Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21/12/2012 இல் யுகமாற்றமா? துருவமாற்றமா?

Featured Replies

21/12/2012 இல் யுகமாற்றமா? துருவமாற்றமா?

Major Jenkins in Maya Cosmogenesis 2012 believes that the Mayan Long count ...

Galactic Alignment 2012

http://www.youtube.com/watch?v=vLSMAWVCxfQ

Pole Shift of Earth 2012

2012 நிகழ்வுகள் உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைபிடிக்கப்பட்டது. இதனைக் கொண்டு தொன்மவியல் வானிலையாளர்கள்,மத பொழிப்புரையாளர்கள், எண்கணிதவியலாளர்கள் மற்றும் புறப்புவி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கை அல்லது கருத்தை பரப்பி வருகின்றனர். ...

...

விரிவுரையாளர்கள் பேரழிவு ஏற்படும் என்பதை மறுத்து அந்த நாளில் நேர்மறையான மாற்றம் நிகழலாம் எனவும் 2012 புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றும் கொள்கை வகுக்கின்றனர். இத்தகைய எண்ணங்களும் கருத்துக்களும் பல புத்தகங்கள்,தொலைக்காட்சி விவரணப்படங்கள்,இணைய தளங்கள் மூலம் உலகெங்கும் பரவியுள்ளது. ...

... - கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் இருந்து.

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

...

மாயா நாட்காட்டி ...

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

...

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம்....

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது

- மாயா நாட்காட்டி - கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் இருந்து

Las 7 Profecias Mayas

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

அஸ்டெக் நாகரிகம் (2012)

அஸ்டெக் நாகரிகம் மெக்சிகோவின் மையப் பகுதியில் பதினான்காம், பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்ததாகும். அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் தம்மை மெக்சிக்காக்கள் என அழைத்தனர். அஸ்டெக் பேரரசின் தலைநகரம் மெக்சிக்கோவின் டெக்ஸ்கொகோ ஏரியின் நடுவில் அமைக்கப்பட்ட டெனோச்டிட்லன் என்பதாகும். இன்றைய மெக்சிக்கோவின் தலைநகரான மெக்சிக்கோ நகரம் டெனோச்டிட்லனின் இடிபாடுகளின் மீதே கட்டப்பட்டுள்ளது. அஸ்டெக் நாகரிகம் கட்டாய கல்வி முறையைக் கொண்டிருந்த ஒரு முன்னேற்றகரமான நாகரிகமாகும். அஸ்டெக் நாகரிகம் கட்டட கலையிலும், கலை திறன்களிலும் சிறந்து விளங்கியது. கலாசாரத்திலும், அறிவியல் முன்னேற்றதிலும் உன்னத நிலையில் விளங்கிய அஸ்டெக் நாகரிக மக்கள், நரபலியிடுதல் போன்ற கொடுர பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடதக்கது. -அஸ்டெக் நாகரிகம் - கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் இருந்து.

The Aztec Civilization

  • கருத்துக்கள உறவுகள்

.

119472307_3e2449d21f.jpg

1272d1219541890-image001.jpg

அடர்ந்த காட்டின் நடுவில் உள்ள, இந்த உயர்ந்த கட்டிடங்கள் மாயன்கள் உயர்ந்த நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளதை காட்டுகின்றது.

நல்ல ஒரு பதிவு ஜெகுமார் , தொடருங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு மிகவும் நன்றி ஜெயக்குமார். தொடருங்கள் வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

2012 பற்றிய சுமேரியரின் கதை

நிபுரு என்ற, பூமியிலும் மூன்று மடங்கு பெரிய, ஒரு கோள்ளின் வருகையாகும் ... இந்தக் கோள் சூரியனின் பின்னால் எப்போதும் மறைந்திருப்பதால் இருப்பதால் எங்கள் செய்கோள்களால் காணமுடியவில்லை...!

இந்தக் கோள், 2012 ஆண்டில் பூமிக்கருகில் வரவிருக்கிறது, இது இரண்டாவது சந்திரன் போல எங்கள் கண்களுக்கு தென் படும், அந்த வேளையில் பூமியும் அதன் சூழல்லும் பல அலங்கோலங்களுக்கு உள்ளாகும் என்பதே அந்த சுமேரியரின் கதை ...

