Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேவலுக்கு விரட்டவும் பேட்டுக்கு பதுங்கவும் கற்றுக் கொடுத்தது யார்..??! அதுவும் ஆணாதிக்கமா..??!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிவப்பு வர்ணம் இட்ட பகுதிகளை மீள் வாசிப்பிற்கு உள்ளாக்கும்படி இதனை எழுதிய நெடுக்குத் தம்பியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இயற்கையோடு எப்படி இணைந்து அதனைச் செயற்படுத்தி வாழ்வது என்பதைக் கற்றுக் கொடுப்பதே நன்று. ஆண்களை நோக்கியும் இது செய்யப்பட வேண்டும். :)

இயற்கையைக் கைவிட்டுவிட்டு செயற்கைமுறையில் கருவூட்டல் செய்து வாரிசை உருவாக்குவேன் என்று அடம்பிடிக்கும் உங்களுக்கும் நீங்களே நல்ல ஆலோசகராக மாறியிருக்கிறீர்கள். :):lol: :lol: :)

இது கருத்தாடலை திசை திருப்பும் நோக்கம் கொண்ட தனிமனித தாக்குதல். :)

அது எனது தனிப்பட்ட விருப்பம். அதை சமூகத்துக்கு என்று கொண்டு வந்து பொதுநோக்கில் வைக்க முடியாது. ஆனால் சேவல்- பேடு இயற்கையில் உள்ள நிலை. அதை தனி மனித விளக்கம் என்று கொள்ள முடியாது. எம் கண் முன்னால் பொதுவாக நடந்து கொண்டிருக்கும் நிலை. அதற்கான வினவல்.. விடை.. தான் இந்தத் தலைப்பே. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படித்தான் இப்படியான தலைப்புகளைக் கண்டுபிடிக்கிறிங்களோ

:)

ஜீவாவின் கருத்துதான் எனதும்.

நாயை கொண்டுபோய் நடுக்கடலில் விட்டாலும் நக்கித்தான் தண்ணி குடிக்கும்.பிற்போக்காக நீங்கள் இருப்பதில் தவறில்லை.நாட்டையே கொண்டுபோகப் பார்த்தீர்களே? நினைத்தாலே பயமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவின் கருத்துதான் எனதும்.

நாயை கொண்டுபோய் நடுக்கடலில் விட்டாலும் நக்கித்தான் தண்ணி குடிக்கும்.பிற்போக்காக நீங்கள் இருப்பதில் தவறில்லை.நாட்டையே கொண்டுபோகப் பார்த்தீர்களே? நினைத்தாலே பயமாக இருக்கின்றது.

இப்ப....... சிங்களவன் கொண்டு போறான், சந்தோசம் தானே.......

வடித்தெடுத்த அடிமைப் புத்தி.58.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவின் கருத்துதான் எனதும்.

நாயை கொண்டுபோய் நடுக்கடலில் விட்டாலும் நக்கித்தான் தண்ணி குடிக்கும்.பிற்போக்காக நீங்கள் இருப்பதில் தவறில்லை.நாட்டையே கொண்டுபோகப் பார்த்தீர்களே? நினைத்தாலே பயமாக இருக்கின்றது.

பிற்போக்கு என்றால் என்ன..??! இயற்கையில் உள்ளதை எல்லாம் பிற்போக்கு என்று எப்படி உங்கட முற்போக்கால வரையறுக்கிறீர்கள் என்று சொன்னால் நல்லா இருக்கும். முற்போக்கு என்பது முரணானது என்பதல்ல அர்த்தம். ஆணும் பெண்ணும் முரண்பட்டுக் கொண்டு வாழ்வதல்ல.. முற்போக்கு. அடிப்படையை சரியாக விளங்காமல் முற்போக்கு பிற்போக்கு என்று வரையறுக்கும் முட்டாள்களை தான் நாம் இந்த உலகில் அதிகம் காண்கிறோம். முதலில் பிற்போக்கு முற்போக்கு என்பதற்கான வரையறைகளை செய்யுங்கள். அதன் பின் கருத்துரைப்பதே சிறப்பானதாக இருக்கும்.

