Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் பிடித்த பாடல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பிறக்கும் போதும்

படம்:கவலையில்லாத மனிதன்

பாடியவர்: ஜோசப் பிச்சை சந்திரபாபு.

http://www.youtube.com/watch?v=75Lp6OiRl18

  • Replies 131
  • Views 19.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

மதுரையில் பறந்த மீன் கொடியை , உன் கண்களில் கண்டேனே.....

படம்: பூவா தலையா.

இந்தப் பாடல்கள் பிளாஷ் பிளேயர்-இல் இருப்பதால் இங்கே எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. அதனால் அதன் link மட்டும் இணைத்துள்ளேன்.

கவலைகள் கிடக்கட்டும்

இளமை பொழுதிருக்கும்

வளர்ந்த கலை மறந்துவிட்டாள்

உன் அழகைக் கன்னியர்கள்

உள்ளம் என்பது ஆமை

துள்ளாத மனமும் துள்ளும்

Edited by குட்டி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

இசைகேட்டால் புவி அசைந்தாடும்......

பார்த்தேன்.... சிரித்தேன்..... பக்கம் வர துடித்தேன்......

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: யார் அந்த நிலவு

பாடியவர்: ரி.எம்.எஸ்

இசை: விஸ்வநாதன் -ராமமூர்த்தி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-

-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: போலீஸ்காரன் மகள்

பாடியவர்கள்: P.B.சினிவாஸ் & பி.சுஷீலா

http://www.youtube.com/watch?v=bFkT7ZZ_Bt8

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே

என் தெய்வத்தை காண்பாயோ...

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள்

உன் மனதுக்கு கரும்பாவாள்

வண்ண மலர்களில் அரும்பாவாள்

உன் மனதுக்கு கரும்பாவாள்

இன்று அலை கடல் துரும்பானாள்

என்று ஒரு மொழி கூறாயோ...

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

நாடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்

நாடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்

அவள் விடிந்த பின் துயில்கின்றாள்

எனும் வேதனை கூறாயோ...

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

என் கண்ணுக்குக் கண்ணாகும்

இவள் சொன்னது சரிதானா....

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

தன் கண்ணனை தேடுகிறாள்

மன காதலை கூறுகிறாள்

தன் கண்ணனை தேடுகிறாள்

மன காதலை கூறுகிறாள்

இந்த அண்ணனை மறந்து விட்டால்

என அதனையும் கூறாயோ..

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

என் கண்ணுக்கு கண்ணாகும்

இவள் சொன்னது சரி தானா...

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

படம்: வீரத் திருமகன்

பாடல்: ரோஜா மலரே ராஜகுமாரி

பாடியவர்கள்: P.B.சீனிவாஸ் & P.சுசீலா

http://www.youtube.com/watch?v=dBR7lTvlaSw&feature=related

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா .. ஹாய்

வருவதும் சரிதானா

உறவும் முறை தானா

பெண்: வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் கணம் அன்றோ

பேதம் இல்லை அன்றோ

காதல் நிலை அன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகிழ் காதல் தலைவன்

உண்மை இதுவந்ட்ரோஒ ... ஹாய்

உலகின் முறை அன்றோ

என்றும் நிலை அன்றோ

--மியூசிக்-- --மியூசிக்--

ஒயே ஒயே ஹோ ....

ஹா ஹா ஹா...

ஆண்: வானத்தின் மீது பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலர் அன்றோ

பெண்: அஹ் ஹா ஹா......

ஆண்: ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலர் அன்றோ

பெண்: மன்னவர் நாடும் மணி முடியும்

மாளிகை வாழும் தோழியரும்

பஞ்சனை சுகமும் பால் பழமும்

படையும் உடையும் சேவர்களும்

ஒன்றை இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மரயாதோ

ஆண்: ஹ்ம்ம் ம்ம் .....

பெண்: ஒன்றை இணையும் காதலர் முன்னேகானல் நீர் போல் மரயாதோ

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா .. ஹாய்

வருவதும் சரிதானா

உறவும் முறை தானா

--மியூசிக்-- ஹோ ஹோஹோ ஹோ ஹாய்... ஹ ஹ ஹா ,.....

