Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைஞர்களாக மாறிவரும் கலைஞர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞர்களாக மாறிவரும் கலைஞர்களா?

கலைஞர்களாக மாறிவரும் கொலைஞர்களா?

மனித உருவில் நடமாடும் மிருகங்கள் வாழும் பிரதேசங்களாக புலம்பெயர் நாடுகள் மாறிவரும் நிலைகண்டு சர்வதேச தமிழினமே சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளது. தாயகத்திலேதான் சிங்களவன் தமிழினத்தை நேரடியாகாத் தன்னை எதிரியாக இனம் காட்டிக்கொண்டு அழித்தொழிக்கின்றான் என்றால், புலம்பெயர் தேசங்களில் சொந்த உறவுகள், நட்புகளையே உறவாடிக் கொலைசெய்து வரும் ஒருசில உழுத்துப்போன ஊதாரிகளைப்பற்றி எபப்டித் தான் சொல்வதென்றே தெரியவில்லை.

மேற்படி சம்பவங்களின் உச்சக்கட்டமாகக் கடந்த வாரம் பாரிஸின் புறநகர்ப் பகுதியான ட்றான்சி என்னுமிடத்தில் இலக்கிய ஆர்வலரும், புதிய சிந்தனைகொண்ட படைப்பாளியும், சிறந்த மேடைப் பேச்சாளரும், குறும்பட, நாடக இயக்குனர், நடிகர் எனப் பல தளங்களின் முன்நிலை வகித்துக்கொண்டிருந்த ரமேஸ் சிவரூபன் என அழைக்கப்படும் ஓர் உன்னதமான படைப்பாளி அவருடன் சேர்ந்து பழகிய நண்பர்களினாலேயே கலைப்படைப்புக்களில் ஏற்பட்ட போட்டி விரோதம் காரணமாக அடித்துப் பலமான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, வைத்திய சிகிச்சைகள் பலனளிக்காமல் 02.06.2010 செவ்வாய்க்கிழமை மரணத்தைத் தழுவி யுள்ளார்.

இதில் கொலையாளியான கலைஞர், மேற்படி நிகழ்வினை நடத்திய பின்னரும் சாதாரணமாக எல்லோருடனும் எப்போதும் போல் பழகியதுடன், பல கலை நிகழ்வுகளிலும் பார்வையாள னாகப் பங்கேற்றுக்கொண்டு திரிந்தமை பாரிஸ் நகரில் பெரும் ஆச்சரியத் தையும், ஓர் ஆபத்தான உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போன்ற பலர் இன்று சர்வதேசங்களிலும் வாழும் தமிழர்களிடையே நடமாடிக் கொண்டிருப்பதையும், அவர்களின் ஒரு சில நடவடிக்கைகள் அவர்களை யார் என்று வெளிக்கண்டுகொள்ளக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தங்கள் சுயநலங்களுக்காக உடன்சேர்ந்து பழகும் நண்பர்களையும் உறவுகளையும் கண்டபடி வசைபாடுவதும் வஞ்சம் தீர்க்கத் தருணம் பார்த்து தங்கள் கைவரிகையைக் காட்டுவதும் இந்தக் கலைஞர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் என்றெல்லாம் தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்டு, தங்கள் தகுதிக்க மேலான உயர்வான இடங்களை நிரப்பிக்கொண்டு திரியும் ஒருசில கோடாரிக் காம்புகளை உரிய முறையில் இனம்கண்டுகொள்ள வேண்டும். அந்தக் கொலைஞர்களை ஓரம்கட்டி ஒதுக்கி வைத்து, சமூக ஒழுங்கு, நீதி, நிலையான அமைதி, எதிர்கால சந்ததியின் ஒயர்வான வளர்ச்சி என்பவற்றைப் பேணிப் பாதுகாக்க ஆவன செய்யச் சர்வதேச தமிழினம் விழிப்புடன் செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

-நக்கீரன்-

எனக்கு ஈ மெயிலில் வந்த செய்தியை இங்கு இணைத்துள்ளேன்

பிழை எனில் நீக்கிவிடவும்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டவரது படம்

RAMESH-0011.pdf

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞர்களாக மாறிவரும் கலைஞர்களா?

கலைஞர்களாக மாறிவரும் கொலைஞர்களா?

மனித உருவில் நடமாடும் மிருகங்கள் வாழும் பிரதேசங்களாக புலம்பெயர் நாடுகள் மாறிவரும் நிலைகண்டு சர்வதேச தமிழினமே சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளது. தாயகத்திலேதான் சிங்களவன் தமிழினத்தை நேரடியாகாத் தன்னை எதிரியாக இனம் காட்டிக்கொண்டு அழித்தொழிக்கின்றான் என்றால், புலம்பெயர் தேசங்களில் சொந்த உறவுகள், நட்புகளையே உறவாடிக் கொலைசெய்து வரும் ஒருசில உழுத்துப்போன ஊதாரிகளைப்பற்றி எபப்டித் தான் சொல்வதென்றே தெரியவில்லை.

இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போன்ற பலர் இன்று சர்வதேசங்களிலும் வாழும் தமிழர்களிடையே நடமாடிக் கொண்டிருப்பதையும், அவர்களின் ஒரு சில நடவடிக்கைகள் அவர்களை யார் என்று வெளிக்கண்டுகொள்ளக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தங்கள் சுயநலங்களுக்காக உடன்சேர்ந்து பழகும் நண்பர்களையும் உறவுகளையும் கண்டபடி வசைபாடுவதும் வஞ்சம் தீர்க்கத் தருணம் பார்த்து தங்கள் கைவரிகையைக் காட்டுவதும் இந்தக் கலைஞர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் என்றெல்லாம் தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்டு, தங்கள் தகுதிக்க மேலான உயர்வான இடங்களை நிரப்பிக்கொண்டு திரியும் ஒருசில கோடாரிக் காம்புகளை உரிய முறையில் இனம்கண்டுகொள்ள வேண்டும். அந்தக் கொலைஞர்களை ஓரம்கட்டி ஒதுக்கி வைத்து, சமூக ஒழுங்கு, நீதி, நிலையான அமைதி, எதிர்கால சந்ததியின் ஒயர்வான வளர்ச்சி என்பவற்றைப் பேணிப் பாதுகாக்க ஆவன செய்யச் சர்வதேச தமிழினம் விழிப்புடன் செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

-நக்கீரன்-

எனக்கு ஈ மெயிலில் வந்த செய்தியை இங்கு இணைத்துள்ளேன்

பிழை எனில் நீக்கிவிடவும்

நன்றி

இணைப்புக்கு நன்றி. இதுபோல் பலர் எம்மிடையே உலவுகின்றனர் என்னபது மிகச் சரியானது. ஒரு உதாரணத்துக்கு யேர்மனியில் கவனித்த விடயமொன்றை சுட்டுவது பொருத்தமாகும். 2009 மே19 அன்று துணையமைப்பொன்றின் கிளையினது நிர்வாகி அவருக்கு நெருக்கமான மூவருடன் அவர் உரையாடிய விடையம், அங்கை எல்லாம் சரி! இனி நாங்கள் இதுகளை எங்கடை கையுக்கை வைச்சிருக்க வேணும். உவங்களை எட்டத்தை வெச்சிருக்க வேணும். இப்படித்தான் பலர் எம்மோடு இருக்கிறார்கள் நாமறியாமலே. "என் இனத்தின் போக்கு கண்டு பயம் கொள்கின்றேன் ஐயா....இதை நீங்களோ நானோ தீர்த்துவிடமுடியாது. பிரபாகரன்கள் வரணும்ஐயா! " என்று திண்ணையில் கொட்டிய ஆதங்கம் யதார்த்தமானதே.ஆனால் நாமும் இதுபொன்ற இழிசெயல் புரிவோரையும்,ஆதவனால் கட்டி வளர்க்கப்பட்ட அமைப்புகளை சிதைப்போரை மக்களுக்கு இனங்காட்டடித் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கத் துணிவுடன் இவர்கள் போன்றோரை இனம் காட்டுவது அவசியமானதே.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எண்ண விசாலம் இல்லாதவர்கள் கையில் எழுத்தாணி இராச்சியம் இருப்பது எவ்வளவு பாதிப்பானதோ அதே போன்றே கலைஞர்களின் குறுகிய மனப்பான்மை, தம்மைத் தாமே முன்னிலைப் படுத்தல், தமக்குள் மாத்திரமே அதிகாரங்களை கொண்டிருத்தல், பரந்தளவில் அரவணைப்புகளை மேற்கொள்ளாது தத்தம் சுயத்தை வளர்க்க மட்டுமே சந்தர்ப்பங்களை வளர்த்துக் கொள்ளுதல் என பலவகையாக எம்மினம் சில சுயநலமிகளால் சூரையாடப்பட்டுக்கொண்டு இருப்பது இன்று நேற்றல்ல... தொடர்கதைதானே. :wub:

"ரமேஸ் சிவரூபன்" எனப்படுகின்ற பெயரை கூகிழில் தேடல் செய்து பார்த்தபோது மேற்கண்ட செய்தி குழப்பத்தை தருகின்றது. விசுகு அண்ணை நீங்கள் பிரான்சில் தானே இருக்கிறீங்கள் செய்தியை உறுதிப்படுத்தியபின் இணைக்கலாமே.

கூகிழ் தேடலில் வந்தவை:

ரமேஸ் சிவரூபன் என்பவரால் அண்மையில் எழுதப்பட்ட ஓர் கட்டுரை. இவரும் பிரான்சில்தான் இருக்கவேண்டும். கிருபன் அவர்கள் இந்த கட்டுரையை முன்பு யாழில் இணைத்து இருந்தார்.

இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன்.

புலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒருஅன்றாடநிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல. மிக அண்மையில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற வன்முறை நிகழ்வொன்றில் 16 வயதேயான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். இது ஒரு வழமையான நிகழ்வு எனபது போல் பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களின் ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஆங்காங்கே எரியுட்டப்பட்ட நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுகாலப்போக்கில் அவை சாதாரண நிகழ்வுகளாகின.இவை இலங்கைப்படைகளால் நிகழ்த்தப்பட்டன. பின்னர் யாழ் குடாப்பிரதேசத்தில்இருந்து அனைத்து விடுதலை இயக்கங்களாலும் இராணுவம் விரட்டியடிக்கப்பட்டபின் இயக்க உள் முரண்பாடுகளால் மின்கம்பத்தில் பிணங்கள் தொங்கின. அவையும் சாதாரணமாகிப்போயின. எண்பத்து மூன்றுகளின் பின்னான புலப்பெயர்வு அதிகரிப்பின் பின்னர் புலம்பெயர்தேசங்களில் எம்மவர்கள் கடுமையான தொழிலாளிகளாகவே அத்தேசங்களில் அறியப்பட்டார்கள். இக் கால கட்டங்களில் யாழ்ப்பாணத்தின் மிக இறுக்கமான சாதி முரண்பாடுகளும் இவர்களிடையே அதிகம் தலை தூக்கியிருக்கவில்லை. கடுமையான உழைப்பின் பெறுமானங்களால் தங்களது மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரிகள் என இவர்களை புலத்துக்கு அழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோது பல்வேறு நாடுகளில் ஆண்டுக்கணக்கில்மாதக்கணக்கில் தங்கியிருந்து பிரயாண முகவர்களால் சீரழிக்கப் பட்டு ஒரு தலைமுறை புலத்துள் புகுந்த போது அது ஈழத்தின் வன்முறையின் எச்சங்களையும் காவி வந்து ஆங்காங்கே பதியனிட்டுக்கொண்டது.

ஆரம்பப் புலப்பெயர்தமிழர்கள் தங்குவதற்கு போக்கிடமின்றியும் மொழிப்புரிதலின்மை காரணமாகவும் ஒருவரையொருவர் இறுகப்பற்றியிருக்க வேண்டிய தேவை இருந்தது. அப்போது சாதி, பிரதேச வேறுபாடுகள் ஓடியொழித்துக்கொண்டன. ஆனால் தொண்ணூறுகளுக்குப் பின்னர் வருகை தந்தவர்களுக்கு வதிவிடப்பிரச்சினையோ மொழி பெயர்ப்புப்பிரச்சினையோ இருக்கவில்லை. (இதற்குள் பிரான்சில் பிரெஞ்சு மொழி தெரியாத இலங்கைத்தமிழர்களிடம் பிரெஞ்சுக் கொலனியவாசிகளான பாண்டிச்சேரித்தமிழர்கள் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுகின்றோம், உதவி புரிகின்றோம் என்கின்ற போர்வையில் ஈழத்தமிழரின் கடின உழைப்பின்பலன்களை மனிதாபிமானமின்றி மிக இலகுவாகத் திருடியும் கொழுத்தார்கள்.) பிற்காலப்புலப் பெயர்வாளர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை தேட வேண்டியது அவசியம் என்கின்ற நிலமையும் இருக்கவில்லை. அவர்களைத் தாங்குவதற்கு தந்தையோ சகோதரனோ இருந்தார். எனவே அவர்களுக்கான ஓய்வு நேரங்களும் ஒருவரையொருவர் சந்திக்கும்திறனும் அதிகரித்தன. புலப்பாடசாலைகளுக்குப்படிக்கப்போன இளைஞர்களுக்கு அப்பாடசாலைகளின்நெகிழ்வுத் தன்மைகள் ஆச்சரியங்களைக்கொடுத்தது.

இலங்கைப்பாடசாலைகளில் கடுமையான ஒடுக்குதல்களுக்குள் கல்வியைப் பெற்றவர்களும் ஆயுத வன்முறைகளுக்கு இடையில் கல்வியைத் தொலைத்தவர்களும் புலம்பெயர் பயண இடைநடுவில் பல்வேறு நாடுகளில் தங்கியிருக்க நேர்ந்ததனால்கல்வியை இடை நிறுத்தியதன்பின்னர் அந் நாடுகளுக்குள் புகுந்த பின் திரும்பவும்பாடசாலைகளுக்குள் புகுந்தவர்களுக்கு மேற்கத்தைய நாடுகளின்பாடசாலைகள்அளித்த சுதந்திர நடவடிக்கைகளும் அவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தினைத் தடுத்து அந்தச் சுதந்திரங்களை தமது வயதுக் கேற்ற வழிகளில் எவ்வாறு செயற்படலாம் என்ற தோற்றுவாயையே ஏற்படுத்தியது. மொழி புரியாத பெற்றோரினால் பிள்ளைகளைச் சரியான கல்வியின் வழியில் கொண்டு செலுத்தவும் முடியவியல்லை.இயக்கங்களின் குழு வன்முறைகளைப் பிரதியெடுத்தவர்களாக இத்தேசங்களுக்குள் புகுந்தவர்கள் இங்கும் குழுக்களாகப் பிரிந்து கொண்டு தமது வன்முறைகளுக்கு வடிகால் தேடத் தொடங்கினார்கள்.

