Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் எழுச்சியான தமிழ்த்தேசிய உணர்வு

Featured Replies

தன் எழுச்சியான தமிழ்த்தேசிய உணர்வு பாரிஸ், லாச்சப்பலில்.

பிரெஞ்சுத்தலைநகர் பாரிசில் இருந்து சிவா சின்னப்பொடி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தாய்நிலம் எனப் பெயர்தாங்கி, புதிய வாரப்பத்திரிகை, ஒன்று வெளியாகி லாச்சப்பல் கடைகளில் விநியோகத்திற்கு வைக்கப்படடிருந்தது. அப்பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக விசனமடைந்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், தன் எழுச்சியடைந்து லாச்சப்பல் கடைகளிலிருந்த தாய்நிலம் பத்திரிகையை எடுத்துச்சென்று குப்பைத்தொட்டிகளில் போட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கு எதிரான தினமுரசு, துக்ளக் போன்ற வெளியீடுகளுக்கு நடந்தவற்றை நினைவூட்டுகின்றது. நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக இப் பத்திரிகை வெளியிடுவதாக சொல்லிக்கொண்டு, தமிழ் மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்கு இப்பத்திரிகை முயற்சிப்பதாக உணர்வாளர்கள் தமது கோபத்தை வெளியிட்டுச் சென்றதை கேட்கமுடிந்தது.

Edited by aathirai

சிறீலங்கா துணைப்படை புளொட் கும்பலின் பத்திரிகை மக்களால் தீக்கிரை!

டீல: அதியமான்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்ட சிறீலங்கா துணைப்படை புளொட் கும்பலின் பத்திரிகை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பொதுமக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் அடிக்கடி புதிது புதிதாக தமிழ்ப் பத்திரிகைகள் முளைவிட்டுக் காணாமல் போகும் நிலையில்இ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இராசதந்திரம் தெரியாது என்று கூறி ‘தாய்நிலம்’ என்ற பெயரில் புளொட் கும்பலின் மத்திய குழு உறுப்பினர் ஒருவரால் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதனால் கடும் சீற்றம்கொண்ட பாரிஸ் வாழ் தமிழீழ மக்கள்இ குறிப்பிட்ட பத்திரிகையை கடைகளில் இருந்து அகற்றித் தீயிட்டுக் கொளுத்தியும்இ குப்பைக்கூடைகளில் வீசியெறிந்தும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியிருப்பதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியரான புளொட் கும்பலின் மத்திய குழு உறுப்பினர்இ உமா மகேஸ்வரனின் நெடுங்கால நண்பராக விளங்கியதோடுஇ உமா மகேஸ்வரனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய உணர்வாளராகப் பாசாங்கு செய்துஇ சிறீலங்கா அரசுக்கான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில்இ இவரது சுயரூபம் கண்டறியப்பட்டு தமிழ்த் தேசிய ஊடகப் பணிகளில் இருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் நீக்கப்பட்டிருந்தமை.

www.pathivu.com/

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடி புலிகள், எங்கே தங்கள் பொட்டுக்கேடுகள் வெளிவந்து விடுவோமோ என்கின்ற அச்சத்தில் செய்த இந்த வேலையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த வால்பிடிகள் தாங்களே செய்துவிட்டு தன்னெழுச்சியாக(!?) மக்கள் கிளர்ந்தெழுந்து செய்ததாக செய்திகள் வெளியிடுகின்றன. இந்தச் செய்திகளும் எந்த இணையத்தளங்களில் வெளிவருகின்றன என்பதனையும் கள நண்பர்கள் புரிந்துகொள்ளுங்கள்.

சிங்கள அரசு ஊடகவியலாளர்களை சுட்டுக்கொன்று-கடத்தி-மிரட்டி பணிய வைத்தபோது எல்லாம் ஊடக சுதந்திரத்தினை சிறிலங்கா அரசு ஏறி மிதிப்பதாக கூக்குரலிட்டவர்கள்தான் இன்று அதே வேலையைச் செய்கின்றனர். இதற்கு இவர்கள் என்ன நியாயம் கற்பிக்கப் போகின்றார்களோ தெரியாது.

சிவா சின்னப்பொடி மாற்று இயக்கத்தில் இருந்தது எல்லாம் தெரிந்துதானே ரிரிஎன் தொலைக்காட்சிக்கும் ஈழமுரசு பத்திரிகைக்கும் ஆக்கங்களைப் பெற்று வெளியிட்டார்கள்.

உங்களுக்கு தேவையானபோது ஒருவன் தேசியம் பேசுகிறவனாக இருப்பான். உங்கள் தவறுகளை ஒருவன் தட்டிக்கேட்டால் அவன் துரோகி. இதுதானே அனைத்துலக தொடர்பகத்தின் எழுதப்படாத விதி.

எல்லாரும் துரோகியாகிவிட்டார்கள். இனி விடுதலைப் புலிகளின் பிரபாகரன் மட்டும்தான் பாக்கி. அவரையும் மிக விரைவில் இவர்கள் துரோகியாக்கப் போகின்றார்கள்.

இன்று இணையத்தளங்களில் சகட்டுமேனிக்கு எழுதிக்கொண்டு இருக்கின்றவர்களை இந்த தன்னெழுச்சியானவர்களோ அல்லது அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிகள் ஏதாவது செய்ய முடியுமா?

இதனை நான் எழுதுவதால் எனக்கு ஏதோ அனைத்துலக தொடர்பகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி என்று எனது கருத்தினை மதிப்பிழக்கச் செய்வதற்கு களத்தில் சில நண்பர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

உங்கள் மீது நான் அனுதாபப்படுவதனைத்தவிர வேறு எதனையும் செய்யமுடியாது. ஏனெனில் உங்களுக்கு அவா்கள் மீது நன்மதிப்பு உள்ளது. ஒருவன் தான் எதன் மீது அதீத நம்பிக்கையும் நன்மதிப்பும் வைத்திருக்கின்றானோ அதனை பிறர் எது கூறினாலும் அவா்கள் அதிலிருந்து மீளவும் மாட்டார்கள்; மீண்டு வரவும் மாட்டார்கள்.

காலங்கள் யாவருக்கும் சரியான நேரத்தில் உண்மைகளை எடுத்துக்கூறும். அதுவரைக்கும் காத்திருப்போம்.

உண்மையின் பயணம் மிக மிக நீண்டது. பொய்யின் பயணம் மிக மிகக் குறுகியது.

தன்னெழுசச்pயான தேசபக்த்தர்கள் காஸ்ரோவுக்காக தேசித்தலைவரை குப்பை தொட்டியில் போட்டிருக்கிறார்கள். நிங்கள் அத்தப் பத்திரிகை பார்த்தீர்கள் என்றால் பிரபாகரனியம் என்ற தேசித்தலைவர் பற்றி சிறப்புக் கட்டுரை ஒன்று இருக்கிறது. விநாநயத்தை பற்றியம் சேரலாதன் பற்றியம் மற்றும் தளபதிகள் பற்றியம் துரோகிகள் என்று குறிப்பிட்டு ஈழமுரசும் சங்கதியும் பதிவும் எழுதலாம்..கஸரோ என்ன தேசயத் தலைவரை விட மேலானவரா? தாய்நிலம் பத்திரிகையில் தமிழ் தேசியத்துக்கு எதிரான எந்தக் கட்டுரையும் இல்லை. கஸ்ரோவின் துரோகம் பற்றி பல் வேறு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைதான் தாய் நிலத்திலும் வந்தது..தமிழ் தேசித்துக்கு துரோகம் செய்த கருணா தன்னை நியாப்படுத்த பத்திரிகையாளர்களை மிரட்டி பத்திரிகைளை கொழுத்திய நடவடிக்கையைத் தான் இப்போது காஸ்ரோ கும்பல் செய்கிறது. தமிழ் தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் கருணா பிரிந்த காலத்தில் நடத்தவற்றுக்கும் இப்போது நடைபெறும் சம்பவங்களுக்கும் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த தன்னனெழுச்சியன் பின்னணியல் முறைகேடான பாலியலில் ஈடுபட்டதற்காக இத்தாலியல் இருந்து துரத்தப்பட்ட மேத்தா தான் இருக்கிறார்

ஐயா கனவான்களே கனவாட்டிகளே!

தமிழ் தேசித்தின் உணர்வாளர்களே!

விடுதலையை ஒடடு;மொத்த குத்தகைக்கு எடுத்த மேதைகளே!

ஓரு ஊடகவியலாளனாக இருப்பதற்கும் ஒரு ஊடகத்தின் செய்தி ஆசிரியாக இருப்பதற்கு பிறப்பால் தகுதி வேண்டும் என்று உங்களால் கேட்கப்பட்ட சாமானியன் சிவா சின்னப்பொடி எழுதுகிறேன்

உங்களை போல் புனை பெயர்களுக்குள் மறைந்திருந்து அரசில் விபச்சாரம் செய்ய எனக்குத் தெரியாது.

