Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன்

Featured Replies

பாராளுமன்றத்தில் அவர்களது கருத்துக்கள்தான் கேட்கும்.

அதுதான் தமிழரைப் படுகொலை செய்துபெற்ற யுத்த வெற்றியை பராட்டினவர் சம்பந்தன். முகாம்களில் வாடும் மக்களைப் பற்றியோ, வீடுகளை இழந்த மக்களைப் பற்றியோ, சிறைகளில் வாடும் மக்களைப் பற்றியோ, கொலை செய்யப்பட்ட மக்களைப் பற்றியோ எதுவும் கதைக்கவில்லை. கதைத்தால் அவை கண்சார்டில் பதிவு செய்யப்பட்டு எதிர்கால ஆவணமாக வந்தால் அது சிங்களவனுக்கும், இந்தியனுக்கும் கூட்டாது. எனவே கதைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்,

மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவது அவர்களின் உரிமையா? அல்லது அவர்களுக்கு கிடைக்கும் சலுகையா?

கடற்தொழிலளர்கள் கடல் சென்று தங்கள் வருமானத்தை ஈட்டுவது அவர்களின் உரிமையா? அல்லது சலுகையா?

விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் விவசாயம் செய்வது அவர்களின் உரிமையா? சலுகையா?

சம்பந்தர் மக்களின் உரிமைகளைப் பற்றிக் கதைக்காவிட்டாலும் பரவாயில்லை.

எதற்காக இந்தப் பாராட்டு?

வாத்தியார்

................

விடுதலைப் பயணம் தொடரும் ஆனால் திரும்பவும் ஆயுதப் போராட்டம் தற்போது சாத்தியமில்லை.

சிலாக்களுக்கு ஆரும் அடிச்சுக்கொண்டிருந்தால் தான் உருவேறுமாக்கும்.

விடுதலைப் பயணம் முள்ளிவாய்க்காலில் முடியாததா சம்பந்தரோட நிக்கப்போகுது?

சரியான தீர்வு கிடைக்கும் வரை அது ஏதோ ஒரு வகையில் போராட்டம் தொடரும்..

தாயாக மக்களின் தீர்வுப்படி இப்ப சம்பந்தரூடக அவர்கள் தொடர நினைக்கிறார்கள். அதுதான் அவர்களின் இன்றைய யதார்த்தம்.

நிலைமைகள் மாறின் சம்பந்தருக்குப் பதிலாக சரியான ஒருத்தரை மக்கள் நிறுத்துவார்கள்.

சம்பந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டது தாயகச் சூலலுக்குத்தான் புலத்தின் சூழலுக்கு இல்லை.

தமிழருக்கு எதையும் எவரும் இனாமாக தந்துவிட போவது இல்லை. அப்படி தருவதாக இருந்தாலும் தனது நலன்களுக்கு அப்பால் பட்டும் தரப்போவதும் இல்லை. இல்லை சம்பந்தரின் முகத்தை பாத்து பாவப்பட்டு தந்துவிடுவார்கள் எண்டு நினைக்க உங்களால் ஒருவேளை முடியலாம்.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தான் பெற்று கொள்ள வேண்டும். சம்பந்தர் வாங்கி தருவார் எண்டது வெறும் பம்மாத்து.

Edited by பொய்கை

எது எங்களுக்கு வேண்டுமோ அதை நாம் பெறத்தான் வேண்டும். அதை எப்படி பெரமுடியுமேன்று நாம் நினைகிறோமோ அப்படித்தான் முயற்சிக்கவேண்டும். சரியானதாக இருந்தாலும் தருணம் பார்த்துதான் காரியமாற்ற வேண்டும்.

சரியப்பா... சம்பந்தரை விட்டுப்போட்டு நீங்கள் ஏன் உங்களுக்கு வேண்டியதை உங்கட பாதையில் பெறாமல் நிக்கிறிங்கள்?

