Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கே யாரு முட்டாள்? மகிந்தவா?.. இல்லை நாங்களா?

Featured Replies

Aljazeera interview with Mahinda. இங்கே யாரு முட்டாள்? மகிந்தவா?.. இல்லை நாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மிகவும் அறிவுபூர்வமாகக் கேள்விகளைக் கேட்ட பெண்மணியை அல்லது கேட்க வைத்த அவரின் மேலதிகாரியை அறிவாளி என்று சொல்லலாம்.

ராஜபக்ச தான் சொல்வதெல்லாம் உண்மை என்ற தொனியில் பல பொய்களை அவிழ்து விட்டிருக்கின்றார்.

ஆகவே அவ்ர் தான் முட்டாள்.

வாத்தியார்

..................

நிச்சியம்மாக இவ் உலகம் தான். மனித குற்றத்தின ஆதாரம் கடல் அளவு இருந்தும், ஒன்றும் உருப்படியாக இல்லை. இன்றைய உலகத்தில் கடவுள் கூட குருடன், செவிடனாகி விட்டார். ஆனாலும் உறங்கிவிடப்போவதில்லை, தொடர்ந்து முயற்சிப்போம்.

இப்பெண்மணி இலங்கையராயின் காணாமல் போயிருப்பார் நேர்காணல் முடிய முன்னரே :D

நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட காணொளி ஆவணம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

நிருபர் கேட்ட கேள்விகளுக்கு மஹிந்த பல இடங்களில் தகுந்த பதில் கொடுக்க முடியாமல்......

சொற்களை தேடுவதிலும்,முழிகளை பிரட்டுவதிலும், அக்கம் பக்கம் நிற்கும் உதவியாளர்களையோ, பாதுகாவலர்களையோ பார்ப்பதிலும் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

நிருபர் வலு கூலாக....... காலுக்கு மேல் கால் போட்டு, கேள்விகளை கேட்டதன் மூலம் மகிந்தவை திணறடித்துள்ளார்.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

போரின்போது சிறிலங்கா இராணுவம் ஒரு பொதுமகனைக்கூட கொல்லவில்லை: அல் ஜஸீராவுக்கு மகிந்த தெரிவிப்பு“

சிறிலங்கா இராணுவம் போரின்போது பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை. அவ்வாறு கொலை செய்திருந்தால் மூன்று லட்சம் மக்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்திருக்கமாட்டார்கள். மக்கள் அனைவரும் இராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்தார்கள்” – என்று சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அல் ஜஸீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் எதனையும் புரியவில்லை. நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்திருக்கிறது. அவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக – சர்வதேச சமூகம் கூறுவதைப்போல – எவர் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது. நிச்சயமாக அதற்கு நான் அனுமதிக்கமாட்டேன் என்றும் மகிந்த தனது செவ்வியில் கூறியிருக்கிறார்.

சிறிலங்கா இராணுவத்தினர் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றால் அரசு ஏன் விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது என்று செய்தியாளர் கேட்டபோது – அது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம் என்றும் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை தான் விரும்பவில்லை என்றும் மகிந்த கூறியுள்ளார்.

அப்படியானால், அந்த விசாரணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யுமா என்று கேட்டதற்கு – அது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை செய்யும் என்று மகிந்த தெரிவித்தார்.

இந்த விசாரணைக்குழுவின் செயற்பாடு எவ்வளவு தூரம் வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையாகவும் இருக்கும் என்று கேட்டதற்கு உடனடியாக குறுக்கிட்ட மகிந்த – இந்த கேள்வியை நீங்கள் அமெரிக்காவிடமோ பிரிட்டனிடமோ கேட்டீர்களா? ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் என்ன செய்தீர்கள் என்று நீங்கள் அவர்களை கேட்டீர்களா? அவர்களால் செய்யமுடியாததை நாம் செய்திருக்கிறோம். ஆம். பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் – என்றார்.

