Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொன்றவனையே காப்பாற்ற எண்ணும் ஈ(ழ)னத்தமிழர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chemmani_landscape2.jpeg

செம்மணி.

ஈழக்களத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு கட்டங்கள் முக்கியமான கட்டங்கள். அவை இரண்டும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டவை. ஒன்று சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்காலத்திலும் (95-2005) மற்றையது தற்போதைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சந்திரிக்காவின் வெளித்தோற்றம் சமாதான தேவதை. உள்நோக்கம் போர், தமிழ் இன அழிப்பு.

மகிந்தவின் வெளித்தோற்றம் உள்நோக்கம் எல்லாமே போர் மற்றும் இன அழிப்பு.

இவர்களின் நோக்கங்களை நிறைவு செய்ய எப்போதும் தயார் நின்றவர்களில் ஒருவர் தான் சரத் பொன்சேகா.

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தான் யாழ்ப்பாண இடம்பெயர்வு என்ற பெரிய இடம்பெயர்வை தமிழ் மக்கள் அனுபவித்தனர். அது சந்திரிக்கா ஏவிவிட்டிருந்த போர் காரணமாக நிகழ்த்தப்பட்டிருந்தது.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் இராணுவத்தலைமையில் இருந்து கொண்டு மிகப்பெரிய மக்கள் அவலத்தை ஏற்படுத்தியவர் சரத் பொன்சேகா. அதுமட்டுமன்றி உலகமே அச்சமுறும் வகையில் இருந்த செம்மணிப் புதைகுழிகளின் சூத்திரதாரியும் இவரே. அப்புதைகுழிகள் பல நூறு அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளின் சமாதிகளாக மாற்றப்பட்டுவிட்டதுடன் அவற்றிற்கான விசாரணைக்குரல்களும் ஒலித்து அடங்கிவிட்டன.(ஏன் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அந்தப் புதைகுழிகளை மறந்தே விட்டனர். இன்றேல்.. சிங்களப் படைகள் சிங்களத்திகளை வைத்து ஆட்டும் இடுப்பாட்டத்தில் எடுப்பட்டு திரிவார்களா என்ன..??!)

அதன் பின்னர் சரத் பொன்சேகாவின் வெறியாட்டத்திற்கு இடமளித்தவர்களில் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் அடங்குவர்.

சன்னதமாக நின்று மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தமிழர்களின் பிணங்களை எண்ணிக் கணக்கிடுவதையே கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 2009 வரை தொழிலாகச் செய்து வந்தார் சரத் பொன்சேகா.

அவரின் இராணுவத்தலைமையின் கீழ் சிங்களப் படைகள் மிக மோசமான போரியல் விதிமுறை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் செய்துமுடித்துவிட்டு இருந்த நிலையில்..

மகிந்தவின் சர்வதேச அரசியல் அணுகுமுறையால் தூர விலக்கப்பட்டு நின்ற மேற்குலக நாடுகளுக்கு அவற்றின் தேவையை சிறீலங்கா மீதான நெருக்கத்தை நெருக்கடியை அதிகரிக்க தேவைப்பட்டதே போர்குற்ற குற்றச்சாட்டுக்கள்.

போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் என்பது இராணுவத்தலைமைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. கலக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையும் அல்ல. ஆனால் அரசியல் தலைமைகளுக்கு அவை கதிக்கலக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சிறீலங்கா ஐநா வரை பல நாடுகளிடம் மன்றாடிக் கெஞ்ச வேண்டிய நிலை வந்த போதுதான் சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகள் கூடிப் பேசின.

அரசியல் எதிரிகளான ரணிலும் மகிந்தவும் சந்தித்துப் பேசினர். தேசிய அரசு அமைப்பது பற்றியது என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டனர். அப்பேச்சின் போது மகிந்த அரசு சிங்கள இனத்திற்கு பெற்றுத்தந்த போர் வெற்றியால் அதற்கு உலக அரங்கில் ஏற்பட்டிருந்த அழுக்கை கழுவிடலாம் சிறீலங்கா மீதான போர்க்குற்றங்களை தவிர்த்து பெருமளவு சர்வதேச நிதியை தம்வசப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டனர்.

