Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைகிறது கூட்டமைப்பு! தவிர்ப்பது எவ்வாறு?

Featured Replies

உடைகிறது கூட்டமைப்பு! தவிர்ப்பது எவ்வாறு?

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் அபாயம் தோன்றியுள்ளதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாகவே உள்ளன. இவ் உடைவு குறித்த உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கைகள் எந்நேரமும் வெளிவரக் கூடிய நிலையே தோற்றம் பெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினைச் சேர்ந்தவர்களின் கூட்டாக கூட்டமைப்பு இருந்து வருகிறது.

இக் கூட்டமைப்பிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் மற்றும் விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வெளியேற இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலை இயக்கம் மத்தியிலும் ஒருவகை தடுமாற்றம் தோன்றியுள்ளதாவும் தெரிய வருகிறது.

இவ் வெளியேற்ற முடிவுக்கு அடிப்படையாக இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இக் காரணங்களில் ஒன்று கொள்கை நிலைப்பட்டது. மற்றையது அணுகுமுறை சார்ந்தது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் அவருக்கு நெருக்கமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இணைந்து தயாரித்துள்ள தீர்வுத்திட்ட முன்மொழிவு, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மிகவும் கீழ்ப்பட்டதாக உள்ளது என, தமிழ்க் காங்கிரஸின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருதுவதாகத் தெரிகிறது. இக் கருத்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரகள் பலருக்கும் உள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதனால், இத் தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்னெடுக்க முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது என்றே திரு கஜேந்திரகுமார் உறுதிபடக் கூறுவதாகவும் அறிய முடிகிறது.

இத் தீர்வுத்திட்ட முன்மொழிவுக்கு மாற்றீடாக, ஒரு நாடு இரு தேசங்கள் எனும் அடிப்படையில் மாற்றுத்திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கு கஜேந்திரகுமார் எடுத்த முயற்சியை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென கூட்டமைப்பின் தலைமை விரும்புகின்றபோதும் தீர்வுத்திட்டம் தொடர்பாக திரு கஜேந்திரகுமார் முன்வைக்கும் மாற்று அணுகுமுறையினை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதாகவே தெரிகிறது. மாறாக, தமது தீர்வுத்திட்ட முன்மொழிவுக்கு ஏற்ற ஒரு சாதகமான மாற்றத்தை திரு கஜேந்திரகுமார் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பின் இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாகவும் அறியமுடிகிறது.

இது கொள்கைவழி வந்த முறுகல்நிலை.

கூட்டமைப்புத் தலைமையின் அணுகுமுறை பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிருப்திக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக வரும் தகவல்கள் மற்றையது.

கூட்டமைப்பின் மற்றைய தலைவர்களோடு கலந்து பேசி முடிவுகளை எடுக்காமை, நெருக்கடியான நேரங்களில் கூட்டமைப்போடு இணைந்து நின்றவர்களை மதிக்காமல் உதாசீனப்படுத்துகின்றமை, தம்மோடு கருத்து ரீதியாக முரண்படுபவர்களை புறக்கணிக்கின்றமை எனத் தமது சுயமரியாதைக்கு இழுக்கு எற்படும் வகையில் கூட்டமைப்புத் தலைமை நடந்து கொள்கிறது என அதிருப்தியாளர்கள் பொருமுகின்றனர்.

கூட்டமைப்பின் தலைமை, தாம் முன்வைக்கவுள்ள தீர்வுத்திட்ட முன்மொழிவுக்கு ஆதரவு தரக்கூடியவர்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு, ஏனையவர்களைக் கழட்டி விட முடிவு செய்துள்ளதோ என்ற சந்தேகம் அதிர்ப்தியாளர்கள் மத்தியில் வேர்விட்டுள்ளது.