நாம் இயற்கையில் உள்ள ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இயற்கை முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கூர்ப்படைந்து கொண்டுதான் செல்கிறது. இங்கு எதுவும் பிற்போக்கு என்று சொல்லும் அளவிற்கு இல்லை. இயற்கையில் உள்ளதை ஏன் எதற்கு என்ற ஆராய்தல் தான் இங்கு தலைப்பாகி நிற்கிறது. அபரிமிதமான தோற்றங்களை போலி மாயைகளை விதைப்பதல்ல முற்போக்கு..! அது வெறும் காட்டுக் கூச்சலாகும். :)

  • கருத்துக்கள உறவுகள்

உடல் வலுவைக் கொண்டு ஆதிக்கம் செய்வது என்பது பொருள் அல்ல. உடல் வலுவைக் கொண்டு சமூகத்தை பாதுகாப்பதே நோக்கம். உடல் வலுவற்ற பெண்களிடம் சமூகப் பாதுகாப்பை அளிக்க முடியாது. இன்றும் கூட மனிதர்களில் போர்க்களங்களில் ஆண்களே அதிகம் பலியிடப்படுகிறார்கள். ஆண்கள் போர் வீரர்களாக்கப்பட்டு சமூகத்தை நாட்டை பாதுகாக்க அனுப்பப்படுகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு வேறு பொறுப்புக்களில் இருந்து விடுப்பு வழங்குகின்றனர்.

அந்த நிலை சிங்கங்களிலும் இருக்கிறது. ஆண் சிங்கம் எப்போதும் சோம்பேறி கிடையாது. அதற்கு வேட்டையாடி தன் உணவை தானே தேடிக் கொள்ளவும் தெரியும்.. தனது நிலப்பரப்பை அபகரிக்க வரும் எதிரிகளை விரட்டி பெண் உட்பட அதன் சந்ததி வாழ பாதுகாப்பான நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்ளவும் தெரியும்.

குட்டிகளை குஞ்சுகளை தாய் பராமரிப்பது என்பது விலங்கு இராய்ச்சியத்தில் கூர்ப்பின் வழி வளர்ந்து வருகிறது. ஆண் விலங்கு வாழும் பிரதேசத்தை தக்க வைக்க பொதுவாக பெண் விலங்கு குட்டி போட்டு அவற்றைப் பராமரிக்கும். இது வெற்றிகரமான சமூக வாழ்விற்கு இந்தப் பூமிப்பந்தில் அவசியமாகும். இங்கு ஆண் சோம்பேறி என்பது எந்த வகையில் பொருந்தும். அதற்கு இயற்கை அளித்த கடமையை அது செய்கிறது. பெண் தனக்குரிய கடமையை செய்கிறது. அவ்வளவும் தான்.

