Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது லட்சியங்களை மாற்றிக்கொள்பவன் எதனையும் அடைவதில்லை" - முதன்மை வோட்பாளர் சி. வரதராஜன்

Featured Replies

சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனி போட்டியிடுகின்றது.

தேசியத்தை வலுவாக ஆதரித்ததற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ திரு. செல்வராஜா கஜேந்திரன்இ திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரினால் உருவாக்கப்பட்ட இந்த முன்னனியில் போட்டியிடும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜனுடன் ஈழம் இ நியூஸ் (றறற.நநடயஅநநெறள.உழஅ) தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதனை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழச்சி அடைகின்றோம்.

யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜன் தொடர்பாக சிறு குறிப்பு:

திரு சி. வரதராஜன் அவர்கள் மிகச் சிறந்த தேசப்பற்றாளர் அவர் 1977 - 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியிருந்தார். பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்திருந்தார்.

தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன்இ 1997 - 1998 ஆம் காலப்பகுதியில் 4ம் மாடிஇ 6ம் மாடிஇ மற்றும் களுத்துறைச் சிறைகளிலும் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தார்.

நாலாவது ஈழப்போர் காலத்தில் 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற அவரின் கொள்கைப்பற்று தற்போது அவரை யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்நிறுத்தியுள்ளது.அவர் எமக்கு அளித்த நேர்காணல் வருமாறு:

கேள்வி: தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளராகிய உங்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சனைகள் இரண்டையும் முதன்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இது தொடர்பில் உங்களின் செயல் திட்டங்கள் எவ்வாறு உள்ளன?

பதில்: ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகள் எமது விடுதலைப் போராட்டம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. மனிதாபிமானப் பிரச்சனைகள் என்பது இவ் விடுதலைப் பேராட்டத்தின் விளைவாகத் தோன்றியதாகும். மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளத் தீர்த்துவிடமுடியாது.

ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண்பதன்மூலம் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கமுடியும். இதுதான் உண்மை. ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் காலம் வரை தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான தீர்வை ஒத்திவைக்க முடியாதவாறு அது இன்று பூதாகரமாக வளர்ந்துவிட்டது.

எனவே நாம் இன்று இவ்விரண்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சமாந்தரமான முறையில் மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.தமிழ்த் தேசியம்இ தமிழர் தாயகம்இ சுயநிர்ணய உரிமை என்ற பலமான மூன்று தூண்களே ஈழத் தமிழினத்தைத் தாங்கி நிற்கின்றன. இத் தூண்கள் தகர்க்கப்படுமாயின் இத் தீவில் எமது இனம் முற்றாகவே அழிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு.

உதாரணமாக தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அண்மைக் காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர் என்றும் அதனை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அடிக்கடி கூறிவருகின்றார்.

ஆனால் இது உண்மையல்ல. இறுதியாக எடுக்கப்பட்ட 2001ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி கொழும்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையான 22இ51இ274 பேரில் 17இ24இ459 பேர் சிங்களவர்களாகும். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 76.6 சதவீதமாகும். இம் மாவட்டத்தில் தமிழர்களின் மொத்தத் தொகை 2இ72.660 பேர் மட்டுமே. இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 12.1 சதவீதமாகும்.

இவ்வாறு உண்மையில்லாத ஒன்றை அடிக்கடி கூறுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அவர் கூறும் செய்தி என்னவென்றால்இ யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படப் போகின்றார்கள் நீங்கள் அதனை எதிர்க்காதீர்கள் என்பதேயாகும். இதனை முறியடிக்க வேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டில் சொல்லளவில் மட்டுமன்றி செயலளவிலும் உறுதியாக இருக்கவேண்டும்.

ஒரு நாடுஇ இரு தேசங்கள் என்ற கோட்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதன் மூலமே எமது அரசியற் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணமுடியும். அதைவிடுத்து இவையெல்லாம் வெறும் கோசங்கள்இ கனவுகள்இ யதார்த்தமற்றவை என்றெல்லாம் கூறி இவற்றைக் கைவிடுதல் எமது இனத்தை முற்றாக அழிப்பதற்குச் சமம். பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற வினாவும் எழுந்துள்ளது.

1970கள் வரை இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியடைந்த பின்னர் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அவற்றை அடையமுற்பட்டு அதுவும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற சந்தேகம் எழுவது இயற்கையே. ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்திய 30 வருட அகிம்சைப் போராட்டம் தமிழ் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர - சர்வதேசமயப்படுத்தப்படத் தவறிவிட்டது.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போல ஒரு வட்டத்திற்குள் நாங்கள் இருந்து கொண்டோம். ஆனால் கடந்த 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழ் அரசியற் பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு சென்று அதனை நியாயப்படுத்தி உள்ளது. எனவே இந்த இடத்திலிருந்து கொண்டு ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு பாராளுமன்ற அரசியல் ஊடாக தீர்வுகாணமுற்படுவது சாத்தியமானது. ஆனால் இதனை மேற்கொள்வதற்கு விட்டுக்கொடுப்புக்கள்இ மற்றும் சமரசங்களுக்குச் செல்லாத ஒரு பலமான - உறுதியான அரசியற் தலைமை - ஓர் அரசியல் இயக்கம் இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகின்றது.

இவ்வாறான ஒரு உறுதியான அரசியற் தலைமையின்கீழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என நம்புகின்றோம். இடம்பெயர் முகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்துதலும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் எம்முன்னுள்ள முக்கிய பிரச்சனைகளாகும். சர்வதேச சமூகத்தினதும் புலம்பெயர் தமிழ் மக்களினதும் ஒத்துழைப்புடன் இதனை மேற்கொள்ளமுடியும் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்மைப்பின் கொள்கைகளில் இருந்து நீங்கள் எந்த வகையில் வேறுபட்டு நிற்கின்றீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின்றது. கேட்டு எதனையும் பெறமுடியாது - தருவதை வாங்கிக்கொண்டு திருப்திப்படுவோம் என்ற நிலைக்கு கூட்டமைப்பு வந்துவிட்டது.