தவிர தீர்வுத்திட்டம் சார்ந்து கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு மாறாக கொள்கைவழி நின்று அரசியல் செய்யும் ஒரு அடிமட்ட அமைப்பை கட்டி எழுப்ப வேண்டும் எனவும் இதற்குரிய நேரம் வந்து விட்டதாக திரு கஜேந்திரகுமார் கருதுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இம் முரண்பாடுகளின் பின்னணியில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஒரு புதிய அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி மாற்று அணியாகக் தேர்தலில் குதிக்க உள்ளதாக அறியப்படுகிறது.

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொள்கைவழி நிலைப்பாட்டை நாம் மதிக்கிறோம். எனினும் போரின் காரணமாக மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டும், இடம்பெயர்ந்தும் தமது வாழ்விடங்களில் மீள்குடியமரவும் வழியின்றி நிற்கும் நேரத்தில், பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக்கூடியவாறு அணிகள் பிரிந்து நிற்பது சிங்கள இனவாதத்திற்கு சேவை செய்வதாக அமைந்து விடும் என்ற காரணத்தை முன்வைத்து, இந்தக்காலம் பிரிந்து நின்று அரசியல் செய்வதற்கான காலம்தானா என்பதனைச் சிந்திக்குமாறு அவரைக் கோருகிறோம்.

இதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை குறிப்பாக தலைவர் திரு இரா சம்பந்தன் அவர்கள் சக கட்சிகளின் கொள்கைவழி நிலைப்பாடுகளையும் சக உறுப்பினர்களின் உணர்வுகளையும் மதித்து அவர்களை அணைத்துச் செல்லும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்;டும் எனவும் கோருகிறோம்.

நெருக்கடியாக தருணங்களில் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்றிய மக்கள் பிரதிநிதிகளை மதிக்காது செயற்படுதல் அவர்களைத் தெரிவு செய்த மக்களை மதிக்காத செயற்பாடாகவும் நோக்கப்படக்கூடியது.

மேலும், ஒன்றுபட்டு நிற்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் அதற்கான அணுகுமுறையை பக்குவமாகக் கையாண்டும் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டிய முதன்மைப் பொறுப்பு கூட்டமைப்புத் தலைமைக்குத்தான் உண்டு.

இன்னும் நம்பிக்கையைக் கைவிடாமல் இறுதியான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைக்கிறோம்.

இரு அணிகளாக மோதுவது எமக்குத் தரக்கூடிய நன்மைகளைவிட சிங்கள பௌத்த இனவாத்திற்குத்தான் கூடுதல் நன்மையைத் தரும்.

தீர்வுத்திட்ட முன்மொழிவு பற்றிய விவாதங்கள் நாட்டின் ஆழவோரோடிய இனப்பிரச்சனை சார்ந்த அடிப்படையான விடயங்கள். சிறிலங்காவோடு மட்டுமன்றி சர்வதேச நலன்களோடும் பிணைந்தே அது வடிவமெடுத்து நிற்கிறது. எனவே ஆழமான அந்த அரசியல் விடயங்களை தேர்தல் பிரச்சினையாக்குவதும் அதை முன்வைத்து பிளவுபடுவதும் ஈழத்தமிழர் தேசத்தினைப் பலவீனப்படுத்தவே வழிவகுக்கும்.

எந்த விடயத்தில் தமிழர் நலனோடு தொடர்புபட்ட அனைவரும் ஓரணியில் நின்று போராட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்களோ, அந்த இனப்பிரச்சனை தீர்வு விடயத்தை முன்வைத்தே கட்சிகள் தேர்தல் நேரத்தில் பிளவுபடுவதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உரியதிட்டங்களையும் சிங்கள இனக்கபளீகரக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டையும் தீர்வுத்திட்டத்திற்கான அடிப்படைகளையும் மட்டும் தேர்தலில் முன்வையுங்கள்.

தேர்தல் முடிவடைந்த பிறகு தீர்வுத்திட்டம் குறித்து நிதானமாக, திறந்த மனதுடன் மக்கள் மீதான விசுவாசத்துடன் கூடி விவாதியுங்கள்.