சேவலுக்கும் இதே தான் நிலை. வாழும் நிலப்பரப்பின்றி ஒரு உயிரினம் வெற்றியடைய வாழ முடியாது. (தமிழர்கள் எங்கும் ஒட்டிப்பிழைப்பர்.. அவர்களை விட.). சேவல் வாழும் நிலப்பரப்பை காத்து நிற்க.. தீர்மானித்து நிற்க.. எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து நிற்க.. குஞ்சுகளை பராமரிப்பதை பேடு செய்து கொள்கிறது. சேவல் குஞ்சுகளை மட்டுமல்ல.. பேட்டை தாக்க வரும் எதிரிகளை விரட்டி அடிப்பதை நீங்கள் கண்டதில்லையா. பேட்டை பிடிக்கப் போனால் சேவல் கொத்த வரும். பேடு சத்தமிட்டால் சேவல் ஓடி வரும். அதுமட்டுமன்றி குஞ்சுகளை சேவல்கள் அலேட் செய்வதை கண்டிருக்கிறேன். சேவல் அலேட் செய்ய பேடு அலேட் செய்யும். அதைத் தொடர்ந்து குஞ்சுகள் பதுங்கிக் கொள்ளுங்கள். சேவல் வெறும் சோம்பேறி கிடையாது. அது தனக்கு உணவு தேடும். தன்னை எப்போதும் விழிப்போடு வைத்துக் கொள்ளும். அது மட்டுமன்றி போதிய உணவு கிடைத்துவிட்டால் பகிர்ந்து உண்ண பேட்டை அழைக்கும். ஆனால் பேடு பொதுவா சேவலை அழைத்து சாப்பாடு கொடுக்காது. குஞ்சுகளை பராமரிக்கிறதை விட அது வேறெதுவும் செய்யாது. தனது வாழும் நிலப்பரப்பை கூட அது தீர்மானிக்காது. வேறு எங்காவது போய் முட்டை போடும். வேறு சேவல் கிடைத்தால் அங்கு ஓடிவிடும். ஆனால் சேவல் அப்படியல்ல. தனக்குரிய நிலப்பரப்பில் அதன் நிலை நிறுத்தப்பட்டுவிட்டால் விலகிப் போகாது. இதுதான் அதன் தலைமைத்துவப் பண்பின் அடையாளம்.

சரிவர இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து சேவல் ஆண் சிங்கம் சோம்பேறி.. அதற்கு ஏதோ பேடு பெண் சிங்கமும் தான் இயங்கு சக்தி என்பது ஒன்றும் இயற்கையில் அவ்வாறு அவதானிக்கக் கூடிய அளவில் முதன்மை பெற்றில்லை. மனிதப் பெண்கள் விடும் டூப்புகுகளில் இதுவும் ஒன்று. :)

நெடுக்குத் தம்பி சமூகத்தை நாட்டை பாதுகாப்பது ஆண்கள் என்று நீங்கள் முற்றுமுழுதாக கூறி ஆண்களுக்கு முடிசூடிக் கொள்ள வேண்டாம். உடல் வலுவற்றதால் பெண்களிடம் அத்தகைய பொறுப்புகள் ஒப்படைக்கப்படவில்லை என்றும் நீங்கள் கோமாளிக் காரணங்கள் கூறவேண்டாம். ஒரு சமூகத்தை, நாட்டைப் பாதுகாப்பதில் பெண்கள் பாரிய அளவில் இல்லைத்தான் அதற்கான காரணம் ஒரு பெண் எதிரிப்படைகளிடம் அகப்படும் இடத்து அவள் அனுபவிக்கும் சித்ரவதைகளும், வன்முறைகளும் அவள் சார்ந்த இனத்திற்கு தீராத வேதனையை உருவாக்கிவிடும் காரணத்திற்காகவே அத்தகைய முன்னிலைகளில் இருந்து அவர்கள் ஒதுங்கி அதாவது விகிதாசாரத்தில் குறைந்தளவில் உள்ளார்கள். இது இயற்கை பெண்ணுக்கு வழங்கியிருக்கும் சந்ததி விருத்தியின் பால் ஏற்பட்டதே அன்றி பலமில்லாத உடல் வாகைக் கொண்டவர்கள் என்ற ரீதியில் அல்ல என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். ஒரு இனத்தை அல்லது ஒரு நாட்டை வேற்றினத்தவரோ, அல்லது வெற்று நாட்டவரோ கைப்பற்ற முயலும்போது முதலில் பெண்களையும், குழந்தைகளையுமே பணயக் கைதிகளாக ஆக்கி மானபங்கப்படுத்துதல், பாலியல் சார்ந்த வன்முறைகளைச் செய்தல் என்பனவற்றினூடாக போராட்ட சக்தியை வீழ்த்துதல் என்பதே யுத்த விதிமுறைகளுக்கு அப்பால் மிகக் கீழ்த்தரமான எதிரி எனக்குறிக்கப்படும் கூட்டத்தால் மேற்கொள்ளப்படும்போது அடிப்படை மனவுறுதி சிதைந்து போகிறது. ஆண்களைச் சிறைப்பிடித்து அடிப்படை மனவுறுதியைச் சிதைக்க முடியாது. பெண்களை வைத்தே ஒரு இனம் வாழ்வதும் வீழ்வதும் உருவாக்கப்படுகிறது. ஒரு இனத்தின் பெரும் பலமே பெண்கள்தான். அதற்காக ஆண்களை நான் தரங்குறைத்ததாக மதிப்பிடுவதாக கருதக்கூடாது. முட்டையிடும் பெட்டைக் கோழிக்கு போராட்ட அறிவு எதற்கு அது சேவலைக் கண்டு பதுங்கிப் புணர்ந்து சந்ததி விருத்திக்கு மட்டுமே என்ற மனோபாவம் மாற்றப்படவேண்டும். பெண்களின் திறமைகளை வெளிக் கொணர வழிகள் உருவாக்கப்படவேண்டும். பெண்களை வாயால் போற்றிக் கொண்டே உதாசீனம் செய்யும் பலரை நான் கண்டிருக்கிறேன். அத்தகையவர்கள் மேற்கொள்ளும் பொது வேலைகள் தோல்வி அடைவதையும் பார்த்திருக்கிறேன். பெண்களை வெறும் அடுப்பங்கரைப் பாத்திரமாகவும், படுக்கை அறைப்போர்வையாகவும் கருதும் நிலை மாறாதவரைக்கும் ஆதிக்கமும், ஆளுமையும் கொண்ட ஆண்சிங்கங்கள் எதிலும் வெற்றி பெற முடியாது.