போர் முடிவுற்று இவ்வளவு காலமான பின்னரும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தீர்த்துவைக்கப்படவில்லை என்று கூறப்படும் கருத்து குறித்து கேட்டதற்கு – இது அரச சார்பற்ற அமைப்புக்களும் அரசியல்வாதிகள் சிலரும் தெரிவிக்கும் கருத்துக்கள். முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களை கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள். எனது வீடு எனக்கு மீண்டும் வேண்டும். எனது பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும். அவற்றை தவிர வேறு எதனையும் அவர்கள் கேட்கமாட்டார்கள். ஆகவே. அவர்களை முதலில் மீள்குடியமர்த்தவேண்டும். அவர்களுக்குரிய வசதிகளை வழங்கவேண்டும். அதன்பின்னர், அவர்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றுக்கும் மாகாணசபைக்கும் தெரிவுசெய்யலாம். அந்த பிரதிநிதிகளுடன் நாம் பேசலாம்.

கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிவந்தவர்கள். பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளே ஆவர். அவர்கள் தற்போது யதார்த்தத்தை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் அரசை நம்பவேண்டும். நாங்கள் அவர்களை நம்புகின்றோம். அரசுக்குள்ள பிரச்சினைகளை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். சமரசத்தின் ஊடாகவே தீர்வினை காணமுடியும் – என்றார் மகிந்த.

தமிழ் மக்களுக்கு எதுவுமே நீங்கள் செய்யவில்லை என்று புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு இங்கு என்ன நடைபெறுகிறது எதுவும் தெரியாது. அவர்களுக்கு இங்கு வருவதற்கு விருப்பமில்லை. தமது சுகபோகங்களை அனுபவித்துவருகிறார்கள். அவ்வாறு இங்கு வந்தாலும் கொழும்புக்கு அப்பால் செல்வதில்லை. வட பகுதிக்கு சென்றிருக்கமாட்டார்கள். அந்த மக்களுடன் பேசியிருக்கமாட்டார்கள். நான் இன்று சாதாரண மனிதனாக யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மக்களுடன் பேசுகிறேன – என்று கூறினார் மகிந்த.

உங்களது குடும்பத்தினர் 300 க்கும் அதிகமான முக்கிய அரச பதவிகளில் உள்ளார்களே என்று கேட்ட கேள்விக்கு மகிந்த பதிலளிக்கையில் – உங்களுக்கு யார் இந்த எண்ணிக்கையை தந்தது. நான் உங்களுக்கு ஒரு விடயத்தை கூறுகிறேன். இந்த நாடு முழுவதும் எனக்கு சொந்தம். அங்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் யாவரும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்கள் – என்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரா என்று கேட்டதற்கு – அவர் எனது சகோதரர். அவரை நான் நம்புகிறேன். அதனால் அவரை நான் அந்த பதவியில் நியமித்தேன் – என்றார் மகிந்த. அப்படியானால், அவர் ஒருவர்தான் குடும்பத்தில் உங்களது நம்பிக்கைக்கு பாத்திரமனவரா என்று கேட்டதற்கு – இல்லை. அப்படியென்றில்லை. அவர் அந்த பதவிக்கு தகுதியானவரும்கூட என்றார் மகிந்த.

- புதினம் -

.

  • கருத்துக்கள உறவுகள்

:D சிங்களவனை முட்டாள் என்று நினைத்த நாங்கள் எல்லோரும் தான் முட்டாள்கள். அவன் தனது சாதுரியத்தால் உலக நாடுகளை எல்லாம் வளைத்துக்கொண்டு எங்களை அழித்துக் கொண்டிருக்கிறான். நாம் வீரம் பேசியே காலத்தை வீணடித்தோம்.

