Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் குறிப்பிடப்படாத விடுதலைப்புலிகளின் நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் ‐ பசில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் குறிப்பிடப்படாத விடுதலைப்புலிகளின் நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் ‐ பசில்

பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.

எனினும் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே மாதம் அளவில் இலங்கை அரசாங்க ஊடகங்கள் அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் பாதுகாப்பிற்கான ஊடக மையம் என்பன விடுத்த பல செய்திக் குறிப்புக்களில் ஆரம்பத்தில் 17500 வரையான விடுதலைப் புலிகள் அரசாங்க படைகளால் கைது செய்யப்பட்டனர் அல்லது சரணடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டது.

பின்னர் 15000 வரையான புலிகள் தம்மிடம் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ச்சியாக வந்த செய்திகளில் இந்தத் தொகைகள் 13500, 12500, 11500 என குறைக்கப்பட்டு தற்போது 11 ஆயிரம் என்ற கணக்கு பசில் ராஜபக்ஸவால் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்டகால அல்லது தீவிர செயற்பாட்டுப் போராளிகள் என 2 ஆயிரம் வரையானவர்கள் தனியான முகாமிலும் 4 ஆயிரம் வரையிலான போராளிகள் தனியான முகாமிலும் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக பலராலும் அறியப்பட்டு இருந்தது.

இவ்வாறு இரகசியமான முறையில் விசேட முகாம்கயில் தடுத்து வைக்கப்பட்ட 6 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்ற ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் அரசாங்க படைகளால் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது தொடர்ந்தும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடக்கு இடம்பெயர் மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியளிக்க வேண்டும் ‐ பசில்

இதேவேளை வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க வேண்டுமென வடக்கு கிழக்கை மீளக் கட்டியெழுப்பும் விNசுட படையணிகளின் தலைவர் பெசில் ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல், சிறுவர்களின் கல்வி அபிவிருத்தி ஆகியன தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததென பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் சிறுவர்களின் அடிப்படைத் தேவைகள் வெகுவரைவில் பூர்த்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள் குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதென கரிட்டாஸ் நிறுவனத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் வணக்கத்திற்குரிய பேராயர் ஹெரோல்ட் அன்தனி தெரிவித்துள்ளார்

globaltamilnews

யாருக்காவது அந்த இணையதளத்தின் முகவரி தெரியுமா? தெரிந்தால் தந்துதவவும்.

உலகும் நாமும் இவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம்.... :huh::(^_^

எம்மால் இயலக் கூடியதைச் செய்ய வேண்டும். எது இயலக்கூடியது என்பதுதான் தெரியவில்லை.

எம்மால் இயலக் கூடியதைச் செய்ய வேண்டும். எது இயலக்கூடியது என்பதுதான் தெரியவில்லை.

சம்பந்தன் தலைமையில் இருக்கு குழுவுக்கு ஆதரவு குடுத்தால் எல்லாம் சுபமாக முடியும்...

சம்பந்தன் தலைமையில் இருக்கு குழுவுக்கு ஆதரவு குடுத்தால் எல்லாம் சுபமாக முடியும்...

தயா

அடிப்படையில் இங்கு யாரும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் இல்லை. எல்லோரினதும் அடிப்படை நோக்கம் ஒன்றுதான். ஆக அவரவர் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பது இனிமேல் எந்தவகையில் பயன்தரும்.

இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிந்துவிடும் ஆனால் எங்களின் அவலம் அதுக்குப் பிறகும் தொடரும். நாம் இனி அதில் இருந்து விடுபடுவதை பற்றி சிந்திப்பதே நல்லது.

We really need to focus on:

1) Boycott Sri Lanka ( Goods, Services, Products, Travel)

2) War crimes

3) Ensuring the North East is strong socio-econmically

4) Establish Global Tamil Economic Forum

5) Work with countries building a political network

We really need to focus on:

1) Boycott Sri Lanka ( Goods, Services, Products, Travel)

2) War crimes

3) Ensuring the North East is strong socio-econmically

4) Establish Global Tamil Economic Forum

5) Work with countries building a political network

Well said, I will be there to give shoulder to shoulder.

சம்பந்தன் தலைமையில் இருக்கு குழுவுக்கு ஆதரவு குடுத்தால் எல்லாம் சுபமாக முடியும்...

அப்ப எல்லாரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஆதரவு கொடுப்போம் ஏதாவது செய்கிறாரா என்று பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.