Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரிச்சில் தமிழ் பேசும் தலைவர்கள் மாநாடு; புதுக் கதையாக எழுமா?... பழைய பல்லவி தானா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எலியள் மகாநாடு நடத்தி பூனைக்கு யார் மணிகட்டுறது எண்டு யோசிக்கினம் போலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள்

இங்கு ஒரு விடயம் நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும், -விரும்பினால், அவார்கள் ஒன்றாக போசுவதே பெரியவிடயம் அவர்களுக்குள் ஆயிரம் வேறுபாடு .. அவர்கள் எல்லோருமே எங்களுக்கு உபத்திரம் செய்பவர்கள் என்றால் யார்தான் எமக்கு உள்ளனர்? அவர்கள் 90 % தங்கள் சுயநலத்திற்காய் பேசட்டும் , பேசினாலும் 10 % தன்னும் எங்களுக்காய் பேசமாட்டார்களா?

இல்லாவிட்டால் யார்தான் வந்து பேசவேண்டும் என்று எதிபர்கிறிர்கள்?

அன்புச்செல்வன், நீங்கள் இணைத்த இணைப்பில் / எழுதியதில் எல்லா அரசியல்வாதிகளையும் விமர்சித்திருக்கிறிர்கள் ஆனால் 30 வருட போராட்டத்தையும் அதனோடு சார்ந்த இழப்புகளையும் பின்னடைவுகளையும் தவிர்த்தது ஏன்?

ஒருவர் JVP பற்றி எழுதியிருந்திர்கள், அவர்களையும் ஹெல உறமையையும் வைத்துத்தான் எங்களுடைய இனப்பற்று வளர்க்கப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்..

இது ஒரு புதிய களம் யார் எதிரி யார் நண்பன் என்று நாங்கள் எங்களுக்குள் அடிபட வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"""சிங்களத் தலைமைகள் திட்டமிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றன என்ற காரணத்தாலேயேதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுஇ ஒரு லட்சம் உயிர்களைப்பலியெடுத்த பின் புலிகளை அழித்து விட்டதாக தென்னிலங்கை மார் தட்டுகிறது. இப்போது வெள்ளம் கழுத்து வரை வந்து விட்டது. சேடம் இழுக்கும் சுதந்திரம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கழுத்து வரை வந்த வெள்ளத்தை இடுப்பளவுக் கேனும் குறைக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டிய நிலையே இப்போது....! நிச்சயமாகக் குறைக்க முடியும். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நாம் நிச்சயமாக எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். அதற்கான புறச்சூழல் இப்போது உருவாகியுள்ளது. தமிழ்த் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் ஒன்று கூடியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தலைமைகளுடன் முஸ்லிம் தலைமைகளும் சேர்ந்தால் கழுத்து வரை வந்த வெள்ளத்திலிருந்து நீந்திப் புதிய அரசியல் வாழ்க்கையை ஆரம்பிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. காரணம் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வெளி அழுத் தங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மையினரின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தேவை. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை தமிழ் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்துவார்களா?"""

இதைதான் நானும் சொல்ல வந்தது ...

மன்னிக்கவும் பெரியபெரிய பந்தியாய் பிரயோசனம் இல்லை என்று எழுதிபோட்டு கடைசி பந்தியில் யதார்த்தத்தை எழுதியதால் முழுமையாக கருத்தை உள்வாங்கவில்லை ...

அவர்கள் கதைக்கவே கூடாது , கதைத்து என்ன பிரயோசனம்? உங்களது ஆற்றாமையே ஒழிய வேருறேதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கனகசூ.........