ஏன்னுடையை கைத்தொலைபேசியல் எனக்கு பத்திரிகை வெளியிட என்னடா தகுதி இருக்கிறது என்று கேட்கும் முதுகெலும்பில்லாத கோளைகளே

நான் என்னுடைய சொந்தப் பெயரில் வெளிப்படையாகவே எழுதுகிறேன்;;;;.....

சில வாரங்களுக்கு முன் கறுப்பு என்ற பெயரில் வெளிவரும் பேராட்டத்தின் கரும்புள்ளி என்னைப்பற்றி அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டதுஇ அந்த கும்பலுக்கு நான் எழுதியபதில் இந்த இடத்தில் பொருத்தமாயிருக்கும் என்பதால் அதை கீழே இணைக்கிறேன்

கறுப்பு என்ற பெயரில் வரலாறு தெரியாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மாவீரர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தும்

நண்பர்களுக்கு….அடக்குமுறையையின் வலியையும் - கொடுமையையும் போராட்டத்தின் சுமையையும் பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் உங்களைவிட அதிகளவுக்கு அனுபவத்தில் உணர்ந்தவன் என்ற வகையில் உங்களைப்போல் பொறுப்பற்ற விதத்தில் சேறடிக்காமல் நிதானத்தோடும் உரிமையோடும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

 

ரோவின் நேரடி வழிகாட்டலில் செயற்படுபவர்…

துரோகத்தை தவிர வேறு எதுவும்; செய்யாதவர்….

பலாலியில் இருந்த   இந்திய சிறீலங்கா கூட்டுப்படைத் தளத்தில் இருந்து கொண்டு வானொலி நடத்தி இயக்கத்தை கொச்சைப் படுத்தியவர்….

இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் பல இளைஞர்களை சுட்டுக் கொன்றவர்….

அழையா விருந்தாளியாக வன்னிக்கு வந்தவர்…..

 

இதையெல்லாம் நீங்கள் என்மீது மேற்கொண்ட சேறடிப்புகளாகும்….

 

இந்தச் சேறடிப்புகளை உங்களுடைய புலனாய்வு திறன் என்று உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாமே தவிர உண்மையில் நீங்கள் போராட்ட வரலாறு தெரியாதவர்கள் ஈழப் போராட்டுத்துக்கான வளங்களை சிதைப்பவர்கள் என்பதை இதன் மூலம்உங்களை அறியமால் இனங்காட்டியிருக்கிறீர்கள்.

 

முதலாவதாக நான் ரோவின் நேரடி வழிகாட்டிலில் செயற்படுகிறேன் என்று குறிப்பிடும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை தர முடியுமா? நான் இந்தியாவுக்கு எத்தனை தடவை சென்று வந்திருக்கிறேன். அல்லது ரோ அதிகாரிகள் யாராவது இங்கு வந்து என்னை சந்தித்திருக்கிறார்களா? எந்த அதிகாரி என்னுடன் தொடர்பில் இருக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா?

 

இந்தியாவுக்கு அச்சுறுத்தலான ஈழத்து நபர்கள் என்ற பட்டியலில் என்னுடைய பெயரும் இருக்கிறது என்பதும் இந்தியாவுக்கு செல்வதற்கு எனக்கு விசா வழங்கப்படாது என்பதும் உங்களுக்கு தெரியுமா?1987 ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய பின் இன்று வரை நான் இந்தியாவுக்கு சென்றதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

1989 ம் ஆண்டு யுன் மாதம் 10 ம்திகதி  ரோ ஏஜண்ட்டுகள் நுவரேலியா மாவட்டம்  ரந்தனிகலையில் வைத்து என்னைச் சுட்டதும் அந்தக் கொலை முயற்சியில் நான் காயங்களுடன் உயிர் தப்பி அமரர் குமார் பொன்னம்பலத்தின் உதவியால்; பிரான்சுக்கு வந்தது உங்களுக்குத் தெரியுமா?

 

1988 ம் ஆண்டு பிரான்சில்  வைத்து என்னைக் கொலை செய்வதற்கு மாணிக்கதாசனின் உதவியோடு துளசி என்பனை ரோ இந்கு அனுப்பி வைத்ததும் அவன் இங்கு பிரொஞ்சுக் காவல் துறையால் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டும் உங்களுக்குத் தெரியுமா?

 

அடுத்து தரோகத்தை தவிர எதுவும் செய்யாதவர்….. நான் செய்த துரோகத்தை உங்களால் பட்டியலிடமுடியுமா?... நான் புளொட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் என்று தான் நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். மத்திய குழுவுக்கு மேல் பொலிட் பீரோ என்று ஒன்று இருக்கிறது. நான் அந்த பொலிட் பீரோ உறுப்பினனும் கூட இதில் ஒழிவு மறைவு ஒன்றும் இல்லை.1986 ம் ஆண்டு இந்திய இலங்கை ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பொது அதை பகிரங்கமாக எதிர்த்தவன் நான். மாமனிதர் சிவராம் சித்தார்த்தன் போன்றவர்கள் வடக்கு கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டு வரதராஜப் பெருமாள் பெற்ற முதலமைச்சர் பதவியை தாங்கள் பெற ஆசைப்பட்ட போது புளட்டின் பொலிட் பீரோவில் என்னுடைய ஆளுமைiயுயும் வாதத் திறமையையும் பயன்படுத்தி புளட் இயக்கம் அந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்தவன் நான்.

1987 ம் ஆண்டு  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற போது புளட் இயக்கம் வவுனியாவில் என்னை வேலை செய்யச் சொன்னது.நான் அதை மறுத்து மலையகத்தில் வேலை செய்யச் சென்றேன். ஏன் தெரியுமா விடுதலைப்புலிகள் இயக்கம் ‘வடக்கு கிழக்கில் போராடுகின்றார்கள் நாங்கள் அவர்களுக்கு போட்டியாக இருந்து ஆளுக்காள் அடிபட வேண்டாம். நாங்கள் மலையத்திலே போராடுவோம். வௌ;;வேறு முனைகளில் சிறீலங்கா அரசை பலவீனப் படுத்தும் போது தமிழீழம் சுலபமாக கிடைக்கும் என்பதற்காகத்தான்.

நாங்கள் போரவேண்டிய இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்துக்கு போகிறோம் என்று சித்தார்த்தனும் சிவராமும் என்னுடைய திட்டத்தை எதிர்த்தவர்கள். அதற்காக நான் பின் வாங்கிவிடவில்லை.

 

நான் மலையகத்தில் வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் ஈபிஆர்எல் இயக்கம் வரதராஜப் பெருமாள் மலைய வம்சாவழியை சேர்ந்தவர் என்ற அறிமுகத்தை வைத்துக்குக் கொண்டு தாங்கள் வடக்கு கிழக்கில் உருவாக்கும் தமிழ் தேசிய இராணுவத்துக்காக நிறைய மலையகப் பொடியளை அழைத்துச் சென்றார்கள். நான் உடனே மலையகத்தை சோந்த சந்திரசேகரனை முதன்மைப்படுத்தி மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்க ஊக்கிவித்தேன். இதன் மூலம் மலையகப் பொடியள் ஈபிஆர் எல் எவ் இயக்கத்துக்கு செல்வது தடுக்கப்பட்டது.

 

1988 ம் ஆண்டு மணலாற்றுகாட்டில் அண்ணையை முற்றுகை உள்ளாக்கி அழிப்பதற்கு இந்திய இராணுவமும் திட்டமிடடிருந்தது. எற்கணவே  அண்ணை இருந்த பகுதியை நெருங்கிவிட்ட இந்திய இராணுவம் அவரை அழிப்பதற்கு மேலதிகமான நாலு பட்டாலியன்கள் படையினரை இந்தியாவில் இருந்த அழைப்பதக்கு திட்டமிட்டிருந்தது.இந்தப் படையுடன் சிறீலங்கா இராணுவத்தில் இரண்டு பட்டாலியன் படையினரும் இனைந்து  நடவடிக்கையில் ஈடுபடுவது என்று திட்டமிடப்பட்டது.அண்ணையையும் விடுதலைப் புலிகளையும் அழிக்கப்பட்ட பின்னர் எல்லா இயக்கங்களும் இணைந்த ஒரு மாகாண சபை ஆட்சியை வடக்கு கிழக்கில் கொண்டு வருவதற்கு ரோ திட்டமிட்டிருந்தது. இந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் அப்போது நுவரேலியாவில் மறைந்து வாழ்ந்த ஜேவிபி தலைவர் ரோகண விஜயவீராவை அவர் எனது தந்தையின் நண்பர் என்ற அறிமுகத்தை வைத்து சந்தித்து இந்திய இராணுவத்தை இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். விடுதலைப் புலிகள் அழிக்கப்படும் வரை இந்திய இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தை ஜேவிபி முன்னெடுக்கக் கூடாது என்று ஜேவிபியின் தற்போதைய தலைவர் சோமவன்ச அமரதுங்கா போன்றவர்கள் எதிர்த்த போது விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டால் இந்திய இராணுவத்தின் அடுத்த குறி ஜேவிபி தான் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி 3 நாட்கள் அவர்களோடு தொடர்ந்து பேசி அவர்களை சம்மதிக்க வைத்தேன்.அதன் பின் தெற்கு பகுதி எங்கும் ஜேவிபி நடத்திய போராட்டங்கள் மற்றும் அரசியல் வாதிகள் மீது நடவடிக்கை எடுத்து என்பவற்றால் பிரேமதாசாவால் ஆட்சி நடத்த முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது.இந்திய இராணுவத்தை வெளியேற்றினால் தான் அவரது ஆட்சி நிலைக்கும்  என்ற  கட்டாயம் அவருக்கு உருவாக்கப்பட்டது. இதனாலேயே அவர் விடுதலைப் புலிகளை பேச அழைத்தார்.ஆயுதங்கொடுத்தார். கடைசியில் இந்திய இராணுவத்தை நாட்டை விட்டு வெளியேறும்படியும் கேட்டார்.(இதற்காகத் தான் ரோ என்னை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது)புளட்டின் இ;ன்றைய தலைவர் சித்தர்த்தனும் மாணிக்கதாசனும் ஏன் சிவராமும் கூட என்னை துரோகி புலிகளுக்கு விலைபோய்விட்டவர்.புலிகளின் உளவாளி என்று வசைபாடினார்கள். உமா மகேஸ்வரன் கொல்லப்படுவதற்கும் இதுதான் அடிப்படை காரணமாக அமைந்தது