தமிழ் மக்களின் மனதில் ஓர் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி தமிழ் இனத்தை ஒரு தோல்வியடைந்த சமூகமாகக் காட்டி கிடைக்கின்றதை மட்டும் கொண்டு வாழப் பழகிக்கொள் என்ற நிலைக்கு எம்மக்களைக் கொண்டு செல்லமுற்படுகின்றது.ஆயுதப் போராட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து அடுத்த என்ன செய்வது? என்ற வேதனையில் இருந்த மக்களை ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு எடுத்தமுடிவு தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் அனாதையாக்கியது.

நாட்டின் ஜனாதிபதி யார் என்பதைத் தமிழ் மக்கள் தான் தீர்மானிக்கப் போகின்றார்கள் என்று உசுப்பேத்தி இறுதியில் தமிழ் மக்கள் இரண்டு முறை வாக்களித்திருந்தால் கூட ஜனாதிபதியைத் தெரிந்தெடுத்திருக்க முடியாது என்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.

அரசியல்ரீதியாகவும் தமிழ் மக்கள் பலமற்றவர்கள் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பது எனத் தமிழ்க் காங்கிரஸ் எடுத்த முடிவையொற்றி கூட்டமைப்பும் பகிஸ்கரிப்பது என்ற முடிவை எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் வெல்ல வைத்திருக்க மாட்டார்கள்.

அப்போது தமிழ் மக்களின் வாக்குப்பலம் முக்கியத்துவம் வாய்ந்தாகப் பேசப்பட்டிருக்கும். கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தவறான முடிவினை மேற்கொண்டு தமிழ் மக்களைதோல்வி மனப்பான்மைக்குள் வீழ்த்திஇ இனிமேல் எங்களால் ஒன்றுமே செய்யமுடியாது -இந்தியா சொல்வதைக் கேட்போம் என்ற நிலைக்குத் தமிழ் மக்களைக் கொண்டு வந்து விட்டு விட்டது. தற்போது கூட்டமைப்பு 30 வருடங்களுக்கும் முன்னால் உள்ள காலப்பகுதிக்கு எமது அரசியல் இலக்குகளைக் கொண்டு செல்ல முற்படுகின்றது.

ஆறுகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும். எமது கருத்தின்படி நாம் தோற்றுப்போன சமூகமல்ல. மாறிவரும் சர்வதேச ஒழுங்குகளுக்கேற்ப பாராளுமன்ற அரசியலின் ஊடாக எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கேள்வி : இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தாயகத்து அரசியல் பயணம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதன் அவசியம் தொடர்பில் உங்களின் கருத்துக்கள் என்ன?

பதில்: 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய கருத்து 'புலம்பெயர் மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

" எமது மக்களின் அரசியற் பிரச்சனையைத் தீர்ப்பதில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் எம்மால் நிராகரிக்கப்பட்ட பாராளுமன்ற அரசியலிற்குள் தற்போது நாம் புகுந்து அதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு மட்டுமன்றி மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும்கூட தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையே காரணம்.

புலம்பெயர் தமிழர்கள் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஜனநாயகமுறையில் பாராளுமன்ற அரசியலுக்குட்பட்டவகையில் தாயகத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமாந்தரமாக புலம்பெயர் தமிழ் மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரசியல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகள் தொடர்பாக ஓர்; உறுதியான தீர்வினைப் பெறக்கூடியதாக இருக்கும்.

கேள்வி : நீங்கள் யாழ் குடாநாட்டில் பிரதம வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள்இ உங்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களும்இ தேசியத்திற்கு ஆதரவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில் யாழ் மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன?

பதில்: இவ்விடத்தில் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவேண்டிய நிலை உள்ளது. நான் ஒரு அரசியல்வாதியல்ல. அரசியல் எனது தொழிலும் அல்ல. நான் ஒரு பொருளியல் ஆசிரியன்.

இதுவரைகாலமும் ஒரு அரசியல் நடவடிக்கையாளனாக மட்டுமே இருந்தவந்த நான்இ தற்போது நேரடி அரசியலில் ஈடுபடமுன்வந்ததற்குக் காரணம்இ தமிழர்களின் அரசியற் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமேயாகும். கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 30 வருடங்களிற்கும் முன்னுள்ள நிலைக்கும் அப்பால் கொணடு செல்ல முற்படுகின்றது.

"தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது இலட்சியங்களை மாற்றிக் கொள்பவன் எதனையும் அடைவதில்;லை" என்பது எனது நம்பிக்கை. தமிழர்களின் இலட்சியங்களை கூட்டமைப்பு வெறும் கோஷங்களாகவே இன்று பார்க்கின்றது. சலுகைகள் எல்லாம் தமிழ் மக்களின் உரிமைகளாக மாறக்கூடிய ஒரு அபாயம் இன்று நிலவுகின்றது.

இந்நிலைமையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்கான ஒரு வழிமுறையாகவே எனது நேரடி அரசியற் பிரவேசத்தைப் பார்க்கின்றேன்.நான் 1977 - 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியுள்ளேன்.

பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்தேன். தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் சிறையிலிருந்தேன்.

1997 - 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4ம் மாடிஇ 6ம் மாடிஇ மற்றும் களுத்துறைச் சிறைகளில் இருந்தேன். 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானேன். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசித்ததற்குக் கிடைத்த வெகுமதிகளாகவே நான் இவற்றைக் கருதுகின்றேன்.

எமது அணியில் மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் நேரடி அரசியலுக்குப் புதுமுகமான என்னை முதன்மை வேட்பாளராகத் தெரிவு செய்தமை தேசியத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகின்றேன். கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் என்னுடைய மாணவர்கள்.

நாங்கள் தமிழ்த் தேசியத்தை நேசித்தவர்கள் - நேசிக்கின்றவர்கள் என்பதை அவர்கள் அறிந்துள்ளர்கள்.அவர்களில் ஒருவர் தான் தோற்றாலும் பரவாயில்லை. சேர் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற தனது மனவிருப்பத்தை தனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் யாழ் மக்களின் ஒட்டுமொத்தமான கருத்தும் ஆகும். எனவே எமது வெற்றியை நாளைய சரித்திரம் கூறும்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நான்கு பிரிவுகளாக பிளவடைந்துள்ளது. இந்த நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் என்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?

பதில்: ஆரம்ப கட்டத்தில் இப் பிளவுகள் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். குறிப்பாக தமிழ்க் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து விலகியமை மக்கள் மனதில் பெரும் குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஏனைய பிளவுகள் தனி மனிதர்களின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரசின் வெளியேற்றம் ஒரு கட்சியின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது.