சூரியனில் என்ன நடக்கிறது என்று நேரடியாகக் கவனிக்க --> விண்வெளிக்குறிப்பேடு - பூமியிலிருந்து அண்டம் வரை

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய பேருக்கு மெக்சிக்கோவில் பிரமிட் இருப்பது தெரிவதில்லை.இவை மாயா எனப்படும் செவ்விந்தியர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.இன்று மிகவும் அழகான பெண்கள் பிரென்ஞ்சு மக்களின் கலப்பு கொண்டவர்கள். பலரை அமெரிக்க நாடகங்களில் காணலாம். மேலும் மாயா இனத்தவர்கள் கணித வல்லுனர்கள் என்றும் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பதிவினிற்கு நன்றி மேலும் தொடருங்கள் ஜெயக்குமார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2012 ம் ஆண்டில் உலகம் மிகப் பெரிய அழிவுகளை சந்திக்க போவதாக பரவலாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இவற்றிற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

1.மாயன்ஸ் நாட்காட்டி (Mayan's Calendar)

தென் அமேரிக்காவின் மெக்சிக்கோ பகுதியில் தோன்றி மறைந்ததாக கூறப்படும் மாயா நாகரிகத்தினரின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றென கூறப்படுவது அவர்களின் நாட்காட்டியாகும். கி.முவில் தொடங்கும் இந்நாட்காட்டி முடியும் திகதி 21-12-2012. 2012 உலகின் மறுபிறப்பு தினம் (Regeneration Period என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது)

2. பெரு வெடிப்பு (Big Bang)

அறிவியல் முன்னோடிகள் பூமியின் அழிவு பிக் பேங் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிகழலாம் எனும் கருத்துக் கணிப்பினையும் முன் வைக்கிறார்கள். இந்த பிக் பேங் சித்தாந்தம் 1929-ஆம் ஆண்டு எட்வின் ஹபில் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிக் பேங் சித்தாந்தத்தின் படி பார்ப்போமேயானால் இந்த பிரபஞ்சமானது ஒரு மாபெரும் இராட்ச்சச வெடிப்பினால் உருவான பிண்டங்கள். தொடக்கத்தைப் போலவே பூமியின் முடிவும் இருக்கும் என்கிறது இச்சித்தாந்தம். 13.7 பில்லியன் வயதைக் கொண்ட பூமி இன்னும் 20பில்லியன் வருடங்கள் கழித்து இறந்துபோகும் என்பதும் பிக் பேங் சித்தாந்தத்தின் முக்கிய கருத்தியலாகும்.

3. புவி வெப்பம் (Global Warming)

நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. அதே போல் சூரியனின் கொதிப்பும் பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது. இப்வெப்பத்தின் பாதிப்பு துருவங்களின் பனிப்பாறைகளை கரையச் செய்து கடல் மட்டத்தை பெருக்கெடுக்க வைக்கிறது. கடல்மட்டம் உயருவதால் கரைப்பகுதிகள் அமிழ்ந்து போகின்றன.

4. விண் கற்கலின் மோதல்

விண் கற்கலின் மோதலாலும், பூமியின் அழிவு ஏற்படுதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாசாவின் தகவல் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது பூமியை விண்கற்கள் மோத வருகின்றன. அட்மோஸ்பேராவின் பாதுகாப்பால் அவை தகர்க்கப்படுகிறது. கோள்களின் மோதலாலும் பூமி அழிந்து போகக் கூடும் என ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. கோள்களின் சுழற்சி அதிகரிக்குமானால் கோள்களின் மோதல் ஏற்ப்பட சாத்தியம் இருப்பதாக அறிவியல் கருத்துகள் கூறப்படுகிறது.

5. Sun Storms

நாசாவின் ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு கூறுவதன்படி, உலகம் அழிவது என்பது சூரியனில் இருந்துதான் தொடங்கும். சூரியனின் நியூக்ளியர் பேலன்ஸ் {nuclear balance} எனப்படும், அணுக்கதிர்ச் சமநிலை என்றைக்காவது ஒருநாள் சீர்குலையப் போவது சர்வ நிச்சயமானது. அந்த ஒருநாள் என்பது எப்போது என்று பயந்துவிடாதீர்கள். 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது நடக்க வாய்ப்பு

உள்ளதாம். அதாவது, சூரியனில் இருக்கும் ஹைடிரஜன் வாயு, ஹீலியம் வாயுவாக மாறிப் போகும்.அப்போதுதான் சூரியனின் அணுச்சமநிலை மாறிப் போகுமாம். அதனால் சூரியன் அக்னிப் பிழம்பாகி விரிவடைந்து, அடுத்தாற்போல் இருக்கும்,

சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்களை தன்னுள் இழுத்துக் கொள்ளுமாம்.இதனல்

இன்னும் வெப்பம் கடுமையாக ஆகி, பூமியில் உள்ள கடல் நீரெல்லாம் வெப்பத்தினால் ஆவியாக மாறும்.உலகின் அனைத்து உயிரினங்களும்

அழிந்துவிடும்.