இருந்தாலும் தேசிய அரசு அமைப்பது அரசியல் தலைமைகளை காக்கலாம். ஆனால் பெரும் மனித அவலங்களை தந்து தமிழர்களை ஒரு வகை பண்ணிய சிங்களப் படைகளையும் அதன் தலைமையையும் பாதுகாக்க போதுமானதல்ல என்பதை உணர்ந்து கொண்ட சிங்களப் பேரினவாதிகள்..

திட்டம்போட்டு ஆடும் நாடகத்தின் ஒரு பகுதியே சரத் பொன்சேகாவின் ஜனநாயக வேசமும் அரசியல் பிரவேசமும் ஜனாதிபதி ஆசையும்.

ஒரு வெளிப்படையான போர்க்குற்றவாளியை, சிங்கள பேரின தேசிய வாதியை சிங்களப் பேரினவாதத்தலைமைகள் மிக இலாவகமாக பாதுகாத்து அவருக்கு சிங்கள மக்களின் ஆதரவும் உண்டு ஏனைய சிறுபான்மை மக்களின் ஆதரவும் உண்டு என்பதைக் காட்டி உலகின் போர் குற்றங்களில் இருந்து அவரையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் உச்சக்கட்டமே இந்த சரத் - மகிந்த - ரணில் அரசியல் நாடகம்.

மகிந்தவோ.. சரத்தோ அல்லது கோத்தபாயவோ போர்க்குற்றவாளியாகி சர்வதேசக் கூண்டில் ஏறின் அண்டையில் இருந்து அவர்களுக்கு முண்டு கொடுத்த இந்தியா உட்பட்ட நாடுகளுக்கும் சிக்கல்கள் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் என்ற நிலையில் இந்தியாவும் இந்த பேரினவாதிகளின் நாடகங்களுக்கு கூட இருந்து சாமரம் வீசி வருகிறது.

அதுபோதாதென்று சொந்த இனத்தையே பதறத்துடிக்க கொன்றவனுக்கே வாக்கு வாங்கிக் கொடுக்கும் நிலைக்கு தமிழ் தேசியம் பேசிய கூட்டமைப்பை கொண்டு வந்துவிட்டுள்ளது இந்திய தேசம்.

சரத் பொன்சேகா.. ஒரு சிங்கள பேரினவாதி மட்டுமன்றி சிறீலங்கா சிங்களவர்களின் தேசம் என்பதை கொள்கையாகக் கொண்டவர். அப்படிச் சொல்லியேதான் போரும் செய்தவர்.

மகிந்தவும் சரத்துக்கு சளைத்தவர் அல்ல. அதனால் தான் இருவரும் ஓரணியில் நின்று மிகப்பெரிய இன அழிப்பை வெற்றிகரமாகச் செய்துமுடித்துவிட்டு இன்று ஜனநாயகப் போர்வைக்குள் புகுந்து கொண்டு சமாதான புருசர்களாக காட்சி தர கேட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் இந்த அவதாரங்களின் பின்னால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல அதற்கு முண்டுகொடுத்த அண்டை அயல் நாடுகளும் அருள் பெறுகின்றன என்பதுவே முக்கியமானது.

இந்த நிலையில் இந்த அவதாரங்களில் எதைப் பூஜிப்பதால் தாங்கள் தப்ப முடியும் என்று தமிழர்களையும் சிந்திக்கச் செய்துள்ளன இந்த அவதார புருசர்களை தோற்றுவித்துள்ள போர்க்குற்றத்தைச் செய்த அல்லது செய்யத் தூண்டிய உலக சக்திகள்.