ஊடகங்களின் உதவியுடன் எம்மீது பல அவதூறுகளை கூட்டமைப்பு மேற்கொண்டது - மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தற்போது காங்கிரசின் வெளியேற்றத்தின் நியாயத்தன்மையை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனடிப்படையில் அவர்கள் ஒர் தீர்க்கமான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கேள்வி : தற்போதைய பொதுத்தேர்தலில் உங்களின் கட்சி யாழ்மாவட்டத்திலும்இ திருமலையிலும் மட்டுமே போட்டியிடுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களில் போட்டியிடவில்லைஇ அதற்கு சிறப்பு காரணங்கள் ஏதும் உண்டா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறான வழிநடத்தலுக்கு தலைமை வகிப்பவர்கள் மூன்றுபேர். அவர்களில் ஒருவர் திருகோணமலையில் போட்டியிடுகின்றார்.

ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார்கள். இந்த மூவரும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுவார்களேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான பாதைக்குத் திரும்பும் என நாம் நம்புகின்றோம். இங்கு சில தனி மனிதர்களைத் தோற்கடிப்பதற்காக நாம் களமிறங்கியுள்ளோம் எனக் கருதவேண்டாம். உண்மையில் தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே நாம் இவ்விரு மாவட்டங்களிலும் களமிறங்கியுள்ளோம்.

கேள்வி : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களில் சிலர் வெற்றி பெற்ற பின்னர் உங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் அவர்களை ஒருங்கிணைத்து செயற்படும் திட்டங்கள் உண்டா?

பதில்: நிச்சயமாக. எமது நீண்டகால செயற்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கூட்டமைப்பின் தவறான தலைமைகள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும்போது தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிக்கின்றவர்களோடு ஒருங்கிணைந்து செயற்படுவதில் எதுவித தடைகளும் இல்லை. இதுவே எமது விருப்பமும்கூட.

கேள்வி : திருமலையில் உங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் முன்னர் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற குற்றச் சாட்டுக்களை சிலர் முன்வைப்பது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?பதில்: திருமலை நகரசபைத் தலைவர் திரு.கௌரி முகுந்தன் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தது தொடர்பாகவே இச் சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

உள்ளுராட்சி சபைகள் தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி என்பவற்றில் மட்டுமே கவனம் செலுத்தமுடியும். எனவே இப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதிஇ அமைச்சர்கள் போன்றோரை சந்திப்பது தவிர்க்கமுடியாதது.

இதனை மட்டும் வைத்துக்கொண்டு கொண்டு அரசுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது. இது ஒருபுறமிருக்கஇ கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் (இவர் தற்போது கூட்டமைப்பின் வேட்பாளரும் கூட) வட பகுதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதை அடிப்படையாகக் கொண்டு அவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டமுடியுமா?

கேள்வி : யார் வெற்றி பெற்றாலும் ஈழத்தமிழர் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா அவர்களுடன் பேசியே தீரவேண்டும் என்பது தற்போது கட்டாயமாகி விட்டது. இந்த நிலையில் இந்தியாவுடன் உங்களின் அனுகுமுறைகள் எவ்வாறு அமையப் போகின்றது?

பதில்: இந்தியத் தரப்போடு பேசவேண்டும் என்பதில் எமக்குக் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் - தோற்றுப் போய்விட்டோம் என்ற அடிப்படையில் இந்தியாவிடம் சராணாகதி அடையமாட்டோம். எமக்கு என்ன தேவை என்பது தொடர்பாக இந்தியாவோடு பேசுவோம்.

மாறாக இந்தியாவின் மனதை நோகடிக்கக்கூடாது - இந்தியா எமக்குத் தர விரும்புவதையே நாம் அவர்களிடம் கேட்கவேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் நாம் இல்லை.

கேள்வி : தமிழ் மக்களிடம் உங்கள் கட்சிக்கு உள்ள ஆதரவுகள் எவ்வாறு உள்ளன?பதில்: பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் எம் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.

எம்முடன் கலந்துரையாடுகின்ற மக்கள் எம்மிடம் விடுக்கின்ற ஓரேயொரு வேண்டுகோள் என்னவென்றால் கூட்டமைப்பின் தலைமைகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட - தற்போது மேற்கொண்டுவருகின்ற நயவஞ்சகமான நடவடிக்கைகளை மக்கள் முன் வெளிப்படுத்துங்கள் என்பதேயாகும்.

கேள்வி : யாழ் மாவட்டத்தில் தற்போது ஏறத்தாள 324 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அங்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டிகள் எவ்வாறு இருக்கும் என எண்ணுகிறீர்கள்?

பதில்: 16 அரசியற் கட்சிகளும் ஏறத்தாழ 11 சுயேச்சைக் குழுக்களும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இவற்றில் பல அரசியற் கட்சிகள் - சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றின் பெயர்கள்இ அவற்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள்இ அவற்றின் சின்னங்கள் என்பன எதுவுமே மக்களுக்குத் தெரியாது.

5 அரசியற் கட்சிகள் பற்றிய விபரங்களை மட்டுமே மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ சிவாஜிலிங்கத்தின் தலைமையில் போட்டியிடும் இடதுசாரி முன்னணிஇ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஈ.பி.டி.பி)இ ஐக்கிய தேசியக் கட்சி என்பனவே அவையாகும். இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்ட இரண்டு கட்சிகளும் சிங்களக் கட்சிகள் என்றவகையில் மக்களின் ஆதரவைப் பெருமளவிற்கு இழந்தவையாகவே உள்ளன.

குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தனிப்பட்ட நபர்களுக்காக சில வாக்குகளைப் பெறமுடியும். அடுத்து சிவாஜிலிங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாவட்டத்தில் 3205 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.எனவே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் (தமிழக் காங்கிரஸ்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான நேரடிப் போட்டியாகவே யாழ் தேர்தல் களம் அமைந்துள்ளது என மக்கள் கருதுகின்றனர்.

இப் போட்டியில் நாம் முன்னிலை பெற்று வருகின்றோhம் என்பதே மக்களின் கருத்தாகும். நாம் மக்களுக்குள் இறங்கிக் கடுமையாக வேலை செய்தால் - எமது முன்னணியின் கொள்கைகளை மக்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தினால் மாபெரும் வெற்றியை நாம் அடையமுடியும் என மக்கள் கருதுகின்றனர்.

