Jump to content

இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்களும் விடுதலைப் புலிகளும் : பகுப்பாய்வு


Recommended Posts

பதியப்பட்டது

இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்களும் விடுதலைப் புலிகளும் : பகுப்பாய்வு

யமுனா ராஜேந்திரன்

எனது பார்வை யாதெனில் தேசம் சார்ந்த எல்லைகளோ பிரஜாவுரிமை சார்ந்த எல்லைகளோ உண்மையிலேயே அக்கறையுள்ள ஒருவர் பிறர் உரிமையில் அக்கறை எடுப்பதையோ அவர்கள்பால் தமக்குப் பொறுப்பு உண்டு எனச்செயல்பட முனைவதையோ தடுக்கக் கூடாது என நினைக்கிறேன். ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அரசியல்-அறவியல் விசாரணையின் தீர்மானிக்கும் மையமாக எல்லைகள் கடந்த செயல்பாடே இருக்க வேண்டுமெயொழிய, எல்லைகளுக்குட்பட்டது அன்று.

அமர்த்தியா சென்

இலத்தீனமெரிக்கப் புரட்சியாளன் சே குவேராவின் ‘பொலிவியன் டயரி’, பிரெஞ்சு மார்க்சியரான ரெஜி டெப்ரேவின் ‘புரட்சிக்குள் புரட்சி’ (revolution in revolution) வியட்நாமிய கொரில்லாப் படைத்தலைவனான ஜெனரல் கியாப்பின் ‘புரட்சியை வெகுஜனப்படுத்துதல்’ போன்ற நூல்களை ஈழவிடுதலை இயக்கத்தவர்களே தமிழ் மொழிக்கு வழங்கினர். ஆப்பிரிக்க விடுதலைக் கோட்பாட்டாளரான அமில்கார் கேப்ரல் போன்றவர்களின் எழுத்துக்களையும், நிகரகுவா புரட்சிகர அனுபவங்களையும் ஈழவிடுதலை இயக்கத்தவர்களே தமிழ் மொழிக்கு அளித்தனர்.

எழுபதுகளின் இறுதியையும் எண்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளையும் ஒப்பிடும்போது இலத்தீனமெரிக்க ஆப்பிரிக்கப் புரட்சியாளர்களின் அசலான பங்களிப்புகள் பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. வடஅயர்லாந்து, குர்திஸ்தான், காஷ்மீர் போன்ற நிலப்பரப்புக்களின் போராட்டங்கள் குறித்து அசலான நூல்கள் தமிழிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் அதனது அனுபவங்களிலும் கோட்பாட்டிலும் அக்கறையுள்ளவன் எனும் அளவில், ஈழ,தமிழக,இந்திய வரலாற்றுடன் பிணைந்தவன் எனும் அளவில், தமிழில் பதிவு பெற்றிருக்கும் அனைத்து நூல்களையும், எமது சூழலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எனக்கு பல வரலாற்றுத் தரிசனங்களைத் திறப்பதாக இருக்கிறது.

2

புரட்சியின் துரோகிகள் எனும் கருத்தாக்கத்தினை, துரோகிகளைக் கருணையற்று அழிப்பது எனும் கருத்தாக்கத்தினை, நடைமுறையில் கியூபப் புரட்சியிலும் அல்லது பொலிவியாவிலும் சே குவேரா எவ்வாறு கையாண்டார் என்பதனை, விடுதலைப் புலிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

புரட்சியின் நண்பர்களையும் எதிரிகளையும் எவ்வாறு தீர்மானிப்பது,தாம் ஏற்றுக்கொண்ட புரட்சி குறித்த கருத்துக்கு மாறுபட்ட கருத்தாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது எனும் பிரச்சினையை தென் ஆப்பிரிக்க விடுதலை இயக்கமான ஏஎன்சியும் எதிர்கொண்டது, நிகரகுவாவின் சான்டினிஸ்ட்டா இயக்கமும் எதிர்கொண்டது, கியூபப் புரட்சிகர இயக்கமும் எதிர்கொண்டது, குர்திஸ் விடுதலை இயக்கமும் எதிர்கொண்டது, விடுதலைப் புலிகளும் எதிர்கொண்டார்கள். இந்த அனுபவங்கள் அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் பொதுவானவை.

புரட்சியின் துரோகிகள் என்பது தொடர்பாக கியூபாப் புரட்சியிலிருந்து இரு அனுபவங்களைக் குறிப்பிடலாம். கியூபாவைக் கைப்பற்றிய பின், புரட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டார்கள், புரட்சியின் தலைவர்களைக் காட்டிக் கொடுத்தார்கள், பாடிஸ்ட்டாவுடன் இணைந்து புரட்சிக்கு எதிராக சித்திரவதை நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் எனும் காரணத்திற்காக குவேராவின் வழிகாட்டுதலில் புரட்சியின் எதிரிகள் கொல்லப்பட்டார்கள். இதனைக் குறித்து குவேராவின் வரலாற்றை எழுதிய ஜான் லீ ஆண்டர்சன் குறிப்பிடுகிறபோது, ‘அன்றைய நிலைமையில், ஒரு நாடு தனக்கு எதிரான எதிரிகளை எந்தத் தண்டனை அளித்து தண்டிக்குமோ அதனைத் தான் குவேராவும் செய்தார். அப்பாவிகளை அவர் சுட்டுக் கொல்லச் செய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ எனக் குறிப்பிடுகிறார்.

புரட்சிகர நடவடிக்கையின் போது எவரை குவேரா துரோகியாகக் கருதினார்? பொலிவிய அனுபவத்திலிருந்து ஜான் லீ ஆண்டர்சன் ஒரு சம்பவத்தினை விரிவாகக் குறிப்பிடுகிறார். தமது குழுவைச் சேர்ந்த சிலர் பொலிவிய விவசாயிகளிடம் சென்று தமது ஆயுதங்களைக் காட்டி அவர்களிடம் கொள்ளையடிப்பதோடு, இளம் விவசாயப் பெண்களையும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தி அவர்களைக் கொலை செய்து எரித்துவிடுகிறார்கள். அவர்களைப் போராளிகள் வேட்டையாடிப் பிடிக்கிறார்கள். குவேரா அவர்களில் ஒருவனைத் தனது கையினாலேயே சுட்டுக் கொல்கிறார். தமது அமைப்பிலிருந்து ஆயுதங்களைக் களவாடிச் சென்று படையினருக்குத் தமது குழுவைக் காட்டிக் கொடுத்த சிலரையும் அவரது குழு சுட்டுக் கொல்கிறது. பிடலும் சரி குவேராவும் சரி, புரட்சி குறித்த தமது கருத்துடன் மாறுபட்ட அரசியல் காரணத்திற்காக ஒருவரை துரோகி என வரையறுக்கவில்லை. மாறாக வெகுமக்களுக்கு எதிராகக் குற்றமிழைத்த தமது அமைப்பின் அறங்களைக் களங்கப்படுத்தியவர்களையே அவர்கள் சுட்டுக் கொன்றார்கள்.

புரட்சிகர நடவடிக்கையின் போக்கிலும், தாக்குதல் நடவடிக்கையின் போது திட்டவட்டமான இரு வேறு அணுகுமுறைகளை குவேரா கொண்டிருந்தார். நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு முன்பாக அவர் தீவிரமான அரசியல் விவாதங்களை அனுமதித்தார். தாக்குதலில் ஈடுபட விரும்பாதவர்களை வீடு செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். ‘எனது சொந்தத் தோழனுக்கு எதிராகத் துப்பாக்கியைத் திருப்பும் தருணம் வருமானால் நான் போராட்டத்தையே விட்டொழிப்பேன்’ எனவும் குவேரா சொல்லியிருக்கிறார். விவாதத்தின் பின் தாக்குதலுக்கான முடிவை எடுத்துவிட்டால், தாக்குதலின்போதோ இடையிலோ அரசியல் விவாதத்திற்கு இடமில்லை எனவும் அவர் தெளிவாக வலியுறுத்துகிறார். தாக்குதல் நடவடிக்கையின் போது புரட்சிகர அறங்களைக் கடுமையாக அவர் வலியுறுத்துகிறார்.

புரட்சிக் குழுவில் தனியொருவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை எனச் சொல்லும் அவர், ஒவ்வொருவரது உயிரும் பிறருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறார். தலைமை தாங்குபவர் போராளிகளுக்கு உள்ளே இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், போராளிக் குழுவில் அதிமத்தியத்துவத்தை (centralised) நிராகரித்தார்.

காங்கோவில் புரட்சிகரக் குழுவைக் கட்டுவதற்காகச் சென்ற குவேரா இரண்டு காரணங்களினால் விரக்தியுற்று காங்கோவிலிருந்து வெளியேறினார். முதல்காரணம் லாரன்ஸ் கபிலாவின் குழு அதிமத்தியத்துவப்படுத்தப் பட்டதாக இருந்தது. இரண்டாவது காரணம் அக்குழு தனிநபர் ஒழுக்கங்களைப் பேணாத குடிகாரர்களைக் கொண்டதாக இருந்தது. படையினரை எதிர்த்துத் தாக்குதலுக்கு, ஒரு புரட்சிகரக் குழுவைக் கட்டுவதற்கு இவை இரண்டும் ஒவ்வாத பண்புகள் என்கிறார் குவேரா.

3

மக்களுக்கும் புரட்சிகர அமைப்புக்கும் இடையிலான உறவுகள் எத்தகையதாக இருக்க வேண்டும் எனும் பிரச்சினையை வியட்நாம் அனுபவங்களை முன்வைத்து ஜெனரல் கியாப் பேசினார். இலத்தீனமெரிக்க அனுபவங்களை முன்வைத்து, சே குவேராவின் போக்கோயிஸத்திற்கும் (அதியுயர் பிரக்ஞை கொண்ட கொரில்லாக்களால் அமைந்த புரட்சிக்குழு), வெகுஜன அரசியல் கட்டுவதற்கும் இடையிலான உறவு குறித்து ரெஜி டெப்ரே பேசினார். விவசாயிகளுக்கும் நகர்ப்புறத் தொழிலாளி வர்க்கத்திற்கும் இருந்தே ஆக வேண்டிய உறவு குறித்து கொலம்பியப் புரட்சியாளரான காலஞ்சென்ற மானுவல் மருலாண்டா பேசுகிறார்.

கியூபா, நிகரகுவா, பொலிவியா, தென் ஆப்பிரிக்கா போன்ற விடுதலைப் போராட்டங்கள் எதிர்கொண்ட பொதுவான ஒரு கேள்வி, கம்யூனிஸ்ட்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான். புரட்சிக்கான புறச்சூழ்நிலை அமையாதபோது, மக்கள் எழுச்சிகரமான மனநிலை கொண்டிருக்காதபோது, புரட்சிகரப் போராட்டங்கள் வெற்றி பெறாது என்பது கம்யூனிஸ்ட்டுகளது வாய்பாடு. புரட்சிக்கான சூழ்நிலையைப் புரட்சிகரக் கட்சியின் அல்லது குழுவின் அகநிலை நடவடிக்கைகளால் உருவாக்குவதை புரட்சிக்கான முன்நிபந்தனையாக குவேரா முன்வைக்கிறார். பொலிவியாவில் குவேரா பேசியதைத்தான், பிடல் கியூபப் புரட்சியின் முன்பாக கியூபக் கம்யூனிஸ்ட்டுகளிடம் சொல்கிறார். நிகரகுவாவில் டேனியல் ஒரட்டேகாவின் அனுபவமும் இதுதான்.

புரட்சிக்கான நடவடிக்கைகளைத் துவங்குவதை கியூபா, நிகரகுவா, பொலிவியா என மூன்று நாடுகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கவில்லை. கியூபாவில் பிற்பாடு புரட்சியின் போக்கில் அவர்கள் இணைந்தார்கள். நிகரகுவாவில் அவர்களுக்கிடையிலான உறவுகள் ஆயுதமோதலாக ஆகினாலும் பிற்பாடு அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டது. பொலிவியாவில் குவேராவுக்கு எதிராகவே பொலிவியக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் ஏஎன்சியின் பகுதியாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.