ஆண்: பாடும் பறவை கூடங்களே

பச்சை ஆடை தொடங்கலே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஆண் & பெண்: ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்

வழிய பாடல் பாடுங்களேன்

ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்

வழிய பாடல் பாடுங்களேன்

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி

பெண்: ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ஆண் & பெண்: உண்மை இதுவன்றோ ஹாய்

உலகின் முறை அன்றோ

என்றும் நிலை அன்றோ

ஆஹா ஹா ஹா ஹ ஹா ஹா........

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

.

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கன்னி நதியோரம்

பாடியவர்கள்:T.M.S ,P. சுசிலா

படம்: நீர்குமுழி

http://palanikumar.com/albsongs/a13/10.mp3

 

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

.

நல்லதொரு இனிய பாடலை இணைத்திருக்கிறீர்கள் சிறியண்ணா. இந்தப் பாடலை இதற்கு முன்னரும் கேட்டிருக்கிறன், காட்சியைப் பார்த்த பின்னர் தான் தெளிவாகப் புரிந்தது இது ஒரு சோகப்பாடல் என. :(

  • கருத்துக்கள உறவுகள்

எனது தகப்பனார் எமது ஊரில் ஒரு பிரபலமான பாட்டுக்காறர்

நான் 5 பெண்களுக்கு பின் பிறந்தவன்

அவர் என்னை மடியில் வைத்தபடி இப்படி பாடுவார்

அப்பொழுது அது எனக்கு புரியவில்லை

இன்று புரிகிறது

ஆனால் அவர் இல்லை

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

நான் பிறந்த காரணத்தை நானே அறியும்முன்னே

நீயும்வந்து ஏன் பிறந்தாய் என் செல்ல மகனே.....

அந்த பாடலை எவராவது தேடி போடமுடியுமா....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இனிய பாடலை இணைத்திருக்கிறீர்கள் சிறியண்ணா. இந்தப் பாடலை இதற்கு முன்னரும் கேட்டிருக்கிறன், காட்சியைப் பார்த்த பின்னர் தான் தெளிவாகப் புரிந்தது இது ஒரு சோகப்பாடல் என. :(

காவாலி நீங்கள் சோகப் பாடல்களை விரும்பி கேட்பீர்களா?

கீழே விசுகு கேட்ட பாடலும் ஒரு சோகப்பாடல் தான்.

எனது தகப்பனார் எமது ஊரில் ஒரு பிரபலமான பாட்டுக்காறர்

நான் 5 பெண்களுக்கு பின் பிறந்தவன்

அவர் என்னை மடியில் வைத்தபடி இப்படி பாடுவார்

அப்பொழுது அது எனக்கு புரியவில்லை

இன்று புரிகிறது

ஆனால் அவர் இல்லை

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

நான் பிறந்த காரணத்தை நானே அறியும்முன்னே

நீயும்வந்து ஏன் பிறந்தாய் என் செல்ல மகனே.....

அந்த பாடலை எவராவது தேடி போடமுடியுமா....?

விசுகு, இதோ நீங்கள் கேட்ட பாடல். உங்களது தந்தையார் சங்கீத மேடைப்பாடகரா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

எனது தகப்பனார் ஒரு பக்திப்பாடகர்

அவரை பாட்டுக்காற ........ என்று சொன்னால்தான் ஆட்களுக்கு தெரியும்

நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம்வரை...

ஆமாம்

கண்கள் பனிக்கின்றன

அவருக்கு எல்லா நாடும் காட்டி...

அவரது கடைசி ஆசை தன் மண்ணிலே கண் மூடி....

எனக்கு வாழ்க்கையில் எந்த குறையுமில்லை எனவே எனது மரணவீட்டை திருமணவீடுபோல் நடத்தவேண்டும்....

தனது மூத்தமகனின் கொள்ளியில் வேகவேண்டுமென்ற எல்லா ஆசைகளையும் நிறைவேற்றினோம்.

நல்லூரில் இருந்து சுடலைவரை மலர்தூவி அனுப்பி வைத்தோம்

இருந்தாலும் மீண்டும் காணமுடியாத்துயரம் அனுபவிப்பவர்களுக்கு புரியும்.

இன்னுமொரு பாடல் பாடுவார்

நாங்கள் ஆண்பிள்ளைகள் 3 பேர்

எனக்கு மாமன்மார் 3 பேர்

அதனால்

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்துவந்தோம்ஒண்ணுக்குள் ஒன்றாக

அன்பாலே இணைந்துநின்றோம்....

மாமன் மூவரடா ....?