2004ம் ஆண்டுத் தேர்தலில் பெற்ற ஆசனங்களைப் போன்று இம்முறையும் பெறுவீர்களா என்று கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரிடம் கொழும்பு பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் இடம்பெற்ற பேட்டியொன்றில் கேட்கப்பட்ட வினாவிற்கு அவர் கூறிய பதில் அதைவிட சில ஆசனங்கள் குறைவாகவே பெறுவோம் என்பதாகும்.

அதற்கு அவர் கூறிய காரணம் கடந்த தேர்தலில் யுத்த நிறுத்தம் நிலவியது - மக்கள் சுந்திரமாக வாக்களிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அன்று யுத்தநிறுத்தம் இருந்தது.

இன்று யுத்தமே இல்லையல்லவா. இவ்வாறான சூழ்நிலையில் முன்னரிலும் கூடுதலான ஆனங்களையல்லவா பெறவேண்டும். எனவே எங்களைப் பற்றிய பயமே தாங்கள் குறைந்த ஆசனங்களையே பெறுவோம் என்று கூறியதற்குக் காரணமாகும்.

கேள்வி : யாழ்குடாநாட்டில் உள்ள பிரபல ஊடகங்களில் ஒன்றான உதயன் பத்திரிகையின் உரிமையாளர்இ தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலும்இ வீரகேசரியின் ஊடகவியலாளர் ஐ.தே.கவிலும் போட்டியிடும் நிலையில் அங்கு ஒரு ஊடகப்பரப்புரை உங்களுக்கு எதிராக வலுப்பெறும் சாத்தியங்கள் உண்டா? அவ்வாறாயின் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

பதில்: நீங்கள் குறிப்பிட்டது போன்று அப் பத்திரிகைகள் சார்ந்த ஊடகவியலாளர்கள் போட்டியிடுவதனால் அப் பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து தடம்புரண்டு பக்கச் சார்புடன் செயற்படுவதாக மக்கள் உணர்கின்றனர்.

எமது செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும்இ சில அறிக்கைகளை - செய்திகளை மிகவும் காலம் தாழ்த்தி வெளியிடுவதுமான நடவடிக்கைகளில் பெரும்பாலான பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன.

நாம் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியற் கட்சியாகப் போட்டியிடுகின்றபோதிலும்கூட எம்மை ஒரு சுயேச்சைக் குழு என்றும்இ வரதர் அணி என்றும் கொச்சைப்படுத்துகின்ற தன்மையும் காணப்படுகின்றது.

நாம் அன்றாடம் மக்களைச் சந்திப்பவர்களாக இருப்பதனால் செவி வழியாக எம்மைப் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைகின்றன. குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் நான் தினமும் மாணவர்களை வகுப்பறையில் நேரடியாகச் சந்திக்கின்றேன். இதன் மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது.

கேள்வி : நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: பெரும்பாலான புலம் பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவுகளை தொடர்ந்து எமக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனது பழைய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமெங்கும் பரவியுள்ளனர்.

நான் தேர்தலில் போட்டியிடுவததை அறிந்தவுடன் தமது மகிழ்ச்சியையும் ஆதரவுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாம் பணபலம்இ ஊடகபலம் வாய்ந்த சக்திகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். மக்கள் பலத்தை மட்டும் நம்பியே இப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.

இப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்களின் பெரும் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். இணையத் தளங்களினூடாக தங்கள் ஆதரவுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்படவேண்டும். தாயகத்திலுள்ள தங்களின் உறவுகளுக்கு உண்மைகளை வெளிப்படுத்தி எமக்குப் பின்னால் அணி திரளச் செய்யவேண்டும். பொருளாதாரரீதியான ஆதரவையும் நாம் நாடி நிற்கின்றோம்.

கேள்வி : வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தென்னிலங்கை மற்றும் மலையக பகுதிகளில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் இணைந்து இயங்குவது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்: வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் தென்னிலங்கை மற்றும் மலையகப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் வேறுபட்டவை.

எனினும் இவ்விரண்டு பகுதி மக்களுக்கும் பொதுவான சில அரசியற் பிரச்சனைகளும் குறிப்பாகப் பொருளாதாரப் பிரச்சனைகளும் உள்ளன. இவற்றினடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதுவித தடைகளும் இல்லை.

மறைந்த மலையகத் தலைவர் திரு. தொண்டைமான் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

Edited by kalaivani

தடைகளை நீக்குவதற்குப் போராட்ட வடிவங்கள் மாறலாம். இப்போதானே வந்திருக்கிறார். தானே மாறிக்கொள்வார்.

தடைகளை நீக்குவதற்குப் போராட்ட வடிவங்கள் மாறலாம். இப்போதானே வந்திருக்கிறார். தானே மாறிக்கொள்வார்.

போராட்ட வடிவங்கள் என்பதும் லச்சியம் என்பதும் இரு வேறானவை. லட்ச்சியத்தை அடைய வேறு வேறான பாதைகள் அமையலாம் ஆனால் போக வேண்டிய இடத்தையே மாற்றினால்.?

போராட்ட வடிவங்கள் என்பதும் லச்சியம் என்பதும் இரு வேறானவை. லட்ச்சியத்தை அடைய வேறு வேறான பாதைகள் அமையலாம் ஆனால் போக வேண்டிய இடத்தையே மாற்றினால்.?

அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் தானே மாறிக்கொள்வார். புதியவர்தானே. ஆரம்பத்தில் வேகம் இருக்கும். ஒட்டுக்குழுக்களும் படையினரும் நெருக்குதல் கொடுக்கும் போது குடும்பத்திரே மாற்றிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் தானே மாறிக்கொள்வார். புதியவர்தானே. ஆரம்பத்தில் வேகம் இருக்கும். ஒட்டுக்குழுக்களும் படையினரும் நெருக்குதல் கொடுக்கும் போது குடும்பத்திரே மாற்றிவிடுவார்கள்.

அகிம்சை

ஆயுதம்

இந்தியா

சர்வதேசம்

அழிவுகள்

எல்லாவற்றையும் கண்டவர்களை தூக்கி எறிந்த எமக்கு இவர்பெரிதா..

தூக்கி எறிவோம்

ஆனால் தமிழனது நிலை....

அகிம்சை

ஆயுதம்

இந்தியா

சர்வதேசம்

அழிவுகள்

எல்லாவற்றையும் கண்டவர்களை தூக்கி எறிந்த எமக்கு இவர்பெரிதா..