அன்று நான் தனி ஒரு மனிதனாக நின்று பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியில் இந்த நடவடிக்கையை செய்திருக்காவிட்டால் இன்று முள்ளிவாக்காலில் நடந்தது அன்று நடந்திருக்கும்.இன்று இவ்வளவு படையணிகள் உங்களைப் போன்ற இயக்கத்தின்  தூண்கள் என்று சொல்கின்ற பலர் இருந்தும் அண்ணையையும் ஏனைய தளபதிகளையும் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? இவ்வளவு அழிவுகள் ஏன் சிங்களப் பகுதியை கலங்கடிக்க வைத்திருந்தால் மகிந்தவை ஆட்சி நடத்தவிடாமல் செய்திருந்தால் அவனது படையினரால் முள்ளிவாய்க்கால் வரை வந்திருக்க முடியுமா?1990 க்கு பின்னர் அதாவது ரோகண விஜயவிரா கொல்லப்பட்ட பின்னர் எனக்கு தென் பகுதியில் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு முன்புபோல் தொடர்புகள் இருந்திருந்தால் நிச்சயமாக நான் இயக்கத்தை இந்தப் பேரழிவில் இருந்து காப்பாற்றியிருப்பேன். நான் உங்களைப் போன்று திரைமறைவில் இருந்து கொண்ட கோழைத் தனமான உயர் குடி அரசில் நடத்துபவனல்ல. பதில் சொல்லுங்கள் இதைத்தான் நீங்கள் துரோகம் என்கிறீர்களா?

 

அடுத்து பலாலி இந்திய இலங்கை கூட்டுப்படைத் தளத்தில் இருந்து கொண்டு வானொலி நடத்தி புலிகளை வசை பாடியது என்று சொல்கிறீர்களே…. உங்களது அறியாமையை நினைக்க உண்மையில் நீங்கள் அமைப்பில் இருந்தவர்கள் தானா? ஏன்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது?

நான் நடத்திய வானொலியின் பெயர் “தமிழீத்தின் குரல்” .இந்த வானொலி 1983 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 திகதி ஆரம்பிக்ப்பட்டது.2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ம் திகதி நிறுத்தப்பட்டது. இந்த வானொலி ஆரம்பத்தில் மண்டபம் கடலில் இருந்து ஒரு றோளர் படகில் இருந்தும் பின்னர் தஞ்சாவ+ரில் இருந்துமே நடத்தப்பட்டது.1983-85 காலப்பகுதியில் சிறீலங்கா கூட்டுப்படைத் தளம் எங்கே இருந்தது என்று கூறமுடியுமா? இந்திய இராணுவக்காலத்தில் நான் இருந்:து செயற்பட்டது முழுக்க முழுக்க மலையகத்திலாகும்.

 

அடுத்து இந்திய ஆக்கிரமிப்புக்காலத்தில் எனது கையால் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் கொல்லப்படதாக சொல்கிறீர்களே! அப்படி என்னால் கொல்லப்பட்டதாக ஒரு அப்பாவியின் பேரையாவது உங்களால் கூறமுடியுமா? நான் எந்த இடத்தில் இருந்து அப்பாவிகளை சுட்டுக் கொன்றேன் என்றாவது உங்களால் கூறமுடியுமா? உங்களிடம் இருக்கும் சாதித் திமிரும் சாதிவெறியும் தானே இவ்வாறு கூசாமல் பொய் சொல்லச் சொல்கிறது….

 

என்னை அழையா விருந்தாளியாக வன்னிக்கு வந்ததாகச் சொல்கிறீர்களே. என்னை வன்னிக்கு வரும்படி அழைத்தவர் தேசியத்தலைவர். காஸ்ரோ மூலமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. எங்கே நெடியவனை  அல்லது அறிவை இதை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்…

அறிவுச் சமர் நிகழ்சிக்காக செல்வராஜாவுடன் சேர்த்துத்தான் தலைவர் என்னை சந்தித்ததாக கூறுகிறீர்கள். உண்மையில் 2003 மாவீரர் நாள் ஏற்பாடுகளை நேரஞ்சல் செய்வது தொடர்பாகத்தான் அந்தச் சந்திப்பு நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த அந்தச் சந்திப்பில் 30 நிமிடங்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சி பற்றிப் பேசப்பட்டது. மிகுதி நேரம் முழுவதும் பிரான்ஸ் நிலைமைகள் இந்திய உலக அரசியல் நிலைமைகள் பற்றியே தலைவர் என்னுடன் பேசினார்.இதை அந்தச் சந்திப்பில் உடனிருந்த நெடியவனை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

 

அடுத்து அனைத்துலக தொடர்பகத்தினூடாகத்தான் தலைவரை சந்திக்க முடியுமா? வன்னிக்கு சென்று ஏறக்குறைய 6 மாதங்கள் நான் அரசியல் துறையினருடனேயே தங்கியிருந்தேன். முதலில் பரப்புரை பொறுப்பாளராக இருந்த ரமேஸ் (பின்னர் காவல்துறை பொறுப்பாளராக இருந்தவார்) மூலம் உள்ளக பரப்புரை அதாவது பேராளிகளுக்கு அரசியல் வகுப்பு எடுப்பது எவ்வாறு என்பது பற்றி அரசில்துறையினரின் ஏற்பாட்டில் இருண்டு தடவை நான் தலைவரை சந்தித்திருக்கிறேன். இந்தச்சந்திப்பை பற்றி அறிந்த தயா மாஸ்டர் இன்னும் உயிருடன் எதிரணியில் இருக்கிறார்.நான் இங்கு வந்த பின்பு இந்தப் பரப்புப்புரைக்கான பாடத் திட்டத்தை தயாரித்து நந்தகோபனின் மின்னஞ்சலுக்கூடாகவே அதை ரமேசுக்கு அனுப்பிருக்கிறேன்.இதை நந்தகோபனை மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தச் சந்திப்பின் போதே பிரான்சினுடைய கட்டமைப்புகள் அதில் மனோ அண்ணையின் பங்களிப்பு பற்றிப் பேசப்பட்டது.

 

திறலோன் என்று எனக்கு பெயர் வைப்பதற்கு தலைவர் ஒருநான் முழுதும் யோசித்தாக நான் கூறியதாக எழுதியிருக்கிறீர்கள். என்னை என்ன அரசியல் தெரியாத வரலாறு தெரியாத படிக்காத முட்டாள் என்று நினைத்தீர்களா. அல்லது இந்த கீழ் சாதி நாய் நாங்கள் என்ன பொய்யை சொன்னாலும் கேட்டுக் கொண்டு அடங்கியிருக்க வேண்டும் என்ற சாதியத் திமிரா?

 

தலைவர் சொல்லித்தான் காஸ்ரோ எனக்கு பேர் வைத்தாக நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். அது தலைவருடைய உத்தரவின் பேரழில் வைக்கப்பட்டதாக தானே அர்த்தம். கஸ்ரோ தலைவரை கேட்காமல் தன்னுடைய முடிவின்படி  எனக்குப் பெயர் வைத்திருந்தால் தானே அதை கஸ்ரோ வைத்ததாக கொள்ள முடியும். எனக்கு பேர் வைக்க தலைவர் ஒரு நாள் முழுவதும் யோசித்தார் என்று நான் சொன்னதாக உங்கள் கற்பனையில் ஒரு எண்ணம் உத்தித்ததே அவர் தொடர்பாக உங்கள ஆழ் மனதில் இருந்த பதிவுகளின் வெளிப்பாடு என்பதை உங்களை அறியாமல் இனங்காட்டியிருக்கிறீர்கள்.

 

 

இறுதியாக நான் உளவாளி என்று 1998 லேயே கதைகட்டியவர் யார் என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் அந்தக் காலகட்டத்தில் என்னக் கொல்ல ரோ வால் அனுப்பப்பட்ட துளசி என்பவனுக்கு மறைமுக ஒத்தாசை புரிந்ததும் அந்த நபர் தான் என்பதும் எனக்குத் தெரியும்.