6. "திபுரு" வால் நட்சத்திர மோதல்

நாசா விண்வெளி ஆராட்சி நிறுவனத்தாரின் ஆய்வின்படி 3600 ஆண்டுகளுக்கு ஒரு தடவை "திபுரு" எனும் பெயருடைய வால் நட்சேத்திரம் புவியைத் தாண்டிச் செல்வதாகவும் அதன் சுற்று வட்டத்துக்கமைய எதிர்வரும் 2012.12.22 இல் பூமியைத் தொட்டுச் செல்லுமெனவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத் "திபுரு" வால் நட்சேத்திரம் தாண்டிச் செல்லும் போது புவியுடன் மோதுண்டால் மாபெரும் உலக அழிவு ஏற்படுமென்பது நிச்சயமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

7. உலக அழிவைகாட்டும் கடிகாரம்

உலக அழிவை ஏற்படுத்தப் போகும் நொடிப் பொழுதை அறிந்து கொள்ளக் கூடிய கடிகாரத்தை அமெரிக்க சிக்காக்கோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 1947ம் ஆண்டில் கண்டு பிடித்துள்ளார்கள். மத்திய அமெரிக்கா, தென் மெக்சிக்கோ போன்ற பகுதிகளில் குடியிருந்த ஆதிக்குடிகளான செவ்விந்தியர்கள் தங்களின் மாந்திரீக நம்பிக்கைக்கேற்ப கால அட்டவணையொன்றைச் செப்பனிட்டு வைத்திருந்தனர், இவர்களின் கணிப்பின்படி 2012 டிசம்பர் 22ம் திகதி உலக அழிவு ஏற்படுமென கூறப்பட்டுள்ளது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ் ஆதிக் குடிகள் கணித்துக் கூறியுள்ள உலக அழிவு ஏற்படப் போகும் நொடி பற்றிய கருத்தினை ஒத்ததாகவே சிக்காக்கோ பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் கடிகாரமும் கூறுவதாக அறிய முடிகின்றது.

விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள இக் கடிகாரம் கூறிய 18 நேர மாற்றங்களில் உலக அழிவு ஏற்பட்ட பதிவு இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இறுதியான 18 வது தடவை இக் கடிகாரத்தில் ஏற்பட்ட நேர மாற்றத் தினமான 2007ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் வடகொரியாவில் அணுசக்திப் பரிசோதனை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்தது போரிஸ் கிப்ரியானோவிச் என்ற 12 வயது மாத்திரம் நிரம்பிய ரஸ்யாவை

சேர்ந்த சிறுவன் கூறும் தகவல்கள் தான். இந்தச் சிறுவனை பற்றிய தகவல்களை கேட்கவே புல்லரிக்கின்றது.1996ல் பிறந்த இவன் எல்லோரையும் போலவே அல்லாமல் பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப்படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது? ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம்! இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது. திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான். செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.

அவனுடைய மூன்றாவது வயதில் கோள்களை பற்றியும், விண்வெளி பற்றியும் கூறிய தகவல்கள் ஏனையோரை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கும்,அத்தனையும்

உண்மையானவையாகவும் இருந்திருக்கின்றன.இதனால் ஆலயத்தில் அவனுக்கு கிறீஸ்தவ முறைப்படி திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர் அவனுடைய பெற்றோர்.

ஆனால் அதற்கு பின் அவன் வீதிகளில் இறங்கி அழிவு வரப்போகிறது என எச்சரிக்கை செய்ய தொடங்கி இருக்கிறான்.இவனுடைய அதிமேதாவித்தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம். உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் "இண்டிகோ" சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர். இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை

உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

இவனை பல விஞ்ஞானிகள் கேள்விகளால் குடைந்த போதும் அவனது அலட்சியமான, உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.(உதாரணத்திற்கு விண்கலத்தின் பாககங்களை குறித்து இவன் கூறும் தகவல்கள் அத்தனையும் உண்மையாக இருப்பதாக விஞ்ஞானிகள்

கூறுகின்றார்கள்.)ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி

ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில்!

எமக்கு முன்னர் பூமியை ஆண்டவர்கள் உங்களுக்கு தெரியுமா அவர்கள் அழிந்ததற்கான காரணம் என்ன ? உலகில் டயனோஸர் (Dinosaur) அழிவுக்கு காரணம் என்ன?

உலகின் மிகப்பெரிய உயிரினமான "டயனோஸர்' ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்து போக முக்கிய காரணம் விண்ணில் இருந்து விழுந்த எரி

கற்களால் தான் என்று 1980ம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. அதை பொய்ப்பித்துள்ளது சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வு. இதன் மூலமாக இந்த புதிய கண்டுபிடிப்புக்கு சர்வதேச அளவில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலையின் புவியியியல் துறை சார்பில் பல்வேறு ஆய்வுகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலையில் இதற்கென்றே "புவியியல் துறை'

துவக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் பல்கலை

புவியியல் துறை பேராசிரியர் ராம்குமாருக்கு, "டயனோஸர்' என்ற உயிரினம்

முற்றிலும் அழிந்ததற்கான காரணம் அறிய அதிக ஆவல் இருந்தது. இதே ஆவல், ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர் ஸ்டூபன், அமெரிக்காவை சேர்ந்த ஹார்ட்டிங் ஆகியோருக்கும் இருந்தது. இதனால், ஜெர்மனியில் இருந்து கடந்த 2002ல், பெரியார் பல்கலை பேராசிரியர் ராம்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்ற ராம்குமார், மற்ற இருவரும் இணைந்து இரண்டு ஆண்டு ஆய்வை மேற்கொண்டனர்.

