Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சனைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள பலருக்கு தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டான நிலமையிலேயே ஒன்றிணைய ஒத்துக்கொண்டார்கள் என்பதும் உண்மையே.

கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி , சிவநாதன் கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள். கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதும் யாருக்கும் தெரியாமலிருக்கலாம்.

ஆனால் வடக்கிலிருந்து அரசை ஆதரித்து நின்றவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாற்றம் பெற்று உஷாராகியுள்ளது. அதன் தலைவர் ஆனந்தசங்கரி இலட்சியம் பற்றி பேசி வருகின்றார். புளொட் தலைவர் மதில் மேல் பூனையாக செயற்படும் போது அவரைத் தங்கள் பக்கம் திருப்புவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு விவேகமில்லாது போயிற்று. மாநகரசபைத் தேர்தலினால் வீணைச்சின்னத்தை பறிகொடுத்து பின் ஜனாதிபதி தேர்தலில் உண்மையை விளங்கிக் கொண்ட ஈ.பி.டி.பி கட்சியினர் அரசை விட்டு விலக வெளிக்காட்டியது நாடகமாகியுள்ளது என்று சொன்னாலும் அவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது உண்மையே. அதைப் பயன்படுத்தி சுவிஸ்லாந்தில் ஏற்றுக்கொண்டதை செயற்படுத்தவும் கூட்டமைப்புக்கு முடியவில்லை.

இப்போது நடப்பது என்ன? கூட்டமைப்புக்குள் இருந்த உலகத்தமிழர்களின் ஆதரவை சம்பாதித்துள்ள சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தாவையும் மீண்டும் இணைத்து கூட்டமைப்பை பலப்படுத்தாது அவர்களைக் கழற்றி விடும் விதத்தில் செயற்பட்டது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் அவசியத்துக்கான எண்ணக்கருவையே சிதைத்துவிட்டது. இவ்வாறான கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்பு இன்னும் மேலும் பலப்பட வேண்டும் என்ற மக்களின் எண்ணம் தவிடு பொடியாக்கப்பட்டதும் அல்லாமல் இருந்த ஒற்றுமையே சின்னாபின்னமாக்குமளவிற்கு நிலவரம் முற்றியுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத தன்மையினால் தமிழ்ப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கவுள்ளார்கள் என்பது வருத்தத்தைக் கொடுக்கின்றது. தந்திரோபாய அணுகுமுறையும் கொண்ட இலட்சியத்தில் பற்றுமில்லாததாலேயே இத் தேர்தல்களம் அசிங்கமான முகத்தை வெளிக்காட்டி நிற்கிறது.

இவை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளாகும். தமிழ் மக்களிடையே ஒற்றுமை குலைவது அவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தானே. சகல தமிழ்க் கட்சித் தலைமைகளும் தமிழ் மக்களின் வருங்கால நலனையிட்டு சிரத்தை கொள்ளாமல் தங்கள் தங்கள் கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் நலனை முன்னெடுப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர் பிளவுபட்டிருந்த 1950 – 1965 காலங்களில் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெற்றது. இப்போ பிளவுபட்டிருப்பது வடக்கிலும் அவ்வாறான திட்டங்கள் நிறைவேற வழிவகுக்கப் போகின்றது.