உங்களை யார் தடுத்தார்? நீங்கள் செய்யேலாமல் நிப்பதுக்கு சம்பந்தர் எப்படிக் காரணம்? அவர் எதைப் பெறலாம் என்று நினைத்தாரோ அதைபெற முயல்வார். ஒருவேளை பெறாமலும் போவார். அறுபது கல அரசியலல்ல யார்தான் எதைத்தான் பெற்றார். (போராட்டமாக இருந்தால் என்ன அரசியலாக இருந்தாலென்ன)

நீங்கள் யாரிடத்தில பெறமுடியுமோ பெருங்கோ... சம்பந்தர் மகிந்தவிட்ட நக்கட்டும். நீங்கள் நக்காமல் பெறமுடிந்தால் நல்லதுதானே.

ஆர் குத்திஎன்டாலும் அறியானால் சரி.

இறைவன்,

மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவது அவர்களின் உரிமையா? அல்லது அவர்களுக்கு கிடைக்கும் சலுகையா?

கடற்தொழிலளர்கள் கடல் சென்று தங்கள் வருமானத்தை ஈட்டுவது அவர்களின் உரிமையா? அல்லது சலுகையா?

விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் விவசாயம் செய்வது அவர்களின் உரிமையா? சலுகையா?

சம்பந்தர் மக்களின் உரிமைகளைப் பற்றிக் கதைக்காவிட்டாலும் பரவாயில்லை.

எதற்காக இந்தப் பாராட்டு?

வாத்தியார்

................

மீளக் குடியேறல் அவர்களது உரிமை. அது மறுக்கப்பட்டுக் கொண்டிருப்பது நமக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே புரிகிறது. இன்றைய நிலையில் சலுகைகளும் முக்கியமாகத் தேவை. இவைகளையெல்லாம் மறுத்து தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. பசிக்கிறவனுக்கு முதலில் ஒரு பிடி உணவாவது கிடைப்பதற்கு வழிசெய்தல் வேண்டும். நிற்க முடியாதவன் எப்படிப் போராடுவது. உரிமைகளைப் பெறுவது. தமிழர் உரிமையென்பது இன்று எவ்வளவு தூரத்தில் நிற்கிறது தெரியுமா?

எங்களுக்காக சர்வதேசம் ஏதோ சத்தமிட்டதுபோல் உணர்ந்தோம் ( அதுவும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மட்டும்.) இன்று எதையும் காணவில்லையே. துன்பங்கள் தொடருகின்ற இந்த வேளையில் பயமற்று சுகமாய் வாழ்பவர்கள் உரிமைகளைப்பற்றி யோசிக்கலாம். வருந்துபவர்கள் சலுகைகளைத்தான் யோசிப்பார்கள். அதுதான் தளத்தில் வாழும் மக்களின் நிலை.

யுத்தம் முடிவிற்கு வந்ததை வரவேற்றல் தவறா? அல்லது யுத்தம் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் சம்பந்தர் பேசியது நிஜமானது. யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. புலிகளும் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

இதில் டக்ளசையும் புறக்கணிக்க முடியாது தானே? கிழக்கு முதலமைச்சரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான்.

அதுதான் தமிழரைப் படுகொலை செய்துபெற்ற யுத்த வெற்றியை பராட்டினவர் சம்பந்தன். முகாம்களில் வாடும் மக்களைப் பற்றியோ, வீடுகளை இழந்த மக்களைப் பற்றியோ, சிறைகளில் வாடும் மக்களைப் பற்றியோ, கொலை செய்யப்பட்ட மக்களைப் பற்றியோ எதுவும் கதைக்கவில்லை. கதைத்தால் அவை கண்சார்டில் பதிவு செய்யப்பட்டு எதிர்கால ஆவணமாக வந்தால் அது சிங்களவனுக்கும், இந்தியனுக்கும் கூட்டாது. எனவே கதைக்கவில்லை.