 

அந்த நபரின் அடிப்படை பிரச்சனை சாதி வெறி.அதாவது யாழ்ப்பாண சமூகத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒருவன் கருத்தை உருவாக்கும் கருத்தை சொல்லும் நிலையில் இருக்கக் கூடாது.அதாவது ஒரு பத்திரிகை ஆசிரியனாக தொலைக்காட்சின் செய்தி ஆசிரியானக இருக்கக் கூடாது. அவர் கலைஞர்கள் என்ற பெயரில் கூத்தாடிகளாக மட்டும் இருக்கலாம்.கூத்தாடிகள் என்பது தான்  எங்களுக்கு நீங்கள் இட்ட பெயர்)

 

இதுவரை தமிழ் சமூகத்தின் பொது ஊடகம் ஒன்றில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் செய்தி ஆசிரியர்களாக இருந்தில்லை.அப்படி இருக்கவிட்டதுமில்லை. இந்த புலம் பெயர் சமூகத்தில்; முதல் முதலாக பத்திரிகை அசிரியனாக தொலைக்காட்சி செய்தி ஆசிரியனாக தலையெடுக்க முன்படுகின்றபோது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிறப்பால் தகுதி வேணும் என்று கேட்டதும் ரோவின்; உளவாளி என்று முத்திரை குத்த முயன்றதும் நடந்தது.இது தான் உண்மை. இதை ஆதார புர்வமாக என்னால் அம்பலப் படுத்த முடியும். அதை செய்வது விடுதலைப் போராட்டத்துக்கு இழுக்கு  என்பதாலே நான் இன்றுவரை என்னால் இயன்றவரை மௌனம் காக்கிறேன்.

 

யாழ்ப்பாண சமூகத்தில் முதல் முதலாக ஒரு தமிழ் செல்வனை முன்ணிக்கு கொண்டு சர்வதேச அரங்கில் முதன்மைப்படுத்திய ஒரே தலைவர் அண்ணை மட்டும் தான். இதுவரை யாரும் அதை செய்ததில்லை இனச் செய்யப் போவது மில்லை.இது தான் அண்ணையிடைய சிறப்பு.

 

இவ்வளவு இனப்படுகொலை முள்ளி வாயக்கால் பேரவலம் எல்லாம் நிகழ்ந்தும் இன்று வரை யாரும் ஒரு சிங்களப்பகுதில் சாதி வேறுபாடின்றி காணி வாங்க முடியும். எங்கே யாழ்ப்பாணத்தில் புலோலி கரவெட்டி துன்னாலை கரணவாய் சுழிபுரம் தொல்புரம கட்டுவன் வசாவிளான் முதனான பல பகுதிகளில் .இன்றவரை நாங்கள் காணிவாங்கமுடியாது சமத்துவமாக வாழ முடியாது. ஏங்கே நாங்கள் சாதி பார்ப்பதில்லை சாதி வேறுபாடு எங்களிடம் இல்லை என்றால் என்னுடைய ஊரான புலோலி எனக்கும் எனது உறவினர்களுக்கு மேட்டுக்குடியனரின் பகுதிக்குள் அவர்களுடன் சோந்து வாழ்வதற்கு காணி வாங்கித்தாருங்கள் பார்க்கலாம்.

 

மொத்தத்தில் நான் உங்களை கேட்பதெல்லாம் இதுதான் இப்போது எங்கள் இனத்தின் தேவை அனைவரும் ஒன்றுபட்டு நிற்பது.35 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் தியாகத்தை அண்ணை என்ற மாபெரும் மனிதனுடைய  விசாலமான சிந்தனையை அர்பணிப்பை மதிப்பவர்கள் நீங்கள் என்றால் இந்தச் சேறடிப்புகளை இத்துடன் நிறுத்தி நீங்கள் மரப்பிய அவதூறுகளுக்கு தவறுதலாக வெளியடப்பட்ட தகவல் என்று மறுப்பு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

(ஒரு ரோ ஏஜண்டை 2004 ம் ஆண்டு அண்ணை ஏன் உப அமைப்புகிள் ஒருங்கிளைப்பாளராக நியமித்தார் என்பதை சிந்தித்தபாருங்கள்)

 

குறிப்பு கலைவாணி என்ற பெயிரில் எழுதும் சீமாட்டியே அல்லது அந்தச்சீமாட்டியின் முந்தானைக்குள் ஒழிந்திருந்து எழுதும் கனவானே....

நான் புளட்டில் இருந்தது 1979- 1989 10 வருடங்கள்இ

விடுதலைப்புலிகளுக்காக வேலைசெய்தது 1976-1979 பின்னர் 1992 ல் இருந்து இன்றவரை...

ஏன் புளட் இயக்கத்தில் முன்பு வேலை செய்த பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லையா.... இன்று வரை பிறப்பால் இனனை சாதிப்பேர் செல்ல அவகிக்கும் சாதி வெறிர்களுக்கும் நான் புளட்டை விட்டு விலகி 21 வருடங்கள் ஆகியபின்பும் நான் புளட்காரன் என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கும் கணனிப் பரட்சியாளர்களுக்கு என்ன வித்தியாசம்

Edited by navam

சிவா சின்னபெடி அண்ணையிட்ட நான் கேக்க விரும்பும் ஒரே கேள்வி.... KP நல்லவரா கெட்டவரா...?? அவரின் ஆதரவாளர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்...??

வரலாறு விட்ட வழியில்...

பாரிசில் மக்கள் தன்னெழுர்ச்சி கொள்ளவில்லை.

மாறாக மக்கள் விழிப்படைந்து வருகின்றனர் என்பதே உண்மை.

தாய்நிலம் பத்திரிகை குறித்தல்ல மாறாக ஈழமுரசு குறித்தே

மக்கள் விழிப்படைந்துள்ளனர்.

மக்களின் ஆவலுக்கு தாய்நிலம் பத்திரிகையின் வருவகையும்

அதற்கு மக்கள் மற்றும் வர்தகர்கள் கொடுத்த ஆதரவுமே

"தன்னெழுர்ச்சிக்கு பின்னாள் உள்ள செய்தி'

சரி

உண்மையாக நடந்தது என்ன ?

தாய்நிலம் பத்திரிகையில் வெளவிந்த கட்டுரை ஒன்றே

இதற்கு காரணமா ? அல்லது தாய்நிலம் பத்திகைகையே

இதற்கு காரணமா ?

உண்மையில் இரண்டுமே காரணத்துக்கு உரியதுதான்.

விரிவாக பார்போம்...

பாரிசில் இருந்து வெளிவரும் ஈழமுரசு என்ற பத்திரிகை பல மாதங்களாக தேசியத்தின்

பெயரால் ஊடக தர்மத்துக்கு புறம்பாக மக்களை குழப்பி வருகின்றமை

அனைவரும் அறிந்த உண்மை.

இவர்களின் கூட்டு இணையங்களான சங்கதி - பதிவு ஆகியனவும் இதற்குள் அடங்கும்.

இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் அதற்கு உறுதுணையாக

உழைக்கின்றவர்கள் குறித்தும் சேறடிப்பு அரசியல் செய்ய ஈழமுரசு அன் கோ தாங்கள் மட்டுமே

பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஏகபோகத்துக்கு அப்பால் தங்கள் உண்மை முகம்

மக்களுக்கு தெரிந்து வருகின்றது என்ற அச்சமே இதற்கு பின்னால் உள்ள செய்தி.

எமது விடுதலைப் போராட்டத்தின் பாரிய பின்னடைவுக்கு யார் (கஸ்றோ கும்பல் )காரணமென்ற

உண்மை பல இணைத்தளங்களில் வெளிப்பட்டு வருகின்ற நிலையில்

செய்வதறியாது தவித்து நிற்கும் இந்த றவுடிக் கும்பல் இப்போது

வெளிப்படையாக தங்களின் அடவாடித்தனங்களை

காட்டிவருகின்றது.

இதன் ஒரு தொடர்சியே பாரிசிஸ் நடந்தவை.

நடந்ததென்ன ?

பிரான்சில் ரீசீசீக்கு பொறுப்பென்று சொல்லிக் கொண்டு திரிகின்ற சச்சி என்பவர்

சுரேஸ் - அமுதன் - கரண் ஆகிய மூன்று அடியாட்களுடன் லாசப்பலுக்கு வருகின்றார்.

பின்னர் சச்சி திட்டம் தீட்டமுகாம் ஈழமுரசு அலுவலகத்துக்கு செல்கின்றனர்.

பின்னர் இந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறிய அடிகும்பல்

சில வர்தக ஸ்தாபனங்களுக்கு சென்று மூன்று நான்கு தாய்நிலம் பிரதிகளை

எடுக்கின்றனர்.

சில வர்தக நிறுவனங்கள் இவர்களின் நோக்கத்தை கவனித்து தாய்நிலம் பிரதியை

கொடுக்க மறுத்திருக்கின்றனர்.