ஈழப் பிரச்சினையிலும் கம்யூனிஸ்ட்டுகளையும் மார்க்சியர்களையும் விடுதலைப் புலிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதனையும் நாம் இந்த அனுபவங்களில் இருந்து பார்க்கவே வேண்டியிருக்கிறது. தன்னுடன் முரண்பட்ட பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால் அல்லது தம்முடன் ஆரம்பத்தில் முரண்பட்ட கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின்பால் பிடல் அல்லது குவேரா என்னமாதிரி நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதனையும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுடன் நாம் ஒப்பு நோக்கவே வேண்டியிருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக உலக அரசியல் நிலைமையில், ஒரு விடுதலை அமைப்புக்கு அரசியல் தரிசனம் என்பது கட்டாயமாக வேண்டியதாகும். அரசியல் விவாதங்கள் மட்டுமே விடுதலை இயக்கத்தின் திசைவழியை நெறிப்படுத்தும். கியூபப் புரட்சியின் முன்னும் பின்னும், விடுதலைப் போராட்டத்தின் போதும் அரசியல் குறித்த கோட்பாட்டு வாசிப்பும், அரசியல் விவாதங்களும் கியூப விடுதலை இயக்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது. பொது எதிரிக்கு எதிராக அனைத்துவிதமான சக்திகளையும் திரட்டுவதில் பிடல் சளையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

குழந்தைப் போராளிகள் எனும் பிரச்சினையிலும், அவர்களைத் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்வது என்பதிலும் சில அறங்களை குவேரா கொண்டிருந்தார். 14 வயதுப் பிராயம் கொண்டவர்கள் பொலிவியாவில் அவரது குழுவுடன் சேர வருகிறார்கள். காவல்துறையினராலும், வனத்துறைக் காவலர்களாலும், நிலப்பிரபுக்களாலும் வன்முறைக்கு ஆளாகும் அவர்களை, திரும்பவும் தமது இருப்பிடங்களுக்குப் போனால் கொல்லப்படுவோம் எனச் சொல்பவர்களை, முதலில் மறுக்கும் குவேரா, அவர்களின் பிடிவாதத்தின் பின் ஏற்கிறார். கட்டாய ஆட்சேர்ப்பு என்பதனை இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்களில் நாம் பார்க்கவே முடியாது.

4

ஈழம் எனும் பிரச்சினைக்கும், அதனது நிலப்பரப்புக்கும் அதனது கலாச்சாரத்துக்கும் பற்பல குறிப்பான தன்மைகள் இருக்கின்றன. எனினும் விடுதலைப் போராட்டத்தின் இயக்கமுறைகள் மற்றும் அதனது போராட்டவழியில் அது எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் எனும் அளவில், உலக விடுதலை அமைப்புகள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களுடன் பாரிய பொதுத் தன்மைகளையும் அது கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் தாம் புரட்சி எனக் கருதியவற்றுக்கு மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தவர்கள் அனைவரையுமே துரோகிகள் என வரையறை செய்தார்கள். கலைஞர்கள், கல்விமான்கள், சட்டத்துறை வல்லுனர்கள், ஆயதமேந்திய அரசியல் செய்யாதவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், மனித உரிமையாளர்கள் அனைவரையுமே அவர்கள் துரோகிகள் என வரையறை செய்தார்கள். மாறுபட்ட அரசியல் கொண்டிருந்த இயக்கங்களையும் துரோகிகள் என்றார்கள். துரோகிகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்தேயிருந்தவர்களுக்கு, துரோகிகளை முற்றாக அழிப்பது என்பது இயலாததாக இருந்ததால், அவர்களது கொலைகளும் எல்லையற்று விரிந்தது.

ஆதீதமாக மத்தியத்துவப்படுத்தபட்ட விடுதலைப் புலிகளின் அமைப்பு முறையில், இனக்குழு விசுவாசமும் தலைமைக்கான விசுவாசமும் இணைந்து, குடும்பம் போன்ற பாசமும், அந்தக் கட்டுறுதியினால் விளைந்த அவர்களுக்கேயுரிய ஒரு அறமும் சேர்ந்ததான, வெகுமக்களிடம் இருந்து விலகிய, தர்க்கம் மீறிய நம்பிக்கைகளால் கட்டப்பட்ட தூயபக்தி மார்க்கம் (purist cult) போன்றதொரு அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியது.

5

வடஅயர்லாந்துப் பிரச்சினையில் புராடஸ்தாந்து குடியேற்றங்களை கத்தோலிக்க தேசியவாதிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் எனும் அனுபவங்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, நாம், சிங்களக் குடியேற்றங்களை விடுதலைப் புலிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் எனும் அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

வடஅயர்லாந்துப் பிரச்சினையும் ஈழப் பிரச்சினையும் நிறைய ஒத்த தன்மைகளைக் கொண்டது. இரண்டு இனங்களுக்கு இடையிலான பிரச்சினை என்பது இரு நிலப்பரப்புகளுக்கும் பொதுவானது. வடஅயர்லாந்தில் குடியேற்றப்பட்டவர்கள் பிரித்தானியாவில் இருந்து, வெளியில் இருந்து, குடியேற்றப்பட்டவர்கள். இதன் மூலம் குடியேற்றங்கள் என்பதும், அவர்களுக்கு பிரித்தானிய ஆயுதப் படைகளின் பாதுகாப்பு என்பதும் காலனியக் குடியேற்றத்தின் பகுதியாக ஆகிறது.

இலங்கையில் நிலைமை வித்தியாசமானது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் 40 சதவீதமான மக்களாகத் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். மலையகத்தில் குடியேறிய தமிழகத் தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். இச்சூழலில், இலங்கை ஒரு நாடு எனக் கொண்டால் தமிழர்களுக்குள் குடியேறும் சிங்களவர்களை, தமது நிலத்தைப் பறிப்பவராகக் கருதுவதும், வடஅயர்லாந்து அனுபவத்தின் அடிப்படையில் அவர்களைக் கொல்வதும் தமிழ் இனத் தேசியத்தின் எதிர்மறைப் பக்கமாகவே ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

ஈழம் என விடுதலைப் புலிகள் வரையறுத்த எல்லைப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஏழைச் சிங்கள மக்களது படுகொலைகளை இவ்வகையில், விடுதலைப் புலிகளால் தாம்தான் அதைச் செய்தோம் எனத் தார்மீக அடிப்படையில் கோரிக்கொள்ள முடியவில்லை.

6

மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவென்பது இரண்டு தளங்களில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். மக்களின் இயக்கம் என்பது ஒரு தளம். மக்களுக்கான இயக்கம் நாங்கள், ஆகவே மக்கள் நாங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் என விடுதலைப் புலிகளே கருதிக் கொள்வது பிறிதொரு தளம். முதல் தளத்தில் மக்கள் சிந்திப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியும். அதனை ஏற்று விடுதலைப் புலிகள் செயல்படுவார்கள். இரண்டாவது தளத்தில் மக்களுக்காக விடுதலைப் புலிகள் சிந்திப்பார்கள். மக்களின் நலன் இதுதான் எனத் தாங்கள் கருதுவதை மக்களின் மீது சுமத்துவார்கள். இது ஒரு விஷச்சுழல். இந்தச் சுழல் பொதுவாக அரசியல் விவாதமற்ற ஒரு சமூகத்தில் மையப்படுத்தபட்ட அதிகாரமாக இறுகிவிடும்.

சோசலிச நாடுகளில் இதனைச் சாதாரணமாகக் காணவியலும். மக்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். மக்களது நலன்கள் எங்களுக்குத் தெரியும். மக்களுக்கு நாங்கள் தலைமையேற்கிறோம் எனச் சொன்ன கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்கு எதிரான அதிகாரமாக இறுகியது. விடுதலைப் புலிகளும் இந்தச் சுழலில் சிக்கினார்கள்.

மக்களும் தாங்களும் வேறு அல்ல எனத் தாங்களாகவே கருதிக் கொண்ட அவர்கள், மக்களுக்குத் தலைமையேற்கிறவர்கள் நாங்கள் எனும் அளவில் தமது நிலைப்பாடுகளை அவர்கள் மக்கள் மீது சுமத்தினார்கள். கிளிநொச்சி வீழ்ச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலும் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான உறவு இவ்வாறாகவே இருந்திருப்பதனை அந்த மக்களுக்கு இடையில் பணியாற்றிய சர்வதேச சேவை நிறுவனங்களின் செயல்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

7

குவேராவின் காலத்தில் இருந்த அல்லது சோவியத் யூனியன் காலத்தில் இருந்த இலத்தீனமெரிக்கா அல்ல இன்று இருக்கும் இலத்தீன் அமெரிக்கா. ஆயுதப் போராட்டத்திலும் போக்கோயிசத்திலும் இலத்தினமெரிக்க நாடுகளுக்கு இருந்த ஈடுபாடு முடிவுக்கு வந்துவிட்டது. கொலம்பியாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்த பார்க் (farc) விடுதலை இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.

கொலம்பிய ஆயுதவிடுதலைப் போராட்டத்தை அந்த நாட்டின் நிலைமையிலிருந்து பார்க்கும்பொது நியாயமான போராட்டம் என அதனை ஆதரித்துக் கொண்டிருந்த வெனிசுலா அதிபரான சாவேஸ் இன்று பார்க் இயக்கத்தை ஜனநாயக அரசியலுக்கு வருமாறு கோருகிறார். கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் கொரில்லாவுமான பிடல் காஸ்ட்ரோ ஜனநாயக அரசியலுக்கு வருமாறு அவர்களைக் கோருகிறார்.

பார்க்கின் சித்தாந்தியும் தோற்றத் தலைவரும் கோட்பாட்டாளருமான மானுவல் மருலாண்ட மரணமுற்ற பின்னால், அவ்வியக்கத்தின் இரண்டாம் கட்டத் தலைவர் ரைஸி ஈக்வடார் நாட்டில் வைத்துக் கொலம்பியாவினால் கொல்லப்பட்ட பின்னால், அந்த அமைப்பின் பெண்போராளித் தலைவி கொலம்பிய அரசிடம் சரணடைந்த பின்னால், அந்த இயக்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகியிருக்கிறது.

ஆசியாவில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நாற்பது ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. 2009 ஆம் வருடம் ஜூலை மாதத்தில் நோர்வேயின் மத்தியத்துவத்துடன் பிலிப்பைன்ஸ் அரசும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இணங்கியிருக்கின்றன. கொலம்பியாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் மிக முக்கியமான ஒற்றுமை ஒன்று உண்டு. அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரேல் என மூன்று நாடுகளும் இந்த அரசுகளுக்கு ஆதரவாக ஆயுதப் போராளிகளை ஒடுக்க உதவுகிறது என்பதுதான் அந்த ஒற்றுமை.

குர்திஸ்தானைப் பொறுத்து, அகண்ட குர்திஸ்தான் எனும் கோரிக்கையை அதற்காகப் போராடும் இயக்கங்கள் விட்டுவிட்டன. துருக்கியிலிருந்து ஈராக்குக்குள் வரும் குர்துப் போராளிகளை ஒடுக்குவதற்கு ஈராக் எல்லையிலுள்ள சுயாதீன குர்துக்களின் தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்கா அப்துல்லா ஒச்சலான் தலைமையிலான பிகேகேவை ஒழிக்க நினைத்தாலும், துருக்கியிலுள்ள குர்துமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தலையிட வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பிகேகேவின் தலைவரான அப்துல்லா ஒச்சலான்.

8

மனித உரிமை சார்ந்த விவாதங்களை எடுத்துக் கொண்டால் இலத்தீனஅமெரிக்க நாடுகளோ அல்லது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளோ இலங்கைக்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் மேற்குக்கு எதிராக நிலைப்பாடு எடுத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மனித உரிமைகள் தொடர்பான மேற்கு கிழக்கு விவாதங்களைக் கவனித்து வந்திருப்பவருக்கு இதுவே யதார்த்தம் என்பது சாதாரணமாகவே விளங்கியிருக்கும்.

ஈழம் எமக்கு வெகு அருகில் இருப்பதால், எமது அனுபவத்தில் கலந்திருப்பதால், எமது உணர்ச்சிகரமான பிரச்சினையாகவும் இருப்பதால், எமது கனவு நாடுகள் அல்லது ஆதர்ச நாடுகள் அல்லது முன்னாள் ஆயுத விடுதலைப் போராட்ட நாடுகள், இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் எமக்கு அதிர்ச்சியாகவும் ஆத்திரமாகவும் ஏமாற்றமாகவும் கோபமாகவும் இருக்கிறது.

மனித உரிமை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதங்களையும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மேற்கொண்டு வந்திருக்கிற நிலைப்பாடுகளையும், அதற்கு எதிராக ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளும் முன்னாள் சோசலிச நாடுகளும் எடுத்துவந்திருக்கிற நிலைப்பாடுகளைப் பார்ப்போமானால், சீனாவும், கியூபாவும், தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் எடுத்த நிலைப்பாடு எவருக்கும் ஆச்சரியம் அளித்திருக்காது.

