Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மான முடிவுகள்...

Featured Replies

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு: வாக்களித்தோர் எண்ணிக்கை 8274, தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156, தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67. இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்பு குழு பிரதிநிகளுடன் இணைந்து வெளியிடப்பட்டது.

விரிவான செய்திகள் பின்னர் அனுப்பிவைக்கப்படும்.

இவ்வளவும் இழந்த பின்பும் அந்த 51 பேர்களுக்கு எதை இழக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.?

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது. 45 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற இடத்தில் ஆக 8 ஆயிரத்து 274 பேர்தான் வாக்களித்தார்களா?

அப்படியாயின் இதுவும் தாயகத்தில் வாக்களிப்பினை புறக்கணித்தவர்கள் போல் அல்லவா அவுஸ்திரேலியாவிலும் பெருமளவிலான தமிழர்கள் புறக்கணித்திருக்கின்றனர். என்னவோ போங்கப்பா தாயகத்தில் புறக்கணித்தால் தேசியம் என்கின்றனர்; அவுஸ்திரேலியாவில் புறக்கணித்தால் மட்டும் ஒன்றும் இல்லை.

ஆனாலும் பாருங்கள் இவர்களின் கணக்கினை 99.4 வீதம் வாக்களித்திருக்கின்றனராம்.

நிர்மலன் நீங்கள் சொல்வதும் சரி

அனால் இங்கே வந்து குடியேறுபவர்களில் எத்தினைபேர் இன்னும் தாயகத்தைப் பற்றிக் கதைக்கிறார்கள் எபதுதான் அது.

எங்கடயதுகள் தங்களுக்குள்ள புடுங்குப் படாவிட்டால் சங்கள் ஒன்றுபட்டு நிக்கும் வராததுகளும் வரும்

இப்பிடியே அறிக்கை மேல் அறிக்கைவிட்டு சிதறு தேங்காய் சிதறிப்போகும் எங்கள் இனத்தில் எமக்கே நம்பிக்கை வருமா?

அதுதான் உந்தப் புறக்கணிப்பாக இருக்கும்... இது இங்கு மாத்திரம் இல்லை உந்தத் தேர்தல் நடந்த எல்லா இடத்திலையும் உப்பிடித்தான் இருக்கு.

உங்கட கணக்குப்படி இஞ்சையும் 18% மூம் தான் வாக்களித்திருக்கு. அப்ப இதையும் ஏற்கேலாதேன்று சொல்லலாமா?

விக்கிப்பிடியாவில் இருந்து பெறப்பட்ட தரவின்படி பார்த்தால் 53 000 சனங்கள்: http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_diaspora

அதன்படி பார்த்தால் 15% தான்

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கிபீடியா சொல்லும் கணக்கு இலங்கையரைக் குறிக்கும். உண்மையில் தமிழரைவிட சிங்களவரே அவுஸ்திரேலியாவில் அதிகம். அப்படிப்பார்த்தால் தமிழரின் மொத்தத் தொகை என்ன வருகிறது? குறைந்தபட்சம் தமிழரும் சிங்களவரும் சரிசமமாக இருக்கிறார்கள் என்று கொண்டாலும்கூட எண்ணிக்கை குறைவாகத்தான் வருகிறது. 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி அண்ணளவாக முப்பதாயிரம் இலங்கைத் தமிழர்கள் இருப்பதாக அரசாங்கக் கணக்குச் சொல்கிறது. அதில் வாக்களிக்கும் வயதுள்ளோர் மூன்றில் இரண்டு என்று பொதுவாகக் கணக்கிட்டால் இருபதாயிரம்தான் தேறுகிறது. அதிலே நாட்டுப்பிரச்சினையோடு தொடர்புள்ளவர்கள் இன்னும் குறைவுதான். குறிப்பாக அவுஸ்திரேலியாவில் இனச்சிக்கலால் புலம்பெயராமல் வேறு காரணங்களால் புலம்பெயர்ந்தவர்கள் கணிசமானவர்கள். மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்ததைப் போன்றே பொருளாதாரப் புலம்பெயர்வு அவுஸ்திரேலியாவுக்கும் நடந்தது. இனமுறுகல் உச்சத்தைத் தொடமுன்பே புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனது கணிப்பின்படி ஐம்பது வீதமான மக்களாவது வாக்களித்துள்ளார்கள். இது போதாது என்பது வேறுகதை. ஆனால் ஒரேயடியாகத் தோல்வியென்று கணக்குச் சொல்வது மிகத்தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கையில்ப் பிறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 360 பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் சிங்களவர்கள் தமிழர்கள் என்கிற இரு இனங்களும் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தொகையில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களான 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்னிக்கை என்பது இரு இனக்குழுமங்களிளும் சேர்த்து 35,000 வரையிலும் தான் இருக்கிறது. அதிலும் தமிழர்களின் எண்ணிக்கை 15,000 இலிருந்து 17,000 வரைதான். அப்படிப் பார்த்தால் 50% அதிகமானோர் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

