Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ... மீண்டும் .... மீண்டும் .... தப்புக்கணக்குகள்!

Featured Replies

மீண்டும் ... மீண்டும் .... மீண்டும் .... தப்புக்கணக்குகள்!

சில தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு!!! ... எடுத்தால் ....

"வணக்கம்"

"வணக்கம்"

"நாங்கள் ஹரோ தமிழ் கொண்ஸவேட்டிவ் ஒப்பீஸில் இருந்து கதைக்கிறோம்"

"ஓம் சொல்லுங்கோ"

" இல்லை ஞாபக மூட்ட எடுத்தனாங்கள்"

"என்னத்தை"

"நாளையிண்டைய லெக் ஷன், அதை ஞாபக மூட்டத்தான், நாங்கள் இம்முறை ஹரோ வெஸ்ரில் கொண்ஸவேற்றிவ் மெம்பர் ரேஷ்சலுக்கு ஆதரவளிக்க உங்களை கேட்கிறோம்"

"ஓம், நாங்களும் இம்முறை மாறிப்போடத்தான் நினைக்கிறோம், ஆனால் கொண்ஸவேட்டிவ் கட்சியிலுள்ள சிங்கள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான நிரன்சன் தேவா மற்றும் சடோ டிவென்ஸ் செக்கரட்ரி ஆகியோரி செயற்பாடுகள் ... யோசிக்க வைக்கிறது"

"ஓம் இது உங்களைப்போல அரசியல் தெரியாதவைகள் கதைக்கிற கதை ..., நாங்களும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள்தான், நான் கூட வேறு தொகுதியை சேர்ந்தவன், இங்கு வந்து வேலை செய்கிறேன் ஏனென்றால் இம்முறை எந்ததெந்த தொகுதியில் யார் யார் வெல்லுவார்கள் என்பதை நாம் கணக்கெடுத்து, அவர்களில் எமக்காக குரல் கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் ஆதரவு வழங்குகிறோம். அடுத்த தேர்தலில் ...."

... தொடர்ந்தது ....

"..... நாங்கள் ஒரு கட்சி என்றில்லாமல் எல்லாத்திலும் இணைந்து செயற்பட வேண்டும். வேறு தொகுதிகளில் லேபருக்கு ஆதரவளிக்கிறோம். எங்களின் புலம் சார்ந்த எதிர்கால உறுதியான அரசியல் செயற்பாடுகளுக்கு இவை உதவும், ...." .... நீண்ட சொற்பொழிவின் பின் முடித்தார்.

சரி, அரசியல் தெரியாத எனக்கு அவருடைய வாதம் ஓரளவு சரியாக இருந்தது. நானும், என் பங்கிற்கு சிலருக்கு கொண்ஸவேட்டிக்கு போடுங்கள் என்ற பரப்புரையும் தொடங்கி, ... தேர்தலன்று, மாலை வேலையால் வந்து வோட்டுப் போட போன இடத்தில் சில தமிழர்களும் அங்கு. அவர்களை கடந்த வருடம் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன் நடந்த போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் கண்ட பழக்கத்தில் கதையை கொடுத்தேன். ..

"எதுக்கு போடப் போகிறீர்கள்?"

"நாங்கள் லேபர்தான்!!!!"

"கொண்ஸவெட்டிவுக்கெல்லோ போடச் சொல்லி சொல்கிறாங்கள்"

உடனே பதில் வந்தது

"உவங்கள் குப்பாடிகள். உவர்களை யார் அமைப்பு ரீதியாக இங்கு தேர்தலுக்கு வேலை செய்யச் சொன்னது. மீண்டும் மீண்டும் ஆய்க்கினைகளை கொண்டு வரப் போகிறாங்கள். தனி நபர்களாக இணைந்து கட்சிகளோடு செயற்பட்டு இருக்கலாம். அதை விட்டுட்டு அமைப்பு!!! கடந்த காலங்களில் சிலோனில் நடந்த தேர்தல்களில் இவங்கடை கூத்துக்களால் தமிழ் ஆட்களின் பிரதிநிதித்துவமே பல பறி போனது. அதுக்கும் மேலால இங்கெல்லாம் பல தமிழர்கள் லேபர் கவுண்ஸிலராக இருக்கினம். அதுகளுக்கு வேட்டு வைக்கும் நோக்கில் எல்லா கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள் என்று இந்தக் குப்பாடிகள் உள்ளடுத்தி, வாக்குகளை பிரித்து தமிழர்களின் கவுண்ஸில் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் செய்யவே இந்தக் கூத்துக்கள்" ... அணல் பறந்தது!!

பக்கத்தில் நின்ற மற்றொருவர் தொடர்ந்தார் ....