இவ்வாறு தாங்கள் சேகரித்த சில பிரதிகளை கொண்டு போய்

ஈழமுரசு அலுவலகம் இருக்கின்ற சந்தியில் வீதியில் போடுகின்றனர்.

இவ்விடத்தில்தான் நிசான் கடையுள்ளது.

இதனை கவனித்த நிசான் கடையினர் தாங்கள் அறியாமல் வழங்கிய தாய்நிலம் பிரதியை

வீதியில் இருந்து எடுத்து விட்டு கடைக்குள் இனி வரக் கூடாது என்று சொல்லப்பட்டது.

பின்னர் அங்கு ஒன்று கூடிய மக்கள் இவர்களின் அடாவடித்ததனத்தை

கண்டிக்க செய்வதறியாது பயத்தில் அங்கிருந்து ஈழமுரசுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

இதுதான் நடந்தது.

அங்கு தீயிட்டு எவரும் கொளுத்தவி;ல்லை.

ஆனால் ஏதோ மக்கள் தன்னெழுர்சி கொண்டு விட்டனர் என்று தாங்களின்

வக்கிர எண்ணங்கைள மக்கள் மீது சுமத்துவது மிகவும் கேடானது.

அன்பான யாழ் உறவுகளே...

தாய்நிலம் பத்திரிகை ஒன்றும் தேசியத்துக்கு எதிரான பத்திரிகை அல்ல.

மாறாக தேசியத்துக்கு உழைக்கின்றவர்களின் கூட்டு முயற்சி அது.

மக்களுக்கு பொய்களை சொல்லிக் கொண்டு மாயைத்திரைக்குள்

வைத்திருக்க முனையும் குழுநிலை செயற்பாடுகள் ஒரு எமக்கு விடியலை

தராது.

பதிவு-சங்கதி ஆகிய இணையங்களில் வருகின்ற செய்திகளை

கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் இவர்களின் உண்மையான நோக்கம் புரியும்.

நன்றி.

வணக்கம் ஐயாமாரே.

நீங்கள் கணிப்பிடுவதுபோல் எமது வடுதலை அமைப்பின் துறைசார் பொறுப்பாளர்களின் விசுவாசிகளும் அல்ல, விசிலடிக்கும் விசிறிகளும் அல்ல.

எமது விடுதலை அமைப்பிலிருந்து சிலர் அணிபிரிந்து அரசியல் செய்வதாக உணர்கின்றோம். புலத்திலிருந்து செயற்பட்டவர்கள் விட்ட தவறும், தான்தோன்றித்தனமும், எமது விடுதலைப்போராட்டம் வீழ்த்தப் பட்டதற்கு முதன்மைக்காரணம்.

கஸ்ரோ அவர்களும் அவரால் அனுப்பிவைக்கப்பட்டவர்களும்தான்எமது விடுதலைப்போராட்டம் வீழ்த்தப் பட்டதற்கு முதன்மைக்காரணம், என்பதை ஏற்கமுடியாதுள்ளது. முன்பு செயற்பட்டவர்கள் சிலரை விலக்கிவைத்துவிட்டு, புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்கு தலைவர் அவர்கள் நியாயமான காரணம் இல்லாது முடிவெடுத்திருக்கமாட்டார் என்பது எனது நம்பிக்கை.

புலத்துச் செயற்பாட்டை பொறுப்பெடுத்த புதியவர்கள்;, பழையவர்கள் விதைத்துச் சென்ற தரங்கெட்ட விதைப்பை அறுவடைசெய்தவர்களாக, செயற்பட்டார்கள். தமக்கு தலைவர் தந்த சந்தர்ப்;பத்தை உரிய முறையில் பயன்டுத்தி புலத்துக் கட்டமைப்புகளை மறுசீரமைத்து செயற்படுவதற்குத் தவறிவிட்டார்கள். என்பது எனது நம்பிக்கை.

நீரில் நீந்தப்பழகியவர்கள் சேற்றில் நீந்தத்தெரியாது, சேற்றோடு சேறாகிப் போனார்கள்.

இன்று சேறடிக்கும் சுவராகவும் இருக்கின்றார்கள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

***

கேபி அணி காஸ்ரோ அணி என்று உருவாக்கியதே அனைத்துலக தொடர்பகக்காரர்களே தவிர வேறு யாரும் அல்ல. கடைசி நேரத்தில் சூசை அண்ணை உதவி கேட்டது நெடியவனிடமோ இல்லை வெளிநாட்டில் இருக்கக்கூடிய பொறுப்பாளர்களிடமோ அல்ல. கேபியிடம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். அதற்கு சாட்சியாக ஒலிப்பதிவு வெளிவந்து அதனையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

காஸ்ரோவின் வகிபாத்திரம் விடுதலைப் புலிகளின் தலைவரால் பின்நாளில் மதிக்கப்படவில்லை என்பதனை இதில் இருந்து ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

Edited by இணையவன்
தனிநபர் தாக்குதலான கருத்து நீக்கப்பட்டுள்ளது.

***

உண்மையை நான் சொல்ல வேண்டும் எண்றால் எனக்கும் ஐரோப்பாவில் இருக்கும்புலிகள் யாருக்கும் தொடர்பு கிடையாது... ஆனால் அதுக்கும் வெளியில் இருக்கிறது எண்று வேண்டும் எண்றால் எடுத்துக்கொள்ளலாம்...

உங்களை நானோ என்னை நீங்களோ திட்டித்தீர்க்கும் காலம் இதுவல்ல...

அனைத்துலக தொடர்பகத்தினர் செய்ததும் செய்வதும் அனைத்தும் சரியானது எண்று நிறுவுவது எனது நோக்கம் அல்ல.. பிழைகள் இருக்கலாம், அவை திருத்த படவேண்டியவை.. அவைகளை நியாயப்படுத்துவது எனது நோக்கமும் இல்லை...

ஆனால் நீங்கள் KP எனும் மனிதனுக்கு பின்னால் நிப்பவர்களை நம்புகிறீர்களாக இருந்தால் தவறான இடத்தில் நிக்கிறீர்கள் என்பதை சொல்வதே எனது நோக்கம்... நீங்கள் அனைத்துலக தொடர்பகத்தை ஆதரிக்காதவராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போங்கள்... அதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை...

ஆனால் KP யின் திட்டத்தில் செயற்படுபவர்களுடன் மட்டும் சேர்ந்து நிக்காதீர்கள்...

( சூசை அண்ணை இறுதியாக கொடுத்த செவ்வியை மீண்டும் கேட்டுப்பாருங்கள்... KP பத்மநாதனூடாக செஞ்சிலுவை சங்கத்திடம் மக்களை மீட்க்க பேசிக்கொண்டு இருக்கிறேம் எண்றுதான் சொன்னாரே அண்றி KPதான் எல்லாம் எண்று சொல்லவில்லை.)

http://www.tamilnational.net/data/2009/may/17/Soosai_TamilNational_17May_2009.mp3

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அன்பு சகோதரர் தயாவுக்கு...

கேபியை நான் பார்த்ததும் இல்லை பழகியதும் இல்லை ஆனால் 1984 ல் இருந்து 2002 வரை தாயகவிடுதலைக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் மறுக்க மாட்டேன்.அதிலே தவறுகள் இருக்கலாம் விமர்சனங்கள் இருக்கலாம்...விடுதலைப்புலிகள் இயக்கம் அடைந்த இராணுவ வெற்றிகளில் கேபியின் பங்களிப்பை மறுக்க முடியாது.

மற்றப்படி இப்போது கேபியின் நிலைப்பாடு என்ன என்பதும் எனக்குத் தெரியாது.ஒருவர் எதிரியிடம் பிடிபட்டு சிறைக்கு சென்றபின் அவரது செயற்பாடு இடை நிறுத்தப்படும் என்பது விடுதலைப்புலிகள் இயக்க வரலாறு.

அவர் துரோகி என்று ஒரு தரப்பு மட்டுமே சொல்கிறது

இதிலே அவரை துரொகி என்று சொல்கின்ற பலர் அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள் என்பது எனக்குத் தெரியும்

20 வருடமாக நான் விடுதலைப்புலிகளுக்கு வெலை செய்த பொதும் என்னை சாதி ரீதியாக அவமதித்தவர்களும் துரொகி எனக்றவர்கள் பட்டிணி பொட்டு பாரிஸ் தெருவில் பிச்சை எடுக்க வைத்தவர்களும்.. படுக்க இடம் இல்லாமல் செ;ய்ததது மட்டுமல்லாமல் எனக்கு படுக்க இடம் தந்தவர்களையும் தடுத்து என்னை கார் து நோட் தொடரூந்து நிலையத்தில் 3 நாட்கள் குந்தியிருக்க வைத்தவர்கள் தான் இன்று மற்றவர்களுக்கு துரோகி பட்டங்கொடுக்கும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.

