Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் நடாத்திய விளக்கக் கூட்டம்

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் நடாத்திய விளக்கக் கூட்டம்

கனடா தமிழ் படைப்பாளிகள் களகத்தின் தலைவர் திரு.தங்கவேலு நக்கீரன் அவர்களின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 14ம் திகதி மாலை ரொறன்ரோவில் ஒரு விளக்கக் கூட்டம் இடம்பெற்றது.

ஏராளமான பிரமுகர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், தமிழ் அறிஞர் திரு.துரைராஜா, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் திரு.குணநாதன், பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி உ.சேரன், திரு.குகதாசன், திரு.நக்கீரன் போன்றோர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களும் உரையாற்றினர்.

தமிழர் தாயகத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா சம்பந்தன், திரு.மாவை சேனாதிராஜா, திரு.சரவணபவன் ஆகியோர், இலத்திரனியல் இணைப்பில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தற்போதைய சூழ்நிலையில், அனைத்து புலம்பெயர்ந்த உறவுகளும், தமிழ் தேசியத்தின் வழியொற்றி, இணைந்து பயணிப்பதன் அவசியம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. திருகோணமலையில் திரு.இரா சம்பந்தன் அவர்கள் மட்டுமே தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தி தேர்தலில் நிற்பது அவசியம் என்றும், ஏனைய தமிழ் போட்டியாளர்கள் அனைவரும் தமது தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தமிழ் பாரம்பரியப் பிரதேசத்தின் தலைமை நகரான திருகோணமலையில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை அடியோடு ஒழித்து விடுகின்ற சிறீலங்கா சிங்கள அரசின் இரகசியத் திட்டத்திற்கு எந்தவொரு தமிழ் கட்சியும் துணை போய்விடக் கூடாதென்ற கோரிக்கையும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக தற்போது புதிதாக அங்கே உருவாக்கப் பட்டிருக்கின்ற தமிழ் கட்சிகள் தம்மை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்துக்கொண்டு பயணிக்க முன்வரவேண்டியதன் அவசியம் பற்றியும் விதந்துரைக்கப்பட்டது.

திரு.இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே புலம்பெயர்ந்த ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஆதரவும் வழங்கப்படும் என்ற செய்தியும், இந்தக் கூட்டத்தின்போது பல பிரமுகர்களாலும் உறுதி செய்யப்பட்டது.

picture042a.jpg

picture028z.jpg

picture018c.jpg

picture048b.jpg

picture044g.jpg

picture030fr.jpg

picture026iw.jpg

picture020h.jpg

picture014mc.jpg

picture010gq.jpg

**இந்த தகவல்கள் மின் அஞ்சலினூடாக கிடைக்கப்பெற்றவை**

நன்றி

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாரம்பரியப் பிரதேசத்தின் தலைமை நகரான திருகோணமலையில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை அடியோடு ஒழித்து விடுகின்ற சிறீலங்கா சிங்கள அரசின் இரகசியத் திட்டத்திற்கு எந்தவொரு தமிழ் கட்சியும் துணை போய்விடக் கூடாதென்ற கோரிக்கையும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக தற்போது புதிதாக அங்கே உருவாக்கப் பட்டிருக்கின்ற தமிழ் கட்சிகள் தம்மை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்துக்கொண்டு பயணிக்க முன்வரவேண்டியதன் அவசியம் பற்றியும் விதந்துரைக்கப்பட்டது.

திரு.இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே புலம்பெயர்ந்த ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஆதரவும் வழங்கப்படும் என்ற செய்தியும்இ இந்தக் கூட்டத்தின்போது பல பிரமுகர்களாலும் உறுதி செய்யப்பட்டது.

நன்றி ஈழமகள் இணைப்பிற்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரனும் பத்மினியும் தாமாக விலகினார்களா? சம்பந்தன் ஜயா விலக்கினாரா? புலம்பெயர் தமிழர் சொன்னால் சம்பந்தன் ஜயா கேட்பாரா? புலபெயர் தமிழர் யாரடா எனக்கு ஆணையிட என கோவிக்க மாட்டாரா? :lol::lol::lol:

அதுசரி உவயள் முக்கிய பிரமுகர்களாம் உவயள் முக்கேக்கிள ஆர் பாத்தவியள், கனடாவில் இருப்பவருக்கு மட்டும்தான் முக்க தெரியுமோ? மற்றநாட்டு காறருக்கு முக்க தெரியாதோ? :rolleyes::):lol:

Edited by சித்தன்

புலபெயர்ந்தவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறக்கூடாது என்று சம்பந்தர் கத்தி கூச்சல் போட்டார் வானொலியில் அப்படியானால் இந்த படைப்பாளிகள் கழக நக்கீரன்கள் என்ன யாழில் இருந்தா விளக்கக் கூட்டம் நடாத்தினார்கள்