சாதிவாரியான, பிரதேசவாரியான வன்முறைகளும்வெடிக்கத்தொடங்கின. ஆரம்ப காலங்களில் சாதியை ஒளித்து வைத்தவர்களும் இப்போது வசதி வந்து விட்ட தைரியத்தில் புலத்தில் தமது புதிய சந்தததிகளுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கவும் சாதியக் குப்பையான இந்துவத்தினைப் பேணுவதற்கான ஆலயங்களை அமைப்பதற்கும் தொடங்கினார்கள்.

இது மட்டுமல்லாது தாராளமான மது, போதை மருந்துகளின் பாவனைகளும் அதிகரித்துக்கொண்டது. தேடுதல் குறித்த பிரக்iஞைகளற்ற பொருளாதாரத் தேடுதலையே குறிக்கோளாகக்கொண்ட பெற்றோர். தமக்குக்கிடைத்த சுதந்திரத்தை மட்டுமே பற்றிக்கொண்ட இளம்சந்ததி. புலம் பெயர் தமிழர்களின் பொருளாதாரச் செழிப்புக்களில் கண்வைத்துக்கொண்ட மதவாத அமைப்புக்கள் இவற்றுக்கிடையே இளைஞர் வன்முறை இன்று தலைவிரித்தாடுகின்றது. இதனை ஒளிப்பதற்கும் சீர்படுத்துவதற்கும் வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களுடன் சரியான உறவுகளைப் பேணி அவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் யாரும் ஈடுபட முன்வரவில்லை.

நான் எல்லா இளம்சந்ததிகளையும் குற்றம்சொல்லவரலில்லை புதிய தேசங்களில் பதியனிட்டுக் கொண்டு சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளும் ஏராளம்தான். ஆனால் ஒரு குடம் பாலுக்கு ஒருதுளி விசம் என்பது போலசிலரின்நடவடிக்கைகள் முழுமையான தமிழ்ச் சமூகத்தையும் சக சமூகங்கள் வன்முறையாளராகவே பார்க்கும் நிலைக்குத் தள்ளுகின்றது. திரைப்படங்கள் என்கின்ற போர்வையில் இந்தியத்திரை அட்டைக்கத்தி வீரர்களுக்கு இரசிகர்களாகி விடுகின்றவர்கள் இங்கு நிஜக் கத்திகளைத் தூக்கிக் கொண்டு தமக்கிடையே செய்யும்கொடூரமான தாக்குதல்களைக்கண்டு மேலைத்தேயக் காவற்துறையினரே மிரண்டு போயுள்ளனர். தங்கள் காதலிகளுக்கான தாக்குதல்கள், தங்களைக் காதலிக்க மறுக்கும் பெண்கள்மீதான தாக்குதல்கள் என புலம்பெயர் இளஞ்சமூகம் வன்முறைப்பரம்பல்களை விரித்துக்கொண்டே போகிறது.

நான்சொல்ல வந்த விடயத்தைச்சொல்லி விடுகின்றேன். அண்மையில் மரண நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது புலம்பெயர் படைப்பாளிகள் கலைஞர்களையும் அங்கு அதிகமாகக் காண முடிந்தது. அப்போது இக்கட்டுரையின்மேலே நான் குறிப்பிட இளைஞனின் மரணம் தொடர்பாகவும் நாங்கள் கதைத்துக்கொண்டோம். அப்போது குறித்த மூத்த முற்போக்குப் பெண் படைப்பாளியொருவர் “இந்த வன்முறைகளில் அவனுகள்தான் ஈடுபடுகின்றானுகள். நானென்ன பனை மரத்தை இஞ்சை கொண்டு வந்து நட்டு அதிலை கள்ளுச்சீவியோ என்ரை பிள்ளையளுக்கு இதுகளை விளங்கப்படுத்த முடியும். பேசாமல் பாரிசை விட்டு எங்காவது தொலைதூரத்துக்கு பிரெஞ்சுக்காறரின்ரை ஏரியாவுக்கு என்ரை பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு போகப் போறேன். இதுக்கு அம்மா பகவான் ஆசி புரிய வேண்டும்” என நெக்குருகினார். மறு கிழமை வெளிவந்த தென்னிந்தியத்தமிழ்ச் சஞ்சிகையொன்றில் அம்மா பகவான் என அழைக்கப்படும் கல்கி சாமியாரின் பித்தலாட்டங்கள் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டிருந்தும் நித்தியானந்தரின் லீலைகளுக்கு மத்தியில் அச்செய்தி பெரிதாக எடுபடவேயில்லை. ஆந்த முற்போக்குப்படைப்பாளி இங்குள்ள அம்மாபகவானின் முகவராகவும்அவரது சக தோழியான இன்னொரு கவிஞரான பெண்மணி பங்காரு என அழைக்கப்படும் செவ்வாடைச்சாமியின்முகவராகவும் செயற்படுகின்றனராம். இங்கே யாருக்கு உளவியல் மருத்துவம் தேவையென்ற கேள்வி எனக்குள் எழுந்தது. சில வேளைகளில் எனக்குத்தான் தேவையென மேற்படி படைப்பாளிகள் இக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் சிபார்சு செய்வார்கள்!

