Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் கந்தவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கந்தவனம்

kavigarkandavanam6.jpg

பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்

சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் எனக்குத் தெரிந்தவரை கவிஞராகவே அறிமுகப்படுத்தப்பட்டவர். பாடசாலை விழாக்களில் அல்லது எமது சனசமூக நிலைய ஆண்டுவிழாக்களில் தனது பேச்சாற்றலால் கவிவல்லமையினால் சமய சொற்பொழிவுகளாலும், கவியரங்கங்க‌ளாலும் அலங்கரித்தவர். நாடகம், கவிதை இலக்கியம், சமயம் எனத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வாழ்ந்த சமூகத்தையும் வாழ்ந்திடச் செய்த ஒரு சமூக யோதி. ஆசிரியராக, அதிபராக தன்னை உயர்த்திக் கொண்டாலும் ஒரு நாடக ஆசானாக, கவிஞனாக எமக்கு அறிமுகமான அவரின் ‘பாடுமனமே’ கவிதைநூல் என்னை முழுமையாக ஆகர்சித்ததாகும்.

இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருக்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர், எனப்பட்டங்கள் இருந்தும் மதுரகவி எனவே ஈழத்தில் அறிமுகமானவர்.

இவர் ஆரம்பக்கல்வியை நுணாவில் கணேசவித்தியாலயம், சாவகச்சேரி றிபேக்கல்லூரி ஆகியவற்றிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். கூடவே நாடகம் கல்வி சார்ந்த டிப்புளோமா கற்கை நெறிகளையும் கற்றுத் தனதாக்கிக் கொண்டார்.

இவர் மாத்தளை புனிதத்தோமையர் கல்லூரியில் கற்பித்த காலத்தில் கல்லூரி இலக்கியவட்டம், மாத்தளை இலக்கியவட்டம் ஆகியவற்றில் அதிக பங்காற்றினார். புவியியல் பட்டதாரியான இவர் மேற்படி கல்லூரியில் சிறந்த ஆசிரியராக மாணவராலும், ஆசிரியராலும் போற்றப்பட்டார். மலையகம் சார்ந்த அனைத்து இலக்கிய, சமய நிகழ்வுகளில் தன்னை ஆத்மாத்தமாக அர்ப்பணித்துக் கொண்டவர். பின்னர் வயாவிளான் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றியபின் யோகபுரம் மகாவித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக்கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிய காலத்தில் குரும்பசிட்டி சர்மார்க்க சபை சார்ந்த இலக்கிய நண்பர்கள். குலாம் இணைந்ததால் பின்னாளில் ரசிகமணி கனகசெந்தில்நாதன் அவர்களின் அபிமானத்திற்கு உரியவரானார். 1980ல் நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக தென்னாபிரிக்கா சென்று ஆசிரியராகக் கடமை புரிந்தார். 1988 முதல் இன்றுவரை கனடாவில் வாழ்ந்து வரும் கவிஞர் அருணோதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட ‘பூச்சொரியும் பொன்னொச்சிமரம’ (2000) தொகுப்பில் எழுதிய கனடாவில் சைவசமயம் என்னும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

நுணாவில் என்றதுமே என் உறவுசார்ந்து என் இலக்கிய உலகம் சார்ந்து ஒரு தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய, இலங்கை இராணுவ நகர்வின் போதும் எம்மை ஆதரித்த ஒரு கிராமமாகவும் நுணாவில் எம்முள் வாழ்கிறது.

ஈழத்துக்கவிதைக் கனிகள்(1991) என்னும் நூலில் நான் பிறந்ததும் ஏதுக்கே! எனும் கவிஞரின் கவிதையை சிலோன் விஜஜேந்திரன் சேர்த்துள்ளார்.

ஆசிரியரின் நூல்களாக 110 ரூபாய் (1954), இலக்கிய உலகம் (1964), ஏன் இந்தப் பெருமூச்சு (1965), கூனியின் சாதனை (1966), கீரிமலையினிலே (1969), நுணாவிலூர் (1971), நல்லூர் நாற்பது (1971), பாடுமனமே (1972), உய்யும் வழி (1972), பரீட்சையில் சித்தியடைவது எப்படி? (1972) கவியரங்கில் கந்தவனம் (1972), இலங்கையில் ஆசிரியத்தொழில் (1977), விநாயகப்பா (1993), ஒன்றுபட்டால் (1994), மணிக்கவிகள் (1994), இயற்கைத்தமிழ் (1995), எழுத்தாளன் (1995), முத்தான தொண்டன் (1995), புதிய சைவ விநாவிடை (1997), தங்கம்மா நான்மணி மாலை (1997). பத்துப்பாட்டு (1998). ஆறுமுகம் (1998), ) சிவபுராணத் தத்துவம் (1998), கனடாவில் சைவசமயம் (2000), அது வேறுவிதமான காதல் (2001), சிவ வழிபாடு (2001), புதிய சைவ வினாவிடை- 2 (2001), கந்தன் கதை (2002), ஓ கனடா (2002), வரிக்கவிகள் (2002), குருவழிபாடு (2002), விநாயகப் பெருமானும் அகத்தியரும் (2003), முருகப்பெருமானும் அவ்வையாரும் (2003), விநாயக வெண்பா (2004) விநாயக விருத்தம் (2004), பொங்கு தமிழ் (2005), கவிதை மரபு (2005), தென்னகத்தில் என்னகத்தார் (2007), பாவாரம் (2007) எனத் தொடர்கிறது. கூடவே பல தொகுப்பு நூல்களின் வெளியீட்டிலும் அக்கறை காட்டி வருகிறார்.

