Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளோபல் தமிழ் நியூஸ் (GTN) இணையத்தளம் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம் இது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளோபல் தமிழ் நியூஸ் (GTN) இணையத்தளம் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம் இது

பதிவு, மீனகம், ஈழம் நியூஸ் ஆகிய இணையத்தளங்கள் தமது கட்டுரை ஒன்றை மறுபிரசுரம் செய்துள்ளதாக குளோபல் தமிழ் நியூஸ் என்னும் இணையத்தளம் குற்றம் சுமத்தி செய்தி ஒன்றை கடந்த 01ம் திகதி வெளியிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக் குறித்த தன்னிலை விளக்கம் ஒன்றை பதிவு செய்ய செய்யவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. வியாபார நோக்கங்களை பெரும்பாலும் முதன்மைப்படுத்தி இணையத்தளங்களை நடத்திவரும் இணையங்களில் இருந்து செய்திகளை மறுபிரசுரம் செய்யும் போது யாருக்கும் ஆத்திரமும் கோபமும் வருவது சகஜமே. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் எமது நிலைப்பாடு என்பது வேறுபட்டது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது போல அனைத்துலக மட்டத்திலும் தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை முறியடித்து தேசியத்தின் அடையாளங்களை காப்பதை ஒரே நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஈழம் ஈ நியூஸ்.

அதற்காக பணிபுரியும் உழியர்களும் அர்ப்பணிப்பு ஒன்றையே எதிர்பார்ப்பாக கொண்டு இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தேசியத்திற்காக உலகெங்கும் இயங்கிவரும் 20 (எம்மோடு சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இணையங்கள் உட்பட) இற்கு மேற்பட்ட தமிழ் இணையத்தளங்களுடன் இணைந்து செய்திகளை பரிமாறி வருகின்றோம்.

எமக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகள் குறித்த மூலங்களை கூட நாம் அடையாளப்படுத்துவதில்லை. யார் தகல்களை வெளியிட்டவர்கள் என்பதை நாம் முதன்மைப்படுத்துவதில்லை அந்த தகவல் எவ்வளவு மக்களை சென்றடைகின்றது என்ற வழியை தான் நாம் பார்ப்பதுண்டு. ஏனெனில் ஒரு போராடும் இனத்திற்கு அது முக்கியமானது. இதற்காக ஊடக அறத்தையோ தர்மத்தையோ நாம் மீறுவதில்லை. எமது சக ஊடகங்களிலிருந்து செய்திகள் எடுக்கும்போதுதான் நாம் மூலத்தை சுட்டுவதில்லை. ஏனைய ஊடகங்களிலிருந்து செய்திகளை எடுக்கும்போது நாம் கட்டாயம் மூல ஊடகத்தை ஆதாரம் காட்டியே செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.

ஒரு போரடும் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளும், துன்புறுத்தல்களும், மனித உரிமை மீறல்களும் உலகில் பரந்து வாழும் பெருமளவிலான மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் முக்கியமானது. ஆனால் வியாபார நோக்கங்களை முதன்மைப்படுத்தும் ஊடகங்கள் இந்த நிலைப்பாட்டில் செயற்பட முடியாது என்பதும் எமக்குத் தெரியும். இது எமது தவறை நியாயப்படுத்தும் முயற்சி அல்ல. அன்று நடந்த சம்பவத்தின் பின்னணியை விபரிப்பதே நமது நோக்கம்.

இந்த அடிப்படைகளில்தான் நாகேஸ் (கிழக்கின் உதயத்தில் ‐ அஸ்தமிக்கும் உண்மைகள் ‐ நாகேஸ் நடராஜா) என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை தனது சக இணையங்களிலும் மேற்படி குற்றம் சுமத்தும் ஊடகம் உட்பட வேறுபல ஊடகங்களில் வெளியாகியதன் அடிப்படையில் சக இணயம் ஒன்றில் இருந்து ஈழம் ஈ நியூஸ் மறுபிரசுரம் செய்திருந்தது. கிழக்கு மக்களின் துன்பமான வாழ்வு குறித்த கட்டுரை அது.