எனக்கு கூச்ச சுபாசம் அதிகம்

ஆனால் சிறுவயதில் நன்றாக பாடுவேன்

அதனால் எனது கூச்ச சுபாசம் போகவேண்டும் என்பதற்காக எங்கு விழாக்களோ.. வாகனத்தில் பயணித்தாலோ..

பாடும்படி வற்புறுத்துவார்

ஒரு நாள் நான் பாட மறுத்தபோது அடித்துவிட்டு பாட சொன்னார்

நான் பாடியபாடல்

சோதனைமேல் சோதனை போதும் எடாசாமி

வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி...

இன்றிலிருந்து என்னை பாடச்சொல்லி கேட்பதில்லை

இதை எல்லோரிடமும் சாகும்வரை சொல்லுவார்

ஆனால் அன்று பாடாது விட்ட எனது குரல்

எனது பருவ மாற்றங்களுடன் முழுவதுமே பாழடைந்து விட்டது

இன்று நினைத்து ஏங்கும் நிலையாக இருக்கிறது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி நீங்கள் சோகப் பாடல்களை விரும்பி கேட்பீர்களா?

இல்லை சிறியண்ணா சோகப்பாடல்களும் பிடிக்கும் மற்றப் பாடல்களும் பிடிக்கும். உங்களுக்காக இன்று தேடி எடுத்த ஒரு பழைய பாடல் ஒன்றை இணக்கிறேன் சிறியண்ணா. :(

ஆகா இன்ப நிலாவினிலே!

http://www.youtube.com/watch?v=YAmoe3heG-A

  • கருத்துக்கள உறவுகள்

விசு ..உங்கள் இளமைகால் நினைவுகளை மீட்டும் பதிவு உள்ளத்தை தொட்டு செல்கிறது. தந்தை பாசம் என்று மறந்த நாட்களை மீட்டுகிறது.

Edited by நிலாமதி

http://odeo.com/show/7899703/1181981/download/MuththukkuMuththaaka.mp3

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக

அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக

(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை

தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை

தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி

தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி

(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்

அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்

சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை

ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை

(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா

நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா

ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா

நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா

(முத்துக்கு...)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் பாடலுக்கு

இங்கு தொடர்ந்து எழுதுவதை சிலர் நான் சொந்தப்புராணம் பாடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடும்

இப்பாடல் 100 வீதம் என் வாழ்க்கையோடு ஒட்டியது

எனவே

இதற்கு பதிலை நான் வேறு ஒரு திரியில் எழுதுகின்றேன்

படம்: படிக்காத மேதை

பாடல்: ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா...

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள்

இதையும் என் தகப்பனார் பாடுவார்

ஆனால் அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை என்று வரும்

அதனால் தான் அதை நான் இங்கு கேட்கமால் தவிர்த்தேன்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம்வரை...

ஆமாம்

கண்கள் பனிக்கின்றன

அவருக்கு எல்லா நாடும் காட்டி...

அவரது கடைசி ஆசை தன் மண்ணிலே கண் மூடி....

எனக்கு வாழ்க்கையில் எந்த குறையுமில்லை எனவே எனது மரணவீட்டை திருமணவீடுபோல் நடத்தவேண்டும்....

தனது மூத்தமகனின் கொள்ளியில் வேகவேண்டுமென்ற எல்லா ஆசைகளையும் நிறைவேற்றினோம்.

நல்லூரில் இருந்து சுடலைவரை மலர்தூவி அனுப்பி வைத்தோம்

இருந்தாலும் மீண்டும் காணமுடியாத்துயரம் அனுபவிப்பவர்களுக்கு புரியும்.

------

விசுகு, நீங்கள் உங்கள் தந்தையாருக்கு செய்யும் கடமைகளை, நிறைவாகவே செய்துள்ளீர்கள்.

இப்படியாக எத்தனை பிள்ளைகள்...... வசதி இருந்தும், தங்கள் பெற்றோருக்கு செய்ய முன் வருவார்கள்.

அல்லது , இப்படியான வசதி கிடைக்காமல் எத்தனை பிள்ளைகள் ஏங்கி இருப்பார்கள். ( விசா பிரச்சினை, பயணம் செய்ய உடல் நலம் இடம் கொடுக்காமை போன்றவை )

தந்தையாரது மரண ஊர்வலத்தையும் நல்லூரிலிருந்து கோம்பயன் மயானம் வரை அவர் விரும்பியபடி சிறப்பாக செய்துள்ளீர்கள்.