ஆனால் டக்ளஸ் தெரிவு செய்யப்பட்டவிதம் ஒருபகுதி தமிழ் மக்களால் ஏற்பட்ட விளைவுதான். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால், அந்த முடிவை டக்ளசைத் தெரிவு செய்த மக்களிடம்தான் கேட்க வேண்டும்.

உலகத் தமிழர் பேரவையும் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப் போகின்றனராம். அதைத் தொடர்ந்து நாடுகடந்த அரசும் கூட்டமைப்பினருடன் தொடர்பைப் பேணுவதற்கு முயற்சிக்கும். அனேகமாக கூட்டமைப்பினரின் இந்த முடிவுகள், பேச்சுக்கள் இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதோ என்று எண்கின்றேன்.

அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

நல்லா மொட்டை அடிக்கிறீயள்... இல்லை நீங்கள் கனவு தான் காணுறீயளோ தெரியவில்லை...

இணக்க அரசியல் பேசும் சம்பந்தர், உலக நாடுகளில் இலங்கை அரசுக்கு அவப்பெயரை கொண்டு வரும் உலகத்தமிழர் பேரவையுடனும், நாடுகடந்த அரசுடனும் சேர்ந்து மகிந்த சிந்தனையை ஏற்று கொள்வார் எண்டது உங்கட கனவிலை தான் நடக்கும்...

எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு சார்பாக பாராளுமண்ற தேர்தலில் நிண்று தோத்து போனார்...! அவருடன் பேசிய போது மிக காட்டமாக புலிகளை பற்றியும் , புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றியும் சொன்னவை போதும் சம்பந்தரின் நோக்கத்தை புரிந்து கொள்ள...

அவர் சொன்ன மிக முக்கியமான வீரமான விசயம் உலகத்தமிழர் பேரவையினரும், புலம்பெயர்ந்தவர்களும் தன்னை தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கைகளை தான் புறம் தள்ளியதாகவும் சொன்னார்...

(எல்லாரோடும் எல்லாரும் பேசுகிறார்கள்... கோரிக்கைகளையும் விடுகிறார்கள்... அவர்களை புரிந்தும் கொள்கிறார்கள்... இங்கை கொஞ்சப்பேர் இருந்து கொண்டு எங்களுக்கு ஏதும் தெரியாமல் சும்மாதான் சொல்கிறோம் எண்டு போடும் ஆட்டம் தான் தாங்கவில்லை... )

Edited by தயா

...... உலகத் தமிழர் பேரவையும் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப் போகின்றனராம். அதைத் தொடர்ந்து நாடுகடந்த அரசும் கூட்டமைப்பினருடன் தொடர்பைப் பேணுவதற்கு முயற்சிக்கும். அனேகமாக கூட்டமைப்பினரின் இந்த முடிவுகள், பேச்சுக்கள் இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதோ என்று எண்கின்றேன். ....

:D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி கொண்ட அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்படும் செயல்கள் மக்களிடம் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கவே. பசியைக் கொடுத்து உரிமையை விலை பேசுகின்றான். வாழ்விடத்தைப் பறித்து விடுதலையை விலை பேசுகின்றான்.

இலங்கையில் இனப்பிரச்னையே இல்லை, இருப்பது ஏழ்மையே என்ற நிலையைக் காட்டிப் பணம் பெற வெளி நாடுகளில் தமிழனின் மானத்தையே விலை பேசுகின்றான்.

உரிமைக்காகக் குரல் கொடுக்கும் போது உணவு உடை உறைவிடம் எல்லாம் தானாகவே கிடைத்துவிடும்.

உணவிற்காக குரல் கொடுக்கும் போது குடிப்பதற்கு நீர் கூடக் கிடைக்காமல் போகலாம்.

