Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம் - குமுதம் ரிப்போர்ட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26, போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு பிரபாகரனும்,புலிகளும் அடியோடு அழித்தொழிக்கப்-பட்டதாகக் கருதப்படும் நிலையில்,தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் இந்த இரு தினங்களும் சிறப்பாகவே கடைப்பிடிக்கப்பட்டன.

கடந்த 26-ம்தேதி ஈரோடு, திருச்சி போன்ற இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தும், டிஜிட்டல் பேனர்களைச் சேதப்படுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காங்கிரஸார் பதிவு செய்தனர். சேலம் போன்ற இடங்களில் காங்கிரஸாருக்கு இந்த சிரமத்தைத் தராமல் போலீஸாரே அந்த கிழிப்பு, உடைப்பு பணிகளைப் பார்த்துக் கொண்டனர். ஆனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் எந்த இடையூறுமின்றி வெகு சிறப்பாக பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடி மாவீரர் நாளை அஞ்சலி தினமாக கடைப்பிடித்து அசத்தியிருக்கிறது பெரியார் திராவிடர் கழகம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கொளத்தூர் பகுதியில் கும்பாரப்பட்டி என்ற சிறு கிராமத்தில் விடுதலைப்புலிகள் தங்கியிருந்து அங்கே ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் இந்தப் போர்ப் பயிற்சி 84-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி நவம்பர் 86-ம் ஆண்டு வரை நடந்தது.

புலிகள் தங்கி போர்ப்பயிற்சி எடுத்ததால், அந்தக் கிராமத்தவர்கள் தங்கள் கிராமப் பெயரை புலியூர் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு புலியூர் எனப்படும் கும்பாரப்பட்டியில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருப்பதைக் கேள்விப்பட்டு நாமும் புலியூருக்கு விரைந்தோம்.

கொளத்தூரிலிருந்து சின்னதண்டா செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புலியூர். 27-ம்தேதி நாம் அங்கு சென்றபோது கிராமமே புதுப்பொலிவுடன் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் புலிகளின் இயக்க நிறங்களான மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் காகிதத் தோரணங்கள், கொடிகள்.

ஊர் பேருந்து நிலையத்தில், புலிகளால் கட்டித் தரப்பட்ட பயணிகள் நிழற்கூடம் ஒன்று காட்சியளித்தது. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் கொந்தளித்த கொளத்தூர் காங்கிஸார், புலிகள் மீது கோபம் கொண்டு அந்த நிழற்கூடத்தை அப்போது அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த நிழற்கூடத்தைச் செப்பனிட்டு, புலிகளின் தளபதியாக அங்கு தங்கியிருந்த பொன்னம்மானின் பெயரை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள் மக்கள். புது வண்ணம் பூசப்பட்டிருந்த அந்த நிழற்கூடத்தின் முன்னால்தான் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நிழற்கூடத்துக்கு நேர் எதிரே புலிகள் பயிற்சி பெற்ற இடத்துக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் தொடக்கம் `புலியூர் பிரிவு' என்ற பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்ப்பலகை திறக்கப்பட தயாராக இருந்தது.

கறுப்பு உடையணிந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு கூட்டம் கூட்டமாக தனி வாகனங்களில் வரத்தொடங்கினர். சுமார் நானூறுக்கும் அதிகமானோர் வந்து குவிந்தனர். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், அவருடைய சகோதரர் பழனிசாமி இந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். புலிகள் பயிற்சி பெற்ற காலத்தில் அவர்களுக்கு உதவிய முத்துசாமி என்பவர் புலியூர் பிரிவு பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.

அதன்பின் தமிழீழ மாவீரர்நாள் பேனருக்கு முன்பு பெரியார் திராவிடர் கழக இளைஞர்கள் இருவர் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாகக் கலைந்து சென்றனர். அங்கு ஒரு போலீஸ்காரர் கூட நம் கண்ணில் தட்டுப்படவில்லை. துளி அசம்பாவிதமோ, இடையூறோ இன்றி திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

முத்துசாமியிடம் பேசியபோது பல சுவையான தகவல்களைத் தந்தார் அவர்.

``புலிகள் இங்கே மூன்றாண்டு காலம் போர்ப் பயிற்சி மேற்கொண்ட காலத்தில் அவர்கள் பேசிய தூய தமிழால் கவரப்பட்டு இன்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் தூய தமிழில் பேசி வருகிறார்கள். புலிகள் இயக்க இளைஞர்கள் எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளவர்களாக நடந்து கொண்டனர். புலிகளின் மருத்துவ முகாமே எங்கள் ஊர் மக்களுக்கான மருத்துவ முகாமாகவும் பயன்பட்டது. அவர்கள் பயன்படுத்திய ஜீப்பே எங்கள் மக்களின் போக்குவரத்து வாகனமாக உதவியது. நெருங்கிய உறவினர்களைப் போல எங்கள் நெஞ்சத்தில் பசங்கள் (புலிகளை இங்குள்ளவர்கள் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) ஒட்டிக்கொண்டார்கள். புலிகள் இருந்த காலத்தில் திருட்டுப் பயமே இருக்கவில்லை.