ஆண்சிங்கங்கள், ஆண்யானைகள் எல்லாம் உடல் பலத்தால் தலைமை தாங்கும் நிலையிலிருந்தாலும் அத்தலைமையை அவைக்கு உரியதாக்கி காத்து நிற்பவை அம்மிருகங்களைச் சார்ந்த பெண்பாலினமே. இவ்வுண்மையை உடல் சார்ந்த பலத்தில் ஆளுமையாக இருக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. சிங்கக்கூட்டங்களில் பெண் சிங்கங்களின் விருப்பிற்குரிய ஆண்சிங்கமே செல்வாக்காக நிற்கும்.

அடடா என்ன அறிவு!!!!

தன் மனதிற்கு உடன்பட்ட பேட்டை யாராவது பிடிக்கப் போனால் சேவல் கொத்தும் என்று சொன்னாலும் அது எல்லா நேரங்களிலும் அல்ல. சேவல் அந்தப் பேட்டுடன் காதல் வசப்பட்டிருக்கும் காலங்களில் மாத்திரமே. எதற்கும் மீண்டும் உங்கள் ஞாபகங்களைக் கிளறி உங்கள் வீட்டுச் சேவலின் நடவடிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்துங்கள் நெடுக்குத்தம்பி.

பகிர்ந்து உண்ணப் பேட்டை சேவல் அழைக்குமா? நெடுக்குத் தம்பி…. பதுங்காத பேட்டை தீனியைக் காட்டி கவனஞ் சிதற வைத்து தான் அதன் மேல் பரவுவதற்கு சேவல் செய்யும் சூழ்ச்சி பேடுகளைக் கூப்பிட்டு தீனியைக் காட்டுவது… ஏன் சேவலுக்கு பேடுக்கு மட்டுமே குடுக்கத் தோன்றுகிறது? குஞ்சுகளுக்கும் கூப்பிட்டுத் தீனியைக் காட்டலாமே. சேவல் பேட்டுக்கு பாதுகாப்பாக முட்டையிட உகந்த இடத்தை காட்டாமல் மைனர் மச்சான் மாதிரித் திரிந்தால் பேடு தானே பாதுகாப்பான இடத்தைத் தேடிக் கொள்ளுந்தானே. பேடுகள் மதில் ஏறி அடுத்த வளவுகளுக்குள் மேயப்போவது மிகமிகக் குறைவு. ஆனால் அநேகமான சேவலுக்கு தொழிலே மதில் பாய்ந்து மேய்வதுதான். தனக்குரிய நிலப்பரப்பை விட்டுவிட்டு அடுத்த நிலப்பரப்புக்கு அடிக்கடி மேய்ச்சல் அடிப்பதுதான் சிறந்த தலைமைத்துவப்பண்பா? என்ன நெடுக்குத் தம்பி ஆண்களின் தலைமைத்துவப்பண்பை இவ்வளவு கீழ்த்தரமாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள்?