அவர் ஆசைப்பட்ட அத்தனையையும் நிறைவேற்றி வைத்த பின் , அவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும். அவர் உங்களை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். கவலைப் படாதீர்கள் விசுகு.

இல்லை சிறியண்ணா சோகப்பாடல்களும் பிடிக்கும் மற்றப் பாடல்களும் பிடிக்கும். உங்களுக்காக இன்று தேடி எடுத்த ஒரு பழைய பாடல் ஒன்றை இணக்கிறேன் சிறியண்ணா. :lol:

ஆகா இன்ப நிலாவினிலே!

காவாலி, ஈழமகள் உங்கள் பாடல் இணைப்பிற்கு மிக்க நன்றி.

சில பழைய தமிழ் பாடல்களை தேடி எடுப்பதில் சிரமமாக உள்ளது.

நீங்கள் எங்காவது பழைய பாடல்களை கண்டு பிடித்தால் இணைத்து விடுங்கள்.

நுணாவிலான், குட்டி போன்றவர்களும் எங்காவது பழசு தட்டுப்பட்டால் இணைத்து விடுவார்கள்.

படம்: ஆயிரத்தில் ஒருவன்

பாடல்: ஓடும் மேகங்களே....

http://www.youtube.com/watch?v=DAleVIM18Cw

படம்: என் அண்ணன்

பாடல்: கடவுள் ஏன் கல்லானான்....

http://www.youtube.com/watch?v=KkM_Zhhepi0

கடவுள் ஏன் கல்லானான் ....

கடவுள் ஏன் கல்லானான் -

மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை

கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -

அது நீதி தேவனின் அரசாட்சி

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -

மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி

அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

சதி செயல் செய்தவன் புத்திசாலி -

அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி

உண்மையை சொல்பவன் சதிகாரன்

உண்மையை சொல்பவன் சதிகாரன் -

இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -

இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, நீங்கள் உங்கள் தந்தையாருக்கு செய்யும் கடமைகளை, நிறைவாகவே செய்துள்ளீர்கள்.

இப்படியாக எத்தனை பிள்ளைகள்...... வசதி இருந்தும், தங்கள் பெற்றோருக்கு செய்ய முன் வருவார்கள்.

அல்லது , இப்படியான வசதி கிடைக்காமல் எத்தனை பிள்ளைகள் ஏங்கி இருப்பார்கள். ( விசா பிரச்சினை, பயணம் செய்ய உடல் நலம் இடம் கொடுக்காமை போன்றவை )

தந்தையாரது மரண ஊர்வலத்தையும் நல்லூரிலிருந்து கோம்பயன் மயானம் வரை அவர் விரும்பியபடி சிறப்பாக செய்துள்ளீர்கள்.

அவர் ஆசைப்பட்ட அத்தனையையும் நிறைவேற்றி வைத்த பின் , அவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும். அவர் உங்களை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். கவலைப் படாதீர்கள் விசுகு.

.

நன்றி சிறி

தங்களது ஆறுதலான அரவணைப்புக்கு....

நானும் இதை எழுதிவிட்டுத்தான் யோசித்தேன்

எல்லாம் இருந்தும் இறுதி அஞ்சலிக்கு போகமுடியாதவர்கள்

ஏன் பல காலத்துக்கு பின்தான் அவர்களுடைய இறப்புக்களை அறிந்தவர்கள் எம்முள் எத்தனையோ பேர் உள்ளனர்

அவர்களது மனம் நோக எழுதிவிட்டேனா என்று......

அவர்கள் என்னை மன்னிப்பார்களாக..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் பாடலுக்கு

இங்கு தொடர்ந்து எழுதுவதை சிலர் நான் சொந்தப்புராணம் பாடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடும்

இப்பாடல் 100 வீதம் என் வாழ்க்கையோடு ஒட்டியது

எனவே

இதற்கு பதிலை நான் வேறு ஒரு திரியில் எழுதுகின்றேன்

விசுகு, அந்தப்பாடலுடன் கூடிய சொந்த அனுபவங்களை ...... உங்களையோ, குடும்பத்தாரையோ .......

பாதிக்காத வண்ணம் கருத்தை பகிர்வதில் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என நம்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.