உங்களுக்கு வேண்டுமானால் தமிழரின் தலைவர் யார் என்பதில் குழப்பமிருக்கலாம். எனக்கு அப்படியில்லை. எமது தலைவர் இப்போதும், எப்போதும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். எதோ தூக்கத்தில் இருன்டு எழுந்து வந்து "யார் தலைவர் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது " என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள். பிரபாகரன் தலைவன் இல்லை என்று சொல்லுமளவிற்கு எப்படித் தைரியம் வந்தது? அப்போ, சபாரத்தினமும், உமா மகேச்வரனும், டக்கிளச், சித்தார்த்தன், பிள்ளையான், அழுங்குச் சங்கரிதான் உங்கட தலைவர் என்று நினைக்கிறியளோ ?? சரிதான். நல்ல தலைவர்கள்.

சரி, எப்பிடி, எப்பிடி, ?டக்கிளஸும், பிள்ளையானும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களா? அதனால் அவர்களைத் தெரிவுசெய்த மக்களையும்தான் திட்ட வேண்டுமா?? ஏன் மக்களைத் திட்ட வேண்டும்? இந்தப் பொறுக்கி நாய்களைத் தெரிவுசெய்தது அரசாங்கம் தான் என்று உங்களுக்கு இவ்வளவுகாலமும் விளங்காமலிருக்கிறதை உங்கட கருத்துக்களிலிருந்தே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா, டக்கிளஸ் என்கிற எச்சக்கலை நாய் வெறும் 9 வாக்குகளிப் பெற்றுத்தான் முதன் முதலில் பாரளுமன்றம் போனான். ஏனென்றால் வேறு எவரையும் அந்தத் தேர்தலில் போட்டியிட அவனோ அல்லது அவனது எஜமானோ விடவில்லை. பிள்ளையான் எப்படி வந்ததென்று உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நீங்கள்தான் நீண்ட தூக்கத்தில் இருந்திருக்கிறிர்களே??

இந்த ரெண்டு நாய்களும் தெரிவுசெய்யப்பட்ட விததில் எந்த வேறுபாடுமில்லை.

இவர்கள் தான் உங்களின் தலைவர்கள் என்று நீங்கள் அடம்பிடித்தால் என்னால் எதுவும் செய்ய முஇயாது.

வாழ்க உங்கள் தலைவர்கள்.

சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சின் ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்றைத் தோற்றுவிப் பதற்கான கூட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த இரண்டு முக்கியவிடயங்கள் குறித்து காத்திரமான கலந்துரையாடல் தானும் இன்றி முடிவுற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததாம். அதற்கென அரைநாள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அது குறித்து காத்திரமான கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் தெரிவித்தார் என்று தகவல்கள் கொழும்பில் கசிந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில் அது குறித்து இங்கு விவாதிப்பதால் பயனில்லை என்று ஒரு சாராரும் கூட்டத்தின் பிரதான நோக்கம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு என்று தெரிவித்து விட்டு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வது அர்த்தமற்றது என்று ஆட்சேபம் தெரிவித்து அடுத்த சாராரும் இதனைப் புறக்கணித்தனர்.

ஆராயப்பட குறிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் விடயம் தேவையற்றது எனக்கூறி, அந்த விடயம் நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்பட்டது. கிழித்து எறியப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவித்தது. அரசியலுக்கு அப்பால், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து ஆராய்ந்து நீதியான, ஒரு முடிவுக்கு வந்து அது குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது கூட்டத்தில் இரண்டாவது முக்கிய நிகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும் அது குறித்த கலந்துரையாடல் தொடங்கிய சிறிது நேரத்தில், அகதி முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரசு அனுமதி அளித்திருப்பதும், மற்றும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் பஸில் ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்புக் குறித்து அமைச்சர் பெ.சந்திரசேகரன் கூட்டத்தில் தெரியப்படுத்தினார். அத்தோடு தமிழ்மக்களின் குடியேற்றம் குறித்த விடயமும் தொப்பென கைவிடப்பட்டதாக நேற்று இரவு இங்கு கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பத்மநாபா அணியில் அங்கம் வகித்த எஸ்.வரதகுமார் என்பவரே ஏற்பாடு செய்திருந்தார். அவர் தமிழர் தகவல் மையம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து வரதகுமார் இந்தியா சென்று காலத்துக்குக் காலம் அந்நாட்டு அரசுகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். இதேவேளை, சூரிச் கூட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொருவருக்கும் பயண மற்றும் செலவுக்கென 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 26 பேர் பங்கு பற்றினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், பி.சந்திரசேகரன், பேரியல் அஸ்ரப், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், மனோகணேசன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, ரி.சிறிதரன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அவற்றில் அடங்குவர்.