ஆகவே தோல்வி என்று சொல்பவர்கள் ஒன்றில் வேண்டுமென்று சொல்கிறார்கள் அல்லது தெரியாமல்ப் பேசுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி....அடுத்தது நாடு கடந்த லெக்சனாம் றெடியா? :lol:

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு திணைகளத்தில் பயிலுனராக இருந்த போது இவ்வாறான ஒரு கணக்கெடுப்பை பார்க்க நேர்ந்தது. அப்போது அண்ணளவாக இலங்கைத் தமிழர்கள் 45000 இருந்தததாக நினைக்கிறேன்.

இலங்கையில் பிறந்தோர்கள் எண்ணிக்கை இதை விட அதிகம்.

மற்றபடி நீங்கள் சொல்வது போல் எத்தனைபேர் அரசியல் காரணத்துக்காக குடியேரினார்களோ தெரியாது. அதுமாத்திரம்லாமல் இன்னும் எத்தினைபேர் இன்னும் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு வாழ்கிறார்களோ தெரியாது.

நான் இணைத்த விக்கிப்பிடியா இணைப்பில் தமிழர்களின் என்னிக்கைதானே ஒழிய இலங்கையைகளின் எண்ணிக்கை இல்லை.

இந்த இணைப்பில் இருக்கும் தகவல்கள் ரகுநாதனின் தரவுகளுடன் ஒத்துப் போகின்றது.

http://www.immi.gov.au/media/publications/statistics/comm-summ/_pdf/srilanka.pdf

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கையில்ப் பிறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 360 பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் சிங்களவர்கள் தமிழர்கள் என்கிற இரு இனங்களும் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தொகையில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களான 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்னிக்கை என்பது இரு இனக்குழுமங்களிளும் சேர்த்து 35,000 வரையிலும் தான் இருக்கிறது. அதிலும் தமிழர்களின் எண்ணிக்கை 15,000 இலிருந்து 17,000 வரைதான். அப்படிப் பார்த்தால் 50% அதிகமானோர் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

ஆகவே தோல்வி என்று சொல்பவர்கள் ஒன்றில் வேண்டுமென்று சொல்கிறார்கள் அல்லது தெரியாமல்ப் பேசுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

தெரிந்தே வேண்டுமென்று சொல்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடைபெற்ற இடத்தில் முருகன் கோவில் அன்னதானம் அல்லது இந்தியாவில் இருந்து வந்த சாமியாரின் சொற்பொழிவு அல்லது சனி வியாழன் மாற்றம் பார்க்கிற சாத்திரி அல்லது ஞாயிற்றுக்கிழமை ஜேசுபிரானின் பயனை அல்லது சன் தொலைக்கட்சியின் அழுது வடியும் நாடகம் அல்லது சாயிபாபாவின் பயனை அல்லது ரகுமானின் கச்சேரி வைத்திருந்தால் வாக்களிக்காதவர்களில் சிலர் வாக்களித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இணைத்த விக்கிப்பிடியா இணைப்பில் தமிழர்களின் என்னிக்கைதானே ஒழிய இலங்கையைகளின் எண்ணிக்கை இல்லை.