... "உதென்ன, இவ்வளவு காலமும் நாடு கடந்த தமிழீழ அரசென்ற செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டும், அதன் செயற்பாட்டாளர்களுக்கு துரோகிப்ப்பட்டம் கட்டியும், உருத்திரகுமாரைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை கட்டியும் வந்த இந்த அமைப்பு, பின் அந்த நாடு கடந்த அரசுக்கான தேர்தல் வந்தவுடன், அதனையும் குழப்ப தங்களுக்கு தெரிந்தவர்களை தேர்தலில் நிற்க வைத்து விட்டு, ஒவ்வொரு இடங்களிலும் இவர்களுக்கே வாக்களியுங்கள், இவர்கள் அமைப்பு ரீதியாக நிற்கிறார்கள், இவர்களுக்கே வாக்களியுங்கள் என்ற சூடு பிடித்த பிரச்சாரம்!!! இங்கு இவர்களால் நிறுத்தப்பட்டவர்கள் எந்த அமைப்பு நிறுத்தியது?????? தலைவர் பிரபாகரனா இவர்களை நியமித்தார்????? .....??????" ...... பதிலளிக்க முடியவில்லை.

... "... இவங்களும் இவங்கடை கதைகளும்????!!" .... என்று கூறிப் போனார்கள்.

தேர்தல் முடிந்து முடிபுகள் வந்தன. ... ஹரோ வெஸ்ரில் லேபர் சார்பாக போட்டியிட்ட திரு ஹரத் தோமஸ் 4000இற்கு மேற்பட்ட அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டி இருக்கிறார். கடந்த முறை ஹரத் வெற்றியீட்டியபோது 2000 வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றார். இம்முறை வெற்றி இரட்டிப்பாக!!! அப்படியென்றால் எம் அமைப்பினரின் அலுவலகம் அமைத்து(ஹரோ தமிழ் கொண்ஸவேட்டிவ்) செயற்பட்ட செயற்பாடுகள்????

இந்த அமைப்பினரை எமது மக்களே புறக்கணித்து விட்டார்களா?

இந்த அமைப்பினர், நிலவரம் தெரியாமல் மூக்கை நுளைத்தனரா?

தேர்தல் முடிபுகள் வெளிவந்து, திரு ஹரத் தோமஸை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்ற சில எம்மவரிடம் ஹரத் சொன்னாராம் ...

...."இத்தேர்தலில் புலிகள் எனக்கெதிராக பகிரங்கமாக வேலை செய்தார்கள். ஆனால் என் தொகுதி தமிழ் மக்கள் என்னுடன் நின்றார்கள். ..." .... தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தாராம்.

அண்மைக்காலமாக ஏறக்குறைய 3000 இந்தியர்கள் தொழில் செய்வதற்காக வந்து ஹரோ பகுதியில் இருக்கிறார்கள். அதனை விட பல கிழக்கு ஐரோப்பியர்களும். இவர்கள் எல்லாம் கொண்ஸவேட்டிவ் வந்தால் தமது இருப்புக்கு ஆபத்து வரலாமோ அல்லது நிறவெறி கட்சியென்றோ நினைப்பவர்கள். இவர்களின் வாக்குகளே இம்முறை திரு ஹரத் தோமஸின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தியிருக்கிறது.

இதம் மூலம் இன்னொரு எதிரியை, எமது அரசியல் விற்பனர்களான அமைப்பினர் ஏற்படுத்தி விட்டனர். உண்மைதான் கடந்த காலங்களில் திரு ஹரத் தோமஸ் எமது நாட்டுப்பிரட்சனை தொடர்பாக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவர் ஒரு அமைச்சராக இருந்தார், அவரது கைகளும் கட்டப்பட்டிருந்தனவாம். அதனை விட இந்தநாடுகளில் வெளிவிவகார கொள்கைகளை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. குரல் கொடுக்கலாம், மேலதிகமாக ஏதாவது என்றால் .... ?????

இப்புலம் பெயர் தேசங்களில், இவ்வமைப்பினர் என்று கூறுபவர்களிடம் பல மில்லியன்கள் ஒதுங்கியுள்ளது. அப்பணங்களும், அவர்கள் கைகளில் இருக்கும் மட்டும், அவர்களை சூழ உள்ள சதாவதானிகளின் அறீவுறுத்தல்கள் நிற்கப்ப் போவதில்லை. இப்படியான இவர்களின் முதிர்சியான அரசியல் வெளிப்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.. அது நிச்சயம் எம்மினத்தை விடுதலை அடையவும் செய்யும்!!!!! .... விதியை நோவோம்.