அவன் இந்தச் செவ்வியில் திணறுவது உண்மையாக இருந்தாலும் இந்த உலகு அவன் சொல்வதை நம்பிக்கொண்டுதானே இருக்கிறது? நாளுக்கொரு பலிக்கள வீடியோ வந்துகொண்டிருக்கிறது, ஆனாலும் இந்த உலகும் சர்வதேச ஜாம்பவான்களும் என்ன மயிரைப் புடுங்கினார்கள் இதுவரையில்?

இந்த லட்சணத்தில் நாங்கள் யார் முட்டாள் என்று வியாக்கியாணம் வேறு??

லட்சக்கணக்கில் எம்மக்களைப் பலிகொடுத்தும் நாம் இன்னும் எமக்குள் அடிபட்டு பலநூறு கூறுகளாகப் பிரிந்து கொண்டே போகிறோம்.நாம் இனியாவது ஒன்றுசேரவேண்டுமென்கிற யதார்த்த பூர்வ அறிவுகூட எம்மிடமில்லை.

இப்போது சொல்லுங்கள், யார் முட்டாள்? எம்மை அழித்தும் "பயங்கரவாதத்தி அழித்துக் காட்டினேன்" என்று சொல்கிற மகிந்த முட்டாளா அல்லது அவனால் அழிக்கப்பட்ட பின்னரும் எந்தவித சுரணையுமில்லாமல் ஆளையாள் குற்றம் சொல்லிக் கூறுபோடும் நாம் முட்டாள்களா??

நாங்கள்தான் முட்டாள்கள். மகிந்த எங்கள அழிச்சதிலயும் இனி அழிக்கிறதிலையும் நல்ல தெளிவா உசாரா இருக்கிறார். நாங்கள்தான் இனி எப்படி எங்களக் காப்பாற்றிக்கொள்ளிறது என்னசெய்யிறது எண்டதில தெளிவில்லாம உசாரில்லாமல் இருக்கிறம்.

எங்கட தலைவர்களும் நாங்க என்னசெய்யவேணும் எண்டு சொல்லுகினம் இல்ல. நாடுகடந்த அரசாங்கம் எண்டு ஒரு நகர்வெடுத்தாலும் அதையும் உடைக்க கங்கணம்கட்டிக்கொண்டு அலையினம்.

மகிந்தவுடன் சேர்ந்து எங்கட புலம்பெயர் லைகள்தான் எங்கள முட்டாள்களாக்கி வரு

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை....

ஆயிரம் கமெராக்கள் சுத்தி நின்று சாட்சி எடுத்துக்கொண்டிருக்க.....

இத்தனை கொலை செய்து தமிழர்களின் விடுதலையை அடுத்த தீவிர கட்டத்துக்கும் உலக கண்ணோட்டத்துக்கும் தள்ளியது முட்டாள்தனம்தானே....

ஆனால் அதை நாம் எந்தளவுக்கு பாவித்தோம்

அல்லது முன்னோக்கி நகர்த்தினோம்

எனவே

இவ்வளவு முட்டாள்தனங்களைச்செய்தும் அவன் நிமிர்ந்து நிற்க .......

நாம் எமக்குள் பிய்த்துக்கொள்வதைத்தவிர வேறு ஏதும் செய்யாத...

அதைவிட வடிகட்டிய முட்டாள்கள்

கருணாநிதியிடம் அரசியல் பாடம் எடுத்துவிட்டார் போலிருக்கு.இவர்கள் இப்படித்தான் கதைப்பார்கள்.

நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதே மில்லியன் டொலர் கேள்வி?

மகிந்தாவின் நேர்கணலுக்கு முன் வந்த காட்சிகள் தான் கண்ணுக்குள் நிற்கின்றது.முழுப் பழியும் எம் மீது தான்.

ஒன்றல்ல,இரண்டல்ல,மூன்றல்ல 32 நாடுகள் தடை செய்திருந்ததாம் என்றுதான் அறிமுகம்.நாங்கள் இன்னமும் திருந்த மாட்டோம்.கொடியில் என்ன மாற்றம் செய்வது என கூடியிருந்து கதைத்துவிட்டு போகப் போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.