இவற்றை எல்லாம் வைத்துக் கொண்டு கேபி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாது என்பது கருத்து

என்னைப் பொறுத்தவரை நாடுகடந்த அரசாங்கம் என்பது நாங்கள் எங்களது விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தவதற்கு கிடைத்திருக்கு ஒருவாய்ப்பாகவே நான் கருதுகின்றேன்.நிச்சயமாக நாடுகடந்த அரசாங்கத்தை அதற்குரிய இலக்கில் செயற்பட வைத்தால் சிறீலங்கா அரசாங்கத்தை 5 முதல் 10 வருடத்தக்குள் தோற்கடித்து தமிழீழ விடதலையை வென்றடுக்கலாம் என்று உறுதியாக நம்புகிறேன் அதை நோக்கி நம்பிக்கையோடு செயற்படுகிறேன் தென் தமிழீத்தில்

தேசித்தலைவரின் படத்தையும் அடித்து உடைத்துவிட்டு அவரது கொடும்பாவியையும் எரிப்பதில் முன்னின்று விட்டு சிவராம் சென்றதும் நல்ல பிள்ளைகளாக வேசம் பொட்ட சந்தர்ப்பவாதிகள் நாடுகடந்த அரசில் முதன்மைப்படுத்தப்படுவதில் எனக்கு உடன்பாடில்லைஇ இந்த விடயம் எனக்கு நேரடியாகவே தெரியும்

கேணல் சூசையின் இறுதிக்குரலை இணைத்தமைக்கு நன்றி.

சரி இங்கே 25ஆயிரம் மக்களை காப்பாற்றச் சொல்லி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம்

கேட்டம்.. அவர்கள் கேட்கேலை..அவர்கள் வரவில்லை..இல்லை...25ஆயிரம் மக்களும்

செத்திட்டினம் என்று சூசை குறிப்பிடுகின்றார்.

அந்த 25ஆயிரம் மக்களின்ர சாவுக்கும் பொறுப்பாளி வேறுயாருமல்ல..அவர் தமி;ழ்நெற்

ஜெயச்சந்திரன்தான்...

இது உண்மை...

எப்படியென்றால்..

கேபி யூடாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர் கொள்ளப்பட்டமை

உண்மை.

அதற்கு செஞ்சிலுவைச் சங்கம் சொன்ன பதில் என்னவென்றால் ' இயக்கம் இரண்டாக

உடைந்து விட்டதென்று புலிகளின் ஆதரவு இ;ணையத் தளமான தமிழ்நெற்றில் உள்ளது..ஆகையில்

இந்த சூழ்நிலையில் எந்தத் தரப்பிடமும் தொடர்பிணை பேணிமுடியாதென்று கைவிரித்து விட்டது"

இது உண்மை..

இவ்வாறான பொய் செய்தியை துணிந்து தமிழ்நெற் போட்டதன் நோக்கம் என்ன ?

மார்ச் - ஏப்பரல் 2009களில தமிழ்நெற் இணையத்தில் வெளிவந்த செய்தி ஆய்வுகளை

உற்றுநோக்கினால் முள்ளிவாய்கால் பேரவலத்தின் பொறுப்பாளிகள் யார் என்பது

தெரியும்..

- தமிழ் மக்களுக்கு மாற்றத் தலைமை தேவை..

- தமிழ் மக்களின் போராட்டம் தோல்வி கண்டுவிட்டது..

- புலிகள் இயக்கம் இரண்டு பட்டுவிட்டது..

இவைகள் விடுதலைப் புலிகள் ஆயுதத்தை மௌனக்கிறோம் என உத்தியோக பூர்வமாக அறிவிக்க

முன்னரேயே தமிழ்நெற்றால் முன்வைக்கப்பட்ட செய்திஆய்வுகள்..

இது பொய்யல்ல..தமிழ் நெற்றில் இவைகளை இப்பவும் பார்கலாம்...

இந்;த தமிழ் நெற்றி ஜெயச்சந்திரனின் வழிகாட்டலில்தான் மக்கள் அவைகள் உருவாக்கப்பட்டதும்

குழப்பங்கள் ஏற்படு;த்தப்பட்டதும்.

மேலும் மே 24 கே.பி அவர்கள் தலைவரின் வீரச்சாவை அறிவித்த வேளை

தலைவர் உயிருடன் உள்ளர் என செய்தியை வெளியிட்டு உண்மையை மூடிமறைத்தது

மக்களை குழப்பியதும் தமிழ்நெற்தான்.

பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசை வலுவற்றது

மக்கள் ஆதரவற்ற என தொடர்சியா செய்திகளை வெளியிட்ட தமிழ்நெற்ற

பின்னர் உருத்திரகுமாரனுக்கு போட்டியாக ஜெயனர்ந்த மூர்தியை முன்மொழிந்ததும்

இந்த தமிழ்நெற்தான்.

உந்த தமிழ்நெற் ஜெயசந்திரனுக்கு பின்னால் தான் உந்த கஸ்றோவின் கும்பல்

இயங்கிவருகின்றது.

Edited by அகரன்

ஒவ்வொருவரும் தங்கள் பார்வைகளில் எதோ ஒரு உண்மையையும், சில மனத்தாங்கல்களையும் இணைத்து கற்பனைக் குதிரைகளை பல திசைகளிலும் ஏவி வசைபாடி வருவதை உணர்கிறேன்.

ஒவ்வொருவரின் ஆதங்கங்களைப் புரியும் அதேவேளை, இன்றைய சூழலில் நாம் எம்மினத்திற்கு எப்படி தெளிவான வழிகாட்டல்களை செய்யலாம், அவர்களின் வேதனைகளை எப்படி போக்கலாம், அவர்கள் உரிமைகளை எப்படி வென்றெடுக்கலாம் என்ற இலக்கில் சிந்தனைகள் அமையாதது கவலையாக உள்ளது.

நாம் உண்மையில் எங்கள் மக்களுக்காக உழைத்தோமா? அல்லது சுயநலங்கள் தான் எமது இலக்கா? என்ற கேள்வியை பெரும்பாலான விமர்சனங்களும், சுய விளக்கங்களும் எழுப்பியுள்ளது. KP இன் விசுவாசிகளும் காஸ்ட்ரோவின் விசுவாசிகளும் மக்கள் நலனில், இயக்க குறிக்கோள்களில் துளியும் அக்கறை இல்லாதவர்கள், சுயநலப் பேய்கள் என்ற செய்தியை / உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே வெளிப்படுத்துவது ஒரு விதத்தில் நல்லதாகவும் கொள்ளலாம்.

தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடியவர்கள் ஒருசிலர் தமது சுய நலத்தை முன்னிறுத்த, தமது முகத்தைக் காக்க தமது கற்பனையில் ஆதாரங்கள் எதுவுமற்ற சாதியத்தை இழுத்து பிழைப்பு நடத்த முனையும் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அவர்களின் மனதில் ஆழப் புதைந்துள்ள சாதி வெறியையே காட்டி நிற்கிறது. இதன் மூலம் அவர்கள் பக்கம் உள்ள நியாயம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது. இந்தப் போக்கு உடன் நிறுத்தப்படுவது அனைவருக்கும் உகந்தது.

மூன்று உண்மைகள் இருப்பதாக பெரியவர் கூறுவார். பொய்யான உண்மை, மாயமான உண்மை, உண்மையான உண்மை. உண்மையான உண்மையை அறிந்தபின் பேசுவது அனைவருக்கும் நலம் பயக்கும்.

இதைத் தான் "கண்களால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரித்தரிவதே மெய்" என்று கூறியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யான உண்மை, மாயமான உண்மை, உண்மையான உண்மை. உண்மையான உண்மையை அறிந்தபின் பேசுவது அனைவருக்கும் நலம் பயக்கும்.

முழுப் பூசணிக்காயையே சோற்றினுள் புதைக்கும் இக்காலத்தில் "உண்மையான உண்மை" வெளிவராது. அப்படி வெளிவரும் பட்சத்தில் மனிதன் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்ற "உண்மையான உண்மை"யையும் அறிந்திருப்பான். :D

என்னைப் பொறுத்தவரை நாடுகடந்த அரசாங்கம் என்பது நாங்கள் எங்களது விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தவதற்கு கிடைத்திருக்கு ஒருவாய்ப்பாகவே நான் கருதுகின்றேன்.நிச்சயமாக நாடுகடந்த அரசாங்கத்தை அதற்குரிய இலக்கில் செயற்பட வைத்தால் சிறீலங்கா அரசாங்கத்தை 5 முதல் 10 வருடத்தக்குள் தோற்கடித்து தமிழீழ விடதலையை வென்றடுக்கலாம் என்று உறுதியாக நம்புகிறேன் அதை நோக்கி நம்பிக்கையோடு செயற்படுகிறேன் தென் தமிழீத்தில்

தேசித்தலைவரின் படத்தையும் அடித்து உடைத்துவிட்டு அவரது கொடும்பாவியையும் எரிப்பதில் முன்னின்று விட்டு சிவராம் சென்றதும் நல்ல பிள்ளைகளாக வேசம் பொட்ட சந்தர்ப்பவாதிகள் நாடுகடந்த அரசில் முதன்மைப்படுத்தப்படுவதில் எனக்கு உடன்பாடில்லைஇ இந்த விடயம் எனக்கு நேரடியாகவே தெரியும்

இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்... நாடுகடந்த அரசின் செயற்திட்டம் உருத்திரகுமார் அண்ணையின் கட்டுக்குள் இருப்பதுவே நல்லது.. KP யால் உருவாக்க பட்ட குழுக்களின் கைகள் பலவீனப்படுத்த விடக்கூடாது... நீங்கள் எதிரிகளாக பார்க்கும் பல தமிழ் செயற்பாட்டாளர்கள் குறைகூறுவதும் இந்த KPயால் உருவாக்க பட்ட கட்டமைப்பையே...