முயற்சி அதி உச்சமாக இருக்கும் போது தான் பலன்களும் கிடைப்பதில் அதி உச்சமாக இருக்கும்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல, தனக்கு வாக்கு போடாத சிங்களவருக்கு ஆதரவாக பேச ஒரு பெருந்தன்மை வேண்டும்; அது அவரிடம் உள்ளது.

ஆனால் அடுத்த முறை தேர்தல் வரும் போது தமிழ் மக்களிடம் வரத்தானே வேண்டும்.அப்போது சமபந்தர் ஐயாவை விட ஒரு படி மேலே போய் எங்கட ஆக்கள் அதை எல்லாம் மறப்போம் மன்னிப்போமென்று மீண்டும் அவரை தெரிவு செய்து வள்ளுவனின்

இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் செய்து விடுவார்கள்

இன்னும் கொஞ்சப்பேர் பொழிப்புரை வேற எழுதிவினம் இதெல்லாம் தமிழனின் பெருந்தன்மை மற்றும் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.

நல்லா மொட்டை அடிக்கிறீயள்... இல்லை நீங்கள் கனவு தான் காணுறீயளோ தெரியவில்லை...

இணக்க அரசியல் பேசும் சம்பந்தர், உலக நாடுகளில் இலங்கை அரசுக்கு அவப்பெயரை கொண்டு வரும் உலகத்தமிழர் பேரவையுடனும், நாடுகடந்த அரசுடனும் சேர்ந்து மகிந்த சிந்தனையை ஏற்று கொள்வார் எண்டது உங்கட கனவிலை தான் நடக்கும்...

எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு சார்பாக பாராளுமண்ற தேர்தலில் நிண்று தோத்து போனார்...! அவருடன் பேசிய போது மிக காட்டமாக புலிகளை பற்றியும் , புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றியும் சொன்னவை போதும் சம்பந்தரின் நோக்கத்தை புரிந்து கொள்ள...

அவர் சொன்ன மிக முக்கியமான வீரமான விசயம் உலகத்தமிழர் பேரவையினரும், புலம்பெயர்ந்தவர்களும் தன்னை தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கைகளை தான் புறம் தள்ளியதாகவும் சொன்னார்...

(எல்லாரோடும் எல்லாரும் பேசுகிறார்கள்... கோரிக்கைகளையும் விடுகிறார்கள்... அவர்களை புரிந்தும் கொள்கிறார்கள்... இங்கை கொஞ்சப்பேர் இருந்து கொண்டு எங்களுக்கு ஏதும் தெரியாமல் சும்மாதான் சொல்கிறோம் எண்டு போடும் ஆட்டம் தான் தாங்கவில்லை... )

:D:D:D:D:D

சம்பந்தர் ஐயா ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல, தனக்கு வாக்கு போடாத சிங்களவருக்கு ஆதரவாக பேச ஒரு பெருந்தன்மை வேண்டும்; அது அவரிடம் உள்ளது.

ஆனால் அடுத்த முறை தேர்தல் வரும் போது தமிழ் மக்களிடம் வரத்தானே வேண்டும்.அப்போது சமபந்தர் ஐயாவை விட ஒரு படி மேலே போய் எங்கட ஆக்கள் அதை எல்லாம் மறப்போம் மன்னிப்போமென்று மீண்டும் அவரை தெரிவு செய்து வள்ளுவனின்

இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் செய்து விடுவார்கள்

இன்னும் கொஞ்சப்பேர் பொழிப்புரை வேற எழுதிவினம் இதெல்லாம் தமிழனின் பெருந்தன்மை மற்றும் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.