ஆனால் அக் கட்டுரை இப்போது குற்றஞ்சாட்டும் இணையத்திற்கு பிரத்தியேகமாக எழுதப்பட்டதென்பதும் தனது வியாபார நோக்கங்களை முதன்மைப்படுத்தியே அக்கட்டுரையை அந்த ஊடகம் பிரசுரம் செய்திருந்தது என்பதையும் நாம் அறியவில்லை. அத்தோடு அந்த மூலக் கட்டுரை அந்த இணையத்திற்காக மட்டுமே எழுதப்பட்டதுதானா என்பதிலும் எமக்கு குழப்பம் ஏற்பட்டதன் விளைவாகவே எழுதியவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு ஊடக மூலத்தை குறிப்பிடவில்லை. ஏனெனில் இந்த குழப்பத்திற்கு பின்வரும் நிகழ்வும் காரணமாகிறது.

அதாவது அன்றைய திகதியில் குபேரன் என்பவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சி. வி. கே சிவஞானத்தின் உரை ஒன்றை பதிவு செய்ததாக உதயன் நாளேடு பிரசுரம் செய்திருந்தது.

அதனை நாம் உதயன் பத்திரிகையை மேற்கோள்காட்டி மறுபிரசுரம் செய்திருந்தோம் (http://www.eelamenews.com/?p=26429). ஆனால் அது ஜி.ரி.என் ற்காக குபேரன் வழங்கியதாக ஜி.ரி.என் தெரிவித்துள்ளது.

எனவே இதில் எது உண்மையானது? குபேரன் ஜி.ரி.என் இற்கு எழுதினாரா அல்லது உதயனுக்கு எழுதினாரா? அல்லது இரண்டுக்கும் செய்தி கொடுப்பவரா? அவர் ஜி.ரி.என் இற்கு மட்டும் தான் எழுதியிருந்தால் ஜி.ரி.என் இணையத்தை குறிப்பிடாது செய்தி வெளியிட்ட உதயனை சேறடித்து ஏன் ஜி.ரி.என் செய்தி வெளியிடவில்லை? தமிழ் தேசியத்தின் மீது ஈடுபாடுகொண்ட ஊடகங்களின் மீது தான் சேறடிப்பது என்ற கொள்கையுடன் தான் இவர்கள் செயற்படுகிறார்களா?

மறுவளமாக குபேரன் என்பவர் உதயன், ஜி.ரி.என் ஆகிய ஊடகங்களுக்கும் செய்தி வழங்கும் ஒருவராக இருந்தால் நாகேஸ் என்பவரும் அவ்வாறே பல்வேறு - எமது சக இணையங்கள் உட்பட- ஏனைய ஊடகங்களுக்கும் ஒரே செய்தியை வழங்கியிருப்பார் என்று நாம் எண்ணியதில் தவறிருக்க முடியாது.

சி.வி.கே சிவஞானத்தின் உரையை மறு பிரசுரம் செய்ய விரும்பும் ஊடகம் ஜி.ரி.என் மூலத்தை குறிப்பிட்டு பதிவு செய்வதா அல்லது “உதயன்” நாளிதழின் மூலத்தை குறிப்பிட்டு பதிவு செய்வதா என்பதை தயவு செய்து ஜி.ரி.என் நிர்வாகம் விளக்க வேண்டும். இரு மூலங்களையும் குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட முடியாது என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த குழப்பத்தில்தான் ஊடக அறத்தை மீறாது – சிவிகே சிவஞானத்தின் உரைக்கு இரண்டு ஊடகங்கள் தனித்தனியாக பொறுப்பெடுத்து அபத்தம் புரிந்தது போல் – நாம் அந்த அபத்தத்தை புரியாமல் கட்டுரை எழுதிய கட்டுரையாளரின் பெயரை மட்டும் போட்டு நாம் அந்த பதிவை எமது இணையத்தில் இணைத்தோம்.

குபேரனின் கட்டுரையை ” உதயன்” தனது செய்தியாளரின் பதிவாக வெளியிட்டபோதும் ஜி.ரி.என் தனது கட்டுரையாக – தமக்கு மட்டும் பிரத்தியேகமாக எழுதப்பட்டதாக தெரிவித்து வெளியிட்டிருந்தது. பிற்பாடு நாகேஸ் அவர்களின் கட்டுரையையும் தனது கட்டுரை என்று பதிவு செய்த போது எமக்கு இயலாபாகவே சந்தேகம் எழுகிறது. எனவே நாம் எழுதியவரின் பெயரை மட்டும் போடுவோம் என்ற முடிவுக்கு வந்தது ஜி.ரி.என் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்தின் முடிவு. இதில் மற்றவர்களை பழி சுமத்துவது நகைப்புக்கிடமானது.