தூக்கி எறிவோம்

ஆனால் தமிழனது நிலை....

உயிர் அச்சுறுத்தல் என்பது யாரையும் மாற்றக் கூடியது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் அவர்களின் நிலையைப் பார்த்தீர்களா? விடுதலைப்புலிகள் பலமுடன் இருக்கும்வரை எந்த உடைவுகளையும் காணாத தமிழர் அமைப்புகள் தேசியம் என்று கூறிக் கொண்டு அடிபடுகின்றன. இதுதான் தேசியமா? இவ்வளவு காலமும் காக்கப்பட்ட தேசியம் இன்று இருக்கும் நிலை?

நாய்க் கூட்டங்கள்போல் எமக்குள் நாமே அடிபட்டுக் கொள்கின்றோம். கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறது என்கிறார்கள். அப்படியென்றால் ஏனைய தமிழ்ப்பிரிவினர் இலங்கையரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இப்படித்தான் தமிழர் நிலை.

அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் தானே மாறிக்கொள்வார். புதியவர்தானே. ஆரம்பத்தில் வேகம் இருக்கும். ஒட்டுக்குழுக்களும் படையினரும் நெருக்குதல் கொடுக்கும் போது குடும்பத்திரே மாற்றிவிடுவார்கள்.

அடிச்ச சிங்களவனுடன் சேர்ந்து வாழ முடியாது எண்று சொல்லி தான் இவ்வளவு காலமும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் நடந்ததுக்கான தேவையும் , காரணமும் இன்னும் அப்பிடியே தான் இருக்கிறது. எதுவும் மாறவில்லை.

அப்படி இருக்கும் போது போக வேண்டிய இடம் என்பதும் தெளிவாக தான் இருக்கிறது. அதை தெளிவாக்க முயல்பவர்கள் உங்களோடை அடிப்பாட்டுக்கு வருபவர்களாக உங்களுக்கு தெரிவது ஆச்சரியமாக இருக்கிறது.

உயிர் அச்சுறுத்தல் என்பது யாரையும் மாற்றக் கூடியது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் அவர்களின் நிலையைப் பார்த்தீர்களா? விடுதலைப்புலிகள் பலமுடன் இருக்கும்வரை எந்த உடைவுகளையும் காணாத தமிழர் அமைப்புகள் தேசியம் என்று கூறிக் கொண்டு அடிபடுகின்றன. இதுதான் தேசியமா? இவ்வளவு காலமும் காக்கப்பட்ட தேசியம் இன்று இருக்கும் நிலை?

நாய்க் கூட்டங்கள்போல் எமக்குள் நாமே அடிபட்டுக் கொள்கின்றோம். கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறது என்கிறார்கள். அப்படியென்றால் ஏனைய தமிழ்ப்பிரிவினர் இலங்கையரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இப்படித்தான் தமிழர் நிலை.

தேசியம் எண்டதை புறம் தள்ளிவிட்டு ஒற்றை ஆட்ச்சிக்குள் தீர்வு எண்று சொல்லும் சம்பந்தனும். தமிழர்களுக்கு சுயநிர்ணயம் வேன்டும் எண்று சொல்லுபவர்கள் இருவரும் தேசியம் எண்டதுக்கை வருகிறார்கள் எண்டு சொல்கிறீர்களோ.?

Edited by பொய்கை

அடிச்ச சிங்களவனுடன் சேர்ந்து வாழ முடியாது எண்று சொல்லி தான் இவ்வளவு காலமும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் நடந்ததுக்கான தேவையும் , காரணமும் இன்னும் அப்பிடியே தான் இருக்கிறது. எதுவும் மாறவில்லை.

அப்படி இருக்கும் போது போக வேண்டிய இடம் என்பதும் தெளிவாக தான் இருக்கிறது. அதை தெளிவாக்க முயல்பவர்கள் உங்களோடை அடிப்பாட்டுக்கு வருபவர்களாக உங்களுக்கு தெரிவது ஆச்சரியமாக இருக்கிறது.

தேசியம் எண்டதை புறம் தள்ளிவிட்டு ஒற்றை ஆட்ச்சிக்குள் தீர்வு எண்று சொல்லும் சம்பந்தனும். தமிழர்களுக்கு சுயநிர்ணயம் வேன்டும் எண்று சொல்லுபவர்கள் இருவரும் தேசியம் எண்டதுக்கை வருகிறார்கள் எண்டு சொல்கிறீர்களோ.?

தமிழர் பிரச்சனைகளும் அதன் அடிப்படைகளும் இன்னமும் அப்படியேதானிருக்கின்றன. எதன் ஆதரவைப் பெற்று நோக்கத்தை அடைய நாம் முற்பட்டிருக்கின்றோம். எந்த ஆதரவும் தமிழருக்குச் சாதகமாவில்லை. மேற்குலகம் சில வழிகளைத் திறந்துவிட்டிருக்கிறது. அதனை;பலப்படுத்தக் கூட நமது மக்கள் தயாராகவில்லை.

மேற்குலகை நம்பி செயலில் இறங்கினாலும் தமது தேவையை அடைந்தபின்னர் தமிழரைக் கைவிட்டுவிடுவார்கள். இந்தியா நமது அடைவுகளை ஒருபோதும் ஆதரிக்காது. அதுபோல் சர்வதேசமும் ஆதரிக்காது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களது தேவைகளையெல்லாம் ஒருமித்து நிறைவேற்ற முடியாது. இனிமேல் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கோ, அல்லது ஒரு மக்கள் போராட்டத்திற்கோ தாயகத்தில் வசிக்கும் மக்கள் தயாரில்லை. காரணம் ஆதரவும் பாதுகாப்பின்மையுமே. பாதிப்புகளை இன்றும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள்தான்.

சிங்களவரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் குறைத்து மதிப்பிடுவதின் ஒரு பகுதிதான் எமது பிரிவுகளும் கோஷங்களும். பிரச்சனைகளுக்கான தீர்வைக் கோரவேண்டிய நேரம் இதுவல்ல.

தற்போதைய நிலவரத்தின் பிரச்சனையை உணரவேண்டும் என்பதே எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

குழிக்குள் இருப்பவர் வெளியில் நிற்பவரிடம் இருக்கும் கயிறைக்கேட்கின்றார்

மற்றவர் கயிறு வேண்டாம் எங்காவது போய் தங்கச்சங்கிலி எடுத்துவா என்கிறார்

. பிரச்சனைகளுக்கான தீர்வைக் கோரவேண்டிய நேரம் இதுவல்ல.