இல்லை. நீங்கள் இணைத்த விக்கிபீடியா இணைப்பு இலங்கையர்களின் கணக்கையே சொல்கிறது. இலங்கைத்தமிழர்களின் கணக்கை அன்று. அதில் நீங்கள் சொல்லும் 53000 என்ற கணக்கு இலங்கையர்களே குறிக்கிறது. மீண்டும் வாசித்துப் பார்க்கவும். அதைவிட 2006 ஆம் ஆண்டுக்கான அரசாங்கக் கணக்கெடுப்பு அண்ணளவாக 30000 இலங்கைத்தமிழர்கள் என்றே சொல்கிறது. அக்கணக்கிற்கான வலைத்தள முகவரியைத் தொலைத்துவிட்டேன். கிடைத்தால் இங்குப் பகிர்கிறேன். எக்காலத்திலும் 450000 இலங்கைத்தமிழர்கள் என கணக்கெடுப்பு இருக்க வாய்ப்பேயில்லை. அப்படியிருந்தால் அது எங்கள் புலத்துச் செய்தித்தளங்கள் ஊர்வலத்துக்கும் கூட்டத்துக்கும் வரும் மக்கள் தொகையைச் சொல்வதுபோல் இரண்டால் பெருக்கி யாராவது சொல்லியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும், அரசாங்கக் கணக்கெடுப்பின்படி விக்ரோறியா மாநிலத்திலேயே அதிகளவு இலங்கையர்கள் இருப்பதாகக் குறிக்கிறது. தமிழர்கள் என்று பார்த்தால் NSW இல்தான் அதிகமாகவுள்ளனர், விக்ரோறியா இரண்டாவது இடமே. 2006 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் மொத்த இலங்கையர்கள் 62 ஆயிரத்துச் சொச்சம் வருகிறது. இதில் அரைவாசிக்கும் குறைவாகவே தமிழர்கள் இருக்க வாய்ப்புண்டு என்றபடியால் அதிகபட்சம் 30000 வரைதான் மொத்தத் தமிழர் கணக்கே இருக்க வாய்ப்புண்டு.

சரி சரி....அடுத்தது நாடு கடந்த லெக்சனாம் றெடியா? :lol:

நான் ரெடி நீங்கள் ரெடியா? :lol:

இல்லை. நீங்கள் இணைத்த விக்கிபீடியா இணைப்பு இலங்கையர்களின் கணக்கையே சொல்கிறது. இலங்கைத்தமிழர்களின் கணக்கை அன்று. அதில் நீங்கள் சொல்லும் 53000 என்ற கணக்கு இலங்கையர்களே குறிக்கிறது. மீண்டும் வாசித்துப் பார்க்கவும். அதைவிட 2006 ஆம் ஆண்டுக்கான அரசாங்கக் கணக்கெடுப்பு அண்ணளவாக 30000 இலங்கைத்தமிழர்கள் என்றே சொல்கிறது. அக்கணக்கிற்கான வலைத்தள முகவரியைத் தொலைத்துவிட்டேன். கிடைத்தால் இங்குப் பகிர்கிறேன். எக்காலத்திலும் 450000 இலங்கைத்தமிழர்கள் என கணக்கெடுப்பு இருக்க வாய்ப்பேயில்லை. அப்படியிருந்தால் அது எங்கள் புலத்துச் செய்தித்தளங்கள் ஊர்வலத்துக்கும் கூட்டத்துக்கும் வரும் மக்கள் தொகையைச் சொல்வதுபோல் இரண்டால் பெருக்கி யாராவது சொல்லியிருக்கலாம்.

எங்கு பார்த்தாலும் தெளிவான தகவல்களைப் பெற முடியவில்லை.