(எனது அடுத்த கட்டுரை மனித உரிமை குறித்த மார்க்சிய அறம் சார்ந்த கோட்பாட்டு விவாதங்களைப் பேசவிருப்பதால்) மனித உரிமை தொடர்பான நடைமுறை அனுபவங்களை மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சோசலிசத்திற்கு எதிராக முன்வைத்த மிகமுக்கியமான குற்றச்சாட்டு, சோசலிச நாடுகளில் தனிநபர் உரிமையை மையமாகக் கொண்ட மனித உரிமைகள் இல்லை என்பதுதான். எழுத்தாளர்களையும் சோசலிசத்திற்கு எதிராகப் பேசும் அறிஞர்களையும் முன்வைத்து இந்தப் பிரச்சாரத்தினை மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் முன்னெடுத்தன. தனிநபர் உரிமை என்பதனை சொத்துடமை சார்ந்த உரிமைக்கான கோஷமாகப் பார்த்த சோசலிச நாடுகள், அமெரிக்காவின் தனிநபர் உரிமைக் கோரிக்கையை சோசலிச அமைப்பின் சொத்துகளைப் பொதுவுடமை ஆக்குவதற்கு எதிரான கோஷமாகவே பார்த்தது.

9

மேற்கத்திய நாடுகளதும் அமெரிக்காவினதும் மனித உரிமைக் கோஷங்களை முன்னாள் காலனியாதிக்க நாடுகளான ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகள் எந்தவிதமான மரியாதையும் அற்று, தமது நாடுகளில் மீண்டும் தலையிடுவதற்கான காலனிய எஜமானர்களின் மேலாதிக்கத் தந்திரோபாயமாகவே அவர்களது மனித உரிமைக் கோஷங்களைப் பார்த்தன. அதில் உண்மையில்லாமலும் இல்லை. அடிமைத்தனத்தையும் சூறையாடலையும் வன்பாலுறவையுமே தமது அறமாகக் கொண்டிருந்த காலனியாதிக்க நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் எமது நாடுகளின் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கான எந்தத் தகைமையும் இல்லை என்பதுதான் இந்த நாடுகளின் நிலைப்பாடாக இருக்கிறது.

காலனியாதிக்க நாட்களில் மனித உரிமை என்ற ஒரு கருத்து உலகில் இருக்கிறது என்பதனைக் கூட நினைத்துப் பார்க்காமல் ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளைச் சுரண்டிச் சுடுகாடாக்கிய நாடுகள்தான் மேற்கத்தியக் காலனிய நாடுகளும் அமெரிக்காவும் என்பது வெள்ளிடை மலையான நிஜமாகும்.

மனித உரிமை என்பதனை மேற்கல்லாத, அமெரிக்கா அல்லாத உலக நாடுகளில் இராணவரீதியிலும் அரசியல் ரீதியிலும் தலையிடுவதற்கான ஒரு தந்திரோபாயமாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இன்றும் பாவித்து வருகின்றன. அமெரிக்காவின் மேற்கத்திய நாடுகளின் அரசியல் மேலாதிக்கத் தலையீட்டை நிராகரிக்கும் முகமாகவும் ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகள் இவர்கள் பேசும் மனித உரிமைகளை நிராகரிக்கின்றன.

இவையனைத்தையும்விட பிரதானமான காரணம் மனித உரிமை குறித்த மேற்கத்திய நாடுகளதும் அமெரிக்காவினதும் இரட்டை வேடம். கொலம்பியாவில் கொரில்லாக்களுக்கு எதிராக 1958 ஆம் ஆண்டு நாபாம் குண்டுகளைப் பாவித்த அமெரிக்க அரசு, 1968 இல் வியட்நாமில் நாபாம் குண்டுகளைப் பாவித்தது. ஹிரோசிமாவில் முதல் அணுகுண்டைப் பாவித்ததும் அமெரிக்காதான். ஈராக்கிலும் பொஸ்னியாவிலும் ஆப்கானிலும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்ததும், வெகுமக்களின் இலக்குகள் மீது குண்டுகளைப் பொழிந்ததும், தொலைக் காட்சி நிலையங்களின் மீது குண்டுகளைப் பொழிந்து இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தததும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும்தான்.

பல்வேறு சர்வதேச அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கேட்டுக் கொண்டும் அத்தனையையும் நிராகரித்துத் தம் மீதான விசாரணைகளுக்கு செவிசாய்க்க மறுத்தவர்களும் மேற்குலகத்தவரும் அமெரிக்கர்களும்தான். இந்த உலக யதார்த்தங்களில் இருந்துதான் முன்னாள் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிட்ட ஆசிய இலத்தீனமெரிக்க நாடுகளில் பெரும்பாலுமானவை மனித உரிமை எனும் விடயத்தில் மேற்குக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக ஓரணியில் நிற்கிறார்கள்.

10

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகள் எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்து தனது வெளியுறவுத்துறை மூலம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது. அமெரிக்காவுக்கு இதற்கான தகுதியை யார் கொடுத்தது எனக் கேட்கும் சீனா தனது வெளியுறவுத்துறையின் மூலம் அமெரிக்காவில் மனித உரிமைகள் குறித்து ஆராய்ந்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிடுகிறது.

உலகிலேயே சிறுபான்மையின மக்களை அதிகம் சிறையில் வைத்திருக்கும் நாடும், அதிகமான மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடும் அமெரிக்காதான் எனத் தனது மனித உரிமை அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறது சீனா. தேவாலயங்களில் அதிகமாக பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதும் அமெரிக்காவில்தான் என்கிறது சீனாவின் அறிக்கை.

இலங்கை தொடர்பான பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையில் வந்தபோது மேற்குலகு இலங்கைக்கு எதிராக வைத்த அறிக்கைக்கு இலங்கை ஒரு எதிர் அறிக்கையை வைத்தது. இந்த அறிக்கையில் சில திருத்தங்கள் செய்தால், தான் ஏற்றுக் கொள்வதாக ஜெர்மனி சொன்னது. எந்தவிதமான திருத்தங்களையும் இலங்கையின் அறிக்கையில் எவருக்காகவும் செய்ய வேண்டியதில்லை எனப் பிடிவாதமாக நின்றது கியூபா. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மனித உரிமையைக் காரணம் காட்டி கியூபாவின் மீது, சகல சர்வதேசியச் சட்டங்களையும் மீறி, ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தையும் மீறிப் பொருளாதாரத் தடை விதித்து வருகிறது அமெரிக்கா. அதனை ஆதரிக்கின்றன மேற்கத்திய நாடுகள். இவை கொண்டு வருகிற மனித உரிமைத் தீர்மானத்தை கியூபா எதிர்ப்பதில், இலங்கைத் தமிழர் நிலைமையைப் புரிந்து கொண்டு கியூபா எதிர்க்கிறது என்பதை விடவும், மனித உரிமையில் இரட்டை வேடம் போடும் அமெரிக்காவினதும் மேற்கத்திய நாடுகளதும் எவ்விதமான மனித உரிமை நிலைப்பாட்டையும் மூர்க்கமாக எதிர்ப்பது என்பதாகவே நாம் புரிந்து கொள்ள முடியும்.

மனித உரிமை விவாதங்கள் நடந்து வந்த வேளையில், இலங்கைக்கு ஆதரவாக அதனது அதிகாரபூர்வ பிரதிநிதியாகப் பேசிய முன்னாள் மார்க்சிஸ்ட்டான ஜாயன் ஜயதிலகாவின் சொல்லணிகளையும் (rhetorics) ஒருவர் இங்கு ஞாபகம் கொள்ள வேண்டும். காலனியாதிக்க நாட்களின் ஞாபகத்திலிருந்து மேற்கத்திய நாடுகள் பேசுகின்றன எனக் குறிப்பிட்ட தாயன் ஜயதிலகா, இலங்கை இப்போது சுதந்திரம் பெற்ற ஒரு நாடு என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார். இலங்கை அரசினது பாதுகாப்பு அமைச்சக இணையத்தளக் கட்டுரைகள் ஈராக்கிலும் ஆப்கானிலும் அர்ஜன்டீனாவிலும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் செய்த மனித உரிமை மீறல்களின் மேல் விசாரணை நடத்திவிட்டு அப்புறமாக இலங்கைக்கு வாருங்கள் என எழுதினார்கள்.

சர்வதேசிய மட்டத்தில் மனித உரிமை தொடர்பாக நடந்து வந்திருக்கும் விவாதங்களையும் முரண்பாடுகளையும் மேற்கினதும் அமெரிக்காவினதும் இரட்டை நிலைப்பாடுகளையும் இலங்கை அரசு தான் நடத்தி முடித்த இனக்கொலைக்கு கச்சிதமாகப் பாவித்ததுதான் நடந்து முடிந்திருக்கிறது.

சர்வதேச மட்டத்தில் தனது நட்பு நாடுகளாக அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளையும் தேர்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம், ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்களுடன் எந்த நட்புறவையும் கொண்டிருக்கவில்லை என்பதனையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்வதேச மட்டத்தில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவிடாமல் குழப்பியதில் இலங்கை அரசுக்கு உள்ள அதே பாத்திரம் விடுதலைப் புலிகளுக்கும் இருக்கிறது. தமிழ் மக்களும் நாங்களும் ஒன்றே என்றனர் விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் இயக்கம் என்றது இலங்கை அரசு. புலிகள் தாம் பயங்கரவாதிகள் எனும் சித்திரத்தைத் தவிர வேறுவிதமான சித்திரத்தை ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளுக்குத் தந்திருக்கவில்லை. புலிகளும் மக்களும் வேறு வேறு என்பதனை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ளாமல் போனதும், அந்த மக்கள் இனக்கொலைக்கு ஆட்படுகிறார்கள் எனப் புரிந்து கொள்ளாமல் போனதற்குமான காரணங்களில் புலிகளின் தந்திரோபாயத் தவறும் அடங்குகிறது.

11

இலத்தீனமெரிக்க சமூகங்களில் அரசியல் ரீதியிலும் பொருளியல் ரீதியிலும் மிகப் பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஹாண்டுரஸில் நிலச்சீர்திருத்தம் கொண்டு வந்ததால், தொழிலாளர் நலச் சட்டங்கள் கொண்டு வந்ததால், ஆட்சிக் கவிழ்ப்பின் பின், வலதுசாரிகளின் ஆசியோடு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. முழு இலத்தீனமெரிக்க நாடுகளும் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்திருக்கின்றன. ஒபாமாவின் அரசும் மேறக்திய நாடுகளும் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்திருக்கின்றன. ராணுவ ஆட்சியை வரவேற்பதுதான் இதுவரையிலும் அமெரிக்காவும் மேற்கத்திய உலகமும் செய்து வந்த நடவடிக்கை. உலகம் தற்போது முன்போல் இல்லை. முழுமையாக மாறிவிடவும் இல்லை.

இலத்தீனமெரிக்காவில் சோசலிசப் பொருளாதாரம் இல்லை. விடுதலைப் புலிகள் தாம் விரும்பும் சமூகம் திறந்த பொருளாதார சமூகம் என்பதனால், அவர்கள் முதலாளித்துவச் சந்தைச் சமூகத்தைக் கட்டமைக்க விரும்பியதால் அவர்கள் பிற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. முன்னாள் மார்க்சியர்களான நேபாளத்தின் பிரசண்டாவும், கிழக்கு திமோர் முன்னாள் கம்யூனிஸ்ட்டான சனானாவும் முதலாளித்துவத்தைத்தான் கட்ட விரும்புகிறார்கள். தாம் விரும்புகிற சமூகத்தை நோக்கி அதனின்றுதான் மேல் நோக்கிச் செல்ல முடியும் எனவும் அவர் கருதுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக ஒரு இயக்கத்தை எதிர்ப்பது அல்லது அவர்களின் மீது தொடுக்கப்பட்ட அரசவன்முறை சரியானது எனத் திருப்திப்படுவதில் அரசியல் தூரதரிசனம் ஏதும் இல்லை.

12

மனித உரிமை தொடர்பான விவாதங்களை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு கியூபா மீது நாம் வருத்தப்படவோ அதற்கு எதிரான நிலைப்பாடு எடுக்கவோ அவசியமில்லை. பினோசேவின் மனித உரிமை மீறலுக்கு எதிரான அலண்டேவின் சிலிநாடு இலங்கைக்கு எதிராக நிற்கிறது. சிலி கியூபாவுடனும் முழு இலத்தினமெரிக்க நாடுகளுடனும் நட்பும் தோழமையும் கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறலை மிகச் சமீபத்தில் மிக உக்கிரமாக அனுபவம் கொண்டதால் சிலிக்கு மனித உரிமையின் வலி தெரிகிறது போலும். கியூபாவுக்கு அதனை நேரடியாக அனுபவித்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. பிறிதொருவிதத்தில் அதே 50 ஆண்டுகளாக அமெரிக்கா தரும் வலியை கியூபா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. மனித உரிமையின் அவசியத்தை இலங்கை விடயத்திலும் கியூபா ஏற்க நாம் வலியுறத்துவோம் என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.