அப்போதும் கொள்கைவழி முரண்பாடு வரும் பட்சத்தில் பிரிந்து செயற்படுவது குறித்த முடிவினை எடுங்கள். அப்போதுதான் உங்கள் முடிவுக்கு கூடுதல் மக்கள் ஆதரவு கிடைக்கும்

இன்றைய காலம் இணைந்து நின்று அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான காலம் என்பதை மட்டும் கவனத்திற் கொள்ளுங்கள் என வேண்டுகிறோம்.

நன்றி: பொங்குதமிழ்.கொம்

http://www.eelamweb.com/

கூட்டமைப்பு உடைக்க படுவதுக்கும் உடைபடுவதுக்கும் முக்கிய காரணம் சம்பந்தனே...

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் எனும் பட்டியலை அமைத்து, அவர்களை விலகவோ விலக்கியோ வைத்து இந்திய ஆட்ச்சியாளர்களின் விருப்புக்கேற்ப நகர விரும்புகிறார்... இந்த அணுகுமுறை அரவணைத்து செல்வதாக இல்லை...

கூட்டமைப்புல் இருப்பது 22 நா உ க்கள்... அதில் 12 பேரை விலக்குவதும் மிகுதி 10 ( நடுவில் நிற்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உட்பட) பேர் தனிய நிற்பதும் கூட கூட்டமைப்பை இன்னும் சிறுபான்மையாக்குகிறது... உண்மையில் 2005 ல் மக்களின் அமோக ஆதரவோடு தெரிவு செய்ய பட்ட கூட்டமைப்பு 10 ம் 12 ஆக பிரிந்தால் 12 பேர் கொண்ட வர்களையே உண்மையான கூட்டமைப்பாக அங்கீகரிக்க வேண்டும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தொடர்ந்து குழப்பம் செய்யுமாயின் தமிழ்காங்கிரஸ் கட்சியின் சார்பில் இளையவர்களை சேர்த்து புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.தமிழரின் அடிப்படைக்கோரிக்கைகள் முன் நிறுத்தப்பட வேண்டும்.இதனால் தமிழர் வாக்குகள் சிதறினாலும் தமிழரின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்குமிடத்து போலியான தீர்வை தமிழர் தலையில் கட்டி வைக்க முற்படும் இந்தியாவின் முயற்சியையாவது தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மீண்ட்ம் கூட்டமைப்பாக இருக்க வ்ழிகள்

1.இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் சுய நிர்ணய உரிமையை தேர்தலில் வ்லியுறுத்தல்

2.கூட்டமைப்பிலிருந்து தாமாகவே வெளியேறுபவர்களை விடுத்து மற்றய அனைவரையும்

மீண்டும் களமிறக்குதல். (சிறீ காந்தாவின் நிலமையை மற்றய உறுப்பினர்களுடன் ஆராய்தல்)

3.கூட்டமைப்பின் முடிவுகளை மத்தியகுழு மூலம் எடுத்தல்.

4.கட்சித்தலைமைகளுடன் மத்தியகுழுவில் ஏனைய உறுப்பினர்களையும் கணிசமான அளவில் உள்வாங்குதல்.

5.முக்கியமாக இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வை முன்வைத்தல்.

6.தமிழர்களின் தலைமைத்துவம் இளையோரின் கைக்கு எத்ர்காலத்தில் கிடைக்க வழிமுறை செய்தல்.

7.முக்கியமாக மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

இன்னும் பல வழிகள் உண்டு.

மற்றவர்களும் யோசியுங்கோ!!

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு உடைக்க படுவதுக்கும் உடைபடுவதுக்கும் முக்கிய காரணம் சம்பந்தனே...

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் எனும் பட்டியலை அமைத்து, அவர்களை விலகவோ விலக்கியோ வைத்து இந்திய ஆட்ச்சியாளர்களின் விருப்புக்கேற்ப நகர விரும்புகிறார்... இந்த அணுகுமுறை அரவணைத்து செல்வதாக இல்லை...