இவற்றைப் பற்றிய எந்த விளக்கமும் இன்றி குறுகிய நலன்களில் கூட உத்தரவாதமற்ற வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்களின் வாக்குகளை பூஜைப்பொருட்களாக்கி தம்மை பூஜகர்களாக்கிக் கொண்டிருக்கின்றன தமிழ் தேசியக் கட்சிகள்.

இதுதான் தமிழினத்தை கடந்த ஆண்டில் இதே நாட்களில் கொன்றுகுவித்தவர்களுக்கு தமிழர்கள் காட்டும் செங்குருதிக்கடன் என்றும் அவை நம்ம வைத்துள்ளன..!

இதுதான் இந்த உலகின் ஜனநாயகத்தின் உண்மை முகமும் கூட..! தமிழர்களின் இயலாமைக்குள் இன்று பலரும் பயன்பெறும் நிலை கண்டு என்ன செய்ய முடிகிறது. வேடிக்கை பார்ப்பதை விட...??!

http://kundumani.blogspot.com/2010/01/blog-post_19.html

Edited by nedukkalapoovan

பேய்கள் கூட்டத்தில்

இரண்டு பெரிய பேய்கள்

சுடுகாட்டை ஆழ்வதற்கு

அதில் ஒரு பேயை தெரிவு செய்ய வேண்டும்

ஒரு பேய்க்கு நல்லூர் கந்தன் துணை

மற்றப் பேய்க்கு கதிர்காமக் கந்தன் துணை

இரண்டு பேய்களின் வாய்களிலும்

குருதியும் சதையும் பிரண்டுபோயுள்ளது

இன்னும் வாயை கழுவக்கூட இல்லை

சும்மா சொல்லக் கூடாது

எங்கள் சனத்தை இரண்டுபேரும்

நல்லாத் தின்றவங்கள்

ஏவறை விட்டபடி

வலம்வரும் பேய்களில்

எமக்குப் பிடித்த பேய் எது?

பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்?

இல்லை

தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது

அவரவர் ஜனநாயக உரிமை தானே?

நிச்சயமாக

எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும்

இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியாது.

நாம் விபரமானவர்கள்.

ராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகிவிட்டது

ஒரு பேய்க்கு

முள்ளிவாய்க்காலில் பொறுக்கிய எலும்புகளால்

மாலைகள் கட்டினால் பிடிக்கும்

மற்ப்பேய்க்கு செம்மணியில் பொறுக்கிய எலும்புகளால்

மாலைகட்டினால் பிடிக்கும்

இவ்வாறு பல்வேறு விதமான மாலைகள் கட்டுவதினூடாக

பேய்களை எமது வழிக்கு கொண்டுவரும் ராஜதந்திரம்

ஆனாலும் என்ன

காக்காவைப் போல் பிணம் தின்பதில் பேய்கள்

ஒற்றுமையாகவே இருக்கின்றது.