முள்ளிவாய்க்காலிலும் நந்திக் கடலிலும் நடந்து முடிந்தவை குறித்து நாம் தொடர்ந்து பேச வேண்டும். விடுதலைப் புலிகள் முழு மக்களையும் அடைத்து வைத்திருந்தார்கள் என்பது முழு உண்மையாக இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் தரப்பில் மட்டும் முல்லைத் தீவுச்சமருக்கு முன்பாகவே 25000 போராளிகள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் எவரோ ஒருவரது மகனாக மகளாக தந்தையாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்களது குடும்பத்தவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் இருந்திருப்பார்கள். மரணமடைந்த போராளிகள் அனைவருமே பலவந்தமாகப் புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டியதில்லை. விடுதலைப் புலிகளுடன் விரும்பிச் சென்றவர்களும் இருந்திருப்பார்கள். விடுதலைப் புலிகளால் பலவந்தப்படுத்தப்பட்டு பிணைக்கைதிகளாக இருந்தவர்களும் இருந்திருப்பார்கள். இதனை மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை அரசு சொல்வதை அப்படியே ஏற்க வேண்டிய அவசியமில்லை.

விடுதலைப் புலிகளின் பேச்சாளர் சர்வதேச சேவை அமைப்புகளை ஊடகவியலாளர்களை அப்பகுதிக்கு வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். அரசு ஊடகங்களையோ சேவை அமைப்புகளையோ சுயாதீனச் செய்தியாளர்களையோ அரசு அனுமதிக்கவில்லை. முள்ளிவாய்க்காலிலும் நந்திக் கடலிலும் நடந்தவை குறித்த நிஜங்கள் ஏதும் அறியவராத சூழலில் விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகளை மட்டும் வைத்து, அரசியல் ரீதியான நிலைப்பாட்டிலிருந்து மட்டும் பார்த்து புலிகளுக்கு எதிராக மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் நடந்தவை குறித்த உண்மைகள் வெளிவந்துவிட்டதாகக் கருதமுடியாது.

ஐக்கிய நாடுகள் சபை மரணமுற்றவர்கள் 30000 எனச் சொல்கிறது. அரசின் பேச்சாளர் முப்பதாயிரம் எல்லாம் இல்லை 5000 இருக்கும் என்கிறார். உயிர்கள் இங்கு வெறும் எண்ணிக்கை. அது மனித உரிமைகளைக் கடைப்பிடிக்கவில்லை. அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அதனது பொறுப்பு. விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் இல்லாது போகும். அரசு மறுபடி இருக்கும். அரசு மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் ஊடகவியலாளர்களை அழிப்பதையும் ஒரு கொள்கையாகக் கொண்டிருக்குமானால் அந்த அரசு பாசிச அரசுதான்.

தானே முன்வந்து ஒப்புக் கொண்ட விசாரணைகளைக் கூட அரசு நிராகரித்திருக்கிறது. முள்ளிவாய்க்காலிலும் நந்திக் கடலிலும் நடந்தவை குறித்து வெளிப்படையாக முன்வைக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. பிரபாகரனின் மரணத்தை அவரது மரணச் சான்றிதழின் வழி நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

13

மனித உரிமை விவாதத்தையும் நடந்து முடிந்த ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையையும் நினைவுகூர்பவர்களுக்கு கையறுநிலை அவர்கள் மீது படிவது தவிர்க்கவியலாதது. எனினும் நம்பிக்கையின் கீற்றுகள் உலகில் தென்படத்தான் செய்கிறது. மனித உரிமை விவாதங்களில் அர்த்தமற்ற வகையில் பாவிக்கப்படும் மேற்கு கிழக்கு விவாதங்களை முற்றிலும் நிராகரிக்கிற அறிவாளியாக நோபல் பரிசுபெற்ற பொருளியலாளரான அமர்த்யா சென் இருக்கிறார். நான்கு திசைகளும் மீறிய, உலகம் தழுவிய மனித உரிமைகளின் தேவையை அவர் மறுபடி மறுபடி வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் புரிந்த மனித உரிமை மீறல்களை மட்டுமல்ல சீனா புரிந்த மனித உரிமை மீறல்களையும் குறித்து அவர் பேசுகிறார்;. சீனாவில் சுயாதீனமான ஊடகங்கள் இல்லாததால், மாவோவின் மாபெரும் பாய்ச்சல் காலத்தில் சீனாவில் நிகழ்ந்த இலட்சக்கணக்கிலான பட்டினிச்சாவுகள் வெளியுலகிற்கே தெரியவராமல் போனது என எழுதுகிறார் அமர்த்தியா சென். சுயாதீன ஊடகங்களையும் வெளிப்படைத்தன்மையையும் என இரண்டு விடயங்களை உலகின் எந்த நாடும் அனுசரிக்க வேண்டும் என்கிறார் அமர்த்தியா சென். இலங்கையின் இனப்படுகொலை இந்த இரண்டையும் நிராகரித்துவிட்டுத்தான் நடந்திருக்கிறது.

தமது தேசியக் கலாச்சாரத்தின் பெயரிலும், கிழக்கு மேற்கு அல்லது வடக்கு கிழக்கு கலாச்சார வித்தியாசங்கள் எனும் பெயரிலும் மனித உரிமையை நிராகரிக்கும் ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க அரசுத் தலைவர்களை அவர் சாடுகிறார். கான்பூசியசின் பெயரிலும் கௌடில்யரின் பெயரிலும் அல்லாவின் பெயரிலும் மனித உரிமை நிராகரிக்கப்படுதலை அவர் சாடுகிறார். இன்று மனித உரிமை தொடர்பாக நடந்து வருகிற அதே அர்த்தத்தில் கிழக்கு மேற்கு என எந்தக் கலாச்சாரத்திலும் மனித உரிமை பேசப்பட்டதில்லை எனும் அவர், மனித உரிமை என்பது எவருக்கும் தனித்தே உரித்தானது அல்ல எனவும் கூறுகிறார்.

எல்லாச் சமூகங்களும் வேறு வேறு விதங்களில் மனித உரிமையை அவாவியே வந்திருக்கின்றன எனவும் அவர் கூறுகிறார். நாடு இனம் மொழி சமயம் என அனைத்தும் கடந்து எந்த மனிதனும் உலகில் எந்தக் கோடியிலும் இருக்கிற மனிதனின் மனித உரிமைக்காகப் பேசவேண்டும் எனவும் அவர் கூறுகிறார். இவ்வகையில் கியூபாவிலும் மனித உரிமையை வேண்டியவராக கியூபாவின் ஆதரவாளரான ழான் பவுல் ஸார்த்தர் திகழ்ந்திருக்கிறார். இந்த மரபின் அடியொற்றி ஈழத்தில் நடந்து முடிந்திருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான மனித உரிமை வேண்டி நாம் தொடர்ந்து போராட வேண்டிய கடமை நமக்கு முன் உள்ளது. நிகழ்கால இலத்தீனமெரிக்காவையும் அதனது புரட்சிகர மரபையும் கூட, இதற்காக நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1716

Posted

ஆதீதமாக மத்தியத்துவப்படுத்தபட்ட விடுதலைப் புலிகளின் அமைப்பு முறையில், இனக்குழு விசுவாசமும் தலைமைக்கான விசுவாசமும் இணைந்து, குடும்பம் போன்ற பாசமும், அந்தக் கட்டுறுதியினால் விளைந்த அவர்களுக்கேயுரிய ஒரு அறமும் சேர்ந்ததான, வெகுமக்களிடம் இருந்து விலகிய, தர்க்கம் மீறிய நம்பிக்கைகளால் கட்டப்பட்ட தூயபக்தி மார்க்கம் (purist cult) போன்றதொரு அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியது.

புலிகளின் இராணுவ பலம் பற்றி பகுப்பாய்வு முடிந்து ,இப்ப புலிகளின் பிழைகள் பற்றி பகுப்பாய்வு நடக்குது ,நடக்கட்டும் நடக்கட்டும் எங்களுக்கும் நேரம் போகத்தானே வேணும்.

முதல் முன்னாள் இராணுவத்தளபதிகள் புலிகள் பற்றி பகுபாய்வு செய்தனர்,

இப்ப முன்னாள் ஆயுதபோராளிகளும் .தமிழ்நாட்டு புத்தக சோசலிஸ்டுகளும் புலிகளை பற்றி பகுப்பாய்வு செய்கிறார்கள் ,செய்யுங்கோ எல்லாம் நல்லாய் இருக்க்குது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்களும் விடுதலைப் புலிகளும் : பகுப்பாய்வு

யமுனா ராஜேந்திரன்

ஈழம் எனும் பிரச்சினைக்கும், அதனது நிலப்பரப்புக்கும் அதனது கலாச்சாரத்துக்கும் பற்பல குறிப்பான தன்மைகள் இருக்கின்றன. எனினும் விடுதலைப் போராட்டத்தின் இயக்கமுறைகள் மற்றும் அதனது போராட்டவழியில் அது எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் எனும் அளவில், உலக விடுதலை அமைப்புகள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களுடன் பாரிய பொதுத் தன்மைகளையும் அது கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் தாம் புரட்சி எனக் கருதியவற்றுக்கு மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தவர்கள் அனைவரையுமே துரோகிகள் என வரையறை செய்தார்கள். கலைஞர்கள், கல்விமான்கள், சட்டத்துறை வல்லுனர்கள், ஆயதமேந்திய அரசியல் செய்யாதவர்கள், கம்யூனிஸ்ட்டுகள், மனித உரிமையாளர்கள் அனைவரையுமே அவர்கள் துரோகிகள் என வரையறை செய்தார்கள். மாறுபட்ட அரசியல் கொண்டிருந்த இயக்கங்களையும் துரோகிகள் என்றார்கள். துரோகிகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்தேயிருந்தவர்களுக்கு, துரோகிகளை முற்றாக அழிப்பது என்பது இயலாததாக இருந்ததால், அவர்களது கொலைகளும் எல்லையற்று விரிந்தது.

ஆதீதமாக மத்தியத்துவப்படுத்தபட்ட விடுதலைப் புலிகளின் அமைப்பு முறையில், இனக்குழு விசுவாசமும் தலைமைக்கான விசுவாசமும் இணைந்து, குடும்பம் போன்ற பாசமும், அந்தக் கட்டுறுதியினால் விளைந்த அவர்களுக்கேயுரிய ஒரு அறமும் சேர்ந்ததான, வெகுமக்களிடம் இருந்து விலகிய, தர்க்கம் மீறிய நம்பிக்கைகளால் கட்டப்பட்ட தூயபக்தி மார்க்கம் (purist cult) போன்றதொரு அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியது.

5

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1716

நடுநிலையாக நான் எழுதுகிறேன் என்ற ஒரு பதத்தை தோற்றுவிக்க எண்ணுபவர்கள் எல்லோராலும் முன்வைக்கபடும் ஒரு சாக்கடை தத்துவாந்தம் கேட்டு கேட்டு புளித்துபோனாலும்............... புதிய தமிழ்சொற்காளால் கொஞ்சம் அலங்கரிக்க நினைத்துள்ளார் கட்டுரையாளர்.