எம்மிடம் எழுத்துமூலம் விளக்கத்தை கோராமல் ஊடக மூலம் இல்லாமல் வெளியிடப்பட்டதன் பின்னணியை எம்மிடம் நேரிடையாக அறியாமல் உடனடியாகவே இணையத்தில் அவதூறு பரப்ப முற்பட்டதற்கே நாம் இந்த விளக்கத்தை பதிவு செய்துள்ளோம். ஊடக அறம், ஊடக தர்மம் குறித்து ஜி.ரி.என் புரியவைக்கும் அவல நிலையில் நாம் இல்லை என்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம்.

முக்கிய குறிப்பு : “ஈழம்ஈநியூஸ்” இணையத்தளத்தில் வரும் செய்திகளை, கட்டுரைகளை, ஆக்கங்களை எமது அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம். எமது மூலத்தை குறிப்பிட வேண்டிய அவசியமும் கிடையாது. போராடும் இனம் என்ற அடிப்படையில் மக்களுக்கு நேரிய கருத்துக்கள் சென்றடைவது ஒன்றே எமது நோக்கம். அதை யாரும் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

ஈழம் ஈ நியூஸ் நிர்வாகம்.

http://www.eelamenews.com/?p=26717

களவெடுத்தவன் அதற்கு நியாயம் சொன்னமாதிரிக்கிடக்கு. வாசிக்க சிரிப்பாக்கிடக்கு . என்ன இருந்தாலும் களவு களவுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களவெடுத்தவன் அதற்கு நியாயம் சொன்னமாதிரிக்கிடக்கு. வாசிக்க சிரிப்பாக்கிடக்கு . என்ன இருந்தாலும் களவு களவுதானே.

கள்ளனிற்ர களவெடுகிறது களவா? இதைதானே சினிமாவில் ஹீரோமார் செய்யிறவியல் :lol::lol::)

Edited by சித்தன்

கள்ளனிற்ர களவெடுகிறது களவா? இதைதானே சினிமாவில் ஹீரோமார் செய்யிறவியல் :lol::lol::)

குளோபல் தமிழ் நியூஸ் வேறு இணையத்தளங்களில் இருந்து திருடி செய்திகளை போடுவதில்லை. அவர்கள் தங்களுக்கென இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் செய்தியாளர்களை வைத்திருக்கிறார்கள். நேர்மையாக தங்களுடைய செய்தியாளர்களின் செய்திகளை போடுகிறார்கள். ஈழம் ஈநியூஸ் போன்ற திருட்டு இணையத்தளங்கள் தான் தாங்கள் செய்தியை திருடி விட்டு அதற்கு வியாக்கியானம் சொல்கிறார்கள்.

இதில் ஒரு உண்மை இருக்கிறது. என்னவென்றால் இந்த திருட்டு இணையத்தளங்களை நடத்துபவர்கள் தொழில்சார் ஊடகவியலாளர்கள் இல்லை. ஊடககற்கை நெறியை கற்றவர்களும் இல்லை. ஒரு கொம்பியூட்டர் இருந்தால் எங்காவது செய்திகளை திருடி இணைத்தளங்களை நடத்தலாம் என நினைப்பவர்கள். இந்த நிலை தமிழ் ஊடகத்துறையில் மாறவேண்டும். குளோபல் தமிழ் நியூஸ் இணையத்தளத்தை நடத்தும் குருபரன் இலங்கையில் ஒரு ஊடகவியலாளராக இருந்தவர். அவருக்கு ஊடக தர்மம் தெரியும்.

இந்த ஈழம் ஈநியூஸ் காரருக்கு உண்மையில் ஊடகம் என்றால் என்ன என்று தெரியாது. அதுக்க ஊடக தர்மம் பற்றி கதைக்கினம்.

இதில பெரிய வேடிக்கை என்ன வென்றால் வெளிநாடுகளில இருக்கிறவைக்கு இந்த ஈழப்போராட்டம்தான் தங்கட பிழைப்ழை நடத்த சரியான ஆயுதம். கேவலம் கெட்டதுகள்.