இது ஏன் என்பதை அறிய KP யின் பின்னணி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

KP என்பவர் 2002 வரை புலிகளின் வளர்ச்சிக்காக உழைத்தது உண்மை... அவர் ஏன் விலக்கப்பட்டு 2009 வரை கொடுப்பனவுகள் வழங்கி அவரை செயற்பாடுகளில் இருந்து விலக்கி வைத்து இருந்தார்கள் என்பதையும் நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...! அதை நான் இங்கு சொல்லவில்லை..

இறுதி யுத்தம் நடந்த காலங்களில் தென்னாசியாவில் தலைவருடன் நேரடியாக தொடர்பை வைத்து இருந்தவரும் தலைவரின் மதிப்பை பெற்றவருமான ஒருவரின் ஊடாக KP "எனக்கு இருக்கும் வெளிநாட்டு தொடர்புகள்" ( அதாவது வெளிநாட்டு புலநாய்வாளர்கள் சிலர்) பேச அழைக்கிறார்கள் அதுக்கு தலைமையிடம் இருந்து அனுமதி வாங்கி தருமாறு கேக்கிறார்... அப்போது வாங்கி கொடுக்கப்பட்டதுதான் அந்த அனுமதி க்கடிதம்...

அதை தொடர்ந்து KP இந்தியாவின் சில பிரபலங்களை நேரடியாக நடேசன் அண்ணைக்கு தொடர்பும் எடுத்து கொடுத்து பேசப்படுகிறது... முழுவதுமாக பேசிய விடயம் எண்றால் அது புலிகள் ஆயுதங்களை கைவிடுவது பற்றி மட்டுமே... கடைசியில் தலைமை சரண் அடைந்தால் போராளிகள், மக்கள் காப்பாற்றப்படுவர் எனும் தொனிப்படும் அழுத்தம் புலிகள் மீது பிரயோகிக்க பட்டு நடேசன் அண்ணா தலைமையில் சரண் அடைகிறார்கள்... சரண் அடைந்தவர்கள் அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் காயம் அடைந்த போராளிகளும் கொல்லப்படுகிறார்கள்... ( இதை பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய ஜெகத்கஸ்பரும் ஒரு கட்டுரையில் பட்டும் படாமல் சொல்கிறார்) அதை நீங்களும் படிக்க வேண்டும்...

கடைசியாக கொல்லப்பட்ட அரசியல் துறையினர், காயம் அடைந்த போராளிகள் பற்றி பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய KP வாயையே திறக்கவில்லை .... காரணம் என்னவாக இருக்கும் அதை நீங்களே கண்டு பிடியுங்களேன்...

இப்ப விசயத்துக்கு வாருங்கள்... இப்படியான KP யால் அமைக்கப்பட்ட குழுக்களை நம்புவதுக்கு யார் தயாராக இருப்பார்கள்....??

Edited by தயா

இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்... நாடுகடந்த அரசின் செயற்திட்டம் உருத்திரகுமார் அண்ணையின் கட்டுக்குள் இருப்பதுவே நல்லது.. KP யால் உருவாக்க பட்ட குழுக்களின் கைகள் பலவீனப்படுத்த விடக்கூடாது... நீங்கள் எதிரிகளாக பார்க்கும் பல தமிழ் செயற்பாட்டாளர்கள் குறைகூறுவதும் இந்த KPயால் உருவாக்க பட்ட கட்டமைப்பையே...

இது ஏன் என்பதை அறிய KP யின் பின்னணி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

KP என்பவர் 2002 வரை புலிகளின் வளர்ச்சிக்காக உழைத்தது உண்மை... அவர் ஏன் விலக்கப்பட்டு 2009 வரை கொடுப்பனவுகள் வழங்கி அவரை செயற்பாடுகளில் இருந்து விலக்கி வைத்து இருந்தார்கள் என்பதையும் நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...! அதை நான் இங்கு சொல்லவில்லை..

இறுதி யுத்தம் நடந்த காலங்களில் தென்னாசியாவில் தலைவருடன் நேரடியாக தொடர்பை வைத்து இருந்தவரும் தலைவரின் மதிப்பை பெற்றவருமான ஒருவரின் ஊடாக "எனக்கு இருக்கும் வெளிநாட்டு தொடர்புகள்" ( அதாவது வெளிநாட்டு புலநாய்வாளர்கள் சிலர்) பேச அழைக்கிறார்கள் அதுக்கு தலைமையிடம் இருந்து அனுமதி வாங்கி தருமாறு கேக்கிறார்... அப்போது வாங்கி கொடுக்கப்பட்டதுதான் அந்த அனுமதி க்கடிதம்...

அதை தொடர்ந்து KP இந்தியாவின் சில பிரபலங்களை நேரடியாக நடேசன் அண்ணைக்கு தொடர்பும் எடுத்து கொடுத்து பேசப்படுகிறது... முழுவதுமாக பேசிய விடயம் எண்றால் அது புலிகள் ஆயுதங்களை கைவிடுவது பற்றி மட்டுமே... கடைசியில் தலைமை சரண் அடைந்தால் போராளிகள், மக்கள் காப்பாற்றப்படுவர் எனும் தொனிப்படும் அழுத்தம் புலிகள் மீது பிரயோகிக்க பட்டு நடேசன் அண்ணா தலைமையில் சரண் அடைகிறார்கள்... சரண் அடைந்தவர்கள் அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் காயம் அடைந்த போராளிகளும் கொல்லப்படுகிறார்கள்... ( இதை பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய ஜெகத்கஸ்பரும் ஒரு கட்டுரையில் பட்டும் படாமல் சொல்கிறார்) அதை நீங்களும் படிக்க வேண்டும்...

கடைசியாக கொல்லப்பட்ட அரசியல் துறையினர், காயம் அடைந்த போராளிகள் பற்றி பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய KP வாயையே திறக்கவில்லை .... காரணம் என்னவாக இருக்கும் அதை நீங்களே கண்டு பிடியுங்களேன்...

இப்ப விசயத்துக்கு வாருங்கள்... இப்படியான KP யால் அமைக்கப்பட்ட குழுக்களை நம்புவதுக்கு யார் தயாராக இருப்பார்கள்....??

:D:wub::D

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு முள்ளிவாய்க்கால் அவலம் வந்ததே கேபியிடம் இருந்து ஆயுதம் வாங்கி அனுப்பும் பணியை நிறுத்தியதால்தான் என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.

அவரை விலத்திய பின்னர் இந்த அனைத்துலகத் தொடர்பகத்தினால் உருப்படியாக ஆயுதக்கப்பல்களை அனுப்ப முடியவில்லை. எல்லாமே சிங்கள அரசின் தாக்குதல்களுக்கு இலக்காகி அழிந்தன.

மீண்டும் மீண்டும் நான் கேபி புகழ் பாடுவதாகவே பலர் நினைப்பீர்கள். ஆனால், உண்மைகள் பல இருக்கின்றன.

கேபியை எதிர்க்கின்றவர்கள் ஜெயசிக்குறு சமர் காலத்தில் அதாவது மூன்றாம் கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகள் எவ்வளவோ பாரிய தாக்குதல்களை நடத்தினர். உதாரணத்துக்கு பாரிய படைத்தளங்கள் அழிப்புத் தொடக்கம் எதிர்ச்சமர், முறியடிப்புச் சமர் என போரிட்டனர்.

இதற்கு எல்லாம் காரணம், தங்குதடையின்றி புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணமும் அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி கேபியால் அனுப்பப்பட்ட சகலவிதமான ஆயுதங்களும்தான் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தப்பிவந்த போராளிகள் பலரிடம் கேளுங்கள் அவர்கள் உண்மை கூறுவார்கள். தமக்கு போதியளவு ஆயுதங்கள் வராதமையால்தான் தாம் தொடர்ந்து போரிட முடியாது தப்பவேண்டி வந்தது என்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்கள் கப்பலில் அனுப்பப்படுவதற்கும் கே.பி க்கும் எந்தஒரு ஈடுபாடும் தொடர்பும் ஒருபோதும் 1987ல் இருந்து(முதலாவது சோழன் கப்பல் வாங்கியதில் இருந்து) கிடையாது.

கே.பி ஒரு ஆயுததரகர் மட்டுமே.அவரின் தொடர்பால் கிடைக்கும் ஆயுதங்களை வாங்குவதற்கு முன்னர் சரிபார்ப்பதும் அதன் உதிரிப்பாகங்கள் திரும்பவும் வாங்குவதற்கு முடியுமா என்று ஆராய்வதும் வேறு வேறு பிரிவு.