டயனோஸர் என்ற உயிரினம், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து விட்டதாக உலகம் முழுக்க பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கான ஆதாரங்களாக தொல்லுயிர் எச்சம் எனப்படும் பதிவுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் இருந்து டயனோஸரின் முட்டை, பெரிய

உருவம் என்பதால் அது நடந்து போன கால் தடம், எலும்புகள் போன்றவை கண்டு

பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், அத்தனை பெரிய உயிர், உலகம் முழுக்க பரவலாக வாழ்ந்த உயிர், திடீரென காணாமல் போனதற்கு ஏதாவது பெரிய காரணம்

இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் இருந்தது.

தொடர்ந்து ஒவ்வொரு விஞ்ஞானியும் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். கடைசியாக 1980ல், ஆல்க்ராஸ் என்ற விஞ்ஞானி, டயனோஸர் இறந்து போவதற்கு காரணம், விண்ணில் இருந்து எரிகற்கள் பூமியில் விழுந்ததால் தான் என்று

கண்டுபிடித்தார். அதற்கான ஆதாரமாக மெக்ஸிகோ நகரில் கடலுக்குள் மிகப்பெரிய பள்ளம் இருப்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த நேரத்தில் தான், "டீத்தீஸ்' என்று அழைக்கப்படும் பெரிய கடல் காணாமல் போனதும், கடலுக்குள் இருந்த இமயமலை மேலே வந்ததும் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டன. அவரது ஆய்வு முடிவை உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்று கொண்டிருந்தனர். ஆனால், பெரியார் பல்கலை ராம்குமார், ஹார்ட்லிங், ஸ்டூபன் ஆகிய மூவரும் செய்த ஆய்வில், விண்கற்கள் பூமியில் மோதியதால் டயனோஸர் அனைத்தும் இறந்திருக்க முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆய்வு விபரம்:

கடலுக்குள் இயற்கையாகவே பேரியம் என்ற தாதுப்பொருள் உள்ளது. இது மீத்தேன் வாயுவை கக்கும். இயற்கை மாற்றங்களால் கடல் மட்டம் குறையும் போது, இந்த மீத்தேன் வாயு, காற்றில் கலந்துள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரிக்க செய்யும். உயிர்கள் வாழ்வதற்கு, காற்றில் 27 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு தான் தேவை. அதன் அளவு இதை விட அதிகமாகும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே, கடந்த ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், இயற்கை மாற்றங்களால் கடல் மட்டம் குறைந்துள்ளது. இதனால் பூமியின் பல்வேறு இடங்களில் ஒரே

காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணத்துக்கு மெக்ஸிகோ

நகரிலும் இஸ்ரேலிலும் மாற்றங்கள் நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவில் கூட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்

எரிமலை வெடித்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழகத்தில் அரியலூரில் ஆறரை

கோடி ஆண்டுகளுக்கு முன் மாற்றங்கள் ஏற்பட்டதால் தான் அரியலூர் கடல்

மட்டத்துக்கு மேலே வந்தது என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதற்கான

சான்றுகளாக அங்கும் டயனோஸர் வாழ்ந்துள்ளதும், அதன் முட்டை படிவம் மற்றும் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டதும் மற்றொரு சான்று. எனவே, அடிக்கடி கடல் மட்டம் குறைந்த போது, காற்றில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்துள்ளது நிருபணமாகியுள்ளது. எனவே, டயனோஸர் படிப்படியாக உலகில் அழிய துவங்கியது.

இவ்வாறு அவர்களின் ஆய்வு கூறுகிறது.

காற்றில் கார்பன் ஆக்ஸைடின் அளவு அதிகரித்ததால் தான் டயனோஸர் அழிந்தது

என்ற ஆய்வுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, சாதனைகளை இடம் பெற செய்யும் "கின்னஸ்' புத்தகம் போல், "சர்வதேச புவி விஞஞானம்'' (International Earth Sciences)என்ற புத்தகம் உள்ளது. உலகின் எந்த

கண்டுபிடிப்பாக இருந்தாலும், இந்த புத்தகத்தில் இடம் பெற்றால் தான் அது,

விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அர்த்தம். அந்த வகையில் சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் ராம்குமார் மற்றும் வெளிநாட்டவர் இருவர் செய்து முடித்த ஆய்வறிக்கை, இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதன் மூலம், ஆய்வுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலகின் அழிவுக்கு மனிதனும் விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சியும் ஒரு காரணமாகும் அதன் அடுத்த கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம். அதன் ஒரு வடிவம்தான் பூமிக்கு கீழே மிகபெரிய அணு சோதனை:

உலகம் தோன்றி 1400 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பூமியில் ஏற்பட்ட பிரளயம் காரணமாக கண்ணுக்குத் தெரியாத நுண்ணியிரிகள்

