Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

sithamparam.jpg

பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம்

வீரகேசரி இணையம் 2/1/2010 3:18:17 PM - விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ

இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐ.யின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழிற்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியகுற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கந்த மே மாதம் 18ஆம் திகதி

இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா என்ன அவலம் இரண்டு நாட்டிற்கும். தலைவரை மரணிகக்க வைக்க ஒரு கடதாசித்துண்டு தேவையாயிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண அத்ததாட்சிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன ‐ இந்தியா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண அத்ததாட்சிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இந்தியா பெற்றுக்கொண்டுள்ளதாக இந்திய அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் இறந்தமையினை உறுதிப்படுத்தி இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Lanka confirms Prabha s death

India s Union Home Minister P, Chidambaram said that India s Central Bureau of Investigation (CBI) has received the documentation from Sri Lanka confirming the death of LTTE Chief Vellupillai Prabhakaran.

Speaking to reporters today, Chidambaram said, The CBI has told me that they received documentation from the Government of Sri Lanka confirming the death of Prabhakaran.

The Home Minister s statement comes after CBI had said that it was still awaiting the death certificate of Prabhakaran in the Rajiv Gandhi assassination case.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை குழப்பி அடிப்பவர்களாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் விளங்குகின்றன. அநாவசியமாக இந்திய - சிறீலங்கா அரசுகளின் போலிப் பிரச்சாரங்களுக்கு இவை முண்டுகொடுப்பதாகவே இது தெரிகிறது.

சி பி ஐ யும்சரி சிதம்பரமும் சரி இருவேறு கருத்துகளை வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்கள் ஏதோ தேவை கருதி காட்ட முனைகின்றன. உண்மையில் சிபிஐ சிதம்பரம் இரு தரப்புமே ஒரே கருத்தைத் தான் சொல்லி உள்ளனர்.

சிறீலங்கா அரசு பிரபாகரனின் மரணம் பற்றிய ஆவணம் ஒன்றைக் கையளித்திருப்பதாகவே கூறி இருக்கின்றனர். ஆனால் சிறீலங்கா அரசு மரணச் சான்றிதழை இன்னும் அந்த ஆதார ஆவணமாக அளிக்கவில்லை. சிறீலங்கா அளித்துள்ள ஆவணம் மரணச் சான்றிதழ் அல்ல. அதுவேறு வடிவமானது. அதை ஏற்றுக் கொண்டு ஒருவர் மரணமடைந்ததை சட்டரீதியாக அறிவிக்க முடியாத நிலை இன்னும் தொடர்கிறது.

ஆனால் ஊடகங்களோ ஏதோ சிதம்பரமும் சிபிஐயும் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது போல போலித்தோற்றம் காட்ட வெளிக்கிட்டுள்ளனர்.

சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை அது கடந்த மே 20ம் திகதியே பிரபாகரன் இறந்ததற்கான ஆதார ஆவணத்தை உலகிற்கே காட்டிவிட்டது. அப்புறம் என்ன.. கேட்கிறீர்கள்..???!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இருக்கும் மரணச்சான்றிதழ்-? அது சும்மா ஒரு சான்றிதழ்.வேறு ஒன்றுல்லை.

உதாரணத்துக்கு ராஜீவ்காந்தியின் மரணசான்றிதழ்,

பெயர்.பெரொஸ்கான் ராஜீவ்காந்தி

சான்றுவழங்கும் மருத்துவர்: டொக்டர் செசிலியா சிரிஸ்

விபரம்:உடலில் 22 காயங்கள்

தலையில் கபாலப்பகுதி எலும்புகள் நொறுங்கி மூளை சிதறிவிட்டது.

முகத்தில் உதடுகளும் மூக்கும் கண்களும் முழுதாக சிதைந்துவிட்டது.

முகவாட்டை எலும்புகள் முழுதாக நொறுங்கி வெளியில்வந்துவிட்டது.

வயிற்றுப்பகுதியில் குடல்கள்,கல்லீரல் வெளியேவந்துவிட்டது.

வலது கைபெருவிரலும்,ஆள்காட்டிவிரலும் சேதமாகி இருந்தன.

எக்ஸ்ரே எடுத்துப்பார்த்ததில் உடலில் இருக்கும் அனைத்துஎலும்புகளும் உடைந்திருந்தன.

Edited by four four bravo

சிதம்பரம் சொல்லும் பத்திரத்தின் அடிப்படையில்

ராஜிவ்காந்தி கொலைவழக்கிலிருந்து

பிரபாகரன் இறந்துவிட்டார் என அறிவித்து

பை(F)லை மூடுவார்களாயின் சிதம்பரம் சொல்வதை நம்புவேன்

நேரத்துக்கு ஒரு கதையா இருக்கு... மக்களைக் குழப்பவா? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.