உலகத் தமிழர் பேரவை

இலண்டன்- ஏப்பிரல் 24, 2010 - ஏப்பிரல் 8 அன்று சிறீலங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்

தேர்தலானது அத்தீவில் வாழும் தமிழ்ப்பேசும் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தேர்தலாகவே

உலகத் தமிழர் பேரவை நோக்குகின்றது. இராணுவமயமாக்கப்பட்டு ஒடுக்குமுறையின் கீழ் வாழும்

தமிழ் மக்கள் பல்வகைச் சொல்லொணாத் துயர்களுக்கு நடுவில ; வாழ்க்கைக்குத் தேவையான

அடிப்படைகளற்ற நிலையில் சுதந்திரம் மறுக்கப்பட்டு அச்சுறுத்தல்களுக்கிடையே தொடர்ந்தும்

வாழ்கின்றனர். 100,000 வரையான தமிழர் இன்னமும் இராணுவ வதை முகாம்களில் உரிமைகள்

மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழருக்கு இத்தேர்தலில் வாக்களிக்கும்

உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் மிகக் குறைவானவர்களே வாக்களித்து உள்ளமையானது அச்சம், நம்பிக்கையின்மை,

தேர்தல் மீதான வெறுப்பு ஆகிய மிகத் தெளிவான காரணங்களையும் சிறீலங்காவில் நடைமுறைப்

படுத்தப்படுகின்ற பெரும்பான்மை இனம்சார்ந்த மக்களாட்சி முறையிலும் அதன் தேர்தல்

முறையிலும் அவர்களுக்கு சிறிதளவும் நம்பிக்கையில்லை என்ற செய்தியை அனைத்துலகச்

சமூகத்துக்குக் தெளிவாகக் தந்துள்ளது. சிறீலங்கா அரசானது அங்கு நடப்பது மக்களாட்சியேயென

நியாயப்படுத்தி அனைத்துலகச் சமூகத்தை ஏமாற்றும் பொருட்டே அடக்குமுறையும் இராணுவ

ஆக்கிரமிப்புமுள்ள இச்சூழலில் இத்தேர்தலைத் தமிழ் மக்கள ; மீது திணித்துள்ளது.

எனினும், இத்தேர்தலிற் பங்குபற்றிய தமிழ் மக்கள் அவர்களது நியாயமான அரசியல்

வேட்கைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற அரசியற் கட்சியான தமிழர் தேசியக்

கூட்டமைப்பைத் தெரிவுசெய்துள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினருக்கு

வாழ்த்துத் தெரிவிக்கையில் உலகத் தமிழர் பேரவைத் தலைவராகிய வண. முனைவர் எஸ்.ஜெ.

இமானுவேல் அடிகளார் பின்வருமாறு கூறியுள்ளார்: “தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் இரண்டு

செய்திகளைத் செம்மையாகத் தெரிவித்துள்ளனர்: ஒன்று, தம்மீது திணிக்கப்பட்ட சிறிலங்காவின்

அரசியல் முறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்பது. மற்றையது, தமது விடுதலைக்காகக் குரல்

கொடுத்த கட்சியைத் தெரிவு செய்ததன் மூலம் தமது விடுதலை வேட்கையை

வெளிப்படுத்தியுள்ளது.” மேலும், “தமிழரது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதிலும்

அவர்களது அரசியல் வேட்கைகளை வென்றெடுப்பதிலும் த.தே. கூடட் ணியுடன் உலகத் தமிழர்

பேரவையானது நெருக்கமாக இணைந்து செயற்படும்” எனவும் அவர் கூறினார்.

http://www.sankathi.com/uploads/images/news/2010/04/05/GTF%20-%20Press%20Release%2024%20April%202010%20-%20Tamil.pdf

இதை அடிகளாரே சொன்னவர்... நான் நினைச்சன் உலகத்தமிழர் பேரவையோடை சம்பந்தர் சேரப்போறன் எண்டு சொன்னவராக்கும் எண்டு...

இதிலை இமானுவேல் அடிகளார் இரண்டு விடயத்தை சொல்லி இருக்கிறார்...

1- வாக்களிக்காத மக்கள் இலங்கை அரசியல் யாப்பை புறக்கணித்துள்ளார்கள் என்பது ஒண்று....