குறித்த இணையத்தளம் இன்றிலிருந்து யாழ் இணையத்தின் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819&st=0&gopid=585558&#entry585558

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. உண்மை.உண்மை.

கள்ள பயலுகள் களவெடுப்பதும் பத்தாமல் நியாயம் வேறு. ஊடக தர்மம் என்பது இவர்களுக்கு Cut& Paste போல. :lol::lol:

குறித்த இணையத்தளம் இன்றிலிருந்து யாழ் இணையத்தின் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819&st=0&gopid=585558&#entry585558

தங்களுக்கு பல கோடி நன்றிகள். ஊடக தர்மம் என்றால் இதுதான். நன்றிகள்....பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திருடனுக்கு தேள் கொட்டினால் என்ன நடக்கும்

விடியலின் புலம்பல் போன்ற ஒன்று நடக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருடனுக்கு தேள் கொட்டினால் என்ன நடக்கும்

விடியலின் புலம்பல் போன்ற ஒன்று நடக்கும்

:):lol: :lol: :D^_^:D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களவெடுத்தவன் அதற்கு நியாயம் சொன்னமாதிரிக்கிடக்கு. வாசிக்க சிரிப்பாக்கிடக்கு . என்ன இருந்தாலும் களவு களவுதானே.

களத்திலிருந்து செயல்பட்ட தாயக தளங்களான சங்கதி, ஈழம் இ நியூஸ், பதிவு போன்றவைகளும் மற்றும் ஆஸ்த்ரேலியா எஸ்.ஆர்.பி கரனின் புதினம் போன்றவைகள்தான் எங்களுக்கு தெரியும், இப்பொழுதுதான் உங்களின் தளத்தினை கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்திலிருந்து செயல்பட்ட தாயக தளங்களான சங்கதி, ஈழம் இ நியூஸ், பதிவு போன்றவைகளும் மற்றும் ஆஸ்த்ரேலியா எஸ்.ஆர்.பி கரனின் புதினம் போன்றவைகள்தான் எங்களுக்கு தெரியும், இப்பொழுதுதான் உங்களின் தளத்தினை கேள்விப்பட்டுள்ளேன்.

பதிவும் சங்கதியும் புலத்தில இருந்துதான் இயங்கினதுகள்..................... களத்தில அவைக்கு தொடர்புகள் இருந்தது.............. ஆனால அவையும் புலத்தில இருந்து தான் இயங்கினவை......... இயங்குகினம்.............. ஆனால் உந்த ஈழம் இ நீயூஸ் பற்றி இப்பத்தான் கேள்விப்படுறனஇ............................. பதிவும் சங்கதியும் கூட வேற சில செய்தி வெப்சைட்டுகளில இருந்து திருடி செய்தி போட்டிருக்கினம்.................... அவைய ஏன் யாழ் இணையம் இன்னும் தடைசெய்யேல????????????????? அவை என்ன தேசியச் சொத்துகளோ?????????????????????

எல்லாரையும் தடை செய்தால் நானும் நீங்களும்தான் ஊர்ப்புதினத்தில செய்தி எழுதவேண்டி வரும். :wub: அது எங்களுக்குத் தேவையா? :o

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி, பதிவு இணையத்தளம் நடத்தியோர் தாங்கள் புலத்தில் இருந்து இயங்கியதாக பிதற்றிக்கொண்டார்களே தவிர, அவர்கள் ஒருபோதும் உடனடிச் செய்திகளை வெளியிட்டதில்லை. தமிழ்நெட், புதினம் ஆகிய இணையத்தளங்கள்தான் அந்தக்கால கட்டத்தில் உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன.

பதிவு, சங்கதி போன்றவை இருந்துவிட்டு ஒரு நேரத்தில் சில படங்களைப் போட்டுவிட்டு செய்திகளை தமிழ்நெட், புதினத்தில் இருந்தே எடுத்துப் போட்டன என்பது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இங்கே குளோபல் தமிழ் நியூஸ் குருபரனின் ஊடக தர்மம் பற்றி பலர் கிலாகித்து உரையாடுகின்றனர். இதே குருபரன் சூரியன் எஃப்.எம்மில் பணியாற்றியபோது அதாவது, செய்தியாசிரியராக இருந்தபோது தமிழ்நெட், புதினம் ஆகிய இணையத்தளங்களின் செய்திகளை எடுத்து தமது செய்தியாளர் தந்த செய்திகள் என்றே வெளியிட்டவர் என்பதனை மறக்கக்கூடாது.