மூலம்: http://inioru.com/?p=11602

கண்ணீர் அஞ்சலி: சபாரட்ணம் சுரேந்திரன் (தோழர்)

சபாரட்ணம் சுரேந்திரன் (தோழர்)

2003ம் ஆண்டிலிருந்து இறுதிவரை வான்மதி பிரெஞ்சு தமிழ் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயற்பட்ட தோழர் சுரேந்திரன் அவர்கள் திரைப்பட நாடகக் கலைஞன் கவிஞன் மேடைப் பேச்சாளர் வானொலி அறிவிப்பாளர் எனப் பல்வேறு துறைகளிலும் செயற்பட்டவர். இடதுசாரிச் சிந்தனைகளினால் கவரப்பட்டு தோழர் ஆனவர். புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டுக்குள் அடைக்கலம் கோரி வந்த எம் தமிழ் உறவுகளின் வதிவிட அனுமதிகளுக்காகவும் செயற்பட்டவர்.ஆரம்ப காலங்களில் பிரான்சில் தமிழர்களை ஒன்றுபடுத்தி தமிழர்களுடைய பிரச்சினைகளை உலகத்துக்குத் தெரியப்படுத்தவும் முனைந்தவர்களில் ஒருவர்.கலைஞன் மரணித்துப் போவதில்லை உடலை மட்டும் மறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருப்பான். அவ்வாறே தோழர் சுரேந்திரன் அவர்களும். அவரது இழப்பால் துயருறும் அனைவருடனும் கரம் கோர்த்துக் கொள்கின்றோம். ஆறுதலுக்காய் இறைஞ்சுகின்றோம். தேசத்தின் விடுதலை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் அவரிடம் இருந்தன. ஆனால் தன்னை உண்மையியல் பேசாது மறைத்துக் கொண்டார். ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த பல நுண்ணிய தகவல்களை தனது அறிவு நுகர்தலின் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டாலும் , சில முக்கியமான விடயங்களை முழுங்கிக் கொண்டார்.தனது சுயநலம் கருதி மறைத்துக் கொண்டாரா? ஆனால் இப்போது பலராலும் இவரது பெயர் மூலம் அவர்களது அரசியல் கருத்துக்களும் பொய்ப் புனைவுகளும் அரங்கத்துக்கு கொண்டு வருவதான ஆபத்துக்களும் உள்ளன. ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் இனியவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. அவரை முன்வைத்து அரசியல் பேசுபவர்கள் குறித்து எச்சரிக்கை கோருகின்றோம். அவர் தோழர். அவரிடம் வயது வேறுபாடுகள் கிடையாது. யாருடனும் இணைந்து செயற்படுவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. அவ்வாறே எம்முடனும் இளைஞர்களாக இருந்த போதும் இணைந்து கொண்டார். ஆனால் அவரது பிற்கால அரசியல் நிலமைகள் குறித்த பல்வேறு விமர்சனங்களும் அவரது செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களும் எழுவதில் வியப்பில்லை. மக்களரங்குகளுக்கு வந்தவர்கள் புகழடைந்தாலும் அவர்களுக்கான கேள்விகளும் மறுதலிக்க முடியாதவை.

சுரேந்திரன் அண்ணா

ஏன் மௌனித்துக் கொண்டாய்

வலிந்து மரணப் புழுதிக்குள் ஏன் புதைந்து கொண்டாய்

நகைச்சுவையும் சிலேடையும் கலந்த உன் பேச்சை

மறுதலித்துப் போனது எதற்காக

உன்னால் வாழ்ந்தவர்கள் பலர்

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் -அனைவரையும்

கலங்கச் செய்ததுமேனோ

கண்ணீரில் கரைத்தது ஏனோ

தோழர் என அழைக்கப்பட்டாய் – அனைவருடனும்

தோள் தழுவிச் செயற்பட்டாய்

கலை இலக்கியம் மேடைப் பேச்சு

எங்கும் உன் உருவமும் உரத்த குரலும் பெரிதல்லவா

கால இருள் உனை மறைத்தாலும் – உன்

ஆடிய கால்களையும் பாடிய குரலையும் எப்படி மறப்போம்

மரணம் உன்னை மறைத்து விட முடியாது

தீ உன் உடலைத் தின்றாலும்

எம் உள்ளங்களில் வாழ்வாய்.