மொத்தம் மூன்று குழுக்களாக அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். முதல் குழுவுக்குத் தலைமையேற்றுப் பயிற்சி தந்தவர் பொன்னம்மான். அவருடன் வந்திருந்த புலேந்திரன் ஈழப் போரில் உயிர் நீத்ததைக் கேள்விப்பட்டு எங்களது நெருங்கிய உறவினரை இழந்தது போல கதறியழுதோம்.

பொன்னம்மான் சாதாரணமாக தரையில்தான் பசங்களோடு பசங்களாகப் படுத்துறங்குவார். மூன்று முறை இந்தப் பயிற்சியை மேற்பார்வையிட வந்திருந்த புலிகள் தலைவர் தம்பி பிரபாகரனும்கூட தரையில்தான் படுத்துறங்கினார். அவர்கள் எங்கள் தலைவர் கொளத்தூர் மணியை `அண்ணன்' என்றே பாசத்துடன் அழைத்து வந்தனர். பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய அவர்களை கலங்கிய கண்கள், கனத்த இதயத்துடன் வழியனுப்பிவைத்தோம்'' என்ற முத்துசாமி, புலிகள் தங்கியிருந்து பயிற்சியெடுத்த வனப்பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார். தற்போது வனத்துறை வசமிருக்கும் அந்தப் பகுதியில் புலிகள் கட்டியிருந்த ஒரு தண்ணீர்த் தொட்டியும், இரண்டு சிறு காவல்சுவர்களுமே அவர்களது நினைவைச் சொல்ல மிச்சமிருந்தன.

புலியூரில், மாவீரர் தின வீரவணக்க நிகழ்ச்சி நடந்த அதே நாளில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் `கரும்புலி மில்லர் நினைவரங்கம்' என்ற சிறிய ஹால் ஒன்றை கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆகியோர் திறந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய கொளத்தூர் மணியிடம் பேசினோம். "புலியூர் பகுதி புலிகளின் வீரவரலாற்றில் இடம்பிடித்த ஒரு முக்கிய பகுதி. இங்கு 34 மாதங்களில் ஏறத்தாழ 2000 புலிகள் பயிற்சி பெற்ற போதிலும் ஒருதுளி அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை'' என்றார் கொளத்தூர் மணி.

நாம் அங்கிருந்து திரும்பும்போது மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவு தின போஸ்டர்கள், கட்டப்பட்டிருந்த பேனர்களை அகற்றச் சொல்லி பெரியார் திராவிடர் இயக்கத்துப் பிரமுகர்களிடம் போலீஸார் தூதுவிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசிவரை பெரியார் தி.க.வினர் அதற்கு அசைந்து கொடுக்கவேயில்லை.

படங்கள்: ஏ.ஏ.ராஜ்

- வை. கதிரவன்

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

இந்நிகழ்வின் அன்றே நமது மீனகம் தளத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது.

எமது தளம் முடக்கப்பட்டுவிட்டதால் காணொளிகளை: My link

மேலும் காணொளிகளை ஏற்ற இயலா நிலையில் எமது செயல்பாடுகள் தடைப்பட்டுள்ளது.

--- மீனகம்

எமக்கு ஆதரவளிக்க: My link

www.meenakam.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தமிழக உறவுகளின் உணர்வுகளை ஒப்பிடும் போது, ஈழத்தில் பிறந்த சிலரை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. புலிகள், தமிழீழம் என்று கதைக்கும் பலர் புலம் பெயர்ந்த நாடுகளில் மாவீரர் நிகழ்வுகளில் இம்முறை கலந்து கொள்ளவில்லை. நண்பரின் பிள்ளைக்கு பிறந்த நாள் என்றும், நத்தார் கொண்டாடத்துக்கு போக வேண்டும், இதனால் வரமுடியவில்லை என்றும் சொல்கிறார்கள்

அற்புதம்.

தமிழீழத்தில் நடைபெறாத குறையை தமிழக தமிழர் தீர்த்துவிட்டனர்.

மாவீரர் கனவை நெஞ்சினில் சுமந்து நிறைவேற்றுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

புலியூர் கிராமத்து மக்களினதும் , பெரியார் திராவிடர் கழகத்தினருதும் உணர்விற்கு தலை வணங்குகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இன உணர்வு இங்க இருக்கிற மரை கழன்ற மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு இல்லை. எதுக்கெடுத்தாலும், புலிகள் அப்படிச் செய்தார்கள், இப்படிச் செய்தார்கள், மகிந்த மிகவும் நல்லவன், டக்கிளஸ் மக்களுக்காகவே பாராளுமன்றம் போகிறான், கருணாவைப் போல நல்ல ஆள் கிடையாது என்று அழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இவர்கள் போன்றோரின் மாற்றங்களை வரவேற்று, உணர்வுகளை மதித்து வணங்கும் அதேவேளையில், இம்மக்களின் எழுச்சி ஏன் வாக்குகளில் தமிழனுக்கு ஆதரவாக எதிரொலிக்கவில்லை என்பது ஏமாற்றமாகவும் புதிராகவும் உள்ளது...இவர்கள் சிறுபாண்மையினரா.. இல்லை, இவர்களை போலவே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளும் சூழலுக்குத் தக்கவாறு மாறுமோ?

இம்மாற்றம் வெளிப்படையாகத் தெரிய ஈழமக்கள் கொடுத்த விலை மிக மிக அதிகம்...எது எப்படியாகினும் இவை வரவேற்கத்தக்க மாற்றமே! வணங்குகிறேன்.

Edited by ராஜவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.