வணக்கம் நெடுக். எனக்கும் இந்தச் சந்தேகம் கன நாளா இருக்கு. ஆட்சிக்குப் போட்டி போடுற ரெண்டுபேரும் தமிழரின் பிரச்சனைக்கு எந்தத் தீர்வையும் தரப்போறதில்லை. தமிழரை இராணுவப்பிடிக்குள்ளதான் தொடர்ந்து வச்சிருக்க வேணும் என்றதில ரெண்டு பேரிட்டையும் எந்த மாற்றமும் இல்லை. வடக்குக் கிழக்கை இணைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றாங்கள்... அரசியல் கைதிகளாகவும், புலிகள் என்று தங்கடை இஸ்டத்திற்கு பிடிச்சு வச்சிருக்கிற சனத்திற்கும் எந்த விடுதலையையும், மனிதாபிமானத்தையும் காட்டுறதாத் தெரியேல்லை. எனக்கென்னமோ இந்த அரசியல் சூதாட்டத்தில தமிழரின் வாக்குகளைப் பிரிச்சுச் சிதறடிச்சு வெளி உலகத்திற்கு முன்னால தமிழருக்கு என்ற எந்தத் தீர்வுமே அவசியமில்லை என்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணப்போறாங்கள் இருந்து பாருங்கோ. எங்கட இனத்தை அழிச்சவங்களுக்கு வாக்களிச்சு எங்களைச் சிங்கள ஆட்சியாளர்கள் நல்லாத்தான் சனநாயக வழியில வாழ வச்சுக் கொண்டு இருக்கினம். இவங்கள் குறுக்கால போன புலிகள்தான் எங்களை இந்தக் கெதி படுத்திப் போட்டாங்கள் என்று தமிழ்ச்சனம் சொன்ன மாதிரி ஒரு வில்டப்பை இந்தத் தேர்தல் உருவாக்கப் போகுது. பாவம் எங்கட சனத்திற்கும் வழியில்லை. பேய் என்டு தெரிஞ்சு கொண்டே பிள்ளைக் கறி சமைக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படித் தான் காட்டுக் கத்தல் கத்தினாலும்,எவ்வளவு கட்டுரை எழுதினாலும் நாங்கள் சரத்திற்கு தான் வாக்களிக்போம்...எங்களுக்கு மகிந்தாவை பழி வாங்கினால் சரி...இறந்த காலத்தை பற்றியோ அல்லது எதிர் காலத்தை பற்றியோ யோசிக்க மாட்டோம்.

தேவை இல்லாமல் நாங்கள் வாக்கை போட இருக்கும் சரத்தை எதிர்த்து தேசிய துரோகியாக காணப்படுகிறார் நெடுக்கு...

2006 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் உரையில் சிங்கள சிந்தனை தத்துவத்தை சரியாக சொல்கிறார் தேசிய தலைவர்... அது இண்று வரைக்கும் அப்படியே நிலையாக இருக்கிறதே என்பதே உண்மையும் கூட...

உரையின் பாகம்..

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கிறன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச் சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது. ஆனால், சிங்களத் தேசத்திலே அதன் சிந்தனை உலகிலும் சரி, அதன் சமூக உலகிலும் சரி எதுவித மாற்றமும் நிகழவில்லை. சிங்களத் தேசம் புதிய காற்றைச் சுவாசித்து, புதிதாகச் சிந்திக்க மறுக்கிறது.

பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளாற் சிங்கள இனம் வழிதவறிச்சென்று தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்துகிடக்கிறது. இதனால், சிங்களப் பௌத்தப் பேரினவாதம் இன்றொரு தேசியச் சித்தாந்தமாகச் சிங்களத் தேசத்தில் மேலாதிக்கம் செலுத்திவருகிறது. இந்தக் கருத்தாதிக்கம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களிலிருந்து பத்திரிகைத்துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ புத்திஜீவிகளோ எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்கமுடியாதவாறு சிங்கள மூளையத்தை இந்தக் கருத்தாதிக்கம் சிறைப்பிடித்துவைத்திருக்கிறது.

பௌத்தப் பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மனவமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாகப் பொறித்துவிடப்பட்டிருக்கிறன. இதனால், சிங்களத் தேசம் போர்வெறிபிடித்துச் சன்னதமாடுகிறது போர்முரசு கொட்டுகிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நாகரீகமாக அமைதி வழியில் தீர்க்க அது முயற்சிக்கவில்லை. உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தித் தமிழரைப் பட்டினிபோட்டு அழித்தொழிக்கவே அது விரும்புகிறது. வன்முறைகளைத் தூண்டி, போரைத் தீவிரப்படுத்தி, தமிழரை அடிமைகொண்டு ஆழவே அது கங்கணங்கட்டி நிற்கிறது.

( இதுதான் சிங்களம்.)

  • கருத்துக்கள உறவுகள்

இதே அடிப்படையில் சிந்தித்தால்,

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுபோட்டது. அதனால் ஜப்பானியர்கள் இதுநாள்வரை அமெரிக்காவுக்கு எதிரிகளாகவே இருந்துகொண்டிருக்க வேண்டும்.