தமிழ் ஈழ நிலத்திற்குள் அல்லது இலங்கைக்குள் ஈழதமிழனாக அடையளம்கண்டு இனபிரச்சனைக்குள் சிக்கிய அனைத்து ஈழ தமிழனது எண்ணமும் விடுதலையாவே இருந்தது. 1986ம் ஆண்டிற்கு முற்பட்ட காலபகுதி என்பது ஆயுதபோராட்டத்தின்பால் பல இளைஞர்களை தூண்டியதன் விளைவே பல ஆயுதபோராட்ட இயக்கங்கள் தோன்ற காரணமாயின. எல்லோருடைய இலக்கும் தமிழ்ஈழமாக இருந்ததோடு ஆயுதத்தின்பால் அதைசாதிக்கலாம் என்ற அசையாத எண்ணமும் அந்த இயக்கங்களில் இணைந்த இளைஞர்களிடம் இருந்தது. போட்டி ஒருவரை ஒருவர் ஏற்றுகொள்ளாமை தம்மை தாமே உயர்வாக எண்ணியதன் விளைவே பலரை தலவைர்களாக உருவாக்கியது என்ற உண்மைக்கு பின்னைய நாட்கள் சாட்சிகளாயின. கீரைகடைக்கும் ஒரு எதிர்கடை என்பதுபோல் அவரும் ஒரு இயக்கம் தொடங்கினார் நானும் ஒன்றை தொடங்கலாம் என்ற எண்ணத்தின் மழையால் பல களான்கள் முளைத்தன. அடித்தளத்தில் ஈழவிடுதலை என்பது அவர்கள் மனதில் தொங்கினாலும் அவரைபோல் நானும் ஒரு கடை திறந்துள்ளேன் என்ற தற்காலிக மகிழ்சியே பல தலைவர்களை உருவாக்கியது என்பதுற்கும் தொடர்ந்துவந்த நாட்களே சாட்சிகள். இளைஞர்களை இணைத்தாயிற்று கொஞ்சம் காசு பாhத்து ஆயுதமும் கண்டாச்சு இனி ஈழ விடுதலைபோர்? போரின் போக்கு என்பது எங்களிடம் ஒரு பக்கமும் எதிரியிடம் மறுபக்கமுமே எப்போதும் இருக்கும். ஆக ஸ்ரீலங்க சிங்கள காவல் நிலையங்கள் இராணுவ முகம்களாக்கபட்டன தமிழ் பிரதேசங்களில் நடமாட்டம் என்பது மட்டுபடுத்தபட்டது......... அல்லது தமிழ் ஆயுத குழுக்களை முறியடித்த நிலையிலேயே நடமாட்டம் என்பது சாத்தியமானது. ஆக இராணுவ விஸ்தரிப்பொன்றே ஒரே வழி எனும் நிலைக்கு எதிரி தள்ளபட்டான் ஆக அவனது நகர்வு இரணுவ மயமாகிகொண்டிருந்தது. இப்போது ஏதோ ஒரு பெயரையும் வைத்துவிட்டு கொஞ்சம் இளைஞர்களையும் சேர்த்து வைத்துகொண்டு இந்தியா பெற்றுதரும் ஈழத்தில் தாமும் பங்குதாரர் ஆகலாம் என்று எண்ணிய சில தலைவர்களுக்கு தலையிடி தோன்றியது. ஆதுவே ஈழவிடுதலை என்ற இலட்சியத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு இந்தியாவிடம் போய் நின்னை சரணடைந்தேன் என்ற நிலையை உருவாக்கியது. இந்தியாவை பொறுத்தவரை என்பதிலும் விட அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியை பொறுத்தவரையில் தன்னை மதிக்காது நடந்த சிறிமாவையும் அமெரிக்க சார்பு நிலையை விரும்பும் ஜேர்.ரையும் பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் ஆனது என்ற நிலை உருவானது. தன்னை சரணடைந்த ஆயுதகுழுக்களை தன்வசம் வைத்துகொண்ட இந்தியா சரணடையாது ஈழவிடுதலையிலேயே குறியாய் இருந்தவர்கள் மேல் ஒரு சந்தேக பார்வையை பார்க்தொடங்கியது. அது பல இழுபறிகளின் பின்பு முதலாவதும் கடைசியாகவும் எல்லா தமிழ்தரப்பாலும் ஒன்றாக அமார்ந்து ஒரு பேச்சுவாhத்தையை இலங்கையோடு செய்ய ஏற்பாடு ஆனது............(திம்பு பேச்சு) இதில் புலிகளின் நிலைபாடு என்பது காரசாரமானதாக இருந்தது இலங்கையின் சிங்களத்தின் பசப்பு வார்த்தைகள் நம்பும்படியாக இல்லை என்ற தோரணை இருந்தது. அப்போது ஒன்றாக இருந்த நான்கு இயக்கங்களான ரெலோ புலிகள் ஈபிஆர்எல்வ் ஈரோஸ் இவர்கள் தமக்குள் இழுபறிநிலையை கொண்டாலும் புலிகளின் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கடும் முயற்சியால் ஓரே முடிவில் நின்றார்கள்...................... இப்போதுதான் ஈழவிடுதலை பற்றிய தனது உண்மையான முகத்தை இந்தியா காட்ட தொடங்கியது. சிங்களவர்களுடன் போர் என்பது இனிப்பாக இருந்தது என்றாலும் ஈழவிடுதலை என்பது கொஞ்சம் கசப்பாக இருந்தது. இதனால் தமிழர் தரப்பை சிங்களவரின் பசப்பு வார்த்ததைகளுக்கு பணியும்படி பணித்தது (இதை விரிவாக பார்த்தசாரதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்) புலிகளின் நல்ல கலமாக அவர்களுடன் மீதி மூன்று இயக்கங்களும் இணைந்ததால் புலிகளுக்கெதிரான சதிகள் தனிப்பட இந்தியாவால் அப்போது எடுக்கபடவில்லை.

ஆனால் எடுக்கபடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தோன்றிவிட்டது. அதன் தொடர்சியே ஒற்றுiமாயக ஒன்றிபோய்விடுவார்களோ என்று இணநை;துகொண்டிருந்து நான்கு இயக்கங்களையும் பற்றி இந்தியா கவலைகொள்ள தொடங்கியது. இப்போது இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து ஈழவிடுதலை இயக்கங்களின் செய்றபடுத்தல் வழிவகுப்பு திட்மிடல் என்பன இந்திய உளவு துறையான "றோ" விடம் வந்து சேர்ந்தது. பிரபாகரனுடன் கொண்ட தனிபட்ட விரோதத்தால் எல்லா இயக்கங்களையும் ஒன்று சேர தீட்டிய திட்டதிற்குள் புளட் என்ற பெயரில் இயக்கத்தை வைத்திருந்த உமாமகேஸ்வரனால் வர முடியவில்லை. அவர்கள் தனித்து நின்றதும் இந்தியாவுடனான உறவிலும் விட பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடனான தொடர்புகள் லெபனானில் பயிற்சிகள் என்று பறந்து திரிந்தது. றோவின் கண்களில் கொஞ்சம் அச்சுறுத்தலை உண்டு பண்ணியது எனலாம். தனது முதலாவது வஞ்சத்தை இந்தியா புளட் இயக்திலேயே தீர்த்தது. முஸ்லீம் நாடாக இருக்கும் மாலைதீவு பாகிஸ்தானுடன் பல உறவுகளை பேணியதுடன் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தியாவின் போக்கும் இந்தியாவுடனான தொடர்புக்கு தடையாக இருந்தது. ஆக மாலைதீவில் போய் முகாமிட்டு இருப்பதற்கு அது புளட்டை பயன்படுத்த திட்டம் தீட்டியது. உண்மையிலேயே தமிழ் ஈழ விடுதலையே உமாமகேஸ்வரனின் ஓரே கொள்கையாக இருந்திருப்பின் மாலைதீவு பற்றிய இந்தியாவின் நச்சு வேலைக்கு தலையாட்டி இருக்க தேவையில்லை............ ஆனால் ஈழ விடுதலையிலும் விட தமது சொந்த முகவரிகளுக்கான அங்கிகாரத்திற்கு இயக்கங்களில் சேர்ந்த இளைஞர்களையும் பலியிட துணிவு கொண்டிருந்தார்கள் என்பதை சம்பவங்கள் பதிவாக்கி வைத்துள்ளன. இந்தியாவின் அடுத்த தேர்வாக ரேலோ தெரிவானது அதற்கு காரணம் ஆரம்ப காலங்களில் தங்கத்துரையின் பெயரால் பிரபலம் ஆகியதால் பல துடிப்புள்ள இளைஞர்கள் அதில் இணைந்திருந்தார்கள். ஆனால் தலவைர் சிறிசபாரத்தினத்திடம் இராணுவ நகர்வுகள் பற்றி அறிவோ சிந்தனையோ என்பது பற்றாக்குறையாக இருந்தது. ரெலோவின் வடமாரட்சி பொறுப்பாளராக இருந்த தாஸ் என்பவரே இராணுவ நகர்வுகளை முன்னெடுத்தார் இதனால் தாஸ்ஸிடமே பல ரெலோ உறுப்பினருக்கும் மதிப்பும் விருப்பும் தோன்றியது. இந்தியாவும் தேர்வு செய்து ஓதிகொண்டிருக்க தாஸ்மீது வலிகாம பொறுப்பாளராக இருந்த பொபி என்பவருக்கு பொறாமையும் வர காலம் கனிந்து வந்ததாகவே இந்தியா நினைத்தது. நல்ல இராணுவ யுத்தியுடன் செய்ற்பட கூடியவர் சாவகச்சேரி பொலிஸ்நிலைய தகர்ப்பு 256 இராவத்தினர் சென்ற இரயிலை குண்டுவைத்து தகர்த்து தோல்வியில் முடிந்தாலும் கொக்காலில் இராணுவ முகாம்மீதான தாக்குதல் என்ற ரொலோ செய்த அனைத்து தாக்குதல்களையும் தலைமைங்கி செய்தவர் என்றாலும் அவரை சுட்டவிடலாம் என்ற பொபியின் விருப்பிற்கு சிறிசபாரத்தின் ஆசியும் வருவதற்கு காரணம் இந்தியாவே. இந்தியா அதை விரும்பியதற்கு காரணம் தாஸ் புலிகளின் யாழ் பொறுப்பாளரான கிட்டுவுடன் நெருங்கிய உறவை வைத்திருந்தார். ஆக இவரை வைத்துகொண்டு புலிகளுக்கு எதிராக ரெலோவை திருப்புவது கடினம் என்ற இந்தியாவின் கணிப்பிற்கு தாஸ் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து பொபியால் சுடபட்டார். இப்போது ஈழவிடுதலை என்பது இவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிகொண்டு சென்றது. ஆனால் புலிகிளின் போக்கு என்பது ஈழத்தில் இருந்த மக்களுக்கே தெரியாதுதான் இருந்தது. யாரையும் நானும் வருகிறேன் என்றவுடன் இயக்கத்தில் அவர்கள் சேர்ப்பதில்லை. கிட்டுவை தவிர மற்றையவர்கள் ஆயதங்கள் ஏதும் ஆற்று ஏதோ அiனாதைகள்போல்தான் சைக்கிள்களில் 85ம் ஆண்டுகளில் திரிந்துகொண்டிருந்தார்கள். காரணம் ஈழவிடுதலையே முடிந்த முடிவு எனும் தீ அவர்களுக்குள் எரிந்துகொண்டிருந்தது. பின்பு இந்தியாவின் பால் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இயக்கங்களாலும் தொடங்கபட்டது. ஈழவிடுதலையில் இருந்து விலகி இந்தியாவின் கைபொம்மைகளாக பல இயக்கங்களும் அதன் தலைவர்களும் மாறிகொண்டுவருவதென்பது புலிகளால் உணரபடவே. ஈழ கொள்கையில் உறுதியானவர்கள் போராடினாலே வெற்றி உண்டு. இல்லாவிட்டால் இராணுவமயமாகிகொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சிங்கள கடையரிடம் அடிவாங்கி எல்லோரும் சாகவேண்டிய நிலையை உணாந்த புலிகள். எதுவித ஒழிவு மறைவுமின்றி தகுந்த காரணங்கள் காட்டபட்டு சில இயக்கங்கள் தொடாந்தும் இயங்க தடை செய்யபட்டன. ( இதில் சரி தவறு என்பது எனது அறிவுக்கு அப்பாற்பட்டது எல்லா விடயங்களையும் அறிந்தவர் யாரும் இல்லை ஆக பல உண்மைகளும் உறங்கிவிட்டன) இதில் ஈழவிடுதலையே ஒரே கொள்கை என்ற துடிப்பென்ற சில இளைஞர்களும் பலியானார்கள் என்பதை.............. புலிகளும் ஏற்றுகொண்டார்கள் என்பதை முதலாவது மாவீரர் உரையாக 1989ம் ஆண்டு தலைவரால் வெளியிடபட்ட உரையை வாசித்தவர்கள் அறிவார்கள். தமிஈழ விடுதலைஉணர்வுடன் சரியான வழிநடத்தல் இன்றி பலியான போராளிகளும் மாவீரரே என்பது கோடிட்டு காட்டியிருந்தார்கள். ஆக புலிகளுக்கெதிரான துரோகம் என்பதும்.............. ஈழவிடுதலைக்கு எதிரான இந்தியாவின் துரோகம் என்பதையும் மூடிமறைக்க விரும்பும் இந்த நடுநிலை வித்தகர்களின் கல்விமான்கள் மாற்று கருத்துடையோர் புலவர்கள் புனிதர்கள் எல்லோரும் யார்?

கல்விமான்கள் மாற்றுகருத்துடையேர் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் புலவர்கள் புனிதர்கள் என்ற போர்வையை இந்த நடுநிலைவான்கள் போர்த்துவது யாருக்கென்பதை வெளிப்படையாக எழுதலாமே?