Edited by Nellaiyan

எனக்கு இதிலை விளங்கினது ஒண்டுதான்... ஒரு குப்பாடி கூட்டத்தை பற்றி இன்னும் ஒரு கூட்டம் சேறுவாரி தூற்றி அவர்களை பற்றி வம்பு பேசி இருக்கிறது...

அதவிட குப்பாடி கூட்டம் சொன்ன கருத்து சரியானதா பிழையானதா எண்று கருத்து விவாதம் எண்டு ஒண்டும் நடக்கவில்லை...

சீனப்பழமொழி ஒண்டு ஞாபகத்தில் வருகிறது...

உயர்ந்த மனிதர்கள் கருத்துகளை பற்றி பேசி விவாதிப்பர்... சாதாரண மனிதர்கள் சம்பவங்கள், நிகழ்வுகள், பொழுது போக்குகள் பற்றி விவாதிப்பர்... கீழ்த்தரமான மனிதர்கள் தனி நபர்களை பற்றி பேசி விவாதிப்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிபுகள் வெளிவந்து, திரு ஹரத் தோமஸை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்ற சில எம்மவரிடம் ஹரத் சொன்னாராம் ...

...."இத்தேர்தலில் புலிகள் எனக்கெதிராக பகிரங்கமாக வேலை செய்தார்கள். ஆனால் என் தொகுதி தமிழ் மக்கள் என்னுடன் நின்றார்கள். ..." .... தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தாராம்.

அவர்களை சூழ உள்ள சதாவதானிகளின் அறீவுறுத்தல்கள் நிற்கப்ப் போவதில்லை. இப்படியான இவர்களின் முதிர்சியான அரசியல் வெளிப்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.. அது நிச்சயம் எம்மினத்தை விடுதலை அடையவும் செய்யும்!!!!! .... விதியை நோவோம்.

உண்மை சுடும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும்

  • தொடங்கியவர்

எனக்கு இதிலை விளங்கினது ஒண்டுதான்... ஒரு குப்பாடி கூட்டத்தை பற்றி இன்னும் ஒரு கூட்டம் சேறுவாரி தூற்றி அவர்களை பற்றி வம்பு பேசி இருக்கிறது...

அதவிட குப்பாடி கூட்டம் சொன்ன கருத்து சரியானதா பிழையானதா எண்று கருத்து விவாதம் எண்டு ஒண்டும் நடக்கவில்லை...

சீனப்பழமொழி ஒண்டு ஞாபகத்தில் வருகிறது...

உயர்ந்த மனிதர்கள் கருத்துகளை பற்றி பேசி விவாதிப்பர்... சாதாரண மனிதர்கள் சம்பவங்கள், நிகழ்வுகள், பொழுது போக்குகள் பற்றி விவாதிப்பர்... கீழ்த்தரமான மனிதர்கள் தனி நபர்களை பற்றி பேசி விவாதிப்பார்கள்...

மீண்டும் ... மீண்டும் .... மீண்டும் .... தப்புக்கணக்குகள்!

.... விதியை நோவோம்.

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

president_Liam%20Fox%20MP2.jpg

..... பிரித்தானிய புதிய அரசாங்கTக்தில், பாதுகாப்பு பொறுப்பு திரு லயம் பொக்ஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் பல தடவை இலங்கை சென்றது தொடர்பாக இங்குள்ள ஊடகங்களே குற்றஞ்சுமத்தியிருந்தன, அதுமட்டுமல்லாமல் இவ்விலவச உல்லாச கொலிடேகளின் மத்தியில் சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியவர்.

இவரை எவ்வாறு தமிழ் கொண்ஸவேட்டிகள் என்று கூறியவர்கள் கையாளப் போகிறார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் யாருக்கு யார் வாக்கு போட்டாலும் வெள்ளை இன கட்சிகள் தமக்குள் ஒரு அஜெண்டாவை வைத்து நடாத்துவார்கள். தமிழர்களின் வாக்கை மட்டும் அல்ல யாரின் வாக்கையும் வாங்க பசப்பு வார்த்தை கூறுவார்கள்.தருணத்தில் மாறி விடுவார்கள்.இது உலகின் அனேகமான நாடுகளுக்கு பொருந்தும்.

அப்படியாயின் இம்முறை கொன்சவேட்டிவும்,தொழிற்கட்சியும் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் என்று உங்களால் ஏன் எதிர்வு கூற முடியவில்லை? எல்லோரும் நீங்கள் நினைப்பது போல் ஏன் நினைக்க வேண்டும்?

எனக்கு லண்டன் அரசியல் பற்றி பெரிதாக தெரியா விட்டாலும் கிட்ட தட்ட கனடிய அரசியல் மாதிரி வந்துள்ளார்கள் என்பதை அனுமானிக்க முடிகிறது.