ரமேஸ் சிவரூபன்

தலைவர்

”வான்மதி” – பிரெஞ்சு தமிழ் கலாச்சார நட்புறவுக் கழகம் – பிரான்ஸ்

மூலம்: http://webcache.googleusercontent.com/search?q=cache:DVDIQZKA-fAJ:www.alandlosi.com/upnet/browse.php%3Fu%3DOi8vaW5pb3J1LmNvbS8%252FcD0xMTA3Mw%253D%253D%26b%3D13+%22%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%22&cd=16&hl=en&ct=clnk&gl=ca

பரதேசிகளின் பாடல்கள்

Submitted by snegethy on வியாழன், 26 ஒக்ரோபர் 2006

சிறிதாயினும் கனதியான கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக ‘பரதேசிகளின் பாடல்கள்’ இருப்பதனை சுட்டிக்காட்டிய ரமேஸ் சிவரூபன் தனக்குப் பிடித்துப்போன கவிதைவரிகளையும் வாசித்து வெளிப்படுத்தினார்.

மூலம்: http://webcache.googleusercontent.com/search?q=cache:4FDuwshiDyAJ:www.4th-tamil.com/appaal/%3Fp%3D85+%22%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%22&cd=15&hl=en&ct=clnk&gl=ca

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிடைத்த செய்தி ஒன்றை அப்படியே இணைத்தேன் மச்சான்

அதைத்தவிர எனது எந்த கருத்தையோ அதற்கான காரணங்களையோ நான் புகுத்தவில்லை

விரும்பவும் இல்லை.

ஆனால் இவர் பற்றிய எனது பார்வை வேறானது.

ஆனால் அது இங்கு தேவையல்ல.

காலம் வரும்போது....

தேவை வருமாயின் நிச்சயம் எழுதுவேன்

சாதாரணமாக தங்களுக்கு இவரை அறிமுகப்படுத்தவேண்டுமாயின்

இங்கு அகதிகளுக்கான கேஸ் எழுதுபவர்.

அதற்காக பெரும் தொகை பணம் பெறுபவர்களில் முதன்மையானவர்

Edited by விசுகு

அகதிகளுக்கு கேஸ் எழுதுறதுக்கு பெரும்தொகை பணம் பெறுபவர் என்றால் பிறகு ஏன் அவரிட்ட ஆக்கள் போச்சீனம். வேற எங்கையாவது போறதுதானே கேஸ் எழுதுறதுக்கு..? கேசும் எழுதவேணும், பணம் வாங்கக்கூடாது இல்லை என்றால் கொலை செய்வார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்களது கேள்விக்கு மீண்டும் பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும்

இங்கு அகதியாக வரும் எம்மவர், பிரெஞ்சு பாசை தெரிந்து இங்கு வருவதில்லை.

இவரை வைத்து எழுதினால் கேஸ் வெல்லும் என்று சிலர் பேசுவதை கேள்விப்பட்டிருக்கின்றேன்.

உண்மை ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

நான் அவரை அறிந்தது அந்த வகையில்தான்.

அதேநேரம் இது அதனால் ஏற்பட்ட கொலை அல்ல.

இவர் நிரந்தர குடி மகன்

அந்த வேளையில் அவருடன் சேர்ந்து குடித்தவர்களாலேயே தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு ஆளாகி அவரது வீட்டருகில் கொண்டுவந்து போடுவதை அவரது மனைவி கண்டுள்ளார்.

அவரும் தாக்குதலுக்கு ஆளாகி 3 நாட்களின் பின்பே இறந்துள்ளார்.

அந்த தருணத்தில் தன்னை தாக்கியவர்களின் விபரங்களை பொலிசிடம் சொல்லியுள்ளதாக சொல்கிறார்கள்.

எனவே இது அவர்களின் விசாரணையில் உள்ள விடயம். இதற்கு மேல் நாம் இதற்குள் மூக்கைவிடுவது சிலவேளை யாழ் களத்துக்கும் எதிராகலாம்.

நன்றி

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணை. மேலுள்ள கட்டுரையை எழுதியவரும் கொலை செய்யப்பட்டவரும் ஒருவரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணை. மேலுள்ள கட்டுரையை எழுதியவரும் கொலை செய்யப்பட்டவரும் ஒருவரோ?

இருவரும் ஒன்றே

Edited by விசுகு

புகலிட படைப்பாளி ரமேஸ் சிவருபன் பிரான்சில் தாக்கப்பட்டு மரணம் அதிர்ச்சியில் தமிழச்சமூகம். பின்னணி என்ன?

பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் ரமேஸ் சிவருபன் அவர்கள் கடந்த 02.06.2010 அன்று பாரிஸ் நகரில் சக தமிழர்கள் சிலரினால் தாக்கப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரமேஸ் சிவருபன் மேற்படி சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் வாய்த்தர்க்கம் முற்றி வன்முறையாகி ரமேஸ் சிவருபன் இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் தெரியவருகிறது.

திட்டமிட்டே கூட்டிச்சென்று தாக்கினார்களா அல்லது தற்செயலான தாக்குதலில் மரணமடைந்தாரா என்பது குறித்தும் மற்றும் இக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கின்றதா என்பது குறித்தும் பிரெஞ்சு காவல்துறையினர் புலன் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இக் கொலையை அடுத்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு இணையத்தளம் தனது கவலையை பின்வருமாறு பதிவு செய்துள்ளது:

“புகலிட சூழலில் வன்முறைக் கலாச்சாரம் என்பது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் வெகு ஆழமாக புரையோடிப்போய் உள்ளமைக்கு இம்; மரணம் சாட்சி பகர்கின்றது.

சாதாரண உரையாடல்களைக்கூட சகித்துக்கொள்ளமுடியாத வன்முறைச் சமூகமாக ஈழத்த தமிழர்கள் உருமாற்றம் அடைந்துவருகின்றனர் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய வேதனையான விடயமாகும். இது தொடர்பாக சமூக அக்கறையாளர்கள் கவனம் கொள்ளவேண்டியது அவசிய கடமையாகும்.” அர்த்தம் பொதிந்த வாசகங்கள் அவை.

ரமேஸ் சிவருபன் ஒரு படைப்பாளியாக இருந்தபோதும் அரசியல்தஞ்ச கோரிக்கை ஆவணங்களை தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுவந்தவர் ஆவார். மேற்படி அவரது மரணத்தை சிறீலங்கா ஆதரவு ஊடகங்கள் சில திரித்து வெளியிட்டுள்ளன. அதாவது புலத்தில் விடுதலைப்புலிகளின் உட்பூசல் காரணமாக இவர் ஒரு தரப்பினால் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை வெளியிட்டுள்ளன. இதற்கு நம்மவர்களின் பொறுப்பற்ற போக்குகளும் ஒரு காரணம் ஆகும். ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது. ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி போலி அறிக்கைகளை வெளியிடுவது போன்ற ஆரோக்கியமற்ற ஊடகச் செயற்பாடுகளின் பின்விiளைவே இந்த கொலையின் பின்னணியும் புலிகள் மீது குற்றம் சுமத்தும் பொய் செய்தியும் ஆகும்.

ரமேஸ் சிவருபன் ஒரு சிலரின் சில பொய்யான தகவல்களின் அடிப்படையில் அவதூறுக்குள்ளாகியதாகவும் அதன் நிமித்தம் வேறு சிலரால் வெருட்டப்பட்டதாகவும் தற்போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆதாரமற்ற பொய்யான தகவல்களும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனமும் ஒரு எழுத்தாளனின் பேனாவை நிரந்தரமாக முடக்கியிருப்பது வேதனைக்குரியது.

கடந்த வாரம் “யாழ்” இணையத்தளம் பல தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மீது பொய் குற்றம் சுமத்தி சம்மந்தபட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை தோற்றுவித்தமை தெரிந்ததே. இந்த நேரத்தில் இப்படியொரு படுகொலை நிகழ்ந்திருப்பது சம்பந்தபட்ட ஊடகவியலாளர்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

“யாழ” இணையத்தினால் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சம்பந்தபட்ட உடகவியலாளர்கள் குறிப்பாக பிரான்சில் வாழும் ஊடகவியலாளர்கள் உடனடியாக காவல்துறையில் ஒரு முறைப்பாட்டை மீண்டும் பதிவு செய்வது நல்லது என்றே தோன்றுகிறது. மேற்படி கொலை எமக்கு தரும் முன் எச்சரிக்கை இது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பக்குவமின்மையும் சகிப்புதன்மையின்மையும் ஒரு வகை வன்முறை வெறியாட்ட தன்மையுமே “யாழ்” இன் அச்சுறுத்தலில் புதைந்திருந்ததை பல மனிதஉரிமையாளர்களும் உளவியலாளர்களும் எமக்கு சுட்டியிருந்தனர். நிலமையின் விபரீதத்தை உணர்ந்தே நாம் சட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம்.