முதலில் தோன்றின. அவற்றில் இருந்து பரிணாம வளர்ச்சி அடிப்படையில் ஒவ்வொரு வகை உயிரினம் உருவாகின. குரங்கில் இருந்து மனித இனம் தோன்றியது. சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரளயத்தின் போது பூமியில் மிகப்பெரிய நட்சத்திரம் ஒன்று மோதிய தால் டைனோசர் உள்பட ஏராளமான வகை உயிரினங்கள் வம்சமே இல்லாமல் செத்து ஒழிந்து விட்டன. சமீப காலமாக புதிய வகை உயிரினங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதன் காரணமாக பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் மீது ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

முதலில் நுண்ணயிர், பிறகு நீர்வாழ் இனம், அதன் பின் நிலத்தில் வாழும்

உயிரினம் தோன்றியது என்ற டார்வினின் கோட்பாடு சரியாக இருக்குமா என்று

கேள்வி எழுப்பினார்கள். இதற்கிடையே உலகம் தோன்றியது தொடர்பாகவும், அதன் பிறகு ஏற்பட்ட நிறைய அறிவியல் ஆய்வு களிலும் விடை காண முடியாத புதிர்கள் உள்ளன. இதற்கு விடை காண வேண்டுமானால் பூமியில் மீண்டும் ஒரு பிரமாண்டமான பிரளயத்தை நடத்திப் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பு வந்தது. ஜெனீவாவை தலைமை இடமாகக் கொண்டு செயல் பட்டு வரும் இந்த ஆராய்ச்சி அமைப்பில் ஐரோப்பிய நாட்டு விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில், 300 அடி ஆழத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நீள்வட்ட வடிவில் உள்ள அந்த நிலையத்தில் 85 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் அணு விஞ்ஞானிகள்

(இயற்பியலாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு முனைக்கும், அடுத்த முனைக்கும் இடையிலான தூரம் மட்டும் 27 கி.மீ.

கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சி திட்டத்தின் மொத்த செலவுத்தொகை ரூ.36 ஆயிரம் கோடி (8 பில்லியன் டாலர்). பெரிய தூண் போன்ற

அளவில் உள்ள இரண்டு அணுக்களை மணிக்கு ஆயிரத்து 600 கி.மீ. வேகத்தில் மோதச்செய்து ஆராய்ச்சி நிலையத்துக்குள் பிரளயம் ஏற்படுத்துவதே இந்த

ஆராய்ச்சியின் முக்கியப்பணி. நடக்கும் அணு சோதனையின் போது 17 மைல் சுற்றளவு ஆராய்ச்சி சுரங்க அறைக்குள் "செயற்கை பிரளயம்'' கற்பனைக்கு எட்டாத வகையில் நடத்தப்படும். அதாவது அணு பொருளான புரோட்டான் எதிர் எதிர் திசையில் மின்னல் வேகத்தில் ஏவி செலுத்தப்படும். அவை ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும். அப்போது ஒவ்வொரு அணுவும் பல்லாயிரக்கணக்கான அணுக்களாக மாறும். இந்த அணுக்கள் ஒவ்வொன்றும் 17 மைல் சுரங்க ஆய்வு மையத்தை வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் தடவை சுற்றி விடும். அப்படியானால் ஒட்டு மொத்த வேகம் எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இதுதான் செயற்கை பிரளயம். இந்த செயற்கை பிரளயத்தின் போது என்னென்ன நடக்கிறது ஏதேனும் நுண்ணுயிரி தோன்ற வாய்ப்பு உள்ளதா? வேறு ஏதாவது எதிர்மறை விளைவு ஏற்படுகிறதா? தற்போதைய பரிணாம வளர்ச்சி தத்துவத்துக்கு ஏதேனும் விடை கிடைக்குமா? என்பதை அறிவதே விஞ்ஞானிகளின் நோக்கமாகும்.

அணு ஆராய்ச்சி

இந்த அணு ஆராய்ச்சி சாதாரணமானது அல்ல. உலகில் எங்கும் இதுவரை இப்படி ஒரு பயங்கர ஆராய்ச்சி நடத்தப்பட்டதே இல்லை. உலகில் இதுவரை நடத்தப்பட்ட அணு குண்டு சோதனைகளை விட இது 7 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையால் நிலத்துக்கு மேலேயும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சோதனையின் விளைவாக உலகமே அழிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே, ரூ.36 ஆயிரம் கோடியை செலவு செய்து ஆபத்தான ஆராய்ச்சி செய்வதை கைவிடுங்கள்' என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் மறுத்து விட்டனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், பூமிக்கு கீழே அணு சோதனை நடத்துவதால், பேரழிவு ஏற்படாது. இதன் விளைவாக உலகம் அழிந்து விடும் என்ற கருத்தை யாரும் நம்ப தேவையில்லை. ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதை, 2003-ம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது. சுருக்கமாக கூறினால், இந்த ஆராய்ச்சியால் மனித குலத்துக்கு ஏராளமான பயன்களே ஏற்படும். புற்று நோய் போன்ற சில முக்கிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கலாம். வேறு சில கதிரியக்க பயன்களையும் பெற முடியும்'' என்கின்றனர்.