கனடாவில் லிபரல் கட்சிக்கு வாக்களித்த மக்கள் இன்று பல கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள்.லிபரல் தமிழர்கள் தமக்கு தானே வாக்களிப்பார்கள் என பாரமுகமாக இருந்து விடுகிறார்கள். எனவே எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பல தரப்பட்ட கட்சிகளையும் உள்வாங்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். இது லண்டனில் அமுல் படுத்த முடியாதா?

Edited by nunavilan

அது இல்லை இவர்களின் பிரச்சினை நுணாவிலான்... ! இங்கை BTF எனும் தமிழர் அமைப்பு இருந்தது இப்போதும் இருக்கிறது... அவர்கள் இங்கே ஆட்ச்சியில் இருக்கும் லேபர் கட்ச்சியில் லோபியிங் குறூப்பாக இயங்கியவர்கள்... அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தவை... உலக தமிழர் பேரவை எண்று சொல்லப்பட்ட அமைப்பு பாராளுமண்றத்துக்கை கூட்டம் வைத்த போது பிரித்தானிய பிரதமர் பிறவுண் , வெளிவிவகார அமைச்சர் மில்பாண்ட் எண்று பலர் சமூகம் அளித்து இருந்தனர்... அதுக்கு எல்லாம் காரணமானவர்கள் தான் உந்த BTF காறர்...

சரி அவர்களுக்கும் தமிழகளுக்கான கொன்சவேட்டீவ் அமைப்புக்கும் என்ன சம்பந்தம் எண்டு கேட்டியள் எண்றா... அவர்கள் தான் இவர்களும்... தமிழர்களுக்கு சார்பான வேட்ப்பாளர்கள் யார் எங்கு போட்டி இட்டார்களோ அவர்களை அந்த தொகுதியில் அந்த கட்ச்சியின் பிரதிநிதிகளாக சேர்ந்து பிரச்சாரம் செய்து அவர்களின் நன்மதிப்பை பெறுவதுதான் நோக்கம்...

இதை ஏன் இங்கை சொல்லுறன் எண்டு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.... இங்கை மேலை சிலர் குப்பைகள் எண்டு சொல்லி ஏசியதாக இங்கை மேலை ஒரு அறிவாளி எழுதி இருக்கிறாரே... அது நான் குறிப்பிட்ட அமைப்பினரையே....

ஏன் ஏசுகிறார்கள் எண்டால்... அது பெரிய கதை... சுருக்கமாக சொன்னால் எங்களை விட்டால் அவர்கள் பெரிய புடுங்கிகளோ எண்ட எண்ணம் தான்...

Edited by தயா

  • தொடங்கியவர்

இங்கை மேலை சிலர் குப்பைகள் எண்டு சொல்லி ஏசியதாக இங்கை மேலை ஒரு அறிவாளி எழுதி இருக்கிறாரே...

நன்றிகள் தயா!!!! .... எனக்கு, என்னைப் புகழ்வது அவ்வளவாக பிடிக்காது!!! :o ... எதோ சொல்லுவார்கள் ..... இலுப்பம்பூச் சக்கரை எண்டு :o ....

  • தொடங்கியவர்

அது இல்லை இவர்களின் பிரச்சினை நுணாவிலான்... ! இங்கை BTF எனும் தமிழர் அமைப்பு இருந்தது இப்போதும் இருக்கிறது... அவர்கள் இங்கே ஆட்ச்சியில் இருக்கும் லேபர் கட்ச்சியில் லோபியிங் குறூப்பாக இயங்கியவர்கள்... அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தவை... உலக தமிழர் பேரவை எண்று சொல்லப்பட்ட அமைப்பு பாராளுமண்றத்துக்கை கூட்டம் வைத்த போது பிரித்தானிய பிரதமர் பிறவுண் , வெளிவிவகார அமைச்சர் மில்பாண்ட் எண்று பலர் சமூகம் அளித்து இருந்தனர்... அதுக்கு எல்லாம் காரணமானவர்கள் தான் உந்த BTF காறர்...

அன்பின் தயா,

உந்த BTF தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை, வி.பு.ச.செ அதற்கு கொடுத்து விட்ட தொல்லைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லையாம். இதை BTFஐ ஆரம்பிக்க நாடுவரை சென்று திரும்பிய ஒருவர் கூறியது. இன்று செயற்பட இடமற்று இந்த BTFஇனுள் புகுந்து இவர்கள் செய்யும் தொல்லைகளுக்கும் குறைவில்லையாம் ... விரும்பின் அனைத்தும் இங்கு குறிப்பிடலாம்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.