இதற்கிடையே கலந்துரையாடலில் பங்கு பற்றிய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தம்மால் நான்கு "ஸ்ரார்'' ஹோட்டலில் தங்க முடியாது என்று தெரிவித்து சூரிச் நகருக்குச் சென்று ஐந்து "ஸ்ரார்'' ஹோட்டலிலே தங்கினார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த மேலதிக செலவையும் கூட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களே வழங்கினர்.

இந்தளவுக்கு பெருந்தொகைப்பணம் தமிழர் தகவல் மையத்துக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் இந்தியாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகைய கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று செயற்பட்டதாகவும் இந்தியா முழு விரும்பம் இன்றியே அதற்கு ஒத்துழைப்பு நல்கியதாகவும் மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி http://www.uthayan.com/Welcome/full.php?id=1895&Uthayan1258949378

மொத்தத்தில நல்லா நாறிட்டாங்கள்

போனதுக்கு நல்லா திண்டும் இருப்பாங்கள்.

நான் அப்பவே யோசிச்சனான் இவங்கள் எப்படி தாணக ஒண்டுகூடியிருப்பாந்க்கள் எண்டு.

யாராவது சொன்னால் அல்லது வேருட்டினாலே தவிர ஒண்ட சேர வாய்ப்பே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"யார் குத்தினாலும் அரிசியானால்ச் சரி ", "காலத்துக்கேற்ற நல்ல நடவடிக்கை " என்று ரெண்டு மாற்றுக்கருத்துப் பன்னாடைகள் இங்கே வந்து ரெண்டு மூண்டு நாளாக அழுது வடிந்து கொண்டிருந்தவை. இப்ப, குத்தின அரிசியும் புக்கையாப் போச்சுது, மகிந்தவின்ர...நக்கிப்போட்டு இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

------

இந்தக் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பத்மநாபா அணியில் அங்கம் வகித்த எஸ்.வரதகுமார் என்பவரே ஏற்பாடு செய்திருந்தார். அவர் தமிழர் தகவல் மையம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து வரதகுமார் இந்தியா சென்று காலத்துக்குக் காலம் அந்நாட்டு அரசுகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். இதேவேளை, சூரிச் கூட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொருவருக்கும் பயண மற்றும் செலவுக்கென 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 26 பேர் பங்கு பற்றினர்.

இதற்கிடையே கலந்துரையாடலில் பங்கு பற்றிய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தம்மால் நான்கு "ஸ்ரார்'' ஹோட்டலில் தங்க முடியாது என்று தெரிவித்து சூரிச் நகருக்குச் சென்று ஐந்து "ஸ்ரார்'' ஹோட்டலிலே தங்கினார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த மேலதிக செலவையும் கூட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களே வழங்கினர்.

------

நன்றி http://www.uthayan.com/Welcome/full.php?id=1895&Uthayan1258949378

சரி விடுங்கப்பா ....... 26 பேரும் , ஆற்ரையோ ...... புண்ணியத்தில சூரிச்சை பார்த்ததாக இருக்கட்டும்.

ஆறுமுகம் தொண்டைமான் ஏழு ஸ்ரார் ஓட்டல் கேட்காத அளவில் கொஞ்சம் சந்தோசம்.

ஏழு ஸ்ரார் ஓட்டலுக்கு துபாய்க்கு தான் ஆளை கூட்டிக் கொண்டு போகவேணும்.

47412894_2f82fa382f.jpg

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.