ஜேர்மனியில் நேசநாட்டுப் படைகளும், ரஷ்யாவும் இறுதிக்கட்டத்தில் பெரும் அழிவை மேற்கொண்டன. அதனால் ஜேர்மனி இப்போதும் எதிரியாக இருந்துகொண்டிருக்க வேண்டும்.

யூதர்களை லட்சக்கணக்கில் கொன்றது அப்போதைய ஜேர்மன் அரசு. அதனால் யூதர்கள் தற்போது ஜேர்மனியுடன் சகவாசமே வைத்துக்கொள்ளக் கூடாது.

சீக்கியர்களைக் கொன்றொழித்தது அப்போதைய இந்திய அரசு. அதனால் மன்மோகன்சிங் பதவியைத் துறக்க வேண்டும்.

சிங்களவன் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நண்பன் என்பதால் அவன் இந்தியாவை எதிர்க்க வேண்டும்.

மலையகத் தமிழர்களை மத்திய இலங்கைக்கு சப்ளை செய்ததால் சிங்களவன் இந்தியாவை மேலும் எதிர்க்க வேண்டும்.

இப்படி இன்னும் எத்தனையோ..? :lol:

இசை..

ஜேர்மானியர்களுக்கு பிரித்தானியர்களையும் அமெரிக்கர்களையும் கண்ணிலை காட்டக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா...??? பேளின் சுவரை இடித்து பனிப்போர் காலத்தில் கிழக்கு மேற்கு ஜேர்மனியை இணைக்கும் போது பிரித்தானியாவும் , அமெரிக்காவும் பெரும் விட்டு கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது... கிழக்கு ஜேர்மனி இரசியர்களிடம் இருந்து மேற்குடன் இனைய வைக்க மேற்கை சிறப்பாக கட்டி எழுப்ப வேண்டிய தேவையும் அமெரிக்கர்களுக்கு இருந்தது...

மற்றது நீங்கள் சொல்வது தூரத்தில் இருக்கும் இரண்டு நாடுகளுக்கு பொருந்தினாலும் அருகருகில் இருக்கும் இரு நாடுகளுக்கும், ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரு இனங்களுக்கும் பொருந்தாதவை....

  • கருத்துக்கள உறவுகள்

இசை..

ஜேர்மானியர்களுக்கு பிரித்தானியர்களையும் அமெரிக்கர்களையும் கண்ணிலை காட்டக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா...???

தெரியுமே.. என்னுடன் வேலைபார்க்கும் ஜேர்மன் இளைஞர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பிரித்தானியா, அமெரிக்கா, கனடாவையெல்லாம் ஒரு பிடி பிடிக்கத் தவறுவதில்லை. ஆனால் இதனாலெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் இருந்து புறப்பட்டு கனடாவுக்கு வருவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. உண்மையில், நேசநாட்டுப் படைகளுடன் இணைந்து பேரழிவை ஏற்படுத்திய கனடாவுக்கு அவர் வந்திருக்கவே கூடாது. :D

மற்றது நீங்கள் சொல்வது தூரத்தில் இருக்கும் இரண்டு நாடுகளுக்கு பொருந்தினாலும் அருகருகில் இருக்கும் இரு நாடுகளுக்கும், ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரு இனங்களுக்கும் பொருந்தாதவை....

என்னுடைய கருத்தின் பொருள், பழசையெல்லாம் மறந்துவிடு, மன்னித்துவிடு என்று சொல்வதல்ல. வன்மத்தை மனதுக்குள் வைக்க வேண்டும். வெளியுலகில் அரசியல் செய்ய வேண்டும். :lol:

ஒரு உதாரணத்துக்கு செம்மணிப் படுகொலைகளின் காரணகர்த்தாக்கள் தமக்குள்ளேயே அடிபடும் நிலை வந்தால் அதை ஊக்குவிக்கும் அரசியலை நாம் செய்யத் தங்கக் கூடாது என்றே சொல்ல வருகிறேன். அதற்காகவே ஜேர்மன், ஜப்பான் போன்ற உதாரணங்களைக் காட்டினேன்.