ஆக ஈழவெந்தனை வெருட்டிய எஸ் எம் எஸ் அணி இது தானோ :rolleyes:

தற்போதைய சூழ்நிலையில், அனைத்து புலம்பெயர்ந்த உறவுகளும், தமிழ் தேசியத்தின் வழியொற்றி, இணைந்து பயணிப்பதன் அவசியம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. திருகோணமலையில் திரு.இரா சம்பந்தன் அவர்கள் மட்டுமே தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தி தேர்தலில் நிற்பது அவசியம் என்றும், ஏனைய தமிழ் போட்டியாளர்கள் அனைவரும் தமது தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அப்படியானல் ததேகூ யாழில் இருந்து விலகி ததே முண்ணனிக்கு வழி விடுமா ?? :)

இந்த பனங்காட்டு நரை நரிகள் தான் இன்னும் கனடாவில் தமிழர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கின்றார்கள்

கஸ்டப்பட்டு வீதி வீதியாக கிடந்தது இளைய கூட்டம் இந்த கிழக்கூட்டம் ஆனால் எங்கே போனாலும் மைக்கைப் பிடிக்கப் போய்விடுவார்கள் :lol:

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலபெயர்ந்தவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறக்கூடாது என்று சம்பந்தர் கத்தி கூச்சல் போட்டார் வானொலியில் அப்படியானால் இந்த படைப்பாளிகள் கழக நக்கீரன்கள் என்ன யாழில் இருந்தா விளக்கக் கூட்டம் நடாத்தினார்கள்

ஆக ஈழவெந்தனை வெருட்டிய எஸ் எம் எஸ் அணி இது தானோ :rolleyes:

அப்படியானல் ததேகூ யாழில் இருந்து விலகி ததே முண்ணனிக்கு வழி விடுமா ?? :)

நான் நினைக்கிறேன், தலைதான் பிரச்சினை தலையை எடுத்து விட்டால், கேம் ஓவர் :lol::lol::lol:

கயேந்திரன் ஒன்றும் துரோகி இல்லை ,விலை போகவும் இல்லை மாறாக அவருடைய கொள்கையில் அப்படியே இருக்கின்றார் அவரைப் புறந்தள்ளுவது ஏன் ?

அது மட்டுமல்லாமல் அவரையும் அவரது கட்சியையும் துரோகப்பட்டமும் அவதூறுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டமைப்பும் அவர்களது அருவருடிகளும் செய்வ்து ஏன் ?

இவர்கள் இருவரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய இந்த --- கூட்டமைப்புக்கு மட்டும் ஆலவட்டம் பிடிப்பது மட்டுமல்லாமல் கயேந்திரன் முண்ணனியை விலகச் சொல்வது ஏன் ?

இந்த மூவரை மட்டும் [கயேந்திரனை] விலத்திய சம்பந்தரிடம் விளக்கம் கேட்காதது ஏன் ?

இந்த மூவரையும் அரவணைத்துச் செல்ல சம்பந்த மூவேந்தர் பின்னடிப்பது ஏன் ?

இந்த கூட்டமைப்புக்கூட்டம் பதில் கூறுமா ? அது தான் இவர்களின் மேல் உள்ள மிகப்பெரிய சந்தேகம் ?

Edited by நிழலி
நாரீகமாக கருத்தை முன்வைக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு பதில் தெரிகிறது

ஊரில் சொல்வார்கள் மூஞ்சூறு தான் போகவழியைக்காணவில்லையாம் விளக்குமாத்தை எடுத்துக்கொண்டு போகநினைக்குதாம் என்று.

இதை வைத்து விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்

திரு.இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே புலம்பெயர்ந்த ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஆதரவும் வழங்கப்படும் என்ற செய்தியும், இந்தக் கூட்டத்தின்போது பல பிரமுகர்களாலும் உறுதி செய்யப்பட்டது.

:rolleyes:இந்த --- கழகமா இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள் அப்படியானால் இனி நாடு கடந்த அரசும் ,மக்களவையும் , உலகத்தமிழர் பேரவையும் தேவையில்லையா ?

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதப்பட்டவை நீக்கப்பட்டன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:)இந்த --- இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள் அப்படியானால் இனி நாடு கடந்த அரசும் ,மக்களவையும் , உலகத்தமிழர் பேரவையும் தேவையில்லையா ?

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் இதுதான் கனடா SMS குழுவாம். :lol::lol::rolleyes:

Edited by நிழலி

:rolleyes:இந்த --- கழகமா இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள் அப்படியானால் இனி நாடு கடந்த அரசும் ,மக்களவையும் , உலகத்தமிழர் பேரவையும் தேவையில்லையா ?