கூட்டமைப்புல் இருப்பது 22 நா உ க்கள்... அதில் 12 பேரை விலக்குவதும் மிகுதி 10 ( நடுவில் நிற்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உட்பட) பேர் தனிய நிற்பதும் கூட கூட்டமைப்பை இன்னும் சிறுபான்மையாக்குகிறது... உண்மையில் 2005 ல் மக்களின் அமோக ஆதரவோடு தெரிவு செய்ய பட்ட கூட்டமைப்பு 10 ம் 12 ஆக பிரிந்தால் 12 பேர் கொண்ட வர்களையே உண்மையான கூட்டமைப்பாக அங்கீகரிக்க வேண்டும்...

நீங்கள் சொல்லும் அந்த 12 பேரில், ஐரோப்பாவில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையமூடாக எந்தவிதமான விசாரணையோ அல்லது கைதோ இன்றி யாழ்ப்பாணமும் சென்று, அங்கும் மிக (சு)தந்திரமாக வலம் வந்த/வந்துகொண்டிருக்கும் கஜேந்திரனும் இன்னும் சிலரும் இருக்கின்றனரா? இன்று பொன்சேகா போன்றோரையே கைது செய்து சிறைக்குள் தள்ள வழக்கு போடும் மகிந்த, ஐரோப்பா எங்கும் போர்க் காலத்தில் புலிகளுக்கு வெளிப்படையாக பிரச்சாரம் செய்த பத்மினி சிதம்பரநாதன் போன்றோரை ஏன் விட்டு வைத்திருக்கின்றது என்று யோசித்துப் பார்த்தீர்களா? த.தே.கூ இனை பிளக்க இனி டக்கிளஸ் தேவை இல்லை என்பதால் அவரை கழட்டி விட மகிந்த அணி முன்வருகின்றதென்றால், அவர்களுக்கு இன்னொரு குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது என்பதே காரணம். அந்தக் குழுவில் இந்த 12 பேரில் சிலர் உள்ளனர் என்று புரிந்து கொள்ள முடிகின்றதா?

புலிகளுக்கு ஆதரவு என்ற முகத்துடன் இன்னும் ஒரு குழு தமிழர் பலத்தை உடைக்க முனைகின்றது. வழக்கம் போல் எந்த தீர்க்கதரிசனமும் இல்லாத நாம் தமிழர் பலம் உடைபடுவதற்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றோம்

அதே போல இன்னும் ஒரு கேள்வியை உங்களை நான் ஆசையா கேக்க விரும்புகிறன்...

ஊரிலை இருந்து வெளி நாட்டுக்கு தப்பி ஓடவே தேவை இல்லாது அங்கை தங்கி இருந்த தலைவர் மாரை பற்றி என்ன நினைக்கிறீயள்....??

தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்டது போராடும் அமைப்பு இல்லை... அப்படி போராடுபவர்களாக இருந்தால் பாலக்குமார் அண்ணை ஆக்கள் போல. அவர்கள் புலிகளோடை இணைக்க பட்டு இருப்பினம்... அப்படி அவர்களை இணைக்காது விட்டதின் முக்கிய காரணம் அவர்கள் சிங்களவர்களின் நாடாளு மண்றத்தில் போய் தமிழீழம் அமைத்து தர உதவுவார்கள் எண்டதுக்காகவும் இல்லை....

தமிழ் பாராளு மண்ற உறுப்பினர்களின் முக்கிய வேலையே புணர் வாழ்வு எண்று தமிழர்களை காட்டி அரசாங்கம் வாங்கி குவிக்கும் பணத்தில் கொஞ்சத்தை அரசிடம் இருந்து வாங்கி தமிழ மக்களுக்கு எதையாவது செய்து கொடுப்பதுக்காக... அதனால் தான் அவ்வளவு காலமும் இல்லாது போர் நிறுத்த காலங்களில் புலிகள் பாராளு மண்றம் போகும் கட்ச்சிக்கு ஆதரவை வளங்கினார்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு என்பது இன்னும்வேகமாக உடைக்கப்படவேண்டியது.