தமிழினத்தை காட்டிகொடுத்து வழ்வை நடத்ததாத ஒரு கல்விமான்..........

விடுதலைபோராட்டத்தையே காட்டிகொடுத்த அரசியல்வாதிகள்...........

சிங்களவன் எல்லாத்தையும் தர தயாரா இருக்கிறான் ஆனால் புலிகள்தான் தடுக்கிறார்கள் என்ற பொய்யை காசக்காக கக்கிகொண்டிராத ஒரு மாற்றுகருத்து மாணிக்கம்...........

இந்தியா சிங்களவன் யாருடனும் கூடி தமிழரை கொலைசெய்யாத ஒரு ஒரு பொறுக்கி துரோக கும்பல்............

யாரையாவது இவர்களால் அடையளபடுத்தி எழுத முடியுமா?

இல்லை அப்படியொன்று நடந்தால்தானே எழுதுவதற்கு.

1987ம் ஆண்டிற்கு பின்பு ஈழவிடுதலையை நேசித்த ஒவ்வொரு ஈழ தமிழனும் புலிளுக்கு பின்னால்தான் நின்றார்கள். காரணம் அதுவே எமது தணியாத தாகம் என்று மேடையேதும் ஏறி பேசுவதில்லையே தவிர குப்பிகடித்தும் குண்டணைத்தும் படகோடெரிந்தும் நீராமற்று உண்ணாநிலைகொண்டும் இறந்தே காட்டினார்கள்.

ஈழவிடுதலைபோரை விற்று வயிறு வளர்க்க நினைத்த பேய்களால்தான் புலிகளை ஏற்றுகொள்ள முடியாது போனது. சக மனிதனை மனிதனாக ஏற்கதெரியாத கடவுள்களை ஏற்க மனிதர்கள் தயங்கினார்கள் என்பதே உண்மை.

ஆக தான் நடுநிலை நாட்டமையென்று தன்னை சித்தரிக்க நினைக்கும் கட்டுரையாளர்கள் புளித்துபோன புளியை கரைக்காது ஏதாவது வித்தியாசமாக செய்தால் நன்றாக இருக்கும்.

  • 3 weeks later...
Posted

அண்ணை என்ன புலிப்பால் குடிச்சா வளந்தனீங்க? எதாவது எழுதும் போது அடிப்படையில் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேணும்.இப்பாடித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் எழுதக்கூடாது.அதுக்குள்ளை இருந்த எங்களுகே தெரியாத கன கதை எழுதியிருக்கின்றீகள்.இனியென்ன இருக்கும் இடத்தில் ஒரு நாடகத்தை போடுவது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணை என்ன புலிப்பால் குடிச்சா வளந்தனீங்க? எதாவது எழுதும் போது அடிப்படையில் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேணும்.இப்பாடித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் எழுதக்கூடாது.அதுக்குள்ளை இருந்த எங்களுகே தெரியாத கன கதை எழுதியிருக்கின்றீகள்.இனியென்ன இருக்கும் இடத்தில் ஒரு நாடகத்தை போடுவது தானே.

அதுகுள்ள இருந்தநான் என்று நீங்கள் அடிக்கும் தம்பட்டத்திற்கு யாரும் செவிமடுப்பதாக இல்லை. காரணம் நிறைகுடம் தழும்பாது என்று எல்லோருக்கும் தெரியும். ஏதோ கலர்படம் ஒன்றை காட்டுவது என்று வெளிக்கிட்டிங்கள் திரும்ப திரும்ப அதுக்குள்ள இருந்தநான் என்ற ஒரே காட்சியையே திரும்ப திரும்ப காட்டி போறடிக்குது. இடைவேளைக்கு சற்று முன்பு ரஜனி சும்ம பாய வில்லன் அலற டட்டடாங்....டட்டடாங் என்ற இசையோடு இடைவேளை என்று வாறமாதிரி. நீங்களும் புதுசா எடுத்துவிடுங்கோவன் ஒருகாலகட்டத்தில........ அன்ரன்பாலசிங்கமே இந்த அர்ஜனைதான் தலைவராக்கவேண்டும் என்று பருந்துரைத்ததாகவும் அதுதான் தமிழுழத்தை பெற்றுகொடுக்கும் என்று அவர் நம்பியதாகவும். ஆனால் பிரபாகரனின் பதவி ஆசை அதற்கு இடம் கொடுக்காததாலேயே தாங்கள் தலைவராக முடியாது போனதாகவும் ஒரு திரில்லாக காட்சி அமைத்தால் எல்லோரும் ஒருக்கா திரும்பி பார்ப்பினம் எல்லோ?

நாங்கள் அதுக்குள்ளும் இல்லை இதுக்குள்ளும் இல்லை

புத்தகங்களில் படித்ததை செய்திகளில் படித்ததை வைத்தே எழுதுகிறோம். முடிந்தால் பிழையானதுகளை எடுத்த காட்டவும். இந்த புலத்தில இருந்து புல்லுபுடுங்க போன கதையை ஏதாவது ஆப்பிரிக்காகாரங்கள் நடத்திற கருத்துகளம் ஏதும் இருந்தா அதில போய் எழுதுங்கள்

Posted

உங்கட காதுக்குள்ள தான் ஈயத்தை காச்சி ஊத்திப்போட்டங்களே பின்னர் எப்படி மற்றவர்கள் சொல்வது கேட்கும்.உமது விளக்கம் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுள்ளது. எழுதிய தகவல்கள் ஒன்றுமே உண்மயில்லை,முன்பின் பெரிய முரண்பாடாக உள்ளது.

83 கலவரத்தின் பின் 5 இயக்கத்திற்கும் இந்தியாவால் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது.

ஈ.என்.எல்.எப் உருவாக்கம்,முதலில் புலிகளைத்தவிர்த்து மற்றைய இயக்கங்களே பேச்சு வார்த்தை நடாத்தின. உமாவின் சில பிடிவாதங்களினால் தடைப் பட்ட பேச்சுவார்த்தை பின்னார் புளொட்டை வெளியில் விட்டு புலி உள்ளே வந்தது .இதில் ரோ விர்கு பெரும் பங்கு உண்டு.பின்னர் திம்புவிற்கு டி.யு.எல்.எப், புளொட். ஈ.என்.எல்.எப் சென்றார்கள்.

பாலசிங்கம் இந்த சீனீலேயே இல்லை,புளொட் மாலைதீவிற்கு போனது பின்னர் பல வருடங்களின் பின். இப்படி பல முரண்பாடுகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கட காதுக்குள்ள தான் ஈயத்தை காச்சி ஊத்திப்போட்டங்களே பின்னர் எப்படி மற்றவர்கள் சொல்வது கேட்கும்.உமது விளக்கம் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுள்ளது. எழுதிய தகவல்கள் ஒன்றுமே உண்மயில்லை,முன்பின் பெரிய முரண்பாடாக உள்ளது.

83 கலவரத்தின் பின் 5 இயக்கத்திற்கும் இந்தியாவால் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது.

ஈ.என்.எல்.எப் உருவாக்கம்,முதலில் புலிகளைத்தவிர்த்து மற்றைய இயக்கங்களே பேச்சு வார்த்தை நடாத்தின. உமாவின் சில பிடிவாதங்களினால் தடைப் பட்ட பேச்சுவார்த்தை பின்னார் புளொட்டை வெளியில் விட்டு புலி உள்ளே வந்தது .இதில் ரோ விர்கு பெரும் பங்கு உண்டு.பின்னர் திம்புவிற்கு டி.யு.எல்.எப், புளொட். ஈ.என்.எல்.எப் சென்றார்கள்.

பாலசிங்கம் இந்த சீனீலேயே இல்லை,புளொட் மாலைதீவிற்கு போனது பின்னர் பல வருடங்களின் பின். இப்படி பல முரண்பாடுகள்

இதைதான் நானும் எழுதியுள்ளேன் புளட்டை தள்ளிவிட்டு புலி நுழைஞ்சதென்ற பூசனிக்காயை புதைத்ததை தவிர.

எல்லா இயக்கங்களும் ஒன்று சேரவேண்டும் என்பதற்கு அத்திவாரம் போட்டது யார் என்று ஒருக்கா உள்ள இருந்த நீங்கள் எடுத்துவிட்டால் வாசித்து அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் பல போராளிகளும் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தபோதும்........... அதற்கான தேவை மிக அவசியம் என்பதை மற்றைய இயக்க தலைவர்களுடன் பேசிய நேரங்களை விட புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் நான் பேசியதே அதிகம் என்று. அன்ரன்பாலசிங்கம் அவர்கள் எழுதியுள்ளார். தவிர உங்களின் தினமுரசு பத்திரிகையில் முன்பு வந்த அல்பிரட் துரையப்பா முதல் காமினி திசநாயக்க வரை என்ற தொடரிலும். அன்ரன் பாலசிங்கத்தின் கடின உழைப்பே நால்வரையும் இணைத்தது என்றும் எழுதியிருக்கினம்.

நீங்கள் உள்ள .............. என்று ஆகலும் ஆழமாக உள்ளே இருந்துவிட்டீர்கள்போல்?

  • 1 month later...
Posted

சகோதர யுத்தத்தைத் தொடங்கி வைத்த ‘ரா’ ( RAW )

'ரா’ உளவு நிறுவனம், அவ்வப்போது, பல ஈழத் தமிழர் குழுக்களை உருவாக்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அந்தக் குழுக்களைப் பயன்படுத்தி வருவது கல்லில் செதுக்கப்பட்ட உண்மையாகும். ஆனால், விடுதலைப்புலிகளை முழுமையாக அழிக்கும் இலக்கில் தோல்வி அடைந்து, இந்திய ராணுவம் இந்தியா திரும்பிவிட்டது. அதன் பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை - இந்திய ராணுவத்துக்கு பதிலாக, இந்திய உளவுத் துறையே ரகசியமாக நடத்தி வருகிறது என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாகும்.ஆனாலும், விடுதலைப்புலிகள் - மக்கள் பேராதரவோடு சிறிலங்கா ராணுவ ஒடுக்குமுறைகளை எதிர்த்து - உலகமே வியக்கும், விடுதலைப் படையாக போராட்டக்களத்தில் நிற்கிறது. 1983 ஆம் ஆண்டிலிருந்து, வலிமை மிக்க இந்திய ராணுவமும், ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற்ற சிறிலங்கா ராணுவமும், தமிழ் மக்கள் மீது நடத்திய ராணுவத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகளை எதிர்கொண்டு, தமது தாயகத்துக்கான விடுதலை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. ஈழப் பிரச்சினையில் இனி இந்தியா நேரடியாகத் தலையிடாது என்று அறிவிப்புகள் வந்தாலும், பார்ப்பன-பனியா அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்தில் இயங்கும் உளவு நிறுவனம் - தனது முழு ஆற்றலையும் பன்படுத்தி, ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சிகளில் முனைப்பாக பங்காற்றி வருகிறது.

விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டுமெனில் அவர்களின் மக்கள் ஆதரவுத் தளத்தை அழித்தொழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, பல போராளிக் குழுக்களை ‘ரா’ உளவு நிறுவனமே உருவாக்கியது.‘டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்புகள் ஈழத்தின் விடுதலைக்காக - ஆயுதம் ஏந்திப் போராடும் அமைப்புகளாக தங்களை அறிவித்துக் கொண்டவை. ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட சிறி சபாரத்தினத்துக்கும் ‘ரா’ உளவு நிறுவனத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிவந்த நூலிலிருந்தே இதற்கு சான்று காட்டலாம். எம்.ஆர். நாராயணசாமி, ஆங்கிலத்தில் எழுதி, உளவு நிறுவனங்களால் பெரிதும் போற்றப்படும் நூல் ‘

‘Tigers of Lanka’ நூலில் இவ்வாறு நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:

“1983-ல் ‘ரா’ தமிழ்ப் போராளி குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி தந்தது. அப்போதே பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையையும், முரண்பாடுகளையும் ‘ரா’ உருவாக்கியது. செயலிழந்த குழுக்களுக்கு ‘ரா’ உயிரூட்டும் முயற்சிகளில் இறங்கியது. இதனால் எல்.டி.டி.ஈ. கவலைக் கொண்டது. ‘டெலோ’வை ‘ரா’ ஊக்குவித்தது. ‘ரா’வுக்கு மிகவும் நெருக்கமான குழு ‘டெலோ’ தான் என்றும், அந்தக் குழுவைத்தான் ‘ரா’ உண்மையாக ஆதரிக்கிறது என்றும், ‘ரா’ கருத்துகளைப் பரப்பி, ‘டெலோ’வை உற்சாகப்படுத்தியது. இதனால், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையையும் - சிறீசபாரத்தினம் ‘ரா’வோடு கலந்து ஆலோசித்தார். ஒவ்வொரு தாக்குதலுக் கும், எத்தனை போராளிகள் தேவை என்பதைக்கூட ‘ரா’வின் ஆலோசனை களைப் பெற்றே செயல்பட்டார். (நூல்: பக். 326)”

இப்படி, ‘டெலோ’வின் மூளையாகவே செயல்பட்டது ‘ரா’ உளவு நிறுவனம் தான். ஈ.பி.ஆர்.எல்.எப். - இந்திய ராணுவத்தின் செல்லப் பிள்ளை. மக்கள் ஆதரவற்ற அந்த அமைப்பு இந்திய ராணுவத்தின் வலிமையில் தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையில், இந்திய ராணுவம் இந்தியா திரும்பியவுடனேயே அந்த அமைப்பினரும், அந்த அமைப்பின் சார்பில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் முதல்வராக அமர வைக்கப்பட்ட வரதராஜப் பெருமாளும் இந்திய ராணுவத்துடனேயே இந்தியாவுக்கு கரை சேர்ந்து விட்டனர். அவர்களை பத்திரமாக கரை சேர்த்தது இந்திய உளவுத் துறை தான்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக - அப்போது உளவு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பு ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ என்று அழைக்கப்படும் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்பாகும். இந்த அமைப்பை உருவாக்கியது யார்? எப்படி உருவாக்கப்பட்டது? ‘இந்து’, ‘பிரன்ட் லைன்’, ‘சண்டே லீடர்’ போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வரும். செய்தியாளர் டி.பி.எ°. ஜெயராஜ் கட்டுரையிலிருந்து இதற்கு விடை தர முடியும். அவர் எழுதுகிறார்: “ஈ.என்.டி.எல்.எப். - உருவான கதை மிகவும் சுவையானது. (இதன் தலைவராக உள்ள) பரந்தன் ராஜன் என்பவர் ஆரம்பத்தில் ‘புளோட்’ அமைப்பில் இருந்தார். லெபனான் நாட்டுக்குப் போய் பயிற்சி பெற்றவர். இவர் புளோட்டில் - ராணுவத் தளபதி பதவியை எதிர்பார்த்தார். ஆனால், ‘புளோட்’ தலைவர் உமாமகேசுவரன் அப்பதவியை வேறு ஒருவருக்கு தந்ததால் - பரந்தன் ராஜன் வெறுப் படைந்து, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

இப்படி வெளியேறிய குழுவினரும், ஏற்கனவே ‘டெலோ’, ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ அமைப்புகளிலிருந்து அதிருப்தியுற்று வெளியேறிய குழுவினரும் இணைந்து - ‘மூன்று நட்சத்திரங்கள்’ (Three Stars) என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினார். மூன்று அமைப்புகளின் அதிருப்தியாளர்கள் உருவாக்கிய குழு என்பதால் - மூன்று நட்சத்திரம் என்று பெயர் சூட்டப் பெற்றது. பிறகு ‘புளோட்’ அமைப்பிலிருந்து ஈசுவரன் என்பவர் தலைமையில் மற்றொரு அதிருப்தி குழு விலகியது. அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிலிருந்து பத்மநாபா தலைமையில் ஒரு குழுவும், டக்ள° தேவானந்தா தலைமையில் ஒரு குழுவும் ஆக, 2 குழுக்கள் விலகின. அப்போது ‘ரா’ 1987-ல் மூன்று நட்சத்திர அமைப்பையும், டக்ள°, ஈசுவரன் தலைமையிலான குழுக்களையும் ஒன்றாக்கி ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பை உருவாக்கியது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு பரந்தன் ராஜனிடமிருந்து டக்ள° தேவானந்தா விலகி ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) என்ற அமைப்பை தனியே ஏற்படுத்திக் கொண்டார். இதனால் - ‘ஈ.என்.டி.எல்.எப்.’ பரந்தன்ராஜனின் முழுக் கட்டுப் பாட்டுக்குள் வந்தது” - இதுதான் ஈ.என்.டி.எல்.எப். தோன்றிய கதை. இந்த அமைப்பை உருவாக்கியது இந்தியாவின் ‘ரா’ உளவு நிறுவனம்.”டெல்லியிலிருந்து வெளிவரும் ‘டெகல்கா’ ஆங்கில வார ஏட்டில் (ஜுலை 1, 2006) பி.சி. வினோஜ்குமார் எழுதிய கட்டுரையிலும் -“பரந்தன்ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பு விடுதலைப் புலிகள் செல்வாக்கைக் குறைப்பதற்காக ‘ரா’ உளவு நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது”

- என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான குழுக்களை ஒருங்கிணைக்கும் மய்யப் புள்ளியாக இந்த அமைப்பு திகழுகிறது என்றும் குறிப்பிடுகிறார். இதில், இந்திய உளவுத் துறையின் ஆதரவோடு செயல்பட்ட டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி குறிப்பிட வேண்டும். யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா - இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் -

1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூளைமேட்டில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும், இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதரவோடு இவர் செயல்பட்டு வருகிறார்.இதே டக்ள°தான் சென்னையில் 10 வயது பையனைக் கடத்திப் போய், ரூ.7 லட்சம் பணம் கேட்டார் என்று ஒரு வழக்கு கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர் 1989-ல் சென்னையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வைத்து, அதன் பிறகு இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை களில் ஈடுபட வைத்தது - இந்திய உளவு நிறுவனமாகிய ‘ரா’ தான் என்று ‘டெகல்கா’ வார ஏடு (ஜூலை 1, 2006) எழுதியுள்ளது.

(Sources say, it was ‘R&AW’ which Air lifted Devananda to Jaffna on an Indian Army helicopter to pit him against the LTTE) ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை என்றாலும், இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல், தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க முன் வந்தனர். ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தக் காலத்திலும் இந்தியாவுக்கு அடிபணியாது என்று ‘ரா’ உளவு நிறுவனம், உறுதியான முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட விடுதலைப்புலிகளை, பலவீனமாக்கி செயலிழக்கச் செய்யும் திட்டங்களை உருவாக்கியது. இந்திய ராணுவத் தின் தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் பிரபாகரனை சந்தித்தபோது, பிரபாகரனே அவரிடம் நேரில் நடத்திய உரையாடலை இந்திய ராணுவத் தளபதியாக இலங்கையில் செயல்பட்ட தீபிந்தர் சிங் தனது நூலில் பதிவு செய்துள்ளார்:

“1987 ஆம் ஆண்டு ஆக°டு 15 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை நான் சந்தித்தபோது, தங்களுக்கு நம்பகமான ஒரு தகவல் கிடைத்துள்ளது என்றார். நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், மிகவும் பலவீனமாகி விட்டோம் என்று ‘ரா’ உளவு நிறுவனம் கூறி வருவதோடு, எங்களோடு ராணுவ மோதலை நடத்துமாறு, ஏனைய தமிழ் குழுக்களைத் தூண்டிவிட்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று நட்சத்திரக் குழுக்களை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்த ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்று பிரபாகரன் என்னிடம் கூறினார். இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்பதால், அன்று மாலையே இந்திய ராணுவத் தலைமையகத்துக்கு தெரிவித்து, இது பற்றி விசாரிக்குமாறு கூறினேன். அது உண்மையல்ல என்று அடுத்த நாள் எனக்கு பதில் வந்தது. அதை பிரபாகரனை சந்தித்துத் தெரிவித்தேன். எனது மறுப்பைக் கேட்ட பிரபாகரன் மிகவும் அமைதியாக பதில் சொன்னார். நீங்கள் உண்மையானவராக இருக்கிறீர்கள். ஆனால், டெல்லியிலிருந்து உங்கள் மூலமாக தரப்பட்ட தகவல் உண்மையல்ல; நான் கூறியதுதான் உண்மை என்று தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார்.”- லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் எழுதிய "The I.P.K.F. in Srilanka"

நூல் - பக்.56பிரபாகரன் கூறியதுதான் நடந்தது. போட்டிக் குழுக்களை உருவாக்கி சகோதர யுத்தத்தை தொடங்கி வைத்ததே ‘ரா’ நிறுவனம் தான். அதற்காகவே டக்ள° தேவானந்தாவை சென்னை சிறையிலிருந்து விடுவித்து, இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப் பாணத்துக்கு அனுப்பி வைத்தது ‘ரா’.தனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்து - தமது இலக்கில் உறுதியாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு எதிராக போட்டிக் குழுக்களை உருவாக்கியும், அதில் வெற்றி பெற முடியாமல் கரியைப் பூசிக் கொண்டு, 1990-ல் இந்திய ராணுவம், இந்தியா திரும்பிய போது, ‘ரா’ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எப்., ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய குழுக்களையும் இந்தியாவுக்கு தங்களுடனே அழைத்து வந்துவிட்டது உளவுத் துறை. அப்போது இந்தப் போட்டிக் குழுக்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது, இந்திய உளவு நிறுவனம் தான். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் குலைக்க ‘ரா’ எவ்வளவு முறைகேடுகளை செய்தது என்பதற்கு இவைகள் சாட்சியங்கள்!

இதற்கான ஆதாரங்கள் - ராஜீவ் கொலையில் அன்னிய சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் அறிக்கையில் அரசு ஆவணங்களோடு பதிவாகியுள்ளன. போட்டிக் குழுக்களையும் தமிழகத்துக்கு அழைத்து வருவதை தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சி எதிர்த்தது. இப்படிப் போட்டிக் குழுக்கள் தமிழகத்துக்கு வந்தால், தமிழ்நாட்டில் சகோதர யுத்தங்கள் நடக்கும் ஆபத்துகள் இருப்பதை முதல்வர் கலைஞர் கருணாநிதி சுட்டிக் காட்டினார். அன்றைய பிரதமர் வி.பி.சிங்குக்கும் இதை கடிதம் மூலம் எழுதினார். ஆனால், இந்திய உளவுத் துறை இதை செவிமடுக்காமல் போட்டிக் குழுக்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டியது.மத்திய அரசிடமுள்ள உளவுத் துறை தொடர்பான ஆவணங் களில் இது குறித்து, ஏராளமான செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்:1990 மார்ச் மாதத்திலிருந்து (இந்திய ராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து) தமிழ்நாட்டுக்கு வரும் ஈழத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

வழக்கமாக ராமேசுவரம் வழியாகவே வந்து சேருவார்கள். ஆனால், கன்னியாகுமரி வழியாக அதிகம் வரத் துவங்கினர்; சில நியாயமான காரணங்களுக்காக தி.மு.க. அரசு, போட்டிக் குழுக்களின் வருகையை எதிர்த்ததே இதற்குக் காரணம். அப்படி கன்னியாகுமரியில் வந்து இறங்கியவர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்து, அவர்களை தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களுக்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஏராளமான ‘ஏஜெண்டுகள்’ இருந்தனர். பெரும்பாலோர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்குக் கொண்டு போகப் பட்டனர். (உளவு நிறுவனம் உருவாக்கிய - தமிழ்க் குழுக்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், உடனே கேரளாவுக்கு அவர்களை அனுப்பி வைத்தது உளவு நிறுவனங்களின் ஏற்பாடுதான். அதற்காக ஏஜெண்டுகளும் நியமிக்கப்பட்டார்கள்.)ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழர்கள் அகதிகளாக 1983 ஆம் ஆண்டு முதல் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு, முகாம்களில் வைக்கப்படுகிறார்கள். இது வழமையான நடைமுறை. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக குழுக்களை உருவாக்கிய இந்திய உளவு நிறுவனமே தனியாக கப்பல்களையும், விமானங்களையும் ஏற்பாடு செய்து, அந்தப் போட்டிக் குழுக்களை அழைத்து வந்தது. கப்பல்களில் வரும்போது, அவர்கள் துறைமுகம் வழியாக இறங்க வேண்டும். துறைமுக விதிகளின்படி கடவுச் சீட்டு, தமிழகத்தில் நுழைவதற்கான முறையான அனுமதி போன்றவை அவசியமாகும். ஆனால், உளவு நிறுவனங்கள் இந்த விதிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. சென்னைத் துறைமுகத்தில் தான் உருவாக்கிய போட்டிக் குழுவினை இறக்க முயன்றபோது, துறைமுக அதிகாரிகள் உரிய ஆவணங்களைக் கோரினர்; அவை இல்லாததால், துறைமுகத்தில் இறங்க அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.இந்திய உளவுத் துறையின் ஆதரவுக் குழுக்கள் திருகோண மலையிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு இரண்டு கப்பல்களில் வருகிறார்கள் என்ற தகவல், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநில அரசின் ‘சி.அய்.டி.’ பிரிவு துறைமுகத்தில் கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருந்தது.