அதைப்போல ஆயுதங்களை கப்பலில் ஏற்றுவதும் ஏற்றிய ஆயுதங்களை கொண்டுபோய் தமிழீழகடலுக்கு வெளியே 200மைல்களுக்கு அப்பால் தரித்துநிற்பதும் வேறுபிரிவு.

பின்னர் அந்த ஆயுதங்களை கப்பலில் இருந்து சிறுபடகுகளில் இறக்குவது வேறுபிரிவு.

கே.பி ஆயுதங்களை வாங்குவதற்கு மட்டுமே பொறுப்பாக இருந்தார்.

அந்தக்காலத்தில்கூட சிலகப்பல்கள் பிடிபட்டன.( கிட்டு வந்த 'அகத்',அதற்கு முன்னர் 'சீ கோர்ஸ் 2' என்hன)

இதற்கு எல்லாம் காரணம், தங்குதடையின்றி புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணமும் அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி கேபியால் அனுப்பப்பட்ட சகலவிதமான ஆயுதங்களும்தான் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தப்பிவந்த போராளிகள் பலரிடம் கேளுங்கள் அவர்கள் உண்மை கூறுவார்கள். தமக்கு போதியளவு ஆயுதங்கள் வராதமையால்தான் தாம் தொடர்ந்து போரிட முடியாது தப்பவேண்டி வந்தது என்கின்றனர்.

புலம் பெயர் தமிழர்களின் பணம் நேரடியாக KP யிடம் போய் ஆயுதங்களானது என்பது பொய்...!

KP க்கும் பல நாட்டு ஆயுத தரகர்கள் + புலனாய்வாளர்களுக்கும் தொடர்பு இருந்தது... அதன் மூலம் ஆயும் வாங்கவும் வேறு சில வேலைகளுக்கும் பயன் பட்டது... ஆனால் 2002 ம் ஆண்டின் இறுதியில் KP விலக்கப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்டதின் பின்னர் பல கப்பல்கள் இந்திய உளவு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டது என்பது உண்மைதான்...

தன்னை இடை நிறுத்திய கோபத்தில் KP யே ஏற்கனவே தொடர்பில் இருந்த இந்திய புலநாய்வாளர்களுக்கு கொடுத்த தகவலாகவே இப்போது எண்ண வேண்டி இருக்கிறது... இலங்கை அரசுடன் இணைந்து சர்வதேச ரீதியில் புலிகளின் செயற்பாடுகளை அழித்து அனைத்தையும் எடுத்து இலங்கை அரசிடம் கொடுப்பதும் தனது பெயரின் மாற்றும் நடவடிக்கைகளும் இதைத்தான் உணர்த்துகிறது...

Edited by தயா

விடுதலைப் புலிகளுக்கு முள்ளிவாய்க்கால் அவலம் வந்ததே கேபியிடம் இருந்து ஆயுதம் வாங்கி அனுப்பும் பணியை நிறுத்தியதால்தான் என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.

அவரை விலத்திய பின்னர் இந்த அனைத்துலகத் தொடர்பகத்தினால் உருப்படியாக ஆயுதக்கப்பல்களை அனுப்ப முடியவில்லை. எல்லாமே சிங்கள அரசின் தாக்குதல்களுக்கு இலக்காகி அழிந்தன.

மீண்டும் மீண்டும் நான் கேபி புகழ் பாடுவதாகவே பலர் நினைப்பீர்கள். ஆனால், உண்மைகள் பல இருக்கின்றன.

கேபியை எதிர்க்கின்றவர்கள் ஜெயசிக்குறு சமர் காலத்தில் அதாவது மூன்றாம் கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகள் எவ்வளவோ பாரிய தாக்குதல்களை நடத்தினர். உதாரணத்துக்கு பாரிய படைத்தளங்கள் அழிப்புத் தொடக்கம் எதிர்ச்சமர், முறியடிப்புச் சமர் என போரிட்டனர்.

இதற்கு எல்லாம் காரணம், தங்குதடையின்றி புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணமும் அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி கேபியால் அனுப்பப்பட்ட சகலவிதமான ஆயுதங்களும்தான் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தப்பிவந்த போராளிகள் பலரிடம் கேளுங்கள் அவர்கள் உண்மை கூறுவார்கள். தமக்கு போதியளவு ஆயுதங்கள் வராதமையால்தான் தாம் தொடர்ந்து போரிட முடியாது தப்பவேண்டி வந்தது என்கின்றனர்.

ஆயுதக்கப்பல்கள் பிடிபடுவதற்கு பல காரணங்கள் உண்டு

தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய காரணம். -1997 இல் இருந்த தொழில்நுட்பமும் 2007 இல் இருந்த தொழில்நுட்பமும் ஒன்றல்ல.

Edited by Subiththiran

தன் எழுச்சியான தமிழ்த்தேசிய உணர்வு பாரிஸ், லாச்சப்பலில்.

பிரெஞ்சுத்தலைநகர் பாரிசில் இருந்து சிவா சின்னப்பொடி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தாய்நிலம் எனப் பெயர்தாங்கி, புதிய வாரப்பத்திரிகை, ஒன்று வெளியாகி லாச்சப்பல் கடைகளில் விநியோகத்திற்கு வைக்கப்படடிருந்தது. அப்பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக விசனமடைந்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், தன் எழுச்சியடைந்து லாச்சப்பல் கடைகளிலிருந்த தாய்நிலம் பத்திரிகையை எடுத்துச்சென்று குப்பைத்தொட்டிகளில் போட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கு எதிரான தினமுரசு, துக்ளக் போன்ற வெளியீடுகளுக்கு நடந்தவற்றை நினைவூட்டுகின்றது. நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக இப் பத்திரிகை வெளியிடுவதாக சொல்லிக்கொண்டு, தமிழ் மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்கு இப்பத்திரிகை முயற்சிப்பதாக உணர்வாளர்கள் தமது கோபத்தை வெளியிட்டுச் சென்றதை கேட்கமுடிந்தது.

... ஒரு மனிதனுக்கு தனது கருத்தை கூட தெரிவிக்கும் சுதந்திரமில்லையா???? எது சரி/பிழை சொல்லாமல், ஏன் என்று உரிமையுடன் தட்டிக்கேட்காது விட்டதுகளின் அறுபடைகளே இன்றைய அழிவு! ... இன்னும் நாம் விட்ட தவறுகளை நிறுத்து சரி செய்யத்தவறுவோமாயின், உந்த புலத்தில் உணர்வாளர்கள் உவ்வாறு செய்யத்தான், புலத்தில் எமது இனம் இருக்கும்!

... இதுவரை தமிழ்த்தேசியம் எனும் பெயரில் புலத்தில் நடத்தப்பட்ட அட்டகாசங்கள் போதாதா????? ... காசு கேட்கப்போய், தர மறுத்தவனுக்கு குடும்பத்தை அங்கு கவனிக்கிறோம் என்றது! ... ஏதாவது சரி/பிழை சொன்னால், உதை நிறுத்தும் இல்லையேல் இராணுவ நடவடிக்கை உம்மேல் எடுப்போம், என்றது! .... உவற்றை விட ... இன்று எங்கு கொண்டு போய் முடித்திருக்கிறது, தெரியாதா?????

... இல்லை, இவர்கள் இன்று தமக்குள் பிடுங்குப்பட்டு, அல்லோலகல்லோலப்படுவதை விடவா சிவா சின்னப்பொடி செய்து போட்டார்???

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

இவர்கள் இன்று தமக்குள் பிடுங்குப்பட்டு, அல்லோலகல்லோலப்படுவதை விடவா சிவா சின்னப்பொடி செய்து போட்டார்???

சிவா சின்னப்பொடி, ஒரு அணியின் அங்கமாக இருந்து செயற்படுவதாகவே தெரிகின்றது.

Edited by aathirai

ஆதிரை! .... தன் எழுச்சியான தமிழ் தேசிய உணர்வு எனும் பெயரில் வன்முறைகளை, தூண்டி செயற்படுத்துவோருக்கான வக்காளத்தல்லா, நீங்கள் எழுதியது???!!! .... உங்கு பிரான்சில் கடந்த காலங்களில் தமிழ் தேசியம் எனும் போர்வையில் தம் இஸ்டங்களுக்கு உவ்வாறு தூண்டி செயற்பட்டவர்கள் இன்று .... கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!! உவைகள் தேவையா?????

சிவா சின்னப்பொடி பிழையான தகவல்களை வெளியிடுகிறார் என்றால் உங்களிடம் இல்லாத ஊடகங்களா?? பதிலளிக்க முடியாதா?????

  • தொடங்கியவர்

சிவா சின்னப்பொடி பிழையான தகவல்களை வெளியிடுகிறார் என்றால் உங்களிடம் இல்லாத ஊடகங்களா?? பதிலளிக்க முடியாதா?????

உண்மையில் என்னிடம் எந்த ஊடகமும் இல்லை..

எல்லோரையும் அணி, அணியாக சிந்திக்கவேண்டாம், என்னுடைய கருத்தைப் பதிவு செய்கின்றேன்.

Edited by aathirai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.