vembady.com http://vembady.com/news/?p=416

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண தலைமைகள் விழித்தெளாத 1956 சிங்களம் மட்டும் சட்ட கலவரத்தில் துறை நிலாவணையில்வைத்து இராணுவத்தை தாக்கியவர்கள் கிழக்கு மாகாணத்து மக்கள். யாழ்ப்பாண மைய வாதம் என்கிற நிறைய அவதூறுகளையும் துரோகிப் பட்டத்தையும் வைத்திருக்கிற விச பாம்புகளை எங்கள் எங்கள் மனதுகளில் இருந்து அடித்துப் போடுவோம். தயவு செய்து யாழ்பாண மைய வாதத்தை அனுமதிக்க வேண்டாம். sam.s உங்கள் கட்டுரையின் மூன்றாவது பந்தியை அகற்றி விடுங்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ யாழ் மைய அம்சங்கள் உள்ள எல்லாமே தமிழரது விடுதலைக்கு எதிரானவையாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் கிழக்கு மாகாணத்தவரின் முன்னணிப் பங்களிப்பில்லாத அமைப்புகளை ஈழத்தின் பெயரால் உருவாக்க வேண்டாம். உருவாக்கி இருந்தால் அவற்றை செம்மை செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் வடக்கையும் கிழக்கையும் சம்பந்தர் இணைத்திருக்கிறார். இது முழு ஈழப் பிரதேசத்திலும் ஆதரவும் அதிகாரமும் உள்ள முதலாவது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தலைவர் என்கிற முறையில் சம்பந்தருடைய சிறந்த பங்களிப்பாகும். முஸ்லிம் தலைமைகளோடு ஆரோக்கியமான உறவையும் சாதித்திருக்கிறார். இதுவும் அவரது சிறந்த பங்களிப்பாகும். ஒரு தேர்தலில் சிலர் வெளியேற்றப் படுவதும் சிலர் வெல்வதும் சிலர் தோற்ப்பதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. கிழக்கு மாகாகாணத்தின் முதல் தேசிய தலைமைக்கு சம்பந்தரின் தலைமைக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். ஏனையவர்கள் தமிழ்க் காங்கிரசிலும் சிறீகாந்தாவின் கூட்டமைப்பிலும் போட்டி இடட்டும். முடிவை களத்தில் உள்ள மக்கள் தீர்மானிக்கட்டும். புலம் பெயர்ந்த எமது கருத்துக்களை களத்தில் வாழ்கிற மக்களின் பொதுக் கருத்துக்கு கீழ்படுத்தாமலும் முஸ்லிம் தலைமைகளோடு ஆரோக்கியமான உறவை வளர்க்காமலும் நமக்கு ஒருபோதும் விடுதலை இல்லை.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாண தலைமைகள் விழித்தெளாத 1956 சிங்களம் மட்டும் சட்ட கலவரத்தில் துறை நிலாவணையில்வைத்து இராணுவத்தை தாக்கியவர்கள் கிழக்கு மாகாணத்து மக்கள். யாழ்ப்பாண மைய வாதம் என்கிற நிறைய அவதூறுகளையும் துரோகிப் பட்டத்தையும் வைத்திருக்கிற விச பாம்புகளை எங்கள் எங்கள் மனதுகளில் இருந்து அடித்துப் போடுவோம். தயவு செய்து யாழ்பாண மைய வாதத்தை அனுமதிக்க வேண்டாம். sam.s உங்கள் கட்டுரையின் மூன்றாவது பந்தியை அகற்றி விடுங்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ யாழ் மைய அம்சங்கள் உள்ள எல்லாமே தமிழரது விடுதலைக்கு எதிரானவையாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் கிழக்கு மாகாணத்தவரின் முன்னணிப் பங்களிப்பில்லாத அமைப்புகளை ஈழத்தின் பெயரால் உருவாக்க வேண்டாம். உருவாக்கி இருந்தால் அவற்றை செம்மை செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் வடக்கையும் கிழக்கையும் சம்பந்தர் இணைத்திருக்கிறார். இது முழு ஈழப் பிரதேசத்திலும் ஆதரவும் அதிகாரமும் உள்ள முதலாவது கிழக்கு மாகாணத்தைச் தலைவர் என்கிற முறையில் சம்பந்தருடைய சிறந்த பங்களிப்பாகும். முஸ்லிம் தலைமைகளோடு ஆரோக்கியமான உறவையும் சாதித்திருக்கிறார். இதுவும் அவரது சிறந்த பங்களிப்பாகும். ஒரு தேர்தலில் சிலர் வெளியேற்றப் படுவதும் சிலர் வெல்வதும் சிலர் தோற்ப்பதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. கிழக்கு மாகாகாணத்தின் முதல் தேசிய தலைமைக்கு சம்பந்தரின் தலைமைக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். ஏனையவர்கள் தமிழ்க் காங்கிரசிலும் சிறீகாந்தாவின் கூட்டமைப்பிலும் போட்டி இடட்டும். முடிவை களத்தில் உள்ள மக்கள் தீர்மானிக்கட்டும். புலம் பெயர்ந்த எமது கருத்துக்களை களத்தில் வாழ்கிற மக்களின் பொதுக் கருத்துக்கு கீழ்படுத்தாமலும் முஸ்லிம் தலைமைகளோடு ஆரோக்கியமான உறவை வளர்க்காமலும் நமக்கு ஒருபோதும் விடுதலை இல்லை.