இவரின் பவளவிழா சிறப்புற காற்றுவெளி சார்பில்லும் வாழ்த்துகிறோம்.

கவி‍-முல்லை அமுதன்

http://tamilvishai.com/home/?page_id=8300

இவர் தான் கனேடிய தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் என்பது குறிப்பிடதக்கது.

வாழ்த்துகள்~!

இவர் கவிதைகளை சுமார் பத்து வருசங்களுக்கு முன்னம் வலைத்தளத்தில வாசிச்சு இருக்கிறன். அழகிய மரபுக்கவிதைகள், தமிழ், ஆங்கிலம் இரண்டிலையும் படைப்பார். அது கவிஞர் அவர்களது பிரத்தியேக வலைத்தளம். இப்ப அதை காண இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இடம்பெறும் இலக்கிய சம்பந்தமான எந்த நிகழ்விலும் ஜயாவை காணலாம், அதுமட்டுமல்லாது இவரினால் ஆக்கப்படும் கவிதைகள் மற்றக் கவிஞர்களினதை விட மிகவும் வித்தியாசமானவை.

சுருக்கமாகச் சொல்லப்போனால் கவிதையில் நாட்டமில்லாதவர்களையே கவிதைப்பக்கம் இழுக்கக்கூடிய சக்தி இவரின் கவிதையில் காணலாம், நவீன கவிஞர்.

இணைப்பக்கு நன்றி!

வாழ்த்துகள்!

நல்லதொரு கவிஞர்.ஊரிலேயே இவரை பட்டிமன்றத்தில் பார்த்திருக்கின்றேன்.ஒரு குறை மேடையும் விருதும் என்றால் உங்களைபற்றியும் பாடுவார்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பவளவிழா சிறப்புற வாழ்த்துகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

நல்லதொரு தமிழ் வித்தகர்.. ஆனால் மேலே இவர் கனடாவிற்கு வந்த பின்பு பெற்ற 'டாக்டர்' பட்டம் விடுபட்டுள்ளது.

டாக்டர் ஆனதும் இவர் மீதுள்ள மதிப்பு என்மட்டில் தூசியாகிவிட்டது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தமிழ் வித்தகர்.. ஆனால் மேலே இவர் கனடாவிற்கு வந்த பின்பு பெற்ற 'டாக்டர்' பட்டம் விடுபட்டுள்ளது.

டாக்டர் ஆனதும் இவர் மீதுள்ள மதிப்பு என்மட்டில் தூசியாகிவிட்டது. :lol:

நீங்களும் டாக்ரராகினால் சரிதானே :D

நீங்களும் டாக்ரராகினால் சரிதானே :D

நீங்க யேர்மனீல இருக்கிறீங்களெண்டு ஒரு பட்டத்தை தந்திருக்கலாந்தானே.. வேணாம்னா சொல்லப் போறன்.. நாடு நாடாபோய் பட்டம் விட்டுட்டு வரமாட்டனா, என்ன?! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தமிழ் வித்தகர்.. ஆனால் மேலே இவர் கனடாவிற்கு வந்த பின்பு பெற்ற 'டாக்டர்' பட்டம் விடுபட்டுள்ளது.

டாக்டர் ஆனதும் இவர் மீதுள்ள மதிப்பு என்மட்டில் தூசியாகிவிட்டது. :lol:

டாக்டர் பட்டம் அவர் பெறவில்லை. சில ஒட்டு குழுக்கள் இவரை பயன்படுத்தியுள்ளார்கள் போல உள்ளது.நம்ம விசய், டாக்டர் பெறும் போது கவிஞர் பெறுவதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன்.கவிஞர் எப்போதும் டாக்டர் பட்டம் பெற்றதாக நினைவில் இல்லை..ஆனாலும் அவர் அப்படி டாக்டர் பட்டம் ஏதும் பெற்றதாக தெரியவில்லை. ஆனால் கனடிய அரசங்கம் அவருக்கு டாக்டர் பாடம் கொடுத்து விடும் என்பது மட்டும் நிச்சயம்.

ஆனால் சோழியனின் வயித்து எரிச்சலுக்கு நான் ஜவாப்தாரியல்ல. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க யேர்மனீல இருக்கிறீங்களெண்டு ஒரு பட்டத்தை தந்திருக்கலாந்தானே.. வேணாம்னா சொல்லப் போறன்.. நாடு நாடாபோய் பட்டம் விட்டுட்டு வரமாட்டனா, என்ன?! :D

இதை முதலே சொல்லியிருந்தால் தந்திருப்பமே. சரி இவ்வருட கோடை விடுமுறையில் எமது நகருக்கு வாருங்கள் பட்டம் தருகிறோம். ஈடார் ஒபஸ்ரைன் மலைக்கோட்டையில் வைத்து சாத்திரி முன்னிலையில் சோழியனுக்குப் பட்டம் வழங்கப்படும். :lol:

சில ஒட்டு குழுக்கள் இவரை பயன்படுத்தியுள்ளார்கள் போல உள்ளது.நம்ம விசய், டாக்டர் பெறும் போது கவிஞர் பெறுவதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். :wub::lol:

உதைத்தான் சொல்லுகிறதோ? ..... குருக்கள் க்..உ..ச்...உ விட்டால் குற்றமில்லை என்று!!! ..... :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.