அதைப் பற்றி இவர்கள் ஏன் அக்கறைப்படப் போகிறார்கள். மேடை ஏற சந்தர்ப்பம் இருந்தால் இவர்களுக்குப் போதும். ஒரு நாளைக்கு நாடு கடந்த தமிழீழக் கூட்டத்திலை பேசுகிறார்கள். பிறகு பார்த்தால் இதற்குள்ளே நிற்கிறார்கள். இப்படியானவர்கள் இருக்கும்வரை தமிழ் மக்களுக்குத் தீர்வு என்பது எட்டாக்கனிதான்.

Edited by நிழலி

மன்னிக்கவும் படைப்பாளிக்கழகம் வார்த்தைப் பிரயோகத்திற்கு

படைப்பாளிக்கழகம் நக்கீரன் தங்கபாலு ஜயாவிடம் எனக்கு தனிப்பட்ட அபிமான இருந்தது அது இப்போது போய்விட்டது

உண்மையில் படைப்பாளிக்கழகம் என்றால் நீங்கள் எல்லோரும் ஏதோ பலர் இருக்கின்றார்கள் என்று நினைப்பீர்கள் ஆனால் இரண்டும் மூன்று பேர் தான் மொத்தமே படைப்பாளிக்கழகம் படைப்புகளொடு நின்று விடுவது அதன் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் என்று நினைக்கின்றேன்

ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலிலும் ஆட்சிமாற்றம் என்று மறைமுகமாக சரத்தை ஆதரித்து கூட்டணி சம்பந்தரை வழிமொழிந்திருந்தார் நக்கீரன் அப்போது வேறு தெரிவில்லை என்று நாமும் தலையாட்டினோம் அதற்காக தமிழர்களின் ஏக போக உரிமையை படைப்பாளிக்கழகம் கோர முடியாது

அதற்கான உரிமத்தையும் மக்கள் வழங்கவில்லை தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை புலம்பெயர்ந்த தமிழர்களின் விருப்பு வெறுப்பாக நக்கீரன் ஜயா வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்

உண்மைதான் இந்த முகங்கள் தான் எல்லா மேடையிலும் மைக்கைப் பிடித்துக் கொண்டு திரிகின்றார்கள் இளையவர்களை முன்னுக்கு வருவதையும் இவர்களே இடையூறும் செய்கின்றார்கள் உண்மையிலே புலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் எழுச்சி பெற்றதிற்கு இளையோரே முழுமையான காரணம் அதனை தீர்க்க தரிசனமாக தேசியத்தலைவர் மாவீரர் உரையிலும் கோட்டிட்டுக் காட்டியிருந்தார்

அப்படியிருந்தும் இந்த முதியவர்களின் பதவி ஆசையினால் யாரும் முன்னுக்கு வர முடியவில்லை என்பதே பலரின் ஆதங்கம்

புலம் பெயர் நாடுகளில் எமது குரலை விட எமது இளையோர் குரலையே செவிமடுக்கின்றார்கள் என்பதே உண்மையும் கூட

அவர்களிடம் விட்டு விட்டு இவர்கள் பின்னணியில் நிற்க வேண்டும் என்பதே எமது விருப்பமும் கூட ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை

தமிழ்ஸ்வொய்ஸ், இவர்களின் இந்தத் திருவிளையாடல்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மதிப்பிற்குரிய தகுதியை நக்கீரன் அவர்கள் இழந்து பல வருடங்களாகிறது. நீங்கள் இப்போதுதான் அறிகிறீர்கள்.

இவர்கள் தலைவர் அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்திருந்தால், தமிழீழத்திற்கடுத்த நிலையில் கனடா இருந்திருக்கும். தலைவர் அவர்கள் கனடாவில் அதீத நம்பிக்கை வைத்திருந்தார். எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டார்கள் ---.

Edited by நிழலி
ஒருமையில் இடப்பட்டவை நீக்கப்பட்டன

பிரிவு நிலையற்றுத் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். கூட்டமைப்பினரும் தேசிய முன்னணியினரும் ஒன்றுபட வேண்டும். விளங்கங்களைக் கொடுத்தே பிரிவுகளை வளர்த்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கோட்டான்கல்...அசு பு சு இங்கிலீசு வாயுக்கு வந்தால் உள்ள அனைவரையும் ..அடைவு வைப்பார்கள்....கஜேந்திரன் பத்மினியை ஆத்ரிக்காத இவர்கள் தேசியம் ஈழம் பற்றிகதைக்க என்ன இருக்கு.....இதில் ஏதோ விசயம் இரூக்கு..