ஜெர்மனி நாட்டு வேதியியல் நிபுணர் பேராசிரியர் ஓட்டோ ரோஸ்லர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு தொடக்கத்தில் இருந்தே இந்த அணு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அணு சோதனை பூமி முழுக்க ஓட்டைகளை ஏற்படுத்தி விடும். அந்த ஓட்டைகள் நாளுக்கு நாள் பெரிதாகும். அந்த ஓட்டை கள் விரிவடைவதைத் தடுக்கவே இயலாது. எனவே குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஓட்டைகள் விரிந்து பூமியே இல்லாமல் போய் விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உலக மக்கள் அனைவரினதும் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ள கடவுளைத் தேடும் "பிக்பாங்" சோதனை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள். முடிவுகள் தெரிய பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். சோதனை முடிவுகள் வெற்றியளித்தால் கடவுள் இருக்காரா இல்லையா உலகம் எவ்வாறு தோன்றியது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். முடிவுகள் விபரீதமாக முடிந்தால் உண்டாகும் கரும்புள்ளி மூலம் உலக அழிவு எவ்வாறு இருக்கும். இதோ இப்படித்தான்....

கரும்புள்ளி மூலம் உலக அழிவு

உலக அழிவு பற்றிப் பேசிக் கொண்டோமே தவிர நாங்கள் அதுபற்றி அச்சங்கொள்ளவில்லை. ஆனால் அண்மையில் வெளிவந்த திரைப்படங்கள் அச்சத்தை தருகிறது.

ஒரு திரைப்படம் இவ்வருட ஆரம்பத்தில் வெளிவந்தது

லண்டனில் வசிக்கும் பிரானி ஆரம்ஸ்ரோங் (Franny Armstrong) என்ற இளம் பெண் இயக்குனர் தயாரித்திருக்கும் "Age of Stupid" என்ற திரைப்படம். இன்னமும் நாற்பத்தேழு வருடத்தில் இந்தப் பூமி மனிதர் வாழமுடியாதபடி இயற்கை அனர்த்தங்களால் அழிந்து போய்விடப்போகிறது என எச்சரிக்கிறது. ஆதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கங்களையும் காட்சிப்படுத்தியுள்ளது. இது வெறும் புனைகதையாகத் தெரியவில்லை.

இயற்கை அனர்த்தங்களால் தொடர்ந்து பேரழிவுகளை சந்தித்து வரும் உலகம், 2055 ஆண்டில் முழுவதுமாக சிதைந்து போய்விடுகிறது. தாஜ்மகாலும், அவுஸ்திரேலிய

ஒப்ரா கோல், வெள்ளை மாளிகை, ஈபில் கோபுரம் என உலகின் முக்கியமான கட்டிடங்கள் எல்லாம் உருக்குலைந்து போய்விடுகின்றன. இந்தப் பேரழிவு எப்படி நடந்தது? உலகை அழிவு நிலைக்கு கொண்டு செல்லும் முட்டாள்தனத்தை யார் செய்தார்கள் என்பதை பின்நோக்கிய விசாரணையாக இத்திரைப்படம் நகர்கிறது

விவரணங்களையும் கற்பனைச்சம்பவங்களையும் கலந்து தயாரிக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தில் காலநிலைமாற்றத்தால் அழிவுகளை ஏற்படுத்திய வெவ்வேறு சம்பவங்கள் தத்துருபமாகப் படமாக்கப்பட்டுள்து. வர்த்தக நிறுவனங்களின் மிகையான இலாபம் சம்பாதிக்கும் பேராசையால், அவர்களது நடவடிக்கைகள் எவ்விதம் காலநிலை மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது என்பது பல்வேறு விவரணங்கள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நிபுணர்களான மார்க் லைனஸ், ஜோர்ஜ் மொன்பியோ போன்ற ஊடகவியலபளர்கள் நடந்த அழிவுகளை மேறகோள் காட்டி எதிர்கால அபாயங்கள் பற்றி விளக்கமளிக்கிறார்கள்.

Age Of Stupid Trailer

பெற்றோலிய எண்ணை வியாபாரம் எவ்விதம் அமெரிக்க அரசியலில் ஆட்சி செலுத்துகிறது என்பதிலிருந்து, உருகி வழிந்து உருத்தெரியாது கரைந்துபோகும் பனிப்பாறைகள, யுத்தத்தால் பாதிக்கப்படும் ஈராக்கியர்கள், எண்ணை நிறுவனங்களின் சுரண்டால்களால் பாதிக்கப்படும் நைஜீரியர்கள், பொருளாதார வளரச்சியால் தலைகால் தெரியமால் செயற்படும் இந்தியப் பணக்காரர்கள் சீனர்களை விட்டுவிட்டார் தயாரிப்பாளர்) என உலகம் பூராவும் காலநிலை மாற்றத்தினை ஏற்படுத்தும் முட்டாள்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இத்திரைப்படம்.