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனக்குரிய நிலப்பரப்பை விட்டுவிட்டு அடுத்த நிலப்பரப்புக்கு அடிக்கடி மேய்ச்சல் அடிப்பதுதான் சிறந்த தலைமைத்துவப்பண்பா? என்ன நெடுக்குத் தம்பி ஆண்களின் தலைமைத்துவப்பண்பை இவ்வளவு கீழ்த்தரமாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள்?

இந்த அளவுக்குத்தான் பெண்கள் ஆண்களின் தலைமைத்துவம் பற்றி விளங்கி வைத்திருக்கிறார்கள் எனும் போது நாம் என்ன செய்ய முடியும்..??! ஆண் செய்வதை எல்லாம் கொடூர எண்ணம் கொண்டு ஆதிக்க எண்ணம் கொண்டு பார்த்தால் எல்லாமே அப்படித்தான் தெரியும். அப்படி நாமும் பெண்களை பார்க்கலாம். காட்டலாம். எத்தனையோ பெண்கள் பெற்ற குழந்தைகளைக் கூட கொன்றுவிட்டு வேறு ஆண்களை தேடிப் போயிருக்கிறார்கள். அப்படியான உதாரணங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக பெண்களையும் எடை போட்டால் உங்கள் நிலைமை என்னாகும்.

அப்படித்தான். சேவல் மதில் பாய்ந்து போகுது என்றால் பேடு சரியாக ஒத்துழைக்கவில்லை என்பதுதான் அர்த்தம். அதற்கு சேவலைக் குறை சொல்லி என்ன பயன். பேடு, சேவல் கவனித்தும் மதில் பாயுதுன்னா.. என்ன அர்த்தம்..???! உங்களின் கருத்துக்களில் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சுட்டிக்காட்ட எனக்கு இப்ப நேரமும் இல்ல. இந்தத் தலைப்பு அந்தளவுக்கு முக்கியமான ஒன்றும் இல்ல. அதனால் சுருங்க மேலே ஒரு உதாரணத்தோடு முடிச்சுக்கிறன். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படியே பிடுங்குப்ட்டுக்கொன்டிருங்கோ.ஆனால் சேவலும் பேடும் இயற்க்கை வழங்கிய வாழ்வை வழமாகவும் முழுமையாகவும் அனுபவிக்குதுகள்.அது ஏன் எங்களுக்கு மட்டும் ஏற்றமும் தாழ்வும் :)

ஏன் நாங்களும் எங்கள் வாழ்க்கையை உள்ள மட்டும் வாழ மறுக்கிறம்,சிந்தித்து பார்த்தால் வாழ்க்கை மிக இனிது. :lol: வாழ்க்கை வாழ்வதற்கே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிமை என்ற ஒன்றில்லை. இயலாமை.. முயலாமை.. இவைதான்.. அடிமை என்று சொல்லும் நிலைக்கு மனிதர்களைக் கொண்டு செல்கிறது. மனிதனைத் தவிர பிற உயிரினங்களில் இயலாமை.. இருந்தாலும்.. முயற்சி இருக்கும். ஆனால் மனிதரில் அப்படி அல்ல. தங்கி வாழ்ந்திடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அது அடிமைத்தனமாக அடையாளம் காட்டப்பட்டிருக்கலாம். உண்மையில் தங்கி வாழுதல் என்பது இயலாமை.. முயலாமையின் வெளிப்பாடு.

