்வர் கருணாநிதி தனது வேதனையை வெளிப்படுத்தி தற்போதைய கடிதத்தை முரசொலியில் எழுதியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2009/11/18/ltte-s-hasty-decisions-be-blamed.html

ஓ ,பிரச்சனை என்னவென்றால் ரனிலை வரவிட்டிருந்தால் தமிழர்கள் மற்ற பக்கமாக வயித்தாலை அடிப்பினம் அது தானே? யாரய்யா பனங்கொட்டை சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குபவர். அட நம்ம அரை லூசு மதுவதனங் மகத.ஏக்க தமாய். :D:)

முதலையின் கண்ணீரும் கருநாய் நிதியின் கண்ணீரும் ஒன்றே. இந்த கோட்டானுக்கு சோறி நாய்க்கு எம் தலைவரைப்பற்றி எம் இனத்தைப் பற்றி பேச யார் உரிமை கொடுத்தது. உலகத்தமிழர்களின் மனங்களிலிருந்து அடியோடு அழித்து விடப்பட்ட இவன் கூக்குரலை செவிமடுப்பது தமிழரின் தவறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிரச்சினை என்றால் ரணில் வந்திருந்தால் இந்தியா மட்டும் இலங்கையுடன் சேர்ந்து புலிகளையும் தமிழரையும் அழித்து இலங்கையை தமது கட்டுபாட்டில் கொண்டு வந்திருகலாமாம். மகிந்து வெற்றி பெற்றதால சீனாவும் பாகிஸ்தானும் உள்ள புகுந்துந்திடாங்களாம், அதால இந்தியாவுக்கு சனி அம்பாந்தோட்டையில் குந்தி இருக்காம், எப்ப பிடிக்குமோ தெரியவில்லை என்று சொக்கதங்கம், கிழத்தை உரசி இருக்கும். உடன கிழம் முதுகுவலி மைளனவலி என்று அலம்புது.

2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.

ரோக்கியோவில் பேச்சு வார்த்தைகளுக்கு புலிகள் போய் இருந்தனர்... ஆனால் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தையே புறக்கணித்தனர்... தங்களின் குரலோ, அல்லது கருத்தோ கேட்க்கப்பட மாட்டது எனும் இடத்துக்கு புலிகள் சுற்றுலா போக விரும்பவில்லை...

அந்த கூட்டம் கூட்டப்பட்டதின் நோக்கமே புலிகளுக்கு சில கட்டளைகளை உலக தலைவர்கள் எண்று சொல்லி கொள்பவர்களால் போடுவதுக்காக தான்...

மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.''

என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சிங்களவன் சிங்களவனை தலைவனாக தெரிவு செய்யும் ஒரு தேர்தலில் தமிழரை தங்களின் தலைவனாக ஒரு சிங்களவனை தெரிவு செய்ய வாக்கு போடாமல் செய்து போட்டார்கள் புலிகள் எண்று கவலை படுகிறார்... புலிகளை தலைமையாக ஏற்க்கும் தமிழர்கள் சிங்களவனுக்கு வாக்கு போட வேண்டாம் எண்று கேட்ப்பதுக்கு புலிகளுக்கு எல்லாவித ஜனநாயக உரிமையும் உண்டு...

சிங்கள ஆயுதப்படைகளின் முழுமையான கட்டுக்குள் இருக்கும் யாழ்ப்பாண மக்களை வாக்கு போட வைத்து இருக்கலாமே... ஏன் செய்ய முடியவில்லை..???

சிங்களவனுக்கு வாக்கு போடாமல் புலிகள் தான் தங்களின் தலைமை எண்று தமிழ் மக்கள் உலகுக்கு சொன்ன ஆணை எண்று ஏன் உங்களால் எடுக்க முடியவில்லை...??

விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;

ஆக கவலைக்கு இதுதான் காரணம்... RAW வின் உறுப்பினர்களும் முகவர்களின் செயற்பாட்டுக்கு தடையாக புலிகள் இருந்து விட்டார்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D செய்த ஜில்மாலுகளுக்கு மசவாசா பதிலுகள் வருது. :D:)

கேள்வி பட்டனான்... எல்லாத்தையும் பிரபாகரனே செய்ய வேண்டும் எண்டு... சிங்களவன் இரணிலை எங்கட தலைவராக 2005 தெரிவு செய்யாமல் விட்டு... இன்னும் பல...

ஓமோம், 80கோடியை வாங்கி, மகிந்தவுக்கு வாக்களித்ததை சொல்கிறீர்களா? :D

ஓமோம், 80கோடியை வாங்கி, மகிந்தவுக்கு வாக்களித்ததை சொல்கிறீர்களா? :o

வாங்கினது நீரோ...??? :D:):D

படத்திலை பாத்தது போல அளக்கிறீர்...??? எங்கை வச்சு யாரிட்டை குடுத்தவை எண்ட விபரமும் இருக்க வேணுமே...?? சொல்லும் அந்த கதையையும் கேப்பம்...

:) செய்த ஜில்மாலுகளுக்கு மசவாசா பதிலுகள் வருது. :D:D

பண்டிக்கு யார் எதை சாப்பிட்டாலும் மலமாகத்தான் தெரியும்... :lol: :lol: :lol:

அந்த கிழடு தான் அறளை பெயர்ந்து அலம்பு தெண்டால் நாங்களும் சேர்ந்து அலம்புறோம் போலிருக்கிறது!!!!

முதலில் அப்படி சொல்லும் பேந்து சொக்கத்தங்கம் சோனியா அதுக்கு விழக்கம் கேட்டால் உடன் மறுப்பு அறிக்கை வரும் நான் அப்படி சொல்லவில்லை இப்படி தான் சொன்னேன் எண்டு..

சிங்களவனின் ஜனநா(ய்)யகத்தில் நம்பிக்கை இருந்தால்!! அதை இவர் 2005ம் ஆண்டே சொல்லி இருக்கலாம் தானே..

ஏன் இப்போ முதளைக்கண்ணீர் விடவேண்டும்??????

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி கைகட்டி பாத்து கொண்டு நிக்கேக்க நடந்த கொலைகள் இவை

மறு படியும் இந்த படங்களை பாத்து அழுங்கோ http://www.nerudal.com/nerudal.5672.html

உந்த கிழட்டு நாயை எப்படித் தான் கெட்ட வாத்தையால பேசினாலும் ஆத்திரம் அடங்காது.. தமிழன்ட முதல் எதிரி உந்த கிழட்டு நாய் தான்

வாங்கினது நீரோ...??? :) :) :wub:

படத்திலை பாத்தது போல அளக்கிறீர்...??? எங்கை வச்சு யாரிட்டை குடுத்தவை எண்ட விபரமும் இருக்க வேணுமே...?? சொல்லும் அந்த கதையையும் கேப்பம்...

பண்டிக்கு யார் எதை சாப்பிட்டாலும் மலமாகத்தான் தெரியும்... :(:lol: :lol:

Mahinda 'gave money' to LTTE

http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/03/070329_mahinda_ltte.shtml

How Mahinda Rajapaksa Channeled Money to the LTTE

http://lankawhistleblower.blogspot.com/2007/07/how-mahinda-rajapaksa-channeled-money.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.