வணக்கம் .திரு. poet' உங்கள் கருத்தை நான் ஆட்சேபிக்கவில்லை இந்தக்கட்டுரையை வேம்படி .கொம் இருந்து பதிந்துள்ளேன்

அதற்கான link முடிவில் கொடுத்துள்ளேன் அதை மாற்றும் உரிமை எனகுஇல்லை.

"கிழக்கு மாகாகாணத்தின் முதல் தேசிய தலைமைக்கு சம்பந்தரின் தலைமைக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்."

தமிழ் தேசியத்தின் நிரந்தர தலைமை எப்போதுமே வே.பிரபாகரன் தான்.

சம்பந்தர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மட்டும் தலைமை தாங்கட்டும். தமிழ் தேசியத்திற்கு அல்ல.

இது பிரதேசவாதமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி , சிவநாதன் கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள். கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதும் யாருக்கும் தெரியாமலிருக்கலாம்.

கிழக்கில் பிறந்த ஜோசப் பராராஜசிங்கம் அவர்கள், ஈழ மக்களுக்காகக் குரல் கொடுக்கப் போய் தனது விலை மதிக்க முடியாத உயிரை இழந்த மாமனிதர்.

கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி , சிவநாதன் கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள். கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதும் யாருக்கும் தெரியாமலிருக்கலாம்.

ஆனால் வடக்கிலிருந்து அரசை ஆதரித்து நின்றவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாற்றம் பெற்று உஷாராகியுள்ளது. அதன் தலைவர் ஆனந்தசங்கரி இலட்சியம் பற்றி பேசி வருகின்றார். புளொட் தலைவர் மதில் மேல் பூனையாக செயற்படும் போது அவரைத் தங்கள் பக்கம் திருப்புவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு விவேகமில்லாது போயிற்று. மாநகரசபைத் தேர்தலினால் வீணைச்சின்னத்தை பறிகொடுத்து பின் ஜனாதிபதி தேர்தலில் உண்மையை விளங்கிக் கொண்ட ஈ.பி.டி.பி கட்சியினர் அரசை விட்டு விலக வெளிக்காட்டியது நாடகமாகியுள்ளது என்று சொன்னாலும் அவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது உண்மையே. அதைப் பயன்படுத்தி சுவிஸ்லாந்தில் ஏற்றுக்கொண்டதை செயற்படுத்தவும் கூட்டமைப்புக்கு முடியவில்லை.

கிழக்கில் ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியாதாம் வடக்கில் முடியுமாம் ஏனென்டா ஆனந்த சங்கரி இலட்சியம் பற்றி பேசிவருகிறாராம் ஈபி டிபியின் மனதில் மாற்றம் தெரிகின்றதாம்.

இவ்வாறான மையாவாதக் கோவணத்தை உதறிக்காட்டுற பன்னாடைத்தனத்தை இனியெண்டாலும் விட்டுத்தொலைக்கலாமே ! எல்லா அழிவுகளுக்கும் இந்த மையவாதக்கோவணம் தானே காரணம். வடக்கு கிழக்கு போன்ற பிரதேசவாதங்களோ அல்லது புத்திஜீகள் என்ற அடயாளத்தேடல் கோஸ்டிகளின் வழிநடத்தலோ என்றைக்கும் தமிழனை வழமைபோல படுகுழியில் தள்ளிக்கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் கூத்துகளைப் பார்க்கும்போது தமிழக அரசியல்'வியாதி'களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்களல்ல என்று ஈழ அரசியல்வாதிகள் கட்டியம் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பில் இருப்பவர்கள், சிறிதேனும் ஒற்றுமையாக இருப்பார்களென எண்ணியது இப்பொழுது மிகப்பெரிய தவறென புரிகிறது.

உங்களுக்கெல்லாம் இராணுவ ஆட்சிதான் லாயக்கு!(அதிலும் எந்த நாட்டு இராணுவத்திடம் அடிமையாக இருப்போமென அதற்கும் அடித்துக்கொள்ளாதீர்கள்)mad0052.gifmad0228.gif

அட போங்கப்பா..! சலித்துவிட்டது.

அடைய வேண்டிய இலக்கும்... போகவேண்டிய பாதையும் தெளிவு இல்லாமல் இருக்கும் வரைக்கும் எல்லாம் பிசகில் தான் இருக்கும்...

பித்தம் போனால் சித்தம் தெளியும்...

காலம் தான் எல்லாத்துக்குமான மருந்து...

:rolleyes::blink::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.