தற்போதைய நிலவரத்தின் பிரச்சனையை உணரவேண்டும் என்பதே எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வி : தற்போதைய பொதுத்தேர்தலில் உங்களின் கட்சி யாழ்மாவட்டத்திலும்இ திருமலையிலும் மட்டுமே போட்டியிடுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களில் போட்டியிடவில்லைஇ அதற்கு சிறப்பு காரணங்கள் ஏதும் உண்டா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறான வழிநடத்தலுக்கு தலைமை வகிப்பவர்கள் மூன்றுபேர். அவர்களில் ஒருவர் திருகோணமலையில் போட்டியிடுகின்றார்.

ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார்கள். இந்த மூவரும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுவார்களேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான பாதைக்குத் திரும்பும் என நாம் நம்புகின்றோம். இங்கு சில தனி மனிதர்களைத் தோற்கடிப்பதற்காக நாம் களமிறங்கியுள்ளோம் எனக் கருதவேண்டாம். உண்மையில் தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே நாம் இவ்விரு மாவட்டங்களிலும் களமிறங்கியுள்ளோம்.

நேரடியாக சொல்லாம்தானே வன்னியில் கிசோர், கனகரத்தினம், மட்டக்களப்பில் தங்கேஸ்வரி, யாழ்ப்பணத்தில் ககேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன்..மற்றது சிவாஜிலிங்கம்.திரிகோணமலையில் யாரும் இல்லாதால் ......கட்சிகளும் கொடிகளும் மாறலாம் ஆனால் கொண்ட கொள்கை ஒன்றுதான் தோழர்களே. உங்களைவிட பிள்ளையான் , டக்லஸ் மானஸ்தர்கள் , கண்ணியவான்கள், தமிழின காவலர்கள்...தேசியவாதிகள் விடுதலை ?சிங்கங்கள்....

வரதராஜன் என்னத்திற்கு இணைந்துள்ளாரோ தெரியாது ஆனால் மற்றவர்கள் எல்லோருக்கும் தெளிவான திட்டம் உண்டு. கூட்டமைப்பு இந்தியாவிடம் சோரம் போனது என்பவர்கள் சோரம் போன இடம் தான் என்னவோ? இதற்க்கு மேல் இதில் எழுதுவதர்ற்கு என்ன இருக்கு..

புலம் பெயந்தவர்களுக்கு சொல்லக்கூடியது இதுதான்..யாரும் நினைக்க, யோசிக்க முடியாத இடத்தில் எல்லாம் "எதிரி" (அவனே இன்று பலரின் நண்பன்) உள்ளான் ...தாயகம் , தன்னாட்சி , சுயநிர்ணயம் என்று ஒருவன் இலங்கையில் சொல்லுகிறான் அதற்காக பாதை வகுத்துள்ளோம் என்றால் அவன்/அவர்கள் யாரென அறிந்து கொள்ள சிறிது தேடல் செய்யுங்கோ ...

  • கருத்துக்கள உறவுகள்

அவத்தார் திரைப்பட இயங்குனரின் பேட்டியில் அப்படத்தின் மூலக்கதையையும் ஆங்கிலேயரது காலனித்துவ காலத்தையும் ஒப்பிட்டு அதன் குற்ற உணர்வின் வெளிப்பாடே அகதிகள் தொடர்பான மேற்குலகின் நிலைப்பாடு என்ற அவரது கூற்றால் இதுவரை காலமும் அற்புதம் அபாரம் என பாராட்டிய மேற்குலக அடிப்படைவாதிகள் இன்று அவரையும் அவரது படைப்பின் உரிமைத்துவத்தின் மீது கேள்விகள் எழுப்புகின்றனர்,

அடிப்படைவாதிகள் தமது பலத்தின் மூலம் எப்போதும் அடக்குமுறையாளர்களாகவே இருப்பார்கள்

சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரகளின் கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் அஸ்ரப் அவர்களின் காலத்தில் தமது உரிமையை எந்த அடக்குமுறைக்கும் பயப்படாமல் அப்போதைய புறச்சூழலுக்கு தகுந்தவாறு உறுதியாக நின்ற விதத்தை தமிழ்க்கட்சிகள் பழக வேண்டும்.

அவர்களிடம் ஆயுதம் இருக்கவில்லை ஆனால் அரசியல் பேரம் பேசும் சக்தி இருந்தது, அது எதனால் அவர்களிடம் கொஞ்சமாவது மூளை இருந்தது,

ஆங்கிலத்தில் சொல்வார்கள் "அறிவுதான் பலம்" ஆனால் நம்மவர் எல்லாத்தையும் விட்டால்தான் அரசியலே நடத்தலாம் என பிழையாக விவாதித்து அரசியல்வாதிகளின் தப்புத்தாளத்திற்கு துணை சேர்க்கிறார்கள்.

இன்று கூட தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை இழக்கவில்லை சிங்களம் பல அச்சுறுத்தலை சர்வதேச ரீதியாக எதிர்கொள்கிறது அதனால் தமிழ் அரசியல் கட்சிகள் புலம்பெயர் தமிழர் என்றபலத்துடன் சேர்ந்து அதை சாதிப்பதை விட்டு சிங்களத்துடன் சேர்ந்து அதை நீர்த்து போகச்செய்தால் அது தமிழருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சிறுபானமையினருக்கும் எதிரானது.

  • கருத்துக்கள உறவுகள்

.. ..