ஆக, இவர்களை கப்பல்களில் அழைத்து வந்தது உளவு நிறுவனம் தான் என்பது, இதன் மூலம் உறுதியாகியது. அதனால் தான் காவல்துறை அதிகாரிகளோடு முன் கூட்டியே பேச முடிந்திருக்கிறது.இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய கப்பல் வாரியத்துக்கு சொந்தமான ‘ஹர்ஷவர்த்தனா’, ‘திப்பு சுல்தான்’ என்ற இரண்டு கப்பல்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘ரா’ உளவு நிறுவனத்தின் அமைப்பான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ குழுவினரும், அவர்களது குடும்பத்தினருமாக 747 பேருடன் 8.3.1990-ல் ‘ஹர்ஷவர்த்தனா’ கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமையால் தமிழ்நாட்டில் இறங்க அவர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கப்பல் எரிபொருளை நிரப்பிக் கொண்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.

அதே போல் ‘ரா’ உருவாக்கிய மற்றொரு குழுவான ‘ஈ.என்.டி.எல்.எப்’ குழுவினரை ஏற்றிக் கொண்டு வந்த ‘திப்பு சுல்தான்’ கப்பல் 10.3.90-ல் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தது. இரண்டு கப்பல்களிலும் வந்த இரண்டு குழுக்களைச் சார்ந்த 1324 பேரும் தனிப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஒரிசாவின் மால்கங்கிரி, சத்திகுடா என்ற இரு வெவ்வேறு பகுதிகளில் தங்க வைக்கப் பட்டனர். (இத்தகவல்கள் ஜெயின் ஆணையத்தின் முன் அன்றைய சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் சிறீபால் தாக்கல் செய்த அறிக்கையிலும் அரசு ஆவணங்களிலும் இடம் பெற்றுள்ளன. (நூலின் பின் இணைப்பில் அந்த ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)ஏற்கெனவே சென்னையிலிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். குழுவினர் ஒரிசாவுக்குப் போய் அங்கே இருந்த தங்களது குழுவினரை, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி உளவுத் துறை மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஒரிசா மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு 11.3.1990ல் தொலைவரி மூலம்

(Telex) ஒரு அவசர செய்தியை விடுத்தார். “தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலை தூக்காமல் இருக்க, ஒரிசாவில் உள்ள ஈழத் தமிழ்க் குழுக்களை தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார்” என்று அந்த செய்தி எச்சரிக்கை செய்தது.கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களைத் தவிர, 11.3.1990-ல் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா உட்பட அக்குழுவைச் சார்ந்த 295 பேரை இந்திய உளவு துறை விமானத்திலும் ஒரிசாவுக்கு அனுப்பியது.

ஆனால், தமிழக அரசின் கண்காணிப்புகளையும் மீறி உளவுத்துறை உருவாக்கிய குழுக்கள் ஒரிசாவில் தங்கள் முகாம்களை மூடிவிட்டு, தமிழகத்துக்குள் நுழைந்து விட்டனர். இதை ‘கியு’ பிரிவு போலீசின் ரகசிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி - பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் (26.4.1990) எழுதினார். அதில், ஒரிசாவில் மால்கங்கிரி முகாமில் இருந்த இலங்கை அகதிகள், அங்கிருந்து, தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்றும், அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தலைதூக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டுள்ள மற்றொரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கதாகும். “ஒரிசா முகாமிலிருந்து, தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அகதிகள் மீது குடியேற்றச் சட்டத்தின் கீழோ, அல்லது ‘பாஸ்போர்ட்’ சட்டத்தின் கீழோ தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்தப் பிரச்னையில் அப்படி வழக்குகள் தொடர முடியாது என்று எங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. காரணம், இவர்கள், இந்தியா வுக்கு சொந்தமான கப்பல்களில், இந்தியத் துறைமுகமான விசாகப்பட்டினம் வழியாக வந்தவர்கள் என்பதால், அவர்களை அகதிகளாகவே கருத வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”

"But we have been advised that such prosecution cannot be sustained in this particular case, as they were brought by Indian Ships to an Indianport."

- என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

உளவு நிறுவனத்தின் அத்துமீறல்கள் எல்லை மீறி நடந்துள்ளதை, இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

• தங்களின் தாயக விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகளை - ராணுவ ரீதியாக ஒடுக்க முயன்று, தோல்வி கண்டார்கள்.

• விடுதலைப் புலிகளுக்கு எதிராக - விரக்தியடைந்த குழுக்களைத் திரட்டி - ஆயுதம் வழங்கி, சகோதர யுத்தத்தைத் தூண்டி விட்டார்கள்.

• ஈழத்தில் துப்பாக்கி முனையில் - தங்களது எடுபிடி ஆட்சியை நிறுவினார்கள்.

• இந்திய ராணுவம் - அரசியல் நெருக்கடிகளால் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் - தாங்கள் உருவாக்கிய குழுக்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.

• அதற்கு இந்திய அரசு கப்பல்களையும், விமானங்களையும் பயன்படுத்தினர்.

• அன்றைக்கு தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த எதிர்ப்பைப் புறக்கணிக்கணித்து, வேறு மாநிலத்தில் தங்க வைத் தார்கள்.‘ரா’ உளவு நிறுவனத்தின் இந்த அடாவடி நடவடிக்கைகளில் அரசியல் நேர்மை ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்கிறோம்.

பின்னர் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது பற்றிய விவாதம் வந்தது. உளவு நிறுவனங்கள் இப்படி போட்டிக் குழுக்களை உருவாக்கி, சகோதர யுத்தங்களைத் தொடங்கி வைத்ததை காங்கிர°, அ.தி.மு.க., சி.பி.அய்., (எம்) கட்சிகள் கண்டிக்க முன்வரவில்லை.

முறைகேடாக கப்பல்களில் விமானங்களில் ஏற்றி இந்தியாவுக்கு உளவு நிறுவனங்கள் போட்டிக் குழுக்களைக் கொண்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. மாறாக தி.மு.க ஆட்சியில் விடுதலைப்புலிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்ற பார்ப்பன ஏடுகளின் குரலையே இவர்கள் எதிரொலித்தார்கள். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி -“‘ரா’ உளவு நிறுவனம் தான் இந்தக் குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கு மிடையே மோதலை உருவாக்குவதே ‘ரா’வின் நோக்கமாக இருக்கிறது.

எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழ்க் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு ‘ரா’ தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே செய்து கொண்டிருக்கிறது”

"Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the Assembly is reported to have accused the Research and Analysis Wing (RAW) of trying to create a rift between the Centre and the State appealed to the Prime Minister to take appropirate action. He alleged that the RAW which was responsible in the past for creating divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State"

(ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)-

என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பத்மநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ‘ரா’ உளவு நிறுவனம் தான்! உளவு நிறுவன மிரட்டலுக்கு தி.மு.க. பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி, எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

அதே உளவு நிறுவனம் தான் தமிழ்நாட்டில் மீண்டும் 2007-லும் தனது திருவிளையாடல்களைத் துவக்கி இருக்கிறது. உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சிப் பொறிகளைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ள தி.மு.க. ஆட்சி, பொய்மைப் பிரச்சாரத்துக்கு துணை போய்விடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

http://acidthiyagu.blogspot.com/2009/03/raw.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் என்.டி.பி கட்சி தலைவரின் சமீபத்திய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள் கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன?   ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே அனைத்து தரப்பிலிருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரூடோவை குறிவைக்கும் பிரதான கட்சிகளில் தற்போது ஜக்மீத் சிங்கின் கட்சியும் சேர்ந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ட்ரூடோ அரசு தப்புவது கடினம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது. ஏற்கனவே இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் மோசமான வாரமாக இருக்கும் நிலையில் ஜக்மீத் சிங்கின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ட்ரூடோவுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்21 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜக்மீத் சிங் ஜக்மீத் சிங் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். "லிபரல் கட்சியினர் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்போம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தாண்டு செப்டம்பரில் ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் இந்தியாவை விமர்சித்து இருக்கிறார். டொராண்டோவில் உள்ள பிபிசி செய்தியாளர் நாடின் யூசுப், "கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும். லிபரல் கட்சியின் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் இந்த தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார். கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவை வரும் ஜனவரியில் மீண்டும் கூடும் நிலையில் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ட்ரூடோ அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புவதாக கூறியுள்ளன. இந்த வாரம் ட்ரூடோ அடுத்தடுத்து பல பின்னடைவுகளை சந்தித்துள்ளார். ட்ரூடோவின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக இருந்த துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இப்படியான சூழலில், ஜக்மீத் சிங்கின் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பொருளாதார அறிக்கையை வழங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஃப்ரீலேண்ட் ராஜினாமாவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 கனடாவுக்கு எதிரான டிரம்பின் கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது, அவருக்கு ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு அண்டை நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி (இறக்குமதி வரி) விதிப்பேன் என்று கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போதைப்பொருளை கொண்டு வருவது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லை." என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே ட்ரூடோ வாழ்த்து தெரிவித்த போதிலும் இது டிரம்பின் அணுகுமுறையை மாற்றவில்லை. டிரம்ப் மற்றும் ட்ரூடோ இடையேயான உறவு கசப்பானது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ட்ரூடோ மீது டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை கூட செய்துள்ளார். கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு சிக்கல்களை அதிகரிக்கக் கூடும். இந்த வரி விதிப்பு கனடாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் டிரம்ப் இத்தோடு நிற்கவில்லை, கனடாவைப் பற்றி மேலும் கடுமையான கருத்துகளை வெளியிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பக்கத்தில் "ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு 100 மில்லியன் டாலர்களை மானியமாக ஏன் தருகிறோம் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பெரும்பாலான கனடியர்கள் 51வது மாகாணமாக மாற விரும்புகிறார்கள். அதாவது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடா நினைக்கிறது. இது அவர்களுக்கு வரி மற்றும் ராணுவ செலவுகளை மிச்சப்படுத்தும். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?21 டிசம்பர் 2024 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அதிகரிக்கும் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன கனடா நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமாவில், டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிரதமர் ட்ரூடோ நிதி நிலைமையை சரிசெய்வதற்குப் பதிலாக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போதிருந்து, ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற குரல் அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது. குளோப் அண்ட் மெயில் செய்தியின்படி, அக்கட்சியின் 153 எம்.பி.க்களில் இதுவரை 19 பேர் ட்ரூடோவை பதவி விலகுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த பொது முறையீடுகளுக்கு ட்ரூடோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பிரச்னையை பரிசீலித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதாக தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ட்ரூடோ வெள்ளிக்கிழமை அன்று தனது அமைச்சரவையை விரைவில் மறுசீரமைப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பல அமைச்சர்கள் விட்டுச் சென்ற காலி இடங்களை நிரப்புவதற்காக இதனை அவர் தெரிவித்தார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. புகைபிடித்தல், உடல் பருமனை தாண்டியும் 100 ஆண்டுகளுக்கு மேல் சிலர் உயிர் வாழும் ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?20 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் ஜக்மீத் சிங். அவரது குடும்பம் 1993இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. மார்ச் 2022 இல் ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் அதிகாரப் பகிர்வு பற்றிய விவகாரங்கள் இடம்பெறவில்லை. பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் காரணமாக ட்ரூடோவின் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இதற்கு ஈடாக, என்.டி.பி கட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற ஜக்மீத் சிங்குக்கு ட்ரூடோ உதவ வேண்டியிருந்தது. ஜக்மீத் சிங் இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார்.. ஏப்ரல் 2022 இல், ஜக்மீத் சிங், "இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தொடர்பானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து கவலைப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை மோதி அரசு நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் குறித்து ஜக்மீத் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. டிசம்பர் 2013 இல், அமிர்தசரஸ் வருவதற்கு ஜக்மீத் சிங்குக்கு இந்தியா விசா வழங்கவில்லை. "கட்சித் தலைவராவதற்கு முன்பு ஜக்மீத் சிங் காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார்." என வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். கனடாவில் சீக்கிய மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளனர். வான்கூவர், டொராண்டோ, கல்கரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்கள் உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையை அமைத்த போது, அதில் நான்கு சீக்கியர்களை அமைச்சராக்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் சீக்கியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விட தனது அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பிற்கு ட்ரூடோவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கையே காரணம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் அரசியலால் இரு நாட்டு உறவுகளை ட்ரூடோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgl9gd1gdryo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.