பெண்களிடம் முயலாமை.. இயலாமை அதிகம். அதைக் களையாமல்.. ஆண்களை திட்டித் தீர்த்துக் கொண்டு ஆதிக்கம் அக்கிரமம் என்று புலம்புவதில் பயனில்லை. இதுதான் பிற்போக்குத்தனம். தமிழர்களிடமும்.. இயலாமை வந்தால் முயலாமையும் கூட ஓடி வந்துவிடுகிறது. அதுதான் அவர்களை வீழ்ச்சிக்கு அடிமை வாழ்விற்கு இட்டுச் சென்றுள்ளது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"சட்டத்தை போட்டு அடக்குவதும் அடக்குமுறைதான். சட்டங்கள் அற்ற தேச பரிபாலனம் எப்படி சாத்தியமில்லையோ அதேபோல் தான் ஆணின் பலப்பாவிப்புக்கு இடமின்றிய மனித சமூகமும் சாத்தியமில்லை. பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான். ஆண் பெண்ணிற்கு சமன் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஆண் பெண்ணை விட உடல் வலுவானவன் என்பதே யதார்த்தம். ஆனால் உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது."

பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான்.

உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது.

மேலே உள்ள இரண்டு வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன. அல்லதுபோனால் எனது அறிவுக்கு எட்ட முடியாத சிர்தார்த்தமாக உள்ளன. எது எப்படியிருப்பினும் இயற்கை சாட்சியமாக எம் எல்லோருடைய கண்களின் முன்னாலேயே இருக்கின்றது. எல்லா பறவைகள் விலங்குகள் இடத்தும் ஆணை தெரிவு செய்து என்பது பெண்ணின் தேர்வாகவே உள்ளது. தன்னை கவர்ந்த ஒரு ஆண் துணையையே பெண்பால் தனது இனவிருத்திக்கு தேர்வு செய்கின்றது. இதன் பிரதிபலனே ஆண் குயில் மிக இனையாக கூவுவதற்கு எப்போதும் முயற்சி செய்துகொண்டிருக்கும் ஆண்மயில் தனது தோகையை பெரிதாக காற்றிலும் விரித்து ஆட முயற்சிக்கும்................. பெண்பாலை கவருவதற்கான ஆண்பாலின் செயல்கள் இப்படியே அடுக்கிகொண்டுபோகலாம். டிஸ்க்கோவறி தொலைகாட்சி சனல் பார்ப்வர்களுக்கு மிக அருமையாக நேரடியாக அவர்கள் பதிவாக்கி போடும் காட்சிகள் நினைவுவரலாம். ஆண்இனத்தின் தாம் அழகாக வேண்டும் பலமாக வேண்டும் என்பதெல்லாம்

பெண்பால் தன்னை தேடாது விட்டுவிடுமோ என்ற எண்ணத்தின் பயத்தின் கருவாலேயே இயற்கையில் வருகின்றது.

ஆனால் மனிதர்களுடைய சிந்தனையும் அறிவாற்றலும் மனிதர்களுக்கே எதிராகிவிட்டதன் பயனே தற்போதைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். சாதரண ஒரு மனிதனின் தனிபட்ட வாழ்கைமுதல் ஒரு இராஜாங்கத்தின் வாழ்வுவரை அது பாரிய பாதிப்புகளை உண்டுபண்ணுகின்றது.

மனித குழுமமே இன்னொரு மனித குழுமத்திற்கு எதிராகி நிற்கின்றது. ஒரு மனிதனே இன்னொரு மனிதனுக்கு எதிராகி நி;கின்றான்.