அடிபணியும் அரசியலைச் செய்வதற்கு கூட்டமைப்பு எதற்கு??

அதற்குத்தான் டக்கியும் கருணாவும் இருக்கிறார்களே.

இந்தியா சொல்கின்றபடி வடக்கு-கிழக்கில் அரசியல்நடாத்தும் கூட்டமைப்பு சனநாயகரீதியாகவும் பலவந்தமாகவும்

உடைக்கப்படவேண்டும்.அகற்றப்படவேண்டும்.

முதலில் திருமலையில் நடைபெறும் குடியேற்றங்களை தடுத்துநிறுத்த வக்கில்லாத சம்பந்தர் சிங்களவனுடன் சேர்ந்து

ராசதந்திரம் செய்யவெளிக்கிடுவது..கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போறப்போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னமும் முடிவே அவர் எடுக்க இல்லை அதுகுள்ள உடைக்க வெளிக்கிட்டுட்டாங்கள், எல்லாரும் ஒரு தினிசாத்தான் திருயிறாங்கள் , அவங்களுக்கு என்ன அவசரமோ? :(

கூட்டமைப்பு மீண்ட்ம் கூட்டமைப்பாக இருக்க வ்ழிகள்

1.இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் சுய நிர்ணய உரிமையை தேர்தலில் வ்லியுறுத்தல்

2.கூட்டமைப்பிலிருந்து தாமாகவே வெளியேறுபவர்களை விடுத்து மற்றய அனைவரையும்

மீண்டும் களமிறக்குதல். (சிறீ காந்தாவின் நிலமையை மற்றய உறுப்பினர்களுடன் ஆராய்தல்)

3.கூட்டமைப்பின் முடிவுகளை மத்தியகுழு மூலம் எடுத்தல்.

4.கட்சித்தலைமைகளுடன் மத்தியகுழுவில் ஏனைய உறுப்பினர்களையும் கணிசமான அளவில் உள்வாங்குதல்.

5.முக்கியமாக இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வை முன்வைத்தல்.

6.தமிழர்களின் தலைமைத்துவம் இளையோரின் கைக்கு எத்ர்காலத்தில் கிடைக்க வழிமுறை செய்தல்.

7.முக்கியமாக மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

இன்னும் பல வழிகள் உண்டு.

மற்றவர்களும் யோசியுங்கோ!!

வாத்தியார்

................

மிக நல்ல ஆலோசனைகள்.

அத்துடன்,

(0) இடம்பெயர்ந்து பல பகுதிகளிலும் துயருடன் வாழும் மக்களை நேரில் சென்று, தரிசித்து, தங்கி அவர்கள் பிரச்சனைகளை விளங்கிக்கொள்தல்.

(1) கூட்டமைப்பின் தலைமை தமிழர்களின் பிரச்சினைகள் என்னவென்று விளங்கிக்கொள்தல்.

(2) உல்லாச, அடிவருடி, பொழுதுபோக்கு அறிக்கை அரசியலை விட்டுவிட்டு - மக்கள் பிரச்சினைகளுக்கு உடன் குரல் கொடுத்தல்

(3) சட்டத்தரனிமாரை தலைமை பொறுப்புகளில் இருந்து நீக்குதல் - அவர்கள் தமது அரைவேக்காட்டுதனங்களை நீதி மன்றில் காட்டடும்.

(4) இந்திய பயங்கரவாதிகளின் தொடர்புகளை முற்றாக துண்டித்தல்

புலிகளுக்குப் பின் தமிழர்களுக்கு இருந்த தாயகத்தில் இருந்த ஒரே ஒரு அரசில் பலத்தை சிங்களம் உடைக்கும் என்று என்றே சிங்கலவங்களே சொல்லிவிட்டார்கள். அதை இங்கு நாமும் குறிப்பிட்டிருந்தோம்.