புகழ்பெற்ற ஆங்கில நடிகர் பீற் பொஸ்ரல்வெயிற் கதைசொல்லியாக வருகிறார். மிகச்சில நடிகர்களே நடித்திருக்கும் இத்திரைப்படம், சிந்திக்கவும் செய்படவும் தூண்டுகிறது. இருப்பினும் சாதாரண மக்களை பார்க்கத் தூண்டுகிற விடயங்கள் மிகவும் குறைவாக காணப்படுவதனால் சொல்ல வந்த செய்தி எல்லோரையும் எட்டியதா என்பது சந்தேகமாக உள்ளது.

அடுத்த திரைப்படம் இம்மாதம் 6ம் திகதி வெளிவந்த "2012" என்னும்

திரைப்படமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் கடல் கொந்தளிப்பு கதையின் முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளது. மாயன்ஸ் நாட்காட்டி 2012 நிறைவற்று போவதின் காரணம் பல கோணங்களிலும் அலசப்பட்டும் பேசப்பட்டும் இருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அத்தேதியில் உலகம் அழியும் என்பது உண்மையானால் மனித குலத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதே 2012 எனும் திரைப்படத்தின் கண்ணோட்டமாக அமைந்துள்ளது. உலக அரசுகள் மக்களை எவ்வகையில் பாதுகாக்கப் போகிறது. உடனடி ஏற்பாடுகள் செய்யப்படுகிறதா எனும் பார்வையும் இங்கு முன் வைக்கப்படுகிறது. இன்றய நிலையில் மனிதர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. பூகம்பம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, என இயற்கையின் மிரட்டல்கள் அதிகரித்துவிட்டிருக்கின்றன. இயற்கை மனிதனோடு நட்புறவு கொள்ள மறுத்துவிட்டிருக்கிறது.

2012 Trailer

2012 திரைப்படத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயம் பாதுகாப்பு கப்பல்கள். இது நோவாவின் கப்பலின் கதையின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கக்கூடும். எவ்வளவு பேரை இக்கப்பலில் காப்பாற்ற முடியும் எனும் பட்சத்தில் முதலாளிதுவமும் ஆட்சியாளர்களின் கெடுபிடியும் அங்கே முந்திக் கொள்ள நினைக்கிறது. சுயநலம் பெருக்கெடுக்கிறது. ரஸ்ய நாட்டில் பேழை ஒன்று உள்ளது. இப்பேழையில் 5 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. உலகம் அழிந்து போகுமாயின் இப்புத்தங்கள் அப்பேழையில் பாதுகாப்பாக இருக்குமாம். அந்த 5 புத்தகத்தில் ஒன்று திருக்குறள் என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகங்களை காப்பதை போல மனிதர்களை காக்க முடியுமா? இப்படிப்பட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் குடும்பத்தை ஒரு சாமனிய வர்க்கத்தை சேர்ந்த வாகன ஓட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். இயற்கையின் சீற்றத்தின் முன் நாம் எந்த அளவுக்கு கையாளாகதவர்களாகிறோம் என்பதை அடித்து சொல்லப்படுகிறது.

அழிவு அழிவு என்கின்றோம் அது ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் ஏற்படப்போகின்றது அல்ல இப்போது கூட அது நடந்துகொண்டுதான் இருக்கின்றது

"உலகில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் மூன்று உயிரினங்கள் அழிகிறது"

உலகிலுள்ள உயிரினங்களில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் மூன்று உயிரினங்கள் அழிந்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இயற்கைச் சீரழிவு மற்றும் சுற்றுச் சூழல் மாசு குறித்து ஜேர்மனியில் நடைபெற்ற 193 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தாக்கல் செய்த அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் டைனோஸர் இனங்கள் அழிந்து 6.5 கோடி ஆண்டுகளுக்குப் பின் உயிரினங்கள் அழிவது இப்போது தான் பெரிதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று உயிரினங்கள் , அழிந்து வருகின்றன. ஓரங்கொட்டான், சிம்பன்ஸி மற்றும் யானை உள்ளிட்ட பாலூட்டி உயிரினங்களில் நான்கில் ஒன்று அழிந்து வருகின்றது. அதேபோன்று பறவைகளில் 8 வகைகளில் ஒன்றும் ஈருடக உயிரினங்களில் (நீர் மற்றும் நிலத்தில் வசிப்பவை) மூன்றிலொரு பகுதி வகைகளும் அழிந்து வருகின்றன. தாவரங்களின் வாழ்நாள் 70 சதவீதமாகக் குறைந்து வருகின்றது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனிதர்கள் சுற்றுச் சூழலை மிக அதிகளவில் மாசுபடுத்தலேயாகும்.