2- குறைந்த அளவு தமிழர்களால் வாக்களிக்க பட்டு தெரிவு செய்ய பட்டு இருந்தாலும் தெரிவு செய்ய பட்டவர் தமிழர் விடுதலைக்கு குரல் கொடுத்த கட்சி எண்று கூட்டமைப்புக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார்... அதோடு விடுதலைக்கு குரல் கொடுத்தமைக்காகவே மக்கள் வக்களித்தனர் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்...

இதை சொல்லும் இமானுவேல் அடிகளார் பாராளுமண்ற தேர்தலுக்கு முன்பு கூட்டமைப்புடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார் கடைசிவரைக்கும் கூட்டமைப்பினர் பிடி குடுக்கவில்லை... இதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கோ...

யார் ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள் என்பதுக்கு இது நல்ல உதாரணமும் கூட... இணைப்புக்கு நண்றி இறைவன்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்தது நல்லாவே நடந்தது, நடக்கிறதும் நல்லாவே நடக்கிது, நடக்கப்போவதும் நல்லாவே நடக்கும்!! :D

வன்னியிலை செய்த கொலைகளை தானே சொல்லுறீயள்...?? அப்ப சரிதான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியிலை செய்த கொலைகளை தானே சொல்லுறீயள்...?? அப்ப சரிதான்...

அதுகள் கொலையில்லையண்ணை, புலிகளின் பாசையில தற்கொடை. :D

நான் சொல்ல வந்தது கூட்டமைப்பு அரசியல். :D

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன்

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா! நாங்க உண்மையை சொல்ல முற்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் கள யதார்த்தத்தை புரியாமல் பேசுகிறார்கள் என்ற வியாக்கியானம் சொல்ல பலபேர் வெளிக்கிட்டிட்டினம் பாருங்கோ...அதுமட்டுமல்லாமல் அங்கே நல்ல சொய்சு வாழ்க்கையும் ஆரம்பித்திட்டுதெங்கோ...இனி யாரும் யாரையும் நொந்தென்ன பலனெங்கோ...

என்ன கவலையென்றால்..இந்த பச்சோந்திகளுக்காகவா தங்களது இன்னுயிர்களை அர்ப்பனித்தாங்க?

இதை அடிகளாரே சொன்னவர்... நான் நினைச்சன் உலகத்தமிழர் பேரவையோடை சம்பந்தர் சேரப்போறன் எண்டு சொன்னவராக்கும் எண்டு...

இதிலை இமானுவேல் அடிகளார் இரண்டு விடயத்தை சொல்லி இருக்கிறார்...

1- வாக்களிக்காத மக்கள் இலங்கை அரசியல் யாப்பை புறக்கணித்துள்ளார்கள் என்பது ஒண்று....

2- குறைந்த அளவு தமிழர்களால் வாக்களிக்க பட்டு தெரிவு செய்ய பட்டு இருந்தாலும் தெரிவு செய்ய பட்டவர் தமிழர் விடுதலைக்கு குரல் கொடுத்த கட்சி எண்று கூட்டமைப்புக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார்... அதோடு விடுதலைக்கு குரல் கொடுத்தமைக்காகவே மக்கள் வக்களித்தனர் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்...

இதை சொல்லும் இமானுவேல் அடிகளார் பாராளுமண்ற தேர்தலுக்கு முன்பு கூட்டமைப்புடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார் கடைசிவரைக்கும் கூட்டமைப்பினர் பிடி குடுக்கவில்லை... இதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கோ...

யார் ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள் என்பதுக்கு இது நல்ல உதாரணமும் கூட... இணைப்புக்கு நண்றி இறைவன்..