அவன்பால் கவரபடதாத கவர எந்த அடிப்படையும் இல்லாத இடத்து தனது உடல் வலுவை பாவித்து பெண்ணுடன் உறவை வைத்துகொள்கிறான். அந்தரங்கத்தின் உறவென்பதும் அது பயிற்ற கூடிய இன்பம் என்பதும் இருவரின் இணக்க பாட்டின்பாலும் அதனை தொடர்ந்த ஒத்துழைப்பின் பயனாலுமே வருகின்றது. ஆனால் இப்போது ஒரு சாரரின் வற்புறுத்தலினால் அது வற்புணர்வாகவே பல குடும்பங்களில் நடக்கின்றது. மேலான வாழ்விற்காக பணத்தை தேடி பின்பு வாழ்வையே தொலைப்பதுபோல இன்பம் தேடிபோன இடங்களில் துன்பங்களைமட்டுமே சேகரித்து நிற்பவர்கள் ஏராளம் (இதில் ஆண்பெண் விதிவிலக்கல்ல). அதற்கு அடிப்படை காரணம் தனது துணையை தானே தேடதாதுமாக இருக்கலாம். மனிர்களுடைய அறிவு வளர்ச்சியின் பிரகாரம் தனது அறிவை கொண்டு தனது சொந்த குணாதிசயங்களை மூடிமறைக்க முடிவதால் தானாக துணை தேடி செல்பவருக்கும் இன்பம் கிடைக்கும் என்பதற்கு யாரும் காப்பூறுதி தர முடியாது. மிருகங்களை போன்று துறந்த நிலையிலேயே அது சாத்தியம். அப்போ கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்த நாகரீகம்?

அடிப்படை மாறிவிட்டது அதை நாம் ஒர் இருவரோ ஒரு குறிப்பிட்ட குழுமமோ மாற்றிவிட முடியாது. ஆண்கள் என்னதான் பலசாலிகளாக இருந்தாலும் இப்போதைய பலம் பணத்தில்தான் தங்கி நிற்கின்றது. யாழ்களத்திலேயே முன்பு ஒரு தலைப்பு இருந்தது ஒரு பணக்கார பெண் மாப்பிளை தேடுகின்றார் என்றும் பல பேர் வரிசைகட்டி நின்றதும். ஆக பெண்கள் ஆண்களின் உடல் பலத்தை பணபலத்தால் பெற ஒரு வழியிருக்கின்றது................ ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்து ஏதிரான பிரச்சனைகளை முறியடிப்பதே இனிமேற்காலத்திற்கு உகந்த சிந்தனையாக இருக்க முடியும்.

தவிர எந்த நற்சிந்தனையும் யாராவது எழுதினால் வாசிக்கவே உதவும் யாருடைய தனிபட்ட வாழ்விற்கும் அது உதவபோவதில்லை.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை........ என்ற வாசகத்திலும் பொய் இல்லையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சட்டத்தை போட்டு அடக்குவதும் அடக்குமுறைதான். சட்டங்கள் அற்ற தேச பரிபாலனம் எப்படி சாத்தியமில்லையோ அதேபோல் தான் ஆணின் பலப்பாவிப்புக்கு இடமின்றிய மனித சமூகமும் சாத்தியமில்லை. பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான். ஆண் பெண்ணிற்கு சமன் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஆண் பெண்ணை விட உடல் வலுவானவன் என்பதே யதார்த்தம். ஆனால் உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது."

பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான்.

உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது.

மேலே உள்ள இரண்டு வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன. அல்லதுபோனால் எனது அறிவுக்கு எட்ட முடியாத சிர்தார்த்தமாக உள்ளன. எ உதவபோவதில்லை.

இதில் சித்தாந்தம் எதுவும் இல்லை. முதலாவது யதார்த்த நிலையைச் சொல்கிறது. இரண்டாவது தலைப்பிட்டவரின் எதிர்பார்ப்பைச் சொல்கிறது. இதுதான் வேறுபாடு அங்கு.