--------------------------------------------------------------------------------

இன்றைய படம்

"எல்லாளன்"

மார்ச் 7 முதல் பிரித்தானியாவில் "எல்லாளன்"

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" உறுதிமொழி

தேசியத்தில், கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்: ஜெயானந்தமூர்த்தி

திகதி: 11.03.2010 // தமிழீழம்

வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கையில் உறுதியாகவுள்ளோரை இனங்கண்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சங்கதிக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

"இன்று நாம் ஒரு பொதுத்தேர்தலை சந்தித்துள்ளோம். இத்தேர்தலின் மூலம் வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அதுவும் எமது அடிப்படை தேசியத்துடனான கொள்கையில் உறுதி கொண்டவர்களின் பிரதிநிதித்துவமே காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக எமது அடிப்படைக் கொள்கையில் தளம்பல் போக்குள்ளவர்களை அல்லது வேறு சக்திகளின் பின்னால் குறிப்பாக இந்தியா போன்றவற்றின் பின்னால் செல்பவர்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படுவதால் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனமும் ஏற்படப்போவதில்லை. இதனை வடகிழக்கு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இதனால்தான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் தொடர்பாக மக்கள் விழிப்படைந்துள்ளனர். தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம், இறைமை என்பனவற்றை அடிப்படையில் புறந்தள்ளிவிட்டு ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சிலர் விடாப்பிடியாக நின்றதன் விளைவே தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக நின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தருணத்தில் எனது கருத்துக்களையும் அவர் பெற்றிருந்தார்.

எனினும் இத்தேர்தலில் இருந்து விலகுவதால் அடிப்படை கொள்கையில் உறுதிப்பாடு இல்லாதோர் மக்கள் பிரதிநிதிகளாக வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதைத் தடுத்து நிறுத்துவதென்றால் இத்தேர்தலில் தனித்து நின்றாவது போட்டியிட வேண்டும் என்ற முடிபு எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கு அக்கட்சியில் அதிகாரத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட ஓரு சிலரின் நடவடிக்கைகளே காரணம்.

இவர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்றோ அல்லது அனைவரையும் அரவணைத்தோ நடக்காததனால் ஏற்பட்ட விளைவே இதுவாகும். எனினும் நாம் கூட்டமைப்புக்குள் எந்தவித பிளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவன் என்ற வகையில் அந்நாட்களில் நாங்கள் ஓரிருவர் இதற்காக பட்ட கஸ்டங்களும் துன்பங்களும் எனக்குள் இன்றும் உறைந்து போயுள்ளது.

இந்த வகையில் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதையோ அல்லது சிதைவதையோ நான் விரும்பவில்லை. அதற்காக நாங்கள் பல முயற்சிகள் விட்டுக் கொடுப்புகளைச் செய்தும் பலனில்லை. அவர்கள் தமது பிடிவாதத்திலிருந்து இறங்கிவர முடியாதவர்களாக தமது முடிவுகளை ஏனையோரிடம் திணிப்பவர்களாகவே இருந்தனர். உண்மையில் நான் உட்பட கொள்கையில் விட்டக் கொடுக்காமல் இருந்தவர்களை எப்படியாவது கட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டுமென்ற முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இது இந்திய அரசின் திட்டமும் கூட.

இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்தியாவின் வழிகாட்டலில் ஐக்கிய இலங்கைக்குள் குறைந்த பட்சம் கிடைக்கக் கூடிய தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர்களாகவே இவர்கள் இருப்பர். இந்தத் தீர்வு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்ட மாகாணசபை நிருவாக முறைமையைவிட குறைவானதாக இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே இன்றைய நிலையில் தமிழ் தேசியத்தைக் காப்பாற்றக் கூடிய அக்கொள்கையில் தளராமல் உறுதியாக உள்ளவர்களை இனங்கண்டு அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டிய கடமை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உள்ளது. இதையே வடகிழக்கு மக்கள் தற்போது உணர்ந்தும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே தவிர தனிமனிதர்களின் சுயநலத்திற்காக உருவானதல்ல. இந்த வகையில் கொள்கையை புறந்தள்ளிவிட்டு சுயநல அரசியல் நடத்த இடமளிக்க முடியாது. எனவே இதன் பின்னணியில் காலத்தின் தேவையாகவும் கட்டாயத்தின் நிமிர்த்தமும்; கொள்கையின் அடிப்படையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இரு மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள மக்கள் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை தெரிவு செய்யும் வகையில் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. தவிர கொள்கையை உதட்டளவில் கோசமிட்டுக் கொண்டும் மக்களை ஏமாற்றும் கருத்துக்களைக் கூறிக் கொண்டும் போட்டியிடுபவர்களை இம்மக்கள் இனங்கண்டு தக்க பாடம் புகட்டுவார்கள். இதன் மூலம் தமிழ் தேசியத்தை எதிர்வரும் காலங்களில் நாம் கட்டிக்காக்கவும் காப்பாற்றவும் முடியும்.

இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த ஒருசிலரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தைத் தமது கையில் வைத்துக் கொண்டு ஏனையோரின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சசையாகச் செயற்பட்டவர்கள். இவர்கள் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு உட்பட பெருமளவான விடயங்களில் தன்னிச்சையாகவே செயற்பட்டனர். ஏனைய உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் என்பதைக் கூட அலட்சியம் செய்தவர்களாகவே நடந்து கொண்டனர்.

கடந்த ஐனாதிபதி தேர்தலில் எடுத்த முடிவு, நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் முடிவு என்பன கூட பக்கச் சார்பானதாகவே இருந்தன. நீண்டகாலம் வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு சிலர் கூட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பலர் ஓய்வூதிய வயதைக் கொண்டவர்களாக உள்ளனர். ஒரு சிலர் சிங்கள தேசியக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்கள், மேலும் ஒருசிலர் கொள்கைப்பற்று இன்றி ஆயுதக்குழுக்களுடன் இறுதிவரை தொடர்பு வைத்திருந்தவர்கள். இவர்களுக்கே கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். எனவே இந்த யதார்த்தத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களித்து ஆதரவு வழங்குவதன் ஊடாகவே எதிர்காலத்தில் எமது தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பதை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்ற முடியும். அத்துடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து கூட்டமைப்பின் ஊடாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களையும் இணைத்துச் செயற்படமுடியும்.

இதனால் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எந்தவொரு சக்தியுடனும் பேரம் பேசமுடியும். இதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவது இன்றைய காலத்தில் ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமையாகவும் உள்ளது. இதற்கிடையில் புலம் பெயர் தேசத்திலும் சரி தாயகத்திலும் சரி சிலர் வடகிழக்கு அரசியல் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் அதனூடாக தாயகம், சுயநிர்ணய உரிமை, இறைமை, தேசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சிந்திக்காமல் பிரதேசவாத கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். இது எமது தாயக ஒருமைப்பாட்டுக்கு மிகவும் ஆபத்தான கருத்தியலாகவே உள்ளது.