இன்று அதன் பலாபலன்கள் வெளியில் தெரிகின்றன.. தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கும் வேளையில் யாழ்க் களம் கூட தெரிந்தோ தெரியாமல் துணைபோனது.

கூட்டமைப்பு தவறு செய்யலாம் ஆனால் தவற்றை சரியான முறையில் விவாதித்து தீர்வு காணவேண்டும். அதுக்காக ஒற்றுமையை குலைக்கக் கூடாது.

ஏதோ ஒரு காரணத்துக்காக புலிகள் இந்த கூட்டை உருவாக்கினார்கள். இலக்கு அடையும் வரை இந்த கூட்டை உடைத்தவர்கள் இதுக்கு பொறுப்புக் கூறவேண்டும்.

மீண்டும் ராசா பக்ச வந்தால் இது நடக்கலாம் என்று எதிர்பார்த்ததுதான். என்ன செய்வது அவனது வெற்றி எங்கள் கைகளில் இருக்கவில்லை. இருந்தாலும் எதிரியின் திட்டத்தை உடைக்க ஒற்றுமையாக இருந்தால்தான் முடியும்.

தமிழ்க் கூட்டமைபின் உறுப்பினர்களது இணைய, தொலைபேசி, மடல் முகவரிகளை இணைத்தால், அவர்களுக்கு நேரடியாகவே கருத்தகளை அனுப்புவது பயனுடையதாக இருக்கும். நம் வெறுமனே எமக்குள் எழுதுவதால் ஏதாவது மாற்றத்தைக் காண முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடைகிறதோ ...... கூட்டமைப்பப்பற்றி எழுதினதுகளை போய் பாத்தால் தெரியும் எத்தினையோபேர் இங்க சண்டிக்கட்டோட நிக்கிது. :)

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு உடைய வேண்டுமென்று தமிழர் நலன் விரும்புபவர்கள் வலுக்கட்டாயமாக ஒரு போதும் சிந்திக்க மாட்டார்கள்;.ஆனால் அவர்களை அந்த நிலைக்கு கூட்டமைப்பின் தலமையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.கஜேந்திரன் கைது செய்யப்படாமல் கட்டுநாயக்காவிற்குள்ளால் போனது எப்படி என்ற சந்தேகம் கிளப்புவர்கள் உண்மையில் சிண்டு முடிந்து விடுகிறார்கள். தமிழ் மக்களை இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று குழப்பி விடுகிறார்கள்.வெளிநாட்டில் இருந்த காலத்தில் அவர் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருப்பார். அவர் கைது செய்யப்படுவது பல வெளிநாடுகளுக்குத் தெரியவரும்.ஆதுக்காக வெளிநாடுகள் உடனே தலையிடும் என்ற சொல்லவில்லை. ஆனால் உலக சமுகத்தில் இழந்து கொண்டிருக்கும் மதிப்பை சிறிலங்கா மேலும் இழக்கும்.அட போங்கப்பா விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களே கட்டு நாயக்காவில் நின்று கண்காணிப்பு? செய்யும் 'சூழ்நிலைக் கைதிகளாக வேலை செய்வதாக போய் வந்தவர்கள் சொல்கிறார்கள்.வன்னி எம்பி கனகரெட்னம் மகிந்தவுக்கு ஆதரவு குடுக்கும் 'சூழ்நிலை' .(இவர் செல்லக்கிளியின் சகோதரர் என்று சொல்கிறார்கள் சரியாகத் தெரியவில்லை).இந்த நிலமையில் கஜேந்திரனைக் கைது செய்யாததுதான் உங்களுக்குக் கவவையாக இருக்கிறதோ?

இப்பிடியெல்லாம் விசியம் இருக்கே! பொன்னாடை போத்தினதுகள் காலில விழுந்ததுகள விட வேறயும் இருக்குது போல :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.