பிரெஞ்சு பலனாய்வுத்துறை அதிகாரி திரு பஸ்கால் அவர்கள் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு விலைபோய் தமிழ் ஊடகவியலாளர்களை குறிவைத்திருப்பதாகவும் விலைக்கு வாங்க முற்படுவதாகவும் தன்னிடம் போதிய ஆதாரமிருப்பதாகவும் வெளிப்படையாக “னயஅ” என்ற மர்ப நபர் “யாழ” இல் முன்வைத்திருக்கும் கருத்து மிகவும் பயங்கரம் நிறைந்ததும் நிகழப் போகும் படுகொலைகளுக்கு பிரெஞ்சு காவல்துறையையும் சமம்பந்தபட்ட ஊடகவியலாளர்களையும் பழிகாரர்களாக்கும் முயற்சியும ஆகும்.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை நீதிக்கு முன் நிறுத்துவதனூடாகவே நிகழப்போகும் பயங்கரங்களை தடுக்க முடியும். தமிழ்ச்சமூகம் வன்முறைச் சமூகம் என்ற பழிச்சொல்லிலிருந்து தப்புவது மட்டுமல்ல ஜனநாக முறையில் நாம் விடுதலையை புலத்திலிருந்து முன்னெடுப்பதற்கும் இந்தகைய தீய சக்திகள் அடையாளங் கண்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.

எமது சட்ட நடவடிக்கைகளுக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டாலோ தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டாலோ “யாழ்” இணையமே பொறுப்பேற்க வேண்டும் என்பதை நாம் இந்த இடத்தில் நினைவுறுத்த விரும்புகிறோம்.

நாடுகடந்த அரசின் இடைக்கால பொறுப்பாளர் திரு உருத்திரகுமாரனின் கவனத்திற்கு மேற்படி “யாழ்” இணையத்தின் கொலை அச்சுறுத்தலை கொண்டு சேர்த்திருக்கிறோம். அவரிடம் சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கும் காத்திரமான பங்களிப்புக்களை நல்குவதற்கும் ஈழம்ஈநியூஸ் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டுள்ளதை பாதிக்கபட்ட உடகவியலானர்களுக்கு கூறவிரும்புகிறோம்.

மற்றும் தமிழர் மனித உரிமைகள் மையம், உலகத் தமிழர் பேரவை , புலம்பெயர் ஊடக அமைப்புக்கள் என்பற்றுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டறிக்கையை கொண்டு வருவதற்கு ஈழம்ஈநியூஸ் களத்தில் இறங்கியுள்ளது. புலத்தில் எந்த வடிவத்திலும் எதேச்சதிகார போக்கை வன்முறையை ஈழம்ஈநியூஸ் ஆதரிக்காது. எமது உயிரைக்கொடுத்தாவது ஈழம்ஈநியூஸ் தனது கடமையைச் செய்யும். இந்த இடத்தில் மரணமடைந்த படைப்பாளி ரமேஸ் சிவருபனுக்கு ஈழம்ஈநியூஸ்” தனது அஞ்சலியை செலுத்துகிறது.

நன்றி:ஈழம்ஈநியூஸ்

http://www.pathivu.com/news/7061/57//d,article_full.aspx

பிரெஞ்சு பலனாய்வுத்துறை அதிகாரி திரு பஸ்கால் அவர்கள் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு விலைபோய் தமிழ் ஊடகவியலாளர்களை குறிவைத்திருப்பதாகவும் விலைக்கு வாங்க முற்படுவதாகவும் தன்னிடம் போதிய ஆதாரமிருப்பதாகவும் வெளிப்படையாக “னயஅ” என்ற மர்ப நபர் “யாழ” இல் முன்வைத்திருக்கும் கருத்து மிகவும் பயங்கரம் நிறைந்ததும் நிகழப் போகும் படுகொலைகளுக்கு பிரெஞ்சு காவல்துறையையும் சமம்பந்தபட்ட ஊடகவியலாளர்களையும் பழிகாரர்களாக்கும் முயற்சியும ஆகும்.

???

ரமேஸ் சிவரூபனின் கொலை திட்டமிட்டு நடந்ததா தற்செலாக நடந்ததா என்பதை பிரெஞ்சு காவல்துறை முடிவு செய்யட்டும்.தயவு செய்து யாழ் இணைய நிர்வாகம் பிரெஞ்சு காவல்துறை சிறீலங்கா கால்துறையுடன் இணைந்து செயற்படுகிறது என்று எழுதிவருக்கு அதற்கான ஆதாரத்தை தரும்படி சட்டரீதியாக கடிதம் அனுப்பவும்.அவர்; அதை தராத பட்சத்தில் உடனடியாக அந்த நபர் பற்றி பிரெஞ்சு காவல்துறைக்கு முறைப்பாடு செய்யவும்.இதே நடைமுறையை ஈநியூஸ் இணையத் தளத்துக்கும் செய்யவும். இவர்கள் தொடர்பாகவும் பிரெஞ்காவல்துறையில் முறைப்பாடு செய்யவும். புதினம் தமிழ் நாதம. தமிழ்நேசன் பாணியில் யாழ் இணையத்தை முடக்க மேற்கொள்ளப்படும் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்வோம்.பிரான்வாழ் யாழ். இணையப் பதிவாளர்களே இந்த முயற்சில் நாங்கள் யாழ் நிர்வாகத்துக்கு அனைத்த உதவிகளையும் செய்வோம் முன்வாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.