உங்கள் மீது பிழைபிடிக்கவோ, அல்லது எனக்கு அதிகம் தெரியுமென்று காட்டிக் கொள்வதற்கோ இதனை இணைக்கவில்லை. தாயகத்து அரசியலுடனான இணைப்பு புலத்து அரசியல் நடவடிக்கைகளிலும் இருக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் அதில் பிரயோசனமில்லை. கூட்டமைப்பினர் பலமானவர்களில்லை, தாயகத்து தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் பலமானவையல்ல என்பதும் பலருக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகள் இல்லாத இந்தக் களத்தில் யாரையாவது ஆதரித்துச் செல்லுதல் உரிமை சலுகை என்பதை விடுத்து தற்காலிகமாகவேனும் எதையாவது பெற்றாக வேண்டும். அதற்குப் புலம் பெயர்ந்த அரசியல் சக்திகள் தமது ஆதரவைக் கொடுத்தாகவேண்டும்.

ஆனாலும் இத்தகைய ஆதரவிகைக் கூட்டமைப்பு வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாது என்பது எனது எண்ணம். நாடுகடந்த அரசும் இரட்டைப்பாதையில் செல்லாமல் தேவையானவற்றிற்கு ஒத்துழைக்கும் என்றும் எண்ணுகிறேன். இமானுவல் அடிகளாரின் கருத்தும் முடிவும் அனைத்துத் தமிழர்களாலும் வரவேற்கப்படவேண்டியது. இந்த நிலை தொடரவேண்டும்.

இப்படியான ஆதரவைக் கொடுப்பதினால் கூட்டமைப்பு மீதான இலகு அழுத்தங்களைக் கூடப் பிரயோகிக்கலாம்.

ஜயா! நாங்க உண்மையை சொல்ல முற்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் கள யதார்த்தத்தை புரியாமல் பேசுகிறார்கள் என்ற வியாக்கியானம் சொல்ல பலபேர் வெளிக்கிட்டிட்டினம் பாருங்கோ...அதுமட்டுமல்லாமல் அங்கே நல்ல சொய்சு வாழ்க்கையும் ஆரம்பித்திட்டுதெங்கோ...இனி யாரும் யாரையும் நொந்தென்ன பலனெங்கோ...

என்ன கவலையென்றால்..இந்த பச்சோந்திகளுக்காகவா தங்களது இன்னுயிர்களை அர்ப்பனித்தாங்க?

இது முற்றிலும் உண்மைதான். பலர் சொகுசுத் தளத்திற்குத் திரும்பிவிட்டார்கள். கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் குடாநாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். ஆனாலும் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழருக்கு இன்னும் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் உண்மையிலும் உண்மை.

  • தொடங்கியவர்

ஆனாலும் இத்தகைய ஆதரவிகைக் கூட்டமைப்பு வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாது என்பது எனது எண்ணம். நாடுகடந்த அரசும் இரட்டைப்பாதையில் செல்லாமல் தேவையானவற்றிற்கு ஒத்துழைக்கும் என்றும் எண்ணுகிறேன். இமானுவல் அடிகளாரின் கருத்தும் முடிவும் அனைத்துத் தமிழர்களாலும் வரவேற்கப்படவேண்டியது. இந்த நிலை தொடரவேண்டும்.

இப்படியான ஆதரவைக் கொடுப்பதினால் கூட்டமைப்பு மீதான இலகு அழுத்தங்களைக் கூடப் பிரயோகிக்கலாம்.

கூட்டமைப்பு வெளிட்டையாகவோ மறை முகமாகவோ ஏற்றுக்கொள்ளாது... மறைமுகமாக தொடர்புகளை கூட்டமைப்பு யாருடன் பேணினாலும் அது இலங்கை இந்திய அரச உளவு பிரிவுக்கு தெரிய வராத என்னா...?? :D

கூட்டமைப்புக்கு கவலைப்படத்தான் எவ்வளவு விசயம் இருக்கு...

சில விடயங்கள் தவிர்க்கப்படத்தான் வேண்டும். ஆனாலும் கூட்டமைப்பிற்கான கடமைகளும் செயற்பாடுகளுமுண்டு. அதை மறந்தால் அடுத்த தேர்தல் பதில் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.