ஆண் விலங்குதான் எப்போதும் பெண்ணைக் கவர்கிறது என்பதும் சரியான தகவல் அல்ல. பெண் விலங்குகளும் ஆணைத் தேடிச் செல்வதுண்டு. பெண் விலங்குகள் ஆண்களைக் கவர நடத்தைகள் கொள்வதும் உண்டு. (நான் மனிதர்களை மையமாக கொண்டு இதைச் சொல்லவில்லை.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடிமை என்ற ஒன்றில்லை. இயலாமை.. முயலாமை.. இவைதான்.. அடிமை என்று சொல்லும் நிலைக்கு மனிதர்களைக் கொண்டு செல்கிறது. மனிதனைத் தவிர பிற உயிரினங்களில் இயலாமை.. இருந்தாலும்.. முயற்சி இருக்கும். ஆனால் மனிதரில் அப்படி அல்ல. தங்கி வாழ்ந்திடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அது அடிமைத்தனமாக அடையாளம் காட்டப்பட்டிருக்கலாம். உண்மையில் தங்கி வாழுதல் என்பது இயலாமை.. முயலாமையின் வெளிப்பாடு.

பெண்களிடம் முயலாமை.. இயலாமை அதிகம். அதைக் களையாமல்.. ஆண்களை திட்டித் தீர்த்துக் கொண்டு ஆதிக்கம் அக்கிரமம் என்று புலம்புவதில் பயனில்லை. இதுதான் பிற்போக்குத்தனம். தமிழர்களிடமும்.. இயலாமை வந்தால் முயலாமையும் கூட ஓடி வந்துவிடுகிறது. அதுதான் அவர்களை வீழ்ச்சிக்கு அடிமை வாழ்விற்கு இட்டுச் சென்றுள்ளது. :)

அற்புதமான வரிகள் நெடுக்கண்ணா............. பல நாட்களின் பின்பு உங்களிடம் இருந்து ஒரு நல்ல விடயத்தை பயிலுகின்றேன். உண்மைதான் வாழ்கை என்பதே ஒரு போராட்டம் என்று எத்தனையோ தடவை காதால் கேட்டாலும் நிஜமான வாழ்விற்கு திரும்பி போராடுவதை மனம் ஒரளவு ஏற்றாலும் சுற்றமும் சுற்றாடலும் அதை முளையிலேயே கிள்ளி விடுகின்றது. எல்லோருடனும் இணைந்தவாழ்வா? பிரிந்தவாழ்வா? என்ற கேள்வியே பல முறை தோணும்.

இதில் சிந்தாந்தம் எதுவும் இல்லை. முதலாவது யதார்த்த நிலையைச் சொல்கிறது. இரண்டாவது தலைப்பிட்டவரின் எதிர்பார்ப்பைச் சொல்கிறது. இதுதான் வேறுபாடு அங்கு.

ஆண் விலங்குதான் எப்போதும் பெண்ணைக் கவர்கிறது என்பதும் சரியான தகவல் அல்ல. பெண் விலங்குகளும் ஆணைத் தேடிச் செல்வதுண்டு. பெண் விலங்குகள் ஆண்களைக் கவர நடத்தைகள் கொள்வதும் உண்டு. (நான் மனிதர்களை மையமாக கொண்டு இதைச் சொல்லவில்லை.)

எனது அறிவுக்கு தெரிந்ததை பார்த்ததையே நான் எழுதினேன். ஆனால் உலகம் அதைவிட எவ்வளவோ பெரியது. எமக்கு தெரியாதது தெரிந்ததிலும்விட அதிகமானவை என்பதே உண்மை. நீங்கள் சொல்வதும் உண்மையே.

நான் சொன்னது சரி என்று மூன்று காலில் நிற்க நான் அசல் டிபிகல் தமிழனில்லை.சிங்களவன் கொண்டுபோகின்றான் என்று தானே எல்லோரும் போரட்டத்திற்கு போனாங்கள்.அவனை விட நாங்கள் கேவலமானவர்கள் என்று போகப் போக எல்லோரும் புரியும் காலம் வந்துவிட்டது.

இப்ப நடக்கின்றதைப் பாருங்கோஓஓஓஒ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.