மேலும் ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரண்டு இனங்களுக்குப் பொருந்தாது என்கிற உங்கள் கூற்றையும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் 1915 இல் சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போது பொன். ராமநாதன் சிங்களத் தலைவர்களை ஆதரித்தார். இப்போது சிங்களவனும் முஸ்லிம்களும் சேர்ந்து நமக்கு அல்வா தருகிறார்கள். :(

ஜனநாயக அரசியலை நாம் எந்தக்காலத்திலும் சரிவர மேற்கொண்டதில்லை என்பதையே இது காட்டுது. :wub:

நமக்கு நண்பர்கள் எதிரிகளாவார்கள். எதிரிகளோ எதிரிகளாகவே இருப்பார்கள். :blink:

என்னுடைய கருத்தின் பொருள், பழசையெல்லாம் மறந்துவிடு, மன்னித்துவிடு என்று சொல்வதல்ல. வன்மத்தை மனதுக்குள் வைக்க வேண்டும். வெளியுலகில் அரசியல் செய்ய வேண்டும். :lol:

ஒரு உதாரணத்துக்கு செம்மணிப் படுகொலைகளின் காரணகர்த்தாக்கள் தமக்குள்ளேயே அடிபடும் நிலை வந்தால் அதை ஊக்குவிக்கும் அரசியலை நாம் செய்யத் தங்கக் கூடாது என்றே சொல்ல வருகிறேன். அதற்காகவே ஜேர்மன், ஜப்பான் போன்ற உதாரணங்களைக் காட்டினேன்.

செம்மணி படுகொலைகளின் நாயகன் ஜானகபெரேரா கூட ஒரு (மாகானசபை) தேர்தல் பிரச்சாரத்தின் போதுதான் கொல்லப்படுகிறார்...

நாங்கள் எந்த அரசியலையும் செய்ய முடியும்... அதுக்கும் முன்னர் நாங்கள் எங்களின் அரசியல் தளத்தை பலப்படுத்தி கொள்ள வேண்டும்... அப்படி பலப்படுத்தாமல் நடத்தும் எதுவுமே எதிரிக்கு மட்டுமே சாத்தியமாக அமையும்...

அப்படி நாங்கள் பலமான அரசியல் பின்புலத்தில் இல்லாது போனதால் தான் நாங்கள் செய்த அனைத்தையும் சிங்களம் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டும் உள்ளார்கள்... இந்த தடவையும் அப்படித்தான் அமையும் என்பதுக்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன...

மேலும் ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரண்டு இனங்களுக்குப் பொருந்தாது என்கிற உங்கள் கூற்றையும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் 1915 இல் சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போது பொன். ராமநாதன் சிங்களத் தலைவர்களை ஆதரித்தார். இப்போது சிங்களவனும் முஸ்லிம்களும் சேர்ந்து நமக்கு அல்வா தருகிறார்கள். :(

இஸ்லாமியர்கள் தமிழர்கள் மீது சிங்களவருக்கு இருக்கும் இனவெறியை தாங்கள் தள்ளி நிண்று தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துகிறார்கள் என்பதுதான் சரியானது... இஸ்லாமியர்களை சிங்களம் தமிழர்களுக்கு எதிராக பயன் படுத்தி கொள்கிறது ... நிலமை அவ்வளவே...

இண்று இதே இன வெறி இஸ்லாமியர்கள் மீது சிங்களவருக்கு இல்லை என்பது கூட சரியானது இல்லை...