தமிழ் பாரம்பரியப் பிரதேசத்தின் தலைமை நகரான திருகோணமலையில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை அடியோடு ஒழித்து விடுகின்ற சிறீலங்கா சிங்கள அரசின் இரகசியத் திட்டத்திற்கு எந்தவொரு தமிழ் கட்சியும் துணை போய்விடக் கூடாதென்ற கோரிக்கையும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.

நன்றி ஈழமகள் இணைப்பிற்கு..

இன்று வன்னி மாவட்டத்தில் ஏறக்குறைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களே!! ... ஆனால் வன்னியில் பாரிய அளவில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறத்தொடங்கி இருக்கின்றன! ... இவர்களால் தடுக்க முடிந்ததா??????????

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து திருமலையும் தமிழர்களே பா.உக்களாக இருந்தனர். நாளடைவில் குடியேற்றங்கள் மூலம் எம் பாஉக்களை சிங்களம் பிரித்தெடுத்தது. ... அங்கும் அதனை தடுக்க முடிந்ததா??????????

திருமலையில் பாஉ, தமிழராக தெரியப்படுவதால் ஏற்படும் நன்மைகளை யாராவது கூறுங்களேன்?????

  • கருத்துக்கள உறவுகள்

..

--------------------------------------------------------------------------------

இன்றைய படம்

"சிறீலங்காவின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2010"

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" உறுதிமொழி

அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல – கஜேந்திரனின் சிறப்புச் செவ்வி

திகதி: 16.03.2010 // தமிழீழம்

அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளதன் மூலம், தாயக மீட்புக்காக இழக்கப்பட்ட உயிர்களுக்கு துரோகம் இழைத்து வருவதாகவும், கொள்கை பிறளும் தலைமையுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் தேசிய நலன் சார்ந்தோர் இணைந்து கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் முரணாக இந்தியாவின் விருப்பிற்கு இணங்க தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரித்த கூட்டமைப்பின் தலைமை, அதனை இந்தியா உட்பட சில நாடுகளின் தூதரகங்களுக்கும் இரகசியமாக வழங்கியிருந்ததாகக் கூறிய கஜேந்திரன், அந்தத் தீர்வுத் திட்டத்தின் பிரதியை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஒஸ்லோ உடன்படிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது பற்றி கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே நேரடியாகக் கூறியிருந்த போதிலும், தேசியத் தலைமையின் முடிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது தேர்தல் வெற்றிக்கான பொய்ப்பரப்புரையுடன் களமிறங்கியிருப்பதாக இந்த செவ்வியில் அவர் கூறினார்.

தனது குடும்ப அங்கத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்ற ஒரேயொரு காரணத்திற்காக தன்மீதும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் உள்ள ஏனைய அங்கத்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தாயகத்தில் பத்திரிகைகளும், புலம்பெயர் நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு இணையத்தளமும் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் ஒற்றையாட்சிக்குக்கீழ அரசுக்கு உறுதுணையாக செயல்படுவேன் எண்டுதானே பாராளுமன்றத்தில சத்தியப்பிரமாணம் எடுக்கிறது. :wub::)

அது உண்மைதான். அப்படி சத்தியப் பிரமாணம் செய்ய முடியாவிட்டால், உறுப்பினர் பதவியை ஏற்கவில்லை என்று அர்த்தம். அவ்வாறு ஏற்ற பின்பு தமிழரின் உரிமைகள் பற்றிக் கதைக்கக்கூடாது என்பதுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழு உலகமும் சேந்து தனிநாட்டுக்கோரிக்கய சிதைச்சுப்போட்டுது துரோகம் செய்துபோட்டுது எண்டுதானே எழுதிச்சினம். தலைவரும் ஒற்றையாசி ரெட்டையாட்சி போட்டிக்குத்தானே 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போனவர். 50000 ம் முடிஞ்சு ரெட்டையாட்சி கோரிக்கயும் தலைவரோட மறைஞ்சிட்டுது. இங்க கத்திறவை எவளவு கத்தினாலும் உலகம் ஏற்கப்போறேல்ல. அங்கயிருக்கிற மக்கள் என்னத்த விரும்புறினம் எண்டது அடுத்த 9 ம் திகதி தெரிய வரும். :wub:

எனக்கு ஒரு பதில் தெரிகிறது

ஊரில் சொல்வார்கள் மூஞ்சூறு தான் போகவழியைக்காணவில்லையாம் விளக்குமாத்தை எடுத்துக்கொண்டு போகநினைக்குதாம் என்று.

இதை வைத்து விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்

மிகதிருத்தமான விளக்கம் என நினக்கிறேன், :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.