இவ்வாறானவர்கள் வடகிழக்கு பிரிக்கப்பட்டதை மானசீகமாக ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றார்களோ என்ற ஐயப்பாடும் எனக்கு எழுகின்றது. அது மாத்திரமின்றி சில ஊடகர்கள் இப்பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதன் ஊடாக அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, மக்களுக்கான சலுகைகளை பெறமுடியும் எனவும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை அனைத்தும் மக்களுக்கு இன்னியமையாதவைதான். ஆனால் இவை வெறும் சலுவைகளே தவிர தமிழர்களின் உரிமைகள் அல்ல என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வடகிழக்கின் ஒருமைப்பாட்டின் ஊடாகவே நாம் எமது தாயகவிடுதலையை பெறமுடியும் அதற்காகவே நாம் இரத்தம் சிந்திப்போராடினோம் என்பதையும் எவரும் மறந்துவிட முடியாது.

கடந்த 30 வருட போராட்ட காலத்தில் எமது இனத்தின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களின் இலட்சிய கனவுகளை நாம் மறந்துவிட முடியாது. அவர்களின் கல்லறைகளின் மேல் நின்று நாம் களிப்படையவும் முடியாது. அவர்களின் கனவுகளை நாம் நனவாக்க வேண்டும்.

நான் தேசியத் தலைவரை கடந்த 2008 நவம்பர் மாதம் சந்தித்தபோது அவர் கூறிய ஒரு விடயம் இன்றும் என் இதயத்தில் ஆழமாய் பதிந்துள்ளது. "நாம் எமது இறைமையையும் உரிமையையும் எக்காரணம் கொண்டும் எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. எமது இனத்தின் விடுதலைக்காக தமிழர்கள் இறுதிவரை போராட வேண்டும். அதன் மூலமே எமது இனம் விடுதலை பெறமுடியும்." என்றார். இதுதான் உண்மை எமது உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. யாரிடமும் அடவு வைக்கவும் முடியாது.

இந்த யதார்த்தத்தை நாம் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். எனவே வடகிழக்கின் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் தேசியத்தில். கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். என்று ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சனைகளும் அதன் அடிப்படைகளும் இன்னமும் அப்படியேதானிருக்கின்றன. எதன் ஆதரவைப் பெற்று நோக்கத்தை அடைய நாம் முற்பட்டிருக்கின்றோம். எந்த ஆதரவும் தமிழருக்குச் சாதகமாவில்லை. மேற்குலகம் சில வழிகளைத் திறந்துவிட்டிருக்கிறது. அதனை;பலப்படுத்தக் கூட நமது மக்கள் தயாராகவில்லை.

மேற்குலகை நம்பி செயலில் இறங்கினாலும் தமது தேவையை அடைந்தபின்னர் தமிழரைக் கைவிட்டுவிடுவார்கள். இந்தியா நமது அடைவுகளை ஒருபோதும் ஆதரிக்காது. அதுபோல் சர்வதேசமும் ஆதரிக்காது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களது தேவைகளையெல்லாம் ஒருமித்து நிறைவேற்ற முடியாது. இனிமேல் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கோ, அல்லது ஒரு மக்கள் போராட்டத்திற்கோ தாயகத்தில் வசிக்கும் மக்கள் தயாரில்லை. காரணம் ஆதரவும் பாதுகாப்பின்மையுமே. பாதிப்புகளை இன்றும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள்தான்.

சிங்களவரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் குறைத்து மதிப்பிடுவதின் ஒரு பகுதிதான் எமது பிரிவுகளும் கோஷங்களும். பிரச்சனைகளுக்கான தீர்வைக் கோரவேண்டிய நேரம் இதுவல்ல.

தற்போதைய நிலவரத்தின் பிரச்சனையை உணரவேண்டும் என்பதே எனது கருத்து.

இந்தியா சரிவராது எண்டுறீயள் அதோடை சம்பந்தர் கூட்டம் எதையோ செய்யும் என்பது போலவும் சொல்கிறீர்கள். இந்தியாவை வெளிப்படையாகவே நம்பி காரியம் செய்யும் சம்பந்தர் நீங்கள் சொல்வது போல பார்த்தால் ஒண்றும் செய்ய முடியாது எண்றுதானே அர்த்தம். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் எங்கட கையுக்க ஒபாமாவும் கையுக்க பாங்கிமூனயும் கையுக்க கொண்டுவந்திட்டா ஐக்கியநாடுகள் சபையில நாளைக்கே கொடி , இன்னும் கொஞ்ச அழுத்தினா நடக்கும். அதுக்கு முதன்மை வோட்பாளர் சி. வரதராஜனுக்கு உங்கள் வோட்டு போடவும். :)

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனி போட்டியிடுகின்றது.

வன்னி மட்டக்களப்பு அம்பாறையில போட்டியிடேல்லயோ?

Iraivan 

அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் தானே மாறிக்கொள்வார். புதியவர்தானே. ஆரம்பத்தில் வேகம் இருக்கும். ஒட்டுக்குழுக்களும் படையினரும் நெருக்குதல் கொடுக்கும் போது குடும்பத்திரே மாற்றிவிடுவார்கள். 
வரதராஜன் ஏற்கனவே இவற்றால் பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே கோத்தபாயவால் தூக்கப்பட்டு துப்பி எறியப்பட்டவர் தான் உங்களுக்கு புதியவராக இருக்கலாம் அல்லது புரிய விருமபாதவராக, புடிக்காதவராக இருக்கலாமே தவிர சம்பந்தர் என்ற குரங்கு பிடித்தனால் வரதராஜன் பிடிக்கவில்லை போலும் :wub:
உயிர் அச்சுறுத்தல் என்பது யாரையும் மாற்றக் கூடியது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் அவர்களின் நிலையைப் பார்த்தீர்களா? விடுதலைப்புலிகள் பலமுடன் இருக்கும்வரை எந்த உடைவுகளையும் காணாத தமிழர் அமைப்புகள் தேசியம் என்று கூறிக் கொண்டு அடிபடுகின்றன. இதுதான் தேசியமா? இவ்வளவு காலமும் காக்கப்பட்ட தேசியம் இன்று இருக்கும் நிலை?


நாய்க் கூட்டங்கள்போல் எமக்குள் நாமே அடிபட்டுக் கொள்கின்றோம். கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறது என்கிறார்கள். அப்படியென்றால் ஏனைய தமிழ்ப்பிரிவினர் இலங்கையரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.


இப்படித்தான் தமிழர் நிலை.

உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.