ஜனநாயக அரசியலை நாம் எந்தக்காலத்திலும் சரிவர மேற்கொண்டதில்லை என்பதையே இது காட்டுது. :wub:

நமக்கு நண்பர்கள் எதிரிகளாவார்கள். எதிரிகளோ எதிரிகளாகவே இருப்பார்கள். :blink:

நாங்கள் ஜனநாயக ரீதியில் எல்லா வகையிலும் முயன்று இருக்கின்றோம் என்பதுதான் உண்மை... ஆனால் மேற்கு நாடுகள் நலன் கள் இலங்கை அரசிடம் இருந்தமையால் எங்களை ஆதரிக்க தலைப்படவில்லை என்பதே உண்மை... இண்று அதே நாடுகள் தங்களுக்கு சாதகமான தலைமை இலங்கையில் வரவேண்டும் என்பதுக்காக தமிழர்களை பயன் படுத்துகிறார்கள்.... சரத்தின் ஆட்ச்சி அமைந்தால் , மகிந்த ஆட்ச்சிக்கு இனி ஒருகாலமும் வரமுடியாது எனபதை உறுதிப்படுத்திய பின்னர் சரத் பொன்சேகாவும் தூக்க நடவடிக்கை எடுக்க படும் என்பதும் கூட சரியாக அமையலாம்...!

இவை எதையும் சரத் பொன்சேகா அறிந்து இருக்க மாட்டான் எண்று நாம் நினைப்போம் எண்றால் அவை முட்டாள் தனமாகவே அமையும்... ( இவைகளை தடுக்க மகிந்த வளியை சரத் பின்பற்றினாலும் ஆச்சரியம் இல்லை)

இப்படி மகிந்தவையும் சரத்தையும் தண்டித்த பின்னர் தமிழர்களின் சுயநிர்ணயத்தை உலகம் அங்கீகரிக்குமா....??? நிச்சயமாக இல்லை எண்றே பதில் வரும்... அப்படி எண்றால் என்ன தீர்வு....?? மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஒற்றையாட்ச்சியின் கீழ் தீர்வு... சிங்களவருடன் கூடி வாழ உலகம் சொல்லும்...

பிறகு மகாநாயக்க தேரர்கள், JVP ,சிங்கள உறுமய இவற்றை எதிர்த்து இலங்கையில் அதிபரால் ஒண்றும் செய்ய முடியாது.. மூண்றில் இரண்டு பெரும்பாண்மை இல்லை... இப்படி பதில் வரும்... இன்னும் ஒரு முப்பது வருடம் போராட்டம்.... இப்படியே போகும்...

இது சரத் பொன்சேகா ஆட்ச்சிக்கு வந்தால்...

ஆனால் மகிந்த ஆட்ச்சிக்கு வந்தால்...??? சர்வதேச நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்கும்...??? அல்லது அடுத்த ஆறு வருடங்களில் வரும் தேர்தலுக்காக தங்களின் நலன்களை மூட்டை கட்டி வைத்து விட்டும் பொறுத்து இருக்குமா...???

( எனது ஆசை எல்லாம் வன்முறைகளின் மூலம் மகிந்த மீண்டும் ஆட்ச்சிக்கு வந்து மேற்குலகின் ஆசையில் இடிவிளவைக்க வேணும்)

அடுத்த ஆறு வருடங்களில் தனக்கு சமாந்தரமான சக்தி இலங்கையில் முளைவிடுவதை மகிந்த விட்டு வைப்பானா...???

ஆக எதையாவது உறுதியாக செய்ய வேண்டிய தேவையை உண்டு பண்ணும் அல்லவா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எந்த அரசியலையும் செய்ய முடியும்... அதுக்கும் முன்னர் நாங்கள் எங்களின் அரசியல் தளத்தை பலப்படுத்தி கொள்ள வேண்டும்... அப்படி பலப்படுத்தாமல் நடத்தும் எதுவுமே எதிரிக்கு மட்டுமே சாத்தியமாக அமையும்...