இப்போது வேண்டுமானால் அவர் ஊடக தர்மத்தைப் பின்பற்றலாம். இவரும் இதே பாணியைத்தான் முன்னர் பின்பற்றியவர் என்பதனை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடக தர்மம்...தமிழ் ஊடக தர்மம்..

அதற்குள் ஆள் ஆள் அடிதடி...ம்ம்ம் எல்லாம் கலி காலம்...

வெட்டி ஒட்டி பிழைப்பு நடத்துவையை பற்றி எனக்கு சொல்ல தெரியவில்லை. பாவம் அதுகளும் எங்களை மாதிரிதான் ஆலை இல்லாத ஊருக்கு இலும்பம் பூவா தங்கட பணிகளை செய்கிறார்கள். ஆனால் அப்படி செய்கிற கூட்டத்தில் இருக்கிற/ இருந்த ஒருவரே அது பற்றி கதைப்பது தான் வேடிக்கையாக இருந்தது.

இங்கே சிலது கதைத்தால் உடனே துரோகி, மாற்றுக்கருத்தாளர், பணத்துக்கு தேசியம் என்கிற பல குழுநிலை வாதங்கள் இருந்தாலும், நான் இங்கே சொல்லுவது , தாரகி சிவராம் பற்றி..அவரது பேச்சு அண்மையில் தமிழ் நெட் இல் வந்தது..அதில் அவர் ஊடக தர்மம், சர்வதேச ஊடகங்கள் எவை எவை தமிழ் தாயகத்து செய்திகள் எடுத்து வருவது பற்றி சொல்லுகிறார். நல்ல பல விடையங்களை சொல்லுகிறார். அவர் சொல்லிக்கிற தமிழ் பிரதேச செய்திகளை எடுத்து சர்வதேச ஊடகங்கள் என்கிற பட்டியலில் BBC தவர்த்து விடுகிறார். அதை அவர் அப்படி செய்யததற்குரிய காரணத்தையும் சொல்லுகிறார். பின்னர் அவரே இன்னுமொரு பகுதியில் தமிழ்நெட் இன் தேவை, அதன் இன்றைய (அன்றைய) பணி பற்றி சொல்லும் போது தன்னை மறந்து வசனத்துக்கு வசனம் BBC குறிப்பிட்டே கதைக்கிறார்- BBC ய்தான் பலரும் தங்கியிருந்ததாகவும் அதில் பல முக்கியஸ்தர்களும் அடங்குவார்கள் என- யாரும் பார்க்கலாம். இதுதான் தமிழ் பத்திரிகா தர்மம். இங்கே கனடாவில் TVI என்கிற டிவி நிலையம் உண்டு, பல பழைய ரூபவாகினி கலைஜனர்களை கொண்ட நிறுவனம்..மந்தியானம் BBC கேட்டால் இரவு TVI கேட்க தேவையில்லை..சில காலத்துக்கு முன்பு இப்போது என்னமாதிரியோ தெரியாது. இதுதான் இன்னைய நிலை. வேறு சந்தர்பத்தில் யாரோ ஒருவர் எழுதியிருந்தது, தமிழ் ஊடங்கள் என்று தங்களை சொல்லுபவை பெரியளவில் தாமே செய்தியாளர்களை வைத்திருப்பதில்லை, அத்தோடு அதைபற்றி கவலைப்படுவதும் இல்லை.

இந்த நிலையில்..ஆளை ஆள் குறைபடுவது முந்தி ஒருக்கா சிரித்திரனில் வந்த முகப்பு பட பகிடிகளை நினைவு படுத்துகிறது ... தன்னையும் அறியாமல் தட்டி சிரிப்பார்

ஒரு குடிகாரன் தவறணையில் : அவன் என்ன மாப்பிள்ளையே, ஒரே குடிதான்

ஒரு கறுத்த மொத்தமான பெண் இன்னொரு பெண்ணிடம்: அவளென்ன பொம்பிளையே கறுப்பு குண்டு தடி மாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.