உலகம் வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் , சுற்றுச் சூழல் , சீர்கேடு மற்றும் காடுகளை அழித்தல் போன்றவற்றினாலேயே உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன. தாவரங்களின் வாழ்நாள் குறைவதால் உணவுப் பற்றாக்குறை கடுமையாக அதிகரிக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தடுக்காவிட்டால் மனித வாழ்க்கையின் இருப்பே அழிந்து விடுமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் அழிவை நோக்கிய பார்வையில் பல அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இவ்வமைப்புகள் மக்களை ஒன்றிணைத்து அவர்களை புனித ஆத்மாவாக்கி புதிய யுகத்திற்கு தயார் செய்யும் ஓர் உண்ணத பனியை மேற்கொள்வதாக காட்டிக் கொள்கின்றன. புதிய யுகம் தோன்றும் போது இவ்வியக்கத்தால் புனிதமாக்கப்பட்டவர்கள் மட்டும் புத்துயிர் பெற்று எழுவார்களாம். இது மரண பயத்தைக் காட்டி மனிதனை மிரட்டும் வழி. கடவுள் எனும் பிம்பத்தின் போர்வையில் 'ஏதோ பண்ணும்' யுக்தி.

சரி அப்படி என்றால் கடவுள் என்ன செய்யப் போகிறார். ஒரு நெருப்புப் பிண்டம் சிதறி விழுகையில் பெற்ற தாய் தன் பிள்ளையையும், கணவன் மனைவியையும் விட்டு ஓடலாம். நம்பிக்கைக்குறிய மிக நெருக்கமானவர்களே கைவிடும் சமயத்திலாவது கடவுள் தோன்றுவாரா?

இயற்கையின் சீற்றம் பல வழிகளில் ஏற்படலாம். இன்று வரையிலும் பல முறை உலக மக்கள் உலகின் கடைசி தினம் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிரட்டப்பட்டிருக்கிறார்கள். The Millerites இயக்கத்தை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இங்கிலாந்து தேசத்தின் விவசாயி ஒருவர் 23 ஏப்ரல் 1843-ஆம் ஆண்டு உலகம் அழியும் என கணிப்பு கூறினார். இவரின் "இவ்வற்புத' சிந்தனைக்கு தோன்றிய இயங்கமே The Millerites.

புதிய நூற்றாண்டான் 2000த்தாம் ஆண்டின் முதல் நாளின் வரவேற்பு எப்படி இருந்தது. Y2K எனும் அறிவியல் பிரச்சனையில் பீதியாகி பய உணர்வொடு வரவேற்றோம். புதிய ஆண்டின் மலர்ச்சி மந்தமாகி போனது. நிச்சயமாக உலகம் அழியும் என சொல்லிக் கொண்ட அமெரிக்க பாதரியார் ஒருவர் அப்படி நிகழாத்தை கண்ட மறு நிமிடம் தற்கொலை செய்துக் கொண்டு மாண்டு போனார்.

1806-ஆம் வருடம் தனது கோழி முட்டையில் ஏசு கிருஸ்து வருகிறார் எனும் எழுத்துகள் பொறித்ததாகவும் அதுவே உலகம் அழியும் அறிகுறியென புரளிகள் கிளம்பின. இதே போல் 1800 களிலும் 1900களிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் உலகம் இன்னமும் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.

நாங்களும் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என தெரியாது முழிக்க வேண்டி இருக்கிறது. மக்களை பொறுத்தவரை எல்லாவற்றிக்கும் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அதாவது 2012 வரை பொறுத்திருந்து பார்ப்பதுதான் அந்த வழி.

  • தொடங்கியவர்

அண்டத்தை பற்றிய எங்கள் அறிவு

யுகம் என்பது இந்துக்களின் கால அளவை முறையில் காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:

* கிருதயுகம் * திரேதாயுகம் * துவாபரயுகம் * கலியுகம்

என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

" கலியுகம் மட்டுமின்றி பல்வேறு ஜோதிடத்தில் யுகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற 4 யுகங்கள் பற்றியும் பண்டைய ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.

இதில் கிருகயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் என்றும், திரேதாயுகத்திற்கு 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் என்றும், துவாபரயுகத்திற்கு 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள், தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் எனறும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகத்தில் 5,110 ஆண்டுகளே முடிந்துள்ளது.

மேற்கூறிய 4 யுகங்களிலும் கலியுகம் மிகச் சக்தி வாய்ந்தது. கலி என்றால் சனி. கலியுகம் என்றால் சனியுகம் என்றும் நம்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடந்து வரும் அசம்பாவிதங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பூமிப்பகுதியை கடல் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். அடுத்தடுத்து சுனாமி வரும்.

கலியுகத்தில் மக்களின் மனநிலை எப்படியெல்லாம் மாறும், மனசாட்சி இல்லாமல் ஒருவரை ஒருவர் அழித்து வாழ்வது என்பது பற்றி சில வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. " - ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

2012. The prediction that the world will end in 2012 is false, according to Enlightened Master, Dr. Acharya Yogeesh

  • 4 months later...
  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.