இது ஒரு பார்வை. இன்னொரு பார்வை இஸ்லாமியர்களின் தரப்பிலிருந்து பார்க்கலாம். அதாவது தாங்கள் அடிபட்ட சிங்களவனுக்கு ஆதரவு தந்த தமிழனை சிங்களவனுடன் சேர்ந்து அடிப்போம் என்கிற தந்திரம். மூன்று தரப்புக்குள்ளும் வன்மங்கள் இருக்கின்றன. ஆனால் தமது அரசியலைச் சரியாகச் செய்யும் தரப்புகள் முன்னுக்கு நிற்கின்றன.

என்ன சொல்ல வருகிறீர்கள் நாங்கள் சூழ்ச்சியாக எல்லாரையும் விழுத்தி மேலே வரமுடியும் எண்றா...??? அதுக்கு சிங்களவன் அனுமதிப்பானா...??? அவ்வளவு மடையனாக சிங்களவன் இருக்கிறானா..??

உண்மையில் உங்களுக்கு தெரியவில்லையா.? இல்லை வேண்டும் எண்றே நினைத்து கூட பார்க்க கூடாது எண்று இருக்கிறீர்களா....??

எனக்கு உங்களிடம் தெரிந்து கொள்ள சில விடயங்கள் இருக்கின்றன...

டட்லி செல்வா ஒப்பந்தம் ஏன் கிளித்து எறியப்பட்டது..? பண்டாவினால் ஏன் தனிச்சிங்கள சட்டம், சிங்கள் ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது...?? நில உச்சவரம்பு சட்டம் எல்லாம் ஏன் கொண்டு வரப்பட்டது...???

பின்னர் ஜே ஆரினால் எதுக்காக தரப்படுத்தல், விகிதாசார முறைமை, ஜனாதிபதி முறைமை எல்லாம் கொண்டுவரப்பட்டது...????

ஏன் அவ்வளவுதூரம் போவான்? சரணடைந்த 600 பொலிஸ்காரன்களைக் கொன்ற கருணாவை முறைக்கு சிங்களவன் தன்ர பக்கம் சேர்த்துக்கொண்டிருக்கவே கூடாது. ஆனால் சேர்த்துக்கொண்டிருக்கிறான். அதுக்காக அவன் கருணாவை மன்னித்துவிட்டான் என்பது அர்த்தமல்ல. அவனை தேவைக்கேற்ப பயன்படுத்துகிறான் என்பதுதான் அர்த்தம். நேரம் வந்தால் கருணாவின் வாகனம் மரத்தில் மோதும் சந்தர்ப்பங்களும் வரலாம். :lol:

சரத் பதவிக்கு வந்தால் கருணா அவரின் பக்கம் தாவி விடுவான் என்பதோடு மேன்மை தங்கிய ஜனாதிபதி சரத் எண்று புகழ் பாடவும் தான் போகிறான்... சரத் பொன்சேகா சேர்த்து கொள்ளவும் தான் போகிறான்...

ஆக நீங்கள் சொல்லும் தமிழரின் அரசியல் செய்வது. கருணா செய்வது போல கூழைக்கும்பிடு போட்டு வாங்கும் எதுவாகத்தான் இருக்கும்... சிங்களவனை ஏய்க்க சாத்தியமான வளியும் அதுதான்... ( எப்படி எண்டாலும் எனக்கும் உதுக்கும் சம்பந்தம் இருக்காது)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

முதலில் நான் ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் தோல்வி என்று குறிப்பிட்டது எழுபதுகளின் முன்பான காலப்பகுதியைக் குறித்து. ஆயுதப்போராட்ட அரசியல் வந்துவிட்டபிறகு அதற்குள் ஒரு ஜனநாயக அரசியல் செய்வது என்பது வெறும் ஒப்புக்குச் சப்பாணி என்பது மாதிரியானது..!

மற்றும்படி, உங்கள் விவாதமும், எனது விவாதமும் முழுமையாக வெவ்வேறு தளங்களில் இருக்கின்றன. அதனால் இத்துடன் முடித்துக் கொள்வோமே. நேரப்பற்றாக்குறை வேறு. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இயலுமானால் கலந்துரையாடுவோம். நன்றி. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.