புள்ளி விபரத் திணைகளத்தின் அனுமதி பெற்றோர்கள் வேண்டுமானால் சில ஆய்வுகளின் மூலம் சரியான தகவல்களைப் பெறமுடியும்.

நடைமுறைக்கு உங்களின் தரவுகளும் ரகுநாதனின் தரவுகளும் நிறையவே ஒத்துப் போகின்றன.

நான் முதலில் இணைத்த தகவல்கள் தமிழர்கள் என்றே சொல்லுகிறது.

Statistics

The migrated Tamil population post-1983 is close to 1,000,000.

Country Sri Lankan Tamils

Canada 250,000

United Kingdom 150,000

India 150,000

France 65,000

Germany 60,000

Australia 53,000

Switzerland 50,000

United States 35,000

Italy 24,000

Malaysia 20,000

Norway 13,000

Netherlands 7,000

Sweden 6,000

New Zealand 4,000

Finland 600

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

From Wikipedia:

Australia

Main article: Sri Lankan Australian

Among the first Sri Lankan immigrants to Australia were those recruited to work on the cane plantations of northern Queensland in the late 19th century. There are also reports of Sri Lankan workers in the gold-mining regions of New South Wales and the pearling industry in Broome, Western Australia. Estimates of numbers during this time range from 500 to 1,000 persons; the 1901 Australian Census recorded 609 Sri Lanka-born.

There was no significant migration from Sri Lanka before 1948, when the country gained independence from Britain. When the Sinhalese began to assert the power of their majority, however, many Burghers or English-speakers of Sri Lankan - European descent and Tamils began to migrate to other countries.

Following implementation of the Immigration Restriction Act 1901, which introduced policies excluding non-Europeans from entry to Australia, those of non-European appearance were precluded from entry. Thus the Burghers alone were allowed to enter Australia.

In the early 1970s, the restrictions on entry of non-Europeans were eased and a new wave of Tamils, Sinhalese and Burghers entered the country. Between 1961 and 1971, the Sri Lanka-born population rose from 3,433 to 9,091 and again to 22,516 by the time of the 1986 Census.

In the period of 1986 - 1996, the Sri Lanka-born community in Australia has doubled in size. The upsurge of migration from Sri Lanka has resulted from the continuing conflict between Tamil separatists and the Sri Lankan Government. The number of humanitarian entrants has increased since the introduction in January 1995 of the Special Assistance Category (SAC) Class 215 for Sri Lankans. The most recent wave of migrants to Australia includes Sinhalese Buddhists and Tamil Hindus who have strong cultural and political consciousness. Since 1991, there has also seen significant migration from Sri Lanka under the Family Migration, Onshore Protection, and Skilled Migration categories.

The latest census in 2001 recorded 53,610 Sri Lanka-born persons in Australia, an increase of 14 per cent from 1996. The 2001 distribution by State and Territory showed Victoria had the largest number with 26,670 followed by New South Wales (16,910), Queensland (3,990) and Western Australia (2,970).

In 2001, of Sri Lanka-born people aged 15 years and over, 57.1 per cent held some form of educational or occupational qualification compared with 46.2 per cent for all Australians. Among the Sri Lanka born, 37.2 per cent had higher qualifications and 10.3 per cent had certificate level qualifications. Of the Sri Lanka-born with no qualifications, 24.9 per cent were still attending an educational institution.

Among Sri Lanka-born people aged 15 years and over, the participation rate in the labour force was 67.5 per cent and the unemployment rate was 7.9 per cent. The corresponding rates in the total Australian population were 63.0 and 7.4 per cent respectively. Of the 30,500 Sri Lanka-born who were employed, 51.7 per cent were employed in a Skilled occupation, 30.8 per cent in Semi-Skilled and 17.4 per cent in Unskilled. The corresponding rates in the total Australian population were 52.6, 28.9 and 18.6 per cent respectively. [3] [4]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.